புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_c10வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_m10வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_c10 
156 Posts - 79%
heezulia
வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_c10வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_m10வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_c10வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_m10வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_c10வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_m10வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_c10வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_m10வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_c10வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_m10வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_c10வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_m10வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_c10 
1 Post - 1%
prajai
வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_c10வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_m10வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_c10 
1 Post - 1%
Pampu
வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_c10வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_m10வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_c10வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_m10வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_c10 
321 Posts - 78%
heezulia
வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_c10வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_m10வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_c10வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_m10வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_c10வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_m10வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_c10 
8 Posts - 2%
prajai
வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_c10வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_m10வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_c10வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_m10வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_c10வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_m10வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_c10வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_m10வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_c10வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_m10வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_c10 
3 Posts - 1%
Barushree
வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_c10வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_m10வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 12, 2010 2:36 am

வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Sep24-10

தமிழகத்தின் தென்கோடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாம்பாள். கணவனை இழந்த இவர் தனது ஒரே மகனை அருமையாக வளர்த்தார். வளர்ந்து, படித்து தனது தாயைக் காப்பாற்ற வேண்டிய தருணத்தில் மகன் கடும் நோயால் பாதிக்கப்பட்டார். எத்தனையோ வைத்தியங்கள் செய்து பார்த்தார். மாதங்கள் ஓடியும் மகன் தேறவில்லை. கடைசியாக, ஆண்டவரை வேண்டிக் கொண்டார். தனது மகன் பிழைத்து வந்தால் குடும்பத்தோடு மொட்டை போடுவதாக நேர்ந்து கொண்டார். சில மாதங்களில் மகன் நோயிலிருந்து மீண்டார். இந்த அதிசயத்தில் மனம் மகிழ்ந்த பாலாம்பாள் வேண்டிக் கொண்டபடியே குடும்பத்தோடு நாகூர் ஆண்டவர் தர்காவுக்கு வந்து நேர்த்திக் கடனைச் செலுத்தினார்.

இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல நூற்றுக்கணக்கான இந்துக் குடும்பங்கள் தினசரி வந்து செல்கிறார்கள். அதே போல், கிறிஸ்துவ மதத்தினரும் தங்களுக்கு இன்னல் நேரும் போதெல்லாம் வேளாங்கண்ணி மாதா, பூண்டி மாதா ஆலயங்களுக்கு இணையாக இங்கும் வந்து பிரார்த்தனை செலுத்துகிறார்கள். இந்துக்களும், கிறிஸ்துவர்களும் வந்து செல்லும் போது இஸ்லாமியர்கள் வருவதற்கு சொல்லித் தரவா வேண்டும்.

இப்படி அதிசயங்கள் நிகழ்த்தும் நாகூர் ஆண்டவர் தர்கா வங்கக் கடலோரம் ஓங்கி உயர்ந்த ஐந்து மனோராக்களுடன் திகழ்கிறது.

ஆண்டவர் அருளால் தோன்றிய ஆண்டவர் !

வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Sep24-11

இஸ்லாமிய இறைத் தூதரான நாகூர் ஆண்டவர் அவர்கள் வட மாநிலம் அயோத்திக்கு அருகிலுள்ள மாணிக்காபூர் என்னும் இடத்தில் பிறந்து, 68 ஆண்டுகள் வாழ்ந்து, தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் அருகிலுள்ள நாகூரில் சமாதியானவர்கள். அவர் தம் காலத்தில் நிகழ்த்திய அற்புதங்கள் அற்புத ஒளியாக உலகை வலம் வருவதாக நாகூர் வருபவர்கள் கூறுகிறார்கள்.

நபி நாயகத்தின் வழித் தோன்றலான செய்யது ஹசன் குத்தூஸ் என்ற பெரு வியாபாரிக்கும், செய்யது ·பாத்திமாவுக்கும் மகனாகப் பிறந்தவர் நாகூர் ஆண்டவர் அவர்கள்.

நீண்ட காலமாக பிள்ளைப்பேறு இல்லாமல் வருந்தி வந்தனர் இத் தம்பதியினர். ஒரு நாள் பாத்திமா அவர்கள் கனவில் ஹலிறு (அலை) என்ற தூதுவர் தோன்றி, ''உனது கருவில் இறைத் தூதர் உருவாகிறார் !'' என்று கூறி மறைந்ததாக நாகூர் ஆண்டவர் வரலாறு கருணைக் கடல் (கன்ஜூல் கறாமாத்து) கூறுகிறது.

இதற்கேற்ப, கருவில் இருந்த மூன்றாம் மாதத்திலேயே நாகூர் ஆண்டவர் அவர்கள் அதிசயங்கள் நிகழ்த்தியதாக அவரது வரலாறு மேலும் கூறுகிறது.

உதாரணமாக ''அன்னை கருத்தரித்த மூன்றாம் மாதம் தந்தைக்குக் கடும் நோய் ஏற்பட்டது. வைத்தியர்களே கைவிட்டுவிட்ட வேளையில், அன்னையின் வயிற்றிலிருந்து ஓர் அதிசயக் குரல் கேட்டது. ''தந்தை குணமடைவார்'' என்று நாகூர் ஆண்டவர் கருவிலிருந்தபடியே கூறிய மறுவிநாடியில் தந்தை நோயிலிருந்து மீண்டதாகக் கசர் வரலாறு கூறுகிறது. இது போல் தன் வாழ்நாள் முழுவதும் எண்ணற்ற அதிசயத்தை நிகழ்த்தியுள்ளார்கள் நாகூர் ஆண்டவர் அவர்கள்.

தனது 18 ஆம் வயதில் தனது குருவைத் தேடித் தனியாக யாத்திரை புறப்பட்ட நாகூர் ஆண்டவர் அவர்கள் பல நூறு மைல்கள் நடந்து, குவாலியரில் தனது குருவை அடையாளம் கண்டு, பல ஆண்டுகள் சிட்சை பெற்ற பின், உலகம் முழுவதும் இறை அருள் பரப்பக் கிளம்பினார்கள். அவர் சென்ற இடம் எல்லாம் அதிசயங்கள் நிகழ்ந்தன. குறிப்பாகத் தந்தையின் மறைவுக்கு முன் அவரை மீண்டும் தரிசிப்பதற்காக, பல ஆண்டுகள் நடந்து கடந்த பாதையை ஒரே இரவில் கடந்து, தந்தையின் இறுதி மூச்சுக்கு முன் அவர் அருகாமையை அடைந்ததைக் கூறலாம்!



வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 12, 2010 2:39 am

மதங்களைக் கடந்த மகா புண்ணியர்

வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Sep24-12

திருமணமே செய்து கொள்ளாமல் தென்னாட்டில் பயணம் செய்த நாகூர் ஆண்டவர், இறுதியாக நாகூரில் வாழ்ந்தார்கள்.

அப்போது நாகூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இவர் புகழ் பரவியது. அப்போதே மத வேறுபாடு பாராமலும், சாதி வித்தியாசம் இல்லாமலும் அனைவரையும் சமமாகப் பாவித்து ஆசிகள் வழங்கினார்.

இதனால், இந்து, கிறிஸ்துவர்கள் மத்தியில் அவர் புகழ் பரவியது. இப்போது, நாகூருக்கு வருபவர்களில் 80 சதவீதம் பேர் மற்ற மதத்தினர்தான் என்று தர்காவின் அறங்காவலர்கள் கூறுகிறார்கள்.

பல இடங்களில் கெட்ட ஆவிகளை விரட்டியது, திருவாரூர் தேரை ஓடச் செய்தது, அதிகாரிகளின் ஆணவத்தை ஒழிக்க கொம்புத் தேங்காய் முளைக்கச் செய்தது. தஞ்சை மன்னனின் நீண்டநாள் கவலையைப் போக்கிக் குழந்தைப் பேறு வழங்கியது போன்ற அதிசயங்களை நிகழ்த்தியதாகக் கூறுகிறார்கள்.

குறிப்பாக இப் பகுதியிலுள்ள மீனவர்களின் கண் கண்ட தெய்வமாகத் திகழ்ந்துள்ளார்கள். இவ்வளவு கீர்த்தி பெற்ற நாகூர் ஆண்டவர் சமாதி அடைந்த தினமான ஜமாத்தில் ஆகிறு மாதம் பத்தாம் தினம் நாகூரில் பெரும் திருவிழா (கந்தூரி) நடைபெறுகிறது. பல லட்சம் மக்கள் கலந்து கொள்ளும் இக் கந்தூரி 10 நாட்கள் நடைபெறுகிறது. இது சந்தனக் கூடு திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது.

இதற்காக ஒவ்வொரு ஆண்டும், நாகூர் சமாதியில் போர்த்தப்படும் சால்வை, மலர்ப்போர்வை பழனியைச் சேர்ந்த ஒரு இந்துக் குடும்பத்தினரிடமிருந்தே கொண்டுவரப்படுகிறது.

ஆண்டவரின் 640 வகையறாக்கள்

வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Sep24-13

திருமணம் செய்து கொள்ளாத நாகூர் ஆண்டவர் அவர்கள் தனது வாரிசாக ஒருவரைத் தத்து எடுத்துக் கொண்டார்கள். லாகூர் நகர அதிகாரி ஹஸரத்து நூருத்தீன் என்பவருக்குக் குழந்தைப் பேறு இல்லை என்பதை அறிந்து, தனது வெற்றிலை எச்சில் மூலம் குழந்தைப் பேறு உண்டாகச் செய்து, அந்த மைந்தனையே தனது ஞான வாரிசாக ஏற்றுக் கொண்டார். முகம்மது யூசுப் என்ற பெயர் கொண்ட அவர் பின்னர் நாகூர் ஆண்டவருடன் இணைந்து கொண்டார். அந்த பால நாயகத்திற்கு எட்டுக் குழந்தைகள். அவர்களின் வாரிசான 640 குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இன்று நாகூர் தர்காவை நிர்வகித்து வருகிறார்கள்.

மன்னர்கள், சீமான்கள் முதல் சாமானியர்கள் வரை அளித்த மானியங்களும், நன்கொடைகளுமே இவர்களது வருமானம். ஆண்டுக்கு சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வருமானம் வருகிறது. இந்த 640 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அனைவரும் தர்கா பணியையே செய்து வருகிறார்கள். இதன் முலம் கிடைக்கும் வருமானத்தில்தான் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். இந்த தர்காவுக்குச் சொந்தமாக பல கிராமங்கள் இருந்தன. இவற்றில் 1000 வேலி நிலம் தர்காவின் ஆட்சிக்குக் கீழ் இருந்ததாம். ஆனால், இது படிப்படியாகக் குறைந்துவிட்டது என்கிறார்கள்.



வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 12, 2010 2:41 am

அழகு சேர்க்கும் மனோராக்கள்

வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Sep24-14

நாகூர் ஆண்டவர் தர்கா பல ஏக்கர் நிலப்பரப்பில் கம்பீரமாக அமைந்துள்ளது. இந்த தர்கா கட்டட அமைப்பியலில் சிறந்து விளங்குகிறது. பல்வேறு காலகட்டங்களில் கட்டப்பட்டது. இதன் 5 கோபுரங்களை (மனோராக்கள்) 5 பேர் எழுப்பித் தந்துள்ளனர். நான்கு திசைகளில் நான்கும், ஐந்தாவதாக ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. 131 அடி உயரம் கொண்ட ஐந்தாவது மனோரா தஞ்சை மன்னன் பிரதாப் சிங்கால் கட்டித் தரப்பட்டது. இதுவே பெரிய மனோரா என்று அழைக்கப்படுகிறது. ஐந்து மனோராக்களும் பஞ்ச பூதங்களைக் (நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்) குறிப்பதாக உள்ளது.

அதே போல, இந்த தர்காவில் அமைந்துள்ள நாகூர் ஆண்டவர் சந்நிதி ஏழு நிலைகளைக் கொண்டுள்ளது. காமம், குரோதம், கோபம், பொய், பொறாமை, பிணி, மூப்பு போன்ற ஏழு தடைகளைக் கடக்கும் வகையில் இந்த ஏழு நிலைகள் அமைந்துள்ளன என்கிறார்கள்.

தங்கக் கலச மண்டபமும், வெள்ளித்தகடு நிலை வாயில்களும்

வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Sep24-15


இந்தப் புனிதத் தலத்திற்குத் தென்பகுதியில் அமைந்துள்ள திருக்குளம் அபயம் வேண்டி வருபவர்களின் பாவங்களைக் கழுவுவதற்காக அமைந்துள்ளது எனலாம். தர்காவின் பிரதானமாக ஆண்டவரின் திருச் சமாதி அமைந்துள்ளது. அந்த சந்நிதியை அடைய ஏழு வாசல்கள் உள்ளது. இவை அனைத்தும் வெள்ளித்தகட்டால் வேயப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாசலிலும் நூற்றுக்கணக்கான குத்து விளக்குகள் ஒளிகாட்டிக் கொண்டிருக்கின்றன. இந்த சந்நிதிக்குள் எந்த மதத்தினரும் செல்லலாம். கடைசி மூன்று வாசல்களைக் கடக்க மட்டும் இஸ்லாமிய மத சட்டப்படி பெண்களுக்கு மட்டும் அனுமதி இல்லை. ஆனால், எந்த மதத்தைச் சேர்ந்த ஆண்களும் ஆண்டவரின் சமாதியை தரிசித்து வரலாம்.

இதன் நான்காவது வாசலில், நாகூர் ஆண்டவர் தன் வாழ்நாள் முழுவதும் அணிந்திருந்த குமிழ்கள் இல்லாத காலணி தங்கப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. அதே போல பிரம்மச்சாரியான நாகூர் ஆண்டவர் தனது இடுப்பில் வாழ்நாள் முழுதும் அணிந்திருந்த இரும்புச் சங்கிலி புனிதப் பொருளாக இந்த தர்காவில் தொங்க விடப்பட்டுள்ளது.

பாலநாயகம் முகமது யூசுப், அவரது மனைவி சையது சுல்தான் பீவி ஆகியோரது சமாதிகளும் தர்காவிற்கு அருகிலேயே அமைந்துள்ளன. கடலில் தத்தளித்த கப்பலின் துவாரத்தைத் தனது முகம் பார்க்கும் கண்ணாடி சட்டத்தால் அடைத்துக் கப்பலைக் காப்பாற்றியதாக பாலநாயக வரலாறு கூறுகிறது. அந்த கண்ணாடி சட்டம் இன்னமும் முகமது யூசுப் சமாதி முகப்பை அலங்கரிக்கிறது. அதே போல நாகூர் ஆண்டவர் எப்போதும் அணிந்திருந்த மோதிரத்தின் பச்சைக் கல் நாகூர் ஆண்டவர் சமாதி நில உச்சியை அலங்கரிக்கிறது. இவரால் அதிசயம் நிகழ்த்தப்பட்ட கொம்புத் தேங்காய்களும் தினசரி பல்லாயிரக்கணக்கானவர்களால் தரிசிக்கப் பெறுகிறது.

நாகூர் ஆண்டவர் சமாதியின் மேல் கட்டப்பட்டுள்ள மண்டபத்தின் உச்சியில் அமைந்துள்ள கலசம் தங்கத்தால் செய்யப்பட்டது. தர்கா முழுவதும் சந்தனம், தேக்கு, தங்கம், வெள்ளி என புனிதப் பொருள்களாலும், பளிங்குக் கற்களாலும் அலங்கரிக்கப் பட்டுள்ளது.

முடி காணிக்கையும், விபூதிப் பிரசாதமும்

வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Sep24-16


''இங்கு வருபவர்களில் 20 சதவீதம் பேர்தான் இஸ்லாமியர்கள், மற்றவர்கள் அனைவரும் பிற மதத்தினர். வாரத்தில் வெள்ளிக்கிழமை மட்டுமே இஸ்லாமியர்கள் தொழுவதற்கு வருவார்கள். மற்ற தினங்கள் அனைத்து உலக மக்கள் அனைவரின் தரிசன நாளாகத் தான் திகழ்கிறது. இதே போல, இந்த ஊர் ஜனத்தொகையில் பெரும் பகுதியினர் இந்துக்கள். அவர்கள் அன்பும், அரவணைப்பும் எங்களுக்கு என்றும் உண்டு. இதனால்தான் நாகூர் மத ஒற்றுமையின் சின்னமாகத் திகழ்கிறது'' என்று இதன் அறங்காவலர் முகமது கூறினார்.

இந்த தர்காவின் குளத்தருகே, பக்தர்கள் நேர்த்திக் கடனைச் செலுத்த, முடி இறக்கும் இடம் உள்ளது. இந்து மதத்தைப் போல இங்கும் பக்தர்கள் மொட்டை அடித்து, குளத்தில் நீராடி தர்காவிற்குச் செல்கிறார்கள். நாகூர் ஆண்டவர் சமாதியில் விளக்கேற்றி பிரார்த்தனை செய்து உண்டியலில் நன்கொடை போட்டு, இங்கு விற்கும் பிரசாதம் பெற்று ஒரு இந்துக் கோயில் நடைமுறை போலவே பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள். இந்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பிரசாதமாக இந்துக் கோயில்களில் விபூதி வழங்கப்படுவது போலவே, இங்கும் ஊதுபத்தி சாம்பல் விபூதியாக வழங்கப்படுவது சிறப்பு அம்சமாகும்.



வங்கக் கடலோரத்து ஆண்டவர் தர்கா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக