ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி!

+4
Manik
ராஜா
ரூபன்
Raviravi
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Empty பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி!

Post by Raviravi Wed Jun 17, 2009 3:25 pm


[You must be registered and logged in to see this link.]






[You must be registered and logged in to see this link.]
முதலில் நடுத்தரவர்க்க குடும்பத்தை ஒரு தாய்க்கும் மகளுக்கும் இடையே நடக்கும் சண்டையின் உரையாடலை படியுங்கள்..!

மகள் :
அம்மா எங்க காலேஜ்ல டூர் போறோம். எனக்கு ஆயிரம் ரூபாய் வேணும். எங்க
க்ளாஸ்ல எல்லோரும் ஒரே மாதிரி டிரஸ் எடுக்கப் போறோம். அதுக்கு 500 ரூபாய்
வேணும்.

தாய் : சும்மா...
சும்மா... பணம்... பணம்னு கேட்டு நச்சரிக்காதே..! பொம்பள புள்ளய காலேஜ்
வரைக்கும் படிக்க வெச்சிட்டு இருக்கிறதே பெரிய விசயம்.

மகள் : எனக்கு நாளைக்கு பணம் வேணும். இல்லாட்டி அவ்வளவுதான்!

தாய் : அதெல்லாம் தர முடியாது. என்ன செய்வியோ செஞ்சிக்கோ...!

மகள் :
என்ன நீ...! பெத்த பொண்ணு சந்தோஷமா டூர் போறதுக்கு கூட பணம் தர
மாட்டேங்கிற...! இந்த சந்தோஷத்த கூட தர முடியாத நீ எதுக்கு என்னை பெத்த(?)

தாய் : ஏன்டீ சொல்ல மாட்டே...! ஒன்ன பத்து மாசம் கஷ்டப்பட்டு சொமந்து பெத்து வளர்த்ததுக்கு நல்லா கேட்குற கேள்வி.

மகள் : ஆமாமா... பெருசா பெத்துட்டா... ஊர் உலகத்துல எவளும் பெத்துக்கலியா?

-
இப்படியே தாய் மகளுக்கு இடையே சண்டை நீண்டு கொண்டே போகும். இதேபோல நம்மில்
பலரும் தாயிடம் சண்டை போட்டிருக்கலாம். அப்படி சண்டை
போட்டவர்களுக்காகவும், இனி இதுபோல யாரும் தாயைப் பார்த்து ஒரு கேள்வியை
கேட்கக்கூடாது என்பதற்காகவும்தான் இந்த பதிவு...!

ஒரு குழந்தையை
பெற்றெடுப்பது என்பது எவ்வளவு கஷ்டம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்
என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் எனது மனைவியின் வயிற்றில் ஒரு சிசு
உருவான நாள் முதல் அந்த சிசு இந்த பூவுலகை கண் விழித்து பார்த்த நாள் வரை
9 மாதம் 9 நாட்கள் (பத்து மாசம்னு சொல்வழக்கு இருந்தாலும் 9 மாசம் 9
நாள்தான் குழந்தை தாயின் கருவறைக்குள் இருக்கும்) என்னென்ன கஷ்டப்பட்டாள்
என்பதை நேரில் பார்த்ததற்கு பிறகு இனி என் தாயிடம் எந்த விஷயத்திலும்
கோபப்படக்கூடாது என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.

ஆம் நண்பர்களே..!
ஒரு ஆணால் செய்ய முடியாத காரியங்களில் குழந்தையை வயிற்றில் சுமந்து
குழந்தையை பெற்றெடுப்பது ஒன்று. ஒரு பெண்ணின் வயிற்றில் கரு உருவான நாள்
முதல் அவள் தன்னையும் அறியாமல், வயிற்றில் வளரும் சிசு மீது ஒரு
தனிக்கவனம் செலுத்தத் தொடங்குகிறார். கரு உருவான இரண்டாவது மாத இறுதியில்
இருந்து அந்த பெண்ணால் சரியாக சாப்பிட முடியாது. எந்த உணவை சாப்பிட்டாலும்
குமட்டும். சாப்பிட்ட ஐந்து நிமிடங்களுக்கெல்லாம் அந்த உணவு வாந்தியாக
வெளியே வந்து விடும். இந்த குமட்டல் 6 அல்லது 7 மாதங்கள் வரையோ...
சிலருக்கு குழந்தை பிறக்கும் நாள் வரையிலோ நீடிக்கலாம்.

குமட்டல்
முதல் பிரச்சினை என்றால் குழந்தை வளர வளர வயிறு பெரிதாகும். அந்த
சமயத்தில் அவர்களால் நிம்மதியாக படுத்துறங்க முடியாது. நான்காவது மாதம்
முதல் வயிறு பெரிதாகத் தொடங்கும். அன்று முதல் குழந்தை பிறக்கும் நாள் வரை
அவர்களால் எந்த பக்கத்தில் சாய்ந்து படுத்தாலும் வயிற்றில் வலி
ஏற்படுமாம். அதுவும் ஏழாவது மாதம் முதல் குழந்தைக்கு வசதிப்படும்
வகையில்தான் படுக்க முடியும். அப்படி நேர்மாறாக படுத்தால் வயிற்றில்
இருக்கும் குழந்தை எட்டி உதைக்கத் தொடங்கி விடும். அந்த சுகமான
அனுபவத்துக்காக ஏங்கி காத்திருப்பாள் அந்த தாய்.

கொஞ்சம் கொஞ்சமாக
குழந்தை பிறக்கும் நாள் நெருங்கி விட்டால், அந்த தாயின் மனதில் பயம்
தொற்றிக் கொள்ளும். எத்தனை எத்தனையோ நம்பிக்கைகளை அவர்கள் மனதில்
புகுத்தினாலும், ஒருவித பயம் இருந்து கொண்டேதான் இருக்கும். குழந்தை
எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம், நல்லபடியாக நார்மலாக
குழந்தை பிறக்குமா என்ற கேள்வி வேறு மனதை உறுத்திக் கொண்டே இருக்கும்.
பிறக்கும் குழந்தை எந்தவித குறைபாடும் இன்றி பிறக்க வேண்டும் என்ற
வேண்டுதல் ஒரு பக்கமென்றால், குழந்தை பிறந்த பிறகு அதனை எப்படி வளர்ப்பது
என்ற டென்ஷன் இன்னொரு புறம் என மனதை குழப்பிக் கொண்டேதான் இருக்கும்.

ஒருவழியாக
நார்மலாகவோ, சிசேரியன் ஆபரேஷன் மூலமாகவோ குழந்தை பிறந்து, குவா குவா
சத்தம் காதில் விழுந்த பின்னர்தான் அந்த தாய் நமக்கு நல்லபடியாக குழந்தை
பிறந்து விட்டது என நினைத்து பூரிக்கிறாள்.

குழந்தை பிறக்கும்
தருவாயில் பெரும்பாலான பெண்கள் மயக்க நிலைக்கு சென்று விடுவார்களாம். அந்த
அரை மயக்கத்திலும் தாயை எழுப்பி, குழந்தையின் முகத்தை காட்டி விட்டுதான்
டெலிவரி ரூமில் இருந்து குழந்தையை வெளியே கொண்டு வருவார்கள் மருத்துவமனை
செவிலியர்கள்.

இப்படி உண்ணாமல், உறங்காமல் பெற்றெடுத்து, வளர்த்த
(குழந்தை வளர்க்கும்போது ஏற்படும் சந்தோஷங்கள் மற்றும் சிரமங்களை வேறொரு
பதிவில் விரிவாக எழுதுகிறேன்) குழந்தை வளர்ந்து பெரிய ஆளான பின்னர் என்னை
ஏன் பெற்றாய் என்று கேட்டால், அந்த தாயின் மனது எவ்வளவு கஷ்டப்படும்
என்பதை ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.

எனக்கு கல்யாணம்
முடிந்து ஒரு குழந்தைக்கு அப்பாவான பின்னரும் என் தாய்க்கு இன்னமும் நான்
குழந்தையாகவே தெரிகிறேன் என்பதை அவர்கள் எனக்கு போனிலும், நேரில்
செல்லும்போதும் சொல்லும் அட்வைஸ்களில் இருந்தே நெரிந்து கொள்ளலாம்.
வேலாவேளைக்கு நன்றாக சாப்பிடு, உடம்பை பார்த்துக் கொள், ரோட்டை கிராஸ்
பண்ணும்போது பார்த்து போகணும், வண்டியில் வேகமா போகாதே என்று சின்ன
பையனுக்கு சொல்வது போல இன்னமும் எனக்கு அட்வைஸ் மழையை பொழிந்து
கொண்டிருப்பார்கள்.

என்றென்றும் பிள்ளைகளுக்காக வாழும் அந்த மனித
தெய்வத்தைத் பார்த்து, என்னை ஏன் பெற்றாய்? என்று கேட்பதை இனியும்
தொடராதீர்கள் நண்பர்களே!!!
Raviravi
Raviravi
பண்பாளர்


பதிவுகள் : 101
இணைந்தது : 20/05/2009

Back to top Go down

பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Empty Re: பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி!

Post by ரூபன் Wed Jun 17, 2009 3:53 pm

சூப்பரோ சூப்பர் ரவிரவி எதுகும் இருக்கும் பொழுது தெரியாது இழந்தபின்தான்
அதனுடைய அருமை தெரியும். நான் சிறுவயதிலே இழந்தவன் எனக்குத்தெரியும்.
இருக்கும் போதே அன்பு சேய்யுங்கள்.


Last edited by ruban1 on Wed Jun 17, 2009 3:59 pm; edited 1 time in total
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Empty Re: பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி!

Post by ராஜா Wed Jun 17, 2009 3:58 pm

நீங்கள் கொடுத்து வைத்தவர் ரவி , நானும் ரூபன் போல் தாயை இழந்தவன். இருக்கும் போதே அன்பு காட்டுங்கள். தாய் ஒரு உயிருள்ள தெய்வம்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Empty Re: பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி!

Post by Guest Wed Jun 17, 2009 4:34 pm

உணர்வுடைய அ௫மையான கட்டுரை மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Empty Re: பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி!

Post by Guest Wed Jun 17, 2009 4:36 pm

நந்தா படத்துல இளையராஜா படிச்ச பாட்ட கேளுங்க அழுகை
avatar
Guest
Guest


Back to top Go down

பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Empty Re: பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி!

Post by Guest Wed Jun 17, 2009 4:39 pm

இன்னொ௫ பாட்டு என் தாயெனுங் கோயில...............................

அம்மாவைப் பத்தினாலே இளையராஜா தான்
avatar
Guest
Guest


Back to top Go down

பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Empty Re: பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி!

Post by Manik Wed Jun 17, 2009 6:46 pm

இதுக்காகத்தான் முன்னோர் தாயைப் பற்றி புகழ்ந்து பேசியிருக்கிறார்கள் அவர்களை பெருமைப் படுத்திருக்கிறார்கள். ஆனால் இன்றைய நிலைமை தாயை சிறுமைப் படுத்துகிறார்கள். இழிவு படுத்துகிறார்கள். இந்த தமிழ் நாட்டில் மட்டும் எத்தனை எத்தனை முதியோர் இல்லங்கள் உண்டு தெரியுமா அதில் உள்ள அத்தனை தாயும் கண்டிப்பாக ஒரு மகன் விரட்டியடிக்கப் பட்டவனாகத்தான் இருப்பாள். ஏனென்றால் மகளுக்குத் தெரியும் தாயின் அருமை அவளும் தாயாய் இருந்திருப்பாள் தானே.
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Empty Re: பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி!

Post by rikniz Wed Jun 17, 2009 8:04 pm

நன்றி Raviravi. அருமையோ அருமை இன்றைய இளைஞா் யுவதிகளுக்கு தாயின் சிறப்பு புாியாமல் அவா்களை சீற்றுகின்றாா்கள் ஒரு நாள் அவங்கள் இல்லையென்றால் அப்போது புாியும் அந்த உயிாின் மகிமை ”தாயே உன்னை மிஞ்சிய வேறொரு உறவு இங்கில்லை.
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Empty Re: பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி!

Post by amloo Wed Jun 17, 2009 9:00 pm

இது மட்டுமா..பிள்ளைகள் அம்மாவை ஒரு வேலை செய்யும் கருவியாக தான் பார்கின்றனர்..இதே நிலை அவர்களுக்கு ஒரு நாள் வரக்கூடும் என்பதனை உணர மறுக்கின்றனர்...
என்னைப் பொருத்த என் தாயை தான் எனக்கு எல்லாம்.எனக்கு ஒரு பிரட்சனை என்றாலே என் முகத்தை பார்த்தே கண்டும் பிடித்தும் விடுவார்.சண்டையிட்டாலும் நானே போய் பேசிவிடுவேன்...இவர் தான் என் அம்மா.....

[You must be registered and logged in to see this link.]

அவர் தான் என் அம்மாங்கோ...அம்மா கையில் நான்னுங்கோ...3 வயதில் எடுத்தது....:ட்


Last edited by amloo on Wed Mar 17, 2010 10:05 pm; edited 2 times in total
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Empty Re: பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி!

Post by xman2330 Fri Jun 26, 2009 7:50 pm

i like it
very good
thankz
avatar
xman2330
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 8
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! Empty Re: பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum