ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலிகளைத் தாண்டும் வேர்கள் - கவிதைத் தொகுதி விமர்சனம் (இலக்கியக் கட்டுரை)

Go down

வேலிகளைத் தாண்டும் வேர்கள் - கவிதைத் தொகுதி விமர்சனம் (இலக்கியக் கட்டுரை) Empty வேலிகளைத் தாண்டும் வேர்கள் - கவிதைத் தொகுதி விமர்சனம் (இலக்கியக் கட்டுரை)

Post by mannar amuthan Mon Mar 22, 2010 11:50 am

ஆக்கம்: மன்னார் அமுதன்


அநுராதபுர மாவட்ட மண்ணிலிருந்து கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவரும் சிற்றிலக்கிய இதழான படிகள் சஞ்சிகை இலங்கை இலக்கிய வளர்ச்சியில் பாரிய பங்காற்றி வருவது அனைவரும் அறிந்ததே.இத்தகைய நிலையில் படிகள் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் முதலாவது கவிதைத் தொகுதியே “வேலிகளைத் தாண்டும் வேர்கள்”. இலங்கை அநுராதபுரத்தின் இலக்கிய ஆளுமைகளான அன்பு ஜவகர்ஷா, பேனா மனோகரன், கெக்கிராவ ஸஹானா, நாச்சியாதீவு பர்வீன், கெக்கிராவ ஸுலைஹா, அநுராதபுரம் ரஹ்மத்துல்லாஹ், எல்.வஸீம் அக்ரம், எம்.சீ.ரஸ்மின், அநுராதபுரம் சமான் ஆகிய ஒன்பது கவிஞர்களின் கவிதைகளை உள்ளடக்கியதாக மிகவும் கனதியான படைப்பாக வெளிவந்துள்ளது "வேலிகளைத் தாண்டும் வேர்கள்”.

இலங்கை தமிழ் இலக்கிய வட்டத்தில், அநுராதபுரம், இன்று இலக்கிய ஆர்வலர்களின் அவதானத்துக்குரிய இடமாக மாற்றம் பெற்றுள்ளது. ஏனெனில் நடுவீட்டில் அமர்ந்திருந்து வேற்றுமொழியில் புலமையைச் சப்புக் கொட்டும் தமிழ்ப் பண்டித மணிகளின் மத்தியில், சுற்றிலும் சிங்கள ஆளுகைக்குட்பட்ட இம்மண்ணிலிருந்து கொண்டு அன்றாடப் பயன்பாட்டில் தாய்மொழியை உபயோகப்படுத்துவதும், தாய்மொழியின் இருப்பை இலக்கியத்தின் மூலம் வெளிப்படுத்துவதும் பெருமிதமடையச் செய்கிறது.

இத்தொகுதி ஒன்பது கவிஞர்களின் தெரிவு செய்யப்பட்ட கவிதைகளைத் தாங்கி வந்துள்ளதால் அனைத்துக் கவிதைகளும் பொருள் செறிந்த கனதியான கவிதைகளாகவே உள்ளன. இத்தகைய கவிதைத் தொகுப்புகள் ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும், இனிவரும் சந்ததிகளுக்கும் பயனுள்ளதாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

வானம்பாடிகள் காலத்திலேயே தனது இலக்கியப் புலமையால் சமூகத்திற்கு வெளிச்சமிட்ட அன்பு ஜவஹர்ஷா இன்று வரை அநுராதபுர மண்ணில் பல இளம் இலக்கியக் கொடிகள் செழித்து வளர உரமாயிருந்து நிறை குடம் தளும்புவதில்லை என நிரூபித்திருக்கிறார். 1973,74,75 ஆம் ஆண்டுகளில் இவரால் எழுதப்பட்ட காவிகளும் ஒட்டுண்ணிகளும், முன்னேற்றம், ஒரு “பொறி” தெறிக்கின்றது, ஒரு முடிவு, தேர்தல்முடிவு, மொழி வெறி, ? என ஏழு கவிதைகள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

தேர்தல் முடிவு

தாசிகள் கூட்டத்தில்
கற்புள்ளவளைத் தேடி
கண்ட வெற்றிகள்


எனும் கவிதை, கவிதைக்கு அளவு முக்கியமல்ல, கருத்தழகே முக்கியம் என்பதைத் தெளிவாக விளக்குவதாக அமைகிறது. தேர்தல் பற்றியும் சுதந்திரம் பற்றியுமான கவிதைகளுக்கு எண்ணிக்கையிலும் தரத்திலும் குறைவிருப்பதில்லை. இக்கவிதையைப் படித்ததும் கவிக்கோ. அப்துல் ரகுமானின் “ஐந்தாண்டுக்கு ஒரு முறை” கவிதை நினைவிற்கு வந்தது.

புறத்திணைச் சுயம்வர மண்டபத்தில்
போலி நளன்களின் கூட்டம்
கையில் மாலையுடன்
குருட்டு தமயந்தி.......
(அப்துல் ரகுமான்)

இன்றைய கண்துடைப்பு அரசியலின் தலையில் சம்மட்டியால் அடித்தது போல் உள்ளது தேர்தல் முடிவு. ஆயினும் எத்தனை பேருக்கு உறைக்கும் என்பது கேள்விக் குறியே. ஆயிரம் சாடினாலும் எதற்கும் சளைக்காமல் ஊழல் பெருப்பது அரசியலில் வாடிக்கை. இனப்பற்றுள்ள இளைஞர் இயக்கங்கள் சமூகத்தில் உருவாகத வரை அவர்கள் ஆளவே செய்வார்கள். நாம் மீளவே முடியாது.

கொய்யா மரங்களில்
குருவிகள், குஞ்சுகளின்
குருகுலப் பயிற்சிகள்...
.......
..........
இப்படியாக தோப்பும் துரவுமாக
தோரணக் கோலாகலம்
எங்கள் தொலை தூரக்கிராமம்

இப்போது இறுகிப் போன
காங்கிரீட் கட்டுமான அறைகளில்
கண்ணாடித் தொட்டிகளில்
வண்ண மீன்களும்
கம்பிக் கூண்டுகளில்
காதல் பறவைகளும்
சிறைப்பட்டிருக்க...

தொலைக்காட்சிப் பெட்டியில்
தொலைந்து போயிருக்கின்றன
நான் பெற்ற செல்வங்கள்...


என சந்ததி இடைவெளியிலும், தரிப்பிடம் இல்லாக் காலத்தின் கால்களிலும் மிதிபட்டு மறைந்து போகும் பழைய நினைவுகளையும் ஏக்கத்தோடு இரைமீட்டுகிறது பேனா மனோகரனின் “நான் பெற்ற செல்வங்கள்”. இவர் சுமைகள் மற்றும் கற்றறிந்த காக்கைகள் என இரு கவிதைத் தொகுப்பின் ஆசிரியராவார். இவரது “அருவி ஆறு முதல் வைகை ஆறு வரை” கவிதை ஈழத்தமிழர்களின் சாபக்கேடான புலம்பெயர் வாழ்வைக் குறிக்கிறது.

“இருதயத்தில் முள்முடி
இறங்கியதால்
கடைவாயில் கவிதைக் குருதி வழிய”
எனும் வரிகள் கவிதை எப்படிப் பட்ட வலிகளின் அடிப்படையில் பிறக்கிறது என்பதற்கான நல்விளக்கமாக உள்ளது.

பெண்ணியம் என்பது ஆண்கள் எவ்வாறு பெண்ணைப் பார்க்கிறார்கள் என்பதல்ல. இச்சமூகத்தில் பெண் எவ்வாறு தன்னை உணர்கிறாள் என்பதே. நமது சமூகக் கட்டமைப்பின் படி ஏதோவொரு வகையில் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் சார்ந்தே வாழ்கின்றனர். தேவையுடையவர்களாய் இருக்கிறார்கள். பாரதியும் பெண்ணியம் பாடியவன் தான். இன்று பெண்ணியம் பேசும் பலர் பொதுவான சுதந்திரத்திற்கும், கட்டுப்பாட்டிற்கும், அடிமைத்தனத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கின்றனர். பெண்ணியம் பேசும் பெரும்பாண்மையான படைப்புகள் ஆணின் பார்வையில் பெண் எனும் ஒரே அங்கத வர்ணணைக் கோட்பாட்டில் நிர்வாணமாய்ப் பயணிக்க எத்தனிப்பதுடன், புணர்ச்சியையும், பாலியலையும், பெண்ணின் அங்க வர்ணணைகளையும் மட்டுமே பாடிப் பரவசப் படுத்தும் போக்கைக் கையாள்வது வருந்தத் தக்கது.

இவற்றிற்கு மத்தியில் பெண்ணியம் சார்ந்த கவிதைகளைப் படைத்துத் தந்திருக்கிறார் கெக்கிராவ ஸஹானா. எப்பவும் எம்மை அடக்கி வைக்கும் உனக்கு, ஆக்கிரமிக்கப் பட்ட பலஸ்தீனம், உனது ஆசிரியத்துவம், இருட்தேர், மெனோபஸ், ஆகிய கவிதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. மேலும் கெக்கிராவ ஸுலைஹா மற்றும் நாச்சியா தீவு பர்வீனின் பெண்ணியம் பேசும் கவிதைகளும் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன.

மாதந்தோறும் வலியில் துடித்து
மெனோர்ச் வட்டத்தில்
திமிறிய வயிறு

வளமிக்க கருப்பை
தன் வாழ்வு முடித்த ஒரு போதில்,

கன்ணீர் சிந்தி
மறுபுறம் திரும்பிப் படுத்த
சின்னம்மா
அடுத்த நாள் கண்விழித்தாள்

கையிலிருந்த மகளை நீட்டினேன்
“ஐயோ பெண் குழந்தை”
(மெனோபஸ் - கெக்கிராவ ஸஹானா)

எனும் கவிதை வரிகள் பெண்களின் மாதச் சக்கரத்தின் வலிகளில் சுழல்கின்றது. சில விடயங்களைப் பேசத் துணிவு வேண்டும். அதைவிட அதை எப்படிப் பேசுவது எனும் தெளிவு வேண்டும். அத்தெளிவை நாம் இக்கவிதை வரிகளில் கண்டு கொள்ளலாம். பெண்ணிற்கு மாத வலி வந்தால் வந்த நாட்களில் மட்டுமே வலி. வராவிட்டால் காலமெல்லாம்.


அந்த ஒருத்தியைத் தவிர, ஒரு இராணுவச் சிப்பாயின் வாக்கு மூலம், வேலிகளைத் தாண்டும் வேர்கள், அலறும் ஆத்மாக்கள், பேய்கள் என ஐந்து கவிதைகளைத் தந்துள்ள நாச்சியா தீவு பர்வீன் பெண்ணிய உணர்வுகளையும் தன் கவிதையில் சிறப்பாக வெளிப்படுத்தி வருபவர். வேலிகளைத் தாண்டும் வேர்கள் எனும் கவிதையில்
...

வரன் என்ற போர்வையில்
வாய்ப்பதெல்லாம் ஆயுள் தண்டனை
தோள் தினவெடுக்கும் போதுகளில்
திண்பண்டமாய் ஆகிப் போய்விட்டது
நமது நிலை
….

...
என பெண்களின் வாழ்க்கைப் போராட்டத்தை வென்று தருகிறார்.இவரின் “ஒரு இராணுவச் சிப்பாயின் வாக்கு மூலம்” புதிய கோணத்தில் வெளிப்படும் ஒளிவெள்ளமாய்த் தெறிக்கிறது.
........
........
எனக்கு விருப்பமில்லை
காக்கி உடையணிந்து கொண்டு
நிசப்தம் நிறைந்த இரவுகளில்
தெருத் தெருவாய் அலைந்து
அமைதியைக் குழப்பும் வண்ணம்
அவசரத் தேடுதல் நடத்துவதும்
மக்களை அவதியுற வைப்பதற்கும்...
எனத் தொடங்கி
..........
.........
இருந்தும் இருந்துமென்ன
எல்லாமே செய்ய வேண்டியுள்ளது
மரபைக் கடக்கும் மனித உருவில்
மனிதம் கொன்று புதைத்து
எல்லாம் செய்ய வேண்டியுள்ளது

ஏனென்றால்...
ஏனென்றால்...
இது மேலிடத்து உத்தரவு

என முடியும் இக்கவிதை சிப்பாய் செய்த காட்டுமிராண்டித் தனங்களுக்கான ஒரு ஒப்புதல் வாக்கு மூலமாக விளங்கும் அதே வேளை, சிப்பாய்க்கும் இருதயமுண்டு என நமக்கெல்லாம் நினைவு படுத்துகிறது. உணவிற்காய் மனச்சாட்சியைக் கொன்றுவிட்டு, கேள்வியெழுப்பாமல் சேவகம் செய்வதாகவே சித்தரிக்கப் பட்டுள்ள உணர்வுகளில் சிப்பாயின் செயல்களுக்கும், செயல்களின் விளைவுகளுக்கும், சிப்பாய்க்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தன்னை நிரபராதியாய்க் காட்டிக் கொள்ள முனையும் பாங்கு இலைமறை காயாகிறது. கலகத்தைக் கட்டுப்படுத்த கலகக்காரர்களை அடக்கும் போது சில பொதுமக்களும் பாதிக்கப் படுவது உண்மை தான். ஆனால் அப்பாவிப் பெண்களின் கற்பப்பைகளில் தங்கள் துவக்குகளால் தேடுதல் நடத்திக், காம வெறியினைத் தணித்துக் கொண்ட காடையர்களை என் சொல்வது.

சிப்பாய் மனசாட்சியைக் கொன்றுவிட்டு விருப்பமின்றியே செயல்படுகிறான், எய்தவன் இருக்க அம்பை நோவானேன் எனும் நேர்காட்சி வாதத்தையே ஆசிரியர் முன்வைக்கிறார். இக்கவிதை இனங்களுக்கிடையேயான புரிந்துணர்வுகளை கட்டமைக்கும் பாலமாக செயல்பட முயற்சிப்பது அருமை. காலையில் அம்மாவென்றழைத்து கையால் உணவுண்டவன் இரவில் முந்தானையைப் பிடித்திழுத்த நினைவுகளும் இக்கவிதையைப் படிக்கும்போது பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு வந்தே தீரும். மனப்புண்களுக்கு காலம் தான் மருந்திட வேண்டும்.

மற்றொரு பெண் படைப்பாளியான கெக்கிராவ ஸுலைஹாவின் கதிரைகள், உனதான புத்தகங்களும் எனதான முடிவுரைகளும், பள்ளியிடைவிலகளில், என் முதலும் இறுதியுமான தேவதைக்கு என நான்கு கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பிடித்துள்ளன.
....
....
சமையலறைத் தொட்டி நிரம்பிய பாத்திரங்களும்
பெருக்க வேண்டிய வாசல் கொல்லைப் புறத்தினதும்
கழுவியுலர்த்தியிருக்க வேண்டிய உடுப்புகளதும்
நினைவுகள் ஒரு முகமாய் வந்து
தூக்கத்தைக் காவு கொள்ளும்
....

....
எனும் பள்ளியிடைவிலகலில் கவிதை வரிகள் குடும்பப் பாரத்தைச் சுமக்குமாறு நிர்பந்திக்க பட்டுள்ள சிறுமியின் நினைவலைகளைப் பகிர்கிறது. குடும்ப பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் நம்மைச் சுற்றிலும் ஏராளமானவர்கள் உண்டு. பெண்களை வேலைக்கு அனுப்பி விட்டு அவர்கள் தூக்கம் விற்று உழைக்கும் பணத்தை குடித்தே அழிக்கும் ஆண்களையும் இக்கவிதை உள்வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. தன் வாழ்வையே அர்ப்பணித்து, பிள்ளைகளுக்காக உருகி அழிந்தாலும் ஒவ்வொரு வீடுகளிலும் வாழும் தெய்வமான தாய் பற்றிய கவிதை “என் முதலும் இறுதியுமான தேவதைக்கு” நெஞ்சை உருக்குகிறது.

”காது மடல்களில்
உங்கள் நகப் பதிவுகளை வைத்திருக்கிறேன்
உங்கள் அன்பின் அடையாளமல்லவா அது..”
என நம் காதுகளை ஒரு முறை தடவிப் பார்க்கச் செய்யும் எம்.சீ.ரஸ்மினின் “நீங்கள்... நீங்கள்...” ஒரு மாணவனின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறது. அழுகைக்கு எத்தனை முகம், ஏமாற்றத்தின் வழியே நீளும் துன்பம், தேடுதல் என்பவை தொகுதியிலிடம் பெற்றுள்ள இவரது பிற கவிதைகளாகும்.
........
........
அவன் எத்தனையோ
தடவை என் முகத்தில்
காறி உமிழ்ந்தான்
எனக்குத்தான் சூடு சுரணைகளெல்லாம்
செத்துவிட்டதே
இன்னும் அவனின்
சிரசையே
வருடிவருகிறேன்

….

என்கிறது “பொறுத்தது போதும்!”. இக்கவிதை மனித இயலாமையைப் பேசுகிறது. இன்றும் பல மனிதர்கள் தங்களை அடிமைப்படுத்திக் கொள்வதில், அடிமையாய் வாழ்வதில் சுகம் கண்டவர்கள். காய்ந்த எலும்பைக் கடிக்கையில் வடியும் தன் இரத்தத்தையே மயக்கத்தில் சுவைக்கும் மிருகங்களைப் போல் அடிமைப்படுவதில் ஆர்வம் கொண்டவர்கள். இலக்கியத்திலும் இன்று மிதவாத இலக்கியம் படைத்தல் என்ற போர்வையில் அடிவருடலே நடைபெற்று வருவது யாவரும் அறிந்ததே. மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும் எனும் மூத்தோர் வாக்குக் கூறும் நம்நாட்டில், நம்மவர்களைக் காறி உமிழ்ந்தாலும் சகித்துக் கொள்வார்கள், நாளைய விருதுகளுக்காக. வரிசைகள், காணாமல் போன கதைகள், விஷ விருட்சங்கள், பொறுத்தது போதும் ஆகிய கவிதைகளையும் தந்துள்ளார் அநுராதபுரம் ரஹ்மத்துல்லாஹ்.
....
....
இன்பச் சாயலை
இரசனையை
உறிஞ்சிக் குடிக்கும் வெறியில்
இனத்துவப் பெரு நாய் நகர்கிறது
…..

….
எனும் வரிகளுடன் துவேசப் போதையைச் சாடி நகரும் ”சுதேச உரிமைகளைத் தொலைத்தல்” எனும் வஸீமின் கவிதை அதிகாரம் என்பது அடக்கியாளுதல் இல்லை எனும் கருத்தைச் சொல்கிறது. எச்சக் கோடு வரைதல், இழந்தவைகளைப் பற்றி, மொழி மற்றும் இரவு ததும்பிய மாலை போன்ற கவிதைகளும் காத்திரமான வரிகளைத் தாங்கி நிற்கிறது.

நாளுமோர் அகதி
ஈழம் இன்று ஈரலித்து விட்டது
சோகக் கண்ணீரால்
தாவித்திருந்து நடை பயின்ற
கால் நடைகளோ அல்லது
மனித ஜீவன்களோ யாதேனும் தென்படவில்லை...
....
...
அனைத்தும் ஒரு நொடியில்
நிகழ்ந்து மறைந்தது
கடற்கரையில் நின்று
கவி புனைகிறேன்
நானுமோர் அகதியாய்


என அலறித் துடிக்க வைக்கும் வலிகளை கவிதை வரிகளில் வடித்துத் தந்திருக்கிறார் அநுராதபுரம் சமான். காதலித்துப் பார், கண்ணில் உயிர் வாழும் கண்ணீர், என்னிலிருந்து என் அநீளும் இவரது படைப்புகள் தன்னுணர்ச்சி நிறைந்தவையாக உள்ளது.

அநுராதபுரம் சமான் மற்றும் ரஹ்மதுல்லாஹ் தவிர்ந்த ஏனைய 7 கவிஞர்களும் குறைந்தது ஒரு புத்தகத்தை இலக்கியத் தடத்தில் பதித்துள்ளனர். கவிதைகளுக்கு நூலுருவாக்கம் கொடுப்பது பெருவானில் பறப்பதற்காக கூண்டைத் திறந்து குருவியை விடுவிப்பது போன்று மகிழ்ச்சியான நிகழ்வாகும். பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் படைப்பாளிகளின் ஆக்கங்கள் இத்தகைய தொகுதிகளில் உள்வாங்கப் படுவது கவிதைகள் காற்றில் கரைந்து விடாமல் காக்கும். இவற்றையும் தாண்டி புத்தகம் முழுவதும் உணர்ச்சிக் குவியலாய்க் கவிதைகள் நிறைந்து கிடக்கின்றன. வாசித்து முடிக்கையில், மனம் நிறைமாதக் கற்பினி போல் வீங்கிப் போய் விடுகிறது. அவளுனரும் அதே வலியையும், சுகத்தையும் நானுமுணர்கிறேன்.


நீங்களும் உணர வேண்டுமா?

கவிதைத் தொகுப்பின் பெயர்: வேலிகளைத் தாண்டும் வேர்கள்
தொகுப்பாளர்கள்: நாச்சியாதீவு பர்வீன் & எல்.வஸீம் அக்ரம்
வெளியீடு: படிகள் பதிப்பகம்
கிடைக்குமிடம்: அனைத்துப் புத்தக சாலைகள்
விலை: 150/=

ஆக்கம்: மன்னார் அமுதன்


அன்புடன்
மன்னார் அமுதன்
[You must be registered and logged in to see this link.]

பலருக்குத் தொண்டைக் குழிக்குள்
அடைத்துக் கொண்டவை தான்
எனக்கோ
விரல்களின் வழியே வீழ்கின்றன - மன்னார் அமுதன்
mannar amuthan
mannar amuthan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 24/02/2010

http://amuthan.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» கவிதைத் தேன் நூலாசிரியர் : முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» [கட்டுரை] “வலியின் புனைபெயர் நீ”- -காதல் கவிதை விமர்சனம் “
» கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு
» தமிழ் இலக்கியக் கலை நூல்கள்!
» ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum