ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராவணன் நல்லவனே..

+10
srinihasan
உதயசுதா
சிவா
Raja2009
கலைவேந்தன்
அ.பாலா
நிலாசகி
prabumurugan
சபீர்
ஹனி
14 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

இராவணன் நல்லவனே.. - Page 2 Empty இராவணன் நல்லவனே..

Post by ஹனி Sun Mar 21, 2010 10:07 am

First topic message reminder :

அழகிழந்தாள் சூர்ப்பனகை
அண்ணனிடம் முறையிட்டாள்..

ஆத்திரம் கொண்டான் அவன்...

கொதித்தெழுந்த இராவணனை
கொஞ்சம் அடக்கிச் சொன்னாள்
சீதையைக் கவர்ந்து வந்து
சிறைவைப்போம் என்றாள் அவள்...

மாரீசன் மாமனுடன் மயில் வாகனமேறி
சென்றடைந்தான் அடர் காடு...

சின்னவோர் மானாக தோன்றிய
மாரீசனை வேண்டி நின்றாள் சீதை...

இராமனால் பிடித்துத் தர
இயலாது அம்பெய்தான்...

இலக்குமணா என்ற குரல்
எங்கும் எதிரொலிக்க
தீங்கேதோ அண்ணனுக்கு
எனச் சீதை இலக்குவன்
எண்ணாத வார்த்தைகளை
எடுத்துரைக்க இளையவனும்
காடு சென்ற தருணம் கண்டு
கண்மணி சீதை தனை
கவர்ந்து வந்தான் இராவணனும்...

சீதை சிறை இருக்க
கோதை அவளை
கொடுமைப் படுத்தாது தன்
காவலிலே வைத்திருந்தான்
கற்பிற்கும் பங்கமின்றி...

இராவணனைக் கொன்ற பின்
இன்சொல் கிளி சீதை தனை
இராமபிரான் மீட்டவளை
தீயில் அமர்ந்துன் கற்பின்
திறன் காட்ட வேண்டும்
என்ற ஆணைதனை ஏற்று
தன்நிலையை நிரூபித்தாள் ...

இராமனின் இச்செயலை
இராவணனோடு ஒப்பிடுங்கால்
இராவணன் நல்லவனே....


இராவணன் நல்லவனே.. - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down


இராவணன் நல்லவனே.. - Page 2 Empty Re: இராவணன் நல்லவனே..

Post by சிவா Sun Mar 21, 2010 12:03 pm

உண்மையில், இராமன் ஆட்சி என்று சொல்லப்படுவது, சிம்மாசனத்தில்
உட்கார்ந்திருந்த செருப்பின் ஆட்சிதான். அந்த ஆட்சியின்போது இராமனும்
சீதையுமே காட்டில் திரிய வேண்டியிருந்தது என்றால், அந்த நாட்டு மக்கள்
எங்கெங்கே திரிந்திருப்பார்களோ! வனவாசம் முடிந்து நாடு திரும்பிப்
பட்டாபிஷேகம் செய்து கொண்ட பிறகாவது ராமனால் சிறப்பாக ஆட்சி செய்ய
முடிந்ததா? இல்லை.... யாரோ எதையோ சொன்னார்கள் என்று மனைவி சீதையை
தீக்குளிக்கச் செய்த பெண்ணடிமைத்தனம்தான் அந்த ஆட்சியில் நிலவியது.
அதன்பிறகும் அவளைக் காட்டுக்கு அனுப்பிவிட்டான் மகாராசன் இராமன்.
இப்படியெல்லாம் சீதை என்ற பெண் தன்னந்தனியாக திரிய வேண்டியிருந்ததை
மனத்தில் வைத்துத்தான், நமது தேசத் தந்தை மகாத்மா காந்தியும், “நடு இரவில்
ஒரு பெண் உடல் நிறைய நகைகளை அணிந்துகொண்டு தன்னந்தனியாக நடக்கும் சூழ்நிலை
இந்த நாட்டில் எற்பட்டால் அதுவே இராமராஜ்ஜியம்” என்றார் போலும்.


http://www.eegarai.net/-f25/-t6590.htm


இராவணன் நல்லவனே.. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இராவணன் நல்லவனே.. - Page 2 Empty Re: இராவணன் நல்லவனே..

Post by சிவா Sun Mar 21, 2010 12:04 pm

கவிதை அருமை ஹனி! இராவணன் நல்லவனே.. - Page 2 677196


இராவணன் நல்லவனே.. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இராவணன் நல்லவனே.. - Page 2 Empty Re: இராவணன் நல்லவனே..

Post by ஹனி Sun Mar 21, 2010 12:20 pm

சிவா wrote:கவிதை அருமை ஹனி! இராவணன் நல்லவனே.. - Page 2 677196
நன்றி அண்ணா உங்கள் விளக்கமும் நன்று
நன்றி நன்றி


Last edited by ஹனி on Sun Mar 21, 2010 7:00 pm; edited 1 time in total


இராவணன் நல்லவனே.. - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

இராவணன் நல்லவனே.. - Page 2 Empty Re: இராவணன் நல்லவனே..

Post by நிலாசகி Sun Mar 21, 2010 12:24 pm

இப்படியெல்லாம் சீதை என்ற பெண் தன்னந்தனியாக திரிய வேண்டியிருந்ததை
மனத்தில்
வைத்துத்தான், நமது தேசத் தந்தை மகாத்மா காந்தியும், “நடு இரவில்
ஒரு
பெண் உடல் நிறைய நகைகளை அணிந்துகொண்டு தன்னந்தனியாக நடக்கும் சூழ்நிலை
இந்த
நாட்டில் எற்பட்டால் அதுவே இராமராஜ்ஜியம்” என்றார் போலும்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி


தீதும் நன்றும் பிறர் தர வாரா இராவணன் நல்லவனே.. - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

இராவணன் நல்லவனே.. - Page 2 Empty Re: இராவணன் நல்லவனே..

Post by உதயசுதா Sun Mar 21, 2010 12:31 pm

Raja2009 wrote:ஹனி அவர்களே,

"
சீதை சிறை இருக்க
கோதை அவளை
கொடுமைப் படுத்தாது தன்
காவலிலே வைத்திருந்தான்
கற்பிற்கும் பங்கமின்றி..."

இராவணன் சீதையின் கற்பிற்கு பங்கம் விளைவிக்காததற்கு காரணம் அவனுக்கு இருந்த சாபம் தான். எந்த பெண்ணையும் அவள் விருப்பமின்றி தீண்டினால் தன் தலை வெடித்து விடும் என்று பிரமன் கொடுத்த சாபம் எனக்கு உண்டு என்று அவனே மால்யவான் என்னும் தன் தாத்தாவிடம் கூறுகிறான். ஆக இதில் தமிழ் பண்பாடு என்பதெல்லாம் இல்லை. உயிர் பயம் தான் இருந்தது. கொடும் சட்டங்கள் கொண்ட அரபு தேசத்தில் குற்றங்களை செய்தால் உயிர் போய்விடும் என்று பயந்து செய்யாமல் இருப்பது போல் தான் இதுவும். தர்மத்தின் காரணமாக அல்ல. அடுத்தவன் மனைவியை கவர நினைப்பதே பண்பாடற்ற செயல். கவர்ந்து வைத்து சிறை வைத்து விட்டு அவளின் மனம் மாற பொய்களையும் மாயங்களையும்(உதாரணம்:-ராமன் இறந்தது போல மாயம் செய்து இராவணன் காட்டுகிறான்) செய்யும் இராவணனிடத்தில் பண்பாடை பார்க்க முடியவில்லை.

பெரிய வீரனாக இருந்தாலும், வேதம் கற்றவனாக இருந்தாலும், இசையில் வல்லவனாக இருந்தாலும் அதர்ம பாதையில் காமம் குடி கொண்டால் அத்தனையும் அழிந்து விடும் என்பதற்கு இராவணன் ஒரு சிறந்த உதாரணம்.

ராஜா
இதைதான் நானும் வழிமொழிகிறேன்.ராமன் சீதையை தீ குளிக்க சொன்னது அவள் பெயரில் இருந்த ஐயப்பாடால் அல்ல.அவனுக்கு தெரியும் சீதை கற்பு உள்ளவள் என்று.அவளுடைய புனிதத் தன்மையை உலகுக்கு அறிவிக்க.
இன்னொருவன் பேச்சைக் கேட்டு சீதைய கானகத்துக்கு அனுப்பினான் என்றால்
அவன் சாதாரண ஒரு குடிமகனுடைய கருத்துக்கும் மதிப்பளித்தான் என்றுதான்
பொருள் கொள்ளவேணும்


இராவணன் நல்லவனே.. - Page 2 Uஇராவணன் நல்லவனே.. - Page 2 Dஇராவணன் நல்லவனே.. - Page 2 Aஇராவணன் நல்லவனே.. - Page 2 Yஇராவணன் நல்லவனே.. - Page 2 Aஇராவணன் நல்லவனே.. - Page 2 Sஇராவணன் நல்லவனே.. - Page 2 Uஇராவணன் நல்லவனே.. - Page 2 Dஇராவணன் நல்லவனே.. - Page 2 Hஇராவணன் நல்லவனே.. - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இராவணன் நல்லவனே.. - Page 2 Empty Re: இராவணன் நல்லவனே..

Post by Raja2009 Sun Mar 21, 2010 1:07 pm

ராமனுக்கு முடி சூடலாமா என்று தசரதன் மந்திரிகளிடத்தும், குருமார்களிடத்தும் வினவும் போது வசிஷ்டர் ராமனுக்கு தகுதியாக "அவன் மனைவி சீதை நல்லவள் என்கிறார்". அதாவது மன்னன் மட்டும் அல்ல..அவன் மனைவியும் தகுதிக்கு உரித்தாக வேண்டும் என்பதே இதன் பொருள்..இன்றைக்கு இந்த தன்மை இல்லாததால் தான் மனைவியின் தாக்கத்தாலும், துணைவியின் தாக்கத்தாலும் அரசியல் அல்லோலப்படுகிறது.

"இராவணனை சொல்லினாலேயே சுட்டுவிடுவேன், ஆனால் அது இராமனின் வீரத்துக்கு இழுக்காகும்" என்று கூறும் சீதையின் தன்மை அறிந்த இராமனுக்கு அவளின் கற்பைப் பற்றிய சந்தேஹம் இல்லை. பட்டத்து ராணியாக (before accepting Public Office)போக இருக்கும் சீதை புனிதமானவள் என்று உலகுக்கு எடுத்துக் காட்டத்தான் அவளை அக்னி பிரவேசம் செய்ய சொல்கிறான். நீதிபதிகளும், பொது வாழ்கையில் வர நினைக்கும் ஒவ்வொருவரும் த்ங்கள் சொத்து கணக்கை காட்டவேண்டும் என்று கோருவதும் ஒரு அக்னி பிரவேசமே...!!

ராஜா
avatar
Raja2009
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009

Back to top Go down

இராவணன் நல்லவனே.. - Page 2 Empty Re: இராவணன் நல்லவனே..

Post by ஹனி Sun Mar 21, 2010 1:10 pm

உதயசுதா wrote:
Raja2009 wrote:ஹனி அவர்களே,

"
சீதை சிறை இருக்க
கோதை அவளை
கொடுமைப் படுத்தாது தன்
காவலிலே வைத்திருந்தான்
கற்பிற்கும் பங்கமின்றி..."

இராவணன் சீதையின் கற்பிற்கு பங்கம் விளைவிக்காததற்கு காரணம் அவனுக்கு இருந்த சாபம் தான். எந்த பெண்ணையும் அவள் விருப்பமின்றி தீண்டினால் தன் தலை வெடித்து விடும் என்று பிரமன் கொடுத்த சாபம் எனக்கு உண்டு என்று அவனே மால்யவான் என்னும் தன் தாத்தாவிடம் கூறுகிறான். ஆக இதில் தமிழ் பண்பாடு என்பதெல்லாம் இல்லை. உயிர் பயம் தான் இருந்தது. கொடும் சட்டங்கள் கொண்ட அரபு தேசத்தில் குற்றங்களை செய்தால் உயிர் போய்விடும் என்று பயந்து செய்யாமல் இருப்பது போல் தான் இதுவும். தர்மத்தின் காரணமாக அல்ல. அடுத்தவன் மனைவியை கவர நினைப்பதே பண்பாடற்ற செயல். கவர்ந்து வைத்து சிறை வைத்து விட்டு அவளின் மனம் மாற பொய்களையும் மாயங்களையும்(உதாரணம்:-ராமன் இறந்தது போல மாயம் செய்து இராவணன் காட்டுகிறான்) செய்யும் இராவணனிடத்தில் பண்பாடை பார்க்க முடியவில்லை.

பெரிய வீரனாக இருந்தாலும், வேதம் கற்றவனாக இருந்தாலும், இசையில் வல்லவனாக இருந்தாலும் அதர்ம பாதையில் காமம் குடி கொண்டால் அத்தனையும் அழிந்து விடும் என்பதற்கு இராவணன் ஒரு சிறந்த உதாரணம்.

ராஜா
இதைதான் நானும் வழிமொழிகிறேன்.ராமன் சீதையை தீ குளிக்க சொன்னது அவள் பெயரில் இருந்த ஐயப்பாடால் அல்ல.அவனுக்கு தெரியும் சீதை கற்பு உள்ளவள் என்று.அவளுடைய புனிதத் தன்மையை உலகுக்கு அறிவிக்க.
இன்னொருவன் பேச்சைக் கேட்டு சீதைய கானகத்துக்கு அனுப்பினான் என்றால்
அவன் சாதாரண ஒரு குடிமகனுடைய கருத்துக்கும் மதிப்பளித்தான் என்றுதான்
பொருள் கொள்ளவேணும்
உங்கள் இருவருக்கும் நான் ஒன்ரை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
ஒரு நாட்டின் அரசன் சாதாராண குடி மகனுக்கு கொடுத்த மதிப்பை தன் மனைவிக்கு ஏன் கொடுக்க வில்லை தன் மனைவி மேல் இருந்த நம்பிக்கையை எடுத்துக் கூறி புரிய வைத்திருக்க வேண்டும். அதை விட்டு மனைவியை தீக் குலிக்கச் சொன்னதும் காட்டுக்கு அனுப்பியதும் தவறே மனைவிக்கு செய்த அநியாயமே.
இதை ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் உங்கள் விருப்பம் நன்றி


இராவணன் நல்லவனே.. - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

இராவணன் நல்லவனே.. - Page 2 Empty Re: இராவணன் நல்லவனே..

Post by கலைவேந்தன் Sun Mar 21, 2010 1:20 pm

அருமையான விவாதம் செல்கிறது.. பொறுத்திருந்து இறுதியில் என் கருத்தைச் சொல்லுவேன்...

- நாட்டாமை கலை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இராவணன் நல்லவனே.. - Page 2 Empty Re: இராவணன் நல்லவனே..

Post by Raja2009 Sun Mar 21, 2010 1:26 pm

ஹனி அவர்களே..

என்னுடைய முந்தைய பதிவும், தங்களுடைய பதிவும் cross ஆகி இருக்கிறது என்று நினைக்கிறேன். என்னுடைய முந்தைய பதிவில் தங்களுக்கான விடை இருக்கிறது. இதை அரசியல் சம்பந்தப்பட்ட முறையாக தான் பார்க்க வேண்டுமே தவிர வேறொன்றுமில்லை.

ராமன் சிந்தையாலும் பிற மாதரை தொடேன் என்று சீதைக்கு வாக்கு கொடுத்து அதை காப்பாற்றியதால் தான் ராமனைப் போல் கணவன் அமைய வேண்டும் என்று பெண்கள் ஆசைப்படுகிறார்கள். கணவனோடு காட்டில் அலைய கூட பெண்களுக்கு மகிழ்ச்சி தான்..ஒரே ஊரில், வீட்டில் சக்களத்திகளோடு போராடும் போது அல்ல...

ராஜா
ராஜா
avatar
Raja2009
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009

Back to top Go down

இராவணன் நல்லவனே.. - Page 2 Empty Re: இராவணன் நல்லவனே..

Post by srinihasan Sun Mar 21, 2010 1:35 pm

ராவணனிடம் காமம் இருந்திருக்கலாம்... அதை பிறகு விவாதிக்கலாம்..

//எந்த பெண்ணையும் அவள் விருப்பமின்றி தீண்டினால் தன் தலை வெடித்து விடும் என்று பிரமன் கொடுத்த சாபம் எனக்கு உண்டு என்று அவனே மால்யவான் என்னும் தன் தாத்தாவிடம் கூறுகிறான். ஆக இதில் தமிழ் பண்பாடு என்பதெல்லாம் இல்லை. உயிர் பயம் தான் இருந்தது.//

அவன் உயிருக்கு பயந்தவன் என்றவன் என்றால், அவன் சீதையை கவர்ந்திருக்கமாட்டான்... அவனுக்கு தெரியாதது அல்ல ராமனின் வீரமும் செயலும்... தெரிந்தும் கவர்ந்ததன் நோக்கம் ராமனையும் வெல்ல முடியும் என்ற தைரியம்...

ராவணை ராமன் கொன்றது அவனுடைய வீரத்தால் அல்ல... ராவணனின் தம்பி அருளிய எளிய வழியினால் மட்டுமே...

ராவணன் வீரன்... உயிருக்கு பயந்த கோழை அல்ல...


Last edited by srinihasan on Sun Mar 21, 2010 1:35 pm; edited 1 time in total
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

இராவணன் நல்லவனே.. - Page 2 Empty Re: இராவணன் நல்லவனே..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum