புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
102 Posts - 74%
heezulia
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
19 Posts - 14%
Dr.S.Soundarapandian
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
267 Posts - 76%
heezulia
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
8 Posts - 2%
prajai
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீதையில் மனித மனம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 23, 2010 11:16 pm



'கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்' நூலிலிருந்து


அர்ஜுனனுக்குப் பரந்தாமன் உபதேசித்தது பகவத் கீதை.

மனிதனின் மனதைப் பற்றி அர்ஜுனனுக்கும் கண்ணனுக்கும் வாக்கு வாதம் நடக்கிறது.

கண்ணன் சொல்கிறான் :

"அர்ஜுனா, எவன் தன்னையே உதாரணமாகக் கொண்டு இன்ப - துன்பங்கள் இரண்டையும் சமமாகப் பார்க்கிறானோ, அந்த யோகிதான் சிறந்தவன் என்பது துணிவு."

அர்ஜுனன் கேட்கிறான் :

"மதுசூதனா! உன்னால் கூறப்படும் சமநோக்கத்துடன் கூடிய யோகத்தின் ஸ்திரமான நிலையை என்னால் உணர முடியவில்லை. காரணம், உள்ளம் சஞ்சலமுடையது."

"கிருஷ்ணா! மனித மனம் சஞ்சலமுடையது; கலங்க வைப்பது; வலிமை யுடையது; அடக்க முடியாதது; காற்றை அடக்குவது போல் அதை அடக்குவது கடினமானது,"

பகவான் கூறுகிறான் :

"தோள் வலி படைத்த காண்டீபா! மனம் அடக்க முடியாதது; சலனமடைவது; இதில் ஐயமில்லை. ஆனால் குந்தியின் மகனே! பழக்கத்தால் அதை அடக்க முடியும்."

இதையே ராமகிருஷ்ண பரமஹம்சர் இப்படிக் கூறுகிறார் :

"கீழே கொட்டிய கடுகைப் பொறுக்கி எடுப்பது வெகு சிரமம். அதுபோலப் பல திசைகளிலும் ஓடும் மனத்தை ஒருமைப்படுத்துவது எளிதன்று. ஆனால் வைராக்கியத்தால் அதைச் சாதித்துவிட முடியும்."

மனித மனத்தின் சலனங்களை, சபலங்களை, எப்படி அடக்குவது என்பதுபற்றி பரந்தாமன் அர்ஜுனனுக்கு உபதேசித்த பகுதி, பகவத் கீதையின் தியான யோகமாகும்.

சகல காரியங்களுக்கும் - இன்பத்திற்கும் துன்பத்திற்கும், நன்மைக்கும் தீமைக் கும், இருட்டுக்கும் வெளிச்சத்திற்கும், பாவத்திற்கும், புண்ணியத்திற்கும், அன்புக்கும் வெறுப்புக்கும் மனமே காரணம்.

மனத்தின் அலைகளே உடம்பைச் செலுத்துகின்றன.

பகுத்தறிவையும் மனம் ஆக்ரமித்துக் கொண்டு வழி நடக்கிறது.

கருணையாளனைக் கொலைகாரனாக்குவதும் மனம்தான். கொலைகாரனை ஞானியாக்குவதும் மனம்தான்.

அது நோக்கிச் செல்லும் தடங்களின் அனுபவத்தைப் பெற்றுப் பேதலிக்கிறது. அப்போதுதான் அறிவு வேலை செய்கிறது.

எந்த அனுபவங்களையும் கொண்டு வருவது மனம் தான்.

இது சரி, இது தவறு என்று எடை போடக்கூடிய அறிவை, மனத்தின் ராகங்களை அழித்துவிடுகின்றன.

உடம்பையும் அறிவையும் மனமே ஆக்ரமித்துக் கொள்வதால், மனத்தின் ஆதிக்கத்திலேயே மனிதன் போகிறான்.

என்ன இந்த மனது?

காலையில் துடிக்கிறது. மதியத்தில் சிரிக்கிறது. மாலையில் ஏங்குகிறது. இரவில் அழுகிறது.

"இன்பமோ, துன்பமோ எல்லாம் ஒன்றுதான். நடப்பது நடக்கட்டும்." என்றிருக்க மனம் விடுவதில்லை. ஒரே சீரான உணர்ச்சிகள் இந்த மனத்துக்குத் தோன்றுவதில்லை.

எவ்வளவு பக்குவப்பட்டாலும் மனத்தின் அலைகளாலேயே சஞ்சலிக்கிறான்.

கடிவாளம் இல்லாத இந்த மனக் குதிரையை அடக்குவது எப்படி?

"வைராக்கியத்தால் முடியும்" என்கிறது கீதை. அதையே சொல்கிறார் பகவான் ராமகிஷ்ணர்.

அது என்ன வைராக்கியம்

உள்ளத்தை ஒருமுகப்படுத்துவது எந்த நிகழ்ச்சிகளுக்கும் அசைந்து கொடுக்காமல் இருப்பது.

மெழுகு போல் இருக்கும் மனதை மரக்கட்டை போல் ஆக்கவிடுவது.

ஆசாபாசங்களில் இருந்து மனதை மட்டும் ஒதுக்கி வைத்து விடுவது. பந்த பாசங்களில் இணங்கிவிடாமல் இருப்பது.

பற்றறுப்பது, சுற்றுச் சூழ்நிலைகள் வெறும் விதியின் விளையாட்டுகளே என்று முடிவு கட்டிவிடுவது.

நடக்கும் எந்த நிகழ்ச்சியும் இறைவனின் நாடகத்தில் ஒரு காட்சியே என்ற முடிவுக்கு வருவது.

ஜனனத்துக்கும் மரணத்துக்கும் இடைப்பட்ட வாழ்க்கை, சாட்டை இல்லாப் பம்பரம்போல் ஆட்டிவைக்கப்படும் வாழ்க்கையே என்று கண்டு கொள்வது.

துன்பத்தைத் தரக்கூடிய விஷயங்களை அலட்சியப்படுத்துவது.

இன்பமான விஷயங்களைச் சந்தேகமில்லாமல் ஏற்றுக் கொள்வது.

பிறர் தனக்கிழைத்த துன்பங்களை மறந்துவிடுவது, மன்னித்துவிடுவது.

முயற்சிகள் தோல்வியுறும்போது, இதற்கு இறைவன் சம்மதிக்கவில்லை. என்று ஆறுதல் கொள்வது.

கணநேர இன்பங்களை அவை கண நேர இன்பங்களே என்று முன் கூட்டியே கண்டு கொள்வது.

ஆத்மா என்னும் மாயப்புறா அமரும் மாடங்களெல்லாம் நம்முடைய மாடங்களே" என்ற சம நோக்கத்தோடு பார்வையைச் செலுத்துவது.

காலையில் இருந்து மாலை வரை நடந்த நிகழ்ச்சிகள் ஆண்டவனின் கட்டளையால் செலுத்தப்பட்ட வாகனங்களின் போக்குத்தான் என்று அமைதி கொள்வது.

சொல்வதற்கும் எழுதுவதற்கும் சுலபமாக இருக்கிறது. ஆனால் எப்படி இது முடியும்?

பகவத் தியானத்தால் முடியும்.

அதிகாலையில் ஓர் அரைமணி நேரம், இரவிலே ஓர் அரைமணி நேரம், கோவிலிலோ வீட்டுப் பூஜை அறையிலோ தனிமையில் அமர்ந்து வேறு எதையும் நினைக்காமல் இறைவனையே நினைப்பது.

இறைவனை நினைத்துக் கொண்டிருக்கும்போதே, மனம் வேறு திசையில் ஓடினால் அதை இழுத்துப் பிடிப்பது.

பாசத்திலே மூழ்கிக் கிடந்த பட்டினத்தார் `ஞானி' யானது இப்படித்தான்.

தேவதாசிகளின் உறுப்புகளிலேயே கவனம் செலுத்திய அருணகிரிநாதர், ஆண்டவனின் திருப்புகழைப் பாடியதும், இப்படித்தான்.

இயற்கையாகவே கல்வியாற்றல் பெற்றிருக்கும் ஒரு கவிஞன், ஒரு பொருளைப் பற்றிக் கவிதையில் சிந்திக்கும் போது, அவன் மனம் கவிதையிலேயே செல்கிறது.

அதில் லயிக்கிறது, ரசிக்கிறது, சுவைக்கிறது.

அப்போது ஓர் இடையூறு, குறுக்கீடு வந்தாலும் அவனுக்கு ஆத்திரம் வருகிறது.

கண்கள் திறந்திருக்கின்றன. மனம் கவிதையில் ஆழ்ந்து கிடக்கிறது. அப்போது திறந்த கண்ணின் எதிரில் நிற்கும் மனைவி கூட அவன் கண்ணில் படுவதில்லை.

மரத்தில் அமர்ந்திருக்கும் பறவையை நோக்கி வில்லெடுக்கும் வேடனின் கண்களில் பறவை மட்டும் தெரியுமே தவிர, மரத்திலுள்ள இலைகள், காய்கள், கனிகள் தெரிவதில்லை.

கவிஞனுக்கும் வேடனுக்கும் சாத்தியமான மனதின் ஒருமுக நிலையை மற்றவர்களும் பெற முடியும்.

அதாவது ஒன்றையே நினைத்தல்.

அந்த லயம் கிட்டிவிட்டால் புலன்களும், பொறிகளும் செயலற்றுப் போகின்றன.

வாயின் சுவை உணர்வு, நாசியின் மண உணர்வு, கண்களின் காட்சி உணர்வு, செவியின் ஒலி உணர்வு, பிற அங்கங்களின் ஸ்பரிச உணர்வு அனைத்தையும் அடித்துப் போட்டுவிட்டு, புலியைக் கொன்ற வேடன் போல் மனது கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது. அதுதான் சரியான லயம்.

சங்கீத வித்வான் சரித்தர ஆராய்ச்சி செய்வதில்லை. ஸ்வரங்களையும் ராகங்களையுமே ஆராய்ச்சி செய்கிறான்.

ஒரே இடத்தில் ஒரே நிலையில் மனத்தைச் செலுத்தினால் சலனமில்லாத ஒரே உணர்ச்சி தோன்றுகிறது.

ஒரு கதை உண்டு!

ஒரு தாய் தனது ஒரு மாதக் கைக்குழந்தையோடு தரையிலே பாய் விரித்துப் படுத்திருந்தாள். அப்போது அவளுக்குக் கொஞ்ச தூரத்தில் பாம்பு வந்து நின்றது.

பாம்பைக் கண்ட உறவினர்கள் பதறினார்கள். துடித்தார்கள்.

அந்தப் பாம்பு குழந்தையையும் தாயையும் கடித்து விடப்போகிறதே என்று பார்த்தார்கள்.

தாயின் பெயரைச் சொல்லி சத்தமிட்டார்கள். தாய் எழவில்லை. பக்கத்தில் படுத்திருந்த குழந்தையின் மீது ஒரு மல்லிகைப் பூவை எடுத்துப் போட்டார்கள். தாய் உடனே விழித்துக் கொண்டு, அந்தப் பூவை எடுத்து அப்புறம் போட்டாள்.

தன்னை உதைத்தபோது கூடச் சொரணையில்லாது உறங்கிய தாய், குழந்தை மீது பூ விழுந்ததும் விழித்துக் கொண்டது எப்படி?

அந்த உள்ளம் குழந்தையிடமே லயித்துக் கிடந்ததால்தான்.

ஈஸ்வர பக்தியில் உடல் உருக, உள்ளம் உருக லயித்துக் கிடந்த அடியார்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் எல்லாம் மனதை ஒருமுகப்படுத்தியவர்களே.

இந்த மனதின் கோலங்களாலேயே நான் பலமுறை தடுமாறி இருக்கிறேன்.

ஆசைக்கும் அச்சத்துக்கும் நடுவே போராடி இருக்கிறேன்.

ஜனனம் தகப்பனின் படைப்பு, மரணம் ஆண்டவனின் அழைப்பு, இடைப்பட்ட வாழ்க்கை அரிதாரம் பூசாத நடிப்பு என்பதை, நாளாக நாளாக உணர்ந்து வருகிறேன்.

இன்னமும் முழுப்பக்குவம் கிட்டவில்லை.

திடீர் திடீரென்று மனதில் ஒன்றிருக்க ஒன்று பாய்கிறது.

ஒன்றை எடுத்தெறிந்தால், இன்னொன்று ஓடி வருகிறது.

ஒரேயடியாக மிதித்துக் கொன்றால்தான் நிம்மதி கிடைக்கும் என்பது தெரிகிறது.

என் கால்கள் இன்னும் அந்த வலுவைப் பெறவில்லை. பெற முயல்கிறேன். பெறுவேன்.

பிறந்தோருக்காகச் சிரிக்காமலும், இறந்தோருக்காக அழாமலும் பரந்தாமன் கூறியதுபோல் சமநோக்கத்தோடு நின்று மன அமைதி கொள்ள முயல்கிறேன்.

அதை நான் அடைந்துவிட்டால், கடவுள் கண்களிலே கண்ணீர் வைத்ததற்கான காரணமும் அடிபட்டுப்போகும்.

இவ்வளவையும் நான் சொல்லுவது லௌகிக வாழ்க்கையிலும் நம்மை அமைதிப்படுத்துவதே இந்து மதத்தின் நோக்கம் என்பதை விளக்கத்தான்.

லௌகிக வாழ்க்கையைச் செப்பனிடும் இந்து மதக் கருவிகளில் பகவத் கீதையும் ஒன்று என்பதுதான் என் துணிவு.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Fri Mar 26, 2010 6:50 pm

சமஸ்க்ருத கீதையை தமிழில் சொன்ன கவியரசன் புகழ் வாழ்க.

அதை ஈகரை நண்பர்களுக்கு சொன்ன சிவாவும் வாழ்க...........

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Mar 26, 2010 7:05 pm

என்ன இந்த மனது?

காலையில் துடிக்கிறது. மதியத்தில் சிரிக்கிறது. மாலையில் ஏங்குகிறது. இரவில் அழுகிறது.

"இன்பமோ, துன்பமோ எல்லாம் ஒன்றுதான். நடப்பது நடக்கட்டும்." என்றிருக்க மனம் விடுவதில்லை. ஒரே சீரான உணர்ச்சிகள் இந்த மனத்துக்குத் தோன்றுவதில்லை.

எவ்வளவு பக்குவப்பட்டாலும் மனத்தின் அலைகளாலேயே சஞ்சலிக்கிறான்.

கடிவாளம் இல்லாத இந்த மனக் குதிரையை அடக்குவது எப்படி?

"வைராக்கியத்தால் முடியும்" என்கிறது கீதை. அதையே சொல்கிறார் பகவான் ராமகிஷ்ணர்.



[You must be registered and logged in to see this image.]



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Fri Mar 26, 2010 7:32 pm

[You must be registered and logged in to see this image.]

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Mar 26, 2010 8:18 pm

venusstar wrote:சமஸ்க்ருத கீதையை தமிழில் சொன்ன கவியரசன் புகழ் வாழ்க.

அதை ஈகரை நண்பர்களுக்கு சொன்ன சிவாவும் வாழ்க...........
[You must be registered and logged in to see this image.]



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 03, 2010 6:47 pm

சமஸ்க்ருத கீதையை தமிழில் சொன்ன கவியரசன் புகழ் வாழ்க.

அதை ஈகரை
நண்பர்களுக்கு சொன்ன சிவாவும் வாழ்க...........


[You must be registered and logged in to see this image.]

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Apr 03, 2010 6:56 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 03, 2010 7:07 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Sat Apr 03, 2010 9:03 pm

[You must be registered and logged in to see this image.]
வேணு wrote:சமஸ்க்ருத கீதையை தமிழில் சொன்ன கவியரசன் புகழ் வாழ்க.

அதை ஈகரை நண்பர்களுக்கு சொன்ன சிவாவும் வாழ்க...........


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக