ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா சொன்ன பாடம்!

3 posters

Go down

அம்மா சொன்ன பாடம்! Empty அம்மா சொன்ன பாடம்!

Post by சபீர் Mon Apr 19, 2010 5:49 pm

பள்ளி முடிந்து பிள்ளைகள் வீடு நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருந்தனர்.​ பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் ஆனந்தியோ அன்னநடை போட்டுக் கொண்டிருந்தாள்.​ மற்ற மாணவிகளுக்கெல்லாம் வீட்டிற்குப் போவது சந்தோஷமான சமாச்சாரம்.​ ஆனால்,​​ ஆனந்திக்கோ வீட்டை நினைத்தால் வேதனை வந்து விடும்.ஆனந்தி படிப்பில் ஆர்வமுள்ளவள்.​ அதனால்தான் அதிக மதிப்பெண் எடுத்து வருகிறாள்.​ ஆனால்,​​ பள்ளியை விட்டு வீட்டிற்கு சென்றாலோ அவளது அம்மா வீட்டு வேலை செய்யச் சொல்லி அவளை பாடாய்ப்படுத்தி விடுவார்.

விலங்கியல் ஆசிரியை இன்று வீட்டில் வைத்து பிராக்டிக்கல் நோட்டில் இதயத்தின் நீள்வெட்டுத் தோற்றத்தைப் படம் வரைந்து பாகங்களை குறித்து வரச் சொல்லியிருந்தார்.​ படம் தெளிவாகவும்,​​ எழுத்து அழகாகவும் இருக்க வேண்டும் என்று கண்டிஷன் வேறு போட்டிருந்தார்.ஆனந்திக்கு படிப்பு வரும் அளவிற்குப் படம் வரைய வராது.​ ""வெள்ளைத் தாளில் படத்தைப் போட்டுப் போட்டுப் பார்த்து கை திருந்திய பின்தான் நோட்டில் அதனை வரைய முடியும்.​ படம் வரைந்து பார்க்க வீட்டில் நேரம் வேண்டுமே!​ அம்மா வீட்டு வேலையை செய்யச் சொல்லி என்னை வாட்டி எடுத்துடுவாங்களே!'' என்று மனதிற்குள் எண்ணியபடியே வீடு வந்து சேர்ந்தாள்.​


அவளைப் பார்த்த தாய் தமயந்தி திட்ட ஆரம்பித்து விட்டார்.""ஏண்டி... ​ ஆனந்தி,​​ பள்ளி விட்டு மத்த பிள்ளைகளெல்லாம் எந்நேரமே வந்துட்டாங்க.​ உனக்கு ஏண்டி இவ்வளவு நேரம்.​ நேரத்தோடு வந்தா வீட்டு வேலையை சீக்கிரம் பார்த்துட்டு நீ படிக்கலாமே!​ சோம்பேறியா இருக்கிற உன்னை மேய்க்கறதுக்குள்ளே நான் படுற பாடு இருக்கே...'' என்று சலித்துக் கொண்டார் தாய்.தாய் சொன்ன வார்த்தையால் மனதில் சங்கடப்பட்டுப் போனாள் ஆனந்தி.​ அம்மா சொல்லுவதற்கெல்லாம் இதுநாள் வரை பொறுமையாகவே இருந்தவள் இன்று பொங்கி எழ ஆரம்பித்து விட்டாள்.""அம்மா...​ படிக்கறது என் வேலை.​ வீட்டு வேலை பாக்கறது உன் வேலை.​ நீ பார்க்க வேண்டிய வேலையை என்னை பார்க்கச் சொல்றீயே.​ நான் போட வேண்டிய படத்தை எனக்கு நீ போட்டு தருவியா?​ எனக்கு படிப்புதான் முக்கியம்.​ இனிமே நான் எந்த வீட்டு வேலையுமே செய்யப் போறதில்லே'' கோபப்பட்டாள் ஆனந்தி.""ஏண்டி...​ உன்னை நான் எந்நேரமுமா வேலை வாங்கறேன்.​ காலையிலே ஒரு மணி நேரம்,​​ மாலையிலே ஒரு மணி நேரந்தானே வேலை வாங்கறேன்.'' ​""இப்படி நீ வீட்டு வேலை வாங்கினா என் படிப்பு பாழாகிடாதா?​ ஒண்ணு என்னை படிக்கவிடு.​

படிப்பை விட உனக்கு வீட்டு வேலைதான் முக்கியம்னா என் படிப்பை நிறுத்திடு.​ நான் வீட்டிலேயே இருந்திடுறேன்.''""ஏண்டி...​ பெரிய பெண்ணாகிட்டோமேனு பெத்த தாயையே எதிர்த்து பேச ஆரம்பிச்சுட்டியா?''""பின்ன என்னம்மா...​ படிக்கற என்னை சதா வேலை வாங்கிக்கிட்டிருந்தேன்னா என்னால நல்லா படிக்க முடியுமா?''""ஆனந்தி... ​ கெட்டிக்காரப்புள்ளே என்ன வேலை பார்த்தாலும் நல்லாவும் படிச்சுடுவா.​ சோம்பேறிதனமானவாதான் நல்லாவும் படிக்க மாட்டா...​ ஒழுங்காகவும் வேலை செய்யா மாட்டா.​ உன்னைக் கெட்டிக்காரியா ஆக்க ஆசைபடறேன்.''""அதுக்காக இந்தச் சின்ன வயசிலே நான் வீட்டு வேலைய பார்க்கணுமா?​ என் படிப்பு கெட்டுடாது.''""ஆனந்தி... ​ உனக்கு விளையாட்டு பருவம் முடிஞ்சி இப்போ விவரம் தெரியற பருவம் வந்திடுச்சு.​ அதனாலதான் கேள்வி கேட்க ஆரம்பிச்சிருக்க.​ ​ நீ பொண்ணா பொறந்திட்டியே.​ அதனாலதான் புத்திமதி சொல்ல வேண்டியிருக்கு.​

வீட்டை பொறுத்தவரை ஆண்களை விட பெண்களுக்குத்தான் பொறுப்பு அதிகம்.''""அது எப்படிம்மா?''""ஆனந்தி... ​ எனக்கு உடம்புக்கு முடியாம நான் ரெண்டு நாள் படுத்த போது நீங்க எப்படியெல்லாம் சங்கடப்பட்டீங்க?​ சரியா சாப்பிட முடியாம...​ நேரத்துக்கு நீ பள்ளிக்குப் போக முடியாம...​ அழுக்குத் துணியெல்லாம் அப்படி அப்படியே கிடக்க...​ எந்த வேலையும் பார்க்க முடியாம...​ போட்டது போட்டபடியே கிடந்ததே,​​ நினைவிருக்கா?''""நீயில்லாம நாங்க சங்கடப்பட்டது நிஜம்தான்.​ அதுக்காக இப்பவே நான் வீட்டு வேலை பார்க்கணுமா?''""ஆமாம். ​ இப்பவே நீ வீட்டு வேலைகளை படிச்சுக்கிட்டாதான் எனக்குக் கொஞ்சம் வேலை பளு குறையும்.​ உன்னுடைய எதிர்காலத்துக்கும் அது பிரயோசனமா இருக்கும்.''""படிக்கவும் செய்யணும் வேலைப் பார்க்கவும் செய்யணும்னா எப்படிம்மா?''""இந்த வயசிலே ரெண்டுமே முடியும்.​ அறிவு பலம் பெற படிக்கணும்.​ உடல் நலம் பெற உழைக்கணும்.​ அதுதான் உன் எதிர்காலத்தை சிறப்படைய செய்யும்.​ அதற்குதான் உனக்கு நான் இப்படி பயிற்சிக் கொடுக்கிறேன்.​ வீட்டு வேலை தெரிஞ்சுக்கிட்டா தனியா நிக்கலாம்.''""அதனாலதான் இரண்டிலுமே உனக்கு நான் பயிற்சிக் கொடுக்கிறேன்.​ ஆணைவிட பெண்ணுக்கு பொறுப்பு அதிகம் என்கிறதாலேதான்,​​ நான் உனக்கு கொடுக்குற பயிற்சியை கொடுமையா நினைச்சிட்டியே.​

பெத்த தாய் தன் பெண்ணை கொடுமைப் படுத்துவாளா?​ பெத்தவங்க எது சொன்னாலும் அது பிள்ளைங்களோட முன்னேற்றத்திற்கு.""நீ நல்லா வாழணும்.​ நல்ல பேர் எடுக்கணுமுன்னுதான் இத்தனையும் செய்யறேன்.​ என்னை நீ விரோதியா நினைச்சுக்கிட்டியே.​ பெத்தவங்க பிள்ளையை கண்டிக்கிறது தப்பா...​ நீ சொல்லு'' என்று கேட்டார் தமயந்தி.""இல்லம்மா...​ நான் பேசுனதுதான் தப்பு.​ நீங்க என்னை கொடுமைப்படுத்துறதா நான் நினைச்சதுதான் தப்பு.​ பெத்த தாயையே தப்பா நினைச்சது நான் செய்த மிகப் பெரிய தப்பும்மா.''""கல்வி பாடத்தை ஆசிரியர் நடத்துவார்.​ வீட்டுப் பாடத்தை அம்மாதான் நடத்துவார்னு இப்போ நல்லாவே நான் புரிஞ்சுக்கிட்டேன்.​

பெத்தவங்களோட எந்தச் செயலிலும் பிள்ளைங்களோட நலம் இருக்கும்னு இப்போ நான் நல்லாவே தெரிஞ்சுக்கிட்டேன் அம்மா.​ இனிமே நான் நல்லா படிக்கவும் செய்வேன்.​ வீட்டு வேலைகளை தெரிஞ்சு உழைக்கவும் செய்வேன் அம்மா'' என்று சொன்ன மகளை அரவணைத்துக் கொண்டாள் தாய் தமயந்தி.​




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அம்மா சொன்ன பாடம்! Empty Re: அம்மா சொன்ன பாடம்!

Post by mdseeni Mon Apr 19, 2010 6:08 pm

nice
mdseeni
mdseeni
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 19/06/2009

Back to top Go down

அம்மா சொன்ன பாடம்! Empty Re: அம்மா சொன்ன பாடம்!

Post by ரிபாஸ் Mon Apr 19, 2010 6:08 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அம்மா சொன்ன பாடம்! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அம்மா சொன்ன பாடம்! Empty Re: அம்மா சொன்ன பாடம்!

Post by சபீர் Sun May 02, 2010 6:36 pm

நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அம்மா சொன்ன பாடம்! Empty Re: அம்மா சொன்ன பாடம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum