Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 1:02 pm
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 8:53 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:03 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:34 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:36 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:35 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:04 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:15 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:53 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:49 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:25 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:21 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 5:21 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:37 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:34 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:23 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:19 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:16 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 12:54 pm
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 6:54 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 06, 2024 1:09 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Nov 06, 2024 12:56 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 06, 2024 12:43 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:14 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 10:45 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 10:29 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 9:30 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:24 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:21 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:20 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:19 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:19 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:18 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:16 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 8:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 6:08 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 1:02 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:16 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:16 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனிமையை விரும்புவது மனநோயா?
+5
மனோஜ்
ரிபாஸ்
அன்பு தளபதி
சபீர்
சம்சுதீன்
9 posters
Page 1 of 1
தனிமையை விரும்புவது மனநோயா?
தகவல் தொழில்நுட்பம் - ஐ.டி துறை. இந்தியாவில் ஐ.டி துறையின் வளர்ச்சி எத்தனையோ மாற்றங்களை பொருளாதார ரீதியில், சமூக ரீதியில், பெருநகரங்களின் வளர்ச்சி அடிப்படையில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது எனலாம்.
வாரத்தில் 5 நாள் வேலை, அதிக சம்பளம், விடுமுறைக் கொண்டாட்டம், மன அழுத்தத்தையும், சோர்வையும் போக்குவதாகக் கூறிக் கொண்டு அவ்வப்போது சினிமா, விருந்து, விழா, கூடிக் கொண்டாடுதல் (get together) போன்றவை இந்தத் துறையில் வெகுசாதாரணமான ஒன்று.
ஆனால், ஐ.டி. நிறுவனங்களின் ஊழியர்களை மகிழ்விக்கும் நோக்கம் உண்மையிலேயே நிறைவேறுகிறதா? இதனால் ஊழியர்களுக்கு சாதகம் இருக்கிறதா? அல்லது மன அழுத்தத்தை மேலும் ஏற்படுத்துகிறதா? என்பது பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.
தனிமையை விரும்புவோர்:
சிலர் எப்போதுமே தனிமையை விரும்புவார்கள். அவர்களுக்கு நல்ல திறமை இருந்தாலும் மற்றவர்களுடன் பழகுவதற்கு மிகவும் யோசிப்பார்கள். சின்ன வயதில் நண்பர்கள் அல்லது பழகியவர்களிடம் ஏற்பட்ட ஏமாற்றம், தேவையிலாத நட்பு வேண்டாம் என்ற அறிவுரை, தன்னைப் போன்றே சிந்திப்பதற்கு யாரும் இல்லை என்ற மனப்பான்மை போன்ற ஏதாவதொரு காரணத்தால் தனிமையில் இருப்பதையே விரும்புவார்கள்.
வலிய வந்து யாராவது பேசினாலும், ஒருசில வார்த்தைகள் மட்டுமே பேசி தட்டிக்கழித்து விடுவார்கள். தனிமையில் இருப்பதே ஒருவகையான மனநோய்தான். ஆனால் அது விபரீதமான சிந்தனைகளுக்கு வழிவகுக்காதவரை பிரச்னை இல்லை.
தகவல் தொழில்நுட்பத் துறை (ஐ.டி) ஊழியர்கள் பெரும்பாலான நேரம் கணினியிலேயே நேரத்தைக் கழிக்க வேண்டியிருப்பதால், பிறருடன் கலந்து பழக வேண்டியது மிகவும் அவசியம். அலுவலகத்தில் எவருடனும் பழகாமல் இருப்பதால் அவர்களது கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்ள மாட்டார்கள். அதற்குப் பதிலாக உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் விடுமுறையைக் கழித்தால் உண்மையில் எவ்விதப் பிரச்னையும் உண்டாகாது.
மற்றவர்கள் சந்தோஷமாக இருக்கும்போது, தம்மால் சந்தோஷமாகக் கொண்டாட முடியவில்லையே என்று ஆதங்கப்படும்போது தான் பிரச்னை ஆரம்பிக்கிறது. அந்த மனத்தாங்கலே அவர்களுக்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்தி விடக்கூடும்.
இப்படி தனிமையை விரும்புவர்கள், சில நேரங்களில் தங்களுக்குத் தாங்களே பார்ட்டி வைத்துக் கொள்வார்கள். மற்றவர்கள் சந்தோஷமாக இருக்கும்போது தம்மால் மகிழ்ச்சியாகக் கொண்டாட முடியவில்லேயே என்ற எண்ணத்தில் தனியே எங்காவது சுற்றுப்பயணம் செய்வது, தனியே மது அருந்துவது, பாக்கு, கஞ்சா போன்று ஏதாவது ஒரு போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி விடுவதும் உண்டு.
சில நேரங்களில் அளவு தெரியாமல் குடித்து விட்டு, சாலையில் தள்ளாடி நடப்பது, கீழே விழுந்து அடிபடுவது, வாந்தி எடுப்பது போன்றவை ஏற்பட்டு மயங்கி விழக்கூடும்.
அடுத்த நாள் அவர்கள் மீதே அதிக வெறுப்பு ஏற்பட்டு பிறருடன் பேசுவதை மேலும் குறைத்துக் கொள்வார்கள். இதனால் கிட்டத்தட்ட ஒரு மனநோயாளியின் நிலைக்கே தள்ளப்படுவார்கள். எவருடனும் பழக விருப்பம் இல்லை என்பதும் உண்மையில் ஒரு மனநோய்தான் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். ஊருடன் ஒத்து வாழ்பவர்களால் மட்டுமே வாழ்க்கையை எளிதாகக் கொண்டு செல்ல முடியும்.
வீட்டிற்கும் தாவும் அலுவலகத் தோழர்களுடன் பேசுவதில் இருக்கும் விருப்பமின்மை நாளடைவில் வீட்டுக்கும் பரவக் கூடும். தாய், தந்தை மற்றும் உறவினர்கள் பேசினால்கூட எரிச்சலும், கோபமும் உண்டாகி தனித்தீவாக மாறி விடுவார்கள். அப்படியொரு நிலை உருவாகும் முன்பே, உரிய மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். மனதுக்குப் பிடித்தவர்கள் யாருடனாவது ஒரு சில நிமிடங்களாவது பேசுவதைக் கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும்.
கொஞ்சம் கொஞ்சமாக பேசும் நேரத்தைக் கூட்டிக் கொள்ள வேண்டும். மனதில் இருக்கும் சோகம், துக்கம், வேதனை போன்றவற்றை அடுத்தவர்களோடு பகிர்ந்து கொள்ளும் போதுதான் அவை குறையும். ஆறுதல் சொல்ல நண்பர்கள் இருப்பதே பெரும் பலமாக இருக்கும்.
இவற்றுக்கெல்லாம் என்னதான் தீர்வு?
கொண்டாட்டத்தை அனுபவிக்கக்கூடிய மனநிலை இருப்பது போன்று, அதை நிறுத்துவதற்கான மனநிலையையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லா வாரமும் கொண்டாட்டம் வேண்டும் என்று அடம்பிடிக்கக் கூடாது.
ஒருவாரம் குடும்பத்துக்கு, ஒரு வாரம் பழைய நண்பர்களுக்கு என்று விடுமுறையைப் பகிர்ந்து கொண்டால் எந்தப் பிரச்னையும் வராது.
இந்த விஷயத்தில் ஐ.டி. நிறுவனங்களும் தங்களது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக இதுபோன்ற கொண்டாட்டங்களை சில நிறுவனங்கள் ஊக்குவிக்கின்றன. ஊழியர்களுக்குத் தேவையான வாகன வசதி செய்து தருவது, மது மற்றும் உணவு வகைகளை ஏற்பாடு செய்வது, ஹோட்டல் ரிசார்ட்ஸ் புக் செய்வது என்றெல்லாம் ஊழியர்களை பலமாகக் கவனிக்கிறார்கள்.
இவையெல்லாம் ஊழியர்களின் நன்மைக்காகச் செயல்படுகின்றன என்றுதான் நிறுவனங்கள் சொல்கின்றன. ஆனால் நிறுவனங்களின் இத்தகைய ஏற்பாடுகள் ஊழியர்களின் வாழ்க்கையைத்தான் பாதிக்குமே தவிர, நன்மை எதையும் செய்து விடாது. ஊழியர்கள், அதலபாதாளத்தை நோக்கிப் பயணப்பட்டால், நிறுவனங்கள் கைகொடுத்து அவர்களை மீட்க வேண்டும். மாறாக அழிவுக்கான பயணத்தை விரைவுபடுத்தி விடக்கூடாது.
Re: தனிமையை விரும்புவது மனநோயா?
ரொம்ப விரிவான நல்லதொரு கருத்து நன்றி
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: தனிமையை விரும்புவது மனநோயா?
ஐ .டி மட்டுமல்ல அத்தனை துறைகளும் இன்று மிக கடுமையான போட்டியை சமாளிக்க வேண்டி இருப்பதால் ஊழியர்கள் இந்த நிலைக்கு ஆளாகின்றனர் மொத்தத்தில் பயனுள்ள பதிவு
Re: தனிமையை விரும்புவது மனநோயா?
maniajith007 wrote:ஐ .டி மட்டுமல்ல அத்தனை துறைகளும் இன்று மிக கடுமையான போட்டியை சமாளிக்க வேண்டி இருப்பதால் ஊழியர்கள் இந்த நிலைக்கு ஆளாகின்றனர் மொத்தத்தில் பயனுள்ள பதிவு
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: தனிமையை விரும்புவது மனநோயா?
ரிபாஸ் wrote:maniajith007 wrote:ஐ .டி மட்டுமல்ல அத்தனை துறைகளும் இன்று மிக கடுமையான போட்டியை சமாளிக்க வேண்டி இருப்பதால் ஊழியர்கள் இந்த நிலைக்கு ஆளாகின்றனர் மொத்தத்தில் பயனுள்ள பதிவு
மனோஜ்- இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
Re: தனிமையை விரும்புவது மனநோயா?
தனிமையை முற்றிலுமாக மன நோய் என அடையாளப் படுத்த முடியாது! தனித்திறமைகள் வெளிவரும் நேரம் தனிமையில்தான்! சிந்தனைகள் சிறகு முளைத்துப் பறக்கும் நேரம் தனிமைதான்! எனக்கு தனிமையே இனிமை!
தமிழ் நாயகன்- புதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 04/04/2010
Re: தனிமையை விரும்புவது மனநோயா?
இன்றய தலைமுறையினர் ஆணிவேரை இழந்த மரங்களாகி விட்டனர்.பழைய உறவுகளையும்,நட்பையும் மறந்துவிட்டனர். கூட்டுக் குடும்ப வாழ்வில் மன அழுத்தங்கள் குறைவு.
tknithi- புதியவர்
- பதிவுகள் : 29
இணைந்தது : 20/05/2010
Re: தனிமையை விரும்புவது மனநோயா?
துன்பங்களை வளர்ப்பதும் தனிமைதான்,
தணிப்பதும் தனிமைதான் - கண்ணதாசன்.
தணிப்பதும் தனிமைதான் - கண்ணதாசன்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Similar topics
» தனிமையை விரும்புவது மனநோயா
» ஓரினச் சேர்க்கை
» சிவப்பு நிற பெண்களை ஆண்கள் விரும்புவது ஏன்?
» மனதுக்கு இல்லை வயது!- முதுமையில் தனிமையை தவிர்க்க வேண்டும்
» பெண்கள் விரும்புவது...
» ஓரினச் சேர்க்கை
» சிவப்பு நிற பெண்களை ஆண்கள் விரும்புவது ஏன்?
» மனதுக்கு இல்லை வயது!- முதுமையில் தனிமையை தவிர்க்க வேண்டும்
» பெண்கள் விரும்புவது...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum