புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அல்லிக்கேணி அழகன் சாரதி Poll_c10அல்லிக்கேணி அழகன் சாரதி Poll_m10அல்லிக்கேணி அழகன் சாரதி Poll_c10 
336 Posts - 79%
heezulia
அல்லிக்கேணி அழகன் சாரதி Poll_c10அல்லிக்கேணி அழகன் சாரதி Poll_m10அல்லிக்கேணி அழகன் சாரதி Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
அல்லிக்கேணி அழகன் சாரதி Poll_c10அல்லிக்கேணி அழகன் சாரதி Poll_m10அல்லிக்கேணி அழகன் சாரதி Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
அல்லிக்கேணி அழகன் சாரதி Poll_c10அல்லிக்கேணி அழகன் சாரதி Poll_m10அல்லிக்கேணி அழகன் சாரதி Poll_c10 
8 Posts - 2%
prajai
அல்லிக்கேணி அழகன் சாரதி Poll_c10அல்லிக்கேணி அழகன் சாரதி Poll_m10அல்லிக்கேணி அழகன் சாரதி Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
அல்லிக்கேணி அழகன் சாரதி Poll_c10அல்லிக்கேணி அழகன் சாரதி Poll_m10அல்லிக்கேணி அழகன் சாரதி Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
அல்லிக்கேணி அழகன் சாரதி Poll_c10அல்லிக்கேணி அழகன் சாரதி Poll_m10அல்லிக்கேணி அழகன் சாரதி Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அல்லிக்கேணி அழகன் சாரதி Poll_c10அல்லிக்கேணி அழகன் சாரதி Poll_m10அல்லிக்கேணி அழகன் சாரதி Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அல்லிக்கேணி அழகன் சாரதி Poll_c10அல்லிக்கேணி அழகன் சாரதி Poll_m10அல்லிக்கேணி அழகன் சாரதி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அல்லிக்கேணி அழகன் சாரதி Poll_c10அல்லிக்கேணி அழகன் சாரதி Poll_m10அல்லிக்கேணி அழகன் சாரதி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அல்லிக்கேணி அழகன் சாரதி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 30, 2009 2:01 am

அல்லிக்கேணி அழகன் சாரதி Image514


சைவமும் வைணவமும் இரு கண்ணெனத் திகழும் தருமமிகு சென்னையில், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மயிலையில் கபாலீச்வரரும், திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதியும் மக்களுக்கு அருள்புரிந்து வருகிறார்கள். அல்லிக்கேணி ஆலய விக்ரகங்கள் வியாச முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவை.

கோயில், பல்லவர்களால் கட்டப்பட்டது. நூற்றி எட்டு வைணவ திவ்ய தேசங்களில் மிக முக்கியமானது திருவல்லிக்கேணி. திருமங்கையாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார் போன்றவர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமை, பார்த்தசாரதி கோயிலுக்கு உண்டு.

அதுமட்டுமல்ல, ஆளவந்தார் சுவாமிகள், பாஷ்யகாரர், தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீக்ஷிதர், மத்வாசாரியார் போன்ற மகான்கள் தங்கள் பாதயாத்திரையின் போது பார்த்தசாரதியை தரிசிக்காமல் போனதில்லை. அதுவும் த்வைத மத ஸ்தாபகரான மத்வாசாரியார் கைரவணி புஷ்கரணி என்று பெருமைப்படுத்தப்பட்ட கோயிலுக்கு எதிரேயுள்ள குளக்கரையில் ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்தார் என்பார்கள்.

இவ்வளவு பெருமை பெற்ற திருவல்லிக்கேணிக்கு புராண காலத்துப் பெயராக ‘பிருந்தாரண்யம்’ என்றும் ஒரு பெயர் உண்டு. துளசிச் செடிகள் மண்டிக் கிடந்த இடம் என்பதால் அப்பெயர். இங்குள்ள குளமோ கங்கையை விடப் புனிதமானது! சரி... திருவல்லிக்-கேணியில் ஸ்ரீமன் நாராயணன் எப்படி கோயில் கொண்டார்? அதற்கு சுவையான கதை ஒன்று உண்டு.

சிவனுக்கும் பார்வதிக்கும் சிவம் பெரிதா & சக்தி பெரிதா என்று பிணக்கு வந்ததைப்-போல, பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமா-ளுக்கும், லட்சுமிக்கும் ஒரு சமயம் கருத்து வேற்றுமை ஏற்பட்டது.

சினம் கொண்ட லட்சுமி தனியே புறப்பட்டு வருகிறார். எங்கே வருகிறார் மகாலட்சுமி? அத்ரி முனிவர், மார்க்கண்டேயர், பிருகு, ஜாபாலி போன்ற மகரிஷிகள் தவம் செய்து கொண்டிருக்கும் பிருந்தாரண்யம் என்று சொல்லப்படுகிற திருவல்லிக்கேணியில், ஒரு சந்தன மரத்தடியில் அழகிய பெண் குழந்தையாகத் தோன்றுகிறாள் லட்சுமி.

லட்சுமியைக் கண்ட பிருகு முனிவர் மிக்க மகிழ்ச்சியுடன் அக்குழந்தையை தனது மனைவியிடம் கொடுத்து வேதவல்லி என்று பெயரிட்டு வளர்த்து வருகிறார். காலங்கள் விரைவாக ஓடுகின்றன. எத்தனை நாட்கள் மனைவியைப் பிரிந்து இருப்பது-? பாற்கடலில் பள்ளி கொண்ட நாராயணனால், மனைவியைப் பிரிந்து இருப்பது கஷ்டமாக இருக்கவே, பூலோகம் வருகிறார்.

பிருந்தாரண்யத்தில் மனைவியை வேதவல்லி என்கிற பெயருடன் காண்கிறார். பிருகு முனிவரிடம் தான் யார் என்கிற ரகசியத்தைச் சொல்ல, முனிபுங்கவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பிரானையும், பிராட்டியையும் சேர்த்து வைக்கிறார்கள். இந்த «க்ஷத்திரத்தில் பெருமாளே வேங்கட கிருஷ்ணனாகவும், பிராட்டியே ருக்மணியாகவும் காட்சியளிக்கிறார்கள்.

ஆனால், உற்சவ மூர்த்தியின் திருநாமம் பார்த்தசாரதி என்பதாகும். பார்த்தன் என்ற பெயர் கொண்ட அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் தேரோட்டி சாரத்யம் செய்ததால் வேங்கட கிருஷ்ணனே பார்த்தசாரதியாகிறார். கம்பீரமான அற்புதத் தோற்றம் பார்த்தசாரதியுடையது. சில நேரங்களில் திருமலை ஏழுமலையானை விட அற்புதமோ இத்தோற்றம் என மனம் தடுமாறும்.

கம்பீர உருவத்தோடு பெரிய மீசையும் (பொதுவாக வைணவர்கள் மீசை வைத்துக்கொள்ள மாட்டார்கள்) ஆஜானுபாகுவான பரந்தாமனைப் பார்த்தாலே நம்மையறியாமல், ‘‘சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் பிரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே’’ & என்று ஆரம்பித்து, விஷ்ணு சஹஸ்ர நாமம் சொல்லத் தோன்றும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 30, 2009 2:02 am

சுவாமியை அருகே சென்று பார்க்கும் போது ஒரு பரவச நிலை தோன்றும். எதிரே நிற்பவன் கண்ணன். காலத்தை நிர்ணயிப்பவன். குழம்பிய மனத்-தினனான அர்ஜுனனுக்கு தெளிவை ஏற்படுத்த கீதை எனும் சாரத்தை உபதேசித்தவன். பட்டாச்சார்யார் தீபாராதனை காட்டும்போது நம் கண்களை அகல விரித்து அவனை தரிசிக்க வேண்டும்.

ஏனெனில் குரு«க்ஷத்திரப் போரில் பீஷ்மரால் அர்ஜுனனின் மீது ஏவப்பட்ட சில அம்புகள், பார்த்தசாரதியின் முகத்திலும் பட்டதால் முகத்தில் தழும்புக ளோடு காட்சியளிக்கிறார் பெருமாள். வலது கையில் சங்கும், இடது கையில் வரத ஹஸ்தமுமாக நின்ற கோலத்தில் காட்சி தரும் அவரை தரிசிப்பது பெரும் பேறாகும்.

அதுமட்டுமல்ல, வலது பக்கம் ருக்மணி. அவர் அருகே பலராமர். பெருமாளுக்கு இடது புறம் அவர் தம்பி சாத்யகி. மகன் ப்ரத்யும்னன். பேரன் அநிருத்தன். தனது குடும்பத்தோடு அதுவும் தந்தை, மகன், பேரன் என்று மூன்று தலைமுறையினராக நமக்கு அருள்பாலிக்கிறார், பார்த்தசாரதி. இப்படி குடும்ப சமேதராக பெருமாள் காட்சியளிப்பது இத்தலத்தில் மட்டும்தான்.



மற்ற இடங்களில் பெருமாள் தனியாகவோ அல்லது பிராட்டியுடனோதான் நமக்கு தரிசனம் தருவார். ஆனால், திருவல்லிக்கேணி தரிசனமே வேறு, தனிச் சிறப்புடையது. இன்னுமொரு விசேஷமும் இக்கோயிலுக்கு உண்டு.

நின்ற நிலையில் அருள்-பாலிக்கும் வேங்கட கிருஷ்ணன் எனும் பார்த்தசாரதி, அமர்ந்த நிலையில் யோக நரசிம்மராகவும், படுத்த நிலையில் ரங்கநாதராகவும் மூன்று சந்நதிகளில் நமக்குத் தனித்தனியே தரிசனம் தருகிறார். நின்ற நிலையில் காட்சி தரும் வேங்கட கிருஷ்ணனை எதிர்த் தெருவிலுள்ள மகான் வியாசராஜர் பிருந்தாவனத்-திலிருந்தபடியே வணங்கிக் கொண்டிருக்கிறார்.

வியாசராஜர் த்வைத சித்தாந்தம் கொண்ட மகான். இவர் கிருஷ்ண தேவராயரின் குரு. அமர்ந்த நிலையிலுள்ள தெள்ளிய சிங்கப் பெருமாள் எனும் யோக நரசிம்மனாக பிரகலாதனுக்கு கிருத யுகத்தில் தரிசனம் தந்த கோலம், கோயிலின் பின்புற சந்நதியில் அமைந்துள்ளது. இதிலும் ஓர் அற்புதம் இருக்கிறது.

யோக நரசிம்மர் சந்நதியிலிருந்து வெளியே தெருவிற்கு வந்தால், பிரகலாதனாக முன் ஜென்மத்தில் இருந்த ராகவேந்திர சுவாமிகள், நூறு அடி தள்ளி பிருந்தா-வனஸ்தராய் காட்சி தருகிறார். இது திருவல்லிக்கேணி கோயிலைச் சுற்றியுள்ள அற்புதங்கள். போதாக் குறைக்கு கண்ணனை நண்பனாய், மந்திரியாய், ஆசிரியனாய், சேவகனாய் தரிசித்த மகாகவி பாரதி வசித்த வீடும் கோயிலின் பின்புறத்தில் இருப்பது கூடுதல் சிறப்பு.

கோயில் ராஜகோபுரம், ஐந்து நிலைகளை உடையது. ஏழு கலசங்கள், பலிபீடம், கொடிமரம். பின்னர், துவஜாரோகண மண்டபம். இவைகளையும் கருடாழ்வார் சந்நதியையும் தாண்டி உள்ளே நேராகச் சென்றால் ஓங்கி உலகளந்தப் பெருமாளான பார்த்தசாரதியின் திவ்ய தரிசனம்.

சந்நதியை பிரதட்சணம் செய்து கொண்டே போனால் அண்ணல் நோக்கும் திக்கிலேயே வேதவல்லித் தாயாரின் தரிசனம். உள்ளே ரங்கநாதர். ரங்கநாதரை வலம் வந்து நேரே சென்றால் யோக நரசிம்மர். இவர் யோகத்தில் இருப்பதால் பக்தர்கள் மவுனமாக செல்ல வேண்டும்.

இவர் கருவறையில் நாதம் எழுப்ப வேண்டிய மணிக்குக் கூட நாக்கு கிடையாது! இவருடைய யோக நிலை கலையக் கூடாது என்பதுதான் காரணம். இவரை தரிசித்து வடப்புறம் சென்றால் ஆண்டாள் சந்நதி. இதோடு பல மகான்களுக்கும், ஆழ்வார்களுக்கும் தனித்தனி சந்நதிகள். இவர்களை எல்லாம் தரிசித்துக் கொண்டு வலப்புறம் திரும்பும்போது மீண்டும் பார்த்தசாரதியின் சந்நதி.

நிதானமாக நின்று வேங்கடவனை தரிசித்துக் கொண்டு வெளிப்பிரா-காரத்திற்கு வருகிறோம். இடப் பக்கம் பெரிய மண்டபம். இங்குதான் உற்சவ மூர்த்திகளுக்கு பூஜை புனஸ்காரங்கள் நடைபெறுகின்றன. ஆனி மாதங்களில் பத்து நாட்கள் பிரம்மோற்சவம். அதேபோல் நரசிம்மருக்கும் ஆனி மாதத்தில் பிரம்மோற்சவம்.

பண்டரிபுரம் போல் தினந்தோறும் பகவானுக்கு ஏதோ ஒரு வைபவம் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. நான்கு மாட வீதிகளைச் சுற்றிலும் வைணவர்-களுக்கான அஹோபில மடம், வானமா மலை மடம், மாத்வர்-களின் உத்திராதி மடம், வியாச-ராஜ மடம், ராகவேந்திர மடம் என கிருஷ்ணனைப் போற்றிய பக்தர்களின் மடம்.

முழுவதுமாக கோயிலை வலம் வந்து எல்லா சந்நதிகளையும் தரிசித்துவிட்டு வந்தால் வெளியே யானை சாதுவாக நின்றிருக்கிறது. இலக்கியம் படித்தவர்கள் மத்தியில் மட்டும் ஒரே ஒரு சின்ன சலனம். ‘உன் மூதாதையனுக்கு பாரதியை முட்டித் தள்ளி படுகாயப்படுத்த எப்படி மனம் வந்தது?’ என்று சின்னதாய் ஒரு நெருடல்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 30, 2009 2:02 am

காலையில் நான்கு மணிக்கு எழுந்திருக்கும் திருவல்லிக்கேணி இரவு நெடுநேரம் வரை உறங்குவதில்லை. அதோ& ‘‘கோவிந்தா... கோவிந்தா... கோவிந்தா...’’ ஆந்திர மாநிலத்து இரண்டு பேருந்துகளில் முழுவதும் மொட்டைத் தலையுடன் கூடிய திருப்பதி சென்று வந்த பக்தர்கள். வாருங்கள், அவர்களுக்கு வழிவிட்டு அவர்கள் தரிசனம் செய்ய இடம் கொடுப்போம்.

கோபங்கொண்ட சிவன் தன் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்து சாம்பலாக்கினார். இதைப் பார்த்து வருந்திய ரதி தேவிக்காக அவள் கண்களுக்கு மட்டுமே மன்மதன் காட்சி தரும் வரத்தை தந்தார். சிவனால் உயிர்ப்பிக்கப்பட்ட மன்மதன் இந்த தலத்தில் உறையும் சிவனையும், பார்வதியையும் துதித்தான்.

அவனுக்கு இரங்கிய பார்வதி கரும்பு வில்லையும், புஷ்ப பாணங்களையும் மீண்டும் தந்தாள். இவ்வாறு காமனுக்கு அருளியதால் அன்னை ‘காமுகாம்பாள்’ ஆனாள். கிழக்கு நோக்கி ஆலயம் அமைந்துள்ளது. விநாயகர் மிகவும் அழகுடன் காட்சி அளிக்கிறார். செவ்வாய்க்கிழமையில் இவருக்கு சிதறு தேங்காய் உடைத்து வழிபட்டால் நினைத்த காரியம் ஈடேறுமாம்.

நந்தி தேவர் சோழர் கால வேலைப்பாடுடன் அமைந்துள்ளார். பிரதோஷ காலத்தில் அறுகம்புல் சார்த்துவது நல்ல கல்வியறிவை கொடுக்குமாம். துர்க்காபுரீஸ்வரர் கருவறையில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார். ரதி தேவிக்கு அனுக்கிரகம் செய்த காமுகாம்பாள் பேரழகும், அருளும் ததும்பிய திருமுகத்தோடு வீற்றிருக்கிறாள்.

இந்த அம்பாளை வெள்ளியன்று தரிசனம் செய்து 12 நெய் தீபம் ஏற்றினால் பிரிந்தவர் ஒன்று கூடுவர். துர்க்காபுரீஸ்வரரின் கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா ஆகியோர் தரிசனம் தருகின்றனர். பிராகார வலத்தின் போது விநாயகர், துர்க்கா, வள்ளி & தெய்வானை சமேத சுப்ரமணியர், நால்வர், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், சனி பகவான் ஆகியோருக்கான சந்நதிகள் உள்ளன.

தலவிருட்சமாக வில்வ மரம் விளங்குகிறது. தீர்த்தமே காவிரி நதிதான். துர்க்கா தேவியின் விக்ரகத்தில் இடது நாசியில் மூக்குத்தி அணிவதற்காக ஒரு சிறு துவாரம் அமைந்துள்ளது. இதற்கு ஒரு கதை உண்டு. இந்த விக்ரகத்தை நிறைவு செய்த சிற்பி, மூக்கில் துவாரம் உருவாக்கவில்லையாம். ஆனால், சிற்பியின் கனவில் தேவி தோன்றி, ‘நான் மூக்குத்தி அணிய வேண்டும்’ என்று கேட்க, சிற்பியோ, ‘விக்ரக வேலை பூர்த்தியாகி விட்டது.

இப்போது உன் நாசியில் நான் கை வைக்க அதனால் உன் சிலை பின்னமாகிவிட்டால் அது அனைவரையும் மனவருத்தப்பட வைக்குமே’ என்று கவலையுடன் மறுத்தாராம். ‘கவலைப்படாதே... என் நாசியில் உளியை வை. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்றாளாம் அன்னை.

அதேபோல மறுநாள் துர்க்கா தேவி சிலையின் இடது நாசியில் உளி வைக்க அங்கு தானாகவே ஒரு சிறிய துவாரம் ஏற்பட்டதாம். இதிலிருந்து தேவிக்கு மூக்குத்தி அணிவிக்கும் வழக்கம் ஆரம்பமானதாம். இன்னொரு சிறப்பாக, விசேஷ காலங்களில் துர்க்கையின் திருமுகத்தில் வியர்வை துளிகள் அரும்புவதை மக்கள் பார்த்துப் பரவசமடைகிறார்கள்.

சுமார் பத்தாண்டுகளுக்கு முன் துர்க்கை சந்நதிக்கு முன்னால் ஒரு பௌர்ணமி தினத்தன்று ஹோமம் செய்யப்பட்டது. ஹோமத்தின் முடிவில் ஒன்பது சுமங்கலிப் பெண்களை பூஜித்து அவர்களுக்கு புடவை கொடுத்து மரியாதை செய்தனர். இதன் தொடர்ச்சியாக ஹோமத்தின் இறுதி நாளன்று முந்நூறு சுமங்கலிப் பெண்களை அழைத்து அவர்களை பூஜித்து கௌரவிக்க விரும்பினார்கள்.

கலந்து கொண்ட அனைவருக்கும் ஒன்பது கெஜ புடவை, புஷ்பம், மங்கள திரவியங்கள் போன்றவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. விழாக் குழுவை சேர்ந்த ஒருவர் வந்தவர்களை எண்ணிப் பார்த்தபோது 299 பேர்தான் இருந்தனர். மனம் பதைத்து அம்பாள் மேல் பாரத்தைப் போட்டு பூஜையை தொடங்கினர்.

அந்த ஒருவருக்கான புடவை மற்றும் மங்கலப் பொருட்களை அம்பாள் பாதத்தில் வைத்து விட்டனர். 299 சுமங்கலிகளுக்கும் உணவு பரிமாறப்பட்டது. எல்லாரும் மனநிறைவு பெற்று வீடு திரும்பத் தொடங்கினர். ஆலயத்தின் பிரதான அர்ச்சகர் சுப்ரமண்ய சிவாச்சாரியாருக்கு எண்ணிக்கையில் ஒன்று குறைந்ததில் மனவருத்தம்.

அப்பொழுது சுமார் எண்பது வயது மதிக்கத்தக்க ஒரு பழுத்த சுமங்கலி, ‘பூஜைக்கு வந்திருக்கேன். பல இடம் போயிட்டு வரவேண்டியதால் தாமதம் ஆகிவிட்டது. எனக்கு சாப்பாடு போடுங்க’ என்று கேட்டாள். அர்ச்சகருக்கு உள்ளம் குளிர்ந்தது. எதிர்பார்த்தபடி 300 கணக்கு சரியாகிவிட்டதே! அதே உற்சாகத்துடன் அந்தப் பெண்மணிக்கு உணவு அளித்து, அம்பாள் பாதத்திலிருந்த புடவை முதலானவற்றை கொடுக்க அவள் புன்னகையோடு ஏற்றுக்கொண்டாள்.

தான் சிறிது நேரம் இந்தக் கோயிலில் ஓய்வு எடுத்துக்கொள்வதாக சொன்னாள் அந்தப் பெண்மணி. ஹோமமும் அதன் தொடர்பான நிகழ்ச்சிகளும் திட்டமிட்டபடி முழுமையாக நிறைவேறிய மகிழ்ச்சியில் அர்ச்சகர்கள் தம் உணவை முடித்துக் கொண்டு கோயிலுக்கு போய் பார்க்க, அந்தப் பெண்மணியை காணவில்லை.

ஆலயத்தில் மூலை முடுக்கு எங்கும் தேடிப் பார்த்தாயிற்று. அந்த ஊரை விட்டுச் செல்ல வாகன வசதிகளும் கிடையாது. யார் கண்ணிலும் படாமல் போகவும் முடியாது. அப்பொழுது கோயிலுக்கு வந்த ஒரு பெண்மணிக்கு துர்க்கை அருள் வந்து, தானே சுமங்கலியாக வந்து புடவையை பெற்றுக்கொண்டதாக சொன்னாள்.

அனைவருக்கும் உடல் பதறியது. துர்க்கையின் முன்னால் போய் நின்று, “அம்மா, நீயா வந்தாய்! நாங்கள்தான் என்ன பாக்கியம் செய்தோம்’’ என்று சொல்லி ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள். அப்பொழுது அன்னையின் முகம் வியர்த்திருந்ததாம். இந்த துர்க்கைக்கு நேர் எதிரே சாமுண்டீஸ்வரி சுமார் இருபதடி உயரத்தில் சூல வடிவில் காணப்படுகிறாள்.

பூமிக்கு அடியிலும் இருபதடி ஆழம் செல்கிறதாம் இந்த சூலம். கீழிறங்கி இதற்கு பூஜை செய்ய படிக்கட்டுகள் உள்ளன. இதுதவிர மூன்று சூலங்கள் உள்ளன. எலுமிச்சையில் தேனை தடவி சூலத்தில் குத்தி வழிபட்டால் ஏவல், பில்லி, சூன்யம் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இப்படி பல பெருமைகள் கொண்ட ஆலயம் இன்று சிதிலமடைந்து காணப்படுகிறது. மண்டபங்களும், விமானங்களும் பொலிவிழந்து கிடக்கின்றன.

பக்தர்கள் ஒன்றிணைந்து கிடாத்தலை மேடு ஆலயத்தை உயர்த்தி நிறுத்தலாம். அவர்கள் வாழ்வு விண்ணளவு உயரும் என்பது உறுதி. இத்தலம் மயிலாடுதுறை வட்டத்தில் மயிலாடுதுறைக்கு வடமேற்கிலும் திருமணஞ்சேரிக்கு வடக்கிலும் சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ளது.

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sun Aug 30, 2009 12:28 pm

Thanks Siva

avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Postசரண்.தி.வீ Sun Aug 30, 2009 12:49 pm

அருமையான தகவல்களுக்கு மிக்க நன்றி..!!! மகிழ்ச்சி மகிழ்ச்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 5:52 pm

மெள்ளத்தான் படிக்கணும் இதை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Thu May 28, 2015 7:16 pm

அல்லிக்கேணி அழகன் சாரதி 3838410834 அல்லிக்கேணி அழகன் சாரதி 103459460 அல்லிக்கேணி அழகன் சாரதி 1571444738

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri May 29, 2015 8:51 am

பொறுமையாய் தான் படிக்கணும் சிவா அவர்களே. எனினும் அல்லிக்கேணி அழகன் சாரதி 103459460 அல்லிக்கேணி அழகன் சாரதி 3838410834 அல்லிக்கேணி அழகன் சாரதி 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக