புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 9:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» கருத்துப்படம் 28/08/2024
by mohamed nizamudeen Today at 7:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:00 pm

» செய்திகள்- ஆகஸ்ட் 28
by ayyasamy ram Today at 6:41 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:02 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 3:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:31 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:48 am

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Today at 11:12 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Today at 11:10 am

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Today at 11:07 am

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Today at 11:05 am

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Today at 11:04 am

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Today at 11:03 am

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Today at 11:01 am

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Today at 10:57 am

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Today at 10:54 am

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Today at 10:52 am

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Today at 10:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Yesterday at 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்  Poll_c10குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்  Poll_m10குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்  Poll_c10 
44 Posts - 57%
ayyasamy ram
குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்  Poll_c10குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்  Poll_m10குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்  Poll_c10 
30 Posts - 39%
mohamed nizamudeen
குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்  Poll_c10குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்  Poll_m10குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்  Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்  Poll_c10குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்  Poll_m10குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்  Poll_c10குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்  Poll_m10குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்  Poll_c10 
467 Posts - 55%
heezulia
குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்  Poll_c10குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்  Poll_m10குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்  Poll_c10 
327 Posts - 38%
mohamed nizamudeen
குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்  Poll_c10குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்  Poll_m10குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்  Poll_c10 
27 Posts - 3%
prajai
குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்  Poll_c10குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்  Poll_m10குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்  Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்  Poll_c10குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்  Poll_m10குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்  Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்  Poll_c10குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்  Poll_m10குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்  Poll_c10 
5 Posts - 1%
mini
குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்  Poll_c10குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்  Poll_m10குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்  Poll_c10 
4 Posts - 0%
சுகவனேஷ்
குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்  Poll_c10குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்  Poll_m10குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்  Poll_c10 
4 Posts - 0%
vista
குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்  Poll_c10குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்  Poll_m10குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்  Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்  Poll_c10குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்  Poll_m10குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்


   
   
tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Posttdrajeswaran Thu Aug 12, 2010 10:10 pm

குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்

"மீனாட்சி, இந்தா உன் பையன் இந்தியாவிற்கு திரும்பி வருகிறானாம். கடிதம் போட்டிருக்கிறான். வந்து படித்துப் பார்" என் கணவர் உரக்க குரல் கொடுத்தார்.

நான் சமையலறையிருந்து வந்து கடிதத்தை வாங்கி படித்துப் பார்த்தேன்.

என் மகன் கோபியும் அவன் மனைவி மீனாவும் கடந்த மூன்று வருடங்களாக அமெரிக்காவில் இருக்கிறார்கள். அங்கே என் மகன் கைநிறைய சம்பளத்துடன் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்து வந்தான். சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு இந்தியா வந்து நாங்கள் பார்த்து வைத்திருந்த மீனாவை திருமணம் செய்து கொண்டு உடனே கூட அழைத்துக் கொண்டு போய் விட்டான். அவன் இப்போது கடிதம் எழுதியிருக்கிறான்.

"அம்மா, எல்லா டாக்டர்களையும் கேட்டு விட்டேன். எங்கள் உடம்பில் எந்த கோளாறும் இல்லையாம். மீனாவின் உடல்நிலை இந்த நாட்டு சீதோஷ்ணநிலைக்கு ஒத்து வரவில்லை என்றும் ஒரு வேளை இந்தியாவுக்கு சென்றால் குழந்தை பிறக்கும் வாய்ப்புகள் எற்படக் கூடும் என்றும் சொல்லி விட்டார்கள்.

எங்கள் கம்பெனியும் ஒரு தனி ஆபிஸை சென்னையில் திறக்க முடிவு செய்துருப்பதால் என்னை சென்னைக்கு போக முடியுமா என்று கேட்க நானும் ஒத்துக்கொண்டேன். இன்னும் மூன்று மாதத்தில் நாங்கள் சென்னைக்கு வந்து விடுவோம்.

சென்னையில் சற்று ஒதுக்குப்புறமாக இரண்டு அல்லது மூன்று கிரவுண்டு நிலத்தில் ஒரு தனி வீடாக பாருங்கள். வீட்டை சுற்றி நிறைய மரம் செடிகள் இருக்குமாறு பாருங்கள். இல்லை என்றாலும் பரவாயில்லை, நாம் வளர்த்துக் கொள்ளலாம். ஆனால் பக்கத்தில் ஒரு நல்ல பிரசவ ஆஸ்பத்திரி இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

பணத்தை பற்றி கவலைப்படவேண்டாம். வீடு உங்களுக்கு பிடித்து இருந்தால் அட்வான்ஸ் கொடுத்து விடுங்கள். நான் இந்தியா வந்ததும் ரிஜிஸ்ட்டர் பண்ணிக் கொள்ளலாம். மற்றப்படி ஒன்றும் இல்லை. இருவரும் உடம்பை ப்த்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்."

"என்னங்க, நல்ல விஷயமாக இருக்கிறதே, நாம் என்ன செய்யலாம்?" என்று கேட்டேன்.

"உன் தம்பி ரமேஷ் ஒரு ரியல் எஸ்டேட் எஜென்டாகதானே இருக்கிறான். அவனை கூப்பிட்டு விஷயத்தை சொல்லு" என்றார் என் கணவர்.

அப்படியே அவனை அழைத்து கோபியின் கடிதத்தை காண்பித்து ஒரு நல்ல விசாலமான வீடாக பார்க்கச் சொன்னேன்,

சுமார் 10 நாட்கள் கழித்து தம்பி வந்தான். வரும்போதே ஒரு வித தயக்கத்தோடு வந்தான். "என்னடா ரமேஷ், வீடு ஏதாவது பார்த்தாயா?" என்று கேட்டேன்.

"நீ கேட்ட மாதிரியே மூன்று கிரவுண்டு நிலத்தில் ஒரு பெரிய வீடு இருக்கிற்து அக்கா. ஆனால் அதில் ஒரு பிரச்சினை இருக்கிறது" என்றான்.

அதை கேட்டுக் கொண்டே என் கணவர் வந்து உட்கார்ந்தார். "முதலில் என்ன பிரச்சினை, சொல். விலை அதிகமா?" என்றார்.

"அதெல்லாம் ஒன்றும் இல்லை. விலை மிகவும் கம்மிதான். ஏனென்றால் அந்த வீட்டில் ஒரு பெண் தன் குழந்தையுடன் கொளுத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டாளாம். அந்த வீட்டில் யாரும் நீண்ட நாட்கள் குடியிருந்தது இல்லையாம். வீட்டின் பின்புறம் ஒரு பெரிய புளியமரம் இருக்கிறது. அதில்தான் அந்த பெண்ணின் பேய் இருப்பதாக சொல்லுகிறார்கள். இரண்டு மூன்று முறை அந்த மரத்தை வெட்ட முயற்சிகள் செய்தார்களாம். வெட்டும் ஆட்களுக்கு எதாவது ஒரு வகையில் பலத்த அடிப்பட்டு விடுகிறதாம். அதனால் யாரும் அந்த மரத்தை வெட்ட வர மாட்டேன் என்று சொல்கிறார்களாம்.

ஆனால் மற்றப்படி வீட்டில் குடியிருப்பவர்களுக்கு எந்த கெடுதலும் நேரவில்லையாம். நாம் அந்த வீட்டை வாங்கி அந்த பேயை அங்கிருந்து துரத்தி விட்டோமானால், ந்ல்ல அருமையான வீட்டை மலிவான விலையில் வாங்கியது போல ஆகும். சிறந்த முதலீடாக அமையும். பின்னால் அதன் மதிப்பு ப்ன்மடங்கு உயரும்." என்றான்.

"அய்யோ தம்பி! பேய் வீடு எல்லாம் நமக்கு வேண்டாம். மருமகள் வேறு குழந்தை பெற வேண்டும் என்று வருகிறாள். அப்புறம் முதலுக்கே மோசமாகிவிடும்." என்று அவசரம் அவசரமாக சொன்னேன்.

"சற்று பொறு மீனாட்சி! பேய் என்றதும் அலராதே. பேய் அங்கிருக்கிறது என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கும். அதுதான் யாருக்கும் கெடுதல் செய்யவில்லை என்கிறானே?" என்றார் அவர்.

"கெடுதல் செய்யவில்லையா? அவன் சொன்னதை என்ன கேட்டீர்கள். மரத்தை வெட்டியவர்களுக்கு அடிப்பட்டது என்று சொன்னானே?"

"தான் குடியிருக்கும் மரத்தை வெட்டினால் அது வேறு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்? சற்று யோசிப்பேம். நீ போய் ரமேஷ¤க்கு சாப்பிட ஏதாவது கொண்டு வா" என்றார்.

ஒரு தட்டில் பிஸ்கட்டும், கோப்பைகளில் காபியும் கொண்டு வந்து இருவருக்கும் கொடுத்தேன். காபியை சாப்பிட்டுக்கொண்டே அவர் சொன்னார். "இப்படி செய்தால் என்ன? எனது நண்பன் ராஜேஸ்வரன் ஒரு முறை அவனின் யோகா ஆசிரியர் சின்ன யோகீஸ்வரர் என்பவரை எனக்கு அறிமுகப்படுத்தினான். அவர் சூட்சும ச்க்திகளை காணக்கூடியவர் என்றும் அவைகளுடன் பேசக்கூடியவர் என்றும் சொன்னான். அவரிடம் எல்லா விஷயத்தையும் சொல்லி, அவரை அழைத்துக் கொண்டு அந்த வீட்டிற்கு போவோம். அவர் அந்த வீட்டைப் பார்த்து விட்டு வாங்க சொன்னால் வாங்கலாம். ஏதாவது சாங்கியம் செய்ய வேண்டும் என்று சொன்னாலும் செய்யலாம். இல்லை வேண்டாம் என்றால் விட்டு விடலாம். நீ என்ன நினைக்கிறாய்?" என்று கேட்டார்.

என் மனம் பெரிய வீடு மலிவாக கிடைக்கிறதே என்ற பேராசையில் ஊசலாடியது. "சரி அப்படியே செய்யலாம்" என்றேன்.

ஒரு நாள் நாங்கள் மூவரும் சென்று சின்ன யோகீஸ்வரரை சந்தித்தோம். எல்லாவற்றையும் விபரமாக சொல்லி அவருடைய உதவியை கேட்டோம். அவரும் பெருந்தன்மையுடன் சரி என்று ஒத்துக் கொண்டார்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை நாங்கள் நால்வரும் ஒரு காரில் பெருங்களத்தூரில் இருந்த அந்த வீட்டிற்கு சென்றோம். ரமேஷ் சொன்னப்படியே அந்த வீடும் சுற்றி இடமும் மிகவும் அற்புதமாக இருந்தன. வீடு சற்று பழையதாக இருந்தாலும் உறுதியாகவும் வாஸ்து சாஸ்திரத்தின் படியும் கட்டப்பட்டு இருந்தது.

வீட்டைச் சுற்றி நிறைய மரங்கள், செடிகள் இருந்தன. வீட்டை சுற்றி சுற்றி வந்தோம். வீட்டின் பின்புறம் ஒரு பிரமாண்டமான புளியமரம் இருந்தது. எனக்கு அதன் கிட்டவே போக பயமாக இருந்தது. சுற்றும் முற்றும், மரத்தின் மேலும் கீழும் பார்த்தேன். என் கண்ணுக்கு எதுவும் தெரியவில்லை. "என்ன பேயை தேடுகிறாயா?" என்று அவர் கிண்டல் பண்ணினார்.

யோகீஸ்வரர் மரத்தை சுற்றி வந்தார். அவர் தன்னுடன் கொண்டு வந்த துண்டை விரித்து மரத்தின் அடியே அமர்ந்தார். எங்களையும் உட்காரச் சொன்னார். ஊதுபத்திகளை கொளுத்தி வைத்தார். கண்களை மூடினார்.

அவ்வப்போது அவர் தலையும் கழுத்தும் அசைந்தது. யாரிடமோ மவுனமாக வாயை திறக்காமல் பேசுவது போல இருந்தது. சுமார் 20 நிமிடங்க்கள் கழித்து அவர் கண்களை திறந்தார். அவர் முகத்தில் மிகுந்த திருப்தி காணப்பட்டது. சற்று நேரம் மரத்தின் மேலே பார்த்து விட்டு என்னிடம் பேச ஆரம்பித்தார்.

"அம்மா, முதலில் நீங்கள் பயப்படத்தேவையில்லை. நீங்கள் ¨தைரியமாக இந்த வீட்டை வாங்கலாம். உங்கள் குடும்பத்தால்தான் இங்கு மகாதுன்பத்துடன் அலைந்துக் கொண்டு இருக்கும் ஒரு ஆவிக்கு விடுதலை கிடைக்கப்போகின்ற்து. அவசரப்படாமல் கேளுங்கள், சொல்லுகிறேன்.

"இந்த மரத்தில் இருப்பது வள்ளியம்மை என்ற பரிதாபத்திற்கு உரிய பெண்ணின் ஆவி. அவளும் அவள் கணவனும் 6 மாத குழந்தையும் இந்த வீட்டில் வசித்து வந்தார்கள். வசதிபடைத்த அவள் கணவன் ஒரு காரின் இரும்பு உருக்கு அச்சு பாகங்களை செய்து தரும் கம்பெனி நடத்திக் கொண்டு இருந்தான். ஒரு நாள் இரும்பு உருக்கும் உலை வெடித்து அந்த விபத்தில் அவன் இறந்து போய் விட்டான். அதை கேள்விப்பட்டதும் இந்தப் பெண் ஏதோ ஒரு உத்வேகத்தில் தன் மேலும் தன் பெண் குழந்தை மீதும் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டாள்.

தற்கொலை செய்து கொண்ட பிறகுதான் அவள் செய்த தவறு அவளுக்கு மேலே உள்ள சக்திகளால் சுட்டிக்காட்டப்பட்டது. அவளுக்கு விதித்த ஆயுள் முடியும்வரை அவள் இந்த உலகில் கிடந்து அவஸ்தை படவேண்டும் என்றும் சொல்லப்பட்டது. ஆனாலும் அவளால் இயலாத ஒரு நிலையில் உணர்ச்சி வேகத்தில் இதை செய்துக்கொண்டதால் ஒரு விதி விலக்கு அவளுக்கு கொடுக்கப்பட்டது,

அவள் தற்கொலை செய்துக் கொண்ட இந்த வீட்டில் ஒரு கரு உண்டாகி அது குழந்தையாக பிறந்தால் அவள் தன் பயணத்தை தொடரலாம் என்றும் சொல்லப்ப்ட்டது.

அது முதல் இந்த வள்ளியம்மை இங்கே காத்துக் கொண்டு இருக்கிறாள். இங்கு குடிவந்தவர்கள் எல்லாரும் ஒன்று வயதான முதியவர்களாக அல்லது சிறுவர்களாக இருந்ததால் இவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இப்போது நீங்கள் வரப்போவதை சொன்னதும் அவள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளாள். உங்கள் மருமகள் இங்கே வந்து கருவுற்றால் அவளையும் அவள் குழந்தையையும் பத்திரமாக பாதுகாப்பது என் பொறுப்பு என்று சொல்கிறாள். குழந்தை பிறந்ததும் எனக்கு பொங்கல் படைத்தால் நான் மகிழ்ச்சியோடு போய் விடுவேன் என்கிறாள். அடுத்த நாளே நீங்கள் மரத்தை வெட்டி விடலாம் என்றும் சொல்கிறாள்.

முடிவு செய்ய வேண்டியது நீங்கள்தான்!" என்று முடித்தார்.

எனக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. அவரைப் பார்த்தேன், அவர் தலையை ஆட்டினார். "அப்படியே ஆகட்டும் ஐயா, எங்களை நீங்கள் ஆசிர்வதிக்க வேண்டும்" என்று கூறி மூவரும் அவர் பாதங்களில் விழுந்து வணங்கினோம்.

இது நடந்த மூன்றாவது மாதம் நாங்கள் எல்லாரும் மகன், மருமகள் உட்பட, புதிய வீட்டில் கிரகப்பிரவேசம் பண்ணி குடிவந்தோம். நாட்கள் வெகு வேகமாக, சுகமாக ஓடின. கோபிக்கு கம்பெனி கார் கொடுத்து இருந்ததால் மிகுந்த உபயோகமாக இருந்தது.

கோபி சென்னைக்கு வந்த நாலாவது மாதம் மருமகள் கருவுற்றாள். டாக்டர் இதை உறுதி செய்த அன்று வீடே விழா கொண்டாடியது. நான் ச்ர்க்கரை பொங்கலும் வடையும் செய்து ஒரு தட்டில் வைத்து புளியமரத்து அடியில் வைத்து "அம்மா, வள்ளியம்மா, நீயும் நாங்களும் விரும்பியப்படி குழந்தை உண்டாகிவிட்டது. அது நலமாக பிரசவம் ஆக நீதான் துணையாக இருக்க வேண்டும்." என்று சொன்னேன். ஒரு வினாடி மரத்து இலைகள் எல்லாம் அசைந்தது போல இருந்தது.

நாட்கள் வெகு வேகமாக ஒடின. குழந்தை ஜனவரி மாதம் 20ம் தேதி வாக்கில் பிறக்ககூடும் என்று டாக்டர் தேதி குறித்துயிருந்தார். ஜனவரி மாதம் 5ம் தேதி கோபி அவசரமாக இரண்டு நாட்கள் அமெரிக்கா போக வேண்டி இருந்தது. பிரசவத்துக்கு இன்னும் 15 நாட்கள் இருக்கின்றனவே என்று சொல்லி அவன் கிளம்பி போய் விட்டான். ஜனவரி 10ம் தேதி ஈரோட்டில் ஒரு முக்கியமான கல்யாணம். 9ம் தேதி இரவு அவர் கிளம்பி போனார். 10ம் தேதி மாலை திரும்பிவிடுவேன் என்று சொல்லி அவரும் போய் விட்டார்.

அன்று இரவு நானும் மருமகளும் மட்டும் வீட்டில் இருந்தோம். இரண்டு பெரிய நாய்கள் இருந்ததால் எந்த பயமும் இல்லை. இரவு சாப்பிட்டு விட்டு மருமகள் அவள் அறையில் படுக்க போய் விட்டாள். நானும் 9 மணியளவில் சாப்பிட்டு விட்டு என் அறைக்கு சென்றேன்.

வழக்கம் போல டாக்டர் கொடுத்திருந்த தூக்க மாத்திரையை போட கையில் எடுத்தேன். ஏதோ ஒன்று என் கையை தட்டிவிட்டது போல இருந்தது. மாத்திரை கீழே விழுந்தது. அதை எடுக்க நான் குனிந்த போது "வேண்டாம். இன்று மாத்திரை வேண்டாம். போய் மருமகளோடு படுத்துக் கொள்" யாரோ காதில் சொல்வது போல இருந்தது.

நானும் மாத்திரையை எடுத்து வைத்து விட்டு அவள் அறைக்கு சென்று கீழே படுக்கை விரித்து படுத்துக் கொண்டேன். "ஏன் அத்தை, இன்று ஒன்றும் பிரச்சனை இல்லை. நீங்கள் பயப்படாமல் உங்கள் அறையிலேயே படுத்துக் கொள்ளுங்கள்" என்றாள்.


"இல்லையம்மா, நான் இங்கேயே படுத்துக் கொள்கிறேன்" என்று சொல்லி படுத்து தூங்கி விட்டேன். இரவு மூன்று மணி இருக்கும். "அத்தை, அத்தை, எழுந்திருங்கள். என் வயிற்றில் ஏதோ செய்கிறது. வலிக்கிறது" என்று என்னை உலுக்கி எழுப்பினாள்.

எழுந்து பார்த்தால் அவள் பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டு இருந்தாள். எப்படி இது சாத்தியம் என்று யோசிக்க கூட நேரம் இல்லை. உடனே தம்பிக்கு போன் போட்டு சீக்கிரம் வரச்சொன்னேன். ஆஸ்பத்திரிக்கும் டாக்டருக்கும் போன் பண்ணி மீனாவை அழைத்து வரும் தகவலை சொன்னேன்.

நல்ல காலம் தம்பி கூடுவாஞ்சேரியில் இருந்ததால் 20 நிமிடத்தில் காரில் வந்து விட்டான். மருமகளை கொண்டு போய் தாம்பரம் லலிதா நர்ஸிங்ஹோமில் சேர்த்தோம். அங்கே டாக்டர்கள் தயாராக இருந்தார்கள். மீனாவை செக் பண்ணிப் பார்த்து விட்டு உடனே ஆபரேஷன் அறைக்கு அழைத்துச் சென்று விட்டார்கள்.

முப்பது நிமிடங்களில் வெளியே வந்த டாக்டர் லலிதா " நல்ல வேளை, உடனே கொண்டு வந்தீர்கள். குழந்தையின் கழுத்து நஞ்சுக் கொடியில் சிக்கியிருந்தது. நீங்கள் தாமதம் பண்ணியிருந்தால் குழந்தையை காப்பாற்றியிருக்க முடியாது. இப்போது தாயும் குழந்தையும் நலமாக இருக்கிறார்கள். ரூமுக்கு வந்த பிறகு போய் பாருங்கள்" என்றார்.

என் நெஞ்சு நன்றியினால் நிரம்பி வழிந்தது. நான் தூக்க மாத்திரையை போட்டு என் அறையில் படுத்து இருந்தால் ...... நினைக்கவே பயமாக இருந்தது. "ஆம், வள்ளியம்மை! எங்களை விட குழந்தை நல்ல படியாக பிறக்க வேண்டும் என்பதில் உனக்குத்தான் எத்தனை அக்கறை, நன்றி தாயே" மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்.

மறுநாள் விடியற்காலையில் வெல்லப் பொங்கல், வடை, பாயசம் அனைத்தும் செய்து தட்டில் வைத்து புளியமரத்தின் அடியில் வைத்து வள்ளியம்மைக்கு படைத்தேன். மரத்தை சுற்றி வந்து வணங்கினேன்.

அதற்கு அடுத்த நாள் நான்கு ஆட்கள் தகுந்த ஆயுதங்களுடன் வந்து புளியமரத்தை துண்டு துண்டாக வெட்டி வண்டியில் எடுத்துப் போய் விட்டார்கள்.

இப்போதெல்லாம் குழந்தையை எடுத்துக் கொண்டு தோட்டத்தில் உலவும் போது, அந்த புளியமரம் இருந்த வெற்றிடத்தை பார்க்கும் போது, ஏனோ நெஞ்சு அடைப்பது போல இருக்கிறது. அது துக்கமா இல்லை ஆனந்தமா என்று தான் எனக்கு தெரியவில்லை!


'ஆவிகள் உலகம்' ஜுன் 2010

tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Posttdrajeswaran Thu Aug 12, 2010 10:16 pm

அன்பு நண்பர் சிவா, தங்கள் உதவிக்கு மிகுந்த, மிகுந்த நன்றி! என் வேலையை எவ்வளவு இலகுவாக்கி விட்டீர்கள். நன்றி !!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 12, 2010 10:20 pm

ஆவிகள் நன்மைகளை செய்வதையே விரும்புகின்றன என்று அழகாக கூறியுள்ளீர்கள்! நம் முன்னோர்களின் ஆவிகள் மூலம் வரவிருக்கும் ஆபத்துகளை நாம் அறிந்து கொள்ளலாம்! அதற்கு முறைப்படி அவர்களை வழிபட்டு வருவது அவசியம்!

இதுபோன்ற தங்களின் சிறப்பான படைப்புகளை மேலும் வழங்கிட வேண்டுகிறேன்! பகிர்வுக்கு நன்றி!



குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 12, 2010 10:22 pm

tdrajeswaran wrote:அன்பு நண்பர் சிவா, தங்கள் உதவிக்கு மிகுந்த, மிகுந்த நன்றி! என் வேலையை எவ்வளவு இலகுவாக்கி விட்டீர்கள். நன்றி !!

உங்களுக்கு உதவி செய்யத்தானே நான் இருக்கிறேன்! இன்னும் எவ்வளவு பதிவுகள் இருந்தாலும் அனுப்பி வையுங்கள்!



குழந்தையின் பிறப்பும் ஆவியின் விடுதலையும்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக