புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைராக்கிய வரி Poll_c10வைராக்கிய வரி Poll_m10வைராக்கிய வரி Poll_c10 
33 Posts - 42%
heezulia
வைராக்கிய வரி Poll_c10வைராக்கிய வரி Poll_m10வைராக்கிய வரி Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
வைராக்கிய வரி Poll_c10வைராக்கிய வரி Poll_m10வைராக்கிய வரி Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
வைராக்கிய வரி Poll_c10வைராக்கிய வரி Poll_m10வைராக்கிய வரி Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
வைராக்கிய வரி Poll_c10வைராக்கிய வரி Poll_m10வைராக்கிய வரி Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
வைராக்கிய வரி Poll_c10வைராக்கிய வரி Poll_m10வைராக்கிய வரி Poll_c10 
2 Posts - 3%
prajai
வைராக்கிய வரி Poll_c10வைராக்கிய வரி Poll_m10வைராக்கிய வரி Poll_c10 
2 Posts - 3%
Manimegala
வைராக்கிய வரி Poll_c10வைராக்கிய வரி Poll_m10வைராக்கிய வரி Poll_c10 
2 Posts - 3%
Saravananj
வைராக்கிய வரி Poll_c10வைராக்கிய வரி Poll_m10வைராக்கிய வரி Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
வைராக்கிய வரி Poll_c10வைராக்கிய வரி Poll_m10வைராக்கிய வரி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைராக்கிய வரி Poll_c10வைராக்கிய வரி Poll_m10வைராக்கிய வரி Poll_c10 
399 Posts - 49%
heezulia
வைராக்கிய வரி Poll_c10வைராக்கிய வரி Poll_m10வைராக்கிய வரி Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
வைராக்கிய வரி Poll_c10வைராக்கிய வரி Poll_m10வைராக்கிய வரி Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
வைராக்கிய வரி Poll_c10வைராக்கிய வரி Poll_m10வைராக்கிய வரி Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
வைராக்கிய வரி Poll_c10வைராக்கிய வரி Poll_m10வைராக்கிய வரி Poll_c10 
27 Posts - 3%
prajai
வைராக்கிய வரி Poll_c10வைராக்கிய வரி Poll_m10வைராக்கிய வரி Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வைராக்கிய வரி Poll_c10வைராக்கிய வரி Poll_m10வைராக்கிய வரி Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வைராக்கிய வரி Poll_c10வைராக்கிய வரி Poll_m10வைராக்கிய வரி Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வைராக்கிய வரி Poll_c10வைராக்கிய வரி Poll_m10வைராக்கிய வரி Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
வைராக்கிய வரி Poll_c10வைராக்கிய வரி Poll_m10வைராக்கிய வரி Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைராக்கிய வரி


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 22, 2009 9:40 pm

வைராக்கிய வரி
- சு.சமுத்திரம்



நெல் பிரிந்து அரிசியாகவும், உமியாகவும் மாறியது போல் தாயும், மகளும் தத்தம் போக்கில் ஊருக்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள். செல்லாத்தாவின் வலது கையில் அகத்திக் கீரைக் கட்டு இருந்தது. மகள் ராசகுமாரியின் தலையில் ஒன்றிற்கு மேல் ஒன்றாக இரண்டு புல் கட்டுகள். சற்றுத் தொலைவில் அம்மாவால் புல்லுக்கட்டுடன் மல்லுக் கட்ட முடியாமல் போனபோது அதை யும் தானே சுமந்து கொண்டு கையிலிருந்த அகத்திக் கீரைக் கட்டை அம்மாவிடம் கொடுத் தாள். தலைச்சுமை பெரிதில்லை என்று சொல்லாமல் காட்டு வதுபோல் அனாயசமான லாவகத்துடன் ராசகுமாரி நடந்து கொண்டிருந்தாள். பெயருக்கேற்ற கம்பீரம். நனைத்து வைத்த மக்காச்சோளம் போன்ற நிறம். வயல் கிணற்றில் குளித்து விட்டு முடித்துவிடப்பட்ட கூந்தலின் பின்புறம் செருகப் பட்ட ஒற்றை ரோஜா. கருப்புக் கூந்தலுக்கும், பச்சைப் புல்லுக்கும் இடையே தோன்றிய பின்னணியில் மழை மேகத்திற்கும், மலைக்கும் இடை யிடையே தோன்றிய சூரியத் தோற்றம் காட்டியது.
அல்லாடி வந்த செல்லாத்தாவும், அடிபிசகாது நடந்து ராஜகுமாரியும் மந்தைப் பக்கம் வந்து சுற்றுமுற்றும் பார்த்தார்கள். மலையில் இருந்து விறகுக் கட்டுகளைக் கொண்டு வந்திருந்தவர்கள் …கவுண்† கம்புகளில் அவற்றை வைத்துக் கொண்டு கண்விரிய நின்றார்கள். அருகே ஒருசில காய்கறி வியாபாரிகள். இன்னொரு பக்கம் …எள்† அடிக் கப்பட்டது. மற்றொரு பக்கம் சீட்டு விளையாட்டுக் கும்பல். ஆங்காங்கே சிறுவர்- சிறுமியரின் தெல்லாங்குச்சி விளை யாட்டும், கிளித்தட்டு விளையாட்டும் நடந்தபடி இருந்தன.

வாடிக்கையான இடத்தில் புல் கட்டுக்களைப் போட்டு விட்டுத் தாயும், மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். இரண்டு கட்டுக்களும் நான்கு ரூபாய்க்குப் போகும். அன்றைய அடுப்பு எரியும். ராசகுமாரி வழியில் ஒரு பையன் சைக்கிளால் மோதிய கால் பாதத்தைத் தூக்கிப் பிடித்து அழுத்தினாள். செல்லாத்தா மகளருகே சென்று அவள் காலைத் தூக்கி தன் இடுப்பில் வைத்துக் கொண்டே, ……அடி பலமாப் பட்டுட்டா...? கண்ணு மண்ணு தெரியாத காவாலிப் பய... சைக்கிளை அவன் ஓட்டுனானா இல்ல... அவனை சைக்கிள் ஓட்டுச்சுதா? என்றாள்.

ராசகுமாரி பூவிரிந்தது போல சிரித்தாள். மகள் கண் சிவப்பாக இருப்பதைப் பார்த்ததும் தன் முகம் சிவக்க, ……கண்ணுல தூசி கீசி விழுந்துட்டா? நான் வேணு முன்னா ஊதட்டுமா... என்று சொல்லிக் கொண்டே செல்லாத்தா மகளின் இமைகளை விலக்கப் போனாள்.

உடனே ராசகுமாரி, ……போம்மா... நாலுபேரு நிக்கிற இடத்துல ரகள பண்ணப் படாது... என்று சிணுங்கிய படியே சொல்லிவிட்டுச் சிறிது நகரப் போனாள். இதற்கு விறகுக்காரர் ஒருவர் சிரித்த படியே கேட்டார்.

……செல்லாத்தா, அத்த பேருக்கு ஏத்தபடி பொண்ணப் பெத்தே... எட்டாவது வகுப்புல நல்லாப் படிச்ச பொண்ணயும் நிறுத்திட்டுப் புல்லு வெட்டப் போட்டுட்டே... கண்ணுலகூட முள் குத்தும்... காலு பட்டுட்டுன்னு கலங்கினா என்ன அர்த்தம்...

செல்லாத்தா, சொன்ன வரைப் பார்த்தாள். அந்த பார்வையில், முன்பு இதே மாதிரி கேள்வி கேட்டவர்களுக்கு, ……வயித்துல மூதேவி இருக்கும்போது வாயில எப்படி சரஸ்வதி நிப்பாள்...? அந்த மனுஷன் செத்த பிறவு இந்த மவள் எப்படிப் படிக்க முடியும்? என்று கூறிய பதில் மண்டிக் கிடந்தது.

இதற்குள் மனம் பொறுக்காத இன்னொரு மனிதர், ……போக்கா... நம்ம ஊருக்கு ஒரு தடவ கலெக்டரம்மா வரும் போது, நான் நம்ம ராசகுமாரியத் தான் நினைச்சேன். இவளும் படிச்சிருந்தால் கலெக்டரா வந்திருப்பாள் என்றார்.

எல்லோரும் ராசகுமாரியையே பார்த்தார்கள். அவளுக்கு வெட்கமாகப் போய்விட்டது. காடு, மலைகளில் புல்வெட்ட- விறகு வெட்டப் போனாலும், உடம்பில் எந்தவிதச் சுவடும் பதியாமல் தோன்றும் அந்த சேதாரம் இல்லாத சிறுசையே பார்த்தார்கள். இதர பெண்களைப் போல், …என்ன சின்னய்யா... கத்தரிக்காய் வித்ததுல எவ்வளவு கிடச்சது† என்று கேட்கவும் மாட்டாள். அப்படிக் கேட்ட பெண்கள் தகராறு என்று வந்துவிட்டால் ……சொத்தக் கத்தரிக்காயையா கொடுத்தே... ஒன் கையில கரையான் அரிக்க... என்பது போல் திட்டவும் மாட்டாள். பார்வையிலேயே மரியாதை கொட்டுபவள். குறுஞ் சிரிப்பிலேயே பண்பாட்டைக் காட்டுபவள்.

அந்தப் பக்கமாக …களை† வெட்டிவிட்டு வந்த முத்துமாரி, ……செல்லாத்தா சித்தி ஒன் மவளுக்குக் கல்யாணமாம். மெட்ராஸ் மாப்பிள்ளையாம். சொன்னால் சாப்பாடு போடணுமுன்னு நினைச்சு சொல்லலியா... என்றாள். செல்லாத்தா ஆதங்கத்தோடு சொன்னாள்.

……கண்காணாத சீமைக்கு இவள அனுப்பப் போறத நெனச்சா எனக்கு காலும் ஓட மாட்டக்கு. கையும் ஓட மாட்டக்கு... இவள விட்டுட்டு எப்படித்தான் பிரிஞ்சிருக்கப் போறேனோ...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 22, 2009 9:40 pm

தாயும், மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பிரிவுத்துயர் பிழிந்தெடுத்தது. ராசகுமாரி கண்களை மறைக்க வேறு பக்கமாகத் திரும்பியபோது செல்லாத்தா, ……புல்லுக்கட்டுல உட்காரண்டி ஏன் நிக்கே? இல்லன்னா வீட்டுக்குப் போயேன். உட்காருடி...? என்று சொல்லிக் கொண்டே மகளருகே போன போது, அவள், ……ஒனக்கு வேற வேல இல்ல இப்போ? நின்னா கால் ஒடுஞ்சுடுமா... என்று மெல்ல முணுமுணுத்த போது, செல்லாத்தா, ……பாரு இவள... என்பது மாதிரி முத்துமாரியைப் பார்த்தாள்.

உடனே முத்துமாரி, ……இவள் வயித்துலயும் ஒரு பூச்சி புழு பிறந்த பிறவுதான் ஒன்னோட துடிப்பு இவளுக்குத் தெரியும். ஒனக்குத் தெரியாதா? ஒருத்தி தாயாவும்போதுதான் அவள் தன்னோட அம்மாவுக்கு மகளாகிறாள். ஏடி... ராச குமாரி... உடனே ஒன் அம்மாவுக்குப் பேரனக் குடுடி... அவளே வளர்த்துக்கட்டும்...

ராசகுமாரி எல்லோரையும் கூச்சமாகப் பார்த்துக் கொண்டாள். பிறகு கல்யாண விளைவுகளைக் கற்பனை செய்ய நினைத்தவள் போல் புல்கட்டில் உட்கார்ந்தாள். செல்லாத்தா வயிறாற பெற்ற மகளை வாயாரப் பருகிக் கொண்டிருந்தாள்.

திடீரென்று பன்றி உறுமுவது போல் சத்தம் கேட்டது. எல்லோரும் பார்த்தபோது, மிராசுதார் மனைவி பூவம்மா, ……என்னடி நெனச்சிட்டிய இரப்பாளிபய பெண்டாட்டிவளா... என்று கத்திக் கொண்டே ஒடி வந்தபோது, அங்கிருப்பவர்களில் யாரையும் அவளால் திட்ட முடியும் என்பதால் எல்லோரும் குழப்பத்துடன் நின்றார்கள்.

பூவம்மா, நேராக செல்லாத்தாவின் கையையும், அதோடு இருந்த அகத்திக் கீரைக் கட்டையும் கைப்பற்றியபடியே, ……யாரைக் கேட்டுடி என் வயலுல கீரை பறிச்சே? ஒன் கள்ளப் புருஷன் வயலாடி? என்றாள்.

செல்லாத்தாக் கிழவிக்கு எதுவும் ஓடவில்லை. இந்த அனுபவத்திற்கு அவள் புதியவள். ஒரு தடவை பூவம்மா தன் வயல் வேலை செய்யக் கூப்பிட்ட போது தான் வர மறுத்ததால்தான் இப்போது அவள் வாயால் கேட்டதை கையால் காட்டுகிறாள் என்பது தெரி யாதவள்- அதிர்ச்சியால் வாயடைத்துப் போனவள், பிறகு ……சுப்பையா வயலுல அவன் கிட்டச் சொல்லிக்கிடலாமுன்னு பறிச்சேன். வேணுமுன்னா... மருதமுத்துக்கிட்ட கேட்டுப் பாரு... என்று முணங்கினாள். பூவம்மாவுக்கு …சுருக்†கென்றது. அதே சமயம் பற்றிய கையை எடுக்க கௌரவம் விடவில்லை. ……எங்க சித்தி மவன் வயலு மட்டும் திறந்தாடி கிடக்கு? கிழட்டு முண்ட... வா... வந்து அவன் கிட்டப் பேசு என்று சொல்லிக் கொண்டே செல்லாத்தாவைப் பரபரவென்று இழுத்தாள். இழுத்த வேகத்தில் இழுக்கப்பட்டவளின் கால்கள் தரையில் உராய்ந்து கால்கள் நிலத்திற்கும், நிலம் கால் களுக்கும் கோடுகள் போட்டன.

ராசகுமாரிக்கு அவமானமாக இருந்தது. அம்மாவை இந்த மாதிரி எவரும் அவமானப்படுத்தியது இல்லை. ஏதோ ஒரு வேகத்துடன் இழுபறி நடந்த இடத்திற்குத் தாவினாள். அப்போதுகூட அச்சத்தாலோ என்னவோ இழுத்த லட்சுமியைப் பிடிக்காமல் இழுபட்ட அம்மாவின் முதுகைப் பிடித்தாள். செல்லாத்தா முன்னாலும் பின்னாலும் மேனி இழுபட்ட வேதனையில் அலறியபோது ஆவேசமடைந்த ராசகுமாரி அம்மாவை விட்டு விட்டு பூவம்மாவின் கைகளைப் பிடித்து விலக்கப் போனாள். உடனே அவள், ……எச்சிக்கல நாய்களா... தாயும் மகளும் சேர்ந்தாடி சண்டைக்கு வாரிய... என்னைத் தொடுற அளவுக்கு திமிரு வந்துட்டாடி... என்று யானை பிளிறுவது போல் கத்தியபோது-

சீட்டு விளையாடிக் கொண்டிருந்த அவளின் இருபத்தைந்து வயது மகன் முத்துப்பாண்டி, ஓடோடி வந்தான். வந்த வேகத்தில் ராசகுமாரியைக் காலால் இடறிக் கீழே தள்ளினான். மல்லாந்து விழுந்தவளின் தலைமுடியைப் பிடித்துத் தூக்கி நிறுத்தி கன்னத்தில் தன் கை சிவக்கும் வரை அடித்தான். அவள் காலை காலால் முட்டினான். அவனைத் தடுக்க வந்த செல்லாத்தாவை இடது கை முட்டியால் தட்டிவிட்டான்.

ராசகுமாரியை இன்னும் அடித்திருப்பான். அதற்குள் நிலை குலைந்து நின்ற சில்லறை வியாபாரிகளும், விறகு வெட்டிகளும் அவனைப் பிடித்துக் கொண்டார்கள். ஒரு சில ஏழை பாளைகள் எதிர்ப்புக் காட்டப் போனார்கள். அதற்குள் அவன், ……என்கிட்ட எவன் வாராமுன்னு பாக்கலாம் என்று கர்ஜித்த போது அந்த அன்றாடம் காய்ச்சிகள் அடங்கிப் போனார்கள். மனதிற்குள் திட்டிக் கொண்டார்கள்.

பத்து நிமிடத்திற்குள் நடந்து முடிந்த இந்த நிகழ்ச்சியைப் பார்க்கக்கூடிய கூட்டம் எந்த விதமான கருத்தையும் சொல்லாமல் கலைந்து கொண்டிருந்தது. ராசகுமாரியும், அந்தக் கூட்டத்தைப் போல் கலைந்து போனாள். கிழிந்த ஜாக்கெட்டை மறைக்காமல், நொறுங்கிய வளையல்களைக் கழற்றாமல், சாய்ந்து கிடந்த மகளை நோக்கி முத்துப்பாண்டியின் கனத்த உதையில் கீழே விழுந்து கிடந்த செல்லாத்தா மௌ;ள எழுந்து மகளருகே நொண்டியடித்துச் சென்றாள். பிறகு அவளைக் கட்டிப் பிடித்துக் கதறினாள். எல்லோரும் இருவரையும் பரிதாபமாகப் பார்த்தபோது ராசகுமாரி மலங்க, மலங்க விழித்தாள். செல்லாத்தா மகளை விட்டு விட்டு நிமிர்ந்து நின்று சபதமிட்டாள்.

……கவலப்படாதடி... ஒன்னைக் கைநீட்டி அடிச்சவனைப் பழிக்கப் பழி வாங்குறேனா இல்லியான்னு பாரு... ஒன்னைத் தலைகுனிய வச்ச வனைத் தலைநிமிர முடியாமச் செய்யுறேன் பாரு. எழுந் திருடி...

அம்மாவின் போர்க் குரலுக்குக் கட்டுப்படாமல் ராசகுமாரி வெறித்துப் பார்த்தபோது, யாரோ இருவர் அந்த இளங் கன்றைப் பிடித்துத் தாயிடம் விட்டார்கள். இதற்குள் எதுவுமே நடக்காதது போல் மீண்டும் சீட்டு விளையாட்டில் ஈடுபட்ட முத்துப்பாண்டி, செல்லாத்தாவின் குரல் உயர்ந்ததால் அங்கிருந்து திமிறினான். சீட்டுச் சகாக்கள் அவனைப் பிடித்துக் கொண்டார்கள். …துருப்பு† தெரிஞ்ச பிறவு அவன் போவலாமா...?

தாயும், மகளும் வாய் செத்த ஊர்த் தெருவழியாகத் தலை குனிந்தபடி நடந்து குடிசைக்கு வந்தார்கள். ராசகுமாரி வீட்டுக்குள் போனவுடனேயே வேகமாக ஓடி நார்க்கட்டிலில் குப்புறப் படுத்துக் கொண்டாள். ……எய்யா... என்னப் பெத்த அய்யா ஒரு தடவ வந்து எங்களப் பார்த்துட்டுப் போங்க. ஒரே ஒரு தடவ என்று கூறிய படியே கூப்பாடு போட்டாள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 22, 2009 9:43 pm

செல்லாத்தாவுக்கு ஏதோ ஒரு வைராக்கியம். புடவையை இறுக்கிக் கட்டியபடியே வெளியே புறப்பட்டாள். அப்போது பக்கத்துக் குடிசைக்காரர் வந்தார்.

……எங்க அக்கா போறே...

……போலீஸ் ஸ்டேஷனுக்கு... என் மகள கை தொட்டு அடிச்ச பய கையில விலங்கு மாட்டுறத நான் பாக்கணும். அவனப் போலீஸ்காரங்க நாய் மாதிரி நடுரோட்ல இழுத்துட்டுப் போறத என் மவள் கண்ணால பாக்கணும். நீயும் துணைக்கி வாரியா...

……சொல்றேன்னு தப்பா நினைக்காத. இங்க நடக்கிற அநியாயத்துக்காவ அங்க போறே. அங்க நடக்கிற அநியாயத்துக்கு எங்க போவே...? உன் மகள அடிச்சதுக்கு யார் சாட்சி சொல்லுவாவ? கோர்ட்டுக்குப் போவியா? புல்லு வெட்டப் போவியா? உன் மகளக் கூண்டுல நிறுத்தி வக்கீல் பச்ச பச்சயா கேப்பான். அந்தச் சின்னஞ் சிறிசால தாங்க முடியுமா...?

செல்லாத்தா, மருவினாள். மருவி மருவி கருவிக் கொண்டே கேட்டாள்.

……அப்படீன்னா அடிச்சவன் கையில விலங்கு போட முடியாதா?

……உன் கைக்கு விலங்கு போடாம இருந்தால் சரி முத்துப்பாண்டி அடிச்சதுனால கை வலிக்குன்னு உன்கிட்ட நஷ்டஈடு கேக்காம இருந்தா சரி பேசாம நாலு பெரிய மனுஷங்கன்னு இருக்கவங்ககிட்ட நியாயம் கேளு...

செல்லாத்தா நிதர்சனத்தின் புலப்படாத- அதே சமயம் புரியக் கூடிய கரம் ஒன்று தலையில் அழுத்தியது போல் தரையில் உட்கார்ந்தாள். உள்ளே ராசகுமாரி, ……ஏம்மா... எனக்கு ஒரு அண்ணனோ தம்பியோ இருந்தால் இப்படி ஆவுமா... ஆவுமா...? என்று குமுறிக் குமுறி அழுதாள்.

செல்லாத்தா எழுந்தாள். ஊருக்குள் ஓடினாள். மகளும், தானும் அடிபட்ட அதே இடத்தில் கூடிக் கூடிப் பேசிக் கொண்டிருந்த பெரிய மனிதர்களைப் பார்த்து பொதுப்படையாகப் பேசினாள்.

……அய்யாமாரே... நான் கூட என் பொண்ண அணைக்கதுக்காவ தொட்டிருக்கேனே தவிர அடிக்கத் தொட்டதுல்ல. அப்படிப்பட்ட என் அருமை மவள முத்துப்பாண்டி கை நீட்டி அடிச்சிட்டான்யா... இந்த அநியாயத்தக் கேட்டுத்தாங்கய்யா...

ஒருவரும் கேட்டுத் தர வில்லையானாலும் ஒருவர் கேட்டார்.

……பேசாம போம்மா. அதோ முத்துப்பாண்டி வாரான். அனாவசியமாப் பழைய படியும் சண்டை வரும். நாங்க கூப்பிட்டுக் கண்டிக்கோம். நீ போ...

……என்னய்யா இது? அடிச்சவனை அடிக்காம அடிபட்டவளைப் போகச் சொல்றீய. உங்க பொண்ண இப்படி யாராவது அடிச்சா...

……இதோ பாரு... அனாவசியமா வீட்ல இருக்கிற பொண்ணுங்கள இழுக்காத...

……தெருவுல நின்ன பொண்ண அடிச்சிட்டானே... அடிச்சிட்டானே...

……இப்போ அவனைக் கொலை பண்ணச் சொல்றியா. நடந்தது நடந்துட்டு. அவனச் சத்தந்தான் போட முடியும். நீயும், அகத்திக் கீரைய கேட்டுட்டுப் பறிச்சிருக்கணும். வயல் வயக்காட்ல ஒரே திருட்டாப் போச்சு. அருணாசலம் மச்சான் நாம ஏதாவது பண்ணனும். நேத்துக்கூடி... என் தென்ன மரத்துல... சரி... நீ போம்மா...

செல்லாத்தா போவதற்கு முன்பே முத்துப்பாண்டி வேட்டியை முட்டிக்கு மேல் தூக்கிப் பிடித்துக் கொண்டு கம்பீரமாக வந்து நின்றான். செல்லாத்தா கூனிக்குறுகி வீட்டுக்கு வந்தாள்.

இரவில் தாயும், மகளும் சாப்பிடவில்லை. அடுப்போடு சேர்ந்து விளக்கும் எரியவில்லை. இருவரும் புரண்டு படுத்தார்கள். ஒருவரை ஒருவர் இறுகத் தழுவிக் கொண்டார்கள். ஏங்கி ஏங்கி அழுதுக் கொண்டார்கள். அடிபட்ட இடங்களை அழுத்திக் கொண்டார்கள்.

இருவருக்கும் விடிவு இல்லாமலே பொழுது விடிந்தது.

ராசகுமாரி இன்னும் சுயத்திற்கு வரவில்லை. பழக்க தோசத்தில் எழுந்தவள் பழக்க மில்லாத நிகழ்ச்சியை நினைத்தாள். நினைவு அவளை நெருப்பாக்கிக் கட்டிலில் போட்டது. என்ன செய்வது என்று புரியாமல் செல்லாத்தா மகளையும், ஆகாயத்தையும் மாறி மாறிப் பார்த்தபோது முத்துமாரி வந்தாள்.

……பேசாமக் காளியாத்தக் கிட்ட முறையிடு. இன்னைக்கு வெள்ளிக்கிழமை. நல்ல நாளு காளியாத்தா பழி வாங்கிக் காட்டுவாள்...

செல்லாத்தா, முத்துமாரியைப் பார்க்காமலும், பதிலளிக்காமலும் காளி கோவிலுக்குப் போனாள். சிங்க வாகனத்தில் திரிசூலத்துடன் காட்சியளித்த காளியின் களிமண் சிலையின் முன்னாள் நின்று கூப்பாடு போடுவதுபோல் கூக்குரலிட்டாள்.

……காளியாத்தா.... என்னோட மகள இல்லல்ல... ஒன்னோட மகள முத்துப்பாண்டி அடிச்சு அவமானப்படுத்திட்டான். அவன் கையில கரையான் அரிக்கணும். என் மகளோட குனிஞ்ச தலை நிமுறணும். ஒரு அறிகுறி காட்டு தாயே. அடுத்த வெள்ளிக்கிழமைக்குள்ள அவன் நாசமாப் போவணும்...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 22, 2009 9:44 pm

சொல்லி வைத்தாற் போல் கவுளி அடித்தது ஏழெட்டுத் தடவை, காளியம்மன் சிலையின் பின்புறம் …டக் டக்†கென்ற சத்தம் செல்லாத்தா குலுங்கக் குலுங்க அழுதாள். ……நீ இருக்கே தாயே. இருக்கே என்று சொல்லியபடியே உடைந்த சட்டி ஒன்றில் இருந்த குங்குமத்தை எடுத்துத் தன் நெற்றியில் பூச மறந்தவளாய் நேராக வீட்டுக்கு வந்தாள். கட்டிலில் அலைமோதிக் கொண்டிருந்த ராசகுமாரி நெற்றியில் குங்குமத் திலகமிட்ட படியே, ……காளியாத்தா வரம் கொடுத்துட்டாடி. அடுத்த வெள்ளிக்கிழமைக்குள்ள என்ன நடக்குன்னு பாரு என்றாள் கம்பீரமாக. ராசகுமாரியும், ஆறுதலடைந்தவள் போல் எழுந்து உட்கார்ந்தாள்.

செல்லாத்தா நாட்களை எண்ணிக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு நாளும் வினாடி வினாடியாக எண்ணினாள். பல தடவை காளியம்மன் கோவிலுக்குப் போய் …நீ பதிலளிச்சது பலிக்குமா தாயே?† என்று கேட்டுக் கொண்டாள். ஒரு வாரத்தில் எதுவும் நடக்கவில்லை என்று சொல்ல முடியாது. சைக்கிளில் டவுனுக்குப் போகும் முத்துப்பாண்டி பைக்கில் போனான். செல்லாத்தாவே கண்ணழுகக் கண்டாள்.

சனிக்கிழமை செல்லாத்தாவும், மகளோடு சேர்ந்து முடங்கிப் போனாள். திடீரென்று குடுகுடுப்பைச் சத்தம்.

……நல்ல காலம் பொறக்குது. இந்த வீட்ட அவமானப் படுத்துனவன் ஓடுறான்... ஓடுறான்... தலைதெறிக்க ஓடுறான் செக்கம்மாவால... நாலு நாள்ல நாசமாப் போவுறான் செல்லாத்தா எழுந்தாள். ……நாலு நாள்னா... அடுத்த செவ்வாய். அதுக்குள்ள ஏதாவது நடக்கும். காளியாத்தா... சீ... அவள இனிமேல கும்பிடப் படாது. செக்கம்மா... நீ சொல்றத நம்புறேன்

செக்கம்மா சொன்ன பிறகும் அவளை நம்பாதது போல்- வயல் வெளிக்குப் போகாமல் முடங்கிக் கடந்து தெய்வ நிந்தனைக்கு ஆளாக விரும்பாதவள் போல்களை கொத்தியையும், ஓலைப் பெட்டியையும் தூக்கிக் கொண்டு செல்லாத்தா புல் வெட்டப் புறப்பட்டாள்.

சனிக்கிழமையில் தோன்றிய நம்பிக்கை, ஞாயிறில் கம்பீரமாகி, திங்களில் சந்தேகமாகி, செவ்வாயில் படபடப்பாகியது. அவளால் அன்று புல் வெட்டப் போக முடியவில்லை. செவ்வாய் இரவில் ஊரில் பரபரப்பு. செல்லாத்தா விரைந்து போனாள். முத்துப்பாண்டிக்கு நிச்சயதாம்பூலம்.

ராசகுமாரி எலும்பும் தோலுமாகிவிட்டாள். உடலுக்காக உண்டவள்... உயிருக்காக கஞ்சி குடித்தாள். குடித்தது குடலில் தங்கவில்லை. வாந்தியானது. கண்களில் வெளுப்பு ஏற்பட்டது. ஒருநாள் யதேச்சை யாக வெளியே சற்று உலவிய ராசகுமாரி திடீரென்று, ……எம்மா... எய்யா... இந்த ஊர்ல தெய்வம் இல்லியா. மனுஷங்க மாதிரி அதுவும் செத்துட்டா...? என்று புலம்பிக் கொண்டே முற்றத்திற்கு வந்து தன் தலையை வைத்துச் சுவரில் இடித்தாள். மகளின் அழுகைக் கான காரணத்தை அறிய வெளியே ஓடிய செல்லாத்தா முத்துப்பாண்டி தன்னுடன் போகும் தோழர்களுடன் தன் வீட்டைத் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டே சிரித்தபடி பேசிக் கொண்டு போவதைக் கண்டாள். உடனே அவளும் ஓடிவந்து அழுதாள். சுவரில் மோதிய மகளைப் பிடிக்கப் போனாள் முடியவில்லை. தானும் தன் பங்கு சுவரில் மோதிய போது ராசகுமாரி நிதானப்பட்டாள்.

செல்லாத்தா, நம்பிக்கை இழந்தவளாக புல் வெட்டப் புறப்பட்டாள். எதிரே சுடலை மாடச்சாமியாடி வந்தார். அவளால் தாள முடியவில்லை. ஏதோ சொல்லப் போனாள். அதற்குள் சாமியாடி, ……எனக்கு எல்லாம் தெரியும். இன்னும் பத்து நாள்ல பாரு. ஒன் மகள அடிச்சவன் அக்குவேறு... ஆணி வேறா ஆகப் போறான் பாரு. சொள்ளமாடன் சொல்லிட்டான் என்றார்.

செல்லாத்தாவுக்குப் பாதி நம்பிக்கை வந்தது. கம்மாக் கரையில் நடந்தபோது ……சொள்ள மாடா.... சாமியாடி... சொன் னது சரிதான்னா இப்பவே அசரிரியா ஏதாவது கேக்கணும் என்றாள். அந்தச் சமயத்தில் அவளுக்கு முன்னால் போன இரண்டு பேர், ……உப்பத் தின்னவன் தண்ணியக் குடிச்சுத்தான் ஆகணும். வேணுமுன்னால் பாரு என்று பேசிக் கொண்டு போனார்கள். செல்லாத்தா தைரியப்பட்டாள்.

பத்து நாட்களில் ஐந்து கழிந்தன. செல்லாத்தாவுக்கு நம்பிக்கை சந்தேகமாகியது. வீட்டுக்குத் திரும்பும் வழியில் எதிரே ஒரு நாய் வந்தது. ……இந்த நாய் திரும்பி நடந்தால் நான் நினைச்சது நடக்கும்† என்று நினைத்துக் கொண்டாள். நாய் திரும்பி நடந்தது. அவள் திருப்தியோடு நடந்தாள். எட்டாவது நாள், ஒரு சின்னப் பையன் எதிரே வந்தான். அவளால் தாள முடியவில்லை. ……ராசா... பாட்டி நினைச்சது நடக்குமா? தெய்வ வாக்காய் சொல்லுடா ராசா என்றாள். பையன் பயந்து போயோ என்னவோ, ……நதக் கும்... நதக்கும் என்றான்.

செல்லாத்தாவுக்குப் பூரிப்பு. நாட்கள் நகர்ந்தன. ……காளியாத்தா... செக்கம்மா... சொள்ள மாடா... என் மகளோட குனிஞ்சதல நிமுறணும்... நிமிறணும் என்று சொல்லிக் கொண்டாள். நாட்கள் கூடியது போல் அவள் விண்ணப்பித்துக் கொண்ட தெய்வங்களின் பட்டியல்தான் கூடியது. பத்து நாட்களும் கழிந்து பதினோராவது நாள் வந்தது. முத்துப்பாண்டி வீட்டில், பங்காளிகளின் …ஆக்கிப் போடும்† கூட்டம்.

செல்லாத்தா ஆவேசத்துடன் வீட்டுக்கு வந்தாள். ராசகுமாரி மூலையில் சாய்ந்தபடியே ஒரு கடிதத்தைப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கிக் கொண்டே யாருக்கோ சொல்வது போல், தாயிடம் சொன்னாள்.

……என்னைக் கட்டிக்கப் போறவருக்குக் கடுதாசி போட்டேன். நடந்ததை எழுதினேன். அதுக்கு அவரு, …இவ்வளவு நடந்த பிறகு கல்யாணம் பண்ண முடியாது†ன்னு எழுதியிருக்கார்.

avatar
Guest
Guest

PostGuest Mon Jun 22, 2009 9:45 pm

சிவாசார் கட்டுரைன்னா சொல்லவா வேணும்.

சூப்பர் மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 22, 2009 9:49 pm

அதுக்காக படிக்காமலேயா?

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jun 22, 2009 9:52 pm

சிரி சிரி சிரி

avatar
Guest
Guest

PostGuest Mon Jun 22, 2009 9:52 pm

ஒன்னும் புரியல ஜொள்ளு சிரி

avatar
Guest
Guest

PostGuest Mon Jun 22, 2009 9:54 pm

சாமியார் கைககளை தூக்கியது எங்களுக்கு அ௫ள் புரிவதற்கு தானே சிரி

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jun 22, 2009 9:54 pm

என்ன இன்று ஒரே அடியா இருக்கு மு௫கனடிமை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக