ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்

+7
மஞ்சுபாஷிணி
சிவா
kalaimoon70
Aathira
ஹாசிம்
சரவணன்
கலைவேந்தன்
11 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 4 Empty ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்

Post by கலைவேந்தன் Sun Apr 11, 2010 10:05 pm

First topic message reminder :

ஒரு சமயம், அரசனொருவன் புலவர்களை அழைத்து, நாளை அரசவையில் நாலுகோடிப் பாடல் சொல்ல வேண்டுமென பணித்தான். இந்தக் கட்டளை கேட்டு திக்கு முக்காடிப் போன புலவர்களில் ஒருவரை ஒளவையார் சந்திக்கிறார்.

கவலையை மறந்து விடுங்கள், நான் உங்களுக்கு நான்கு கோடிப் பாடல்களை ஒரு நொடியில் சொல்கிறேன் என பாடல்வரிகளை ஒளவையார் சொல்லி முடிக்கிறார்.


1.
மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்.


மதியாதவர் வாசலை மதித்து சென்று மிதிக்காமல் இருப்பது கோடிப் பொருளைத் தருவதாகும்.


2.
உண்ணீர் உண்ணீரென்று ஊட்டாதார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்.


நம்மை அன்புடன் உபசரித்து உண்ணுங்கள் உண்ணுங்கள் என்று உணவிடாதோர் வீட்டில் சென்று உண்ணாமை கோடிப்பொருளைத் தரும்.

3.
கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே
கூடுதலே கோடி பெறும்.


எத்தனை கோடிப்பணம் கொட்டிக்கொடுத்தாலும் தமக்குத்தகுதியற்றோருடன் கூடி வாழுதல் இல்லாமல் ஒத்த இயல்புடையோருடன் கூடிவாழுதல் கோடிப் பொருளைத் தரும்.

4.
கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்.


எத்தனை கோடிகள் கொட்டிக்கிடைத்தாலும் தம் நாவினை அடக்கி வாழுதுல கோடிப்பொருளைத்தரும்.

ஔவையாரைப்பற்றிய அறிந்த தகவல்களைப்பகிரும் இந்த திரியில் ஔவையாரின் பாடல்கள் சம்பவஙகளை பகிர்ந்துகொள்வோம் நண்பர்களே,,, [You must be registered and logged in to see this image.]


Last edited by கலை on Tue May 11, 2010 11:45 pm; edited 1 time in total



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down


ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 4 Empty Re: ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்

Post by M.Jagadeesan Fri Nov 23, 2018 12:13 pm

ஒளவை உண்ட விருந்து :
=========================
பொதுவாகத் திருமண விருந்துகளில் , சோறுண்பது கடினமான செயலாகும் . ஒரே சமயத்தில் பலரும் முண்டியடித்து , பந்தியில் இடம் பிடிக்க ஓடுவர் . எல்லோரும் சாப்பிட்ட பிறகு , நாம் கடைசி பந்தியில் சாப்பிடலாம் என்று எண்ணினால் , கடைசி பந்தியில் சிலருக்கு பாயசம் கிடைக்காது ; சிலருக்கு அப்பளம் கிடைக்காது ; குழம்பு பற்றாக்குறை இருந்தால் , வெந்நீர் விட்டு விளாவி விடுவார்கள் . எனவேதான்

" பந்திக்கு முந்து ; படைக்கு பிந்து " என்ற பழமொழியும் ஏற்பட்டது .

ஒரு சமயம் ஒளவையாருக்குக் கடும்பசி ஏற்பட்டது . அப்போது பாண்டிய மன்னன் ஒருவனுடைய திருமணம் நடந்தது . நமக்கு இன்றைக்கு நல்ல சாப்பாடு கிடைக்கும் என்றெண்ணி ஒளவையார் அந்தத் திருமணத்திற்குச் சென்றார் . ஆனால் அங்கு நடந்ததோ வேறு . ஒரே கூட்டம் . பந்திக்கு உள்ளே செல்ல முடியவில்லை . ஒளவையைப் பிடித்து சிலர் நெருக்கினார்கள் ; சிலரோ , பிடித்துத் தள்ளினார்கள் ; இன்னும் சிலர் நெருக்கிய நெருக்கில் , ஒளவையின் உடல் , சுருங்கிவிட்டது . கடைசி வரையில் அவரால் சாப்பிடவே முடியவில்லை .

இந்த அனுபவத்தை ஒரு பாடலாகப் பாடினார் ஒளவையார் .

வண்டமிழைத் தேர்ந்த வழுதி கலியாணத்து
உண்ட பெருக்கம் உரைக்கக்கேள் - அண்டி
நெருக்குண்டேன் ; தள்ளுண்டேன் ; நீள்பசி யினாலே
சுருக்குண்டேன் சோறுண்டி லேன் .

என்று பாடுகிறார் .

" உண்டு " என்னும் துணைவினை , ஒளவைக்கு நகைச் சுவையாகப் பாட உதவி செய்திருக்கிறது . நெருக்குண்டும் , தள்ளுண்டும் , சுருக்குண்டும் துன்பப்பட்ட ஒளவைக்கு சோறுண்டு பசியாறக் கொடுத்து வைக்கவில்லை .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 4 Empty Re: ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்

Post by T.N.Balasubramanian Fri Nov 23, 2018 4:13 pm

அவருக்குண்டான அனுபவத்தை கூறிய ஒளவை, பாவம்.
உணவில்லாமை நமக்கொரு நகைச்சுவை பாடலை கொடுத்தது.
ரசித்தேன்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 4 Empty Re: ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்

Post by M.Jagadeesan Sat Nov 24, 2018 6:36 am

குலோத்துங்க சோழன் முடிசூட்டு விழாவில் , எல்லா புலவர்களும் வரிசையாக நின்று அவனை வாழ்த்தினார்களாம் . ஒளவையாரின் முறை வந்தபோது

" வரப்புயர " என்று மட்டும் வாழ்த்திவிட்டு அமர்ந்துவிட்டாராம் . புலவர்களுக்கும் , அவையிலுள்ள மற்றவர்களுக்கும் ஒன்றும் விளங்கவில்லை .

உடனே ஒளவையார் எழுந்து ,

" வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல்லுயர குடியுயரும்
குடியுயர கோலுயரும்
கோலுயர கோனுயரும் ! "

என்று பாடி முடித்தாராம் .

உழவுத் தொழிலின் இன்றியமையாமையை , அரசனுக்கு எவ்வளவு நுட்பமாக ஒளவையார் உணர்த்துகிறார் !

வேறு எந்தத் தொழிலையும் , பாடாத திருவள்ளுவர் , உழவுத் தொழிலை மட்டும் சிறப்பித்துப் பாடியது ஈண்டு நோக்கத்தக்கது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  - Page 4 Empty Re: ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum