ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுனாமி

2 posters

Go down

சுனாமி Empty சுனாமி

Post by ஹனி Wed 31 Mar 2010 - 15:57

கடந்த 2004 டிசம்பர் 26ம் திகதி இலங்கை வரலாற்றில் ஒரு மறக்க முடியாத நாளாகும்.
வரலாற்றுப் பதிவுகளின் படி கடந்த 250 ஆண்டுகளில் ஏற்ப்பட்ட சுனாமி அலைகளில் முதலிடம் பெறுவது 2004ல் ஆசியாவையே உலுக்கிச் சென்ற சுனாமிகளின் அழிவுகளாகும். இவ் இராட்சத அலைகளினால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சமாகும். அத்தோடு பாரிய சேதங்களையும் இவ்வலை ஏற்படுத்திச் சென்றுள்ளது. புவியியலாலர்களினால் பயன் படுத்துகின்ற கலைச் சொல்லான சுனாமி ஜப்பானியர்கள் இட்ட பெயராகும். ஜப்பானிய மொழியில் இது துறைமுக அலை என பொருள் படும்.

சுனாமி தோன்றுவது எவ்வாறு?

கடல் நீரினுள் ஏற்படும் வித்தியாசங்களே சுனாமி அலைகளை தோற்றுவிக்கின்றன. கடலின் அடித்தள்த்தில் ஏற்படும் புவி நடுக்கம் கடலால் சூழப்பட்ட ஒரு தீவில் ஏற்படும் எரிமலைக் குமுரல் அணுகுண்டு பரிசோதனை உள்ளிட்ட யாதேனும் ஒரு பாரிய வெடிப்பொலி விண்ணைக் கடந்து செல்லும் எரி நட்சத்திரம் ஒன்று அல்லது குறுங்கோள் ஒன்று உடைந்து வீழ்வதால் ஏற்படக் கூடிய ஒரு பதட்ட நிலை அல்லது நிழ பிளவு கடலுக்கடியில் அல்லது கடலோரப் பகுதியில் கடலலை நோக்கி ஏற்படும் பாரியதொரு மண் சரிவு அல்லது பனிச் சரிவு போன்ரவை காரணமாகவே சுனாமி அலை தோன்றுகின்றது. கடந்த சுனாமி அலைக்கும் நில நடுக்கமே காரணமாக அமைந்துள்ளது.


புவி நடுக்கம் காரணமாக சுனாமி

இயற்கைக் காரணிகளால் புவியோட்டின் ஒரு பகுதி சடுதியாக அசைவதைப் புவிநடுக்கம்
எனலாம்.புவியின் ஆழத்திலுள்ள பாறைகளின் புவிச்சரிதச் செயன்முறைகளால் உருவாகும்
அகவிசைகளினால் பலமான அழுத்தம் பிரயோகிக்கப்படும்போது அதைத் தாங்க முடியாத நிலை எற்படும் வேளையில் அப் பாறைகள் சடுதியாக முறிவடையும் அப்போது ஏற்படும்
அதிர்ச்சி அவ்விடத்திலிருந்து கடத்தப் பட்டு பரவிச் செல்கையில் புவிநடுக்கம் உருவாகின்றது.இது புவியில் அடிக்கடி நிகழும் ஒரு நிகழ்வாகும். எனினும் எல்லா பூகம்பங்களும் பாரியளவு சேதத்தினை உண்டாக்குவதில்லை. அதிக ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படுகின்ற போதே அது பெரும் அழிவை ஏற்படுத்துகின்றது.புவி நடுக்கம் நிலப்பகுதியில் ஏற்பட்டால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து சேதமாகின்றது.கடலுக்கடியில்
நிலநடுக்கம் ஏற்படுகின்ற போது சுனாமி அலையை தோற்றுவிக்கின்றது. கடலிற்குள் 07 ரிச்டர் அளவிலும் கூடுதலாக நிலநடுக்கம் ஏற்படுகின்ற போதுதான் சுனாமி அலை தோன்றுகின்றது. அது மட்டுமன்றி சுனாமியை தோற்றுவிக்க பின்வருகின்ற காரணிகளுடன்
நிலநடுக்கம் ஏற்பட வேண்டும்.


01.கடலடியில் 10 கிலோ மீற்றருக்குள் உள்ள ஆழத்தில் நில நடுக்கம் ஏற்பட வேண்டும். மிகவும் ஆழத்தில் ஏற்படுமாயின் சுனாமி தோன்ற வாய்ப்பில்லை.

02.நிலத்தின் வெடிப்பு செங்குத்தாக அமைந்திருத்தல் வேண்டும்.பக்கவாட்டில் வெடிப்பு அமை யுமாயின் சுனாமி தோன்றவாய்ப்பில்லை

03.பாரிய அளவிலான சக்தி வெளியேற்றப் பட வேண்டும்.

04.உருவாகும் சுனாமியின் அலை திசை எப்பக்கம் உள்ளதோ அதன் அடிப்படையிலேயே அனர்த்தம் உருவாகும்.

05.உருவாகும் அலையின் நீள, அகலங்களுக்கேற்ப சுனாமி உருவாகும்.

06.உருவாகும் அலையின் வேகம் அதன் அனர்த்தத் தன்மையை தோற்றுவிக்கும்.

டிசம்பர் 26ல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்திற்குக் காரணம் புவிநடுக்கமாகும்.இதன் குவிவு மையம் இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவின் மேற்குக் கரையிலிருந்து சுமார் 160 கி.மீ
தூரத்தில் ஏறத்தாழ 30 கி.மீ ஆழத்தில் காணப் பட்டது. இப் புவி நடுக்கத்தின் போது இந்திய
கவசத் தகடு பர்மா மைக்றோத் தகட்டின் கீழ் அமைந்தமையால் பெருமளவு சக்தி வெளியேற்றப்பட்டதுடன் பாரியளவு சமுத்திர நீர் இடம் பெயர்க்கப்பட்டதால் உருவானதே சுனாமி அலையாகும்.இப் புவி நடுக்கத்தின் விளைவாக வெளியிடப்பட்ட சக்தி 32000 மெகா
தொன் ரி என் ரி என்று கூறப்படுகின்றது. இது ஒரு பாரியளவு சக்தியாகும். இறுதியான
கணிப்பீட்டின் படி புவி நடுக்கம் ரிச்டர் அளவில் 09 எனக் கணிக்கப்பட்டுள்ளது.இது வரை உலகில் பதிவு செய்யப் பட்டுள்ள நில நடுக்கங்களில் இது இரண்டவது பெரிய நிலநடுக்கமாகும். உலகில் மிகப் பெரிய நிலநடுக்கம்1960ல் சிலியில் ஏற்பட்டதாகும். இது 9.5
ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது.இதனால் உருவான சுனாமி 17000 கீ.மீ தூரத்தை 22 மணித்தியாலத்தில் கடந்து சென்று ஜப்பானிலுள்ள ஹொன்சூ தீவைத் தாக்கியது.2004 டிசம்பர் சுனாமியின் போது இறந்தோர் எண்ணிக்கை 300,000 ஆகும்.

மிக வேகமாக பயணிக்கும் சுனாமி அலைகள் கரையோரப் பகுதியிலேயே கோரவடிவம் எடுக்கின்றன. கரையை அடையும் வேகமான அலைகள் கடற்கரைப் பகுதிகளில் உள்ள பாறைகளின் சரிவிற்க்கேற்ப்ப மாற்றமடையும். கரையில் ஒன்றோடொன்று பின்னோக்கித் தள்ளப்படும். அலைகள் ஒன்ரினையும் போது அதன் சுழற்ச்சியின் வேகமும் அலையின் உயரமும் அதிகரிக்கும். அலைக்கூட்டங்கள் இவ்வாறு அடுத்தடுத்துத் தாக்க 15 நிமிட இடைவெளியாவது தாக்கும்.

சுனாமி அலைகளின் கால அளவு 05 நிமிடத்துக்கும் 60 நிமிடத்துக்கும் இடையில் அமையும். சில வேளைகலில் 2மணித்தியாலம் வரை செல்லலாம். 10 - 30 நிமிடம் வரையான கால அளவே பொதுவாக உள்ளது. கால அளவு 20 நிமிடம் எனின் முதல் அலைகள் வந்து 10 நிமிடங்களின் பின்னரே மற்றய அலை கரையை அடையும். எனவே சுனாமி தாக்கிய பிரதேசத்தில் முழு ஆபத்தும் கடந்து செல்ல பல மணித்தியாலம் எடுக்கும்.

சுனாமி அலை உருவாதற்க்கு முன்னர் ஏழு ரிச்ட்டர்க்கு மேல் நில நடுக்கம் ஏற்ப்பட்ட பின்னர் கடலில் வழமைக்கு மாறான சில செயற்ப்பாடுகளை கானலாம். அதாவது:

*கடல் வற்றி 100 - 200 அடிவரை உள்ப்பக்கமாக கடல் நீர் செல்லுதல்.
*பாரிய வெடிச் சத்தம் கடற்ப்பக்கமாக உருவாகுதல்.
*மேகம் முழு நீல நிறமாக இருப்பதோடு இடையிடையே வெள்ளைக் கோடுகள் தோன்ருதல்.
*கடற்பரப்பில் இருந்து விலங்கினங்கள் தூர விலகிச் செல்லுதல். ( இது விஞ்ஞான ரீதியாக இல்லை ) இவ்வாறான செயர்ப்பாடுகள் தோன்ரும் வேலையில் சுனாமி அலைகள் உருவாகும்.

இவ்வாறான அசாதாரண நிலை ஏற்ப்படுகின்ற போது கடற்ப் பரப்பில் இருந்து. இரண்டு km தூரம் விலகிச் செல்லல் சாலச் சிறந்ததாகும்.
உலகில்


சுனாமி Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

சுனாமி Empty Re: சுனாமி

Post by kalaimoon70 Wed 31 Mar 2010 - 16:01

அறியவேண்டிய தகவல் . சுனாமி 678642 சுனாமி 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum