புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
1917-இந்த ஆண்டு தான் உலக சரித்திரத்தையே மாற்றி எழுதிய வருடம். Poll_c101917-இந்த ஆண்டு தான் உலக சரித்திரத்தையே மாற்றி எழுதிய வருடம். Poll_m101917-இந்த ஆண்டு தான் உலக சரித்திரத்தையே மாற்றி எழுதிய வருடம். Poll_c10 
366 Posts - 49%
heezulia
1917-இந்த ஆண்டு தான் உலக சரித்திரத்தையே மாற்றி எழுதிய வருடம். Poll_c101917-இந்த ஆண்டு தான் உலக சரித்திரத்தையே மாற்றி எழுதிய வருடம். Poll_m101917-இந்த ஆண்டு தான் உலக சரித்திரத்தையே மாற்றி எழுதிய வருடம். Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
1917-இந்த ஆண்டு தான் உலக சரித்திரத்தையே மாற்றி எழுதிய வருடம். Poll_c101917-இந்த ஆண்டு தான் உலக சரித்திரத்தையே மாற்றி எழுதிய வருடம். Poll_m101917-இந்த ஆண்டு தான் உலக சரித்திரத்தையே மாற்றி எழுதிய வருடம். Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
1917-இந்த ஆண்டு தான் உலக சரித்திரத்தையே மாற்றி எழுதிய வருடம். Poll_c101917-இந்த ஆண்டு தான் உலக சரித்திரத்தையே மாற்றி எழுதிய வருடம். Poll_m101917-இந்த ஆண்டு தான் உலக சரித்திரத்தையே மாற்றி எழுதிய வருடம். Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
1917-இந்த ஆண்டு தான் உலக சரித்திரத்தையே மாற்றி எழுதிய வருடம். Poll_c101917-இந்த ஆண்டு தான் உலக சரித்திரத்தையே மாற்றி எழுதிய வருடம். Poll_m101917-இந்த ஆண்டு தான் உலக சரித்திரத்தையே மாற்றி எழுதிய வருடம். Poll_c10 
25 Posts - 3%
prajai
1917-இந்த ஆண்டு தான் உலக சரித்திரத்தையே மாற்றி எழுதிய வருடம். Poll_c101917-இந்த ஆண்டு தான் உலக சரித்திரத்தையே மாற்றி எழுதிய வருடம். Poll_m101917-இந்த ஆண்டு தான் உலக சரித்திரத்தையே மாற்றி எழுதிய வருடம். Poll_c10 
6 Posts - 1%
sugumaran
1917-இந்த ஆண்டு தான் உலக சரித்திரத்தையே மாற்றி எழுதிய வருடம். Poll_c101917-இந்த ஆண்டு தான் உலக சரித்திரத்தையே மாற்றி எழுதிய வருடம். Poll_m101917-இந்த ஆண்டு தான் உலக சரித்திரத்தையே மாற்றி எழுதிய வருடம். Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
1917-இந்த ஆண்டு தான் உலக சரித்திரத்தையே மாற்றி எழுதிய வருடம். Poll_c101917-இந்த ஆண்டு தான் உலக சரித்திரத்தையே மாற்றி எழுதிய வருடம். Poll_m101917-இந்த ஆண்டு தான் உலக சரித்திரத்தையே மாற்றி எழுதிய வருடம். Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
1917-இந்த ஆண்டு தான் உலக சரித்திரத்தையே மாற்றி எழுதிய வருடம். Poll_c101917-இந்த ஆண்டு தான் உலக சரித்திரத்தையே மாற்றி எழுதிய வருடம். Poll_m101917-இந்த ஆண்டு தான் உலக சரித்திரத்தையே மாற்றி எழுதிய வருடம். Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
1917-இந்த ஆண்டு தான் உலக சரித்திரத்தையே மாற்றி எழுதிய வருடம். Poll_c101917-இந்த ஆண்டு தான் உலக சரித்திரத்தையே மாற்றி எழுதிய வருடம். Poll_m101917-இந்த ஆண்டு தான் உலக சரித்திரத்தையே மாற்றி எழுதிய வருடம். Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

1917-இந்த ஆண்டு தான் உலக சரித்திரத்தையே மாற்றி எழுதிய வருடம்.


   
   
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Jun 18, 2009 6:46 am

1917
1917-இந்த ஆண்டு தான் உலக சரித்திரத்தையே மாற்றி எழுதிய வருடம். Hammer_and_sickleஇந்தஆண்டு தான் உலக சரித்திரத்தையே மாற்றி எழுதிய வருடம். ஆம்..அந்த வருடம்
தான் ரஷ்ய புரட்சி வெடித்து லெனின் தலைமையில் ஒரு கம்யுனிச நாடு உலகில்
உதயமாகியது. கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களை நடைமுறைப் படுத்தக் கூடிய
ஒரு அரசு அப்பொழுது தான் உலகில் முதன் முறையாக தோன்றியது. இந்த நிகழ்வு,
வர்க்க பேதங்களை கலைந்து ஒரு சமத்துவமான சமுதாயத்தை அமைக்க முடியும் என்ற
நம்பிக்கையை உலக நாடுகளுக்கு ஏற்படுத்தியது.

ரஷ்ய புரட்சியின்
தாக்கம் அடுத்து வந்த ஆண்டுகளில் உலகின் பல நாடுகளை ஆட்டிப் படைத்தது. பல
நாடுகளின் கொள்கைகளை மாற்றி எழுதியது. மக்களின் வாழ்க்கை தரத்தை
மாற்றியது. காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த பல நாடுகள் தாங்கள் எழுச்சி
பெற கார்ல் மார்க்ஸின் கம்யுனிசம் தான் ஒரே வழி என்று நினைத்தன.
இந்தியாவிலும் அந்த எண்ணம் பரவலாக பெருகி இருந்தது.
இந்த நம்பிக்கைக்கு காரணமான ரஷ்ய புரட்சி எப்படி வெடித்தது ? புரட்சிக்கு காரணம் என்ன ?
1917-இந்த ஆண்டு தான் உலக சரித்திரத்தையே மாற்றி எழுதிய வருடம். Kmarxகார்ல்
மார்க்ஸ் "முதலாளித்துவம் பெருகும் பொழுது வர்க்க பேதங்கள் வெடித்து, அதன்
காரணமாக சோஷலிசம் உருவாகி, சோஷலிசம் உருமாற்றம் பெற்று கம்யுனிசம்
உருவாகும்" என்றார். கம்யுனிசம் என்பது ஒரு பரிணாம வளர்ச்சி என்றும்
சமுதாயத்தில் நடக்கும் பல மாற்றங்கள் கம்யுனிசமாக இறுதியில் மாறும்
என்றும் தன் கம்யுனிச சித்தாந்தங்களில் மார்க்ஸ் கூறினார். மார்க்ஸின்
சிந்தனை படி கம்யுனிசம் என்பது ஒரு கொள்கை அல்ல. அது மாற்றத்தின் ஒரு
நிலை. அந்த நிலையில் வர்க்க பேதங்கள் இருக்காது. அரசாங்கங்கள் இருக்காது.
ஒரே வர்க்கம் தான் இருக்கும். அது தான் உழைக்கும் வர்க்கம். அந்த
உழைக்கும் வர்க்கம், தான் உழைத்ததை தானே பங்கிட்டுக் கொள்ளும்.
மார்க்ஸின் தத்துவங்களை கொண்டு பார்த்தால் கம்யுனிசம் ஒரு முதலாளித்துவ
நாட்டில் தான் ஏற்பட முடியும். அன்றைக்கு ரஷ்யா ஒரு முதலாளித்துவ நாடா ?
நிச்சயமாக இல்லை. அப்பொழுது ரஷ்யா ஒரு ஏழை நாடு. ரஷ்ய மக்களில் 90%
பேர் படிப்பறிவு இல்லாதவர்கள். 75% பேர் கூலித் தொழிலாளர்கள். ஏழ்மை
தலைவிரித்து ஆடிய நாடு.
முதலாளித்துவமே இல்லாத ஒரு நாட்டில் கம்யுனிசம் தோன்ற என்ன காரணம் ?
தஞ்சை பெரிய கோயிலுக்கு அனைவரும் சென்றிருப்பீர்கள். அதன் கட்டுமானத்தை
கவனித்திருக்கிறீர்களா ? பல நாட்டின் மிகச் சிறந்த கட்டுமானப்
பொறியாளர்கள் இன்றும் இந்தக் கோயிலின் கட்டுமானத்தை எண்ணி வியந்து
கொண்டிருக்கிறார்கள். இந்தக் கோயிலை பார்க்கும் பொழுதெல்லாம் எனக்கு
பெருமூச்சு தான் ஏற்படும். ஒரு காலத்தில் அறிவியலில் நாம் மிக அதிக
முன்னேற்றத்துடன் இருந்தோம் என்பதற்கு இந்த கோயிலை தான் நான் சாட்சியாக
நினனக்கிறேன். ஐரோப்பா கண்டத்தை விட பல மடங்கு முன்னேறி இருந்த நாம்
எப்படி சரிந்தோம் ?
விஞ்ஞான வளர்ச்சி என்பது தேவையின் காரணமாக ஏற்படுவது. எங்கு அதற்கான
தேவை இருக்கிறதோ அங்கு தான் விஞ்ஞானம் வளர்ச்சி அடைய முடியும். பெரிய
கோயில்களை உருவாக்கிய பொழுது வளர்ந்த அறிவியல் பின் எந்த தேவையும்
இல்லாததால் அதே நிலையில் நின்று விட்டது.
ஆனால் மிகவும் பின்தங்கி இருந்த ஐரோப்பாவிற்கு தன் தேவைகளுக்காக புதிய
சிந்தனைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது. பிரிட்டனில்
மக்கள் தொகை அதிகரிக்க தொடங்கிய பொழுது விவாசயத்தையே நம்பி இருந்த
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது. கிராமத்தில் விவசாயம்
செய்து கொண்டிருந்த மக்கள் நகரங்களை நோக்கி செல்லத் தொடங்கினர். நகரங்களை
நோக்கி மக்கள் குடிபெயர்ந்தாலும் நகரங்களில் வேலையில்லை. வேலையில்லா
திண்டாட்டம் பெருகியது. இந்தப் பிரச்சனையின் காரணமாக புதிய
வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அவசியம் அப்பொழுது பிரிட்டனில் ஏற்பட்ட்து.
புதிய தொழில்கள் தொடங்கப்பட்டன. தொழிற் புரட்சி வெடித்தது. புதிய
இயந்திரங்கள் உருவாகின. தொழில்கள் தொடங்கப்பட்டு பலர் வேலைக்கு
அமர்த்தப்பட்டனர்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Jun 18, 2009 6:49 am

உலகில் முதலாளித்துவமும் (Capitalism), உழைக்கும் வர்க்கமும் (Working
class) இப்படித் தான் உருவாகின. தொழில் புரட்சி வெடித்த பொழுது பல சமுதாய
மாற்றங்களும் ஏற்பட்டன. அது வரை கிராமத் தொழில்களாக, சிறு தொழில்களாக
செய்யப்பட்ட பொருள்கள் இயந்திரங்களால் மிக மலிவான விலைக்கு செய்யப்பட்டன.
கிராமத் தொழில்கள் நசிந்தன. அந்த தொழில்களை கொண்டு வாழ்க்கை நடத்திய
மக்களின் வாழ்க்கைத் தரம் சீர்குலைந்தது. இயந்திரங்களை கொண்டு செய்யப்பட்ட
ஏரளாமான பொருட்களை விற்க சந்தை தேவைப்பட்டது. ஐரோப்பிய நாடுகள் ஆசிய
ஆப்ரிக்கா நாடுகளுடன் வர்த்தகம் செய்யத் தொடங்கின. இந்த வர்த்தகம் மூலம்
காலனியாதிக்கமும் பெருகியது.
கார்ல் மார்க்ஸ் இந்த காலக்கட்டத்தில் தான் தன் கம்யுனிச சிந்தனைகளை
உருவாக்கினார். முதலாளித்துவம் பெறும் லாபம் என்பது உழைக்கும் வர்க்கம்
உழைத்து கொடுக்கும் உழைப்பு என்றும் உழைக்கும் வர்க்கம் சுரண்டப்பட்டு
முதலாளித்துவம் கொழிக்கிறது என்பதும் அன்றைய சூழ்நிலையில் மிகவும்
புரட்சிகரமான சிந்தனைகள்.
ஆனால் ரஷ்யாவில் முதலாளித்துவம் மிகப் பெரிய வளர்ச்சி
பெற்றிருக்கவில்லை.முதல் உலகப் போரின் பொழுது ரஷ்யாவில் பஞ்சம்
தலைவிரித்து ஆடியது. பலர் இராணுவத்தில் கட்டாயமாக சேர்க்கப்பட்டனர்.
ஆலைகளில் உற்பத்தி குறைந்தது. உற்பத்தியை பெருக்க தொழிலாளர்கள் பல மணி
நேரங்கள் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் சரியான கூலி அதற்கு
வழங்கப்படவில்லை. தொழிலாளர்கள் ஆத்திரம் அடைந்தனர். வேலை நிறுத்தத்தில்
ஈடுபட்டனர். சார் மன்னன் நிக்கோலஸின் ஆட்சிக்கு எதிராக 1917ம் ஆண்டு
பிப்ரவரி மாதம் வெடித்தது. இந்த புரட்சியால் சார் மன்னன் இரண்டாம்
நிக்கோலஸின் ஆட்சி முடிவுக்கு வந்து பெட்ரோகார்ட் சோவியத் (Petrograd
Soviet), மற்றும் தூமா (Duma) ஆகியவற்றின் கூட்டணி ஆட்சி அமைந்தது. இதனை
Russian Provisional Government என்று கூறுவார்கள். இது 1917ம் ஆண்டு
நடந்த ரஷ்ய புரட்சியின் முதல் கட்டம். இதனை பிப்ரவரி புரட்சி என்றும்
கூறுவார்கள்.
அதே ஆண்டு அக்டோபர் மாதம் அடுத்த புரட்சி வெடித்தது. இது தான் அக்டோபர்
புரட்சி. இந்த அக்டோபர் புரட்சி மூலமாகத் தான் போல்ஷவிக் கட்சியின் தலைவர்
விலாடிமீர் லெனின் ரஷ்யாவின் ஆட்சியை பிடித்தார். கார்ல் மார்க்ஸின்
சித்தாந்தங்களில் நம்பிக்கை உடைய போல்ஷவிக் கட்சியின் வெற்றி
கம்யுனிசத்தின் வெற்றியாக கூறப்பட்டது.
ஆனால் உண்மையில் ரஷ்யாவில் நிலவிய பல உள்நாட்டு பிரச்சனைகளின்
காரணமாகத் தான் புரட்சி வெடித்து போல்ஷவிக் கட்சியினர் ஆட்சியை
பிடித்தனர். புரட்சியின் மூலம் மிக எளிதாக எந்த எதிர்ப்பும் இல்லாமல்
ஆட்சியை பிடித்த போல்ஷ்விக் கட்சியினர் கம்யுனிசத்தை தங்களது கொள்கையாக
மாற்றிக் கொண்டனர்.
போல்ஷ்விக்கின் வெற்றி கார்ல் மார்க்ஸின் உண்மையான கம்யுனிசம் அல்ல.
வர்க்க பேதங்கள் இல்லாத சமுதாயம் பற்றி பேசிய கார்ல் மார்க்ஸ் அந்த
சமுதாயத்தில் அரசாங்கத்தின் பங்கு பற்றி பேச வில்லை. அவரது
Theoretical சமுதயாத்தில் அரசாங்கங்கள் தேவையில்லை. ஆனால் லெனினுக்கு
அன்றைக்கு அதிகாரம் தேவைப்பட்டது. இவ்வாறு தான் கம்யுனிசத்தின் மற்றொரு
கிளள உருவாகியது.
அது தான் மார்க்ஸிசம்-லெனினிசம். இதன் படி ரஷ்ய
கம்யுனிஸ்ட் கட்சி, பொலிட்பீரோ போன்ற அதிகார மையங்கள் உருவக்கப்பட்டன.
தனிப்பட்ட முதாளித்துவத்திற்கு பதிலாக அரசாங்க முதலாளித்துவம்
உருவாக்கப்பட்டது.
1917-இந்த ஆண்டு தான் உலக சரித்திரத்தையே மாற்றி எழுதிய வருடம். Leninரஷ்ய
புரட்சியின் பொழுது மென்ஷவிக்கள் மற்றும் லியான் ட்ராட்ஸ்கியின்
சிந்தனைகள் போன்ற வேறுபட்ட கருத்துக்களும் ரஷ்யாவில் இருந்தன. ட்ராட்ஸ்கி
லெனினுடன் வேறுபட்டாலும் ரஷ்ய புரட்சியில் முக்கிய பங்காற்றியவர்.
ரஷ்ய புரட்சிக்கு பின்பு லெனின் தனது கம்யுனிச சிந்தனைகளில் நிறைய
சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. கம்யுனிசம் ரஷ்யாவின் பல
பிரச்சனனகளுக்கு உடனடி தீர்வாக முடியாது என்பதை லெனின் உணர்ந்தார். தனது
புதிய பொருளாதார கொள்கை (New Economic Policy) மூலம் லெனின் அந்த சமரசத்தை
செய்து கொண்டார். முழுவதும் கம்யுனிசம் என்ற தனது கொள்கை தற்போதைய ரஷ்ய
சூழ்நிலையில் எடுபடாது என்பதை உணர்ந்த லெனின் கம்யுனிசத்தை நோக்கி ஒரு அடி
வைக்க வேண்டுமானால் இரு அடிகள் பின்நோக்கி சென்று தான் தீர வேண்டும் என்று
வாதிட்டார் ( One Step Forward, Two Steps Back).
இவ்வாறு பல குழப்பங்களுக்கிடையே தான் ரஷ்யாவில் கம்யுனிசம் உருவாகியது.
ரஷ்ய புரட்சி ஒரு முழுமையான கம்யுனிச நாட்டை உருவாக்கவில்லை என்பது தான்
உண்மை.

1917-இந்த ஆண்டு தான் உலக சரித்திரத்தையே மாற்றி எழுதிய வருடம். JosephStalinலெனின்
மறைவுக்கு பிறகு கம்யுனிச ரஷ்யாவின் தலையெழுத்தை மாற்றி எழுதியவர் ஜோசப்
ஸ்டாலின். ஸ்டாலின் என்று ஒருவர் தோன்றியிருக்காவிட்டால் 1991ல் சிதைந்த
சோவியத் யுனியன், 1920ல் சதைந்து போயிருக்கலாம். பல நாடுகள் கம்யுனிசத்தை
மறந்திருக்கலாம். இந்தியா கூட கட்டுப்படுத்தப்படாத சந்தை பொருளாதாரத்தை
நோக்கி சென்றிருக்கலாம். ஆனால் ஸ்டாலின் தலைமையில் ரஷ்யா அடைந்த
பிரமிக்கத்தக்க வளர்ச்சி இந்தியா உட்பட பல நாடுகளின் பொருளாதார
தலையெழுத்தை மாற்றியது.
1917ம் ஆண்டு ரஷ்ய புரட்சிக்கு முன்பு வரை மிகவும் பிந்தங்கி இருந்த
ரஷ்யா 1940ல் தொழில் துறையில் மிக அதிக முன்னேற்றத்தை எட்டியது. ஏழை நாடான
ரஷ்யா ரஷ்ய புரட்சிக்கு பின்பு வந்த 22 ஆண்டுகளில் மிகவும் நவீனமான நாடாக
மாறியது. 30 ஆண்டுகளில் பிரிட்டன், அமெரிக்காவிற்கு அடுத்த மிகப் பெரிய
பொருளாதாரமாக உருவாகியது. பொருளாதாரத்தில் மட்டும் இல்லாமல் கல்வி,
அறிவியல் போன்றவற்றிலும் பிரமிக்கத்தக்க மாற்றத்தைப் பெற்றது.
இரண்டாம் உலகப் போருக்கு பிறகு உலகின் இரு வல்லசுகளில் ஒன்றாக சோவியத்
யுனியன் உருவாகியது. இதற்கு காரணம் கம்யுனிசம் தான் என்றும் கார்ல்
மார்க்ஸ் மற்றும் லெனினுடையுடைய சிந்தனைகள் தான் என்றும் உலகநாடுகள்
நம்பின. தங்களது நாட்டையும் முன்னேற்ற முடியும் என்ற நம்பிக்கையை இந்த
வெற்றி பல நாட்டு தலைவர்களிடம் ஏற்படுத்தியது.
ஸ்டாலினின் தலைமையின் கீழ் சோவியத் யுனியன் பெற்ற வெற்றியை கவனித்த உலக நாடுகள் அதனை அப்படியே பின்பற்ற தொடங்கின.
சோவியத் யுனியன் வெற்றியின் பாதிப்பு இந்தியாவையும் விட்டு வைக்க
வில்லை. கம்யுனிச சோவியத்தை கூர்ந்து கவனித்து கொண்டிருந்த ஜவகர்லால் நேரு
இந்தியாவின் பிரச்சனைகளுக்கு சோவியத் யுனியன் பாணியில் செல்வது தான்
சரியானது என்று நினைத்தார். சோவியத் யுனியனின் இமாலய வெற்றியும் அவரது
நம்பிக்கை உறுதி செய்தது.
ஸ்டாலின் எப்படி சோவியத்தை மிகப் பெரிய வல்லரசாக மாற்றினார் ? அதே பாணியை கடைப்பிடித்த நாம் ஏன் முன்னேற வில்லை ?

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Jun 18, 2009 6:53 am

1917-இந்த ஆண்டு தான் உலக சரித்திரத்தையே மாற்றி எழுதிய வருடம். Lenin-Stalinஜோசப்
ஸ்டாலின், சோவியத் யுனியனின் தலையெழுத்தை மட்டுமல்லாமல் உலகின்
தலையெழுத்தையே மாற்றிய பெருமைக்குரிய சரித்திர நாயகன். ஸ்டாலினின்
உண்மையான பெயர் ஜோசப் டிஜுகாஸ்வில்லி. சிறு வயது முதலே கார்ல் மார்க்ஸ்
மற்றும் லெனினின் சத்தாந்தங்கள் மீது அதிக ஈடுபாடு கொண்டு பல புரட்சி
இயக்கங்களில் தீவிரமாக பணியாற்றியவர். இதனால் 8 முறை கைது செய்யப்பட்டு
சைபீரியா சிறையில் அடைக்கப்பட்டார். 7 முறை சிறையில் இருந்து தப்பித்து பல
புனைப் பெயர்களில் புரட்சி இயக்கங்களில் தொடர்ந்து ஈடுபட்டார். அவர்
சூட்டிக் கொண்ட பல புனைப் பெயர்களில் ஒன்று தான் ஸ்டாலின். ஸ்டாலின் என்ற
பெயருக்கு இரும்பைப் போன்றவன் என்று பொருள். தனக்கு ஏற்ற கம்பீரமான பெயர்
இது தான் என்று ஸ்டாலின் முடிவு செய்தார். பின் அதுவே நிலைத்தும் விட்டது.

1917ல் நடந்த ரஷ்ய புரட்சியில் ஸ்டாலினின் பங்களிப்பு பற்றி பல
கருத்துக்கள் நிலவுகிறது. அவருடைய பங்களிப்பு மிகவும் குறைவு என்று
ஸ்டாலினின் எதிர்ப்பாளர்களும், அவர் பங்கு மிகவும் முக்கியமானது என்று
ஸ்டாலின் ஆதரவாளர்களும் கருதுகின்றனர். அந்த விவகாரத்துக்குள் நான் செல்ல
விரும்பவில்லை என்றாலும் லெனினுக்கு அடுத்த நிலையில் இருந்த பலரில்
ஸ்டாலினும் ஒருவர் என்பது தான் உண்மை. 1917ல் நடந்த மத்திய கமிட்டி
(Central Commitee) தேர்தலில் ஸ்டாலின் மூன்றாவது பெரும்பான்மையான
வாக்குகளுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1922ல் ஸ்டாலின் கம்யுனிஸ்ட்
கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார். அன்றைக்கு கம்யுனிஸ்ட் கட்சியின்
பொதுச்செயலாளர் பதவி என்பது ஒரு சாதாரண பதவி. கட்சிக்கு உறுப்பினர்களை
சேர்ப்பது தான் அந்தப் பதவியின் முக்கியமான வேலை. லெனின் உடல்நலக்
குறைவால் பாதிக்கப்பட்ட பொழுது, ஸ்டாலின் இந்தப் பதவியைக் கொண்டு தன்னுடைய
ஆதரவாளர்களை கட்சிக்குள் அதிக அளவில் சேர்த்தார். சாதாரணமான பொதுச்
செயலாளர் பதவியை சர்வ வல்லமை கொண்ட ஒரு பதவியாக மாற்றினார். ஸ்டாலினின்
மறைவுக்கு பிறகும் அந்தப் பதவியின் முக்கியத்துவம் குறையவே இல்லை.
கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தான் சோவியத் யுனியனின் அதிபர்
என்ற வழக்கம் இப்படி தான் ஆரம்பமாகியது.
1917-இந்த ஆண்டு தான் உலக சரித்திரத்தையே மாற்றி எழுதிய வருடம். Stalin21924ல்
லெனினின் மறைவுக்கு பிறகு கம்யுனிஸ்ட் கட்சியில் நடந்த அதிகாரப்
போட்டியில் ஸ்டாலின் கை ஓங்கியது. போல்ஷ்விக் கட்சியில் உள்ள
மிதவாதிகளுக்கும், தீவிர இடதுசாரிகளுக்கும் இடையே கடுமையான கருத்து
வேறுபாடுகள் ஏற்பட்டது. ஸ்டாலினின் முக்கிய எதிர்ப்பாளரான லியான் ட்ராஸ்கி
கம்யுனிச புரட்சி உலகளவில் ஏற்பட்டால் தான் ஒரு சமத்துவமான சமுதாயத்தை
அமைக்க முடியும் என்று வலியுறுத்தினார். ஆனால் ஸ்டாலின் சோவியத் யுனியனில்
மட்டும் சோசலிசம் உருவானால் போதுமானது என்று கருதினார். ரஷ்ய புரட்சிக்கு
முந்தைய காலங்களில் இருந்த மோசமான வாழ்க்கைத் தரம், ரஷ்ய புரட்சிக்கு
பின்பும் எந்த வித பெரிய முன்னேற்றம் இல்லாத சூழல் இவற்றுக்கிடைய லியான்
ட்ராஸ்கியின் "உலகளவில் புரட்சி" என்ற கருத்து மக்களிடையே எடுபடவில்லை.
ஸ்டாலின், தற்போதைய சூழலில் சோவித் யுனியனை முன்னேற்றுவது தான் முக்கியம்
என்ற மிதவாத கருத்து உடையவர். சோவியத் யுனியனை முன்னேற்ற வேண்டுமானால்
அண்டை நாடுகளுடன் நல்லுறவை வளர்த்து கொள்ள வேண்டும், உலகப் புரட்சி சரியான
உத்தி அல்ல என்பது ஸ்டாலினின் நிலை. அதற்குத் தான் அதிக ஆதரவு இருந்தது.
1927ல் நடந்த கம்யுனிஸ்ட் கட்சியின் கூட்டத்தில் அவரது எதிர்ப்பாளரான
லியான் ட்ராஸ்கி மற்றும் அவரது ஆதரவாளர்களை கம்யுனிஸ்ட் கட்சியில் இருந்து
ஸ்டாலின் வெளியேற்றினார். ஸ்டாலின் தன் எதிர்ப்பாளர்களை அழிக்கத்
தயங்கியதில்லை. லியான் ட்ராஸ்கி பிறகு நாடு கடத்தப்பட்டார். ஸ்டாலினின்
ஏஜண்ட்களால் அவர் மெக்ஸிகோவில் கொலை செய்யப்பட்டார் என்றும்
நம்பப்படுகிறது.
கம்யுனிஸ்ட் கட்சியின் அதே கூட்டத்தில் ஸ்டாலின் "அமெரிக்கா,
பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளை விட சோவியத் யுனியன் சுமார்
100 ஆண்டுகள் பிந்தங்கி இருக்கிறது. இன்னும் 10 ஆண்டுகளில் நாம் சோவியத்
யுனியனை முன்னேறிய நாடாக மாற்றா விட்டால் பிற நாடுகளால் நசுக்கப்படுவோம்.
சோவியத் யுனியனை முன்னேற்ற வேண்டுமானால் கனரகத் தொழில்கள் (Heavy
Industires) உருவாக்கப்பட வேண்டும். தொழில் துறை முன்னேற வேண்டும்.
சோவியத் யுனியனை ஒரு முன்னேறிய நாடாக மாற்றுவது தான் தனது லட்சியம்" என்று
முழங்கினார். அதன்படி லெனினின் புதிய பொருளாதார கொள்கைகளை ( New Economic
Policy ) மாற்றி ஐந்தாண்டு திட்டங்களை (5 - Year Plan) கொண்டு வந்தார்.
இந்த ஐந்தாண்டு திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டக் கமிஷன் ( Planning
commission) அமைக்கப்பட்டது. இதற்கு கோஸ்ப்ளான் (Gosplan) என்று பெயர்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Jun 18, 2009 6:55 am

இதன்படி சோவியத் யுனியனில் எந்த தொழில் தொடங்கப்படும், எந்த தொழிலுக்கு
முக்கியத்துவம் வழங்கப்படும், தொழில்களுக்கு எந்தளவுக்கு முதலீடு
செய்யப்படும், எந்தளவுக்கு அந்த தொழிலில் இருந்து உற்பத்தி இருக்க
வேண்டும் என்ற அனைத்தையும் திட்டக் கமிஷன் முடிவு செய்யும். இந்த
தொழில்களை நடத்த ஸ்டாலின் வெளிநாட்டில் இருந்து மேலாளர்களை கொண்டு
வந்தார். ஒவ்வொரு ஆலைக்கும் ஒரு உற்பத்தி இலக்கு வழங்கப்படும். அதன்
மேலாளர்கள் அந்த இலக்கை அடைந்தே தீர வேண்டும். இதன்படி கொண்டு வரப்பட்ட
முதல் ஐந்தாண்டு திட்டத்தால் சோவியத் யுனியனில் கனரகத் தொழில்கள் பெரும்
வளர்ச்சி பெற்றன.
1928 முதல் 1940 வரையிலான 22 ஆண்டுகளில் சோவியத் யுனியனின் மொத்த
உள்நாட்டு உற்பத்தி (GDP - Gross Domestic Product) 13-14% என்ற அளவுக்கு
உயர்ந்தது. 1928க்கு முந்தைய நிலையை விட எண்ணெய் உற்பத்தி 3மடங்கு,
இரும்பு மற்றும் எஃகு உற்பத்தி 4மடங்கு, நிலக்கரி உற்பத்தி 5மடங்கு என
பிரமிக்கத்தக்க அளவுக்கு உயர்ந்தது. இந்தக் காலக்கட்டத்தில் சோவியத்
யுனியன் பெற்ற வளர்ச்சி போன்று இது வரை வேறு எந்த நாடும் அடைந்ததில்லை.
இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் இந்த வளர்ச்சிக்கு வெளிநாட்டு
முதலீடோ, பிற நாடுகளின் உதவியோ காரணம் அல்ல. இது முழுக்க முழுக்க சோவியத்
யுனியனின் தனிப்பட்ட உயர்வு.
இந்த உயர்வுக்கு காரணம் ஸ்டாலினின் தலைமை என்பதில் சிறிதும் ஐயமில்லை.
தொழில் துறை பெருக வேண்டுமானால் விவசாயம் பெருகி அதன் உற்பத்தியும்
அதிகரிக்க வேண்டும் என்று ஸ்டாலின் நினைத்தார். விவசாயத்தில் உற்பத்தி
பெருகினால் தான் உணவுப் பொருள்களின் விலையை கட்டுக்குள் வைக்க முடியும்.
உணவுப் பொருள்களின் விலை கட்டுக்குள் இருந்தால் தான் வாழ்க்கைத் தரம்
மலிவாக இருக்கும். தொழில் துறையில் முதலீடுகளை அதிகரிக்க முடியும் என்று
ஸ்டாலின் கருதினார். அதன்படி விவசாயத்தில் கூட்டுப் பண்ணைத்திட்டம்
(collectivisation) கொண்டு வரப்பட்டது.
ஸ்டாலினின் பல திட்டங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டது கூட்டுப்
பண்ணைத் திட்டம் தான். இந்த திட்டத்தின் படி பல விவசாய நிலங்கள் ஒன்று
சேர்க்கப்பட்டு கூட்டுப்பண்ணை உருவாக்கப்பட்டது. இந்தப் பண்ணையில் நவீன
இயந்திரங்கள் மற்றும் ட்ராக்டர்கள் மூலம் விவசாய உற்பத்தியை பெருக்க
முடியும் என்று ஸ்டாலின் நினைத்தார். இதில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம்
இருக்காது. ஆனால் உற்பத்தியில் ஒரு பங்கு அவர்களுக்கு வழங்கப்படும்.
ஸ்டாலின் பல எதிர்ப்புகளை இந்த திட்டம் மூலம் எதிர்கொள்ளும் நிலை
ஏற்பட்டது. ஆனால் எதிர்ப்புகளை ஸ்டாலின் நசுக்கினார். இந்த திட்டம் பற்றி
எழுதிய பல வெளிநாட்டு எழுத்தாளர்கள் இந்த திட்டத்தின் வெற்றியை குறித்து
அதிகம் எழுதவில்லை. ஆனால் இந்த திட்டத்தை செயல்படுத்த ஸ்டாலின் மேற்கொண்ட
சர்வாதிகார நடவடிக்கைகளை பற்றி தான் அதிகம் எழுதியுள்ளனர். கூட்டுப்
பண்ணைத் திட்டம் மூலம் தானிய உற்பத்தி அடுத்த வந்த ஆண்டுகளில் பெருகியது.
சோவியுத் யுனியன் பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடைய வேண்டுமெனில்
கல்வியறிவு, சுகாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரம் போன்றவையும் உயர
வேண்டும் என்று ஸ்டாலின் நினைத்தார். கல்வித் திட்டம் ஏட்டுச் சுரைக்காயாக
இல்லாமல் தொழில்துறைக்கு தேவைப்படும் வகையில் உருவாக்கப்பட்டது.
கல்லுரிகளில் இருந்து நிறைய பொறியாளர்கள் உருவாக்கப்பட்டனர். இரண்டாம்
உலகப் போருக்கு பிறகு அறிவியல் முன்னேற்றத்தில் சோவியத் யுனியன் மிகவும்
பிந்தங்கி இருப்பதை ஸ்டாலின் உணர்ந்தார். அறிவியல் ஆராய்ச்சிக்கு
முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
1928க்கு முன்பு வரை ஒரு ஏழை நாடாக, அறிவியல் வளர்ச்சியில் பிந்தங்கிய
நாடாக இருந்த சோவியத் யுனியனை ஸ்டாலின் தனது திறமையான தலைமையின் மூலம் ஒரு
அல்ட்ரா மார்டன் நாடாக, உலகின் வல்லரசாக உருவாக்கினார். பொருளாதாரம்,
கல்வி, அறிவியல், சுகாதாரம் போன்ற அனைத்து துறைகளிலும் சோவியத் யுனியனை
உலக நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக ஸ்டாலின் மாற்றினார். ஸ்டாலின்
அமைத்த வலுவான அடித்தளத்தில் தான் அவரது மறைவுக்கு (1953) பின்பும்
சோவியத் யுனியன் உலகின் வல்லரசாக நீடித்தது. அதற்கு முக்கிய உதாரணம்
சோவியத் யுனியன் விண் மற்றும் ஏவுகணை வளர்ச்சியை கூறலாம்.
1917-இந்த ஆண்டு தான் உலக சரித்திரத்தையே மாற்றி எழுதிய வருடம். Sputnik_11957,
அக்டோபர் 4, சோவியத் யுனியன் "ஸ்புட்னிக்" செயற்கைகோளை விண்ணுக்கு
அனுப்பியது. விண்ணுக்கு அனுப்பப்பட்ட உலகின் முதல் செயற்கைகோள் இது தான்.
உலகையே அச்சரியப்படுத்திய நிகழ்வு அது. சோவியத் யுனியனின் இந்த வளர்ச்சி
அமெரிக்காவை மிரள வைத்தது. இதன் எதிரொலியாகத் தான் NASA அமைப்பு
அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்டு சோவியத் யுனியனுக்கு எதிரான தனது
ஆராய்ச்சியை அமெரிக்கா துரிதப்படுத்தியது. இதன் பிறகு சோவியத் யுனியன்
தொடர்ந்து விண் ஆராய்ச்சியில் தனது வெற்றியை பல முறை நிருபித்துக் கொண்டே
இருந்தது.

ஸ்டாலின் தன் எதிரிகளையும், தன் கருத்துக்கு எதிராக
இருந்தவர்களையும் கொன்று குவித்த சர்வாதிகாரி தான் என்றாலும் அவர்
நிகழ்த்திய பொருளாதார சாதனையை வேறு எந்த நாட்டின் தலைவரும் இது வரை
சாதிக்கவில்லை.
ஸ்டாலினின் வெற்றி பல நாடுகளின் பொருளாதாரக் கொள்கையை மாற்றியது. சீனா
கம்யுனிச சித்தாந்தத்தை தன் கொள்கையாக அறிவித்தது. ஸ்டாலினின் ஐந்தாண்டு
திட்டங்களை பின்பற்ற தொடங்கியது. இது போன்று பல நாடுகள் தங்கள் நாட்டின்
வெற்றிக்கு கம்யுனிசம் தான் ஏற்றது என்று முடிவு செய்தன.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக