ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலை வெட்டுவதைப் பார்த்த அனுபவம்!

+9
நிலாசகி
உதயசுதா
கலைவேந்தன்
சபீர்
ஹாசிம்
mohan-தாஸ்
ரிபாஸ்
அப்புகுட்டி
சிவா
13 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

தலை வெட்டுவதைப் பார்த்த அனுபவம்! - Page 2 Empty தலை வெட்டுவதைப் பார்த்த அனுபவம்!

Post by சிவா Mon Apr 12, 2010 4:00 am

First topic message reminder :

தலை வெட்டுவதைப் பார்த்த அனுபவம்! - Page 2 Saudi_killings


அது ஒரு வெள்ளிக்கிழமை மதியம். நான் ஏதாவது காய் வாங்கி வரலாம்னு யான்பு அல் பஹாருக்குப் போனேன். காரை ஒரு மசூதிக்கிட்ட நிறுத்திட்டு திரும்பிப் பார்த்தா ஒரே கூட்டம். எல்லாம் கச முசன்னு பேசிக்கிட்டிருந்தாங்க!

நம்ம ஆள் ஒருத்தரிடம் கேட்டேன்: "என்னங்க கூட்டம்?"

"தல வெட்டப் போறாங்களாம்" (என்னவோ முடி வெட்டப்போறது மாதிரி சொன்னார்).

கொஞ்சம் அரண்டாலும், உள்ளே எட்டிப் பார்த்தேன்...

ரெண்டு ஆட்கள் கைகள் பின்னால் கட்டப்பட்டு மண்டி போட்டு வைக்கப்பட்டிருந்தாங்க.. மொத ஆள் கொஞ்சம் வயசானவர்...40-45ருக்கும். ரெண்டாவது ஆள் 30-35 வயசுள்ள வாலிபர்.

ஒரு குள்ளமான சௌதி ஒரு கடுதாசியை வச்சுப் படிச்சார்.. (என் ஒடைஞ்ச அரபை வச்சு புரிஞ்சிக்கிட்டேன்) "மொத ஆள் ஒரு பாகிஸ்தானி... பள்ளிக்கூடத்தில பசங்களுக்கு போதைப் பொருள் விற்கும்போது பிடிச்சோம். குற்றத்தை ஒத்துக்கிட்டான். ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவத்துக்கு புதன்கிழமை தீர்ப்பு கொடுத்திருக்கு... அது மரண தண்டனை.. இப்போ தலையை வெட்டப்போறோம். ஏதாவது ஆட்சேபனை உண்டா?"

கூட்டம் உடனே, "இல்லை! இல்லை!" னு சத்தம் போட்டது!

அடுத்து - குள்ளமான சௌதி மறுபடியும் படிச்சார்.. "ரெண்டாவது ஆள் ஒரு சூடானி.. வேலை பாத்த வீட்டுப் பெண்ணைக் கற்பழித்து, கொன்னு ப்ரிட்ஜில் வச்சிட்டான். தப்பிக்கும்போது மாட்டிக்கிட்டான். திங்கட்கிழமை நடந்த சம்பவத்துக்கு வியாழக்கிழமை தீர்ப்பு கொடுத்திருக்கு... அது மரண தண்டனை.. இப்போ தலையை வெட்டப் போறோம். ஏதாவது ஆட்சேபணை உண்டா?"

மறுபடியும் கூட்டத்தினர், "இல்லை! இல்லை!"னு சத்தம் போட்டாங்க!

நான் குசுகுசுன்னு பக்கத்து ஆளிடம் கேட்டேன்... "ஏன் ஏதாவது ஆட்சேபணை உண்டா?" ன்னு கேக்குறாங்க.. அவர் சொன்னாரு.. "அந்தக் குற்றவாளி நிரபராதின்னு நிரூபிக்க தகுந்த ஆதாரம் இருந்தா, அத வச்சு இப்போ தண்டனையை நிறுத்திவிட்டுப் போய்டுவாங்க.. அப்புறம் கோர்ட்டில் சொல்லி விடுவிச்சுடலாம்.. நம்ம சொன்னதில் தப்பு இருந்தாலோ, சும்மா சொல்லிட்டாலோ நமக்கும் சேத்து ஆப்புதான்..!" (கோர்ட்டை அவமதிச்சதுக்கு...)

இப்போ ஸீனுக்குள்ள ரெண்டு பெரிய சௌதிகள் வந்தாங்க... அவங்களோட ஒரு டாக்டரும் ரெண்டு உதவியாளர்களும் ஒரு வேனில் வந்திருந்தாங்க... ரெண்டு பெரிய சௌதிகளும் ஒரு பெட்டியை எடுத்து, அதிலிருந்து வாள்களை தேர்ந்தெடுத்தாங்க..!

மண்டி போட்டிருக்கும் ஆட்களைப் பார்த்து "யா அல்லா"ன்னு சொல்லச் சொன்னாங்க.. அவங்களும் சொன்னாங்க! பாகிஸ்தானி அழுக ஆரம்பிச்சுட்டார்... ரொம்ப பாவமா இருந்தது.

சூடானி கலங்கவே இல்லை...(அட..போங்கடா! நீங்களும் ஒங்க ஒலகமும்னு நெனச்சிருப்பான்.)

ஒரு கணம்தான்... (ரொம்ப வேகமா வாளை இறக்கலை... சாதாரண வேகம்தான்..)

மொதல்ல.. பாகிஸ்தானி தலையை வெட்டினாங்க.. அது முழுசா வெட்டுப்படலை. காயை அறுக்கிற மாதிரி அறுத்துத் தள்ளினாங்க..! அந்த இடமே ரத்தமா போச்சு..!

பிறகு சூடானி தலையை வெட்டினாங்க.. துண்டா போய் விழுந்தது. ரத்தம் பீய்ச்சி அடிச்சது..!

ஒடம்பு தனியா துடிக்குது...! அதைப் பார்த்ததாலே கை, காலெல்லாம் வெட வெடன்னு ஆடிப்போயிட்டேன்.

அந்த டாக்டரும் ரெண்டு உதவியாளர்களும் விறு விறுன்னு ஒடம்புகளையும், தலைகளையும் சேத்து வச்சுத் தச்சு ஒரு பாலிதீன் பையில் போட்டு வேனில் ஏத்திட்டாங்க..!

எல்லோரும் கலைஞ்சு போய்ட்டோம். நானும் பல்வேறு எண்ணங்களுடன் காய்கறி வாங்கிக்கிட்டு திரும்ப வந்து அந்த எடத்தைப் பார்த்தா... ரெண்டு சின்னப் பசங்க ஓடி வெளையாடிக்கிட்டு இருக்காங்க..

அன்னிக்கு ராத்திரி (அந்த வாரம் முழுதும்) தூங்கவே இல்லை.

ஒரு நொடி முன்னால் வரை உயிருடன் இருந்த மனிதர்கள் நம் அனைவர் முன்னிலையிலும் சட்டப்பூர்வமாக இறந்து போனார்கள்...

- சுரேகா


தலை வெட்டுவதைப் பார்த்த அனுபவம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


தலை வெட்டுவதைப் பார்த்த அனுபவம்! - Page 2 Empty Re: தலை வெட்டுவதைப் பார்த்த அனுபவம்!

Post by ஹாசிம் Mon Apr 12, 2010 10:42 am

உதயசுதா wrote:இல்ல கலை.நம்ம நாட்டுல எண்ணிக்கையில் அடங்கா
குற்றங்கள் பெருகி போனதுக்கு காரணம் என்ன தெரியுமா?
இது போல கடுமையான தண்டனைகள் இல்லாததுதான்.
அரபு நாடுகளில் குற்றம் செய்தவன் அரேபியா இருந்தாலும் கடுமையான தண்டனை கொடுக்கிறாங்க.ஆனா நம்ம நாட்டுல நினைச்சாலே அசிங்கமா இருக்கு. சும்மா ஜனநாயகம் சொல்லி சொல்லி கடுமையான குற்றம் செய்தவன் எல்லாம் ரொம்ப ஈஸியா தப்பிச்சுடுராங்க.நம்ம நாட்டுல குற்றங்கள் குறையனும்ன்னா கடுமையான தண்டனைகள் வரணும்.

தலை வெட்டுவதைப் பார்த்த அனுபவம்! - Page 2 359383 தலை வெட்டுவதைப் பார்த்த அனுபவம்! - Page 2 359383 தலை வெட்டுவதைப் பார்த்த அனுபவம்! - Page 2 359383


நேசமுடன் ஹாசிம்
தலை வெட்டுவதைப் பார்த்த அனுபவம்! - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

தலை வெட்டுவதைப் பார்த்த அனுபவம்! - Page 2 Empty Re: தலை வெட்டுவதைப் பார்த்த அனுபவம்!

Post by கலைவேந்தன் Mon Apr 12, 2010 10:44 am

ஹாசிம் wrote:
கலை wrote:இருந்தாலும் ....

இறைவன் ஆக்கிய உயிரை மனிதன் போக்க என்ன உரிமை இருக்கிறது...?

எண்ணற்ற குற்றங்கள் என்றாலும் மனம் சற்றே ஒப்புக்கொள்ளும்,,

ஆனால்...

இவை மனிதத்தன்மையானவை அல்ல... காட்டுமிராண்டித்தனமானவை....

மனித உரிமைபற்றி உலகமே பேசும் நிலையில் இதை ஏற்க என்னால் இயலவில்லை....

கலை சார்
மதரீதியான கொள்கைகள் கோட்பாடுகள் வகுக்கப்பட்டவைகளை எம்மால் ஏற்க மட்டும் முடியுமே தவிர அவற்றை மாற்றியமைக்க எமக்கு அருகதை இல்லை
மனித உரிமைகளை பாதுகாப்பதற்காகத்தான் இந்த சட்டங்களே வகுக்கப்பட்டிருக்கிறது
இவரை கொலை செய்வதை பார்கும் நீங்கள் அப்பாவியான ஒருவரை அவர்கொலை செய்ததை பார்க்க வில்லையா
அப்பாவியை கொண்ட ஒருவரை என்ன செய்ய வேண்டும் சார்

நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொண்டாலும்...

அவசரமாக விசாரித்து இரண்டே நாளில் வழங்கிய தீர்ப்பில் என்ன நம்பகத்தன்மை இருக்கமுடியும்???

இப்படி அவசரத்தீர்ப்பில் எத்தனை நிரபராதிகள் அநியாயமாய் தண்டனை பெற்றார்களோ...?

அல்லாஹ் கருணையானவர் தானே...அவர் ப்டைப்பில் அநீதி செய்யும் மக்களுக்கு அவரும் சிறந்த தண்டனை வழங்கத்தானே செய்வார்...?

ஆயிரம் சொன்னாலும் இப்படி வெட்ட வெளியில் வெட்டிக் கொல்வதை என் மனம் ஏற்கவே இல்லை....



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தலை வெட்டுவதைப் பார்த்த அனுபவம்! - Page 2 Empty Re: தலை வெட்டுவதைப் பார்த்த அனுபவம்!

Post by pgasok Mon Apr 12, 2010 10:45 am

என்ன இருந்தாலும் இது ஒரு அகோர கட்சி தான் சோகம் சோகம் சோகம் சோகம்
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

தலை வெட்டுவதைப் பார்த்த அனுபவம்! - Page 2 Empty Re: தலை வெட்டுவதைப் பார்த்த அனுபவம்!

Post by சபீர் Mon Apr 12, 2010 10:50 am

ஹாசிம் wrote:
கலை wrote:இருந்தாலும் ....

இறைவன் ஆக்கிய உயிரை மனிதன் போக்க என்ன உரிமை இருக்கிறது...?

எண்ணற்ற குற்றங்கள் என்றாலும் மனம் சற்றே ஒப்புக்கொள்ளும்,,

ஆனால்...

இவை மனிதத்தன்மையானவை அல்ல... காட்டுமிராண்டித்தனமானவை....

மனித உரிமைபற்றி உலகமே பேசும் நிலையில் இதை ஏற்க என்னால் இயலவில்லை....

கலை சார்
மதரீதியான கொள்கைகள் கோட்பாடுகள் வகுக்கப்பட்டவைகளை எம்மால் ஏற்க மட்டும் முடியுமே தவிர அவற்றை மாற்றியமைக்க எமக்கு அருகதை இல்லை
மனித உரிமைகளை பாதுகாப்பதற்காகத்தான் இந்த சட்டங்களே வகுக்கப்பட்டிருக்கிறது
இவரை கொலை செய்வதை பார்கும் நீங்கள் அப்பாவியான ஒருவரை அவர்கொலை செய்ததை பார்க்க வில்லையா
அப்பாவியை கொண்ட ஒருவரை என்ன செய்ய வேண்டும் சார்
ஆமோதித்தல் ஆமோதித்தல்

பாகம் 2இ அத்தியாயம் 23இ எண் 1329
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

சமூகத்தில் விபச்சாரம் செய்த ஆண் பெண் இருவரை யூதர்கள் நபி(ஸல்) அவர்களிடம் அழைத்து வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டபடி அவ்விருவரும் பள்ளிவாசலில் ஜனாசாத் தொழுகை தொழுமிடத்திற்கருகில் கொண்டு செல்லப்பட்டுக் கல்லெறிந்து கொல்லப்பட்டார்கள்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தலை வெட்டுவதைப் பார்த்த அனுபவம்! - Page 2 Empty Re: தலை வெட்டுவதைப் பார்த்த அனுபவம்!

Post by கலைவேந்தன் Mon Apr 12, 2010 10:53 am

சுதா மற்றும் நிலாசகி....

நான் குற்றம் செய்பவர்களை சுதந்திரமாக விடச்சொல்லவில்லை...

தனிமைச்சிறை என்பது எத்தனை கொடூரம் தெரியுமா...?

உலகத்திலிருந்து பிரித்து தனிமைப்படுத்து புறக்கணிக்கப்படுவது இவை எல்லாம் மிக வேதனை தருபவை....

இத்தகைய தண்டனைகள் தரலாம்...

நான் கூறுவது சிறு குற்றங்களுக்கு கூட மரண தண்டனை வழங்கும் கொடிய பழக்கத்தை தான்,

நான் சில வருடங்களுக்கு முன் ஒரு வீடியொ கோரக்காட்சி கண்டேன், தீவிரவாதிகள் தாம் பிணையமாய் வைத்திருந்தவரை கழுத்தை அறுத்துக்கொல்லும் காட்சி....

அவர் கழுத்து அறுப்டும் போதும் ரத்தம் தொண்டையில் கட்டி குரலில் மாறுபடும் போதும் குலை அறுவது போல் அழுகை கேட்டேன்.. சோகம்

இத்தகைய கொடூர மரணங்கள் தேவையா என்பது தான் என் கேள்வி...

இங்கே தலை வெட்டும்போது காய்கறி அறுப்பது போல் என்ற சொல்லை படிக்கும் போது உங்கள் இதயம் அசையவில்லையா...?

மனிதன் ... சதைப்பிண்டம்... உயர்ந்த பிறவி... இந்த இழிநிலை தேவையா...?

நான் குற்றவாளிகளை ஆதரிக்க வில்லை...

கொடூரங்கள் குறைக்க்க சொன்னேன்....



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தலை வெட்டுவதைப் பார்த்த அனுபவம்! - Page 2 Empty Re: தலை வெட்டுவதைப் பார்த்த அனுபவம்!

Post by சபீர் Mon Apr 12, 2010 11:00 am

கலை wrote:
ஹாசிம் wrote:
கலை wrote:இருந்தாலும் ....

இறைவன் ஆக்கிய உயிரை மனிதன் போக்க என்ன உரிமை இருக்கிறது...?

எண்ணற்ற குற்றங்கள் என்றாலும் மனம் சற்றே ஒப்புக்கொள்ளும்,,

ஆனால்...

இவை மனிதத்தன்மையானவை அல்ல... காட்டுமிராண்டித்தனமானவை....

மனித உரிமைபற்றி உலகமே பேசும் நிலையில் இதை ஏற்க என்னால் இயலவில்லை....

கலை சார்
மதரீதியான கொள்கைகள் கோட்பாடுகள் வகுக்கப்பட்டவைகளை எம்மால் ஏற்க மட்டும் முடியுமே தவிர அவற்றை மாற்றியமைக்க எமக்கு அருகதை இல்லை
மனித உரிமைகளை பாதுகாப்பதற்காகத்தான் இந்த சட்டங்களே வகுக்கப்பட்டிருக்கிறது
இவரை கொலை செய்வதை பார்கும் நீங்கள் அப்பாவியான ஒருவரை அவர்கொலை செய்ததை பார்க்க வில்லையா
அப்பாவியை கொண்ட ஒருவரை என்ன செய்ய வேண்டும் சார்

நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொண்டாலும்...

அவசரமாக விசாரித்து இரண்டே நாளில் வழங்கிய தீர்ப்பில் என்ன நம்பகத்தன்மை இருக்கமுடியும்???

இப்படி அவசரத்தீர்ப்பில் எத்தனை நிரபராதிகள் அநியாயமாய் தண்டனை பெற்றார்களோ...?

அல்லாஹ் கருணையானவர் தானே...அவர் ப்டைப்பில் அநீதி செய்யும் மக்களுக்கு அவரும் சிறந்த தண்டனை வழங்கத்தானே செய்வார்...?

ஆயிரம் சொன்னாலும் இப்படி வெட்ட வெளியில் வெட்டிக் கொல்வதை என் மனம் ஏற்கவே இல்லை....

கலைசார் இறைவன் சொன்னதைத்தான் மனிதன் செய்கின்றான்.விசாரணைகளை பொறுத்துதான் தீர்ப்பு அமையும்.சிலநேரம் குற்றவாளி தவறை ஒப்புகொண்டிருகலாம் ஆகவே அந்த வகையிலே தீர்ப்பை நாம் தவறாக கருத கூடாது.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தலை வெட்டுவதைப் பார்த்த அனுபவம்! - Page 2 Empty Re: தலை வெட்டுவதைப் பார்த்த அனுபவம்!

Post by கலைவேந்தன் Mon Apr 12, 2010 11:01 am

இதோ சபீர் கொடுத்த அடுத்த உதாரணம்,,,

விபசாரம் கண்டிக்கத்தக்கது தான்... ஆனால் அதனால் மூன்றாம் நபருக்கு என்ன பாதகம் வருகிறத்...? அதற்கு இத்தனை கொடிய தண்டனை தேவையா..?

சரி ...

இத்தனை கொடிய தண்டனைகள் கிடைத்தும் குற்றங்கள் கணிசமாகக் குறைந்ததே ஒழிய ஓரளவுக்கு நடக்கத்தானே செய்கிறது...?

குவைத்தில் என் தோழி கூறுவார்...

அங்கே திருட்டும் வழிப்பறியும் கற்பழிப்பும் சக்ஜமாக நடக்கின்றது... அதிலும் அரேபியருக்கு ஒரு நீதியும் மற்றோருக்கு ஒரு நீதியுமாக அங்கே சட்டம் சிரிப்பாய் சிரிக்கின்றது...

எதார்த்தங்களை ஏற்கவும் பக்குவம் வேண்டும்..

என்றோ ஒருகாலத்தில் அக்காலத்து ஏற்ப வகுத்த சட்டங்களை இன்றும் வழங்கி வருதல் சரியா...?



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தலை வெட்டுவதைப் பார்த்த அனுபவம்! - Page 2 Empty Re: தலை வெட்டுவதைப் பார்த்த அனுபவம்!

Post by ஹாசிம் Mon Apr 12, 2010 11:04 am

கலை wrote:
ஹாசிம் wrote:
கலை wrote:இருந்தாலும் ....

இறைவன் ஆக்கிய உயிரை மனிதன் போக்க என்ன உரிமை இருக்கிறது...?

எண்ணற்ற குற்றங்கள் என்றாலும் மனம் சற்றே ஒப்புக்கொள்ளும்,,

ஆனால்...

இவை மனிதத்தன்மையானவை அல்ல... காட்டுமிராண்டித்தனமானவை....

மனித உரிமைபற்றி உலகமே பேசும் நிலையில் இதை ஏற்க என்னால் இயலவில்லை....

கலை சார்
மதரீதியான கொள்கைகள் கோட்பாடுகள் வகுக்கப்பட்டவைகளை எம்மால் ஏற்க மட்டும் முடியுமே தவிர அவற்றை மாற்றியமைக்க எமக்கு அருகதை இல்லை
மனித உரிமைகளை பாதுகாப்பதற்காகத்தான் இந்த சட்டங்களே வகுக்கப்பட்டிருக்கிறது
இவரை கொலை செய்வதை பார்கும் நீங்கள் அப்பாவியான ஒருவரை அவர்கொலை செய்ததை பார்க்க வில்லையா
அப்பாவியை கொண்ட ஒருவரை என்ன செய்ய வேண்டும் சார்

நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொண்டாலும்...

அவசரமாக விசாரித்து இரண்டே நாளில் வழங்கிய தீர்ப்பில் என்ன நம்பகத்தன்மை இருக்கமுடியும்???

இப்படி அவசரத்தீர்ப்பில் எத்தனை நிரபராதிகள் அநியாயமாய் தண்டனை பெற்றார்களோ...?

அல்லாஹ் கருணையானவர் தானே...அவர் ப்டைப்பில் அநீதி செய்யும் மக்களுக்கு அவரும் சிறந்த தண்டனை வழங்கத்தானே செய்வார்...?

ஆயிரம் சொன்னாலும் இப்படி வெட்ட வெளியில் வெட்டிக் கொல்வதை என் மனம் ஏற்கவே இல்லை....

எமது நாடுகளில் உள்ள குடும்ப நீதிமன்றம் போன்று அவசரமாக விசாரித்து தீர்பளிக்கும் வளமை அறபுநாடுகளிலோ அல்லது சட்டங்களை பின்பற்றும் நாடுகளிலோ நடைபெறுவதில்லை நீதிபதிகள் இறைவனுக்கு பயந்து நடக்கும் 100% இஸ்லாத்தை பின்பற்றுகின்ற உலமாக்கள் இவர்களின் தீர்ப்பு இறைவனுக்கு அப்பால் அமைவதில்லை காரணம் மறுமையில் அவர்களும் விசாரிக்கப்படுவார்கள் என்று ஏற்றுக்கொண்டவர்கள்
அவதூறு சொல்பவருக்கு அதாவது வீண்பளி சொல்பவருக்கு தண்டனை உண்டு என்று அறிந்திருக்கும் எவரும் ஒருவர்மீது வீணான பொய் சொல்வதில் அவர்களுக்கு என்ன இலாபம் இருக்கிறது
இத்தீர்ப்பும் இறைவனால் வழங்கப்படும் தீர்ப்புத்தான் காரணம் அவன் வகுத்த சட்டங்கள் தான் பின்பற்றப்படுகின்றது
மறைமுகமாக வழங்கும் தீர்ப்புகளால் எந்த நன்மையும் கிடைப்பதில்லை
காரணம் தன் கண்முன் நடக்கும் விடயத்துக்கும் கேள்விப்படும் விடயத்துக்கும் அதிகமான வித்தியாசம் இருப்பதை பார்கிறோம் காண்பவரின் உள்ளம் சீர்செய்யப்படும் இவ்வாறான தவறுகள் என் வாழ்நாளில் செய்யக்கூடாது என்ற உறுதி அவர் மனதில் வந்து விடும் இதனால்தான் பகிரங்கமாக தண்டனைகள் வழங்கப்படுகிறது


நேசமுடன் ஹாசிம்
தலை வெட்டுவதைப் பார்த்த அனுபவம்! - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

தலை வெட்டுவதைப் பார்த்த அனுபவம்! - Page 2 Empty Re: தலை வெட்டுவதைப் பார்த்த அனுபவம்!

Post by சபீர் Mon Apr 12, 2010 11:07 am

அனைபேரும் இதனை வாசிக்கவும்

பாகம் 7இ அத்தியாயம் 86இ எண் 6830
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நான் முஹாஜிர்களில் சிலருக்குக் குர்ஆனை ஓதிக் கொடுத்துவந்தேன். அவர்களில் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களும் ஒருவராவார். (இந்நிலையில் ஒரு நாள்) நான் 'மினா' பெருவெளியில் அவரின் முகாமில் இருந்து கொண்டிருந்தபோது அவர் உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அவர்களிடம் இருந்துவிட்டு என்னிடம் திரும்பிவந்தார். இது உமர்(ரலி) அவர்கள் செய்த இறுதி ஹஜ்ஜின்போது (ஹிஜ்ரி 23ஆம் ஆண்டு) நடந்தது.

(திரும்பி வந்த) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: உங்களுக்குத் தெரியுமா? இன்று ஒருவர் இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் (கலீஃபா உமர்(ரலி) அவர்களிடம் சென்றுஇ 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உமர் அவர்கள் இறந்துவிட்டிருந்தால் இன்னாருக்கு நான் வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுத்திருப்பேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (முதல் கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களின் வாக்களிப்புப் பிரமாணம் அவசரக் கோலமாக நடைபெற்று முடிந்தது என்று கூறிய இன்னாரைப் பற்றி நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்டார். இதைக் கேட்ட உமர்(ரலி) அவர்கள் கோபப்பட்டார்கள். பிறகுஇ 'இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) இன்று மாலை நான் மக்கள் முன் நின்றுஇ தங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையீடு செய்ய நினைக்கும் இவர்களை எச்சரிக்கை செய்யப் போகிறேன்' என்றார்கள். உடனே நான்இ 'இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! அவ்வாறு செய்யாதீர்கள். ஏனெனில்இ ஹஜ் பருவ காலத்தில் (நல்லவர்களுடன்) விவரமற்ற மக்களும் தரம் தாழ்ந்தோறும் குழுமுகின்றனர். நீங்கள் (உரையாற்றுவதற்காக) மக்கள் முன் நிற்கும்போது அவர்கள்தாம் உங்களுக்கருகே மிகுதியாக இருப்பர். நீங்கள் எழுந்து நின்று ஏதோ ஒன்றைச் சொல்லஇ அதற்கு உரிய பொருள் தந்து முறையாக விளங்காமல் அவரவர் (மனம்போன போக்கில்) தவறாகப் புரிந்துகொள்வார்களோ என நான் அஞ்சுகிறேன். எனவேஇ நீங்கள் மதீனா சென்று சேரும் வரை பொறுமையாயிருங்கள். ஏனெனில்இ மதீனாதான் ஹிஜ்ரத் மற்றும் நபிவழி பூமியாகும். நீங்கள் (அங்கு சென்று) மார்க்க ஞானம் உடையவர்களையும் பிரமுகர்களையும் தனியாகச் சந்தித்து நீங்கள் சொல்ல வேண்டியதை அழுத்தம் திருத்தமாகச் சொன்னால்இ அறிவுபடைத்தோர் உங்கள் கூற்றை அறிந்து அதற்கு உரிய இடமளிப்பார்' என்று சொன்னேன். அதற்கு உமர்(ரலி) அவர்கள்இ 'அல்லாஹ்வின் மீதாணையாக! இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) நான் மதீனா சென்ற பின் முதலாவது கூட்டத்திலேயே இதைப் பற்றிப் பேசப் போகிறேன்' என்றார்கள்.

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அவ்வாறே நாங்கள் துல்ஹஜ் மாதத்தின் பிந்திய பகுதியில் மதீனா வந்து சேர்ந்தோம். வெள்ளிக்கிழமை (ஜுமுஆ நாள்) அன்று சூரியன் நடுவானிலிருந்து சாய்ந்தபோது (பள்ளிவாசலை நோக்கி) நான் விரைந்தேன். அப்போது 'ஸயீத் இப்னு ஸைத் இப்னி அம்ர் இப்னி நுஃபைல்'(ரலி) அவர்களை சொற்பொழிவு மேடையின் (மிம்பர்) ஓர் ஓரத்தில் சாய்ந்து அமர்ந்திருக்கக் கண்டேன். உடனே நான் அவர் அருகில் என் முட்டுக்கால் அவரின் முட்டுக்காலைத் தொட்டுக் கொண்டிருக்கும் வண்ணம் அமர்ந்துகொண்டேன். சிறிது நேரம் தான் கழிந்திருக்கும்; அதற்கும் உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அவர்கள் (சொற்பொழிவு மேடையை நோக்கி) வந்தார்கள். அவர்கள் வருவதைக் கண்ட நான் 'ஸயீத் இப்னு ஸைத் இப்னி அம்ர் இப்னி நுஃபைல்'(ரலி) அவர்களிடம்இ 'உமர்(ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தப்பட்ட நாளிலிருந்து (இந்த நேரம் வரை எப்போதுமே) சொல்லியிராத ஒன்றை இன்று மாலை சொல்ல இருக்கிறார்கள்' என்று கூறினேன். அதற்கு ஸயீத் அவர்கள் 'அப்படியெல்லாம் எதையும் உமர் கூறுவதற்கில்லை' என்று கூறி என்னிடம் மறுத்தார்கள்.

அப்போது உமர்(ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்தார்கள். பாங்கு சொல்பவர் பாங்கு சொல்லி மெளனமானதும் உமர்(ரலி) அவர்கள் எழுந்து இறைவனை அவனுக்குத் தகுதியான பண்புகளைக் கூறி புகழ்ந்தார்கள். பிறகுஇ 'நான் (இன்று) எதைச் சொல்ல வேண்டுமென்று ஏற்படுத்தப்பட்டுள்ளதோ அதை நான் உங்களுக்குச் சொல்லவிருக்கிறேன். இது என் இறப்புக்கு சமீபத்திய பேச்சாக இருக்கக்கூடும்; (உறுதியாக) எனக்குத் தெரியாது. இதை (கேட்டு) விளங்கி நினைவில் நிறுத்திக் கொள்கிறவர் தம் வாகனம் செல்லும் இடங்களிலெல்லாம் இதை எடுத்துரைக்கட்டும்! இதை(ச் சரியாக) விளங்க முடியாது என அஞ்சுகிற (அவர் மட்டுமல்ல் வேறு) யாரும் என் மீது பொய்யுரைப்பதை நான் அனுமதிக்கமாட்டேன்' (என்று கூறிவிட்டுப் பின்வருமாறு பேசினார்கள்புன்னகை

நிச்சயமாக அல்லாஹ்இ முஹம்மத்(ஸல்) அவர்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பினான். மேலும்இ அவர்களுக்கு குர்ஆன் எனும்) வேதத்தையும் அருளினான். அல்லாஹ் அருளிய (வேதத்)தீல் கல்லெறி தண்டனை (ரஜ்கி) குறித்த வசனம் இருந்தது. அதை நாங்கள் ஓதியிருக்கிறோம். அதைப் புரிந்து மனனமிட்டுமிருக்கிறோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மண முடித்தவர் விபச்சாரம் புரிந்தால் அவருக்குக்) கல்லெறி தண்டனை (ரஜ்கி) நிறைவேற்றியுள்ளார்கள். அவர்களுக்குப் பிறகு நாங்களும் அந்தத் தண்டனையை நிறைவேற்றியுள்ளோம். காலப்போக்கில் மக்களில் சிலர் 'அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவேதத்தில் கல்லெறி தண்டனை குறித்த வசனத்தை நாங்கள் காணவில்லை' என்று கூறிஇ இறைவன் அருளிய கடமை ஒன்றைக் கைவிடுவதன் மூலம் வழி தவறிவிடுவார்களோ என நான் அஞ்சுகிறேன். மணமுடித்த ஆணோஇ பெண்ணோ விபசாரம் புரிந்து அதற்கு சாட்சி இருந்தாலோஇ கர்ப்பம் உண்டானாலோஇ ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலோ அவருக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்பது இறை வேதத்தில் உள்ளதாகும். பிறகுஇ நாங்கள் ஓதிவந்த இறைவேதத்தில் இதையும் ஓதி வந்தோம்: உங்களுடைய (உண்மையான) தந்தையரைப் புறக்கணித்து(விட்டு வேறொரு வரை தந்தையாக்கிவிடவேண்டாம். அவ்வாறு உங்கள் தந்தையரைப் புறக்கணிப்பது நன்றி சொல்லலாகும்.

அறிந்துகொள்ளுங்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள்இ 'மர்யமின் புதல்வர் ஈசா எல்லை மீறிப் புகழப்பட்டதைப் போன்று என்னை நீங்கள் எல்லை மீறிப் புகழாதீர்கள். மாறாகஇ (என்னைக் குறித்து நான்) அல்லாஹ்வின் அடிமை என்றும் அவனுடைய தூதர் என்றும் சொல்லுங்கள்' என்று கூறினார்கள்.

மேலும்இ உங்களில் ஒருவர்இ 'அல்லாஹ்வின் மீதாணையாக! உமர் இறந்துவிட்டிருந்தால் இன்னாருக்கு நான் வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுத்திருப்பேன்' என்று கூறுகூதாக எனக்குச் செய்தி எட்டியது. '(கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களின் வாக்களிப்புப் பிரமாணம் அவசரக் கோலமாகத்தான் நடைபெற்று முடிந்தது' என்று கூறி எந்த மனிதரும் தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். ஆம்! அது எப்படி (அனைவரிடமும் ஆலோசிக்காமல் அவசரமாக)த்தான் நடந்தது. ஆனால்இ அதன் தீமைகளிலிருந்து அல்லாஹ் (நம்மைப்) பாதுக்காத்துவிட்டான். உங்களில் ஒட்டகங்களில் அதிகமாகப் பயணிக்கும் (-அரபுகள்) எவரும் (மூப்பிலும் மேன்மையிலும்) அபூ பக்ர்(ரலி) அவர்களைப் போன்று இல்லை.44 முஸ்லிம்களின் (சம்மதம் மற்றும்) ஆலோசனையின் ஒரு மனிதருக்கு வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுக்கிறவரும் அவர் யாருக்கு வாக்களித்தாரோ அவரும் ஏற்கப்பட மாட்டார்கள். எச்சரிக்கை! அவ்விருவரும் கொல்லப்படவும் செய்யலாம்.

மேலும்இ அல்லாஹ் தன் தூதரை இறக்கச் செய்தபோது நம்மிடையே நடந்த சம்பவங்களில் ஒன்று: அன்சாரிகள் நமக்கு மாறாக பன}சாஇதா சமுதாயக் கூடத்தில் அனைவரும் ஒன்று திரண்டனர். (ஆனால்இ முஹாஜிர்களான) அலீ(ரலி)இ ஸுபைர்(ரலி) ஆகியோரும் அவர்களுடன் வேறு சிலரும் நமக்கு மாறுபட்ட நிலையை மேற்கொண்டனர். (நம்முடன் அந்த அரங்கிற்கு அவர்கள் வரவில்லை.) முஹாஜிர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் போய் ஒன்று கூடினர். நான் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம்இ 'அபூ பக்ர் அவர்களே! நம் சகோதரர்களான அன்சாரிகளிடம் நாம் செல்வோம்' என்று கூறிவிட்டுஇ அவர்களை நாடிச் சென்றோம்.

அன்சாரிகளை நாங்கள் நெருங்கியபோது அவர்களில் இரண்டு நல்ல மனிதர்கள் எங்களைச் சந்தித்தனர். அவர்களிருவரும் (அன்சாரி) மக்கள் (தங்களில் ஒருவரான ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களுக்கு வாக்களிப்பதென) ஒரு மனதாக முடிவு செய்திருப்பது குறித்து தெரிவித்துவிட்டுஇ 'முஹாஜிர்களே! நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?' என்று கேட்டனர். அதற்கு நாங்கள்இ 'எங்கள் சகோதரர்களான அன்சாரிகளை நோக்கிச் செல்கிறோம்' என்றோம். அதற்கு அவர்கள் இருவரும்இ 'அவர்களை நீங்கள் நெருங்க வேண்டாம். உங்கள் நிலையை நீங்கள் (இங்கேயே) தீர்மானித்துக்கொள்ளுங்கள். (அதுவரை பொறுமையைக் கடைபிடியுங்கள்)' என்றார்கள். உடனே நான்இ 'அல்லாஹ்வின் மீதாணையாக! கட்டாயம் நாங்கள் அவர்களிடம் செல்லத்தான் போகிறோம்' என்று கூறிவிட்டு நடந்தோம். பன}சாஇதா சமுதாயக் கூடத்திலிருந்த அன்சாரிகளிடம் சென்றோம்.

அங்கு அவர்களின் நடுவே போர்வை போர்த்திய மனிதர் ஒருவர் இருந்தார். நான்இ 'இவர் யார்?' என்று கேட்டேன். மக்கள்இ 'இவர் தாம் ஸஅத் இப்னு உபாதா?' என்று பதிலளித்தனர். 'அவருக்கென்ன நேர்ந்துள்ளது?' என்று கேட்டேன். மக்கள்இ 'அவருக்குக் குளிர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது' என்று கூறினர். நாங்கள் சிறிது நேரம் அமர்ந்திருந்தபோது அன்சாரிகளின் பேச்சாளர் ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனுக்குத் தகுதியான பண்புகளைச் சொல்லிப் புகழ்ந்துவிட்டுஇ 'பின்னர்இ நாங்கள் (-அன்சாரிகள்) இறைவனுடைய (மார்க்கத்தின்) உதவியாளர்கள்; இஸ்லாத்தின் துருப்புகள். (அன்சாரிகளை ஒப்பிடும்போது) முஹாஜிர்களே! நீங்கள் சொற்பமானோர் தாம். உங்கள் கூட்டத்திலிருந்து சிலர் இரவோடிரவாக (மதீனா) வந்துசேர்ந்தார்கள். (இன்றோ) அவர்கள் எங்கள் பூர்வீகத்தைவிட்டுமே எங்களைப் பிரித்துவிடவும்இ ஆட்சியதிகாரத்திலிருந்து எங்களை வெளியேற்றிவிடவும் எண்ணுகின்றனர்' என்று கூறினார்.

(உமர்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்புன்னகை அன்சாரிகளின் பேச்சாளர் பேசி முடித்து அமைதியானபோது நான் பேச நினைத்தேன். மேலும்இ நான் எனக்குப் பிடித்த ஓர் உரையை அழகாகத் தயாரித்து வைத்திருந்தேன். அதனை அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு முன்பே எடுத்துரைத்துவிடவேண்டும் என்றும்இ (அன்சாரிகளின் பேச்சால்) அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு ஏற்பட்டிருந்த உஷ்ணத்தில் சிறிதளவையேனும் தணித்திடவேண்டும் என்றும் விரும்பினேன். நான் பேச முற்பட்டபோது அபூ பக்ர்(ரலி) அவர்கள்இ 'நிதானத்தைக் கையாளுங்கள்' என்றார்கள். எனவேஇ நான் (அபூ பக்ர் அவர்களுக்கு மாறுசெய்து) அவர்களுக்குக் கோபத்தை உண்டாக்க விரும்பவில்லை.

இதையடுத்து அபூ பக்ர்(ரலி) அவர்கள் பேசினார்கள். அன்னார் என்னைவிடப் பொறுமைசாலியாகவும் நிதானமிக்கவராகவும் இருந்தார்கள். நான் எனக்குப் பிடித்த வகையில் அழகுபடத் தயாரித்து வைத்திருந்த உரையில் எதையும்விட்டுவிடாமல் அதைப் போன்று அல்லது அதைவிடவும் சிறப்பாகத் தயக்கமின்றி (தங்குதடையின்றி) அன்னார் பேசி முடித்தார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்கள் (தம் உரையில்) குறிப்பிட்டார்கள். (அன்சாரிகளே!) உங்களைப் பற்றி நீங்கள் குறிப்பிட்ட (குண) நலன்களுக்கு நீங்கள் உரியவர்களே. (ஆனால்இ) இந்த ஆட்சியதிகாரம் என்பது (காலங்காலமாக) இந்தக் குறைஷிக் குலத்தாருக்கே அறியப்பட்டுவருகிறது. அவர்கள்தாம் அரபுகளிலேயே சிறந்த பாரம்பரியத்தையும் சிறந்த ஊரையும் (மக்கா) சேர்ந்தவர்கள். நான் உங்களுக்காக இந்த இருவரில் ஒருவரை திருப்திப்படுகிறேன். இவர்களில் நீங்கள் விரும்பிய ஒருவருக்கு வாக்களி(த்து ஆட்சித் தலைவராகத் தேர்வு செய்)யுங்கள். இவ்வாறு கூறிவிட்டுஇ என் கையையும் அங்கு அமர்ந்திருந்த அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி) அவர்களின் கையையும் அங்கு அமர்ந்திருந்த அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி) அவர்களின் கையையும் பற்றினார்கள். (இறுதியாக அவர்கள் கூறிய) இந்த வார்த்தையைத் தவிர அபூ பக்ர்(ரலி) அவர்கள் கூறிய வேறெதையும் நான் வெறுக்கவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அபூ பக்ர்(ரலி) அவர்கள் போன்ற தகுதியுள்ளவர்) இருக்கும் ஒரு சமுதாயத்திற்கு நான் ஆட்சித் தலைவராகஆவதைவிடஇ நான் எந்தப் பாவமும் செய்யாமலேயே (மக்கள்) முன் கொண்டு வரப்பட்டு என் கழுத்து வெட்டப்படுவதையே விரும்பினேன். (இன்று வரை இதுவே என் நிலையாகும். இதற்கு மாற்றமாக) தற்போது எனக்கு ஏற்படாத ஓர் எண்ணத்தை மரணிக்கும்போது என் மனம் எனக்கு ஊட்டினால் அது வேறு விஷயம்.

அப்போது அன்சாரிகளில் ஒருவர் 'நான் சிரங்கு பிடித்த ஒட்டகம் சொறிந்து கொள்வதற்கான மரக்கொம்பு ஆவேன்; முட்டுக் கொடுக்கப்பட்ட பேரீச்சமரம் ஆவேன். (அதாவது பிரச்சினையைத் தீர்ப்பவன் ஆவேன். நான் ஒரு நல்ல யோசனை கூறுகிறேன்: அன்சாரிகளான) எங்களில் ஒரு தலைவர்; குறைஷி குலத்தாரே! உங்களில் ஒரு தலைவர்' என்றார்.

அப்போது கூச்சல் அதிகரித்தது. குரல்கள் உயர்ந்தன. பிளவு ஏற்பட்டுவிடுமோ என்று நான் அஞ்சினேன். எனவேஇ 'அபூ பக்ர் அவர்களே! உங்கள் கையை நீட்டுங்கள். (உங்களிடம் வாக்களிப்புப் பிரமாணம் செய்கிறேன்)' என்று நான் சொன்னேன். அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்கள் தங்களின் கரத்தை நீட்டினார்கள். உடனே நான் அவர்களுக்கு (நீங்கள் தாம் ஆட்சித் தலைவர். உங்களுக்கு நாங்கள் கட்டுப்பட்டு நடப்போமென) வாக்குப் பிரமாணம் செய்து கொடுத்தேன். (அவ்வாறே) முஹாஜிர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு வாக்குப் பிரமாணம் செய்தனர். பிறகுஇ அவர்களுக்கு அன்சாரிகளும் வாக்குப் பிரமாணம் செய்து கொடுத்தனர். நாங்கள் ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களிடம் (அன்னாரைச் சமாதானப்படுத்துவதற்காக) விரைந்து சென்றோம். அப்போது அன்சாரிகளில் ஒருவர்இ 'நீங்கள் ஸஅத் இப்னு உபாதா அவர்களை (நம்ப வைத்து)க் கொன்றுவிட்டீர்கள்' என்றார்.

உடனே நான்இ 'அல்லாஹ்தான் ஸஅத் இப்னு உபாதவைக் கொன்றான் (நாங்களல்ல)' என்று கூறினேன்.45 மேலும்இ அல்லாஹ்வின் மீதாணையாக! (இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்தபோது) நாங்கள் சந்தித்த பிரச்சினைகளில் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுத்ததை விட மிகவும் சிக்கலான பிரச்சினை வேறெதையும் நாங்கள் கண்டதில்லை. வாக்களிப்புப் பிரமாணம் நடைபெறாத நிலையில் நாங்கள் அந்த மக்களிடமிருந்து வெளியேறிச் சென்றால் நாங்கள் சென்றதற்குப் பிறகுஇ தங்களில் ஒருவருக்கு அவர்கள் வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுத்துவிடுவார்கள். அப்போது ஒன்றுஇ நாங்கள் திருப்தியில்லாமலேயே அவர்களுக்கு வாக்களிப்புப் பிராமணம் செய்து கொடுக்க வேண்டி வரும். அல்லது அவர்களுக்கு மாறாக நாங்கள் செயல்பட நேரும். அப்போது குழப்பம் உருவாகும் என்று நாங்கள் அஞ்சினோம்.

ஆகஇ முஸ்லிம்களின் (சம்மதம் மற்றும்) ஆலோசனையின்றி ஒருவருக்கு வாக்களிக்கிறவரும்இ அவர் யாருக்கு வாக்களித்தாரோ அவரும் ஏற்கப்படமாட்டார்கள் எச்சரிக்கை! அவ்விருவரும் கொல்லப்படவும் செய்யலாம்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தலை வெட்டுவதைப் பார்த்த அனுபவம்! - Page 2 Empty சா‌னியா- சோ‌யி‌ப் ‌திருமண‌த்த‌ி‌ல் இ‌‌ஸ்லா‌மிக‌ள் ப‌ங்கே‌ற்க தடை

Post by pgasok Mon Apr 12, 2010 11:10 am

சா‌னியா ‌மி‌ர்சா- சோ‌யி‌‌ப் மா‌லி‌க் ‌திருமண‌த்த‌ி‌ல் இ‌ஸ்லா‌மிய‌ர்க‌ள் ப‌ங்கே‌ற்க கூடாது எ‌‌‌ன்று இ‌ஸ்ல‌ா‌ம் மதகுரு‌க்க‌ள் உ‌த்தரவு ‌‌‌பிற‌ப்‌பி‌த்‌திரு‌ப்பதா‌ல் பு‌திய ‌சி‌க்க‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

‌‌‌திருமண‌‌ தே‌தி நெரு‌ங்குவதை மு‌ன்‌னி‌ட்டு சா‌னியா ‌மி‌ர்சா‌வி‌ன் ‌வீ‌ட்டை அல‌ங்க‌ரி‌க்கு‌ம் ப‌ணிக‌ள் விறு‌விறு‌ப்பாக நடைபெ‌ற்று வரு‌கி‌ன்றன.

‌இ‌ந்‌நிலை‌யி‌ல் ‌திருமண‌‌த்‌தி‌ற்கு மு‌ன்ன‌ர் இருவரு‌ம் சே‌ர்‌ந்து நடனமாடியது, உட‌ற்ப‌யி‌ற்‌சி செ‌ய்தது இ‌ஸ்லா‌மிய முறை‌ப்படி தவறானது எ‌ன்று மத குரு‌க்க‌ள் கூ‌றியு‌ள்ளன‌ர்.

இதுபோ‌ன்ற செய‌ல்களா‌ல் இ‌ஸ்லா‌மிய சமுதாயத்தை இருவரு‌ம் அவ‌ம‌தி‌‌த்து‌வி‌ட்டதாக ஹைதராபா‌த்‌தி‌ல் உ‌ள்ள உலாமா வா‌ரிய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

‌திருமண‌த்‌தி‌ற்கு மு‌ன்பே சா‌னியாவு‌ம், சோ‌யி‌ப்பு‌ம் ஒரே ‌வீ‌ட்டி‌ல் சே‌ர்‌ந்து வ‌சி‌ப்பதை ஏ‌ற்று‌க் கொ‌ள்ள முடியாது எ‌ன்று‌ம் அ‌ந்த அமை‌ப்பு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இதனா‌ல் வரு‌ம் 15ஆ‌ம் தே‌தி நடைபெ‌ற உ‌ள்ள சா‌னியா- சோ‌யி‌ப் ‌திருமண‌த்‌தி‌ல் இ‌ஸ்லா‌‌மிய‌ர்க‌ள் கல‌ந்து கொ‌ள்ள கூடாது எ‌ன்று‌ம் மதகுரு‌க்க‌ள் ‌உ‌த்தரவு ‌பிற‌ப்‌பி‌த்து‌ள்ளன‌ர்.

இத‌‌னிடையே சா‌னியா ‌வீ‌ட்டி‌ல் இரு‌ந்து சோ‌யி‌ப் மா‌லி‌க் வெ‌ளியே‌றி வே‌று இட‌த்‌தி‌ல் த‌ங்‌கி இரு‌ப்பதாக தகவ‌ல்க‌ள் வெ‌ளியா‌கியு‌ள்ளன.
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

தலை வெட்டுவதைப் பார்த்த அனுபவம்! - Page 2 Empty Re: தலை வெட்டுவதைப் பார்த்த அனுபவம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum