புதிய பதிவுகள்
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெருக்கூத்து Poll_c10தெருக்கூத்து Poll_m10தெருக்கூத்து Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
தெருக்கூத்து Poll_c10தெருக்கூத்து Poll_m10தெருக்கூத்து Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
தெருக்கூத்து Poll_c10தெருக்கூத்து Poll_m10தெருக்கூத்து Poll_c10 
5 Posts - 4%
prajai
தெருக்கூத்து Poll_c10தெருக்கூத்து Poll_m10தெருக்கூத்து Poll_c10 
4 Posts - 3%
Jenila
தெருக்கூத்து Poll_c10தெருக்கூத்து Poll_m10தெருக்கூத்து Poll_c10 
2 Posts - 2%
jairam
தெருக்கூத்து Poll_c10தெருக்கூத்து Poll_m10தெருக்கூத்து Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
தெருக்கூத்து Poll_c10தெருக்கூத்து Poll_m10தெருக்கூத்து Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தெருக்கூத்து Poll_c10தெருக்கூத்து Poll_m10தெருக்கூத்து Poll_c10 
1 Post - 1%
M. Priya
தெருக்கூத்து Poll_c10தெருக்கூத்து Poll_m10தெருக்கூத்து Poll_c10 
1 Post - 1%
kargan86
தெருக்கூத்து Poll_c10தெருக்கூத்து Poll_m10தெருக்கூத்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெருக்கூத்து Poll_c10தெருக்கூத்து Poll_m10தெருக்கூத்து Poll_c10 
97 Posts - 55%
ayyasamy ram
தெருக்கூத்து Poll_c10தெருக்கூத்து Poll_m10தெருக்கூத்து Poll_c10 
51 Posts - 29%
mohamed nizamudeen
தெருக்கூத்து Poll_c10தெருக்கூத்து Poll_m10தெருக்கூத்து Poll_c10 
9 Posts - 5%
prajai
தெருக்கூத்து Poll_c10தெருக்கூத்து Poll_m10தெருக்கூத்து Poll_c10 
6 Posts - 3%
Jenila
தெருக்கூத்து Poll_c10தெருக்கூத்து Poll_m10தெருக்கூத்து Poll_c10 
4 Posts - 2%
Rutu
தெருக்கூத்து Poll_c10தெருக்கூத்து Poll_m10தெருக்கூத்து Poll_c10 
3 Posts - 2%
Baarushree
தெருக்கூத்து Poll_c10தெருக்கூத்து Poll_m10தெருக்கூத்து Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தெருக்கூத்து Poll_c10தெருக்கூத்து Poll_m10தெருக்கூத்து Poll_c10 
2 Posts - 1%
jairam
தெருக்கூத்து Poll_c10தெருக்கூத்து Poll_m10தெருக்கூத்து Poll_c10 
2 Posts - 1%
viyasan
தெருக்கூத்து Poll_c10தெருக்கூத்து Poll_m10தெருக்கூத்து Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெருக்கூத்து


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 16, 2010 12:53 am

பகுதி-1

எந்த நாட்டுப்புறக் கலையும் ஒப்பனையின்றி நிகழ்த்தப்படுவதில்லை என்று சொல்லும் அளவிற்கு ஒப்பனை நாட்டுப்புற நிகழ்த்து கலைகளில் இடம் பெற்றுள்ளது. கலைஞன் ஒப்பனையோடு களத்தில் தோன்றும் போதே அவன் பாத்திரமாக இருக்கிறான். ஒப்பனையின்றிச் செயல்படும் போதே அவன் தனிமனித நிலையிலேயே இருக்க வேண்டியுள்ளது.

தெருக்கூத்துக் கலைஞன் பாரதக் கூத்து ஆட ஆரம்பிப்பதற்கு முன் விரதம் இருந்து அண்ணாவி (வாத்தியார்) கூறியதை உள்வாங்கி பகலில் பாரதம் கேட்டு, முதல் நாள் இரவு ஒப்பனைக்குப் போகும் வரை அவனுடைய மனநிலை அப்பாத்திரத்திலேயே நிலை நிற்கிறது. ஒப்பனை மேற்கொள்ளப்படுவதற்கு முன் செய்யப்படும் பூசைகளும் பாத்திர உருவாக்கத்திற்குக் கூத்தனுக்கு உதவுகிறது எனலாம். அவன் முகத்தில் தீட்டப்படும் ஒவ்வொரு வண்ணக் கோடுகளும் பாத்திரத்தை அவனுள் கொண்டு வருகிறது என்பதைக் கூத்தர்களின் அனுபவங்களிலிருந்து பெற முடிகிறது. முழு ஒப்பனை முடிந்து களத்தில் தோன்றும் போதே பாத்திரத்தில் முழுமையடைகிறான்.

இம்மாதிரியான தொடர் செயற்பாடுகள் கூத்தைத் தொழிலாகக் கொள்ளாது சடங்கிற்காகக் கூத்தாடும் கலைஞர்களுக்குப் பொருந்தும். அவன் பகல் முழுவதும் மக்களோடும், தன் நண்பர்களோடும் இருந்துவிட்டுக் கூத்தாடத் தயாராகி பூசை முடித்து ஒப்பனையை மேற்கொள்ளும்போது தான் ஏற்கும் பாத்திரத்தைப் பற்றி அவன் அறிந்தது, பிறர் சொல்லக் கேள்விப்பட்டது. பிற கூத்துகளில் பார்த்தது இவை எல்லாவற்றையும் கொண்டு தனை மறந்து சிறுகச்சிறுகப் பாத்திரமாகிறான். அவன் உள்வாங்கிய பாத்திரம் கூத்து முடிந்து ஓய்வெடுக்கும் வரை நீடிப்பதைக் காண முடிகின்றது.

தெருக்கூத்தைத் தொழிலாகக் கொண்ட கலைஞர்களுக்குத்தான் ஏற்கும் பாத்திரத்தை உரு¡வக்க, உள்வாங்க மேற்கண்ட தொடர் செயல்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பூசை முடிந்து கண்ணாடி முன்னால் தங்கள் முகத்தில் தீட்டிக் கொள்ளும் ஒவ்வொரு கோடும் அவர்களின் திறமையைக் காட்டுவதோடு, பாத்திரத்தையும் கூத்தர்களுக்குக் கொடுக்கிறது. இவ்வாறு உருவாக்கப்படும் ஒப்பனை கலைஞனைத் தன்னை மறந்து செயல்படவும் செய்கிறது என்பதற்கு உதாரணத்தையும் கூறலாம்.

களத்தில் தோன்றும் நரசிம்மன் இரண்யனைக் கொல்வதாகக் கதை. ஆனால் நரசிம்மனாகப் பாத்திரம் ஏற்ற கூத்துக் கலைஞன் பாத்திரத்தில் மூழ்கிப் போனதால் களத்தில் இருந்த இரண்யனை உண்மையாகவே கொன்ற செய்தியைத் தமிழகத்திலும் இலங்கையிலும் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டதற்கான காரணத்தை ஒப்பனையோடு தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டியுள்ளது. ஒரு தனி மனிதனை ஒப்பனை எதுவுமின்றிக் களத்தில் இறக்கி இப்படியொரு தன்னிலை மீறிய செயலலைச் செய் என்றால், அது சாத்தியமில்லாததாகவே இருக்கும்.

இவ்வகையான பாத்திர உருவாக்கத்திற்குத் தெருக்கூத்து ஒப்பனையில் வரும் ஒவ்வொரு அணிகளும் உதவுகிறது என்று சொல்லலாம். கூத்துக் குழுக்களை ஆட்டத்திற்கு நியமிக்கும்போது 'கட்டை கட்டிய பாத்திரம் எத்தனை?' என்று கேட்டு முடிவு செய்வதோடும் ஒப்பனையைத் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டியுள்ளது. கட்டைகள் கட்டாமல் ஆடினால் மக்கள் அதைத் தெருக்கூத்து என்று ஏற்றுக் கொள்ள மாட்டார்களோ என்று ஐயுறும் அளவிற்கு ஒப்பனை முக்கியத்துவம் பெறுகிறது. தெருக்கூத்திற்குப் பக்தியையும் மதிப்பையும் தேடித் தருவதே ஒப்பனை என்றால் மிகையாகாது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 16, 2010 12:54 am

பகுதி-2

தெருக்கூத்து ஒப்பனைக்குப் பல பொருட்கள் பயன்படுகின்றன. கூத்தில் கூத்தனின் உடல் முழுதும் ஒப்பனையால் மறைக்கப்படுகிறது. அவன் உடல் மேல் உள்ள ஒவ்வொரு பொருளும் பாத்திரத்திற்கானவை. முதலில், முகத்தில் கூத்தர்கள் ஏற்கும் பாத்திரத்தை வெளிக்கொணர பயன்படுத்தும் பொருட்கள் பாத்திரத்தின் தன்மைக்கு ஏற்றாற் போல் அவர்கள் கையாளும் வண்ணங்கள் போன்றவற்றை ஆராய முயலலாம்.

தெருக்கூத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒப்பனை மரபுவழியானது என்பது தெளிவு; என்றாலும் கால மாற்றங்களுக்கு ஏற்றாற்போல் பயன்படுத்தப்படும் பொருட்களில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். தற்போது இக்கலைஞர்கள் 1. சபேதா எனப்படும் வெள்ளைப்பொடி 2. அரிதாரம் எனப்படும் மஞ்சள் வண்ணப்பொடி 3. இங்குலிகம் எனப்படும் செந்நிறப்பொடி. 4. நீலம் எனப்படும் ஊதா வண்ணக்கட்டி 5. கறுப்பு வண்ண மை 6. நாமக்கட்டி போன்ற பொருட்களை உபயோகிக்கின்றனர்.

வண்ணங்களுக்கான தன்மைகளையும் அவற்றிற்கான அர்த்தங்களையும் அறிஞர்கள் குறித்துச் சென்றுள்ளனர். அரங்குகளில் பயன்படுத்தப்படும் வண்ண விளக்குகளானாலும், ஓவியத்தில் பயன்படுத்தப்படும் வண்ணங்களானாலும் அவற்றிற்குப் பொருள் உண்டு என்பதை அறிவோம்.

நுண்கலைகளில் பயன்படுத்தப்படும் வண்ணங்கள் புரிதலோடு பயன்படுத்துவது போல் தெருக்கூத்துக் கலைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனரா என்ற கேள்வி எழுகிறது. கூத்து ஒப்பனையை மேற்கொள்பவர்கள் சாதாரணப் படிப்பறிவு இல்லாதவர்கள் என்பது அறிந்ததே. அவர்கள் பயன்படுத்தும் வண்ணங்களில் இப்படியான புரிதல் இருப்பதைக் காண முடிகிறது. கதகளி போன்ற செவ்வியல் கலைகளில் பயன்படுத்தப்படும் வண்ணங்களுக்கு வரையறை இருப்பது போல் மரபுக் கலையான தெருக்கூத்திலும் பயன்பட்டு வருவதைக் காண முடிகிறது.

மனிதன் பயன்படுத்தும் ஒவ்வொரு சிறு பொருட்களிலும் வண்ணத்தை எதிர்பார்க்கிறான். இந்து மதத்தில் மனிதர்களையே நான்கு வகை வர்ணங்களாகப் பிரித்து ஒவ்வொரு வர்ணத்திற்கும் ஒரு வண்ணம் கொடுக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. பிராமணன் - வெள்ளை, சத்திரியன் - சிவப்பு, வணிகன் - மஞ்சள், சூத்திரன் - நீலம்.

கடவுளர்களுக்கும் வண்ணங்கள். சரஸ்வதி - வெள்ளை - ஞானத்தையும் லட்சுமி - சிவப்பு - தனத்தையும், பார்வதி - பச்சை - படைப்பையும் விஷ்ணு - நீலம் - வரையறையற்றதன்மையையும், கணபதி - சிவப்பு நிலைத்த தன்மையையும், சிவன், பிரம்மன் - பழுப்பு - ஜோதி மிக்கவர்களாகவும் பகுத்து அர்த்தப்படுத்தியுள்ளனர்.

ஏற்றும் கொடியிலும், போடும் துணியிலும் வண்ணத்தைப் பார்க்கும் மனிதனுக்குக் கலையில் அவன் எதிர்பார்க்கும் பிம்பத்தைக் கொடுப்பது கலைஞனின் கடமையாகிறது. அந்நிலையிலேயே கலைஞன் மேடையில் வெற்றியடைகிறான்.

தெருக்கூத்துச் சடங்கோடும் பக்தியோடும் தொடர்புடைய கலை விழாவில் கெளரவப்படுத்தப்படும் சாமிகளின் தன்மைகளை வேறுபட்ட முறையில் அறிந்திருக்கும் பார்வையாளர்க்கு கிருஷ்ணர், தருமர், பீமன், அர்ச்சுனன், திரெளபதி போன்றவர்களைக் களத்தில் காட்ட வேண்டிய கடமை கூத்தர்களுக்கு உண்டு. அப்படியொரு தெய்வீகத் தன்மையைப் பார்வைக்கு ஏற்படுத்துவன வண்ணங்களே. கூத்துக் கலைஞனின் முகத்தில் பயன்படுத்தப்பட்ட வண்ணங்கள் அவன் ஏற்றுள்ள பாத்திரத்தின் பண்புகளைப் பார்வையாளனுக்கு வெளிப்படுத்திக் காட்டுவன என்பதை நிறுவலாம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 16, 2010 12:56 am

பகுதி-3

பார்வையாளனின் புரிதலில் பீமன் பலம் மிக்கவனாகவும், கரிய மலை போன்ற தோற்றம் கொண்டவனாகவும் இருக்கிறான். இப் படிமத்தைக் கூத்துக் கலைஞர் நிறைவேற்றியாக வேண்டியவர்களாய் இருக்கிறார்கள். எனவே, பீமனுக்குக் கரும்பச்சை, சில இடங்களில் கறுப்பு, சிவப்பு பயன்படுத்தப்படுகின்றன. அணிகலன்கள், உடைகள் எல்லாவற்றிலும் இத் தன்மை பின்பற்றப்படுவதைக் காண முடிகிறது. (கம்ச சம்மாரம் - நர்மா பள்ளம் செல்வ விநாயகர் நாடக மன்றம்)

கண்ணன் நீல நிறத்தான், மாயாஜாலம் தெரிந்தவன் - அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவன். மாயக்கண்ணன் என்பதால் இதிகாச புராணக் காலத்திலிருந்து நீலவண்ணக் கண்ணன் என்று குறிப்பிடப்படுகிறது. இதையே தெருக்கூத்திலும் பயன்படுத்துகின்றனர்.

கண்ணன் தன்மைகள் பல ஒத்திருக்கும் அர்ச்சுனன் பாத்திரத்திற்கும் நீல வண்ணமே பயன்படுத்துகின்றனர். (போகவதி கல்யாணம் - இருங்கூர் ஸ்ரீநாராயண மூர்த்தி நாடகம்) சிலர் பச்சை வண்ணமும் பயன்படுத்துகின்றனர்.

கறுப்பு வண்ணம் சோகத்தையும் வஞ்சகத் தன்மையும் குறிப்பது. இவ்வண்ணத்தைத் தீய பாத்திரங்களுக்கே அதிகம் பயன்படுத்துகின்றனர். இப்படியான பாத்திரங்கள் பார்வைக்குக் கறுப்பு வண்ணம் நிறைந்ததாகவே தோன்றும். (இரண்ய விலாசம் - இருங்கூர் பாஞ்சாலியம்மன் நாடக சபா).

சிவப்பு என்றால் புரட்சி, கோபம், அபாயம் என்ற தன்மைக்கு ஏற்றாற்போல், மயில்ராவணன், இலங்காதேவி, காளி போன்ற பாத்திரங்களுக்குச் சிவப்பு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. (மயில்இராவணன் - மயில்ராவணன் சம்மாரம் - கட்டைக்கூத்துச் சங்கம்)

கதகளியில் பாத்திரங்களை ஒப்பனையை அடிப்படையாகக் கொண்டு ஐந்து வகையாகப் பகுத்துள்ளனர்.

1. பச்சைப் பாத்திரம்
2. கத்தி பாத்திரம்
3. தாடி பாத்திரம்
4. மினுக்குப் பாத்திரம்
5. பசப்புப் பாத்திரம் என்பவை அவை.

(Kerala kala mandabam, brochure, The state Academy of Arts) ஒவ்வொரு பாத்திரம் பற்றியும் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை ஒப்பு நோக்குதல் அவசியம் என்பதால் இங்கு எடுத்தாளப்படுகின்றன.

பச்சைப் பாத்திரம் என்று அவ்வண்ணத்தில் இருக்கும் பாத்திரங்களைக் குறிப்பிடுகின்றனர். இவ்வண்ணத்தைத் தலைமைப் பாத்திரங்களுக்கும், தேவர்களுக்கும் பயன்படுத்துகின்றனர். உதாரணமாக, பாண்டவர்கள், இராமன், போன்றவர்களைக் குறிப்பிடலாம். பச்சை வண்ணத்திற்கு தெய்வீகத் தன்மையும் கதாநாயகத் தன்மையும் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

கத்தி பாத்திரம் என்பது வில்லன் பாத்திரங்களைக் குறிப்பதாகும். இவர்களின் முகங்களிலும் பச்சை பூசியிருப்பார்கள் என்றாலும் சிவப்பும் கலந்திருப்பதால் பச்சை மங்கிப் போகும். மேலும் இவ்வகைப் பாத்திரங்களுக்கு நெற்றிப் பொட்டில் ஒரு சுட்டியும், மூக்கின் நுனியில் ஒரு சுட்டியும் வைத்திருப்பர். இவையே தலைமைப் பாத்திரத்திலிருந்து இப்பாத்திரத்தைப் பிரித்துக் காட்டுவன. இவ்வகைப் பாத்திரங்களுக்கு இராவணன், துரியோதனன் போன்றவர்களைக் குறிப்பிடலாம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 16, 2010 12:56 am

தாடிப் பாத்திரத்தில் மூன்று வகை உண்டு. 1. சிவப்புத்தாடி, 2. வெள்ளைத்தாடி, 3. கறுப்புத்தாடி என்பன. சிவப்புத் தாடிப் பாத்திரம் என்பது முரட்டுத்தனம் உள்ள பயம் தரக் கூடிய துச்சாதனன் போன்றவர்களைக் குறிக்கும். வெள்ளைத் தாடிப் பாத்திரம் என்பதற்கு அனுமன் பாத்திரத்தைக் குறிப்பிடலாம். கறுப்புத் தாடிப் பாத்திரத்திற்குத் தீய உள்ளம் கொண்ட சகுனி போன்றவர்களையும், காட்டில் வாழும் வேட்டைக்காரர்களையும் குறிப்பிடுவர். சிவப்புத் தாடிப் பாத்திரத்தை விடக் கறுப்புத் தாடிப் பாத்திரம் தீமையானதாக இருக்கும்.

மினுக்குப் பாத்திரம் என்பத சாதாரணக் குணாம்சங்களைக் கொண்டது, மென்மையானது. பெரும்பாலும் பெண் பாத்திரங்களையே இவ்வகையாகக் குறிப்பர். பெண் பாத்திரங்களின் முகம் ஆரஞ்சு வண்ணங் கொண்டதாகவும் மினுக்குத் தன்மை கொண்டதாகவும் இருக்கும்.

பசப்பு அல்லது மஞ்சள் பாத்திரங்கள் சில உண்டு. இவ்வகைப் பாத்திரங்கள் ஒப்பனையில் பச்சைப் பாத்திரத்தைப் போன்று இருந்தாலும் மஞ்சள் வண்ணம் முகத்தில் அதிகம் காணப்படும். இதற்கு உதாரணமாகப் பலராமர், சிவன், சூரிய பகவான் போன்றோரைக் குறிப்பிடலாம்.

இவ்வகையான பாத்திரப் பாகுபாடு தெருக்கூத்தில் பகுக்கப்படவில்லை. கதகளியில் பாத்திரங்களின் முக ஒப்பனையில் அவ்வளவாக கோடுகள் வரைவுகள் காணப்படவில்லை. கககளியின் பாத்திரப் பகுப்பிலிருந்து பார்க்கும் போது முகத்தில் அதிகம் உள்ள வண்ணங்களுக்க முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது தெரிகிறது. தெருக்கூத்துப் பாத்திரங்களில் கிருஷ்ணனைத் தவிர மற்ற ஆண் பாத்திரங்களுக்கு முகத்தில் கோடுகள் காணப்படுவதால் இன்ன வண்ணப்பாத்திரம் என்று பகுப்பது எளிதல்ல. அப்படிப் பகுத்தாலும் சிறப்பாக அமையுமா என்பது கேள்வி. பாத்திரங்களின் குணாம்சங்களைக் கொண்டு பிரிக்க வாய்ப்புண்டு.

இனி தெருக்கூத்து முக ஒப்பனை செய்முறைகளையும் தீட்டப்படும் முறைகளையும் காணலாம். வண்ணங்களைக் குழைப்பதற்கு தேங்காய் எண்ணெய், தண்ணீர் இரண்டும் பயன்படுத்துவதுண்டு. தேங்காய் எண்ணெய்யில் குழைத்துத் தீட்டப்படும் கோடுகள் வியர்வையில் விரைவில் கரையாமல் இருக்கும். தண்ணீரில் குழைத்துப் போடும் கோடுகள் விரைவில் அழிந்துவிடும். எனவே, நீண்ட நேரம் களத்தில் இருக்க வேண்டிய பாத்திரங்கள் எண்ணெய்யில் குழைத்த வண்ணங்களையே பயன்படுத்துவதுண்டு. இது பாத்திரத்தின் முகத்திற்கு மினுமினுப்பையும் ஏற்படுத்தும்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 16, 2010 12:58 am

தெருக்கூத்து: முக ஒப்பனை


கூத்தனின் முகத்தில் பாத்திரத்தின் பாவத்தைத் தீட்டி ஏற்படுத்துவதற்கு முன் பொது வண்ணத்தைப் பயன்படுத்துவர். அது பச்சை, சிவப்பு, நீலம், இளஞ்சிவப்பு வண்ணங்களாக இருக்கிறது.

இவ் வண்ணங்கள் மேல் பாத்திரத்தின் முகத்தைத் தன் உள்ளார்ந்த திறமையைக் கொண்டு உருவாக்க முனைகிறான் கலைஞன். இவ்வாறு தீட்டப்படும் பாத்திரத்தின் முக ஒப்பனையை நெற்றி, புருவம், கண், மூக்கு, கன்னம், மீசை, வாய், தாடை எனப் பகுந்து விளக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. ஆண் கடவுள், பெண் கடவுள் என்ற வரிசையில் இதைக் காணலாம்.

முகத்தில் பூசப்பட்டுள்ள பொது வண்ணமே நெற்றி முழுவதும் விரவி உள்ளது. அதன் மேல் வைணவர் போடும் நாமம். தெருக்கூத்திற்குப் பயன்படுத்தப்படும் கதைகள் பாரதமானாலும் இராமாயணமானாலும் வைணவத்தைச் சார்ந்ததாக இருப்பதால் கூத்தர்கள் தீவிர சைவர்களாக இருந்தாலும் பாத்திரத்திற்காக நாமத்தைப் போட்டே தீர வேண்டிய கட்டாயம் உண்டு. கதைகளில் வரும் சிவன், சிவணை வணங்கும் இராவணன் போன்ற சில பாத்திரங்களுக்கு மட்டும் நெற்றியில் பட்டை இருக்கும். மற்ற எல்லாப் பாத்திரங்களுக்கும் நாமமே காணப்படும். இதில் வடகலை, தென்கலை இரண்டும் உண்டு.

நெற்றியை அடுத்து புருவங்கள், புருவத்தை ஒட்டிக் குறைந்தது மூன்று புருவங்கள் வரைகின்றனர். புருவத்தின் உண்மையான எண்ணம் கறுப்பு. அதையொட்டி கீழும் மேலும் புருவங்கள் வரையப்படுகின்றன. மேலே ஒரு வண்ணத்திலும் இரு வண்ணங்களிலும் கோடுகள் வரையப்படுகின்றன. புள்ளிப் புருவங்களுக்கு வெள்ளையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். கீழ் புருவத்திற்கு வெள்ளையும் பிற வண்ணங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

கண்கள் பொது வண்ணத்தால் மூழ்கடிக்கப்பட்டிருக்கும். அவற்றைப் பாத்திரத்தின் கண்களாக மாற்றி வெளிக்கொண்டு வருவதற்கு இமைகளுக்கு மை தீட்டுகின்றனர். இதற்கு கறுப்பு வண்ணப் பொடியைப் பயன்படுத்துவது உண்டு. கீழ் இமையை ஒட்டினாற்போல் பட்டையான கோடுகள் வரையப்படுகின்றன. இவ்வகையான ஒப்பனை கண்களை வெளிக் கொணர்ந்து ஒளி ஊட்ட வல்லவை. கதகளியில் கண்களுக்குக் கீழ் திட்டப்படும் கோடு மிக அடர்த்தியானது.

மூக்கும் கண்ணைப் போலவே வெளிக் கொண்டு வர வேண்டிய ஒன்று. இதன் மேல் தீட்டப்படும் கோடுகளே கதகளியிலிருந்து தெருக்கூத்தின் முக ஒப்பனையை வேறுபடுத்திக் காட்டுவன. கூத்தர்களின் கைவண்ணம் இக்கோடுகளில் வெளிப்படும். மூக்கின் மேல் வரையப்படும் கோடுகள் கன்னத்தின் வழியாக வளைந்து கன்னப்பூ வரை நீளும். மூன்று நான்கு கோடுகள் இதில் இடம் பெறுகின்றன. இக்கோடுகளில் ஒன்று இரண்டு புள்ளிக் கோடுகளாகவும் இருக்கலாம். ஒவ்வொரு கோடும் வண்ணத்தில் வேறுபடும். கம்பீரமான பாத்திரத்திற்கு சிவப்பு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இக்கோடுகளில் சில வேலைகளில் கலைஞர்கள் சார்ந்திருக்கும் அரசியல் கட்சிக் கொடிகளின் வண்ணங்களும் பிரதிபலிக்கும். (இரண்யன் - இரண்ய விலாசம், இருங்கூர் பாஞ்சாலியம்மன் நாடக சபா).

ஒரு சில பாத்திரங்களின் மூக்கிற்கு மட்டும் சிறிய வளைவுக் கோடுகள் வரைந்த கொள்வதுண்டு. கன்னங்களில் கோடுகள் இருக்காது. அந்த வெற்றிடத்தை நிரப்பப் புள்ளிப் பொட்டுகள் வைத்து அழகு செய்யப்படுகிறது. இம் மாதிரியான ஒப்பனை அர்ச்சுனன் போன்ற பாத்திரங்களுக்கு உண்டு. (அர்ச்சுனன் - போகவதி கல்யாணம், இருங்கூர் ஸ்ரீநாராயணமூர்த்தி நாடக மன்றம்).



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 16, 2010 12:58 am

தெருக்கூத்தில் இயற்கையான மீசை வைத்துக் கொள்வதில்லை. 'ஒரு நாள் கூத்துக்கு மீசையடிச்சான் மேடை' என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். மீசையில்லாமல் இருந்தாலே கூத்தாடி என்று எண்ணும் நிலை தமிழகத்தில் இருந்துள்ளது. இரண்டு வகை மீசைகள் கூத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

1. கட்டு மீசை
2. வரையப்பட்ட மீசை

கட்டுமீசையாக இருந்தாலும் அணிகலனில் இதை அடக்க முடியாது என்பதால் இங்கு பேசப்படுகிறது. கட்டுமீசைக்குக் கறுப்பு நார்கள் நீண்ட தலைமுடிகள், உபயோகப்படுகின்றன. இவற்றை ஒன்றாகச் சேர்த்து ஒட்டி மீசையை உருவாக்குகின்றனர். சாந்தமான பாத்திரங்களைத் தவிர மற்ற எல்லாப் பாத்திரங்களுக்கும் மீசை கட்டப்படுகிறது. பாத்திரத்தின் கம்பீரத்தை வெளிக் கொணர்வதில் மீசை பெரும்பங்கு வகிக்கிறது. கயிர் போன்ற அமைப்பைக் கொண்ட மீசைகளும் பயன்படுத்துகின்றனர். இதன் இருமுனைகளும் சுருண்டு புழுவைப் போல் இருக்கும். (இரவணன் - அனுமன் தூது, புரிசை துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் பரம்பரைத் தெருக்குத்து மன்றம்).

வரையப்படும் மீசை மிகவும் சொற்பமே. பிரகலாதன், அர்ச்சுனன் போன்ற பாத்திரங்களுக்கு இது பொருந்தும். (சின்ன அர்ச்சுனன் சண்டை; அனக்காவூர் ஓம் ஞானமுருகன் நாடக சபா). நரசிம்மன் அவதாரத்திற்கு மீசை சிங்கத்தின் மீசையைப் போல் வரையப்படுகிறது. இது போன்ற மீசை அமைப்பு கதகளியிலும் பயன்படுத்தப்படுகிறது. (நரசிம்மன் - இரண்ய விலாசம், இருங்கூர் பாஞ்சாலியம்மன் நாடக சபா).

ஆண் பெண், பாத்திரங்கள் எல்லாவற்றிற்கும் உதடுகளில் சிவப்புச் சாயம் பூசப்படுகிறது. கொடூரத்தன்மை கொண்ட இலங்கா தேவி போன்ற பாத்திரங்களின் உதடுகளில் அகோரத் தன்மையை வெளிப்படுத்த வெள்ளை நிறத்தைப் பயன்படுத்துகின்றனர். கதகளியில் உதடுகளில் சிவப்பு பயன்படுத்துகின்றனர். இது வேறுபட்டதாகக் காணப்படுகிறது.

வாய்க்குக் கீழ் அமைந்துள்ள தாடையில் 'ய' போன்ற வடிவத்தில் ஒப்பனை செய்யப்படுகின்றது. காதின் அடிப்புறத்திலிருந்து தாடி, வைத்தாற் போன்று கறுப்பு வண்ணம் பூசப்படுகின்றது. 'ய' வின் இருமேல் நுனிகளும் வாயின் இருகோடியிலும் தொடும். அதன் உள்புறத்தில் முகத்தில் பூசப்பட்ட பொது வண்ணம் நிரம்பியிருக்கும். இரண்டு வண்ணங்களில் இரண்டு 'ய' வடிவம் தீட்டப்படுவதும் உண்டு. அது புள்ளிகளால் அழகுபடுத்தப்பட்டிருக்கும். இது எல்லாக் குழுக்களிடமும் பொதுப்படையாகவே காணப்படுகின்றது.

இதுவரை தெருக்கூத்துக் கலைஞர்கள் முக ஒப்பனையையும் அவர்கள் படைக்கும் பாத்திரத்தில் முகத்தையும் சில கதகளியின் தன்மைகளையும் இங்குக் கண்டோம். கதகளியின் தாக்கம் கொண்ட கலைஞர்கள் அதைப் பின்பற்றப்படுவதைக் காண முயலலாம்.

புரிசை கண்ணப்பத் தம்பிரான் தெருக்கூத்து மன்றத்தில் உள்ள சம்பந்தம் என்பர் 'அனுமன் தூது' கூத்தில் அனுமனாகப் பாத்திரம் ஏற்கிறார். அவரோடு ஜாம்பவார் என்ற பாத்திரம். இவர்கள் இருவரின் ஒப்பனை முகத்தின் நடுப்பகுதியை வெளிப்படுத்திக் காட்டுவது போன்று தீட்டப்பட்டுள்ளது. கதகளியில் முகத்தைச் சுற்றிச் சுட்டியை வைத்து நடுப்பகுதியில் கவனம் செலுத்துவது சிறப்பாக அமைந்து விடுகிறது. அதை இவர்கள் பின்பற்றி தாள் சுட்டிக்குப் பதிலாக வண்ணம் தீட்டிச் சுட்டியை உருவாக்கி ஒப்பனை செய்துள்ளனர்.

இவ்வாறான முழுமையோடு முக ஒப்பனையை நோக்கும் போது, முகத்தில் முகமூடி போட்டது போன்று காணப்படுகிறது. கடவுள் பாத்திரங்களின் ஒப்பனை மேற்கண்ட முக ஒப்பனையிலிருந்து வேறுபட்டது. பெண் பாத்திரங்களின் முக ஒப்பனையும் இடையே வரும் பேடி போன்ற பாத்திரங்கள் ஒப்பனையும் வேறுபட்டதாகவே காணப்படுகின்றது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 16, 2010 1:00 am

தெருக்கூத்து: ஒப்பனை தொடர்பான நம்பிக்கைகள்

தெருக்கூத்து வழிபாட்டோடும் சடங்கோடும் தொடர்புடைய கலை. இதன் ஒப்பனை அணிகலன்கள் எல்லாமே ஒரு கலைஞனைக் கடவுளாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதைக் காண முடிகிறது. இவ்வகையான ஒப்பனையில் கூத்தர்கள் வைத்துள்ள நம்பிக்கைகளை விளங்கிக் கொள்ளல் அவசியம்.

கூத்து ஆரம்பமாகும் முதல் நாள் அண்ணாவியோடு கூத்தர்கள், ஊர்ப்பெரியவர்கள் கோயிலுக்குச் சென்று பூஜை செய்து மேளதளாத்தோடு கூத்தாடு களத்திற்குத் திரும்புவர். இது நம்பிக்கையின் அடிப்படையில் நடைபெறும் பூஜை இதை 'நாந்தி வைத்தல்' என்று கூறுவர். கூத்தர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவும் இந்நாத்தி வைத்தல் உதவுகிறது.

அதோடு மட்டுமல்லாது ஒப்பனை ஆரம்பிப்பதற்கும் முன் விளக்கேற்றிப் பூஜை நடத்துவர். அண்ணாவி முதற்கொண்டு எல்லாக் கூத்தர்களும் கலந்து வழிபடுவர். பிறகு, அண்ணாவி கூத்துக் கலைஞர்கள் அனைவருக்கும் பொட்டு வைத்து விடுவார். பொட்டு வைத்த அனைவரும் கூத்தர்கள் என்பதைக் குறிக்கவும் இது உதவுகிறது. முதலில் ஒப்பனையைத் தொடங்குபவர் அண்ணாவியாகவே இருப்பார். அவ்வாறு இல்லையாயின் தலைமைப் பாத்திரம் ஏற்பவர் முதலில் ஒப்பனையை மேற்கொள்வார். இதிலும் ஒரு வகையான நம்பிக்கை உண்டு. சிலர் இதை மரபு என்றும் கூறுவர்.

முதல் ஒப்பனைக்குரிய எண்ணெயைப் பூஜைக்கு வைக்கப்பட்ட விளக்கிலிருந்து எடுத்துக் கொள்கின்றனர். சில குழுக்கள் பெரிய மண்சிப்பியில் விளக்கேற்றி அதிலிருந்தே ஒப்பனை முழுமைக்கும் எண்ணெய் எடுத்து கொள்வதும் உண்டு.

இவ்வாறு மேற்கொள்ளப்படும் செயல்கள் தொழில் முறைக் கூத்தர்களுக்குச் சடங்காக மாறிவிட்டது. ஏனெனில் தொடர்ந்து செய்து கொண்டு வரும்போது அதன் உண்மைத் தன்மை குறைந்து விட்டது என்று கருதலாம். விரதம் இருந்து கூத்தாடும் பக்தனுக்கு இவை பக்திகரமாகவே தோன்றும்.

தெருக்கூத்திற்கான கட்டைகள் மரத்தால் செய்யப்படுபவை. மரங்கள் வரலாற்றிற்கு முந்திய காலங்களிலிருந்து வழிபாட்டுக்குரியனவாக இருந்து வருவதைக் காண முடிகிறது. இன்றளவும் வேம்பு, ஆலம், அரசு, வண்ணி போன்ற மரங்கள் வழிபாட்டுக்குரியனவாக இருந்து வருகின்றன. இம் மரங்களில் தெய்வங்கள் வாழ்வதாக நம்பி வருகின்றனர்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 16, 2010 1:00 am

தெருக்கூத்தர்கள் ஆரம்ப காலத்தில் கட்டைகளைச் செய்த போது இவ்வகையான சக்தி அம்மரங்களில் இருப்பதாக நம்பியிருத்தல் வேண்டும். அவை மரங்களால் செய்யப்பட்டதற்குக் காரணம் அதுவாகக்கூட இருக்கலாம். அதுவே பிறகு தேவையாகவும் மாறிவிட்டது. உடைகளில் மாறுதல்கள் ஏற்படுவது போல் கட்டைகள் செய்யப்பட்ட மரவகைகளிலும் மாறுதல் ஏற்பட்டு, எடை குறைந்த கட்டைகளைத் தற்போது பயன்படுத்தி வருகின்றனர்.

கலைஞர்கள் தாங்கள் ஏற்கும் பாத்திரங்களின் மூலம் தம்முள் தெய்வத் தன்மை குடி கொள்வதாக நினைக்கின்றனர். அதை உருவாக்குவது ஒப்பனைப் பொருட்களே. இவ்வகையான உணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதும் அவையே. அத்தன்மை கொண்ட இந்த ஒப்பனைப் பொருட்களைக் கலைஞர்கள் தெய்வமாகவே மதித்து வருகின்றனர். கூத்து அவர்களுக்குத் தொழில் என்பது அதற்குக் காரணமாக இருக்கலாம். கூத்தைத் தொழிலாகக் கொள்ளாதவர்களுக்குத் தெய்வ நம்பிக்கை. இவ்விருவகைக் கூத்தர்களுக்கு ஏதோ ஒரு வகையில் ஒப்பனைப் பொருட்கள் மேல் பக்தி உண்டு.

கூத்து, களத்தில் தொடங்குவதற்கு முன் கடவுளிடம் நற்சொல் கேட்டல் நடைபெறும். இதுவும் நம்பிக்கையின் அடிப்படையில் நடைபெறும் சடங்கே, இதன் பிறகு கட்டியங்காரன், நடைபெறப் போகிற கூத்தின் பெயர், அவையடக்கம் ஆகியவற்றைத் தெரிவிப்பான். தொடர்ந்து கூத்து விமர்சையாக நடைபெறும்.

கதையில் கடவுளாக மதிக்கப்படுகின்ற பாத்திரங்களைக் களத்தில் கற்பூரம் ஏற்றி வழிபடுகின்றனர். கிருஷ்ணர், காளி, வன்னியர் போன்ற பாத்திரங்களை உதாரணமாகக் கூறலாம். பாண்டவர்களுள் சிலருக்கும் வழிபாடு உண்டு. கம்பீரமான பாத்திரங்களான இராவணன், இரண்யன், கீசகன் போன்றவர்களுக்கும் கற்பூரம் ஏற்றுகின்றனர். இதைப் பக்தி என்று சொல்வதற்கில்லை. அந்தப் பாத்திரத்தை ஏற்கும் கூத்தருக்குக் கண்திருஷ்ட்டி ஏற்படக்கூடாது என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்கின்றனர்.

பாத்திரங்கள் களத்திற்கு வந்ததும் திரைமறைவில் உள்ள இசைக் கருவிகளான ஹார்மோனியம், மிருதங்கம், முகவீணை, தாளம் ஆகியவற்றைத் தொட்டுக் கும்பிடுவர். அதோடு ஆடுகளத்திற்கும் மரியாதை செய்வர். சலங்கை களத்திற்கு வந்த பிறகே பக்தியோடு கட்டிவிடப்படுகிறது.

இவ்வாறு களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நடைபெறும் வழிபாடுகளை அன்றைய கூத்தில் இடைஞ்சல் ஏதும் ஏற்படக் கூடாது என்பதோடும் மழை போன்ற வேண்டுதலுக்காக ஆடப்படும் கூத்தாயின் வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்ற நம்பிக்கையோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டியுள்ளது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Mar 16, 2010 1:12 am

நன்றி சிவா [You must be registered and logged in to see this image.]

அவள் பெயர் தமிழரசி சினிமா பார்த்தேன்.. கலை தெருக்கூத்தை பற்றி அழகாக காமித்து இருக்கிறார்கள்.. முடிந்தால் பாருங்கள் பொருமையாக பார்க்க வேண்டிய படம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக