புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல நட்பு Poll_c10நல்ல நட்பு Poll_m10நல்ல நட்பு Poll_c10 
62 Posts - 63%
heezulia
நல்ல நட்பு Poll_c10நல்ல நட்பு Poll_m10நல்ல நட்பு Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
நல்ல நட்பு Poll_c10நல்ல நட்பு Poll_m10நல்ல நட்பு Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
நல்ல நட்பு Poll_c10நல்ல நட்பு Poll_m10நல்ல நட்பு Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
நல்ல நட்பு Poll_c10நல்ல நட்பு Poll_m10நல்ல நட்பு Poll_c10 
1 Post - 1%
viyasan
நல்ல நட்பு Poll_c10நல்ல நட்பு Poll_m10நல்ல நட்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல நட்பு Poll_c10நல்ல நட்பு Poll_m10நல்ல நட்பு Poll_c10 
254 Posts - 44%
heezulia
நல்ல நட்பு Poll_c10நல்ல நட்பு Poll_m10நல்ல நட்பு Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
நல்ல நட்பு Poll_c10நல்ல நட்பு Poll_m10நல்ல நட்பு Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
நல்ல நட்பு Poll_c10நல்ல நட்பு Poll_m10நல்ல நட்பு Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
நல்ல நட்பு Poll_c10நல்ல நட்பு Poll_m10நல்ல நட்பு Poll_c10 
15 Posts - 3%
prajai
நல்ல நட்பு Poll_c10நல்ல நட்பு Poll_m10நல்ல நட்பு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நல்ல நட்பு Poll_c10நல்ல நட்பு Poll_m10நல்ல நட்பு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நல்ல நட்பு Poll_c10நல்ல நட்பு Poll_m10நல்ல நட்பு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நல்ல நட்பு Poll_c10நல்ல நட்பு Poll_m10நல்ல நட்பு Poll_c10 
7 Posts - 1%
mruthun
நல்ல நட்பு Poll_c10நல்ல நட்பு Poll_m10நல்ல நட்பு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல நட்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 03, 2010 1:44 am

நல்ல நட்பு Quiz07


அந்த கம்பெனியில் வேலை செய்யும் ஆட்கள் மதிய சாப்பாடு சாப்பிட்ட பிறகு மீதியிருக்கும் சாப்பாட்டை ஓரமாக உள்ள வேப்பமரத்தின் அடியில் வைப்பார்கள். வேப்பமரத்தில் எப்போதும் அணில்களும், குருவிகளும் நிறைந்திருக்கும்.

அந்த உணவைச் சாப்பிடுவதற்கென்றே சிட்டுக் குருவிக் கூட்டம் காத்திருக்கும்.

சாப்பாட்டை வைத்ததுதான் தாமதம், சிட்டுக் குருவிகள் பறந்து கீழே வந்து உண்ணத் தொடங்கிவிடும். அதன்பிறகு அணில்கள் கீழிறங்கி வந்து சாப்பிடும்.

சிட்டுக் குருவிகள் பத்துக்கு மேல் இருக்கும். அணில்கள் நான்கு ஐந்துதான் இருக்கும். அணில்களும் குருவிகளும் போட்டிபோட்டு சாப்பிட்டாலும் அவை சண்டை போட்டுக் கொண்டது கிடையாது.

திடீரென்று அங்கே வந்த ஒரு பூனை, இந்தக் கூட்டத்தைப் பார்த்துவிட்டது. அதற்கு, உணவைத் தின்று கொண்டிருக்கும் அணில்களைப் பார்த்ததும் நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்துவிட்டது. `அணில் கறி சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகிறது. சாப்பிட்டால் என்ன ருசியா இருக்கும்! இவை இருக்கும் சைசுக்கு ஒன்று சாப்பிட்டாலே போதும்' என்று நினைத்தது.

அணிலும், குருவியும் சாப்பிடும்போது மனிதர்கள் யாரும் துரத்துவதில்லை. அவை எந்தவிதத் தொந்தரவுக்கும் ஆளாவதில்லை என்பதால் அக்கம்பக்கம் பார்க்காமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தன.

பாய்ந்தது பூனை...

எதேச்சையாகப் பூனையைக் கவனித்துவிட்ட சிட்டுக் குருவி ஒன்று பறந்து கத்தி ஆர்ப்பாட்டம் செய்தது. மற்ற குருவிகளும் ஆபத்தை உணர்ந்து கொண்டு பறந்தன. அணில்கள் உடனடியாக பாய்ந்து மரத்தில் ஓடி ஏறிவிட்டன.

பாய்ந்து வந்த பூனை ஏமாந்துபோய் நின்றது. அன்றிலிருந்து தினமும் பூனை, அணில்களை துரத்த ஆரம்பித்தது. அணில்களும், சிட்டுக்குருவிகளும் நல்ல நண்பர்களாக இருக்கவே, ஒன்றுக்கு ஒன்று உதவி செய்து கொண்டு தப்பித்துக் கொண்டன.

அணில்களை உண்ண முடியவில்லையே என்று வருந்திய பூனை திட்டம் போட்டது. அணில்- குருவிகளின் நட்பைப் பிரித்தால்தான் அது நிறைவேறும் என்று முடிவு செய்தது. அணில்கள் தனியாக மரத்தில் இருந்தபோது அவற்றை பூனை சந்தித்தது.

பூனையைப் பார்த்ததும் அணில்கள் கத்த ஆரம்பித்தன.

``நண்பர்களே... என்னைப் பார்த்து ஏன் பயந்து கத்துகிறீர்கள்?''

பூனையின் அமைதியான பேச்சைக் கேட்டு அணில்கள் ஆச்சரியத்துடன் பார்த்தன.

``நண்பர்களே... நான் உங்களுக்கு விரோதியில்லை. உங்களுக்கு உதவவே வந்திருக்கிறேன்.''

``எங்களுக்கு நீ எப்படி உதவி செய்ய முடியும்?'' தலைவர் அணில் கேட்டது.

``அங்கே மீதியாக வைக்கப்படும் மதிய சாப்பாட்டை நீங்களும், குருவிகளும் சாப்பிடுகிறீர்கள். குருவிகள் எண்ணிக்கையில் அதிகம். நீங்கள் மிகக் குறைவு. அதோடல்லாமல் நீங்கள் மரத்தில் இருந்து இறங்கி வருவதற்குள் குருவிகள் பறந்து வந்து உண்ணத் தொடங்கி விடுகின்றன. மீதி உள்ளதைத்தான் நீங்கள் தின்கிறீர்கள். அதையும் நீங்கள் சாப்பிடும்போது பங்கு போட்டு உங்களுடன் சாப்பிடுகின்றன. இதுதான் நட்புக்கு அடையாளமா? அதனால்தான் அவற்றைத் துரத்திவிட்டு உங்களை உண்ண ஏற்பாடு செய்கின்றேன். அதை புரிந்து கொள்ளாமல் என்னைப் பார்த்ததும் ஓடிவி டுகிறீர்கள்'' என்று சாமர்த்தியமாகப் பேசியது பூனை.

அணில்கள் யோசித்தன. `இவன் நமக்கு எதிரியாயிற்றே? இருந்தாலும் பூனை சொல்வது சரி' என அவற்றுக்குத் தோன்றியது. தலைவர் அணில், ``பூனை நண்பா! நாங்கள் நாளை அதற்கு ஒரு வழி செய்கிறோம். உன் உதவி தேவைப்பட்டால் அழைக்கிறோம்'' என்றது.

மறுநாள் மதிய சாப்பாட்டு வேளையில் வேண்டுமென்றே அணில்கள் குருவிகள் மீது மோதி மோதிச் சாப்பிட்டன. சிட்டுக்குருவி கூட்டத் தலைவன் என்றும் இல்லாமல் அணிகல்கள் அப்படி செய்வதைப் பார்த்து, ``நண்பர்களே, இன்று உங்களுக்கு என்ன வந்தது? ஏன் இப்படி மோதுகிறீர்கள்?'' என்று கேட்டது.

``நீங்கள் தினம் எங்களை ஏமாற்றிச் சாப்பிட்டுவிட்டுப் போவீர்கள்! நாங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க வேண்டுமா?'' என்றது அணில் தலைவன்.

குருவிகளின் தலைவன் யோசித்தது. இதில் ஏதோ சிக்கல் இருக்கிறது. அவசரப்படக் கூடாது என்று முடிவு செய்துகொண்டது. பிறகு தன் கூட்டத்தாருடன் பறந்துபோய் மரக்கிளையில் அமர்ந்தது.

இவற்றை பூனை தூரத்தில் இருந்து பார்த்தது. அணில்கள் பயமின்றி நின்று கொண்டிருந்தன.

மறுநாள் மதிய சாப்பாடு வைக்கப்பட்டதும் சிட்டுக் குருவிகள் தமது தலைவனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு மரத்திலேயே அமர்ந்திருந்தன. அணில்கள் வந்து விறு
விறுவென்று சாப்பிட ஆரம்பித்தன.

குருவி தலைவன் யாரையோ ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தது. அதேபோல பூனை தலை தெரிய ஆரம்பித்தது. பிறகு முழு உருவம் தெரிந்தது. குருவிகள் இல்லாமல் அணில்கள் மட்டும் உணவு உண்பதைப் பார்த்ததும் கொஞ்சம் கொஞ்சமாக அருகில் வந்தது.

அதை கவனித்துவிட்ட குருவி தலைவன் கத்த ஆரம்பித்துவிட்டது. மற்றக் குருவிகளும் `ஆபத்து, ஆபத்து' என்று சேர்ந்து கத்தின. அணில்கள் கவலைப்படாமல் சாப்பிட்டன.

சிட்டுக்குருவி தலைவன் மனம் பொறுக்காமல் அணில்களிடம் சொன்னது. ``நண்பர்களே, இதில் சதி இருக்கிறது! ஏமாறாதீர்கள். நாங்கள் இனி உணவே உட்கொள்ள வரவில்லை. நீங்கள் உயிர் வாழ்ந்தால் போதும்'' என்றது.

குருவி தலைவனின் உருக்கமான குரலைக் கேட்டுத் தமது தவறை உணர்ந்த அணில்கள் ஓடவும், பூனை ஒரே பாய்ச்சலாக பாய்ந்தது. குறி தவறித் தடுமாறி விழுந்தது. மரத்தில் ஏறி உயிர் தப்பிய அணில்களுக்கு அப்போதுதான் உறைத்தது. `நாம் மதியீனத்தில் இருந்தோம், குருவி நண்பர்கள் இல்லாவிட்டால் உயிரை இழந்திருப்போமே' என்று எல்லா அணில்களும் நினைத்து வருந்தின.

குருவி தலைவன் சொன்னது, ``நண்பர்களே... நமக்குள் கோபமிருந்தால் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். அதைவிட்டுவிட்டு உங்களைப் பழிவாங்க நினைத்து நாங்கள் பேசாமல் இருந்திருந்தால் உங்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். ஆபத்தில் கண்டுகொள்ளாமல் இருப்பது நல்ல நட்புக்கு அழகல்லவே?''

நெகிழ்ந்துபோன அணில்களின் தலைவன், தனது தவறுக்கு வருந்தி சிட்டுக் குருவிகளிடம் மன்னிப்புக் கோரியது.

***
த. விஜயபால்




நல்ல நட்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 12:49 am

குருவி தலைவன் சொன்னது, ``நண்பர்களே... நமக்குள் கோபமிருந்தால் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். அதைவிட்டுவிட்டு உங்களைப் பழிவாங்க நினைத்து நாங்கள் பேசாமல் இருந்திருந்தால் உங்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். ஆபத்தில் கண்டுகொள்ளாமல் இருப்பது நல்ல நட்புக்கு அழகல்லவே?''

நெகிழ்ந்துபோன அணில்களின் தலைவன், தனது தவறுக்கு வருந்தி சிட்டுக் குருவிகளிடம் மன்னிப்புக் கோரியது.


உண்மையான நட்பை உணர முடிகிறது இக்கதை மூலம் நன்றி தல





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 17, 2010 12:57 am

நல்ல நட்பு 677196 நல்ல நட்பு 677196 நல்ல நட்பு 677196 நல்ல நட்பு 678642 நல்ல நட்பு 678642



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக