ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்காரச் சென்னை OR சிங்காரிச் சென்னை?

4 posters

Go down

சிங்காரச் சென்னை OR சிங்காரிச் சென்னை? Empty சிங்காரச் சென்னை OR சிங்காரிச் சென்னை?

Post by hajasharif Fri Mar 19, 2010 4:36 pm

தகவல் தொழில்நுட்பம், அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் என்று இந்திய நகரங்களிலேயே சென்னை ஒருபுறம் அதிக வளர்ச்சி அடைந்து வந்தாலும், மக்கள் நெருக்கடி, திட்டமிடப்படாத நகர வளர்ச்சித் திட்டம், மோசமான நோய்களை பரப்பும் சுற்றுச் சூழல், சாக்கடை கலந்த குடிநீர் என இன்னொரு பக்கம் சென்னை வாழத் தகுதி இழக்கும் நகரங்களில் ஒன்றாகவும் ஆகி வருகிறது.

அத்தோடு மட்டும் நில்லாமல் கலாச்சாரம், பண்பாட்டை சீரழிக்கும் சமுதாய ஒழுக்கக்கேடான செயல்பாடுகளும் சென்னையில் இப்போது அதிகமாகி வருகிறது. தொடர் கொள்ளை, கொலைகள் போன்றவை மட்டும் இல்லாமல் தற்போது வளரும் இளம் தலைமுறையினரிடம் போதை பழக்கம், கடத்தப்பட்டு விபசாரத்தில் ஈடுபடச் செய்தல் போன்றவையும் அதிகரித்து வருகிறது.
சென்னையின் சாமானியர்கள் முதல் சாமியார்களிடம் வரை விபச்சாரம் பெருகி வருவதைப் பார்க்கும் போது எதிர்கால சமுதாயம் பற்றிய அக்கறை கவலை கொள்ளச் செய்கிறது. "விபசாரத்தை ஒழிக்க முடியாவிட்டால் அதை சட்டபூர்வமாக்க வேண்டியது தானே?" என்று அண்மையில் உயர்நீதிமன்றம் கூறியதை இங்கு நினைவு கொள்ள வேண்டியது அவசியம். அந்த அளவிற்கு நாட்டில் விபச்சாரம் தனது கிளைகளைப் பரப்பி வேகமாக பரவி வருகிறது.

"இந்தியாவில் நாள்தோறும் 200 பெண்கள் புதிதாக விபச்சாரத் தொழிலுக்கு வருகிறார்கள்" என்று சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் "பிரஜன்யா" என்ற சமூக அமைப்பு ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த விபச்சாரத் தொழில் தற்போது சென்னையையும் ஆட்டிப் படைக்க ஆரம்பித்துள்ளது.

விபச்சாரத்தைத் தடுப்பதற்காகக் காவல்துறை பல முயற்சிகள் செய்தும் நாளுக்கு நாள் இது அதிகமாகி வருவதற்கு வறுமை உள்ளிட்டப் பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. வறுமையைக் காரணமாகக் கூறி இந்தத் தொழிலுக்கு வரும் பெண்களுக்குச் சமுதாயத்தில் ஆதரவும் அதிகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் ஒரு மேடையில் பேசும் போது, "அவர்கள் ஒன்றும் ஜல்சா பண்ண இந்தத் தொழிலுக்கு வரவில்லை. இரண்டு வேளை சோற்றுக்காகத் தான் வருகிறார்கள்" என்று வறுமையைக் காரணமாக கூறி விபச்சார தொழில் செய்பவர்களுக்கு ஆதரவாக பேசினார். அதே இரண்டு வேளை சோற்றுக்காகத் தானே வழிப்பறி, கொள்ளை, திருட்டு போன்றவைகளும் நடை பெறுகிறது. அவ்வாறெனில் இவையும் நியாயப்படுத்தப்பட வேண்டியவைகள் தானா? அவ்வளவு ஏன், அதே இரண்டு வேளை சோற்றுக்காகத் தானே சாலையோரங்களில் ஏழைகள் திருட்டி வி.சி.டி. விற்கின்றனர்? அதை மட்டும் கடுமையாக சாடும் இத்திரைப்படத் துறையினர், சமூக, கலாச்சார, பாரம்பரியத்தையும் எதிர்கால தலைமுறையினரையும் சீரழிக்கும் இந்த விபச்சாரத்தை நியாயப்படுத்துவது ஏன்?.

தமிழ்த் திரை உலகம் இன்று விபச்சாரம் மற்றும் இளம் தலைமுறையினரைச் சீரழிக்கும் செயல்களிலும், மக்கள் மத்தியில் மத, இனவெறியைத் தூண்டிவிடும் செயல்களைச் செய்து நாட்டைக் குட்டிச்சுவராக்கிக் கொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லாமல் இல்லை.

நடிகைகள், மசாஜ் பெண்கள், மொபைல் அழகிகள் என விபச்சாரிகள் புதுப்புது ஒப்பனைகளுடனும் புதுப்புது கவர்ச்சிகரமான பெயர்களுடனும் வருகிறார்கள். தற்போது வாடகை இல்லத்தரசிகள் என்ற போர்வையிலும் சென்னையில் விபச்சார அழகிகள் உலா வர ஆரம்பித்துள்ளனர். அண்மையில் காவல்துறை ஒரு மசாஜ் சென்டரில் மேற்கொண்ட சோதனையில் பிடிபட்ட அனைத்து விபச்சார அழகிகளும் திருமணமான குடும்பப் பெண்கள்(?), பகுதி நேர ஊழியமாக விபச்சாரம் செய்து வந்தது தெரிய வந்துள்ளது.

எல்லாவற்றையும் விட மேலாக விபச்சாரத்தை ஒழிக்க வேண்டிய தொண்டு நிறுவனங்களே விபசார அழகிகளுக்கு கராத்தே கற்று கொடுத்து அவர்களது தொழிலை திறம்பட செய்ய மறைமுகமாக ஆதரவு அளிக்கிறது. இன்னும் சில அமைப்புகள் சுகாதார முறையில் விபச்சாரம் செய்ய ஆளுமைத் திறமை வகுப்புகள் நடத்துகின்றன. இதே ரீதியில் போனால், விபச்சாரத்திற்கென ஒரு புதிய துறையை உருவாக்கி அதற்கு ஒரு அமைச்சகத்தை அரசாங்கம் திறந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

மும்பையில் உள்ள பார்களில் பெண்கள் பரிமாறும் வேலைகளில் ஈடுபடுகிறார்கள். அதற்குத் தடை விதிக்க முற்பட்ட போது அதில் பணிபுரியும் ஆயிரக்கணக்கானோர் தங்களுக்கு மாற்று வேலை தர வேண்டும் என்று போராடினர். அவர்களின் வேலைக்கு மாற்று வழி காட்ட முடியாமல் அரசாங்கம் 'ஜகா' வங்கியது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். பார்களில் பெண்கள் பரிமாறுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றனர் என்ற தகவல் உளவுத்துறையின் மூலம் பெற்று, ஆரம்பத்திலேயே அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் இந்நிலைமை வந்திருக்காது.

சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் பல்வேறு வடிவங்களில் பரவி வரும் விபச்சாரத்தை ஆரம்ப நிலையிலேயே கிள்ளி எறியாவிடில் 'குடி'மகன்களுக்கு ''TASMAC' சாராயத்தை அரசே விற்க தொடங்கியது போல் விபச்சார ஏரியாக்களையும் அரசே ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்படும் அபாயத்தை உணர வேண்டும். ஏனெனில் ஓட்டுக்காகவும், இலவசம் தந்து ஆட்சியைத் தக்கவைக்கவும் நம் அரசியல் தலைவர்கள் எவ்வகை வருமான உற்பத்தியையும் செய்யத் தயாராகவே உள்ளனர்.

விபச்சாரம் பெருகுவது 'பாலியல்' தொடர்பான குற்றங்களைச் சமூகத்தில் பெருகச் செய்கிறது. இது காவல்துறைக்கு இன்னொரு தலைவலியாக உருவெடுத்துள்ளது. கடந்த காலங்களை ஒப்பிட்டு நோக்கினால் நாட்டில் கற்பழிப்பு குற்றங்கள் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்து இருக்கின்றன. 1971ஆம் ஆண்டை ஒப்பிடும்போது இந்தியாவில் தற்போது கற்பழிப்பு குற்றங்கள் 678 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வு தகவல் ஒன்று கூறுகிறது.

உலக அளவில் 3-ல் ஒரு பெண் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். பெண்களில் 85 சதவீதம் பேர் வாழ்நாளில் ஒரு தடவையாவது ஆண்களால் “செக்ஸ்” குற்றம் அல்லது மானபங்கம் போன்றவற்றிற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்களில் மிகப் பெரும்பாலோர் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை வெளியே சொல்வதோ காவல்துறையில் புகார் அளிப்பதோ இல்லை. பாலியல் ரீதியாக 16 வகை குற்றங்கள் நடப்பதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.

இதைவிட மற்றொரு கொடுமை என்னவெனில், விபச்சாரத் தொழிலில் ஈடுபடுவோரில் 80 சதவீதம் பேர் அவர்களின் விருப்பம் இல்லாமலே வலுக்கட்டாயமாக இத்தொழிலில் தள்ளப்படுகிறார்கள். அண்மையில் தமிழகத்தில் 1500 விபச்சார அழகிகளிடம் நடத்தப்பட்ட சர்வேயில், அவர்களில் 48 சதவீதத்தினர் விபரம் தெரியாத குழந்தைப் பருவத்திலேயே கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக அத்தொழிலில் தள்ளப்பட்டுள்ளதாக வேதனையான தகவலை வெளியிட்டுள்ளது. இவர்களில் 3.6 சதவீதம் பேர் 5 வயதுக்கும் குறைவான வயதிலும், 12.9 சதவீதம் 6 முதல் 10 வயதிலும், 25.6 சதவீதம் பேர் 11 முதல் 18 வயதிலும் விபச்சாரத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று அதிர்ச்சியில் உறைய வைக்கும் தகவலும் வெளியாகியுள்ளது. பெரும்பாலும் இவர்கள் குடும்ப உறுப்பினர், நண்பர்கள், உறவினர்களால் இந்தத் தொழிலுக்கு தள்ளப் பட்டவர்களாவர். காதலித்து ஏமாற்றி இந்தத் தொழிலுக்கு தள்ளப்பட்ட பரிதாபமும் நிகழ்ந்துள்ளது என்பதையும் அவசியம் இங்கு குறிப்பிடவேண்டும்.

சென்னை பல்கலைக் கழகத்தின் குற்றவியல் துறை தலைவர் தியாகராஜன் தலைமையில் ஐ.நா.வின் வளர்ச்சிப் பணி மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் நிதி உதவியால் எடுக்கப்பட்ட இந்த 10 மாத சர்வே கடந்த 2009 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.

"இப்படி சீரழிக்கப்படும் பெண்களும், சிறுமிகளும் பெரும்பாலும் பின்தங்கிய சமுதாய-பொருளாதார நிலையில் இருப்பவர்களாவர். பெரும்பாலானவர்கள் நகரங்களில் வேலை வாங்கி தருவதாக கூறியும், தமிழ் சினிமாவில் சேர்த்து விடுவதாகவும் ஆசை காட்டி பெற்றோரிடம் இருந்து அழைத்து வரும் சாதாரண இடை நிலைத் தரகர்களால் ஏமாற்றப்பட்டவர்கள் ஆவார்கள்" என்கிறார் தியாகராஜன்.

அநாதையான 15 வயது மாலினி என்ற பெண் மதுரையில் விற்கப்பட்டுள்ளாள். மேலும் கும்பலாக கற்பழிக்கப்பட்டு உடல் முழுவதும் சிகரெட்டால் சூடு வைத்து கொடுமை படுத்தப்பட்டுள்ளாள். இந்த சர்வே, 50 சதவீதம் பெண்கள் சிறுபருவத்திலேயே இந்தத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது. மேலும் அவர்கள் போதைக்கு அடிமையாக்கப்பட்டு இத்தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

GIS எனப்படும் Geographical Infromation System உதவி கொண்டு இவ்வாறு தமிழ் நாட்டின் உள்ளேயும், வெளியேயும் விபசாரத்திற்கு ஆளாக்கப்படும் பெண்கள் சென்னைக்கு தான் முதலில் கடத்தப்படுகிறார்கள். அங்கிருந்து மும்பை, கொல்கத்தா, தில்லி, பெங்களூர் மற்றும் கோவாவிற்கு கடத்தப்படுகிறார்கள் என்பது இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

அதிர்ச்சியளிக்கும் இத்தகைய ஆய்வு முடிவுகள் ஒரு பக்கம் வெளியானாலும் மறுபக்கம் எவ்வித பாதிப்பும் இன்றி இத்தகைய சமூக விரோத கும்பல்கள் ச்மூகத்தைச் சீரழிக்கும் பணியில் மிக தைரியமாக செயல்பட்டு வருகின்றனர்.

நாடு முன்னேற வேண்டும் என்பது முக்கியம் தான். ஆனால், எவற்றிலெல்லாம் முன்னேற்றம் வேண்டும், எவற்றிலெல்லாம் சீர்திருத்தம் வேண்டும் என்ற தெளிவும் திட்டமும் நாட்டை ஆள்வோரிடம் வேண்டும். இல்லையேல், சிங்கார சென்னை என்பது எதிர்காலத்தில் சிங்காரிகளின் சென்னை என்ற பெயரைப் பெற வைத்துவிடும் என்பதை மட்டும் நாட்டை ஆள்வோருக்குச் சொல்லி வைப்போம்.
avatar
hajasharif
பண்பாளர்


பதிவுகள் : 137
இணைந்தது : 06/12/2009

Back to top Go down

சிங்காரச் சென்னை OR சிங்காரிச் சென்னை? Empty Re: சிங்காரச் சென்னை OR சிங்காரிச் சென்னை?

Post by nandhtiha Fri Mar 19, 2010 5:38 pm

வணக்கம்
வேதனை தரும் வெட்கக் கேடான விடயம். அரை குறை ஆடைகளுடன் பெண்கள் ஆடுவதை ரசிக்கும் ஆள்வோர்கள் உடனடியாகக் கவனிக்க வேண்டியதாகும், பதிவிட்ட நண்பரின் மனவேதனையிலும் சமுதாயப் பொறுப்பிலும் பங்கு கொள்கிறேன்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

சிங்காரச் சென்னை OR சிங்காரிச் சென்னை? Empty Re: சிங்காரச் சென்னை OR சிங்காரிச் சென்னை?

Post by இளமாறன் Fri Mar 19, 2010 5:43 pm

சிங்காரச் சென்னை OR சிங்காரிச் சென்னை? 677196 சிங்காரச் சென்னை OR சிங்காரிச் சென்னை? 677196 சிங்காரச் சென்னை OR சிங்காரிச் சென்னை? 677196

நல்ல சிந்திக்க அரிய தகவலை கொடுத்து எல்லோரையும் சிந்திக்க வைத்திருக்கீரீர்கள்


உலகில் பசி போல கொடுமை வேறேதும் இல்லை...


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சிங்காரச் சென்னை OR சிங்காரிச் சென்னை? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சிங்காரச் சென்னை OR சிங்காரிச் சென்னை? Empty Re: சிங்காரச் சென்னை OR சிங்காரிச் சென்னை?

Post by அப்துல் Sun Apr 10, 2011 5:19 pm

:நல்வரவு:
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

சிங்காரச் சென்னை OR சிங்காரிச் சென்னை? Empty Re: சிங்காரச் சென்னை OR சிங்காரிச் சென்னை?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னை
» சென்னை-சேலம் 8 வழி சாலைக்கான அரசாணை ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
» சென்னை சென்னை சென்னை
» சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு திறக்க சென்னை ஐகோர்ட் தடை
»  சென்னை முகப்பு > செய்திகள் > சென்னை ஆர்.கே.நகரில் விஷாலுக்கு தவறு நடக்கவில்லை ஜனநாயகத்துக்கு தவறு நடந்துள்ளது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum