ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருமகள்

Go down

மருமகள் Empty மருமகள்

Post by அப்புகுட்டி Fri Mar 26, 2010 3:19 am

கணவனின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது? புவனாவின் முகத்தில் குழப்ப ரேகைகள் கோலமிட்டன. பழைய நினைவுகள் அவள் மூளை செல்களுக்குள் ஆர்ப்பரிக்க... மெதுவாக சுதாரித்துக் கொண்டாள்.

``என்னை மன்னிச்சிடுங்க. கண் ஆபரேஷன் பண்ணிக்க போற உங்கம்மாவுக்கு துணையா ஆஸ்பத்திரிக்கு நíங்க வேற யாரையாவது அழைச்சிட்டு போங்க.'' அதிர்ந்தான் விஜய்.

மனைவியைக் கோபத்துடன் பார்த்துவிட்டு அந்த இடத்தை விட்டு வேகமாக அகல... புவனா அறை மூலையிலிருந்த நீலநிறப் பெட்டியைத் திறந்து அதைக் குடைய ஆரம்பித்தாள். மூன்று நிமிடத் தேடலுக்குப் பின்... லேசாக கசங்கியிருந்த அந்தக் காகிதம் கிடைத்தது. அதை பிரித்துப் படிக்க ஆரம்பித்தாள்.

அவள் கண்களில் இருந்து கண்ணீர்த்துளிகள் விழ ஆரம்பித்தன. மூன்று நாட்கள் ஓடி விட்டன. வீட்டை கனத்த மவுனம் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. விஜய் புவனாவோடு பேசுவதில்லை. சாவித்திரியும் மருமகளோடு பேச்சை நிறுத்தி விட்டிருந்தாள். ``அம்மா.. ஸ்கூலுக்கு போயிட்டு வரோம்... டாடா...'' வாரிசுகள் நரேனும் ரூபினியும் கோரசாகக் கத்த... ``போயிட்டு வாங்க.. டாடா...'' என்று சொல்லிவிட்டு புவனா பூஜையறைக்குள் நுழைய...

``புவனா...'' விஜய்யின் உஷ்ணமான குரல்! பூகம்பம் ஆரம்பமாகப் போகிறது என்ற உண்மை புவனாவுக்குப் புரிந்தது. ``சொல்லுங்க..'' ``அம்மாவை அடுத்த வாரம் ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணலாம்ன்னு இருக்கேன். அம்மாவுக்கு துணையா இருக்க என் அக்கா ஒத்துக்கிëட்டாங்க. நரேனையும் ரூபினியையும் நாங்க ஆஸ்பத்திரில இருந்து வர்ற வரைக்கும் சித்தப்பா வீட்ல விட்டுடலாம்ன்னு இருக்கேன்...'' ``சொல்லுங்க...'' ``உங்கம்மா வீட்டுக்கு நீ கிளம்பு. தேவைப்படறப்ப நான் வந்து கூட்டிட்டு வரேன்...''

``தேவைப்படறப்ப'' என்ற வார்த்தையில் மட்டும் அதிக அழுத்தம்! கலகலவென்று சிரித்தாள் புவனா. அவள் இமையோரங்களில் லேசான கண்ணீர்த் துளிகள். ``வெரிகுட். உங்களை நான் என்னமோன்னு நினைச்சேன். என்ன இருந்தாலும் நீங்க ஆம்பளை ஜாதியாச்சே. அதைத்தான் இப்ப நல்லா நிரூபிக்கிறீங்க. உங்க அம்மா கூட நான் துணைக்கு போகலங்கறதுக்காக என்னை என் அம்மா வீட்டுக்கு போக சொல்றீங்க. அப்படித்தானே...?''

``என் மகன் சொல்றதுல என்னடி தப்பு இருக்குது? என் கூட ஒரு வாரம் ஆஸ்பத்திரிக்கு வந்து தங்கறதுக்கு கூட உனக்கு விருப்பம் இல்லை. உன் மாதிரி ஒரு மோசமான மருமகள் இருக்கிறதை விட இல்லாம இருக்கிறதே, மேல்'' அமிலம் கலந்த வார்த்தைகளை சாவித்திரி வீச...``அத்தை...என்னை மோசமான மருமகள்ன்னுதானே சொல்றீங்க... ஒரு நிமிடம் பொறுங்க...''

புவனா அவளுடைய அறைக்குள் வேகமாக நுழைந்தாள். இரண்டு நிமிடங்களுக்குப் பின் திரும்பிய புவனாவின் கையில் அந்த கசங்கிய காகிதம் இருந்தது. ``என்ன திகைக்கறீங்க? உங்களுக்கு ஞாபகம் இருக்கா? நரேன் பிறந்து மூணு மாசம் ஆனப்ப என் அம்மா வீட்ல இருந்து என்னை அழைச்சிட்டு போகச் சொல்லி உங்களுக்கு ஒரு போன் பண்ணேன். அதுக்கு நீங்க போன்ல பதில் சொல்லாம இந்த பதில் கடிதத்தை எனக்கு அனுப்பியிருந்தீங்க.

இந்தாங்க.. இதைப் படிங்க..'' விஜய் கடிதத்தைப் படிக்காமல் மவுனம் சாதிக்க.. ``உங்களால அதைப் படிக்க முடியாது. நானே படிக்கிறேன்... கேளுங்க.. '' உரத்த குரலில் படிக்க ஆரம்பித்தாள். அன்புள்ள புவனாவுக்கு, அங்கு உன் அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் இருப்பதால் குழந்தையை எடுத்துக் கொண்டு மூன்று மாதத்திலேயே இங்கு வந்து விடட்டுமா என்று போனில் கேட்டாய். இதுகுறித்து அம்மாவைக் கேட்டுப் பார்த்தேன்.

பச்சை உடம்புக்காரியான உன்னையும், குழந்தையையும் பார்த்துக் கொள்ளும் அளவுக்கு உடம்பில் தெம்பில்லை என்று என் அம்மா உறுதியாக சொல்லி விட்டார்கள். எனவே நீ இன்னும் இரண்டு மாதங்கள் அங்கேயே அட்ஜஸ்ட் செய்து கொண்டு இருக்கவும். மற்றபடி இங்கு அனைவரும் நலம். கடிதம் படித்து முடித்தவள், ``இப்ப புரியுதுங்களா.. நரேன் பிறந்தப்ப என்னைக் கவனிச்சிருக்கிறதுக்கு உங்கம்மா தயாரில்லை. ரூபினி பிறக்கறப்பவும் என்னை என் அம்மா வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. இதுக்குப் பின்னால, பைல்ஸ் ஆபரேஷன் பண்ணிக்கிட்டேன்.

ஆபரேஷனுக்கு முதல் நாளே எங்க அம்மாவை இங்கு வரவச்சிட்டு உங்கம்மா டாடா சொல்லிட்டாங்க. ஆக உங்கம்மா இதுவரைக்கும் எனக்காக ஒரு மைக்ரோ செகண்ட்டை கூட செலவழிக்கலை. இதெல்லாம் உங்களுக்கும் நல்லாவே தெரியும். இப்ப என்கிட்ட இவ்வளவு கடுமையா நடந்துக்கிற நீங்க அப்ப ஏன் உங்கம்மா கிட்ட நியாயம் பேசலை?? வார்த்தைகள் தோட்டாக்களாப் பாய... சாவித்திரியின் முகத்தில் வியர்வைத் துளிகள்... எந்தப் பதிலும் சொல்ல இயலாமல் மவுனமாய் நின்றான் விஜய்.

``ஆனா ஒண்ணு மட்டும் உண்மைங்க... என்னைக்கு உங்க மாதிரி ஆம்பளை ஜாதிங்க அம்மாவையும், மனைவியையும் சமமா நடத்தற மனப்பாங்கை அடையறாங்களோ, அன்னைக்குத்தான் திருமணமான பொண்ணுங்களுக்கு நல்ல காலம். இல்லன்னா என் மாதிரி காலத்துக்கும் கஷ்டப்பட வேண்டியதுÖன்...'' புவனாவின் தொண்டை கரகரத்தது. ``உங்கம்மா மாமியாருக்குரிய கடமையை செய்யாம இருக்கலாம்.

ஆனா மருமகளுக்குரிய கடமையை நான் செய்யத் தயாரா இருக்கேன். உங்கம்மாவுக்குத் துணையா நானே ஆஸ்பத்திரிக்குப் போறேன். என் மனசுல ரொம்ப நாளா இருக்கிற ஒரு ஆதங்கம் உங்களுக்கு தெரியுணுமேன்னுதான் நான் இப்படி நடந்துக்கிட்டேன். இப்ப என் மன ஆதங்கம் தீந்துடிச்சி. நான் தப்பா பேசியிருந்தா என்னை மன்னிச்சிடுங்க..'' அழுதுகொண்டே புவனா பேசிமுடிக்க... விஜய்யும் சாவித்திரியும் அவளை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.!

இரா. வசந்தராசன்


மருமகள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum