ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது

2 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Empty மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது

Post by சிவா Sun Apr 18, 2010 11:25 pm

மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது

(நேரிசைக் கலிவெண்பா)

சீர்கொண்ட கூடற் சிவராச தானிபுரந்து
ஏர்கொண்ட சங்கத்து இருந்தோரும் - போர்கொண்டு

இசையும் தமிழரசென்று ஏத்தெடுப்பத் திக்கு
விசையம் செலுத்திய மின்னும் - நசையுறவே

செய்யசிவ ஞானத் திரளேட்டில் ஓரேடு
கையில் எடுத்த கணபதியும் - மெய்யருளால்

கூடல் புரந்தொருகால் கூடற் புலவரெதிர்
பாடலறி வித்த படைவேளும் - வீடகலா

மன்னுமூ வாண்டில் வடகலையும் தென்கலையும்
அன்னைமுலைப் பாலின் அறிந்தோரும் - முன்னரே

மூன்றுவிழி யார்முன் முதலையுண்ட பிள்ளையைப்பின்
ஈன்றுதரச் சொல்லின் இசைத்தோரும் - தோன்றயன்மால்

தேடிமுடி யாவடியைத் தேடாதே நல்லூரில்
பாடி முடியாப் படைத்தோரும் - நாடிமுடி

மட்டோலைப் பூவனையார் வார்ந்தோலை சேர்த்தெழுதிப்
பட்டோலை கொள்ளப் பகர்ந்தோரும் - முட்டாதே

ஒல்காப் பெருந்தமிழ்மூன்று ஓதியருள் மாமுனியும்
தொல்காப் பியமொழிந்த தொன்முனியும் - மல்காச்சொல்

பாத்திரம்கொண் டேபதிபால் பாய்பசுவைப் பன்னிரண்டு
சூத்திரம்கொண் டேபிணித்த தூயோரும் - நேத்திரமாம்

தீதில் கவிதைத் திருமா ளிகைத்தேவர்
ஆதி முனிவர் அனைவோரும் - சாதியுறும்

தந்திரத்தி னாலொழியாச் சார்வினையைச் சாற்றுதிரு
மந்திரத்தி னாலொழித்த வல்லோரும் - செந்தமிழில்

பொய்யடிமை இல்லாப் புலவரென்று நாவலர்சொல்
மெய்யடிமைச் சங்கத்து மேலோரும் - ஐயடிகள்

காடவருஞ் செஞ்சொல் கழறிற் றறிவாரும்
பாடவருந் தெய்வமொழிப் பாவலரும் - நாடவரும்

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Empty Re: மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது

Post by சிவா Sun Apr 18, 2010 11:26 pm

கல்லாதார் சிங்கமெனக் கல்விகேள் விக்குரியர்
எல்லாரும் நீயாய் இருந்தமையால் - சொல்லாரும்

என்னடிக ளேயுனைக்கண் டேத்தினிடர் தீருமென்றுன்
பொன்னடிக ளேபுகலாப் போற்றினேன் - பன்னியமென்

பஞ்சிபடா நூலே பலர்நெருடாப் பாவேகீண்டு
எஞ்சியழுக்கு ஏறா இயற்கலையே - விஞ்சுநிறம்

தோயாத செந்தமிழே சொல்லேர் உழவரகம்
தீயாது சொல்விளையுஞ் செய்யுளே - வீயாது

ஒருகுலத்தும் வாராது உயிர்க்குயிராய் நின்றாய்
வருகுலமோர் ஐந்தாயும் வந்தாய் - இருநிலத்துப்

புண்ணியஞ்சேர் உந்திப் புலத்தே வளிதரித்துக்
கண்ணிய வாக்காம் கருப்பமாய் - நண்ணித்

தலைமிடறு மூக்குரத்தில் சார்ந்திதழ்நாத் தந்தம்
உலைவிலா வண்ணத் துருவாய்த் - தலைதிரும்பி

ஏற்பமுதல் முப்பதெழுத் தாய்ச்சார் பிருநூற்று
நாற்ப தெழுத்தா நனிபிறந்தாய் - மேற்படவே

எண்முதலா கப்பகரும் ஈராறு எனும்பருவம்
மண்முதலோர் செய்து வளர்க்குநாட் - கண்மணிபோல்

பள்ளிக்கூ டத்தசையாம் பற்பலதொட் டில்கிடத்தித்
தள்ளிச் சிறார்கூடித் தாலாட்டி - உள்ளிலகு

மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்
மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய் - மஞ்சரையே

பன்னியொரு பத்துப் பருவமிட்டு நீவளர்த்தாய்
உன்னை வளர்த்துவிட ஒண்ணுமோ - முன்னே

நினையும் படிப்பெல்லாம் நின்னைப் படிப்பார்
உனையும் படிப்பிப்பார் உண்டோ - புனைதருநல்

செய்யுட்சொல் நான்குமுயர் செந்தமிழ்ச்சொல் ஓர்நான்கும்
மெய்யுட் பொருள்ஏழ் விதத்திணையும் - மையிலெழுத்து

ஆதியாப்பு எட்டும் அலங்காரம் ஏழைந்தும்
பேதியாப் பேரெழின்மாப் பிள்ளையாய்ச் - சாதியிலே

ஆங்கமைசெப் பற்பண் அகவற்பண் துள்ளற்பண்
தூங்கற்பண் பட்டத்துத் தோகையரா - ஓங்குமனத்து

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Empty Re: மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது

Post by சிவா Sun Apr 18, 2010 11:26 pm

எண்கருவி ஐந்தீன் றிடுநூற்று மூன்றான
பண்களும்பின் கல்யாணப் பாவையரா - எண்கொளும்

நற்றா ரகமா நவரசமாம் பிள்ளைகளைப்
பெற்றாய் பெருவாழ்வு பெற்றாயே - உற்றகலாப்

பண்கள்முதல் பெண்களொடும் பாலரொடு நாடகமாம்
பெண்கொலுவில் வீற்றிருக்கப் பெற்றாயே - மண்புகழத்

தாழ்விலா அட்டா தசவன் னனைகளெனும்
வாழ்வெலாம் கண்டு மகிழ்ந்தாயே - ஆழ

நெடுங்கோல வையையிலென் நேசர்மேல் பட்ட
கொடுங்கோல்செங் கோலாகக் கொண்டாய் - அடங்காத

எங்கோவோ பத்தென்று இயம்புதிசைக் குள்ளேநின்
செங்கோல் செலாத திசையுண்டோ - இங்கேயுன்

தேசமைம்பத் தாறில் திசைச்சொல் பதினேழும்
மாசறநீ வைத்தகுறு மன்னியரோ - வீசு

குடகடலும் கீழ்கடலும் கோக்குமரி யாறும்
வடவரையும் எல்லை வகுத்தாய் - இடையிருந்த

முன்னுறுந்தென் பாண்டி முதற்புனல்நாடு ஈறான
பன்னிரண்டு நாடுமப் பானாடோ - அந்நாட்டுள்

வையை கருவைமரு தாறுமரு வூர்நடுவே
ஐயநீ வாழும் அரண்மனையோ - செய்யபுகழ்

மூவேந்தர் வாகனமா மூவுலகும் போய்வளைந்த
பாவேந்தே நீபெரிய பார்வேந்தோ - காவேந்து

விண்ணவரும் காணரிய வேதா கமங்களெலாம்
புண்ணியனே உன்றன் புரோகிதரோ - எண்ணரிய

நல்லபெருங் காப்பியங்கள் நாடகா லங்காரம்
சொல்லரசே உன்னுடைய தோழரோ - தொல்லுலகில்

சார்புரக்கும் கோவேநற் சாத்திரங்கள் எல்லாமுன்
பார்புரக்கும் சேனா பதிகளோ - வீரரதிர்

போர்ப்பா ரதமும் புராணம் பதினெட்டும்
சீர்ப்பாவே உன்னுடைய சேனைகளோ - பார்ப்பார்கள்

அக்கர வர்த்தியென லாமென்பார் பூலோக
சக்கர வர்த்தியுநீ தானன்றோ - சக்கரமுன்பு

ஏந்தி நெடுந்தேர்மேல் ஏறிச் சுழிகுளம்
நீந்தியோர் கூட நிறைசதுக்கம் - போந்து

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Empty Re: மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது

Post by சிவா Sun Apr 18, 2010 11:26 pm

மதுரம் கமழ்மாலை மாற்றணிந்து சூழும்
சதுரங்க சேனை தயங்கச் - சதுராய்

முரசம் கறங்க முடிவேந்தர் சூழ
வரசங்க மீதிருந்து வாழ்ந்த - அருள்வடிவாய்

ஓங்குபுகழ் மூவர் ஒருபா ஒருபஃதும்
ஆங்கவைசொல் வாதவூ ராளிசொல்லும் - ஓங்குமவன்

கூற்றாய் அரனெழுதும் கோவையும் கோதிறாய்
மாற்றா இரட்டைமணி மாலையும் - தேற்றமுறப்

பற்றாம் இலக்கணநூற் பாவுநூற் பாவறிந்து
கற்றார் வழங்குபஞ்ச காப்பியமும் - கொற்றவருக்கு

எண்ணிய வன்னனைகள் ஈரொன் பதுமறியக்
கண்ணிய மிக்கபெருங் காப்பியமும் - நண்ணியே

இன்புறு சேரனரங்கு ஏற்றமகிழ்ந்து அம்பலத்தான்
அன்புறுபொன் வண்ணத்தந் தாதியும் - முன்பவர்சொல்

மாத்தமிழாம் மும்மணி மாலையும் பட்டினத்தார்
கோத்தணிந்த மும்மணிக் கோவையும் - மூத்தோர்கள்

பாடி யருள்பத்துப் பாட்டுமெட் டுத்தொகையும்
கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும் - ஆடகமா

வெற்பனையார் மாதை விமலரிடத் தேயிருவர்
கற்பனையாற் சொன்ன கலம்பகமும் - முற்படையோடு

ஆடற் கலிங்கமழித்து ஆயிரம் ஆனைகொன்ற
பாடற் கரிய பரணியும் - கூடல்

நராதிபன் கூத்தனெதிர் நண்ணியோர் கண்ணிக்கு
ஒராயிரம்பொன் ஈந்த உலாவும் - பராவுமவன்

பிள்ளைத் தமிழுமுன்னாம் பேராத பல்குரவர்
வெள்ளத் தினுமிகுத்தோர் மெய்காப்ப - உள்ளத்து

வீரியம் செய்து வினையொழிய வேராச
காரியம் செய்யும் கவிதையே - பாரில்

அரியா சனமுனக்கே ஆனால் உனக்குச்
சரியாரும் உண்டோ தமிழே - விரிவார்

திகழ்பா ஒருநான்கும் செய்யுள்வரம் பாகப்
புகழ்பா வினங்கள்மடைப் போக்கா - நிகழவே

நல்லேரி னால்செய்யுள் நால்கரணத்து ஏர்பூட்டிச்
சொல்லேர் உழவர் தொகுத்தீண்டி - நல்லநெறி

நாலே விதையா நனிவிதைத்து நாற்பொருளும்
மேலே பலன்பெறச்செய் விக்குநாள் - மேலோரில்

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Empty Re: மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது

Post by சிவா Sun Apr 18, 2010 11:27 pm

பாத்தனதாக் கொண்டபிள்ளைப் பாண்டியன் வில்லிஒட்டக்
கூத்தனிவர் கல்லாது கோட்டிகொளும் - சீத்தையரைக்

குட்டிச் செவியறுத்துக் கூட்டித் தலைகளெல்லாம்
வெட்டிக் களைபறிக்க மேலாய்த்தூர் - கட்டி

வளர்ந்தனைபால் முந்திரிகை வாழைக் கனியாய்க்
கிளர்ந்தகரும் பாய்நாளி கேரத்து - இளங்கனியாயத்

தித்திக்கும் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின் மேலான
முத்திக் கனியேயென் முத்தமிழே - புத்திக்குள்

உண்ணப் படும்தேனே உன்னோடு உவந்துரைக்கும்
விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள் - மண்ணில்

குறமென்று பள்ளென்று கொள்வார் கொடுப்பாய்க்கு
உறவென்று மூன்றினத்தும் உண்டோ - திறமெல்லாம்

வந்தென்றும் சிந்தா மணியாய் இருந்தவுனைச்
சிந்தென்று சொல்லியநாச் சிந்துமே - அந்தரமேல்

முற்றுணர்ந்த தேவர்களும் முக்குணமே பெற்றார்நீ
குற்றமிலாப் பத்துக் குணம்பெற்றாய் - மற்றொருவர்

ஆக்கிய வண்ணங்கள் ஐந்தின்மேல் உண்டோநீ
நோக்கிய வண்ணங்கள் நூறுடையாய் - நாக்குலவும்

ஊனரசம் ஆறல்லால் உண்டோ செவிகளுணவு
ஆன நவரசமுண் டாயினாய் - ஏனோர்க்கு

அழியா வனப்பொன்று அலததிகம் உண்டோ
ஒழியா வனப்பெட்டு உடையாய் - மொழிவேந்தர்

வாங்கு பொருள்கோள் வகைமூன்றே பெற்றார்நீ
ஓங்குபொருள் கோள்வகையெட்டு உள்ளாயே - பாங்குபெற

ஓர்முப்பால் அன்றியைம்பால் உள்ளாய் உனைப்போலச்
சீர்முப்ப தும்படைத்த செல்வரார் - சேரமான்

தன்னடிக் கண்டு தளைவிடுத்தாய் ஏழ்தளையுன்
பொன்னடிக்குண் டென்பதென்ன புத்தியோ - என்னரசே

திண்பா வலர்க்கறிவாம் செந்தமிழாய் நின்றவுன்னை
வெண்பாவென்று ஓதுவது மெய்தானோ - பண்பேர்

ஒலிப்பாவே சங்கத்து உகமூன்று இருந்தாய்
கலிப்பாவென்று ஓதல் கணக்கோ - உலப்பில்

இருட்பா மருள்மாற்றி ஈடேற்றும் உன்னை
மருட்பாவென் றோதல் வழக்கோ - தெருட்பாப்

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Empty Re: மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது

Post by சிவா Sun Apr 18, 2010 11:27 pm

பொருத்தமொரு பத்துப் பொருந்துமுனைத் தானே
விருத்தமென்று சொல்லல் விதியோ - இருட்குவையை

முந்தியொளி யால்விலக்கும் முச்சுடரென் பாருனைப்போல்
வந்தென் மனத்திருளை மாற்றுமோ - சிந்தா

மணிகொடையின் மிக்கதென்பார் வண்கொடையும் உன்பேர்
அணியும் பெருமையினால் அன்றோ - தணியும்

துலங்காரம் கண்டசரம் தோள்வளைமற்று எல்லாம்
அலங்கார மேயுனைப்போல் ஆமோ - புலங்காணும்

உன்னைப் பொருளென்று உரைக்குந் தொறும்வளர்வாய்
பொன்னைப் பொருளென்னப் போதுமோ - கன்னமிட்டு

மன்னர் கவர்ந்தும் வளர்பொருளே கைப்பொருள்கள்
என்ன பொருளுனைப்போல் எய்தாவே - நன்னெறியின்

மண்ணில் புகழுருவாய் வாழ்வதற்கும் வாழுநர்
விண்ணிற்போய்த் தேவுருவாய் மேவுதற்கும் - எண்ணியுனைக்

கொண்டுபுகழ் கொண்டவர்க்கே கூடுமுனைக் கூடாத
தொண்டருக்குத் தென்பாலே தோன்றுமால் - தண்டமிழே

ஈங்குனது சங்கத்தால் ஈசர் உயர்ந்தாரோ
ஓங்குமவ ரால்நீ உயர்ந்தாயோ - பூங்கமல

வீடாளும் வாணியங்கை மேலே இருந்தாயோ
ஏடாக உன்மேல் இருந்தாளோ - ஆடரவத்

தாழ்பாய லாளரைநீ தானே தொடர்ந்தாயோ
சூழ்பாயோடு உன்னைத் தொடர்ந்தாரோ - வாழ்வேயென்று

ஓதிமுனி கேட்க உனைமுருகர் சொன்னாரோ
சோதி யவரைநீ சொற்றனையோ - பேதியா

நேசருனக் கேபொருளாய் நின்றாரோ நீண்மதுரை
வாசருக்கு நீபொருளாய் வந்தாயோ - பாசமுறும்

என்செய்தி நீகண்டு இரங்குவது நீதியல்லால்
உன்செய்தி நானோ உரைசெய்வேன் - இன்சொல்லாய்

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தகவென்ற - சொற்குள்ளே

எல்லார்க்கும் புத்தி இயம்பிக் கரையேற்ற
வல்லாய் உனக்குரைக்க வல்லேனோ - சொல்லியவுன்

ஈரடிக்குள் ளேயுலகம் எல்லாம் அடங்குமெனின்
நேரடிக்கு வேறே நிலனுண்டோ - ஓரடிக்கோர்

ஆயிரம் பொன்னிறைக்கும் ஐயரை வீதியிலே
போயிரந்து தூதுசொல்லப் போக்கினோ - யாயிருந்தும்

மாண்பாயோர் தூதுசொல்லி வாவென்பேன் என்வருத்தம்
காண்பாயென் பெண்மதிநீ காணாதே - ஆண்பனைநல்

பெண்பனை ஆக்கினையால் பெண்களிலே காரைக்கால்
வண்பதியார் ஒளவையென வந்துதித்தாய் - நண்பார்

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Empty Re: மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது

Post by சிவா Sun Apr 18, 2010 11:27 pm

திலதவதி யாருடனே சென்மித்தாய் மாடக்
குலதவதி யானத்தர் கூடல் - பலதவஞ்சேர்

மேனியார் கண்டிகையும் வெண்ணீறும் கண்டுருகும்
மானியார் தேசிகனா வந்துதித்தாய் - ஞானியார்

துங்க மகவாகத் தோன்றி வனப்பகைக்கும்
சிங்கடிக்கும் தாதையாய்ச் சீர்செய்தாய் - இங்குநீ

பெண்களெல்லாம் வாழப் பிறந்தமையால் என்மனத்தில்
புண்களெல்லாம் ஆறப் புரிகண்டாய் - ஒண்கமலத்து

அன்னம் தனைவிடுப்பேன் அன்னந்தான் அங்கவரை
இன்னம்தான் கண்டறியாது என்பரே - மன்னெந்தாய்

அப்பாலோர் வண்டை அனுப்பின் அவர்காமம்
செப்பாதே என்றால் திகைக்குமே - தப்பாது

மானைப்போய்த் தூதுசொல்லி வாவென்பேன் வல்லியப்பூந்
தானைப் பரமர்பாற் சாராதே - ஏனைப்பூங்

கோகிலத்தை நான்விடுப்பேன் கோகிலமும் காக்கையினம்
ஆகி வலியானுக்கு அஞ்சுமே - ஆகையினால்

இந்தமனத் தைத்தூதாய் ஏகென்பேன் இம்மனமும்
அந்தமனோ தீதர்பால் அண்டாதே - எந்தவிதம்

என்றென்று இரங்கினேன் என்கவலை எல்லாம்பொற்
குன்றனையாய் உன்னுடனே கூறுகேன் - சென்றாலும்

பண்ணிய பத்தொன் பதினா யிரத்திருநூற்று
எண்ணியதொண் ணூற்றொன் றெனும்தொடையாய் - நண்ணீ

ஒருதொடை வாங்கி உதவாயோ ஓர்சே
விருதுடை யார்க்குநீ வேறோ - தருமிக்கே

ஓர்வாழ்க்கை வேண்டி உயர்கிழிகொள் வான்கொங்கு
தேர்வாழ்க்கை என்றெடுத்த செய்தியும் - கீரன்

இசையா வகையின் இயம்பினான் என்றே
வசையாடித் தர்க்கித்த வாக்கும் - இசையான

பாட்டுக் கிரங்கியொரு பாணனுக்குச் சேரலன்மேல்
சீட்டுக் கவிவிடுத்த சீராட்டும் - பாட்டியலில்

நாத்திரமா மேவுபொருள் நன்றா அறுபதெனும்
சூத்திரமாப் பாடியருள் தோற்றமும் - மாத்திரமோ

உன்னோடு அவர்விளையாட்டு ஒன்றோ வடமதுரைக்கு
அந்நேரம் உன்பிறகே யார்வந்தார் - மன்னவன்மேல்

காரியார் நாரியார் கண்டகவி யைப்பகிர
வாரியிலாக் கானகத்தில் வந்தவரார் - நாரினொடும்

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Empty Re: மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது

Post by சிவா Sun Apr 18, 2010 11:27 pm

போற்றியுறும் பத்திரற்காப் போந்து கிழவுருவில்
தோற்றி விறகு சுமந்தவரார் - தேற்றியவற்கு

ஈயரிய பொற்பலகை இட்டவரார் மற்றவன்றன்
நேயமனை விக்கெதிரா நேர்ந்தவளைப் - போயவையில்

தள்ளியிசை தாபிக்கத் தக்கவரார் தென்மதுரைக்கு
உள்ளிருந்த சொக்கருனக் குள்ளன்றோ - எள்ளி

வடமொழியில் வேத வசனமே ஈசர்
திடமொழியா மென்பார் சிலரே - அடரும்

பரசமய கோளரியாய்ப் பாண்டிநா டெங்கும்
அரசமய நீநிறுத்தும் அந்நாள் - விரசுநீ

ஆதிக்கண் வையையில்வே தாகமத்தைத் தாபித்தாய்
சோதிக்கின் ஏடகமே சொல்லாதோ - வேதத்தேவு

ஆதவனங் கண்டாது அடைத்தகத வம்திறந்தாய்
வேதவனம் கண்டால் விளம்பாதோ - வேதம்

அமிழ்தினுமிக் கென்னுமுனிக்கு அன்பருனைச் சொன்னார்
தமிழ்முனியென் னும்பேர்தா ராதோ - தமிழால்

அறம்பொருள் இன்பம்வீடு ஆரணர்சொன் னாரத்
திறம்பரமர் வாக்கேசெப் பாதோ - மறந்திடலில்

கற்பலகை ஓதுமறை காணார்கீழ் நிற்கவும்நீ
பொற்பலகை மேலிருந்தாய் போதாதோ - தற்பரரோடு

எண்ணிறந்த வாசியழைத் திட்டாய் சதுர்வேதப்
பண்ணிறைந்த வாசி பகராதோ - அண்ணலார்

தென்பால் உகந்தாடும் செய்தியெல்லாம் உன்னிடத்தில்
அன்பாலென்று அப்பாலும் ஆரறியார் - உன்பேர்

பழியார் திசைச்சொல்லார் பன்னார் திருவாய்
மொழியார் குழறி மொழிவார் - அழியா

உருவால வாயிருக்கும் ஓதரிய முத்தித்
திருவால வாயிருக்கும் செல்வர் - ஒருமால்

வடமதுரை ஏறுமுன்னே வந்தவடிவு என்னத்
தடமதுரை மீனுயர்த்த தாணு - படர்தீர்க்கும்

சத்திபுரத்து ஓர்பால் தழைத்துமகிழ்ந் தோர்சீவன்
முத்திபுரத் தோர்பால் முளைத்தெழுந்தோர் - அத்திசைபோல்

ஆங்கோர் இருநான்கு அயிரா வதஞ்சுமக்கும்
பூங்கோயிற் குள்ளுறைந்த புண்ணியனார் - பாங்காம்

இடம்பவனம் ஈதாக இந்திரன்வந் தேத்தும்
கடம்பவனம் மீதிலுறை காந்தர் - அடும்பேர்

அலகம் பரிக்கும் அரியார் முடிவேய்ந்து
உலகம் பரிக்குமுறை உள்ளார் - பலநாளும்

நின்றவூர்ப் பூசலார் நீடிரவெ லாநினைந்து
குன்றுபோ லேசமைத்த கோயிலும் - நன்றிதரும்

தாயான கங்கைமுடி தான்குளிரக் கண்ணப்பர்
வாயால் உமிழ்ந்ததிரு மஞ்சனமும் - தூயமழைத்

துன்பார் திருக்குறிப்புத் தொண்டர் துணித்துறையில்
வன்பாய் அளித்தபரி வட்டமும் - இன்பாத்

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Empty Re: மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது

Post by சிவா Sun Apr 18, 2010 11:28 pm

தணிவரிய மானக்கஞ் சாறனார் சாத்தும்
மணிமுடிசூழ் பஞ்ச வடியும் - அணிவிடையார்

காமன்பால் முன்சேந்த கண்போல மூர்த்தியார்
தாமன்பால் முன்சேர்த்த சந்தனமும் - பூமன்போல்

காக்கும் அரிபுனைந்த கண்மலரும் காதலொடு
சாக்கியர்தாம் சாத்தியபூந் தண்மலரும் - போக்கியமா

ஆக்கிய மாறன் அமுதும் சிறுத்தொண்டர்
மாக்கறியும் தாயர்தரு மாவடுவும் - நீக்கரிய

காரார் இரவில் கணம்புல்லர் தம்முடிமேல்
சீராக ஏற்றியசெந் தீபமும் - ஆரால்

அமைத்து வணங்கலுறும் அங்கணர்க்குப் பூசை
சமைத்து வணங்கத் தகுமோ - உமைக்கன்பர்

அற்சனைபாட் டேயாமென்று ஆரூரர்க் காதியிலே
சொற்றமிழ் பாடுகெனச் சொன்னமையாற் - சொற்படியே

செய்தாய்நால் வேதம் திகைத்தொதுங்கப் பித்தனென்று
வைதாய்நீ வைதாலும் வாழ்த்தாமே - மெய்தான்

இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் - வருந்தினன்மால்

வெல்லானை தின்ற விளங்கனியா னேன்விரகக்
கல்லானை தின்ற கரும்பானேன் - நல்லவரைத்

தேடுநிழற் சிந்தனையிற் றேம்பினேன் வெம்பனியால்
வாடிய செந்தா மரையொத்தேன் - ஓடமிசைக்

கொள்ளம்பூ தூர்வெள்ளக் கொள்ளைகடந் தாயென்மால்
வெள்ளம் கடத்திவிட வேண்டாவோ - தள்ளென்று

மாறிட்ட சாக்கியரை வன்கழுவே றச்செய்தாய்
சீறிட்ட வேளையது செய்யாயோ - நீறிட்டே

அங்கரும்பின் கூனொழித்தாய் அன்றுவழு திக்குமதன்
செங்கரும்பின் கூனொழியச் செய்யாயோ - அங்கமுறு

வெப்புநோய் தீர்த்தாயவ் வேந்தனுக்கென் வெவ்விரக
வெப்புநோய் தீர்க்க விரும்பாயோ - தப்பலவே

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Empty Re: மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது

Post by சிவா Sun Apr 18, 2010 11:28 pm

சாக்கியர் இட்டநஞ்சு தன்னையமு தாக்கினையின்று
ஆக்கிய நஞ்சையமு தாக்காயோ - நீக்கரிய

வெந்தீக்குள் ளேகிடந்தும் வேவாயென் பார்காமச்
செந்தீச் சுடாதிருக்கச் செய்யாயோ - வந்துகொங்கில்

அப்பனியால் வாடாதே யார்க்கும் துயரொழித்தாய்
இப்பனியால் வாடாது இரங்காயோ - அப்பரை

மைக்கடல்கொல் லாதபடி வன்கல் மிதப்பித்தாய்
அக்கடல்கொல் லாமலுற வாக்காயோ - மிக்குயர்ந்த

மன்றிற் பனைவடிவம் மாற்றினாய் அப்பனைமேல்
அன்றிற்புள் வேறொருபுள் ஆக்காயோ - தொன்றுதொட்டுத்

தென்பொதியில் சாந்தினொடு தென்றலுற வாய்வந்தாய்
அன்புறவென் னோடுமுறவு ஆக்காயோ - முன்பிருந்து

பாடுமிசை எல்லாமுன் பாவையராச் சேர்ந்தாயென்
னோடுமுனி யாதிருக்க ஓதாயோ - பாடலால்

சின்னமொடு காளம் சிவிகைபந்தர் முத்தடைந்தாய்
பொன்னே சுடாதணியப் பூட்டாயோ - முன்னிறந்தாள்

அங்கத்தைப் பூம்பாவை ஆக்கினாய் ஆதலினென்
அங்கத்தைப் பூம்பாவை ஆக்காயோ - மங்கத்தான்

மாய்ந்தாலும் மாமுதலை வாய்ப்பிள்ளை யைப்படைத்தாய்
மாய்ந்தாலும் பின்படைக்க வல்லையே - ஏய்ந்தவுரை

செய்தாளென்று என்சொல் செவியோர்ந்து செல்வாயிங்கு
எய்தாமல் அங்கிருக்க எண்ணாதே - பொய்தீரத்

தேசிவரும் சொக்கருக்கே சென்றிருந்து ஆங்கவரைப்
பேசிவரும் தூது பிறிதுண்டோ - நேசமொடு

தைவரினும் காட்டத் தகாதாரைத் தாதையர்க்குக்
கைவிரலால் காட்டியருள் காளையும் - தெய்வவெள்ளிப்

பூதர வானவரைப் போற்றமுயன்று ஐயாற்றில்
ஆதரவாய்க் கண்ட அரசரும் - நாதர்

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது Empty Re: மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» – தென்றல் விடுதூது விட்டேன்…!
» பலபட்டடைச் சொக்கநாதர் பாடியபாடல்!
» சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்!
» மதுரைச் சீமை நாட்டுப்புறக் கலைகளும் கலைஞர்களும் ! நூல் ஆசிரியர் : முனைவர் பா. சிங்காரவேலன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum