புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 10:11

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 10:10

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 5:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:47

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:29

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 18:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:20

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:04

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:35

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:11

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:01

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:42

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:25

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 13:08

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 12:41

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:27

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 12:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 0:38

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 0:34

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri 28 Jun 2024 - 23:22

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 28 Jun 2024 - 21:19

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 28 Jun 2024 - 21:05

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:03

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 21:47

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_c10Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_m10Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_c10 
85 Posts - 45%
ayyasamy ram
Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_c10Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_m10Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_c10 
76 Posts - 40%
T.N.Balasubramanian
Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_c10Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_m10Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_c10Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_m10Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_c10Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_m10Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_c10 
5 Posts - 3%
prajai
Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_c10Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_m10Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_c10 
2 Posts - 1%
Manimegala
Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_c10Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_m10Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_c10Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_m10Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_c10Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_m10Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_c10 
2 Posts - 1%
சிவா
Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_c10Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_m10Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_c10Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_m10Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_c10 
435 Posts - 47%
heezulia
Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_c10Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_m10Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_c10Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_m10Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_c10Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_m10Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_c10Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_m10Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_c10 
30 Posts - 3%
prajai
Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_c10Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_m10Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_c10Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_m10Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_c10Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_m10Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_c10Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_m10Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_c10Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_m10Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை)

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue 4 Oct 2011 - 17:30

Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) - வரலாற்று நாயகர்!

அதிர்ஷ்டம் என்ற சொல்லை நாம் பலமுறை கேள்விப்பட்டிருக்கிறோம். அவன் அதிர்ஷ்டசாலி எனக்குதான் அதிர்ஷ்டம் இல்லை என்று எத்தனையோ பேர் புலம்ப கேள்விப்பட்டிருப்போம். நாம் சந்திக்கவிருக்கும் வரலாற்று நாயகர் அதிர்ஷ்டத்தை இவ்வாறு விளக்குகிறார். "Luck is a dividend of sweat. The more you sweat, the luckier you get" அதாவது அதிர்ஷ்டம் என்பது நீங்கள் சிந்தும் வியர்வைக்கு கிடைக்கும் வட்டி. எவ்வுளவுக்கு எவ்வுளவு வியர்வை சிந்துகிறீர்களோ அவ்வுளவுக்கு அவ்வுளவு அதிர்ஷ்டம் கூடும். உழைப்பும் அதற்காக சிந்தப்படும் வியர்வையும்தான் நம் உயர்வை நிர்ணயிக்கிறது என்ற உண்மையை அழகாகச் சொன்னதோடு அதனை வாழ்ந்தும் காட்டிய ஒருவரைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.

பலர் வேலை ஓய்வைப்பற்றி சிந்திக்கும் 52 வயதில் ஒரு தொழிலை தொடங்கி அடுத்த 30 ஆண்டுகளுக்குள் 500 மில்லியன் அமெரிக்க டாலர் சொத்துச் சேர்த்தவர் அவர். அவரது பெயரைச் சொன்னால் பெரும்பாலோருக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் அவர் தொடங்கிய தொழிலின் அல்லது நிறுவனத்தின் பெயரைச் சொன்னால் மூன்று வயது குழந்தைகூட குதூகலிக்கும். ஆம் ஹம்பர்கர், ப்ரெஞ்ச்ப்ரைஸ், மில்க்‌ஷேக்ஸ் என்றவுடன் நம் நினைவுக்கு வரும் பெயர் மெக்டொனால்ட்ஸாகத்தான் இருக்கும். 1955 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த நிறுவனம் இன்று 120 நாடுகளில் முப்பதாயிரம் உணவகங்களாக விரிவடைந்திருக்கிறது. பில்லியன் கணக்கானோரின் உண்ணும் பழக்கத்தையே மாற்றி அமைத்த அந்த உணவகப் புரட்சி எப்படி சாத்தியமாயிற்று? வாருங்கள் 'M' என்ற தங்க வளைவுகளை உலகுக்குத் தந்த திரு. ரே க்ராக்கின் வாழ்க்கையை அலசிப் பார்ப்போம்.

ரேமெண்ட் ஆல்பர்ட் க்ராக் 1902 ஆம் ஆண்டு அக்டோபர் 5ந்தேதி சிக்காக்கோவில் பிறந்தார். கல்வியில் அதிக நாட்டமில்லாத அவர் உயர்நிலைக் கல்வியை முறையாக முடிக்காமலேயே வெளியேறினார். பொருள் ஈட்ட வேண்டுமென்பதற்காக ஒவ்வொரு வேலையாக செய்யத் தொடங்கினார். முதலாம் உலகப்போர் சமயத்தில் அவர் தொண்டூழிய அடிப்படையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக சிலகாலம் பணிபுரிந்தார். சிறிதுகாலம் ஓர் இசைக்குழுவில் இசைக் கலைஞராக இருந்தார். பொருட்களை விற்பனை செய்வதில் அவருக்கு தனி ஆர்வம் இருந்தது. எனவே விற்பனை முகவராகப் பணியாற்றத் தொடங்கினார். ஆரம்பத்தில் லில்லி சூலிட் கப் கம்பெனி என்ற நிறுவனத்திற்காக காகித கப் மற்றும் தட்டுகளை விற்பனை செய்து வந்தார். பின்னர் மில்க்‌ஷேக் தயாரிக்கும் இயந்திரங்களை விற்கத் தொடங்கினார். அமெரிக்கா முழுவதும் பயணம் செய்து மில்க்‌ஷேக் இயந்திரங்களை விற்றார். கிட்டதட்ட 30 ஆண்டுகள் விற்பனைத் துறையில் இருந்த பிறகுதான் உணவகம் திறக்கும் எண்ணம் அவருக்கு உதித்தது.

கலிஃபோர்னியாவில் San Bernardino என்ற பகுதியில் "Dick" McDonald , "Mac" McDonald என்ற இரண்டு சகோதரர்கள் ஒரு ஹம்பர்கர் உணவகத்தை நடத்தி வந்தனர். 1954 ஆம் ஆண்டில் அந்த சகோதரர்கள் எட்டு மில்க்‌ஷேக் இயந்திரங்களை ரே க்ராக்கிடமிருந்து வாங்கினர். ஏன் அவர்களுக்கு இத்தனை இயந்திரங்கள் தேவைப்படுகிறது என்று வியந்த ரே க்ராக் அந்த சகோதரர்களின் உணவகத்தைச் சென்று பார்வையிட்டார். மக்கள் வரிசைப் பிடித்து உணவு வாங்கிச் செல்வதைக் கண்டார். தேவையை சமாளிக்கத்தான் அந்த சகோதரர்களுக்கு அத்தனை இயந்திரங்கள் தேவைப்பட்டது என்பதை உணர்ந்தார். அந்த உணவகத்தின் தூய்மையும், எளிமையும், உணவின் நியாயமான விலையும் அதிக நேரம் காக்க வைக்காமல் உணவை விரைவாகத் தயாரித்த பாங்கும் அவரை வெகுவாகக் கவர்ந்தன.

15 காசுக்கு ஒரு பர்கர், 10 காசுக்கு (அமெரிக்க டாலர்) ஒரு மெதுபானம் இப்படி என அவற்றை விரைவாக வாங்கிச் செல்வது மக்களுக்கு பிடித்திருந்ததையும் அவர் கவனித்தார். அம்மாதிரியான உணவகங்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உண்டு என்பதை அந்தக்கணமே கண்டுகொண்டார் ரே க்ராக். உடனே அந்த சகோதரர்களிடம் பேசி அதே போன்ற உணவகங்களை 'franchised' எனப்படும் நிறுவன உரிமம் முறையில் நாடு முழுவதும் திறக்கலாம் என்று ஆலோசனை கூறியதோடு தானே அதற்கு முகவராக இருப்பதாகவும் கூறினார். அந்த சகோதரர்களும் இணங்கவே அடுத்த ஆண்டே அதாவது 1955 ஆம் ஆண்டு தனது முதல் மெக்டொனால்ட்ஸ் உணவகத்தை இலினோயின் Des Plaines என்ற பகுதியில் திறந்தார். நிறுவன உரிமத் தொகையிலிருந்து முகவருக்கான தொகை மட்டும்தான் அவருக்குக் கிடைத்தது. ஆனால் அந்த உணவகத்தின் வருமானம் அவர் பெற்ற தொகையை விட அதிகமாக இருந்தது. இருப்பினும் அதேபோல் நாட்டின் மற்ற பகுதிகளில் மெக்டொனால்ட்ஸ் உணவகங்களை 'franchised' அடிப்படையில் திறப்பதிலேயே அவர் அதிக கவனம் செலுத்தினார்.

ஆறு ஆண்டுகள் கழித்து மெக்டொனால்ட் சகோதரர்களுக்கும், ரேக் க்ராக்குக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சகோதரர்கள் கேட்டுக் கொண்டதற்கினங்க அவர்களுக்கு 2.7 மில்லியன் டாலரைக் கொடுத்து மெக்டொனால்ட்ஸ் உணவகத்தின் ஒட்டு மொத்த உரிமையையும் பெற்றார் ரே க்ராக். ஆனால் தங்கள் முதல் San Bernardino உணவகத்தை மட்டும் விற்க அந்த சகோதரர்கள் மறுத்து விட்டனர். ரே க்ராக் என்ன செய்தார் தெரியுமா? அந்த உணவகத்திற்கு நேர் எதிரே ஒரு மெக்டொனால்ட்ஸ் உணவகத்தைத் தொடங்கினார் அந்த சகோதரர்கள் தங்கள் சொந்த உணவகத்தை மூட வேண்டியதாயிற்று. தரம், தூய்மை, விரைவான சேவை, நியாயமான விலை இவற்றை தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்டதால் மெக்டொனால்ட்ஸ் உணவகம் அசுர வேகத்தில் வளரத் தொடங்கியது. முதல் உணவகம் திறக்கப்பட்ட ஐந்தே ஆண்டுகளில் அமெரிக்க முழுவதும் 200 உணவகங்கள் திறக்கப்பட்டன. பத்தே ஆண்டுகளில் ரே க்ராக்கின் மெக்டொனால்ட்ஸ் உணவகம் பங்குசந்தையில் இடம் பிடித்தது.

மெக்டொனால்ட்ஸ் உணவகத்தை முதலாளித்துவத்தின் சின்னம் என்று ஒதுக்கிய சோவியத் மண்ணிலும் 1990 ஆம் ஆண்டில் அது கால் பதித்தது. உலகின் ஆக சுறுசுறுப்பான மெக்டொனால்ட்ஸ் உணவகம் ரஷ்யாவில்தான் இயங்குகிறது. உலகின் ஆகப்பெரிய மெக்டொனால்ட்ஸ் உணவகம் 1992 ல் சீனாவில் திறக்கப்பட்டது. இன்று உலகின் எந்த மெக்டொனால்ட்ஸ் உணவகத்திற்கு நீங்கள் சென்றாலும் உணவின் சுவை கிட்டதட்ட ஒன்றாகவே இருக்கும். அதற்கு காரணம் உணவு தயாரிக்கும் முறையும் அளவுகளும் உலகம் முழுவதும் ஒருங்கினைக்கப் பட்டிருப்பதுதான். மெக்டொனால்ட்ஸின் இமாயல வெற்றிக்கு அதுவும் ஒரு காரணம் அதோடு காலத்துக்கேற்பவும் அது மாறி வந்திருக்கிறது. உதாரணத்திற்கு அந்த உணவகங்களில் வேலை செய்ய ஆரம்பத்தில் பதின்ம வயதினரே தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் 1980 களுக்கு பிறகு பெரியவர்களும் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டனர். மேலும் மாறும் சுவைகளுக்கு ஏற்றவாறு ஹம்பர்கரைத் தவிர்த்து மீன், கோழி பர்கர்களும், காலை உணவுகளும் சேர்த்துக்கொள்ளப்பட்டன.

1977 ஆம் ஆண்டு 'Grinding It Out' என்ற தனது சுயசரிதையை எழுதி வெளியிட்டார் ரே க்ராக். அதில் அவரது முதல் வரிகள் இவை "I have always believed that each man makes his own happiness and is responsible for his own problems." அதாவது ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியைத் தானே உருவாக்கிக்கொள்கிறான் அதேபோல் அவனது பிரச்சினைகளுக்கும் அவனே பொறுப்பு. மெக்டொனால்ட்ஸ் என்ற உணவகப் புரட்சியின் மூலம் தனது மகிழ்ச்சியைத் தேடிக்கொண்டு 'ஹம்பர்கர் கிங்' என்று பெயரெடுத்த ரே க்ராக் 1984 ஆம் ஆண்டு ஜனவரி 14 ந்தேதி தனது 82 ஆவது வயதில் கலிஃபோர்னியாவில் காலமானார்.

இனி சில புள்ளி விபரங்களைப் பார்ப்போம்...

Xerox - நிறுவனம் ஒரு பில்லியன் டாலரை சம்பாதிக்க அதற்கு 63 ஆண்டுகள் பிடித்தன. அதே தொகையை சம்பாதிக்க IBM - கணினி நிறுவனத்திற்கு 46 ஆண்டுகள் ஆயின. ஆனால் மெக்டொனால்ட்ஸ் உணவகம் ஒரு பில்லியன் டாலரை 22 ஆண்டுகளில் ஈட்டியது. தரத்திற்கும், தூய்மைக்கும், சுவைக்கும், விரைவான சேவைக்கும், நியாயமான விலைக்கும் உலகம் தந்த பரிசு அது.

அப்படிப்பட்ட வருமானத்தைக் குவித்த ரே க்ராக் கூறிய இன்னொரு பொன்மொழி என்ன தெரியுமா? "If you work just for money, you'll never make it, but if you love what you're doing and you always put the customer first, success will be yours" பணத்திற்காக நீங்கள் வேலை செய்தால் உங்களால் ஒன்றும் சாதிக்க முடியாது, ஆனால் எதையும் ஆழமான விருப்பத்தோடு செய்து வாடிக்கையாளர்களை முதன்மையாகக் கொண்டால் வெற்றி உங்களுடையது. எவ்வுளவு உண்மை இன்று உலகம் முழுவது 30 ஆயிரம் மெக்டொனால்ட்ஸ் உணவகங்களில் அன்றாடம் 46 பில்லியன் பேர் உணவுண்டு மகிழ்கின்றனர்.

அதிர்ஷ்டம் என்பது அது இஷ்டத்துக்கு வரும் ஒன்றல்ல. வியர்வை சிந்தி உழைக்கும் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் ஒன்று என்பதை வாழ்ந்து காட்டியவர் ரே க்ராக். வாய்ப்புகளை கண்டுகொள்ளும் திறமையும், தரம், தூய்மை, விரைவான சேவை, ஆகியவற்றை தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்டதும், உழைப்புதான் உயர்வைத் தரும் என்ற நம்பிக்கையும், கனவுகளை நனவாக்கிக் கொள்ள வயது ஒரு தடையல்ல என்ற தைரியமும்தான் ரே க்ராக் என்ற ஹம்பர்கர் மன்னனுக்கு விரைவு உணவகம் என்ற வானத்தை வசப்படுத்தின. இதே பண்புகளோடும் விடா முயற்சியோடும் செயல்பட்டால் நாமும்கூட நாம் விரும்பும் வானத்தை வசப்படுத்தலாம் என்பதில் சந்தேகம் ஏதும் உங்களுக்கு உண்டா?!

(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

http://urssimbu.blogspot.com/2011/10/ray-kroc-hamburger-king-in-mcdonalds.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக