Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர்
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2

ஏப்ரல் 04,2010,00:14 IST
கோவை : சிறு வயதில் தந்தையை இழந்த ஏழை மாணவன், கல்லூரிகளில் இரவு நேர செக்யூரிட்டி வேலை செய்து, தனது இரண்டு தம்பிகளை படிக்க வைத்து வருகிறார். கோவை 'வழிகாட்டி' நிகழ்ச்சியில் இவரது உருக்கமான கதையைக் கேட்ட பார்வையாளர்கள் கண் கலங்கினர்.
'தினமலர்' நாளிதழ், புதிய தலைமுறை வார இதழ் மற்றும் சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில், பிளஸ் 2 மாணவர்களுக்கான 'வழிகாட்டி' நிகழ்ச்சி, கோவையில் நடந்து வருகிறது. நேற்று வங்கிக் கடன்கள் பற்றி விளக்கும் நிகழ்ச்சியில், பார்வையாளர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறலாம் என அறிவிக்கப்பட்டது. அப்போது, பார்வையாளர்கள் மத்தியில் இருந்து எழுந்த ரமேஷ் எனும் மாணவர், கல்விக் கடன் கிடைக்காததால், தான் விரும்பிய வேளாண் படிப்பை படிக்க முடியவில்லை என்றும், தற்போது பகுதி நேர வேலை பார்த்துக் கொண்டு டிப்ளமோ படிப்பதாகவும் கூறினார். அவருக்கு தேவையான உதவிகள் செய்வதாக பாரத வங்கி அதிகாரி விஜயராஜ் உறுதி அளித்தார். அந்த மாணவனின் தன்னம்பிக்கை, தைரியத்தைப் பாராட்டிய 'வழிகாட்டி' நிகழ்ச்சி அமைப்பாளர்கள், அவரை மேடைக்கு வரவழைத்து பாராட்டினர்.
அப்போது அந்த மாணவர் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தாலுகா தளவாய்புரம் கிராமத்தில் உள்ள ஒரு ஏழைக் குடும்பத்தின் மூத்த மகன் நான். எனக்கு இரண்டு தம்பிகள். சிறு வயதில் தந்தை இறந்து விட்டார். கண் பார்வை குறைந்த அம்மா, விவசாய கூலி வேலை பார்த்து எங்களை வளர்க்கிறார். உறவினர் எவரும் உதவவில்லை. தெரு விளக்கில் படிப்பதைக் கண்டு ஊரார் கிண்டல் செய்வர். இதனால், எப்படியும் படித்து நல்ல நிலைமைக்கு வர வேண்டுமென மனதுக்குள் வைராக்கியம் வந்தது. குடும்ப வறுமை காரணமாக, படிக்கும் போது அம்மாவுடன் கூலி வேலைகளுக்கு சென்று தினமும் 20 ரூபாய் சம்பாதிப்பேன். கட்டட வேலைக்கு சென்றால் 40, 50 ரூபாய் கிடைக்கும்.
கூலி வேலைக்கு சென்றதால் பல நாட்கள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. படித்தே ஆக வேண்டும் என்ற என் அம்மாவின் வற்புறுத்தலால், நெல்லையில் உள்ள கிறிஸ்தவ அன்பு இல்லத்தில் தங்கி படித்தேன். அங்கு புழு, வண்டு கலந்த உணவு வழங்கப்பட்டாலும், குடும்ப நிலைமைக்காக சகித்துக் கொண்டு படித்தேன். ப்பல் பொறியாளர் மதிவாணன், பாதிரியார் பிரான்சிஸ் ஆகியோரின் உதவியால் 924 மதிப்பெண்ணுடன் பிளஸ் 2 பாஸ் செய்தேன். ஆனால், வேளாண் பல்கலை, பல் மருத்துவர் படிப்புகளில் சேர இடம் கிடைத்தும், பணம் இல்லாததால் சேர முடியவில்லை. இன்று கோவை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 'டிப்ளமோ இன் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்' இறுதியாண்டு படிக்கிறேன். வளாக நேர்காணலில் 8,000 ரூபாய் சம்பளம் பெற தேர்வு பெற்று விட்டேன்.
எனது இரண்டாவது தம்பியை இதே கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜி., டிப்ளமோவும், மூன்றாவது தம்பியை சித்தாபுதூர் மாநகராட்சிப் பள்ளியில் பத்தாவதும் படிக்க வைக்கிறேன். இங்குள்ள ஒரு விடுதியில் தங்கி படிக்கிறோம். கல்லூரி நேரம் போக மீதமுள்ள நேரத்தில் தனியார் கல்லூரிகளில் இரவு நேர 'செக்யூரிட்டி' பணி, பேப்பர் போடுவது, கூரியர், ஓட்டல், பேன்சி கடைகள், பெட்ரோல் பங்க் ஆகியவற்றில் பணிபுரிந்து சம்பாதிக்கிறேன். தேர்வு நாட்களில் பணியில் இருந்து நின்று விடுவேன்.
செக்யூரிட்டி பணியில் அமைதியாக இரவில் படிக்க முடியும் என்பதால் அப்பணிகளில் அதிக நாட்கள் ஈடுபட்டேன். இப்படி சம்பாதித்து தான் எங்கள் கல்வி செலவுகளை சமாளிக்கிறோம். சிரமத்துக்கு மத்தியில் தனியாக 'ஹார்டுவேர் நெட்வொர்க்கிங்' படிப்பையும் முடித்துள்ளேன். வறுமையின் உச்சத்தை பார்த்த எங்களுக்குத்தான் பணத்தின் அருமை தெரியும். கோவில் உண்டியல்களில் பணம் போடுவதற்கு பதில், உடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்களுக்கு உதவுவதே எனக்கு விருப்பம். ஆடம்பரமாக பணத்தைச் செலவிடுபவர்களைக் கண்டால், சங்கடமாக இருக்கும். இன்று எங்கள் அம்மாவுக்கு 53 வயது. இன்னும் கிராமத்தில் கூலி வேலை தான் செய்கிறார். சீக்கிரம் வேலையில் சேர்ந்து, அவருக்கு கண் பார்வையை மீட்டுக் கொடுக்க வேண்டும். அவரை கடைசி வரை நல்லபடியாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது என் லட்சியம். எங்கள் குடும்பத்தை கேலி செய்தவர்கள் முன்னிலையில் உயர்ந்த பதவிக்கு வர வேண்டும்.
நம்பிக்கை, உழைப்பு இருந்தால் வெற்றி கிடைக்கும் என்பதை ஒரு புத்தகத்தில் படித்தேன். அதன்படி, ஒழுக்கமான குணங்களுடன் நம்பிக்கையுடன் கடினமாக உழைக்கிறேன். நல்ல வேலைக்கு சென்ற பின், நிறைய ஏழைகள் படிக்க உதவ வேண்டும்; அதற்கான சக்தியை கடவுள் எனக்கு தர வேண்டும். இவ்வாறு ரமேஷ் கூறினார்.
அவரது உருக்கமான, தன்னம்பிக்கை தெறிக்கும் பேச்சைக் கேட்ட பார்வையாளர்கள் கண் கலங்கினர். ரமேஷின் பேச்சைக் கேட்ட அயல்நாட்டு கல்வி ஆலோசகர் பால் செல்லக்குமார், மாணவருக்கு 10,000 ரூபாய் வழங்குவதாக மேடையில் அறிவித்தார். திருப்பூரைச் சேர்ந்த சவுந்தர்ராஜன் என்பவர் 5,000 ரூபாயும், சுகந்தி என்பவர் 1,001 ரூபாயும் வழங்கி, மாணவரின் தளராத தன்னம்பிக்கைக்கு பாராட்டு தெரிவித்தனர்

sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
Re: பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர்
இந்த மாணவன் வாழ்வில் சகல சௌபாக்யங்களையும் பெற இறைவனை வேண்டுகிறேன்!!!
தண்ணி, தம்மு அம்மு(பெண்கள்) என்று சுற்றும் மாணவர்கள் மத்தியில் இது போன்ற மாணவர்களை பார்க்கும் போது,
தன்னம்பிக்கை என்றால் என்ன என்று உணரமுடிகிறது.
வெற்றி வாகை சூடுவாய் நண்பா!
வாழ்த்துகள்!!!

Last edited by பிச்ச on Mon Apr 05, 2010 1:10 am; edited 1 time in total
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர்
பிச்ச wrote:இந்த மாணவன் வாழ்வில் சகல சௌபாக்யங்களையும் பெற இறைவனை வாழ்த்துகிறேன்!!!
தண்ணி, தம்மு அம்மு(பெண்கள்) என்று சுற்றும் மாணவர்கள் மத்தியில் இது போன்ற மாணவர்களை பார்க்கும் போது,
தன்னம்பிக்கை என்றால் என்ன என்று உணரமுடிகிறது.
வெற்றி வாகை சூடுவாய் நண்பா!
வாழ்த்துகள்!!!
வழிமொழிகிறேன்...........!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர்
இந்த செய்தியை நான் படித்த பொது என் கண்கள் என்னை அறியாமல் குளமானது
sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
Re: பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர்
sathyan wrote:இந்த செய்தியை நான் படித்த பொது என் கண்கள் என்னை அறியாமல் குளமானது
கோடையில் வற்றிய குளம் போல அத சொல்லுங்க, அத சொல்லுங்க மொதல்ல....
இல்லை ஆனந்த கண்ணீரா?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர்
பிச்ச wrote:sathyan wrote:இந்த செய்தியை நான் படித்த பொது என் கண்கள் என்னை அறியாமல் குளமானது
கோடையில் வற்றிய குளம் போல அத சொல்லுங்க, அத சொல்லுங்க மொதல்ல....
இல்லை ஆனந்த கண்ணீரா?
பிச்ச யோவ் இதையுமா காமெடி பனுவ
sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
Re: பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர்
சாரி தல.sathyan wrote:பிச்ச wrote:sathyan wrote:இந்த செய்தியை நான் படித்த பொது என் கண்கள் என்னை அறியாமல் குளமானது
கோடையில் வற்றிய குளம் போல அத சொல்லுங்க, அத சொல்லுங்க மொதல்ல....
இல்லை ஆனந்த கண்ணீரா?
பிச்ச யோவ் இதையுமா காமெடி பனுவ
உள்ளுக்குள்ள எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர்
பிச்ச wrote:சாரி தல.sathyan wrote:பிச்ச wrote:sathyan wrote:இந்த செய்தியை நான் படித்த பொது என் கண்கள் என்னை அறியாமல் குளமானது
கோடையில் வற்றிய குளம் போல அத சொல்லுங்க, அத சொல்லுங்க மொதல்ல....
இல்லை ஆனந்த கண்ணீரா?
பிச்ச யோவ் இதையுமா காமெடி பனுவ
உள்ளுக்குள்ள எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு.
sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
Re: பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர்
கோவில் உண்டியல்களில் பணம் போடுவதற்கு பதில், உடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்களுக்கு உதவுவதே எனக்கு விருப்பம். ஆடம்பரமாக பணத்தைச் செலவிடுபவர்களைக் கண்டால், சங்கடமாக இருக்கும். - இது தான் வறுமை அனுபவங்கள்
ramesh.vait- தளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
Re: பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர்
பிச்ச wrote:இந்த மாணவன் வாழ்வில் சகல சௌபாக்யங்களையும் பெற இறைவனை வாழ்த்துகிறேன்!!!
தண்ணி, தம்மு அம்மு(பெண்கள்) என்று சுற்றும் மாணவர்கள் மத்தியில் இது போன்ற மாணவர்களை பார்க்கும் போது,
தன்னம்பிக்கை என்றால் என்ன என்று உணரமுடிகிறது.
வெற்றி வாகை சூடுவாய் நண்பா!
வாழ்த்துகள்!!!
அந்த பையன வாழ்த்திறத்த விட்டுட்டு என்னமோ பண்ணிக்கிட்டு இருக்கு இந்த பிச்ச
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!!
» பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் ...............
» பகலில் கண் தெரியாது... இரவில் பால்வெளியே தெரியும்... ஆச்சர்ய மனிதர்!
» காஞ்சிபுரத்தில் அரசு விடுதியில் ஐ.டி.ஐ., மாணவர் கொலை : சக மாணவர் கைது
» பகலில் தூங்குவான்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|