ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது

2 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது - Page 2 Empty மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது

Post by சிவா Sun Apr 18, 2010 11:25 pm

First topic message reminder :

மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது

(நேரிசைக் கலிவெண்பா)

சீர்கொண்ட கூடற் சிவராச தானிபுரந்து
ஏர்கொண்ட சங்கத்து இருந்தோரும் - போர்கொண்டு

இசையும் தமிழரசென்று ஏத்தெடுப்பத் திக்கு
விசையம் செலுத்திய மின்னும் - நசையுறவே

செய்யசிவ ஞானத் திரளேட்டில் ஓரேடு
கையில் எடுத்த கணபதியும் - மெய்யருளால்

கூடல் புரந்தொருகால் கூடற் புலவரெதிர்
பாடலறி வித்த படைவேளும் - வீடகலா

மன்னுமூ வாண்டில் வடகலையும் தென்கலையும்
அன்னைமுலைப் பாலின் அறிந்தோரும் - முன்னரே

மூன்றுவிழி யார்முன் முதலையுண்ட பிள்ளையைப்பின்
ஈன்றுதரச் சொல்லின் இசைத்தோரும் - தோன்றயன்மால்

தேடிமுடி யாவடியைத் தேடாதே நல்லூரில்
பாடி முடியாப் படைத்தோரும் - நாடிமுடி

மட்டோலைப் பூவனையார் வார்ந்தோலை சேர்த்தெழுதிப்
பட்டோலை கொள்ளப் பகர்ந்தோரும் - முட்டாதே

ஒல்காப் பெருந்தமிழ்மூன்று ஓதியருள் மாமுனியும்
தொல்காப் பியமொழிந்த தொன்முனியும் - மல்காச்சொல்

பாத்திரம்கொண் டேபதிபால் பாய்பசுவைப் பன்னிரண்டு
சூத்திரம்கொண் டேபிணித்த தூயோரும் - நேத்திரமாம்

தீதில் கவிதைத் திருமா ளிகைத்தேவர்
ஆதி முனிவர் அனைவோரும் - சாதியுறும்

தந்திரத்தி னாலொழியாச் சார்வினையைச் சாற்றுதிரு
மந்திரத்தி னாலொழித்த வல்லோரும் - செந்தமிழில்

பொய்யடிமை இல்லாப் புலவரென்று நாவலர்சொல்
மெய்யடிமைச் சங்கத்து மேலோரும் - ஐயடிகள்

காடவருஞ் செஞ்சொல் கழறிற் றறிவாரும்
பாடவருந் தெய்வமொழிப் பாவலரும் - நாடவரும்


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது - Page 2 Empty Re: மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது

Post by சிவா Sun Apr 18, 2010 11:28 pm

அளந்தருள்செம் பொன்னைமணி யாற்றிலிட்டு ஆரூர்க்
குளந்தனிலே தேடியருள் கோவும் - வளந்திகழும்

காளத்தி யில்வந்த காட்சிகயி லாயத்து
நீளத்தான் சொற்றவனும் நீயன்றோ - கேளப்பால்

அம்மைதமக்கு இல்லாதார் அம்மைதா மாவிருந்தார்
அம்மையென்று முன்னுரைத்த அம்மையாய்த் - தம்மெதிரே

வெள்ளானை மேற்கொண்ட வேந்தர் வரவிடுத்த
வெள்ளானை மேற்கொண்ட வித்தகராய்த் - தள்ளாது

விஞ்சுவரால் வண்ணானை வெண்ணீற்றர் என்றுபணிந்து
அஞ்சலிசெய் தாட்செய்த அன்பராய்ச் - சஞ்சரியாத்

தென்கையி லாயவரைச் செல்வர்பாற் சென்றாயே
உன்கையில் ஆகாத தொன்றுண்டோ - என்கையால்

ஆயும் அவள்பாகத்து அன்பரும் உக்கிரராம்
சேயும் புரந்திருக்குந் தென்மதுரை - வாயினிய

செவ்வழியே செல்வாய்நீ செல்வழியின் நல்வழிதான்
எவ்வழி என்றால் இயம்பக்கேள் - எவ்வழியும்

வெல்வாய் உனைநினைந்து வேயுறு தோளியென்று
செல்வார்தம் காரியம்சித் திக்குமே - செல்வாய்

தடையுண்டோ ஐயாறு தன்னிலே பொன்னி
இடைவிலங்கச் சென்றதறி யேனோ - இடையிலே

பாலைநிலம் நெய்தலாப் பண்ணினாய் இன்னுமதைச்
சோலைநிலம் ஆக்குவைநான் சொல்லுவதென் - மேலானார்

கூறும் பொதிசோறு கொண்டு வரினுனக்கு
வேறும் பொதிசோறு வேண்டுமோ - வீறாகக்

கற்பார் பொருள்காணார் காசுபணம் காணிலுனை
விற்பார் அவர்பால்நீ மேவாதே - கற்றாரை

எள்ளிடுவார் சொல்பொருள்கேட்டு இன்புறார் நாய்போலச்
சள்ளிடுவார் தம்மருகே சாராதே - தெள்ளுதமிழ்ப்

பாயிரமுன் சொன்ன படிபடியா மற்குழறி
ஆயிரமும் சொல்வார்பால் அண்டாதே - ஆய்தருநூல்

ஓதி அறியாத ஒண்பே தையருடனே
நீதி முறையா நிகழ்த்துநூல் - பேதைமையாம்


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது - Page 2 Empty Re: மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது

Post by சிவா Sun Apr 18, 2010 11:29 pm

காணாதாற் காட்டுவான் தான்காணான் கண்ணெதிரே
நாணா திராதே நவிலாதே - வீணாக

ஆற்றின் அளவறிந்து கல்லாது அவையஞ்சும்
கூற்றினர்பால் ஏகாதே கூடாதே - போற்றாரை

வேண்டாதே கேடில் விழுச்செல்வங் கல்வியென்று
பூண்டாய்நீ தானே பொருளன்றோ - ஆண்ட

வலவா நலவா வடுதுறையில் உன்போல்
உலவாக் கிழிபெற்றார் உண்டோ - நலவிருப்பது

ஆக்கவரு செங்கலைப்பொன் ஆக்கினாய் மண்முழுதும்
மாக்கனகம் ஆக்கிவிட வல்லையே - நோக்குபுகார்

பாடியதோர் வஞ்சிநெடும் பாட்டால் பதினாறு
கோடிபொன் கொண்டது நின்கொற்றமே - தேடியருள்

நல்லார்கட் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கட் பட்டதிருக் கண்டாயே - கல்லார்பால்

ஏகாதே அன்பிலார் இந்திரன்போல் வாழ்ந்தாலும்
போகாதே அங்கே புசியாதே - மாகவிஞர்

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந்தார் என்னும் - மாமகிமை

சேர்ந்ததுன்பால் அன்றோ திருப்பாற் கடலமுதம்
ஆர்ந்தவர்க்கல் லாதுபசி ஆறுமோ - சேர்ந்துன்னை

நம்பாதார் வீதி நணுகாதே நல்லார்கள்
தம்பால் இருந்து தரித்தேகி - வம்பாகப்

பின்போய் யமனோடப் பேர்ந்தோடும் வையையிலே
முன்போய் எதிர்போய் முழுகியே - அன்போடே

தாழ்ந்துநீள் சத்தம் தனைக்கற்றார் உள்ளம்போல்
ஆழ்ந்த அகழி அகன்றுபோய்ச் - சூழ்ந்துலகில்

மேன்மேல் உயர்ந்தோங்கு வேதம்போல் மேலாக
வான்மேல் உயர்ந்த மதில்கடந்து - போனால்

மிருதிபுரா ணம்கலைபோல் வேறுவே றாக
வருதிரு வீதிசூழ் வந்தே - இருவினையை

மோதுஞ் சிவாகமம்போல் முத்திக்கு வித்தாக
ஓதுந் திருக்கோயி லுட்புகுந்து - நீதென்பால்


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது - Page 2 Empty Re: மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது

Post by சிவா Sun Apr 18, 2010 11:29 pm

முன்னே வணங்கி முறையினபி டேகமுனி
தன்னேயம் போலாம் தளவிசையும் - தன்னடைந்து

தேறும் படிவர் சிவலோகம் சேர்ந்திருக்க
ஏறும் படிநிறுத்தும் ஏணிபோல் - வீறுயர்ந்த

கோமேவு கோபுரமும் கூடலின்மேல் முன்னொருநான்
மாமேகம் சேர்ந்ததுபோல் மண்டபமும் - பூமேவும்

மட்டளையும் வண்டெனப்போய் மாளிகைப் பத்தியறைக்
கட்டளையும் கண்டு களிகூர்ந்தே - இட்டமணிச்

சிங்கா தனத்தில் சிறந்ததிரு வோலக்கம்
எங்கா கிலுமொருவர்க்கு எய்துமோ - பைங்கழல்சூழ்

தேங்கமலத் தேசு தெரிசனம் செய்தவர்க்கே
பூங்கமலக் கண்கொடுத்த புத்தேளும் - ஓங்கமல

மையில் அடியில் வணங்காத் தலையொன்றைக்
கையில் அளித்த கடவுளும் - மொய்யிழந்த

மானம் தனக்கு வகுத்தகடம் பாடவிக்கு
மானம் தனைவகுத்த வானவனும்- தேனங்கு

அணிமலர்த்தாள் நெஞ்சூடு அழுத்தியழுத் தாதே
மணிமுடிகள் நீக்கி வணங்கக் - கணநாதர்

ஓதுதுனி யோடுசினம் உற்றபகை செற்றமுரண்
போத முனிவர் புடைசூழத் - தீதில்

அரிய திசைப்பாலர் அத்தமுதல் தாங்கித்
தெரிசனக்கண் பார்த்தேவல் செய்யப் - பரவியே

முன்னிருவர் எண்மரொடு மொய்த்த பதினொருவர்
பன்னிருவர் நின்று பணிசெய்ய - முன்னே

நதிகள் எனக்கண்டு நந்திபிரம் போங்க
உதகவிரு பாலின் ஒதுங்கிப் - பதினெண்

குலத்தேவர் தம்மகுட கோடிபதி னெட்டு
நிலத்தோர் முடியால் நெரிய - நிலத்தே

செருக்கும் சினேகமுற்ற தேவி யுடனே
இருக்கும் சினகரத்துள் எய்திப் - பொருக்கெனப்போய்

எந்தாயென் றேத்தும் இடைக்காடன் பின்போன
செந்தா மரைபோல் திருத்தாளும் - வந்துமனம்


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது - Page 2 Empty Re: மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது

Post by சிவா Sun Apr 18, 2010 11:29 pm

தேறிக் கழுத்தரியத் தென்பாண்டி நாடனுக்கு
மாறித் திரும்பு மணிக்குறங்கும் - சீறிப்

பணிக்கற்கு மாறாப் படையுடைவாள் சேர்த்து
மணிக்கச் சுடுத்த மருங்கும் - துணிக்கமையத்

தொண்டுபடு வந்தி சொரிந்திடும்பிட்டு அள்ளியள்ளி
உண்டுபசி தீர்த்த உதரமும் - அண்டுமொரு

தாய்முலைப்பால் உண்டறியாத் தாம்பன்றிக் குட்டிகளின்
வாய்முலைப்பால் ஊட்டியபூண் மார்பமும் - தூயமுடி

ஆணிக் கனகத்து அழுத்த வழுதிக்கு
மாணிக்கம் விற்ற மலர்க்கையும் - காணிக்காப்

பூம்படலை ஆத்திப் புனைமலரைப் பூணாமல்
வேம்பலரைப் பூண்ட வியன்புயமும் - ஓம்புகொடி

வாதில் கரிக்குருவி வாழ்தற்கு உபதேசம்
காதில் புகன்ற கனிவாயும் - தீதில்சொல்

வாயிலா நீயிருந்து வாழும் படியுனக்குக்
கோயிலாத் தந்த குழைக்காதும் - போய்வணிகப்

பெண்ணீராள் கண்ணீர் பெருகத் தழுவித்தம்
கண்ணீரால் ஆற்றியருள் கண்களும் - தெண்ணீரார்

பண்சுமந்த பாட்டினுக்கும் பாவைதந்த பிட்டினுக்கும்
மண்சுமந்த சோதி மணிமுடியும் - கண்சுமந்து

கண்டுகளி கூர்ந்து கசிந்துகசிந் துள்ளுருகித்
தொண்டுசெய்து தாள்முடிமேல் சூடியே - மண்டும்

உடுக்குலம்தங் கோக்குலமென்று உற்றறிந்தால் என்ன
அடுக்கிலங்கு தீபமெதி ராகக் - கடுத்திடேல்

வெங்கதிருண்டு உன்குலத்து வெண்மதியுண்டு என்னல்போல்
தங்கவாரத் தீபம் தாமசையத் - துங்கவிடை

ஏங்குமொரு மீனுயர்த்தின் எங்கிருப்பேன் என்பதுபோல்
ஆங்கிடப தீபம் அழன்றாட - நீங்காது

அருடா ம்ருகத்துரு ஆனார்க்கு உவந்தே
புருடா ம்ருகத்தீபம் போற்ற - மருவார்

வருகுலத்தார் பானு வரல்நடுக்குற் றென்ன
அருகுலவும் தட்ட தசைய - இருசுடர்க்கும்

சொக்கருனைத் தானே சுடரென்று காட்டுதல்போற்
அக்கரா லத்தியொளி யாய்விளங்கத் - தக்கவளோடு

எற்கும் பயந்தொளித்தார் என்றுகங்கை தேடுதல்போல்
பொற்கும்ப தீபமெதிர் போய்வளையச் - சொற்குருகும்


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது - Page 2 Empty Re: மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது

Post by சிவா Sun Apr 18, 2010 11:29 pm

அற்பூரத் தொண்டர்க்கு அருள்முத்தி ஈதெனல்போற்
கற்பூரத் தட்டிற் கனல்வாய்ப்பப் - பொற்பாக

நங்குலத்தும் வந்துதித்தார் நாதரென்று பானுமகிழ்ந்து
அங்குறல்போல் கண்ணாடி அங்கணுற - இங்கரசர்

எங்குலத்தார் ஆயினார் என்றுபிறை தோற்றுதல்போல்
துங்கமுடி மேற்குடைவெண் சோதிவிடப் - பொங்கியெழும்

முந்துகடல் வெண்திரைகள் முன்னேமா மிக்காக
வந்தனபோல் வெண்சா மரையிரட்ட - விந்தைசெயும்

ஆடரவச் சித்தரிவர் ஆதலினால் ஆலவட்டம்
நீடரவம் போலவெதிர் நின்றாட - நாடகலா

வாலநறுந் தென்றல்நம் மன்னரென்று காண்பதுபோல்
கோல விசிறி குளிர்ந்தணுகக் - காலைத்

திருவனந்தல் முன்னாகச் சேவிக்கும் காலத்து
உருவனந்த தேவ ருடனே - மருவியெதிர்

போற்றுவாய் நீயும் புரோகிதரை முன்னனுப்பித்
தோற்றரவு செய்து துதித்ததற்பின் - ஆற்றல்

அரிய சிவாகமத்தோர் ஆதிசைவர் தம்பால்
உரிய படையா ஒதுங்கி - அருமையுடன்

மூவர் கவியே முதலாம் கவியைந்தும்
மூவராய் நின்றார்தம் முன்னோதி - ஓவாதே

சீபாதம் எண்ணாத தீயவினைப் பாவிசெய்த
மாபாத கந்தீர்த்த மாமருந்தைத் - தீபமணிப்

பைந்நாகம் சூழ்மதுரைப் பாண்டியனே பாரமணிக்
கைந்நாகம் சூழ்கோயில் கண்மணியே - மன்னாக

மைக்கட் கரும்பை மருவிப் பிரியாத
முக்கட் கனியே முழுமுதலே - மிக்கபுனற்

கங்கா நதிக்கிறையே கன்னித் துறைக்கரசே
சிங்கா தனத்துரையே செல்வமே - எங்கோவே

நாடவிளை யாடிவந்த நற்பாவை போலடியார்
கூடவிளை யாடிவந்த கோமானே - தேடரிய

சிந்தைமகிழ்ந்து அன்புடையார் தேடியநாள் ஓடியெதிர்
வந்தவிளை யாட்டினிமேல் வாராதோ - வந்தருளால்

பாவும் புகழ்சேர் பழிக்கஞ்சி என்றுலகில்
மேவும் பெயரினிமேல் வேண்டாவோ - ஆவலினால்

புக்குவந்தார் தம்மேற் பொடிபோட்டு உளமயக்கில்
சொக்கலிங்கம் என்றெவரும் சொல்லாரோ - இக்கணைத்த

அங்கைவேள் தானே அரசாள வுஞ்சிறிய
மங்கைதனைக் கோட்டிகொளல் வல்லமையோ - கங்கையெலாம்


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது - Page 2 Empty Re: மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது

Post by சிவா Sun Apr 18, 2010 11:30 pm

நல்லமைக்கண் ஊடுவர நல்குதியேல் நங்கையெல்லாம்
வல்லசித்தர் என்றழைக்க மாட்டாளே - நல்லவர்போல்

மைக்குவளைக் கண்ணி வளைகவர்ந்து மங்கையர்தம்
கைக்குவளை விற்கக் கணக்குண்டோ - திக்குவளை

தோட்டாரும் வேம்பாய்த் தொடர்ந்துதொடர்ந் தேயொருதார்
கேட்டாரும் வேம்பாகக் கேட்டோமே - நாட்டமுற

வேளையெரித் தாய்க்கியல்போ மின்னார் கலைகவர்தல்
காளை யிடையிருந்து கற்றதோ - மீளாது

சென்றிலகு நாரையன்று சென்றசிவ லோகத்தே
இன்றெனையங்கு எய்தவிடல் ஆகாதோ - அன்றியழற்

குன்றே விருத்த குமாரர் இளம்பாலர்
என்றேயோர் பெண்வீட்டு இருக்கலாம் - சென்றொருநாள்

பொன்னனையாள் வீடும் புகுந்திருக்க லாமெனினென்
பொன்னனையாள் வீடும் பொருந்தாதோ - என்னுமொழி

எல்லாம் திருச்செவியில் ஏறும் படியுரைக்க
வல்லாயுன் போலெவர்க்கு வாய்க்குமே - நல்லாள்

கருணைவிழி யாளங் கயற்கண்ணி தன்னோடு
அருள்புரிய வாழ்ந்திருக்கும் ஐயர் - திருமதுரை

தானே சிவராச தானியென்று வீற்றிருந்தால்
தேனேநம் பாக்கியத்தின் செய்தியே - ஆனமையால்

அந்தரலோ கத்தின்மே லானதிரு ஆலவாய்ச்
சுந்தர மீனவனின் சொற்படியே - வந்து

துறவாதே சேர்ந்து சுகானந்தம் நல்க
மறவாதே தூதுசொல்லி வா.

தமிழ்விடு தூது முற்றிற்று.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது - Page 2 Empty Re: மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது

Post by ரமீஸ் Mon Apr 19, 2010 12:26 am

சூப்பர் அண்ணா,
ஒழுங்காக வாசிக்கக் கிடைக்க வில்லை,
சற்று நேரம் எடுத்து வாசிக்க வேண்டிய விடயம்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி


[You must be registered and logged in to see this link.]
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது - Page 2 Empty Re: மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» – தென்றல் விடுதூது விட்டேன்…!
» பலபட்டடைச் சொக்கநாதர் பாடியபாடல்!
» சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்!
» மதுரைச் சீமை நாட்டுப்புறக் கலைகளும் கலைஞர்களும் ! நூல் ஆசிரியர் : முனைவர் பா. சிங்காரவேலன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum