ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு

+7
jahubar
pgasok
கலைவேந்தன்
பாரதிப்பிரியன்
Aathira
சரவணன்
சிவா
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Empty தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு

Post by சிவா Mon Apr 12, 2010 12:39 am

சங்கத் தமிழ்ப் புலவர்கள் கூறும் புவியியல் தகவல்களைப் (GEOGRAPHICAL FACTS) படிப்போர், அவர்களுடைய பரந்த அறிவை எண்ணி வியப்பார்கள்.

'குமரி முதல் இமயம் வரை' என்று இன்று நாம் பயன்படுத்தும் சொற்றொடரை முரஞ்சியூர் முடிநாகராயர், ஆலந்தூர்க்கிழார், காரிக்கிழார், குறுங்கோழியூர்க்கிழார், முடமோசியார், பரணர், குமட்டுர்க் கண்ணனார் முதலிய புலவர்கள் பயன்படுத்துகின்றனர்.

உலகிலேயே உயரமான மலை இமயமலை என்பது, இன்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் உயரத்தை அளப்பதற்கு நவீன விஞ்ஞானக் கருவிகள் இல்லாத அந்தக் காலத்திலேயே, மிக உயரமான மலை இமயம் என்பதைப் பழந்தமிழர்கள் அறிந்திருந்தனர். இதனால் தமிழ் மன்னர்களை, "இமயம் போல வாழ்க" என்று வாழ்த்தினர்.

உதியஞ் சேரலாதனை முருஞ்சியூர் முடிநாகராயரும் (புறம் 2), விண்ணந்தாயனை ஆவூர் மூலங்கிழாரும் (புறம் 166), கோப்பெருஞ்சோழனை புல்லாற்றூர் எயிற்றியனாரும் (புறம் 214) இவ்வாறு வாழ்த்துகின்றனர்.

"அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும் முத்தீ விளக்கிற்றுஞ்சும் பொற்கோட்டு இமயமும், பொதியமும் போன்றே" (புறம் 2)

............... நெடுவரைக் கசவளர் இமயம்போல,
நிலீஇயர் அத்தை, நீ நிலமிசையானே (புறம் 166)

................ இமயத்துக் கோடு உயர்ந்தன்ன தம் இசை
நட்டுத் தீதில் யாக்கையொடு மாய்தல் தவத்தலையே (புறம் 214)


ஏறக்குறைய 25 இடங்களில் இமயத்தைப் புகழ்ந்து பாடுகின்றனர் சங்கப் புலவர்கள். அது மட்டுமல்ல, பரணர் என்ற புலவர் இமயமலைக் காட்சிகளைத் தத்ரூபமாக வருணிக்கிறார். அதிலுள்ள புகழ்பெற்ற "பொற்கோடு" என்ற சிகரத்தையும் பல புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

"காஞ்சன சிருங்கம்" என்று வடமொழியில் கூறப்படும் இது மருவி, "கஞ்சன் ஜங்கா" என்று இன்று அழைக்கப்படுகிறது.

"பொன்னுடை நெடுங்கோட்டு இமயத்தன்ன" (பரணர், புறம் 369)

"ஆரியர் அலறத்தாக்கி, பேர் இசைத் தொன்று
முதிர் வடவரை வணங்குவில் பொறித்து" (பரணர், அகம் 396)

"கடவுள் நிலைஇய கல்லோங்கு நெடுவரை வடதிசை
எல்லை இமயமாகத் தென்னங்குமரியோ டாயிடை அரசர்" (பரணர், ப.பத் 43)


இதில் "கடவுள் நிலைஇய கல்லோங்கு நெடுவரை" என்பது காளிதாசனின் "தேவதாத்மா ஹிமாலய:" என்ற வரியைப் பிரதிபலிப்பதாக உள்ளது. குமரி முதல் இமயம் வரை உள்ள பகுதிகளை பரணர் அறிந்திருந்தார். குமட்டூர்க் கண்ணனார் என்ற புலவரும் (ப.பத் 11) இதே கருத்தைப் பாடியுள்ளார். இமய மலையிலுள்ள அன்னப் பறவைகளையும் பரணர் (நற்.356) வருணிக்கிறார்.

உலகிலேயே அதிக மழை பெய்யும் இடங்களில் ஒன்றான சிரபுஞ்சியும் (மேகாலயா, இந்தியா) இமயமலைத் தொடரில்தான் உள்ளது. இதை அறிந்துதானோ என்னவோ சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாராட்டும் ஆலத்தூர்க்கிழார் இவ்வாறு கூறுகிறார் :-

"சான்றோர் செய்த நன்றுண்டாயின் இமயத்து ஈண்டி
இன்குரல் பயிற்றிக் கொண்டல் மாமழை பொழிந்த
நுண்பல் துளியினும் வாழிய பலவே!" (புறம் 34)


"இந்த உலகத்தில் சான்றோர் செய்த நன்மை இருக்குமாயின், இமயமலையில் திரண்டு இனிய ஓசையை உண்டாக்கிவரும் பெரிய மேகம் பெய்த நுட்பமான மழைத் துளிகளைவிடப் பலகாலம் வாழ்வாயாக" என்று ஆலத்தூர்க்கிழார் வாழ்த்துகிறார்.

கடல் பற்றி பரணர் கூறும் கருத்தும் அற்புதமானது. கடலில் மழை மேகங்கள் எவ்வளவு உண்டானாலும் நீர் அளவு குறையாது. கடலில் எவ்வளவு நதிகள் தண்ணீரைக் கொண்டு வந்து கொட்டினாலும் கடல் நிரம்பி வழியாது.

"மழை கொளக் குறையா புனல்புக நிறையா" (ப.பத் 45)

பலரும் சிந்தித்துப் பார்க்காத புவியியல் உண்மை இது. பல்லாயிரக்கணக்கான ஆறுகள் ஒவ்வொரு நிமிடமும் பலகோடி கனஅடி நீரைக் கொட்டிய போதிலும் கடல் நிறைவதில்லை. அதே போலக் கடலிலிருந்து எவ்வளவு மழை மேகம் திரண்டாலும் கடல் குறைவதில்லை. இது இயற்கை நியதி.

தமிழர்கள் எந்த அளவுக்கு பூமியை உற்றுக் கண்காணித்தனர் என்பதற்கு இது ஒரு சான்று. கப்பலைத் தாக்கி அழிக்கும் மீன் வகைகள் பற்றியும் பரணர் குறிப்பிடுகிறார்.

'தனம் தரு நன்கலம் சிதையத் தாக்கும் சிறுவெள் இரவின் குப்பை அன்ன' (அகம் 152)

பிண்டன் என்பவனின் படை, தங்கம் கொண்டு வரும் கப்பலைத் தாக்கி அழிக்கும் இரால் மீன் கூட்டம் போன்றது என்று இதற்கு உரையாசிரியர்கள் பொருள் கூறுகின்றனர்.

ஒரு வகைக் கடற்புழுக்கள் கப்பலின் அடியில் ஒட்டிக் கொண்டு கப்பலையே அரித்து அழித்து விடும் என்று தற்கால விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பரணர் குறிப்பிடும் 'இரவின் குப்பை' இத்தகைய வகைக் கடற்புழுக்களா என்பது ஆராய வேண்டிய தகவலாகும்.


- ச. சாமிநாதன், தமிழ் ஆசிரியர்


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Empty Re: தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு

Post by சரவணன் Mon Apr 12, 2010 12:57 am

[You must be registered and logged in to see this image.]

தமிழன் என்று சொல்வோம்,
தலை நிமிர்ந்து செல்வோம்!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Empty Re: தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு

Post by Aathira Mon Apr 12, 2010 1:03 am

பிச்ச wrote:[You must be registered and logged in to see this image.]

தமிழன் என்று சொல்வோம்,
தலை நிமிர்ந்து செல்வோம்!

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Empty Re: தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு

Post by பாரதிப்பிரியன் Mon Apr 12, 2010 1:24 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி [You must be registered and logged in to see this image.]
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Empty Re: தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு

Post by கலைவேந்தன் Mon Apr 12, 2010 9:32 am

வியக்க வைக்கும் தமிழனின் பரந்த அறிவை மெச்சுவோம்...
புயம் விடைக்க பெருமிதத்துடன் நடைபோடுவோம்.... [You must be registered and logged in to see this image.]



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Empty Re: தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு

Post by pgasok Mon Apr 12, 2010 10:51 am

அன்றைய புஷ்பக விமானம் இன்றைய விமானம் அன்றைய கவச குண்டலம் இன்றைய புல்லட் புரூப் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Empty Re: தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு

Post by jahubar Mon Apr 12, 2010 12:22 pm

வாழ்க தமிழ் வளர்க தமிழன்..
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Empty Re: தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு

Post by ப்ரியா Mon Apr 12, 2010 12:33 pm

பிச்ச wrote:[You must be registered and logged in to see this image.]

தமிழன் என்று சொல்வோம்,
தலை நிமிர்ந்து செல்வோம்!



மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Empty Re: தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு

Post by அன்பு தளபதி Fri May 14, 2010 2:02 pm

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Empty Re: தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு

Post by நிலாசகி Fri May 14, 2010 3:03 pm

maniajith007 wrote:தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
[You must be registered and logged in to see this image.]


தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Empty Re: தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 57: தமிழர்களின் பருவநிலை அறிவு
» ’7ஆம் அறிவு’ தமிழர்களின் பெருமையை பேசும்! – உதயநிதி ஸ்டாலின்
» குஜராத்தில் அபாரமான வளர்ச்சி: மோடிக்கு அமெரிக்கா பாராட்டு
» அற்புதமான நடை, ஆழ்ந்த கருத்துக்கள், அபாரமான கவிநயம் வளமான கற்பனை…!
» இதை பாருங்கள்...இப்படித்தான் அமெரிக்கா புவியியல் சொல்லித்தருகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum