ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
யசோதரா - சரித்திரக் கதை! Poll_c10யசோதரா - சரித்திரக் கதை! Poll_m10யசோதரா - சரித்திரக் கதை! Poll_c10 
heezulia
யசோதரா - சரித்திரக் கதை! Poll_c10யசோதரா - சரித்திரக் கதை! Poll_m10யசோதரா - சரித்திரக் கதை! Poll_c10 
E KUMARAN
யசோதரா - சரித்திரக் கதை! Poll_c10யசோதரா - சரித்திரக் கதை! Poll_m10யசோதரா - சரித்திரக் கதை! Poll_c10 
mohamed nizamudeen
யசோதரா - சரித்திரக் கதை! Poll_c10யசோதரா - சரித்திரக் கதை! Poll_m10யசோதரா - சரித்திரக் கதை! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

யசோதரா - சரித்திரக் கதை!

3 posters

Go down

யசோதரா - சரித்திரக் கதை! Empty யசோதரா - சரித்திரக் கதை!

Post by சிவா Fri Apr 16, 2010 12:57 am

உண்மைதானா? இல்லை வதந்தியா? தோழி விகசிதா பொய் சொல்பவள் அல்ல. தன்னை நன்கு அறிந்தவள். தோழி கூட அல்ல அவள். தங்கை போல் பழகுபவள். அதனால்தானே ஓடோடி வந்து மூச்சு வாங்க இந்தச் செய்தியைச் சொல்கிறாள்.

பரபரப்போடு உப்பரிகை நோக்கிச் சென்ற ராணி யசோதரா கீழே ராஜவீதியைப் பார்த்தாள். மக்கள் தங்கள் பழைய இளவரசரைப் பார்க்கும் ஆவலோடு, அவர் வரும் திசை நோக்கித் திரள் திரளாகச் சென்று கொண்டிருந்தார்கள்.

‘‘இந்தக் கபிலவாஸ்துவுக்கு மறுபடி வர எப்படி அவர் சம்மதித்தாராம்? தந்தையும் மனைவியும் மகனும் நாடும் வேண்டாம் என்று துறந்து போனவர் தானே?’’

‘‘ஆம் அம்மா. ஆனால் கானகத்தில் அவரைச் சந்தித்த நம் தேரோட்டி சந்தகன் கேட்ட கேள்விகள் அவர் மனத்தை மாற்றிவிட்டது!’’

‘‘அப்படி என்ன கேட்டான் அவன்?’’

‘‘நீங்கள் குடும்பத்தைத் துறந்தது மக்கள் குலம் முழுவதையும் நேசிக்கத்தானே? பழைய நாட்டு மக்களும் பூர்வாசிரம மனைவியும் மகனும் தந்தையுமெல்லாம் அந்த மக்கள் குலத்தில் அடங்குபவர்கள் தானே? அவர்கள் உங்களின் சிறப்பு நேசத்திற்கு ஆட்படக் கூடாதென்றாலும், பொது நேசத்திற்கு உட்பட்டவர்கள் தானே? அப்படியானால், பல நாடு போகும் நீங்கள் கபிலவாஸ்துவுக்கும் ஏன் வரக்கூடாது? உங்களின் பழைய நாட்டு மக்களுக்கு உபதேசங்களை ஏன் வழங்கக் கூடாது? இவைதான் அம்மா அவன் கேட்ட கேள்விகள். உங்கள் கணவர் மறுப்பே சொல்லவில்லையாம். அதற்கென்ன, வருகிறேன் என்றாராம், இதோ வந்து கொண்டிருக்கிறார்!’’

யசோதராவின் உள்ளம் பரபரப்படைந்தது. எத்தனை ஆண்டுகள் ஓடிவிட்டன! அன்று மகன் ராகுலன் சிறு குழந்தை. இன்றோ வளர்ந்த வாலிபன். தந்தைப் பாசமின்றி வளர்ந்த மகன். அவன் நினைவில் தந்தையின் முகமே நழுவியிருக்கும். இன்றுதான் தந்தையைப் புதிதாய்ப் பார்ப்பது போல் பார்ப்பான்.

அவர் மட்டுமா துறவியானார்? நானும்தான் துறவினி போல் வாழ்கிறேன், லட்சுமணனைப் பிரிந்த ஊர்மிளை மாதிரி!

‘‘அடியே விகசிதா! ராஜகுமாரன் ராகுலனையும் என் மாமனார் சுத்தோதனரையும் விரைந்து வரச்சொல். நானும் தயாராகிறேன். அவரை நாமே சென்று எதிர்கொண்டு அழைப்பதுதான் மரியாதை!’’

விகசிதா ஆகட்டும் அம்மா என்றவாறு அவர்களை அழைக்க ஓடினாள். யோசனையுடன் நிலைக்கண்ணாடி முன் சற்று நேரம் நின்ற யசோதரா, ஒரு பட்டுப் புடவையை எடுத்து உடுத்திக் கொண்டாள். அனைத்து ஆபரணங்களையும் அணிந்து அலங்கரித்துக் கொண்டாள்.

தன் அழகால் கவரப்பட்டு, அவர் துறவறம் துறந்து மறுபடி இல்லறம் ஏற்க மாட்டாரா? ஓர் ஏக்கம் பெருமூச்சாய் அவளிடம் புறப்பட்டது. பல இரவுகள் அவளிடமிருந்து எழுந்த பெருமூச்சின் தொடர்ச்சி அது.

அந்த நாள் இப்போதும் நினைவில் தோன்றி அவளைப் பதற வைத்தது. இதோ தன் வாதத் திறனால் கபிலவாஸ்துவுக்கு அவரை இன்று வரவழைத்திருக்கும் இதே தேரோட்டி சந்தகன்தான், பதினைந்து ஆண்டுகளுக்கு முன், இளவரசர் தான் துறவு மேற் கொள்ள முடிவு செய்து கானகத்திற்குள், போனதையும், அதற்குச் சாட்சியாக மன்னரின் தலைக் கூந்தலை ஒரு தட்டில் ஏந்தி வந்து காட்டினான்.

விவரமறிந்து பதறியவாறு ஓடோடி வந்தார் மாமனார் சுத்தோதனர்.

‘மகளே! உனக்கு என்ன ஆறுதல் கூறுவதென்று தெரியவில்லை அம்மா. பிறந்த வீடு செல்வது ஆறுதல் அளிக்கும் என்றால் அப்படியே செய். பேரன் ராகுலனை அவ்வப்போது வந்து நான் பார்த்துக் கொள்கிறேன்’’ தேற்றப்பட வேண்டியவர் அவளைத் தேற்றினார். அவள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

இதுவே என் வீடு. தாங்களே என் தந்தை. நான் இங்கே வாழ்வதையே விரும்புகிறேன்.’’ அன்று முதல் இன்றுவரை அவளை மகளாய்த்தான் கருதுகிறார். எதிலும் அவள் வைத்ததே சட்டம். அவளைக் கேட்காமல் நாட்டில் ஒன்றும் நடப்பதில்லை. அவருக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது. விரைவில் பேரன் ராகுலனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய வேண்டும் என்பதே அவரது ஒரே ஆசை. ராகுலனோடு விரைந்து வந்த சுத்தோதனர், மருமகளின் விசேஷ அலங்காரத்தைப் பார்த்து மகிழ்ந்தார்.
இவளை இப்படிப்பட்ட கோலத்தில் பார்த்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன! வா மகளே என அவளையும் அழைத்தவாறு வீதியில் இறங்கி நடந்தார். தோழி விகசிதா அவர்களைத் தொடர்ந்தாள்.

மக்கள் வெள்ளம் விலகி வழிவிட்டது. நிலவு போல் ஒளிவீசும் புத்தரைப் பிரதானமாய்க் கொண்ட துறவிகள் கூட்டம் எதிரே வந்து கொண்டிருந்தது. ‘புத்தம் சரணம் கச்சாமி! சங்கம் சரணம் கச்சாமி! தர்மம் சரணம் கச்சாமி!’ என்ற குரல்கள் எழுந்து அடங்கின. அரச குடும்பத்தினர் மகான் புத்தரின் அருகே வந்தார்கள்.

தூய்மையே வடிவாக, சலனங்களை வென்ற நிறைவோடு, சாந்தி தவழும் முகத்தோடு அவர்களைப் பார்த்தார் புத்தர். சுத்தோதனர் பேச்செழாமல் நிற்க, ‘மகனே ராகுலா! உன் தந்தையின் தாள் பணிவாய்!’ என அறிவுறுத்தி, தானும் புத்தரின் பாதங்களில் பணிந்து எழுந்தாள் யசோதரா. ராகுலன் வியப்பு கலந்த மகிழ்ச்சியோடு, அவரால் வசீகரிக்கப் பட்டவனாய் அவரையே பார்வையால் அள்ளி விழுங்கிக் கொண்டிருந்தான்.


யசோதரா - சரித்திரக் கதை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

யசோதரா - சரித்திரக் கதை! Empty Re: யசோதரா - சரித்திரக் கதை!

Post by சிவா Fri Apr 16, 2010 12:58 am

எதுவும் பேசாமல் அமைதியாக புத்தரது திருமுகத்தையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள் யசோதரா. தனக்குப் பரிச்சயமான கணவர் சித்தார்த்தர் அல்ல இவர். கூட்டுப் புழு பட்டுப் பூச்சி ஆவது போல் முற்றிலும் மாறிய புது மனிதர். ஆன்மிக வானில் பறக்கும் இந்தப் பட்டுப்பூச்சி மறுபடியும் இல்லறக் கூட்டில் அடைபடாது. யசோதரா ஒரு பார்வையிலேயே உண்மையை உணர்ந்தாள்.

ராகுலனைப் பார்த்த அவள் ஒரு முடிவு செய்தாள். கபிலவாஸ்துவுக்கு மறுபடி வந்திருக்கும் இந்தத் தருணத்தில், மகனுக்கு நாட்டை வழங்கும் கடமையையாவது நிறைவேற்றட்டும். அவள் விதியின் விளையாட்டை அறியாதவளாய் மெல்லிய குரலில் சொன்னாள்:

‘‘பிரபோ, இந்த ராஜ்ஜியம் ன்னமும் தங்களுடையதுதான். தங்கள் மகனுக்கு இதை வழங்குவதாக அறிவித்து விடுங்கள். அது உங்கள் கடமையும்கூட. இனி ராகுலன் அரசாளட்டும்!’’

புத்தர் கலகலவெனக் குழந்தை போல் சிரித்தார்: ‘‘பெண்ணே! நானோ முற்றும் துறந்த துறவி. எனக்கு மண்ணால் ஆன ராஜ்ஜியம் ஏதுமில்லையே? அதைத் துறந்துதானே துறவியானேன்! என்னிடம் இருப்பதெல்லாம் துறவு சாம்ராஜ்யம்தான். இவனுக்கு அத்தகைய பாக்கியம் இருக்குமென்றால் ஆனந்தமான அந்த சாம்ராஜ்யத்தில் இவனுக்கும் பங்கு வழங்குவதில் எனக்கு எந்தத் தடையும் இல்லை!’’

இதைக் கேட்டு யசோதரா திகைத்து நிற்க, ராகுலன் அவர் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்துச் சொன்னான்: ‘‘அப்படியே ஆகட்டும். நான் தங்கள் சீடனாவேன். என்னையும் துறவியர் கூட்டத்தில் ஒருவனாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்!’’ சொன்னபடியே புத்தரின் குழுவினரோடு இணைந்தான் அவன். யசோதரா திக்பிரமித்து நின்றாள்.

இனி தன் வாழ்வின் லட்சியம்தான் என்ன? கணவன் எவ்வழி மனைவி அவ்வழி என்பதே நெறி போலும்.

‘‘பிரபோ! தங்களிடமிருந்து பிறக்கும் உள்ளொளி என்னையும் ஈர்க்கிறது. தங்கள் குழுவில் துறவினிகளுக்கு இடம் உண்டா?’’

‘பெண்ணே! கட்டாயம் இடம் உண்டு. அதற்கென்று உள்ள தனிக் குழுவில் நீ இணைந்துகொள். பிணி, மூப்பு, மரணம் ஆகிய மூன்றிலிருந்தும் எந்த மனிதரும் தப்ப முடியாது. ஆசை தான் துன்பத்திற்குக் காரணம். எல்லா ஆசைகளையும் ஒவ்வொன்றாய்த் துறக்க முயல்வாய்!’’

யசோதரா விகசிதாவை அழைத்து தன் வயோதிக மாமனார் சுத்தோதனரின் கரங்களைப் பற்றி அவளிடம் ஒப்படைத்தாள்:

‘‘விகசிதா! மகாராஜவை உன் தந்தைபோல் கவனித்துக்கொள். என் மாமனார் கண்ணிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீரும் வரக்கூடாது. தந்தையே! என் மனநிம்மதி தேடி நான் எடுக்கும் முடிவுக்கு மானசீகமாக உங்கள் அனுமதியைப் பெறுகிறேன்!’

யசோதரா, துறவினிகளோடு சேர்ந்து கொண்டாள். சுத்தோதனர் திகைத்தார். விதி எவ்வளவு வேகமாக விளையாடுகிறது! ‘சித்தார்த்தா, நீ இப்படிச் செய்யலாமா?’ கேட்டுவிட வேண்டியதுதான். மகனே என்றழைக்க எண்ணினார். ஒரு தயக்கம் குறுக்கிட்டது. ஏதோ சொல்ல எண்ணி புத்தரின் முகத்தைப் பார்த்தார். புத்தர் பார்வையாலேயே என்னவென்று வினவினார்.

‘‘ஒரு சத்தியம் செய்து தரவேண்டும்!’’

‘‘என்ன சத்தியம்?’’ புத்தர் கனிவோடு கேட்டார்.

‘‘தாய் தந்தை இருவரின் சம்மதமில்லாமல் யாரையும் துறவியாக்க மாட்டேன் என்ற சத்தியம்.’’

‘‘நல்லது. அதுவும் சரிதான். தாய் தந்தை இருவரின் சம்மதமில்லாமல் யாரையும் துறவியாக்க மாட்டேன். இதுவரை நடந்தவற்றிற்கு இது பொருந்தாது. இனி இவ்விதம் நடக்காது சொல்லிவிட்டுப் பதற்றமே இல்லாமல் அமைதியாக நடந்தார் புத்தர். அவரது குழுவினரோடு இணைந்து அவரைப் பின்பற்றினார்கள் ராகுலனும் யசோதரையும். தன் மூன்று உறவுகளையும் தொலைத்த பிறகு, அரசரே ஆனாலும் தானும் துறவி தான் என்பதை உணர்ந்தவராய் கண்ணீர் மல்க அவர்கள் விலகிச் செல்வதைப் பார்த்துக்கொண்டே நின்றார் சுத்தோதனர். ‘வாருங்கள் அப்பா! அரண்மனைக்குப் போகலாம்!’ எனத் தன் கண்ணீரைத் துடைத்தவாறே தளர்ந்திருந்த அவரை ஆதரவாய்க் கைப்பிடித்து அழைத்துச் சென்றாள் விகசிதா. மக்கள் கூட்டம் விலகி வழிவிட்டது.

திருப்பூர் கிருஷ்ணன்


யசோதரா - சரித்திரக் கதை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

யசோதரா - சரித்திரக் கதை! Empty Re: யசோதரா - சரித்திரக் கதை!

Post by கலைவேந்தன் Fri Apr 16, 2010 2:04 am

புத்தரின் மறுபக்கம் காண உதவிய கதை ...

என்ன தான் புத்தர் உலகத்துக்கே ஒளி கூட்டினார் என்றாலும் தம் குடுமபத்திற்கு அவர் செய்தது சரியா என்ற கேள்வி இன்றும் எழாமல் இல்லை,,,

துறவறம் தான் சிறந்ததென கருதக்காரணம் என்ன,,,?

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்.

என்று சொன்ன வள்ளுவர் வாக்கு பொய்யா.,,,?

அருமையான கதையை பகிர்ந்தமைக்கு நன்றி சிவா,,,



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

யசோதரா - சரித்திரக் கதை! Empty Re: யசோதரா - சரித்திரக் கதை!

Post by சபீர் Sat Apr 17, 2010 12:45 am

ரொரொரொரொரொரொரொரொரொம்ப விபரமாக கதை

நன்றி தல பல படிப்பினைகளை தந்து பகிர்ந்து கொண்டமைக்கு




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

யசோதரா - சரித்திரக் கதை! Empty Re: யசோதரா - சரித்திரக் கதை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum