புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_c10அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_m10அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_c10 
90 Posts - 77%
heezulia
அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_c10அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_m10அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_c10அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_m10அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_c10அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_m10அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_c10அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_m10அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_c10அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_m10அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_c10அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_m10அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_c10 
255 Posts - 77%
heezulia
அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_c10அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_m10அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_c10அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_m10அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_c10அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_m10அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_c10 
8 Posts - 2%
prajai
அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_c10அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_m10அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_c10அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_m10அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_c10அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_m10அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_c10அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_m10அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_c10 
3 Posts - 1%
Barushree
அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_c10அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_m10அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_c10அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_m10அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைவரும் படிக்கவேண்டிய ஓன்று


   
   
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Wed Mar 31, 2010 2:50 pm

நாள்: நவம்பர் 20, 2003

இடம்: திருமலை-திருப்பதி

செய்தி: குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், திருமலையில் வழிபாடு.

பைந்தமிழால் பாமாலை சூட்டி, ஆழ்வார்கள் உள்ளம் உருகிய இடம். தமிழிசையால் இறைவனைத் தாலாட்டி மகிழ்ந்த இடம். தெழி குரல் அருவித் திருவேங்கடம்! - இன்று பணக்காரத் தோற்றம் காட்டினாலும், அதன் ஆன்மா என்றுமே எளிய பக்தி மட்டும் தான்! “எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே!” என்பது ஆழ்வாரின் உள்ளக் கிடக்கை!



இப்படி மானுடம், தமிழ் என்று இரண்டிற்கும் பொதுவாய் நிற்கும் திருமலை நாயகன், நம் அப்துல் கலாம் ஐயாவையும் கவர்ந்ததில் வியப்பேதும் இல்லையே! முன்பு ராபர்ட் க்ளைவ், தாமஸ் மன்றோ, பீவி நாஞ்சாரம்மா, பீதா பீவி என்று அனைவரையும் கவர்ந்தவன் தானே அவன்!



அதனால் தான் போலும், அவன் அனுபவத்தை நேரிலே பெறுவதற்காகத் திருமலைக்கு வருகை புரிந்தார் நாட்டின் முதற் குடிமகன். ஆனால் அடியவர்களுக்கும், பக்தர்களுக்கும் தன் வருகையின் படோபடத்தால், தொல்லை தர விரும்பவில்லை அவர். அதனால் விடியற்காலை, வைகறைப் பூசைகளில் மட்டும் கலந்து கொண்டார். நாட்டின் மன்னருக்கு அளிக்கப்படும் “இஸ்டி-கபால்” மரியாதைகள் தரப்பட்டு, ராஜகோபுரத்தின் அருகே வரவேற்கப்பட்டார்.



இனி என்ன? நேரே தரிசனம் தான்!



ஆனால் கலாம் தயங்கி தயங்கி நிற்கிறார். அதிகாரிகளே “அதை” மறந்து விட்டார்கள்! ஆனால் இது பற்றி எல்லாம் முன்பே தெரிந்து கொண்டு வருபவர் தானே நம் தலைவர்!



“எங்கே… அந்த கையெழுத்துப் புத்தகம்? கொண்டு வாருங்கள்” என்று கேட்டு வாங்கிக் கொள்கிறார். மாற்று மதத்தினராய் இருப்பதால், ஆலயத்தில் அதன் கோட்பாடுகளுக்குக் குந்தகம் வாராது, இறை தரிசனம் செய்ய விழைகிறேன் என்று படிவத்தில் கையொப்பம் இடுகிறார்!



இப்படி ஒரு வழக்கம் தேவையா? இது போல் ஆகமங்களில் கூடச் சொல்லப்படவில்லையே! இது அவரவர் அந்தந்த ஆலயங்களுக்கு ஏற்படுத்திக் கொண்ட விதிகள் தானே!



முன்பு முகம்மதிய மன்னராட்சிக் காலத்தில்…. திருவரங்கம் படையெடுப்பு, திருப்பதி கோவில் கொள்ளை, ஆலயங்களுக்குத் திறை வசூல், மறுத்தால் கோவில் உடைப்பு என்றெல்லாம் இருந்த போது, ஆலய நிர்வாகிகள் அமைத்த சட்டதிட்டம். ஐயா சாமீ….நீ உள்ளே வந்து உயிரை வாங்காதே-உனக்குக் கட்ட வேண்டிய கப்பத்தைப் பக்தர்களிடம் வசூலித்துக் கட்டி விடுகிறோம், என்று “அக்ரீமெண்ட்” அவலம்!



அப்போது கூட ஜீயர்கள் என்னும் வைணவத் துறவிகள், இதனால் உண்மையான மாற்றுமத பக்தர்கள் உள்ளே வந்து பெருமானைச் சேவிக்க முடியாது போய் விடுமே என்று எண்ணினர்; அதிகாரிகளிடம் சொல்லி ஒரு மாற்று ஏற்பாடு செய்தனர். அது தான் இந்தக் கையொப்பப் படிவம்! உறுதிமொழி வாங்கிக் கொண்டு உள்ளே விடுவது!



துலுக்கா நாச்சியார் என்ற இஸ்லாத்தின் பெண்மணி, இறைவனைக் கண்டு மோகித்த போது, உள்ளே அனுமதி மறுத்தாரா இராமானுசர்? இல்லையே! அவளுக்குத் தனிச் சந்நிதி அல்லவோ கண்டார்!



அவர் வழி வந்த ஜீயர்கள், அரசியல் அவலத்தால் அன்பர்கள் அல்லல்படக் கூடாது என்று இந்த மாற்று வழி கண்டனர்!



பின்னர் காலம் உருண்டோடியது! முகம்மதிய சுல்தான்களின் ஆட்சி எல்லாம் போயே போய் விட்டது! ஆனால் வழக்கத்தை மட்டும் மாற்ற யாருக்கும் தோன்றவே இல்லை! மறந்தே போனது!



மடத்தில், பூனையின் தொல்லை அதிகம் இருந்ததால், அதைத் தூணில் கட்டிவிட்டு பாடம் எடுத்தார் ஒரு குரு. அவருக்குப் பின் வந்தவர்கள் காலத்தில், பூனைகள் தொல்லையே மடத்தில் சுத்தமாய் இல்லை. இருந்தாலும் எங்கிருந்தோ தேடிப் பிடித்து, ஒரு பூனையைக் கொண்டு வந்து தூணில் கட்டி விட்டுத் தான் பூசைகளை ஆரம்பித்தார்களாம்:-) அந்தக் கதை ஆகி விட்டது!



இது போன்ற விடயங்கள் இப்போது பெரும் பிரச்சனையாகக் கிளம்பி, ஆளாளுக்கு அரசியல் பண்ணத் துவங்கி விட்டார்கள்! அரசியல் சட்டங்கள் கூட மாற்றமும் திருத்தமும் பெறுகின்றன. ஆனால் அவை எப்போது செல்லும் என்றால்,…. அதை மக்கள் பிரதிநிதிகள், தாங்களாகவே அவையில் கொண்டுவர வேண்டும்.



அதே போல் தான், கால வழக்கமாக ஏற்பட்ட ஆலய விதிகளும்; அவை திருத்தப்படலாம். ஆனால் அவற்றை வெளியில் இருந்து திணித்தால் வம்பு தும்புகள் தான் பறக்கும். அவரவரே செய்ய வேண்டும்!



ஆன்மிகப் பெரியவர்களும், மடங்களும், ஆலய நற்பணி மன்றங்களும் சேர்ந்து கலந்துரையாடினால் ஒரு நல்ல வழி கிடைக்கும்! எல்லாரையும் கூட்டுவது சிரமம் என்றால்…பெருமைக்குரிய மடங்கள் ஒரு சிலவாவது, இதற்கு முன் முயற்சிகள் எடுக்க வேண்டும்! ஒன்றைப் பார்த்து படிப்படியாக இன்னொன்றும் தெளிவு பெறும்!



இராமானுசர் வழியில், அனைத்துச் சாதி-அர்ச்சகர்கள் பயிற்சித் திட்டம் போன்ற நல்ல மறுமலர்ச்சிகளைக் காலம் காலமாகச் செய்து வரும் திரிதண்டி சின்ன நாராயண ஜீயர், முதல்வர் கலைஞரின் மதிப்பைப் பெற்ற திருவரங்கம் எம்பெருமானார் ஜீயர், மற்றும் பரனூர் அண்ணா கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் போன்றோர் இது போன்ற முன்முயற்சிகளைக் கைக்கொள்ள வேண்டும்! - இவர்கள் எல்லாம் ஒரு unifying Force என்னும் ஒருங்கிணைப்பு சக்தியாகச் செயல்பட்டால், இதை எளிதில் தீர்த்து விடலாம்!



சரி, நாம் அப்துல் கலாமுக்குத் திரும்பி வருவோம்! நல்ல மனிதரான கலாம் இதை வைத்து அரசியல் செய்யவில்லை. அதிகாரம் காட்டவில்லை! அதிகாரிகள் மறந்தால் கூடத் தாமே கேட்டு வாங்கி, இருக்கும் விதியைக் கடைப்பிடிக்கிறார். உண்மையான, உள்ளார்ந்த பக்தர்களின் நற்குணம் இது! அவர்கள் நோக்கம் இறை தரிசனம் மட்டுமே! ஆலயத்தில் இறைவனை மட்டுமே அடியவர்கள் முன்னிறுத்துகிறார்கள்! இறைவனோ அடியவரை முன்னிறுத்துகிறான்.



வரவேற்பு எல்லாம் முடிந்து, பங்காரு வாகிலி எனப்படும் பொன் வாயிலைக் கடந்து அழைத்துச் செல்கிறார்கள், அப்துல் கலாமை! படியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே என்று பாடியது போல், படி அருகே நின்று விழிகளால் பரந்தாமனைப் பருகாதார் யார்?



கலாம் என்ன நினைத்தாரோ, என்ன வேண்டினாரோ, எப்படி வழிபட்டாரோ, நாம் அறியோம்! சுமார் பத்து நிமிடங்கள், ஆழ்வார்களின் பாசுரங்கள் முழங்க, வழிபாடு. முடித்துக் கொண்டு, தீர்த்தமும் திருப்பாதமான சடாரியும் பெற்றுக் கொண்டு, வலம் வருகிறார் கலாம். உண்டியலில் காணிக்கையும் செலுத்துகிறார்.



அங்கே ரங்கநாயக மண்டபத்தில் மரியாதைகள் செய்யக் காத்து இருக்கிறார்கள் கோவில் அலுவலர்கள்! திருமலையில் எப்பேர்ப்பட்ட விஐபி-க்கும் மாலைகள் போட்டு மரியாதை கிடையாது! மாலைகளும் மலர்களும் ஆண்டாள் சூடிக் கொடுத்தவை அல்லவா? அவை எம்பெருமானுக்கு மட்டுமே உரியவை! – இது இந்த ஆலயத்தின் சம்பிரதாயம்!



அதனால் லட்டு/வடை பிரசாதமும், வஸ்திரம் என்கிற பட்டுத்துணியும் அர்ச்சகர்கள் வாழ்த்திக் கொடுக்கிறார்கள்! அப்போது தான் அப்துல் கலாம் குண்டைத் தூக்கிப் போட்டார்! :



வேத ஆசிர் வசனம் என்ற சுலோகங்கள் உள்ளதே! அதை ஓதி வாழ்த்தும் போது, நம் தேசத்தின் பேரைச் சொல்லி, “இந்தியா” என்று வாழ்த்திக் கொடுங்களேன்! நாட்டுக்காக ஆசிர்வாத மந்திரம் சொல்லுங்களேன், என்று அர்ச்சகர்களைக் கேட்டுக் கொண்டார்…



யாருக்கும் முகத்தில் ஈயாடவில்லை! அருகில் இருந்த ஆளுநர் பர்னாலாவுக்கும், முதல்வர் நாயுடு காருவுக்கும் தான்! அட, இந்த மனுசனுக்கு எப்படி இது தெரிந்தது என்ற வியப்பா! இல்லை இது வரை யாரும் இப்படிக் கேட்டுப் பெற்றதில்லை என்ற திகைப்பா? “இந்தியா” என்ற பெயருக்குத் திருமலைக் கோவிலில் நடந்த அர்ச்சனை இதுவே முதல் முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன்!



அருகில் சேஷாத்ரி என்ற அர்ச்சகர்/பாரபத்யகாரர் இருந்தார். அவரிடம் தன் பாக்கெட்டில் இருந்து ரூ.600 பணம் எடுத்துக் கொடுத்து, மூன்று சகஸ்ரநாம அர்ச்சனைச் சீட்டுகளை வாங்கச் சொன்னார் கலாம். இது போன்று அர்ச்சனை செய்ய 200 ரூபாய் கட்டணம் செலுத்தி இருக்க வேண்டும்.



எங்கேயோ முகம் தெரியாமல் வறுமையில் வாடும் ஏழை இந்தியன் ஒருவன். அவனுக்குத் தன் பெயர் சொல்லி, தன் நல்வாழ்வுக்கு அர்ச்சனை செய்து கொள்ள முடியுமோ என்னவோ,….அதுவும் திருவேங்கடமுடையான் சன்னிதியில்! பொத்தாம் பொதுவாக, அவர்களை எல்லாம் நினைத்து சங்கல்பம் செய்து கொண்டு, அர்ச்சனை செய்து வைக்குமாறு சொன்னார் கலாம்! அர்ச்சகர்களும் மறுநாள் காலை செய்து வைத்தனர்!



கோவில்களில் ட்யூப்லைட்-டில் கூட உபயம் என்று தன் பெயரை ஒட்டி வைத்து, வரும் கொஞ்ச நஞ்ச வெளிச்சத்தையும் மங்கலாக்கும் ஆசாமிகள் எத்தனை பேர் உள்ளனர்! :-) தன் குடும்பம், தன் பெண்டு, தன் பிள்ளையின் பேரில் தான் அர்ச்சனை செய்து பார்த்துள்ளோம். இல்லைன்னா சுவாமி பேருக்கே அர்ச்சனை என்பார்கள் சிலர்! ஆனால் இப்படியும் ஒரு அர்ச்சனையா? – அந்த நாள், கோவில் பட்டர்களுக்கே சற்று வித்தியாசமான நாளாகத் தான் இருந்திருக்கும்!



பலரும் அப்துல் கலாமை, ஒரு விஞ்ஞானி, தேசபக்தர், மனித நேயர், நல்ல மேலாளர், கல்வியாளர், குழந்தைப் பாசம் கொண்டவர், எளிமைப் பண்பாளர், இயற்கை ஆர்வலர், குடியரசுத் தலைவர் என்று தான் பார்த்திருப்பார்கள்! சற்றே வித்தியாசமாக, திருவேங்கட மலையில் அப்துல் கலாமைக் கண்டதே இந்தப் பதிவு!



அவர் ஒய்வு பெறும் இந்த வேளையில்…. அவர் ஓய்வு தான் பெறுகிறாரா……இல்லை அவரை வைத்து இவர்கள் ஆட்டம் போட எண்ணுகிறார்களா….தெரியவில்லை! எது எப்படியோ….. அவர் முதலாம் பதவிக் காலத்துக்கு விடைகொடு விழா!



வாழ்கநீ எம்மான்! இந்த

வையத்து நாட்டில் எல்லாம்,

தாழ்வுற்ற தோற்றம் போல்

தோன்றிய பாரதத்தை

ஆழ்வுற்று கனவு கண்டு

அனைவரும் நாடச் செய்து

வாழ்விக்க வந்த கலாம்

வாழ்கநீ வாழ்க வாழ்க



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
avatar
Devappriya
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

PostDevappriya Wed Mar 31, 2010 2:54 pm

நற்சான்று மனிதனுக்கு மதம் ஒரு தடையில்ல..

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக