ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அல்லாஹ் யாரை பொருந்திக்கொள்கிறான்

2 posters

Go down

அல்லாஹ் யாரை பொருந்திக்கொள்கிறான் Empty அல்லாஹ் யாரை பொருந்திக்கொள்கிறான்

Post by எஸ்.அஸ்லி Sat Mar 27, 2010 9:18 pm

அல்லாஹ் யாரை பொருந்திக்கொள்கிறான்
ஸஹாபாக்களில் ஒருசிலரை அல்லாஹ் பொருந்திக்கொண்டான்ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தோரையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் 9:100)

இந்த இறைவசனத்தில் அல்லாஹ் பொறுந்திக்கொண்ட அடியார்களைப் பற்றி மிக அழகாக கூறுகிறான் ஆனால் அவ்வாறு கூறும் போது யாருடைய பெயரையும் வெளியிடாமல் ரத்தினச் சுருக்கமாக படிப்பவர்கள் கவனமாக சிந்திக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் பொடி வைத்து பேசுகிறான்!
ஹிஜரத் பற்றி கூறும் போதுஹிஜரத் செய்தோரிலும்
அன்ஸாரிகளை முன்னிருத்தி கூறும்போதுஅன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும்
ஹிஜரத் செய்தவர்கள்அன்ஸாரிகள், அன்ஸாரிகளில் முந்திச் சென்றவர்கள் பற்றி கூட்டாக கூறும் போதுநல்ல விஷயத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தோரையும்


· முதலாவதாக ஹிஜரத் செய்த அனைவரிலும் அவர்களின் ஒரு பகுதியினரை பொருந்திக்கொண்டதாக கூறகிறான்!
· இரண்டாவதாக அன்சாரிகளில் ஒரு பகுதியினரை பொருந்திக் கொண்டதாக கூறகிறான்!
· மூன்றாவதாக அன்சாரிகளில் முந்திச் சென்ற முதலாமவர்களை பொருந்திக் கொண்டதாக கூறுகிறான்!
· நான்காவதாக நல்ல விஷயத்தில் இந்த 3 வகையான கூட்டத்தாரை பின்தொடர்ந்தவர்களை பொருந்திக் கொண்டதாக கூறுகிறான்!

தான் பொருந்திக்கொண்டதாக அல்லாஹ் வாக்களிக்கும் இந்த நபர்களுக்கு சொர்க்கச் சோலைகள் அளிப்பதாக உறுதிமொழி அளிக்கிறான் இந்த வசனத்தின் மூலம் இவர்கள் நல்லடியார்கள் என்ற அந்தஸ்தை அடைந்துள்ளார்கள் என்பதும் இதற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான் என்பதும் தெளிவுபட விளங்குகிறது (சுப்ஹானல்லாஹ்)! இவர்களை நாம் பின்தொடர வேண்டுமே தவிர வழிபடக்கூடாது காரணம் பின்தொடர்ந்த வர்களை அல்லாஹ் பொருந்திக்கொண்டான் என்று கூறப்பட்டுள்ளது மேலும் இவர்களின் நல்ல செயல்களை நாமும் அவ்வாறு பின்தொடர வேண்டும் என்று அல்லாஹ் மறைமுகமாக போதிக்கிறான்!

உண்மை பேசுவோரை அல்லாஹ் பொருந்திக் கொள்கிறான்இது உண்மை பேசுவோருக்கு அவர்களது உண்மை பயன் தரும் நாள். அவர்களுக்குச் சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக்கொண்டனர். இதுவே மகத்தான வெற்றியாகும்” என்று அல்லாஹ் கூறுவான். அல்குர்ஆன் (5 : 119)

உண்மை பேசுவோரை அல்லாஹ் பொருந்திக்கொள்வதாக பிரகடனப்படுத்துகிறான்.இங்கு முஸ்லிமல்லாத மனிதர்களும் உண்மை பேசுபவராக இருக்கின்றாரே என்ற கேள்வி வரும் ஆனால் இங்கு அல்லாஹ் கூறும் உண்மை பேசுவோருக்கு சொர்க்கச் சோலைகள் தருவதாக வாக்களிக்கப்பட்டுள்ளது அப்படியானல் அவர்கள் அல்லாஹ்வின் அருள்மறையான குர்ஆனையும் மற்றும் நபிகளாரின் வாழ்க்கை நெறிமுறையான ஹதீஸ்களையும் முறையாக பற்றிப்பிடித்து அதன்படி உத்தமமாக வாழ்ந்த, வாழுகின்ற, வாழப்போகின்ற உண்மை பேசுபவர்கள் என்ற அடிப்படையில் சிந்தித்தால் இந்த வசனத்திற்கான விடை கிடைக்கிறது. இதோ கீழ்கண்ட இந்த வசனத்தை யார் பற்றிப் பிடிக்கிறாரோ அவர் உண்மையாளர் என்ற பட்டியலில் அடங்கலாம்!
''நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! அல்குர்ஆன் (3 : 31)
என்னடா இது! இந்த வசனத்தை பின்பற்றினால் போதுமா உண்மையாளர் ஆகிவிடமுடியுமா? என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு வரலாம் பயப்படாதீர்கள்! இங்கு அல்லாஹ்வை விரும்பினால் என்னை பின்பற்றுங்கள் என்று கூறப்பட்டுள்ளது அதாவது நபிகளாரை மட்டும் பின்பற்றினால் பயன் ஏதும் கிடையாது மாறாக அல்லாஹ்வை விரும்பி நபிகளாரை பின்பற்ற வேண்டும் அதாவது அல்லாஹ்வின் வார்த்தைகளான அருள்மறை குர்ஆனுக்கு மதிப்பளித்து நபிகளாரின் வாழ்க்கை நெறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது! குர்ஆன் ஹதீஸ்களை முழுமையாக பின்பற்றுவது!

சிந்தித்துப்பாருங்கள் சகோதரர்களே!

· அல்லாஹ்வை விரும்புபவர் அல்லாஹ்வுக்கு மிகவும் அஞ்சுபவராக இருப்பார்! அல்லாஹ்வுக்கு மாறு செய்ய மாட்டார்
· அல்லாஹ்வின் தூதரை பின்பற்றுபர் அல்லாஹ்வின் தூதர் செய்யாததை செய்யமாட்டார்! அல்லாஹ்வின் தூதரின் கட்டளைகளை அணுவணுவாக அப்படியே பின்பற்றுவார்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொய் கூறியது உண்டா? புறம் கூறியது உண்டா? இவ்வாறு நல்ல பண்புகளை கொண்டு திகழ்ந்ததன் காரணத்தினாலேதானே அவர் அல்அமீன் என்ற அழகான பெயரை பெற்றார் இன்று நம்மில் அல்அமீன்கள் உள்ளனரா? இன்று நாமெல்லாம் நாடகமாடும் நடிகர்களாக இருக்கிறோம் நபிகளாரோ என்றுமே அல்அமீனாக இருக்கிறார்! (சுப்ஹானல்லாஹ்)
இன்று நாம் பொய்யும் கூறுகிறோம், புறமும் கூறுகிறோம் அப்படியானால் நாம் எவ்வாறு உண்மையாளர்களாக முடியும்! எனவேதான் அல்லாஹ்வை விரும்பினால் என்னை பின்பற்றுங்கள் என்று கூறப்பட்டுள்ளது!
அப்படியே நாம் உண்மையாளர்களாக இருந்தாலும் அல்லாஹ் நம்மை விரும்புவது நமக்கு தெரியாது அது மறுமையில்தான் தெரியவரும்! எனவே நாம் நம்மை அவ்லியா என்று கூறிக்கொள்ள முடியாது! அல்லாஹ் நம்மை விரும்புவது ஜிப்ரயீல் (அலை) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டு மலக்குமார் களுக்கு தெரிவிக்கப்படும் அதன் பின்னர் மனிதர்களின் உள்ளத்தில் நம் மீது அன்பு ஏற்படும் மாறாக நம்மை வழிபடும் எண்ணம் ஏற்படாது! ஆனால் இன்று பார்க்கிறோம் அவ்லியாவை நேசிக்கிறோம் என்று கூறி வழிபடுகிறார்கள் இது அல்லாஹ்வின் நேசமா? ஷைத்தானின் தீண்டுதலா?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹ் ஒரு அடியானை நேசித்தால் ஜிப்ரீலை அழைத்து இன்னாரை நான் நேசிக்கிறேன் என்று அல்லாஹ் கூறுவான். விண்ணகத்தில் ஜிப்ரீல் இதை அறிவிப்பார். பிறகு பூமியில் உள்ளவர்களுக்கு அவர் மீது அன்பு ஏற்படுகிறது. அல்லாஹ் ஒரு மனிதனை வெறுத்தால் ஜிப்ரீலை அழைத்து இன்னாரை நான் வெறுக்கிறேன் என்று கூறுவான். இதை ஜீப்ரில் விண்ணகத்தில் அறிவிப்பார் எனவே பூமியில் உள்ளவர்களுக்கு அவர் மேல் வெறுப்பு ஏற்படுகிறது.' அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு நூல் : திர்மிதி (3085)


அல்லாஹ் யாரை பொருந்திக்கொள்கிறான் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

அல்லாஹ் யாரை பொருந்திக்கொள்கிறான் Empty Re: அல்லாஹ் யாரை பொருந்திக்கொள்கிறான்

Post by ஹனி Sat Mar 27, 2010 9:47 pm

அவ்லியா என்பவர்கள் யார்?
இந்த அவ்லியா என்று சொல்லி
அவர்களை பின் பற்றுபவர்கள் நேசிப்பவர்கள்
நிச்சயமாக அல்லாஹ்க்கு இனை வைத்தவர்களாவார்கள்.
இத்தீய செயலில் இருந்து எங்களை காப்பாற்று நாயனே

நன்றி அஸ்லி
நல்ல ஹதீஸ் நன்றி நன்றி


அல்லாஹ் யாரை பொருந்திக்கொள்கிறான் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

அல்லாஹ் யாரை பொருந்திக்கொள்கிறான் Empty Re: அல்லாஹ் யாரை பொருந்திக்கொள்கிறான்

Post by எஸ்.அஸ்லி Sun Mar 28, 2010 9:25 pm

நன்றி சகோதரி ஹனி. அல்லாஹ் யாரை பொருந்திக்கொள்கிறான் 678642


அல்லாஹ் யாரை பொருந்திக்கொள்கிறான் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

அல்லாஹ் யாரை பொருந்திக்கொள்கிறான் Empty Re: அல்லாஹ் யாரை பொருந்திக்கொள்கிறான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum