புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொண்ணு வீடு Poll_c10பொண்ணு வீடு Poll_m10பொண்ணு வீடு Poll_c10 
90 Posts - 77%
heezulia
பொண்ணு வீடு Poll_c10பொண்ணு வீடு Poll_m10பொண்ணு வீடு Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
பொண்ணு வீடு Poll_c10பொண்ணு வீடு Poll_m10பொண்ணு வீடு Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
பொண்ணு வீடு Poll_c10பொண்ணு வீடு Poll_m10பொண்ணு வீடு Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
பொண்ணு வீடு Poll_c10பொண்ணு வீடு Poll_m10பொண்ணு வீடு Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பொண்ணு வீடு Poll_c10பொண்ணு வீடு Poll_m10பொண்ணு வீடு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொண்ணு வீடு Poll_c10பொண்ணு வீடு Poll_m10பொண்ணு வீடு Poll_c10 
255 Posts - 77%
heezulia
பொண்ணு வீடு Poll_c10பொண்ணு வீடு Poll_m10பொண்ணு வீடு Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
பொண்ணு வீடு Poll_c10பொண்ணு வீடு Poll_m10பொண்ணு வீடு Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பொண்ணு வீடு Poll_c10பொண்ணு வீடு Poll_m10பொண்ணு வீடு Poll_c10 
8 Posts - 2%
prajai
பொண்ணு வீடு Poll_c10பொண்ணு வீடு Poll_m10பொண்ணு வீடு Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
பொண்ணு வீடு Poll_c10பொண்ணு வீடு Poll_m10பொண்ணு வீடு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பொண்ணு வீடு Poll_c10பொண்ணு வீடு Poll_m10பொண்ணு வீடு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பொண்ணு வீடு Poll_c10பொண்ணு வீடு Poll_m10பொண்ணு வீடு Poll_c10 
3 Posts - 1%
Barushree
பொண்ணு வீடு Poll_c10பொண்ணு வீடு Poll_m10பொண்ணு வீடு Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பொண்ணு வீடு Poll_c10பொண்ணு வீடு Poll_m10பொண்ணு வீடு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொண்ணு வீடு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 21, 2011 4:00 pm

அலுவலகத்திற்கு புறப்படும்போதே வசுமதிக்குள் சிந்தனை. தங்கள் `கடுகடு' மானேஜரிடம் இன்று தனக்கு தேவைப்படும் அரை நாள் விடுமுறையை என்ன காரணம் சொல்லி கேட்பது?

`என்னை பெண் பார்க்க வருகிறார்கள். மதியம் அரை நாள் விடுப்பு வேண்டும்' என்று சொல்லிக்கேட்க அவளுக்குள் சற்றே தயக்கம். காரணம் இதே காரணத்துக்காக பல தடவை அரை நாள் விடுப்புக்கள் எடுத்து விட்டாள். ஒவ்வொரு முறையும் மாப்பிள்ளை வீட்டார் வருவார்கள். பார்ப்பார்கள். பிறகு ஏதாவது ஒரு காரணத்தில் திருமணம் தட்டிப்போகும்.

இதனால் மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வருகிறார்கள் என்றாலே `அய்யோ அரை நாள் லீவு எடுத்ததாக வேண்டி வருமே' என்ற கவலை தான் அவளை ஆட்டிப்படைக்கும்.

அவள் நேரத்துக்கு அந்த அலுவலகத்தில் அப்படியொரு மேனேஜரும் வாய்த்திருந்தார். எதற்கெடுத்தாலும் எரிந்து விழும் மேனேஜர் ரங்கநாயகத்திடம் லீவு விஷயத்தில் எப்படி சமாளிப்பது என்பதே அவளின் இன்றைய தலையாய கவலையாய் இருந்தது.

அந்த அலுவலகத்தில் என்னதான் வேலையில் திறம்பட தன் தனித்தன்மை காட்டியிருந்தாலும் இன்னமும் உதவியாளராகவே இருக்கின்றோமே என்ற வருத்தம் வேறு. படுக்கையாகிப்போன தந்தை, எப்பொழுதும் சதா வேலை வேலை என்று தேய்ந்து போன தாய், 10-வது படிக்கும் தம்பி மோகன் என்று குடும்பச்சுமையில் பெண்பிள்ளையானாலும் ஆண் பிள்ளையாய் குடும்பத்தை தாங்கினாள் வசுமதி.

அடிக்கடி மருத்துவ தேவைக்காக, தாய் நலனுக்காக, தம்பி படிப்புக்காக சில வேளைகளில் விடுப்பு எடுக்க வேண்டிய கட்டாயம். மேனேஜர் ரங்கநாயகம் இவளது வருமானத்தில்தான் குடும்பம் ஓடுகிறது என்று அறிந்திருந்ததால் அவளை அவ்வப்போது கடிந்து கொள்ளுவதோடு சரி. அவள்நிலை அறிந்து அனைவரும் அந்த அலுவலகத்தில் அனுசரணையுடன் நடத்தினர்.

அலுவலக நேரம் தொடங்கியதுமே மேனேஜரிடம் இருந்து அவளுக்கு அவசர அழைப்பு. நடந்தாள்...அல்ல, அல்ல...ஓடினாள்.

மேனேஜரிடம் பைலை காட்டி அவரது கையொப்பம் பெற்றவுடன் தயங்கிய குரலோடு ஆரம்பித்தாள். "சார்! இன்று என்னை பெண் பார்க்க வருகிறார்கள். அதற்காக எனக்கு இன்று அரை நாள் விடுப்பு வேண்டும் சார்...'' ஒருவழியாக மூச்சை பிடித்துக்கொண்டு சொல்லி விட்டாள்.

இதை சற்றும் எதிர்பாராத ரங்கநாயகம் ``அடடா என்ன வசுமதி... இதுபற்றி நேற்றே சொல்லியிருக்கலாமே! இன்று நான் வேறு ஒரு வேலையாய் ஏர்போர்ட் செல்ல வேண்டியிருக்கிறது'' என்று சொன்னவர், "சரிசரி...அரை நாள் தானே! எடுத்துக்க...வேலை ஒண்ணும் பெண்டிங் இல்லாம பார்த்துக்க..'' என்றார்.

அப்பாடா...நிம்மதிப்பெருமூச்சு விட்டாள் வசுமதி. ஆனால் அந்த நிம்மதி கொஞ்ச நேரம் கூட நீடிக்கவில்லை. ரங்கநாயகம் கிளம்புவதற்கு ஆயத்தம் பண்ணிக்கொண்டிருந்த சமயம் திடீர் தொலைபேசி அழைப்பு! ``ஹலோ'' என்று ஆரம்பித்த ரங்கநாயகம், மறுமுனையில் தன் அக்காவின் ``தம்பி'' என்ற குரல் கேட்டதும் நெகிழ்ந்து போனார். "என்ன அக்கா எப்படி இருக்க? மாமா சவுக்கியமா? ரவி என்ன பண்றான்? எப்ப வீட்டுக்கு வருவ?'' உற்சாகமாக வார்த்தைகளை கொட்டினார்.

"மதுரையிலிருந்து நேரா உன் வீட்டிற்குதான் முதலில் வர்றோம் அதான் நீ ப்ரியா இருக்கியா? என்று போன் பண்ணினேன்'' என்றாள் அக்கா.

``அதற்கென்ன நான் ப்ரீ தான். தாராளமா வாக்கா! என்றார் ரங்கநாயகம்.

தன் அறையைவிட்டு வெளிவந்த ரங்கநாயகம் வசுமதியை பார்த்து ``இதப்பாரம்மா என் மீது கோபம் வேண்டாம். வேறு வழியே இல்லை. இப்போது என் சொந்தப் பணி ஒன்று வந்து விட்டது சாயந்திரம் வேணும்னா `ஒன்அவர்' முன்னாடி சென்று விடு. லீவெல்லாம் வேண்டாம்'' என்று கூறிவிட்டு கிளம்பினார். பதில் ஏதும் பேசாமல் புன்முறுவலை வரவழைத்துக் கொண்டு ``அதற்கென்ன சார்'' பரவாயில்லை! என்று முடித்தாள். குரலில் ஏமாற்றம்.

மாலை 5 மணிக்கு விறுவிறுவென்று வெளியில் வந்து ஆட்டோ ஒன்றை பிடித்தாள் வசுமதி. ஒருவழியாக வீட்டை வந்தடையவும், வீட்டிலிருந்து தம்பதி சகிதமாய் வெளியில் வந்த மாப்பிள்ளையின் பெற்றோரை பணிவோடு வழியனுப்ப வெளியில் வந்தாள் அம்மா. எதையும் காட்டிக் கொள்ளாமல் பெண்ணை மட்டும் ஏறிட்டுப் பார்த்து கிளம்பினர் மாப்பிள்ளையின் பெற்றோர்.

இரவு முழுவதும் அம்மாவின் வசைப்பாடல் தொடர்ந்தது ``எத்தனை தரம் சொன்னேன். சீக்கிரம் வா! அரைநாளாவது லீவ் எடுன்னு..! சம்பாதிக்கிற திமிரா? என்று எரிந்து விழுந்தாள் அம்மா. வேறுவழியில்லாமல் தன்னையும் நொந்து தன் மேனேஜர் ரங்கநாயகத்தையும் மனதில் திட்டி சலித்துக் கொண்டாள் வசுமதி.

அடுத்த நாள் எந்த சுரத்தும் இன்றி அலுவலகம் சென்றவள் ரங்கநாயகத்தை ஏறிட்டு பார்ப்பதையே தவிர்த்தாள் அத்தனை ஆத்திரம். ஆனால் சாயந்திரம் வீடு திரும்பியதும் மலர்ந்த முகத்துடன் கோவில் சென்று விட்டு வரும் தாயைப் பார்த்த வசுமதிக்கு ஆச்சரியம். இரவு உணவும் தடபுடலாக இருந்தது `இதெல்லாம் எதற்காக?' என்ற தொனியில் ஏறிட்டு பார்த்தவளை கையமர்த்தினாள் அவள் தாய் ``இதோ பார் வசு! நேற்று வந்து விட்டு சென்ற இடம் ரொம்ப பெரிசு. பையன் பிசினசில் கொடிகட்டி பறக்கிறானாம். எப்போதோ உன்னை உன் அலுவலகத்தில் வேலை விஷயமாய் வந்து பார்த்தவனுக்கு உன்னை பிடித்துப்போயிருக்கிறது. பெற்றோரிடம் எனக்கு இந்தப் பெண்தான் வேண்டும் என்று கூறியிருக்கிறான். இவர்களும் வேறு வழியில்லாமல் நம் குடும்பத்தைப் பற்றியும், உன்னைப் பற்றியும் தன் தம்பியின் மூலம் விசாரித்து நேற்று பெண் பார்க்க வந்தார்களாம். நீ வர நேரமானதால் உன் போட்டோ மற்றும் படிப்பில் நீ வாங்கிய பரிசுகளை பார்த்து விட்டு செல்லவும் நீ வரவும் சரியாயிருந்தது.

தம்பி படிப்பு முடிந்ததும் ஒரு வேலை போட்டுத் தருவதாகவும் கூறினார்கள். இன்னொரு விஷயம்.. இவரோட மாமா தான் உங்க மேனேஜராம். அவர் மூலம் தான் நேற்று தகவல் கேட்டு அறிந்து உன்னைப் பார்க்க வந்திருக்காங்க. எப்போதோ ஒரு விபத்தில் தன் மனைவியையும் தன் மகனையும் பறி கொடுத்தவராம் அவர்.

அவரோட மகள் இன்று உயிரோடு இருந்தால் உன் வயசிலதான் இருப்பாளாம். அதனால்தான் பெண் வீட்டு சார்பா எந்த விஷயம்னாலும் அவர்கிட்ட சொன்னா போதும்னு தன்அக்கா கிட்ட சொல்லிட்டாராம். அதிர்ஷ்டசாலிடி நீ'' என்று உச்சி முகர்ந்தவளை வாஞ்சையோடு பார்த்தாள் வசுமதி.

மறுநாள் ஆபீசில் ரங்கநாயகம் எப்பொழுது தன்னை அழைப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருந்தாள் வசுமதி.

அழைப்பு வந்ததும் ஓட்டமாய் ஓடிப்போனாள்.

"என்ன வசுமதி! அந்த ப்ராஜெக்ட் ஒர்க் எல்லாம் முடிந்து விட்டதா இல்லையா? அதைப்பற்றி ஒரு தகவலும் நீ சொல்லவில்லையே?''

"இல்லையே சார்! நேற்றே உங்கள் டேபிள் மீது சப்மிட் பண்ணிட்டேன் கொஞ்சம் பாருங்கள்'' என்றாள்.

"ஆமாம் வசுமதி! அது இங்கதான் இருக்கு'' என்றவர், "வசுமதி.. உனக்கு விடுமுறை தரலைன்னு கோபமா?'' கேட்டார்.

``இல்ல சார்... நீங்க எனக்கு பண்ணின உபகாரம் ரொம்ப பெரிசு சார். கடைசி வரைக்கும் நான் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கேன் சார். எனக்கு சரியானவிதத்தில் வரன் அமையல்லன்னதும் ஒரு தந்தை ஸ்தானத்துல நீங்களே என் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்திருக்கீங்க. இப்படிப்பட்ட உங்க மேல எனக்கு கோபம் எப்படி சார் வரும்?'' என்றவளை, "என் அக்கா பையன் ரவிக்கு ஒரு நல்ல பெண் வேண்டும். குணவதியாய், பொறுமையாய், எந்த சமயத்திலும் நிதானம் தவறாமலும் இருக்கணும்னு ஆசைப்பட்டேன். இதே அலுவலகத்தில் உன்னைப் பார்த்த ரவியும் அவன் விருப்பத்தை தெரிவித்தான். அதனால்தான் உன்னை பார்க்க வந்தார்கள். என் மகளாய் இருந்தால் இந்தக் காரியம் நான் செய்ய மாட்டேனாம்மா? ஆனா நீ பொறுமையில் குணவதின்னு என் அக்காகிட்ட நான் சொல்லியிருந்ததை நிரூபிக்கும் விதமாத்தான் உனக்கு லீவு கொடுக்க முடியாதது மாதிரி நடந்துக்கிட்டேன். அப்பவும் நீ என் வார்த்தைக்கு மரியாதை கொடுத்து என் உத்தரவை மீறாம நடந்துக்கிட்டே! இனி நீ எங்கவீட்டு மருமகள்'' என்றவரை, ஆனந்தக் கண்ணீர் மல்க பார்த்துக் கொண்டிருந்தாள், வசுமதி.

சா. ஜுலியட்



பொண்ணு வீடு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 21, 2011 4:03 pm

பொண்ணு வீடு 677196 பொண்ணு வீடு 677196 பொண்ணு வீடு 677196 பொண்ணு வீடு 677196 பொண்ணு வீடு 677196 பொண்ணு வீடு 677196 பொண்ணு வீடு 677196



பொண்ணு வீடு Uபொண்ணு வீடு Dபொண்ணு வீடு Aபொண்ணு வீடு Yபொண்ணு வீடு Aபொண்ணு வீடு Sபொண்ணு வீடு Uபொண்ணு வீடு Dபொண்ணு வீடு Hபொண்ணு வீடு A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 21, 2011 7:28 pm

நாடகத்தனமான கதை என்றாலும் நெகிழ வைத்த கதை.. பகிர்வுக்கு நன்றி சிவா..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 21, 2011 9:30 pm

வசுமதி அதிர்ஷ்டசாலி....

மேனேஜர் கூட இப்படி இம்சிக்கிறாரேன்னு நினைச்சேன்.....

எல்லாமே சுபம்.....

அன்பு நன்றிகள் சிவா.... உங்களுக்கு வர போகும் பெண் வசுமதி போல இருக்கட்டும் குணவதியாக....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பொண்ணு வீடு 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக