ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:50

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூர்க்க சந்திரன்

3 posters

Go down

மூர்க்க சந்திரன் Empty மூர்க்க சந்திரன்

Post by சிவா Mon 12 Apr 2010 - 3:56

ஊருக்குத் தோட்டி வேலை செய்யும் நால்வருள் ஒருவர் சந்திரன். நல்ல உடல் கட்டு கொண்ட ஆஜானுபாகுவான மனிதர். அவரைக் கண்டு மலைக்காத ஆண்கள், பெண்கள் இல்லை என்றே சொல்லலாம். அந்த வருஷம் நான்கு பேர் ஏரிக்கரையையும் ஊரையும் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஒரு வாரத்திற்கு இரண்டு பேர் ஊர்க் காவலில் ஈடுபடவேண்டும் என்பது ஊர் கட்டளை.

தோட்டி வேலை என்றால் ஊருக்கு எந்தத் தீங்கும் வராமல் பாதுகாத்தல், ஆடு, மாடுகள் இறந்தால் அப்புறப்படுத்துதல் போன்ற வேலைகளுடன் சில ஆண்டைகளுக்குத் தனிப்பட்ட வேலைகளையும் செய்ய வேண்டி வரும்.

பொதுவாக இரவு நேரங்களில் கண் உறங்காமல் ஊரைச் சுற்றி வர வேண்டும். சந்திரனுடைய சுற்று வரும்போது அவர் தனியாகவே காவலுக்குச் செல்வது வழக்கம். அவருடன் வர வேண்டியவருக்கு ஓய்வுதான். அதை யாரிடமும் அவர் சொல்ல மாட்டார். நேர்மையான முரட்டுக் குணம் படைத்தவர் சந்திரன்.

ஓர் இரவு ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டு ஏரிக்கரையை நோக்கி நடந்தார். ஏரிக்கரையைத் தாண்டித் தண்ணீர் ஓடுவது போல் லேசான சத்தம். உற்றுப் பார்த்தார் சந்திரன். கும்மிருட்டு என்பதால் கையில் இருந்த 'லாந்தர்' விளக்கைத் தாழ்த்திப் பார்த்தார். ஏரிக்கரை உடைப்பு ஏற்பட்டுவிட்டது என்பது தெரிய வந்தது. சுற்று வட்டாரத்திலேயே மேல் சீஷமங்கலம் ஏரி தான் பெரியது என்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கே தெரியும். அவ்வளவு பெரிய ஏரியின் கரை உடைந்து தண்ணீர் வெளியேறினால் ஊரே வெள்ளக்காடாகி எல்லா மக்களும் இறந்து போவார்கள். மேலும் இந்த வருஷம் விளைச்சல் இல்லாமல் பட்டினியால் சாக நேரிடும் என்று உணர்ந்த சந்திரன் கரைமேல் ஏறி நின்று கூக்குரல் இட்டு ஊர் மக்களை அழைத்தார். ''சாமியோ! ஏரிக்கரை ஒடையப் போவுது ஓடியாங்கோ சாமியோவ்''.

ஊர்க்காவலுக்கு ஆள்கள் இருக்கிறார்கள் என்று கவலையின்றி மமதையோடு தூங்கிக்கொண்டிருந்த குடியானவர் காதுகளில் சந்திரனின் குரல் கேட்கவில்லை. ஊரைத் தாண்டி இருக்கும் சேரி மக்களுக்கு எங்கே கேட்கப் போகிறது ? சந்திரன் தன் பலம் கொண்ட மட்டும் சத்தமாக, பயம் கலந்து ஆவேசத்தோடு கூவினார். அவர் சத்தத்தைக் கேட்டோ என்னமோ ஏரிக்கரையின் விரிசல் மேலும் அதிகரித்தது. தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாக வெளியேறத் தொடங்கியது. சந்திரன் சத்தமிட்டுக் கொண்டே மண்ணையும் கல்லையும் செடியையும் அள்ளி விரிசலில் போட்டு அடைக்க முயன்றார். நிறைந்திருக்கும் தண்ணீர் தடையைத் தாண்டி வெளியேறிக் கொண்டிருந்தது. சந்திரன் தன் வேலையைச் செய்து கொண்டிருந்தாலும் உதவிக்கு ஆட்களைக் கூப்பிடுவதை மட்டும் நிறுத்தவில்லை.

தூங்கிக் கொண்டிருந்த ஊர் மக்களுக்கு சந்திரனின் சத்தம் லேசாகக் காதில் விழுந்துவிட அடித்து பிடித்து ஆட்களைத் திரட்டிக் கொண்டு கூடைகள், மண்வெட்டிகளோடு திரண்டு வந்தனர். சந்திரன் மட்டும் விடாமல் தன் வேலையைச் செய்து கொண்டிருந்தார். விரிசல் அதிகமாகி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. வந்த ஊர்க்காரர்கள் மண்ணை வெட்டி கரையின் விரிசலில் கொட்டினர். தண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சந்திரனுக்கு ஒன்றும் புரியவில்லை. சற்று நேரத்தில் தீர்க்கமான முடிவிற்கு வந்தவராக வேகமாகச் சென்று கரையின் உடைப்பில் படுத்துக்கொண்டார்*.

''எம் மேல அப்படியே மண்ணக் கொட்டுங்கய்யா, தயங்காமக் கொட்டுங்கய்யா'' என்று சந்திரன் சொல்ல,முதலில் தயங்கிய ஊர் மக்கள் பின்னர் மண்ணை வெட்டி சந்திரன் மேல் சாய்த்தனர். சந்திரனின் மூச்சுக்காற்று நின்றது போல், கசிந்த நீரும் கொஞ்சம் கொஞ்சமாக நின்று போனது.

*சந்திரன் தானாகப் படுக்கவில்லை என்று இன்னோர் செய்தியும் உள்ளது. கரையை நோக்கி ஓடியவர்கள் மேல் சாதிக்காரர்கள். அங்கிருந்த ஒரே தாழ்ந்த சாதிக்காரர் சந்திரன் மட்டுமே. அவரை வெட்டிக் கரை உடைப்பில் சாய்த்துவிட்டு இப்படி பொய்யான ஒரு கதையைக் கட்டி விட்டுவிட்டனர். அதன் பிறகு சந்திரனுக்குக் கோயில் எழுப்பி மூர்க்க சந்திரன் என்று பெயரிட்டு சேரி மக்கள் வழிபட்டு வருகின்றனர். தன் உயிரை ஈந்து ஊரையே காத்த அந்த சந்திரனைச் சேரிமக்கள் மட்டும் வழிபடுவதைக் காணும்போது, தானாகச் சென்று படுத்துக் கொண்டு மண்ணைக் கொட்டச் சொன்ன கதை புனையப்பட்டதாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.

மூர்க்க சந்திரன் என்று அழைக்கப்பட்டாலும், இந்தக் கதைக்கும் மூர்க்க குணத்துக்கும் இம்மியளவும் சம்பந்தமில்லை.தன் உயிரை ஈந்து ஊர் மக்களின் உயிர்களைக் காத்த சந்திரனை மூர்க்கசந்திரன் என்று பெயரிட்டு சேரி மக்கள் வழிபட்டு வருகின்றனர். ஆடி மாதம் மூர்க்கசந்திரன் விழா பொங்கல் வைத்து விமரிசையாக மேல் சீஷமங்கலம் சேரி மக்களால் நடத்தப்படுகிறது.

பழனிக் கூத்தன்


மூர்க்க சந்திரன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மூர்க்க சந்திரன் Empty Re: மூர்க்க சந்திரன்

Post by சபீர் Sat 17 Apr 2010 - 14:29

நன்றி சகோதர நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மூர்க்க சந்திரன் Empty Re: மூர்க்க சந்திரன்

Post by ரிபாஸ் Sat 17 Apr 2010 - 14:31

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மூர்க்க சந்திரன் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மூர்க்க சந்திரன் Empty Re: மூர்க்க சந்திரன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum