ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்

5 posters

Go down

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் Empty பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்

Post by தமிழ் Wed Apr 14, 2010 12:20 am


பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்


பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் 26mayaip15tl

புனைப் பெயர் : அகல்யா
இவர் வாழ்ந்த காலம் (1930 - 1953 )
விவசாயி
, மாடு மேய்ப்பவன் , மாட்டு வியாபாரி, இட்லி வியாபாரி, மாம்பழ வியாபாரி,
கீற்று வியாபாரி, முறுக்கு வியாபாரி, தேங்காய் வியாபாரி, மீன் நண்டு
பிடிக்கும் தொழிலாளி , உப்பல நீர் ஊற்றுனர் , இயந்திர ஓட்டுனர்,
அரசியல்வாதி, பாடகர், நடிகர், நடனக் கலைஞர், கவிஞர் என 17 வகையான பணிகளில்
ஈடுபட்டு இருந்தார்

இதில் முக்கியமானது என்னவென்றால் தன்வாழ்நாளின் கடைசி ஒன்பது ஆண்டுகளில் தான் கவிஞராக வாழ்தார்.
திரு பட்டுக்கோட்டை அவர்கள் பழகுத் தமிழில் பாட்டு எழுதியவர். இவர் வாழ்ந்த காலம் குறைவு அவருடைய வாழ்க்கை அனுபவங்களோ மிகுதி
இவர்
பாடல்கள் கருத்து செறிவும் , கற்பனையும் , சமூக சிந்தனையும் , ஒலி நயமும்
செவி நுகர் கனிகள் ஆகும். காடு களனி எல்லாம், பட்டி தொட்டி எல்லாம்
எதிரொலித்தன இவர் பாடல்கள் தமிழின் தாகம் சேர்த்த கானங்கள்
பட்டுக்கோட்டையின் படைப்புகள் .

படிப்பறிவில்லா பாமரருக்கு திரை
உலகம் மூலம் தமிழையும், பாட்டு கலையையும், பழக்கிய பல்கலைக்கழகமாக
விளங்கியவர் பட்டுக்கோட்டை என்று சொன்னால் அது மிகையாகாது

அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், அவலங்களையும் பாட பிறந்தவர் பட்டுக்கோட்டை அய்யா அவர்கள் .

நாட்டின் விடுதலைக்காக தான் இன்னுயிரை ஈந்த தியாகிகள் சிலர்
மறைக்கப்படலாம் ஆனால் அவர்கள் அடைக்கப்பட்டு இருந்த சிறைச்சாலைகள்
சொல்லும் அந்த உண்மை வரலாற்றை என்பதை பட்டுக்கோட்டை அவர்கள்
நீ தாங்கிய உடையும் ஆயுதமும் - பல
சரித்திர கதை சொல்லும் சிறைக்கதவும்
- என்றார்

மக்கள் படும் அவலங்களை,
மூள நிறஞ்சவங்க காலம் தெரிஞ்சவங்க
மூத்தவங்க படிச்சவங்க வாழ்கின்ற நாடு
முழியும் பிதுங்குதுங்க
மூச்சும் தினருதுங்க
பார்த்துக்குங்க கேட்டுக்குங்க
ஜனங்க படும் பாடு
-என்று தான் ஏக்கத்தை வெளிப்படுத்துகிறார்

நாவடக்கத்தை
உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?
தன் நிலைக் கேட்டுப் போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது ...

- என்று நாவடக்கதின் விளைவை பதிவு செய்கிறார்


ஆணின்றி
பெண்ணில்லை , பெண்ணின்றி ஆணில்லை என்று இயற்கையின் படைப்பில் எல்லாம்
சமமாக இருக்கும் போது பெண் இனத்தை அதிகாரம் பண்ணுவது , ஆதிக்கம்
செலுத்துவதும் , அடிமையாய் நடத்துவதும், அடக்கு முறையை கையாளுவதும் ஆணாக
இருப்பது மட்டும் எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் . இதனைத் தான் மக்கள்
கவிஞர் பாடுகிறார்
" ஆண்கள் கூட்டம் ஆடுகிற ஆட்டம்
அத்தனையும் பார்த்தோம் கேட்டோம் - பெண்கள்
ஆரம்பிச்சா தெரியும் திண்டாட்டம்

ஆணுக்கு பெண் அடிமை என்று
யாரோ எழுதி வெச்சாங்க - அதை
அமுக்கி பிடிச்சிக்கிட்டு விடமாட்டேன் ன்னு
ஆண்கள் உசந்துகிடாங்க பெண்கள் ஆமை போல ஒடுங்கி போனாங்க
அடங்கி நடக்குறதும் பணிந்து கிடக்குறதும் பெண்கள்

உண்டாக்குறதும் காக்குறதும் பெண்கள் - அதை
அடிச்சி பறிக்கிறதும், அடுத்து கெடுக்குறதும்
அட்டகாசம் பண்ணுறதும் ஆண்கள்

- என அடக்கி நடத்தும் ஆண்களை கடுமையாச விமர்சிக்கிறார் கவிஞர் .


உழைப்பையும், திறமையையும் பற்றி
"செய்யும் தொழிலே தெய்வம் கொண்ட
திறமை தான் நமது செல்வம்
கையும் காலுமே உதவி
கொண்ட கடமை தான் நமக்கு பதவி "
" வறுமையை நினைத்து பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்து விடாதே "
- என்று இளைய சமுதாயத்தினரை தட்டி எழுப்புகிறார்


கலைகளைப் பற்றி பேசும் போது
கொம்புல பலம் பழுத்து தொங்குறதும் கலை
லவ்வுல மனம் மயங்கி பொங்குறதும்
கலை
மேடையில குந்திகிட்டு பாடுறதும் கலை
வீதியில கர்ணம் போட்டு ஆடுறதும் கலை
- என்று கலையை கவித்துவமாய் கூறுகிறார்

இயற்கையை பற்றி
காலம் அறிந்து கூவிடும் சேவலை
கவிழ்த்து போட்டாலும் நிற்காது
கல்லைத் தொக்கி பாரம் வைத்தாலும்
காணக்காய் கூவும். தவறாது
- என்கிறார்
ஒருமைப் பாட்டை பற்று கூறுமிடத்தில்
ஓங்கி வளரும் மூங்கில் மரம்
ஒன்ன ஒன்ன பிடிச்சி இருக்கு
கொள்ளை கொள்ளையா வெடிச்சிருக்கு

ஒட்டாம ஒதுங்கி நின்னா உயர முடியுமா?- எதிலும்
ஒற்றுமை கலைஞ்சதுன்னா வளர முடியுமா?
- என்று விளக்குகிறார்.

மதப்பற்றும், கடவுள் பற்றும் மக்களை ஏமாற்றுகிற வெறும் வேஷம் . மக்களை ஏமாற்றுகின்ற பித்தலாட்டம்
" சித்தர்களும் , யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதி எழுதி வெச்சாங்க

எல்லாந்தாம் படிச்சீங்க

என்ன பண்ணி கிழிச்சீங்க
- என்று கோபத்தோடு கேள்வி கேட்கிறார்.

மக்கள் கவிஞரின் மறைவு நாளன்று கவியரசு கண்ணதாசன் அவர்கள் பாடிய கண்ணீர் கவிதை
................................
..................................
தங்கமகன் போன பின்னர்,
தமிழுக்கு கதி இல்லையே
வெங்கொடுமை சாக்காடே ;
விழுவதற்கு ஏற்ற பொருள்
மங்காத செங்குருதி மகனென்றோ என்னமிட்டாய் ?
கல்யாண சுந்தரனே! கண்ணியனே! ஒரு பொழுதும்

பொல்லாத காரியங்கள் புரியா பண்பினனே சாவது இயற்கை !
சாவதற்கும் நீதியுண்டு
நீதி இல்லா சாவுன்னை
நெருங்கி விட்டதென்றாலும்
வாழும் தமிழ் நாடும் வளர் தமிழும் வாழ்கின்ற காலம் வரை
வாழ்ந்து வரும் நின்பெயரே !


கருத்தாழமும்
அறிவுக்கூர்மையும் சமூகசமத்துவம் பற்றிய வேட்கையும் விடுதலை உணர்வும்
ஆத்மநேயத் துடிப்பும், இயற்கை மனிதர்கள் மீதான நேசிப்பும் என விரிவு
கொண்டதாகவே பட்டுக்கோட்டையாரினது கவிதை வெளி இருந்தது. அவரது திறமைக்கும்
ஆற்றலுக்கும் அவர் வாழ்ந்த ஆண்டுகள் மிகக் குறுகியது. (மறைவு: 8-10-1959)
ஆனாலும் அவர் விட்டுச் சென்றுள்ள தடம் ஆழமானது.
அவர் மறந்தாலும்
அவர் முடுக்கிய விசை சென்று கொண்டு தான் இருக்கிறது





பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் Empty Re: பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்

Post by கலைவேந்தன் Wed Apr 14, 2010 12:35 am

மிகச்சிறந்த பாடலாசிரியரை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி தமிழ்... பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் 678642 பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் 154550



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் Empty Re: பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்

Post by தமிழ் Wed Apr 14, 2010 12:37 am

கலை wrote:மிகச்சிறந்த பாடலாசிரியரை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி தமிழ்... பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் 678642 பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் 154550

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் 678642 பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் 678642 பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் 678642


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் Empty Re: பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்

Post by சரவணன் Wed Apr 14, 2010 12:52 am

கருத்தாழம் மிக்க பாடல்கள் தருவதில் வல்லவர்,
பகிர்விற்கு நன்றி!!! பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் 677196 பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் 678642


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் Empty Re: பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்

Post by அப்புகுட்டி Wed Apr 14, 2010 12:54 am

பகிர்விற்கு நன்றி!!!


பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் Empty Re: பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்

Post by நம்பி Tue Apr 27, 2010 4:00 pm

நாடோடி மன்னன் திரைப்படத்தில் பட்டுக்கோட்டையார் தன் இயக்கத்திற்காகவும், பத்திரிகைக்காகவும் எழுதிய பாடல் வரிகளை எம்.ஜி.ஆர் கேட்டுத் தனது படத்திற்காக பயன்படுத்தி கொண்டார் என்ற ஒரு வரலாறு உண்டு. பின்னாளில் எம்.ஜி.ஆர் தமிழக ஆட்சி பொறுப்பில் ஏறிய பொழுது அவரிடம் பத்திரிகையாளர் கேட்ட கேள்வி
''உங்கள் ஆட்சியின் கொள்கை என்ன?''

அதற்கான பதில் நாடோடி மன்னன் படத்திலேயே சொல்லிவிட்டேன் என்று கூறி....இந்த பாடல் வரிகளை கூறினார்...எம்.ஜி.ஆர்....

''நானே போடப் போறேன் சட்டம்

பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்

நாடு நலம் பெறும் திட்டம்....!

இப்படிபட்ட பாமரக்கவிஞனின் வாழ்க்கையை எளிமையாக எடுத்துக் கூறிய நண்பருக்கு நன்றி!
இந்த கவிஞனை பாராட்டாத தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்களே இல்லை....எனலாம். கூடுதல் தகவலுக்காக பதிந்தது. நன்றி!
avatar
நம்பி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 16/11/2009

http://nambitn.blogspot.com

Back to top Go down

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் Empty Re: பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum