ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பறக்கும் தட்டை துரத்திய இங்கிலாந்து யுத்த விமானங்கள்

+7
சபீர்
அன்பு தளபதி
கலைவேந்தன்
Aathira
சரவணன்
ப்ரியா
mohan-தாஸ்
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பறக்கும் தட்டை துரத்திய இங்கிலாந்து யுத்த விமானங்கள் Empty பறக்கும் தட்டை துரத்திய இங்கிலாந்து யுத்த விமானங்கள்

Post by mohan-தாஸ் Sun Apr 11, 2010 11:03 am


பறக்கும் தட்டை துரத்திய இங்கிலாந்து யுத்த விமானங்கள் Ufo-midlandsஇங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியில், (வேற்றுக்கிரக பறக்கும் தட்டினை ஒத்த) ஒரு விண்கலமொன்றினை இரண்டு யுத்த விமானங்கள் துரத்திச்சென்ற காட்சி, பொதுமக்களின் கமேராவில் பதிவாகியுள்ளது.மிட்லாண்ட் Service Park இல் இருந்து, தொடர்ந்து 30 செக்கன்களுக்கு இக்காட்சிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளன.
வட்டவடிவில் மிகச்சிறியதாக காட்சியளிக்கும் இவ்விண்கலத்தினை இரண்டு அதிவேக ஜெட் வகை விமானங்கள் துரத்திப்பிடிக்கச்சென்ற இக்காட்சி அப்பிரதேச மக்களை பெரும் அச்சத்திற்குள்ளாக்கியிருக்கிறது.

ராடார் மூலம் இப்பறக்கும் தட்டு அவதானிக்கப்பட்டதும், உடனடியாக அதனை துரத்திச்செல்லும் முயற்சியில் இறங்கியதாம் இங்கிலாந்து விமானப்படை! எனினும் இம்முயற்சி வெற்றி அளித்ததா என மூச்சுக்காட்டவில்லை என்பது தான் ஏமாற்றம்!


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

பறக்கும் தட்டை துரத்திய இங்கிலாந்து யுத்த விமானங்கள் Empty Re: பறக்கும் தட்டை துரத்திய இங்கிலாந்து யுத்த விமானங்கள்

Post by ப்ரியா Sun Apr 11, 2010 11:06 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நான் ஈகரையில் இன்று கேட்டகவேண்டும் என்று நினைத்தேன், இருந்தாலும் பறக்கும் தட்டு தொடர்பாக மேலும் அறிய ஆவல் அண்ணா ?
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பறக்கும் தட்டை துரத்திய இங்கிலாந்து யுத்த விமானங்கள் Empty Re: பறக்கும் தட்டை துரத்திய இங்கிலாந்து யுத்த விமானங்கள்

Post by சரவணன் Sun Apr 11, 2010 11:10 am

priyatharshi wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நான் ஈகரையில் இன்று கேட்டகவேண்டும் என்று நினைத்தேன், இருந்தாலும் பறக்கும் தட்டு தொடர்பாக மேலும் அறிய ஆவல் அண்ணா ?

எனக்கும் தான் ஆவல்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பறக்கும் தட்டை துரத்திய இங்கிலாந்து யுத்த விமானங்கள் Empty Re: பறக்கும் தட்டை துரத்திய இங்கிலாந்து யுத்த விமானங்கள்

Post by mohan-தாஸ் Sun Apr 11, 2010 11:16 am

பிச்ச wrote:
priyatharshi wrote:பறக்கும் தட்டை துரத்திய இங்கிலாந்து யுத்த விமானங்கள் 677196 பறக்கும் தட்டை துரத்திய இங்கிலாந்து யுத்த விமானங்கள் 677196 பறக்கும் தட்டை துரத்திய இங்கிலாந்து யுத்த விமானங்கள் 677196 பறக்கும் தட்டை துரத்திய இங்கிலாந்து யுத்த விமானங்கள் 677196

நான் ஈகரையில் இன்று கேட்டகவேண்டும் என்று நினைத்தேன், இருந்தாலும் பறக்கும் தட்டு தொடர்பாக மேலும் அறிய ஆவல் அண்ணா ?

எனக்கும் தான் ஆவல்.

நீங்கள் அதனை விடியோவில் காணலாம் என நினைக்கிறேன்
https://www.youtube.com/watch?v=LXm3HwtvTKA&feature=player_embedded#


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

பறக்கும் தட்டை துரத்திய இங்கிலாந்து யுத்த விமானங்கள் Empty Re: பறக்கும் தட்டை துரத்திய இங்கிலாந்து யுத்த விமானங்கள்

Post by ப்ரியா Sun Apr 11, 2010 11:22 am

அண்ணா அதை நீங்களே ஒரு தொகுப்பாக எழுத்து வடிவில் தந்தாள் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன் நன்றி நன்றி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பறக்கும் தட்டை துரத்திய இங்கிலாந்து யுத்த விமானங்கள் Empty Re: பறக்கும் தட்டை துரத்திய இங்கிலாந்து யுத்த விமானங்கள்

Post by சரவணன் Sun Apr 11, 2010 11:26 am

priyatharshi wrote:அண்ணா அதை நீங்களே ஒரு தொகுப்பாக எழுத்து வடிவில் தந்தாள் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன் நன்றி நன்றி

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பறக்கும் தட்டை துரத்திய இங்கிலாந்து யுத்த விமானங்கள் Empty Re: பறக்கும் தட்டை துரத்திய இங்கிலாந்து யுத்த விமானங்கள்

Post by ப்ரியா Sun Apr 11, 2010 11:33 am

இல்லை நண்பரே, ஈகரையில் அந்த பதிவை சேர்த்து விடுங்கள் என்போன்றவர்கள் தகவல் பெறக் கூடியதாக இருக்கும் ...

நன்றி . அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பறக்கும் தட்டை துரத்திய இங்கிலாந்து யுத்த விமானங்கள் Empty Re: பறக்கும் தட்டை துரத்திய இங்கிலாந்து யுத்த விமானங்கள்

Post by சரவணன் Sun Apr 11, 2010 11:37 am

முடியாது முடியாது. பறக்கும் தட்டை துரத்திய இங்கிலாந்து யுத்த விமானங்கள் 812496


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பறக்கும் தட்டை துரத்திய இங்கிலாந்து யுத்த விமானங்கள் Empty Re: பறக்கும் தட்டை துரத்திய இங்கிலாந்து யுத்த விமானங்கள்

Post by mohan-தாஸ் Sun Apr 11, 2010 11:40 am

நல்லதோர் ஆரம்பம். உலகத்தினர் பலரின் கேள்வியும் இது தான், பறக்கும் தட்டு என்பது உண்மையா?நான் அறிந்தவற்றை இங்கு தருகின்றேன்.

பறக்கும் தட்டை துரத்திய இங்கிலாந்து யுத்த விமானங்கள் Ufo-136

படிக்கும் காலத்தில் இருந்தே எனக்கு இந்த பறக்கும் தட்டின் மேல் அப்படி ஓர் காதல் அப்போது வாசித்துக் கேட்டவை எல்லாம் இப்போ மறந்து விட்டது.
இருப்பினும் ஞாபகத்தில் உள்ளவற்றைத் தருகின்றேன்.

உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம், இலங்கையில் 'ரூபவாகினி' தொலைக்காட்சியில் 1980ம் ஆண்டு அளவில் ஒரு ஆங்கில நாடகம் ஓளிபரப்பானது ஞாபகமா? “ஸ்டார் டெக்” இந்த நாடகம் எடுப்பதற்கு காரணமாக இருந்தது ஓர் ஆச்சரியமான விடையமாம். ஆம்.... அமெரிக்காவின் ஓர் பாலைவன பகுதியில், பறக்கும் தட்டு ஒன்று இறங்கியதாம்! கிட்டத்தட்ட 1960ம் ஆண்டளவில் இது அங்கே நிகழ்ந்ததா!

அப்போது அதனை வெளியுலகிற்கு, அமெரிக்க அரசு அறிவிக்கவில்லையாம்! இப்போதும் கூட அந்த இடத்தினை பாதுகாப்பு வளையமாக அறிவித்து அதனை “நாசா”வின் கட்டுப் பாட்டில் வைத்திருக்கின்றது. சிறிது காலத்திற்கு முன் அந்த இடத்தினை ஓர் தொலைக்காட்சி ஒளிப்பதிவு செய்திருந்தது!

பல நாட்டு மக்கள் இந்த பறக்கும் தட்டினை கண்டுள்ளதாக அறிவித்துள்ளார்கள். ஒரு மாதத்திற்கு குறைந்தது 52 தடவையாவது இப்படியான செய்திகள் பதியப்பட்டு வருவதாகவும் கூறுகின்றார்கள்! விமான ஓட்டிகள் பலர் கண்டதாகவும் தங்கள் சாட்சிகள் கூறியிருக்கின்றார்கள்! ஒரு சிலரோ ஒரு படி மேலே போய் தட்டில் இருந்து கிரகவாசிகளை தாங்கள் கண்டதாகவும், தன்னையும் அழைத்து போக கேட்டதாகவும், அதற்கு அவர்கள் மறுத்து விட்டதாகவும் கூறியிருக்கின்றார்கள்.

பலர் இதை ஒளிப்பதிவு செய்திருக்கின்றார்கள்! இன்னும் சிலரோ தாங்கள் பறக்கும் தட்டினை புகைப்படம் எடுத்திருக்கின்றோம் என்று படத்தினை பணத்திற்கு விற்க பாத்திருக்கின்றார்கள். ஆனால் அது பறக்கும் தட்டினை போட்டோ கிடையாது. ஒரு பெரிய கண்ணாடியில் பறக்கும் தட்டினை வரைந்து அதனை போட்டோ எடுத்திருக்கின்றார்கள்!

இவற்றை விட ஏதோ ஓர் ஆபிரிக்க நாட்டில் தரையில் மிகப் பிரமாண்டமான பூச்சிகள் போன்று வரையப் பட்டுள்ளது! அது பல நூறு வருடங்களுக்கு முன் வரையப் பட்டது.
ஆனால் அந்த படத்திலே முறையான விதத்தில் கணிதம் கையாலப் பட்டிருக்கின்றதாம். அவற்றினைப் பார்த்த விஞ்னானிகள் மூக்கிலே விரல் வைக்கின்றார்கள். எப்படி இது சாத்தியம் என்று.

அந்தப் படங்களை தரையில் இருந்து பார்க்க முடியாது என்பது தான் மிகவும் ஆச்சரியம்! ஆகாயத்தில் இருந்து தான் பார்க்க வேண்டும்! அப்படி என்றால் அது யாரால், யாருக்கு வரைந்த ஓவியங்கள் என்பது தான் கேள்வியாக நிற்கின்றது.
அந்தப் பகுதில் காணப்பட்ட ஆதிவாசிகளின் குகையிலே வரையப் பட்ட ஓவியம் கூட மிகவும் நுனுக்கமாக வரையப்பட்டிருப்பதாக கூறுகின்றார்கள்!

விஞ்னானிகள் என்ன தான் சொல்லுகின்றார்கள் என்று பார்த்தால்..........
இது சூரிய ஒளியினால் ஏற்படுகின்ற மாற்றம்! சூரிய ஒளியினால் நீர்த் துளியின் தோற்றம் தான், அப்படி தெரிகின்றதாம்!

அப்படி ஓர் பறக்கும் தட்டு இருந்தால், எங்களது செய்மதிகளில் ஒன்றிலுல் சிக்காமல் பூமிக்கு வருவது சாத்தியம் இல்லை. சரி அப்படியே அப்படி இருந்தாலும்.... பக்கத்து கிரகங்களில் உயிரினங்கள் இருப்பதாக தெரிய வில்லை! கண் இமைக்கும் நேரத்தில் அந்த பறக்கும் தட்டு ஓடி மறைந்தும் விடுகின்றதென்றால். அந்த தட்டு கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் பயணம் செய்ய வேண்டும்! அந்த வேகத்தில் பயணம் செய்யும் போது காற்றோடு உராய்வு ஏற்பட்டு தீ பிடித்து விடும்!


இவற்றையும் மீறி அப்படி ஓர் தட்டும்,ஜீவராசிகளும் இருக்கும் என்றால், அவர்கள் எங்களைக் காட்டிலும், எத்தனையோ மடங்கு விஞ்ஞானத்தில் அதி முன்னேரியவர்களாக இருப்பார்களாம்!


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

பறக்கும் தட்டை துரத்திய இங்கிலாந்து யுத்த விமானங்கள் Empty Re: பறக்கும் தட்டை துரத்திய இங்கிலாந்து யுத்த விமானங்கள்

Post by சரவணன் Sun Apr 11, 2010 11:50 am

பறக்கும் தட்டை துரத்திய இங்கிலாந்து யுத்த விமானங்கள் 677196 பறக்கும் தட்டை துரத்திய இங்கிலாந்து யுத்த விமானங்கள் 677196
அருமை. நன்றி மோகன் ஜி.

கடவுளை பற்றி ஆராயும் போது கூட. கடவுளே வேறொரு கிரகத்திலிருந்து பூமிக்கு வந்தவர்கள் என்றும் கூறுகின்றனர்.(எது நான் கேள்விப்பட்டது அவ்வளவுதான்)

அவர்கள் வேறொரு கிரகத்திலிருந்து வந்து நமக்கு மொழி, அறிவியல் போன்ற விடயங்களை தந்துவிட்டு சென்றிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

எகிப்து பிரமிடுகளை எடுத்துக்கொண்டால் அது கூட அவர்கள் இறங்குவதற்காக அமைக்கப்பட்டிருக்கலாம் என்கின்றனர் (எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை).வேற்று கிரகத்து ஜீவிகள் நம்மை விட அப்போது அறிவாளிகளாக/பலம் வாய்ந்தவர்களாக இருந்திருக்கலாம் என்றும் அதனால் தான் அவர்களை கடவுள் என்று
அக்கால மனிதர்கள் வணங்கினர் என்றும் கூறப்படுகிறது.

இவை நான் எங்கயோ படித்தது. தகவல்களை திரட்டி தர முயற்சிக்கிறேன்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பறக்கும் தட்டை துரத்திய இங்கிலாந்து யுத்த விமானங்கள் Empty Re: பறக்கும் தட்டை துரத்திய இங்கிலாந்து யுத்த விமானங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum