புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_c10திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_m10திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_c10 
98 Posts - 49%
heezulia
திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_c10திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_m10திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_c10திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_m10திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_c10திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_m10திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_c10திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_m10திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_c10 
7 Posts - 4%
prajai
திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_c10திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_m10திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_c10 
3 Posts - 2%
Barushree
திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_c10திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_m10திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_c10திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_m10திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_c10திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_m10திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_c10திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_m10திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_c10திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_m10திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_c10 
225 Posts - 52%
heezulia
திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_c10திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_m10திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_c10திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_m10திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_c10திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_m10திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_c10திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_m10திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_c10 
18 Posts - 4%
prajai
திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_c10திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_m10திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_c10திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_m10திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_c10திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_m10திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_c10 
2 Posts - 0%
Barushree
திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_c10திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_m10திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_c10திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_m10திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 16, 2010 8:23 am

திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Thiruv10


அறிமுகம்

செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ. சத்தியவேல் முருகனார் பொறியியல் பட்டப்படிப்பு படித்தபோதும் தமிழ்பணிக்காகவும் இறைப்பணிக்காகவும் பட்டப்படிப்பு வேலையை ஏற்கவில்லை.தமிழ், தமிழிசை, சைவசித்தாந்தம் போன்றவை குறித்து தொடர்ந்து சொற்பொழிவுகள் ஆற்றிவருகிறார்.இவர் மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் மருமகனாவார்.


முன்னுரை

மாணிக்கவாசகர் இயற்றிய அகவலான திருவண்டப்பகுதி பற்றி சத்தியவேல் முருகனார் ஆய்வு மேற்கொண்டு அதில் பல விஞ்ஞானக் கருத்துகள் பொதிந்துள்ளதாகக் கூறுகிறார். மாயாவாததிலிருந்து விலகி சமயத்தை இவர் அனுகுகிறார்.சைவ சித்தாந்தத்தின் அனுபூதி நிலைக்கு விலகாமல் இவை தன் ஆய்வைச் செய்துள்ளார்.இன்று நிருபிக்கப்பட்டுள்ள அறிவியல் கருத்துகள் திருவண்டப்பகுதியில் விரவியுள்ளதாக அவர்கூறும்பகுதிகள் இக்கட்டுரையில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.



மாணிக்கவாசகரும் கலிலியோவும்

உலகம் உருண்டை என்பது ஓர் விஞ்ஞான உண்மை. ஆனால் இதனை விஞ்ஞானம் விளம்பியது ஏறத்தாழ 14-ம் நூற்றாண்டில். இன்னும் சொல்லப்போனால் இந்த உண்மையைக் கூறியதால் ஒரு விஞ்ஞானியின் உயிர் பலி கொடுக்கப்பட்டது.

உலகம் தட்டையாகப் பாய் போல் விரிந்து கிடப்பதாகவும், சூரியனும் சந்திரனும் இந்தத் தட்டை உலகிற்கு மேலே பகல் ஒளியாகவும், இரவொளியாகவும் திரியும் படி இறைவனால் படைக்கப்பட்டதாகவும் பைபிள் கூறியது. பைபிளின்படி உலகம் தட்டை என்பதோடு, அசையாமல் கிடப்பதாகவும், சூரியனும், சந்திரனும் அசையாமல் உள்ள இந்த தட்டை உலகின் மேலே வானில் திரிவதாகவும் கொண்டனர் கிறித்துவர்கள். கலிலியோ என்ற விஞ்ஞானி வந்தான். உலகம் தட்டையல்ல; உருண்டை என்றான். உலகம் அசையாமல் இருப்பதல்ல; தன்னைத்தானே அது சுற்றிக் கொண்டிருக்கிறது என்றான். அத்துடன் பூமி சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கிறது என்றும் கூறினான்....இவையனைத்தும் பைபிளில் கூறப்பட்ட கூற்றுக்கு மாறாக - தலைகீழாக உள்ளன. எனவே கலிலியோ கூறும் உண்மைகளை ஏற்றால் பைபிள் கூறியது தவறு என்று ஆகும். எனவே கிறித்துவக் குருமார்கள் கலிலியோவை கிறித்துவ விரோதி (Heretic) என்று முத்திரையிட்டு பைபிளுக்கு விரோதமாக விஞ்ஞான உண்மையைக் கூறியதற்காக அவரை உயிரோடு கொளுத்தி விட்டார்கள்..... ஆனால் இந்த விஞ்ஞான உண்மையை மணிவாசகர் 3-ம் நூற்றாண்டிலேயே கூறிவிட்டார். இந்த அண்டப்பகுதி உருண்டை வடிவில் தொகுதி தொகுதியாக உள்ளது என்று திருவண்டப்பகுதியை ஒரு விஞ்ஞான உண்மையைக் கூறிக்கொண்டே தொடங்குகின்றார்.

''அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்"
பிறக்கம் - தொகுதி; குவியல் என்று பொருள்.

.... சூரியனின் பயணப்பாதை தட்டை வட்ட வடிவில் இருப்பதால் தான் பருவங்கள் உலகில் ஏற்படுகின்றன. ஒரு பருவம் கோடையாக வெப்பம் மிகுந்ததாகவும் ஒரு பருவம் குளிர்மிக்கதாகவும் மாறி மாறி வருவதற்குக் காரணமே இதுதான். இதையெல்லாம் உள்ளடக்கியே 'அண்டப் பகுதியின் உண்டை' என்று மணிவாசகர் கூறினார். அண்டம் என்றால் கோழி முட்டை என்றும் பொருள் உண்டு. கோழி முட்டை வடிவில் உள்ள உருண்டை என்று கோள்களின் வடிவம் கூறி இவை தொகுதி தொகுதியாக வானில் உள்ளன என்று கூறினார்.

....இதுபோன்று எத்தனை அண்டங்கள் உள்ளன? மணிவாசகர் கூறினார்: 'நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன'.



திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 16, 2010 8:25 am

மாணிக்கவாசகரும் யூரி காகரினும்

முதன் முதலில் விண்வெளியில் சென்ற மனிதர் 'யூரி ககாரின்' என்ற ரஷியர்: இவர் விண்வெளியில் சென்று சந்திரனை அடைய வேண்டும் என்று அனுப்பப்பட்டவர். ஆனால் இவர் சந்திரனை அடையவில்லை. ஆனால் சந்திரனுக்கு மிக அருகாமையில் விண்வெளியில் சஞ்சரித்த முதல் மனிதர் என்ற பெருமையைப் பெற்றவர். இவர் பல்லாயிரக்கணக்கான மைல் தூரத்திலிருந்து பூமியைப் பார்த்தார். பூமி உரு அற்புதமான ஒளி உருண்டையாகத் தெரிந்ததாம்.

சூரியனது காலைத் தோற்றத்தைப் போல பூமியினது ஒளி வர்ண ஜாலத் தோற்றத்தைக் கண்டவர் தாம் கண்ட அதிசய அனுபவத்தால் கூக்குரல் இட்டாராம். பூமிக்குத் திரும்பி வந்த போது அவருக்கு அளித்த வரவேற்புக் கூட்டங்களில் எல்லாம் இதைப் பற்றிக் கூறி தன்னால் அக்காட்சியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை - அவ்வளவு அற்புதமாக இருந்தது என்று கூறினாராம். கோள்களில் ஒன்றான பூமியைப் பார்த்த யூரி ககாரின் நிலையே இவ்வாறிருக்குமானால் கோள்களும் ஒரு சூரியனும் சேர்ந்த ஒரு அண்டம் - மற்றும் இது போன்ற அண்டங்களை நூறுகோடிக்கு மேற்பட்டனவற்றை மணிவாசகர் பார்த்த மெய்ஞானக் காட்சியை வர்ணிக்க வார்த்தைகள் ஏது?......



மாணிக்கவாசகரும் நியூட்டனும்


இனி, அண்டங்கள் பலவற்றை ஒரு சேரப் பார்த்த மணிவாசகர் வேறு ஒரு விஞ்ஞான உண்மையும் கூறினார். அதாவது அண்டங்கள் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்திருந்தன; இவை எப்படி வானில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தன என்பதைப் பற்றியும் மணிவாசகர் கூறுகிறார். ஒரு கோள் இன்னொரு கோளை, ஒரு அண்டம் இன்னொரு அண்டத்தை இழுத்துக் கொண்டு நின்றன என்றார். ''ஒன்றனுக்கு ஒன்று நின்ற எழில் பகரின்" என்பது அவர் தம் வாக்கு. இதன் மூலம் ஈர்ப்புச் சக்தி (gravitational force) என்ற ஒன்றினை மணிவாசகர் கூறுகிறார்.


பதிநான்காம் நூற்றாண்டுக்கு பின் வந்த நியூட்டன் என்ற விஞ்ஞானி புவி ஈர்ப்புச் சக்தியைக் கண்டுபிடித்தான் என்று விஞ்ஞான உலகம் கூறும். இந்தப் புவி ஈர்ப்புச் சக்தியை - கோள்களுக்கிடையே நிலவும் இந்தச் சக்தியை மணிவாசகர் 3-ம் நூற்றாண்டிலேயே இந்தத் திருவண்டப்பகுதியில் கூறியதைக் காணும் போது நம்மால் பெருமிதம் கொள்ளாமல் இருக்க இயலுமா? எத்தனை பெரிய விஞ்ஞான உண்மை? எவ்வளவு சுலபமாக மணிவாசகர் கூறுகின்றார்! ஒன்றனுக்கு ஒன்று என்று இரு கோள்களை அல்லது அவற்றின் தொகுதியான அண்டங்களை இணைக்கும் 'கு' என்ற ஓர் உருபெழுத்தால் உணர்த்திய அவரது மெய்ஞ்ஞான விசாலத்திற்கு ஈடு இணை ஏது? அவரது மெய்ஞ்ஞான விசாலத்தில் விஞ்ஞான உலகம் மடங்கி நிற்பதைக் காண்கையில் நமது வியப்பு எல்லை கடந்து போகிறது.


இப்படிப் பலகோடி அண்டங்கள் எல்லாம் பிரபஞ்சத்தில் விரிந்து கடக்க அவையனைத்தும் இறைவனது எல்லையற்ற வடிவின் முன் சின்னச் சின்ன அணுவாகத் தெரிகின்றனவாம். அதாவது பழங்காலத்தில் வீடுகளின் மேற்கூரையில் வெளிச்சம் வருவதற்காக சிறிய சதுரமாகக் கண்ணாடிகளைப் பொருத்தி இருப்பார்கள். அது வழியே சூரிய வெளிச்சம் நேரே வீட்டினுள் கற்றையாக விழும். அந்தக் கற்றை ஒளியில் தூசிப்போல பற்பல அணுக்கள் இங்குமங்குமாக ஓடி இயங்கிக் கொண்டிருப்பது தெரியும். இறைவன் திருமுன் இந்தப் பலகோடி அண்டங்களும் தூசி அணுக்களாக இருக்கின்றனவாம். அவை அப்படித் தோன்றும்படி இறைவன் பெரியவனாக இருக்கின்றானாம்....



திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 16, 2010 8:26 am

மாணிக்கவாசகரும் பொருள்முதல்வாதமும்


"தோற்றமும் சிறப்பும் ஈற்றொரு புணரிய
மாபேரூழியும் நீக்கமும் நிலையும்
ஆக்கமொடு தூலத்துச்
சூறை மாருதத்து ஏறியது வளியில்
கொட்கப் பெயர்கும் குழகன்"


ஒரு பொருளை அழித்தல் என்றால் அந்தப் பொருளை முற்றுமாக இல்லையாகச் செய்துவிடுதல் என்பது பொருளல்ல. அப்படிச் செய்யவும் முடியாது. அப்படியானால் அழிவு என்பதுதான் என்ன? தூலமாகக் கண்ணுக்குத் தெரியும் பொருளைக் கண்ணுக்குத் தெரியாத அளவில் ஒடுக்கிச் சூக்குமமாகச் செய்தல். சூக்குமம் கண்ணுக்குத் தெரியாது; தூலம் கண்ணுக்குத் தெரியும். ஆகவே எந்தப் பொருளையும் முற்றும் இல்லையாகச் செய்யும் படி அழிக்க முடியாது. அதே போல சூக்குமத்தில் இல்லாத எந்தப் பொருளையும் புதிதாகக் திரட்டித் தூலமாக உருவாக்க முடியாது.


இதனை விஞ்ஞானம், ''Matter can neither be created; nor be destroyed" என்று கூறுகிறது. இது நியூட்டன் என்ற விஞ்ஞானியின் தியரம் ஆகும். இதைத்தான் சைவ சித்தாந்தம் தனக்கு அடிப்படையாகக் கொள்ளும் சற்காரியவாதம் ''இல்லாது தோன்றாது; உள்ளது சிதையாது" என்று மிகச் சுருக்கமாகக் கூறுகின்றது.


இதனை - இந்த விஞ்ஞானக் கருத்தை - அப்படியே எடுத்து மொழிகிறார் மணிவாசகர் . ஒடுக்கக் காலத்தில் இறைவன் அண்டங்களை நுண்ணணுப் பொருள்களாகப் பிரித்தலின் ''ஆக்கமொடு நீக்கமும்" என்றும் அவை தோன்றும் காலத்துப் பருமையனவாகி உருக்கொள்ளுமாதலின் 'தூலத்து நிலையும்' என்றும் கூறினார். அதாவது நிரல் நிறையாக ஆக்கமொடு நிக்கமும், தூலத்தொடு நிலையும் என்று மேற்கூறிய வரிகளில் சேர்த்துக் கூட்டிப் பொருள் செய்தல் வேண்டும்.


எனவே பொருள் அழியவில்லை; அண்டங்கள் இறைவன் அழப்பதில்லை; அவற்றைச் சூக்குமமாகச் செய்கின்றான். மீளவும் அண்டங்களைத் தோற்றுவிக்கும் போது 'சூ! மந்திரக்காளி' என்று இல்லாத பொருளில் இருந்து இறைவன் தோற்றுவிப்பதில்லை; சூக்குமமாக இருக்கும் பொருளைத் திரட்டித் தூலமான அண்டங்களை உருவாக்குகிறான். எத்துணை விஞ்ஞான ரீதியான பார்வை இது! இதனை உணர்த்திப் பாடிய மணிவாசகரின் பெருமையை என்னென்பது ! இவையனைத்தும் அண்டங்களை அணுவாகச் செய்யும் இறைவனது உலகம் கடந்த நிலை....



திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 16, 2010 8:28 am

மாணிக்கவாசகரும் ஹீலியம் கொள்கையும்

சூரியன் என்பவனையே கடவுளாகக் கொள்பவர்களும் உண்டு. அவர்களுக்குச் செளரர்கள் என்று பெயர். இன்றும் ஒரு நாடே சூரியனைக் கடவுளாக வணங்குகிறது என்றால் அது ஜப்பான் நாடு என்பது உலகறிந்த உண்மை. எனவே ஜப்பானியர்களைச் செளரர்கள் என்று கூறலாம். அத்துடன் ஆரிய வேதம் ஒழுக்கத்தைப் பின்பற்றுபவர்கள் பலர் காலை மாலை ஆகிய சந்திகளில் சூரியனைக் 'காய்த்ரி மந்திரம்' சொல்லி வணங்குவதைப் பார்க்கிறோம். சூரியனைக் கடவுளாக எண்ணி வழிபடுவதைச் சைவம் ஏற்பதில்லை.

''செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்செழுத் துமே"


என்று அந்த காய்த்ரி மந்திரத்திற்கும் இறைவன் அஞ்செழுத்து இறைவனாகிய சிவபெருமானே சூரியனன்று என்று மறுத்து ஓதினார் சுமார்த்த அந்தணரான சம்பந்தர்.

'' அருக்னாவான் அரன் உரு அல்லனோ"


என்று சூரியனுக்கும் கடவுள் அரன் அல்லவா என்றார் அப்பரடிகள். அருக்கன் என்றால் சூரியன் என்று பொருள். இந்தச் சூரியனைப் பற்றி விஞ்ஞானம் என்ன கூறுகிறது? சூரியன் என்பது 6000 டிகிரி சென்டிகிரேடில் கனன்று கொண்டிருக்கும் ஹீலியம் என்ற ஒரு வாயுக் கோளம் என்று கூறுகிறது.... கதிர்வீச்சு முறையில் சூரியனை விட்டு வெப்பம் வெளியேறுமானால் அதன் வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாக நட்டமாகிக் கொண்டே வருதல் வேண்டும். அப்படியானால் சூரியன் 6000 டிகிரி சென்டிகிரேடில் தொடர்ந்து இருத்தல் இயலாது.

எனவே சூரியன் ஒருநாள் பனிக்கட்டியாய் உறைந்து விடுதல் தவிர்க்க முடியாது போலிருக்கிறதே என்று எண்ணத் தோன்றும். ஆனால் விஞ்ஞானிகள் சூரியனின் வெப்ப நிலை 6000 டிகிரி சென்டிகிரேட்டிற்குக் குறைவான வெப்பநிலையை அடைவதில்லை என்று அறுதியிட்டுக் கூறுகின்றனர். வெப்ப இழப்பு இருந்தாலும் இழப்பு ஈடுசெய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்பது விஞ்ஞானம். யார் ஈடு செய்வது? தனக்குத் தானே சூரியன் ஈடுசெய்து கொள்ளுமா? சூரியன் என்பது ஒரு ஹீலியம் என்ற வாயுக்கோளம் என்று விஞ்ஞானம் கூறுவதால் அது சடப்பொருள். சடப்பொருள் தனக்குத் தானே ஈடுசெய்து கொள்ள முடியாது? எனவே யார் ஈடுசெய்வது?

மணிவாசகர் கூறினார் : ''வேறு யார்? இறைவன் தான்!"

...நாடொறும்
அருக்கனிற் சோதி அமைத்தோன்"

அருக்கன் என்றால் சூரியன் என்று ஏற்கனவே கூறியிருக்கிறோம். அருக்கனாகிய சூரியனில் இறைவன் நாடோறும் கனன்றெழும் சோதியை அமைக்கின்றானாம். எனவே தான் சூரியன் தனது வெப்ப நிலையை இழக்காமல் இருக்கிறது. இந்த விஞ்ஞான உண்மையை பல நூற்றாண்டுகட்கு முன்னரே கூறிய மணிவாசகரின் மதிநுட்பத்தை என்னென்று கூறுவது? சூரியனையே கடவுளாகக் கொள்வதில் வேறு ஒரு ஆபத்தும் உண்டு.

விஞ்ஞானரீதியாகப் பார்க்கப்போனால் ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு சூரியன். என்றால் அப்படியானால் பல கோடி நட்சத்திரங்கள் உண்டு அல்லவா? ஆக பலகோடி சூரியர்கள் உண்டு என்று ஆகிறது. அதன்வழி நாம் பார்த்து வணங்கும் ஒரு சூரியனைப் போல பல கோடி சூரியர்களையும் கடவுளாக வணங்கவேண்டும். எனவே கடவுள் ஒருவர் அல்லர் என்று ஆகி பல கோடி கடவுள்கள் உண்டு என்று கூறவேண்டிய குழப்பத்திற்குக் கொண்டு சென்றுவிடும் ஆபத்து அக்கொள்கையில் மறைந்திருப்பதை உணர வேண்டும்.



திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 16, 2010 8:29 am

மாணிக்கவாசகரும் ஆம்ஸ்டிராங்கும்


மணிவாசகர் சந்திரனைக் கூறுகிறார். சந்திரனில் தன்¨மையை வைத்தவன் இறைவன் என்று பாடுகிறார். 'திரத்தகு மதியில் தன்மை வைத்தோன்' என்பது அவரது வாக்கு. சந்திரனுக்கு விண்கலம் விடுகின்ற காலம் இது. ஆர்ம்ஸ்ட்ராங் என்ற அமெரிக்கர் காலை உறுதிபட சந்திரனில் வைத்துவிட்டு வந்தவர். முதலில் விஞ்ஞானிகள் சந்திரனில் தண்ணீரே இல்லை என்று கூறிவந்தனர். ஆனால் அண்மைக்கால விஞ்ஞான ஆராய்ச்சிகள் சந்திரனில் தண்ணீர் இருக்கிறது என்று உறுதி செய்கின்றன. எனவே விஞ்ஞானிகள் இடையில் ஆட்டம் கண்டாலும் மெய்ஞ்ஞானியான மணிவாசகர் அசையாத உறுதிபட சந்திரனில் தன்மை அமைத்தவன் இறைவன் என்று விஞ்ஞான உண்மைக்கு மாறுகோள் படாது கூறுகின்றார்.



மாணிக்கவாசகரும் உருவெளிக் கொள்கையும்


....ஆனால் இன்றைய விஞ்ஞானம் ஆகாயத்தின் இருப்பை ஏற்றுக் கொள்கிறது. இன்னும் சொல்லப்போனால் பிரபஞ்சத்தை அது இரண்டாகப் பிரித்துப் பேசும் போது காலம், இடம் என்று கூறுகிறது. இடத்தை space என்று கூறுவது விஞ்ஞானம். சைவ சித்தாந்தமும் பிரபஞ்சப் பொருள்கள் அனைத்திற்கும் இடம் கொடுத்து நிற்பது ஆகாயம் என்றே கூறுகிறது. அதற்கேற்ப இடத்தை Place என்று கூறாமல் Space என்று கூறுகிறது இன்றைய விஞ்ஞானம். இங்கே ஒரு சின்ன செய்திகூட தொடர்பு பற்றி சிந்திக்கத்தக்கது.

சைவ சித்தாந்தத்தில் கடல் என்பது நீரைக் குறிப்பதல்ல. நீருக்கு இடம் கொடுத்த ஆகாயத்திற்குத்தான் கடல் என்று பெயர் என்று சைவசித்தாந்தம் கூறும். அதற்கேற்ப ஆகாயக்கலங்களை விஞ்ஞானிகள் Space Swing என்று கடல் நீரில் ஓடும் கப்பல் போல குறிப்பிடுவது சைவ சித்தாந்தக் கருத்துக்கு அணி செய்வதாக அமைந்திருப்பது நாம் கண்டின்புறத்தக்கது. அதாவது காற்றுமண்டலம் வரை செல்வதை Aeroplane என்றவர்கள் காற்றுமண்டலத்தையும் தாண்டி ஆகாயத்தில் வெட்டவெறு வெளியில் செல்வதை Spaceship என்றது. இந்த மாறுபாட்டையும் ஆகாயத்தின் இருப்பையும் காட்டும்.

விஞ்ஞானம் ஒப்புக் கொள்கிற இந்த ஆகாயத்தைப் பொய் என்றனர் புத்தர்கள். அவர்கள் சொல்வது தான் பொய் என்றார் மணிவாசகர். ஆகாயத்தைப் பற்றிப் பாடும் போது அவர் ''பொய்தீர் வானிற் கலப்பு வைத்தோன்" என்று பாடினார். வானை இது பொய் என்பது தீர்ந்த வான் என்று அடைமொழி கொடுத்து பொய்தீர் வான் என்பதிலிருந்து விஞ்ஞான உண்மைகளை மணிவாசகர் எவ்வளவு கூர்மையாகக் கண்டெடுத்து முன் வைக்கிறார் என்பதறிந்து வியக்காமல் இருக்க முடியவில்லை.....



திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 16, 2010 8:30 am

மாணிக்கவாசகரும் ஒளிமுறிவுக்கொள்கையும்

.. வானிற்குப் பொய்தீர் வான் என அடைகொடுத்து ஓதி ஒரு விஞ்ஞான உண்மையை விளக்கியது போலவே, நீருக்கு நிழல்திகழ் என்று அடைகொடுத்து ஒரு விஞ்ஞான உண்மையை விளக்கும் திறம் வியம்புக்குரியது. நிழல் என்றால் அது பிரதிபிம்பம் என்று பொருள். நாம் கண்ணாடியில் நம் உருவத்தைப் பார்க்கிறோம். அந்த உருவம் நமது பிரதிபிம்பம். இந்தப் பிரதி பிம்பத்தை (Image) நிழல் என்று தமிழில் கூறுவர். பிரதிபிம்பமாகிய நிழலைக் காட்டுவதால் கண்ணாடிக்கு நிழல்கலன் என்று பெயர் உண்டு. இன்றும்கூட நமது பிரதிபிம்பத்தைக் காட்டும் படத்தை நிழற்படம் என்று கூறுவது இதற்கு வழக்காற்றுச் சான்றாகும்.


நீரில் ஒரு பிரதிபிம்பம் ஏற்படும். அதாவது ஒரு நிழல் நிஜமல்ல. அது பொய்த் தோற்றம். நீரில் ஏற்படும் பொய்த்தோற்றத்தை ஒளியில் கூறுகிறது. ஒருநீர்த் தொட்டியில் ஒரு பிரம்பை பாதி அமிழ்த்தினால் அந்தப் பிரம்பில் நீரில் மூழ்கியிருக்கிற பகுதி ஒடிந்து திரும்பியது போலத் தோன்றும். இதற்கு ஒளிமுறிவு (Refraction) என்று பெயர். அதனைக் கீழே படத்தில் காண்க.மேற்படி ஒளி முறிவினால் பிரம்பே வளைந்தது போல ஒரு நிழல் தோன்றுகிறதல்லவா? இது எதனால் ஏற்பட்டது? தண்ணீரின் ஒளி இயலினால் ஏற்பட்டது. இதனை மணிவாசகர் என்ற விஞ்ஞான உண்மையை விளக்கினார் என்னும் போது அவரது விஞ்ஞான அறிவை வியவாமல் இருக்க இயலாது.



திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Mar 16, 2010 8:30 am

வணக்கம்
//இவர் மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் மருமகனாவார்.//
திரு சக்திவேல் முருகனார் அவர்கள் திருமுருக வாரியார் ஸ்வாமிகளின் மருமகனாவார், அமரர் குன்றக்குடி அடிகளார் ஒரு துறவி
அன்புடன்
நந்திதா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 16, 2010 8:33 am

மாணிக்கவாசகரும் அணுப் பிளவும்

.....அடுத்த ஒரு விஞ்ஞான உண்மையை மற்றுமொரு வரியில் வைக்கிறார் மணிவாசகர். அது 'அணுத்தரும் தன்மையில் ஐயோன் காண்க' என்பது.


இவ்வுலகில் எல்லாவற்றிற்கும் மூலமாய் இருப்பது அணுவே என்று கூறுவார்கள் சமணர்கள். இதனால் இவர்கட்கு அணுசாரணவாதிகள் என்றும் ஆரம்ப வாதிகள் என்றும் பெயர் உண்டு. அணுவை முடிந்த முடிவாகக் கொண்டவர்கள் சமணர். ஆனால் அதற்கும் மேலே சிந்தித்தவர்கள் சைவசித்தாந்திகள். சித்தாந்திகள், அணு முடிந்த முடிவல்ல, அணுவிற்கும் சிறிதானவனும் நுட்பமானவனும் இறைவனே ஆவான் என்றனர்.


அணுவிற்கும் நுட்பமானது ஒன்று உண்டு என்பது இன்றைய விஞ்ஞானமும் ஒப்புக் கொள்கிறது. முதலில் அணுவைப் பிரிக்கவே முடியாது என்றனர் விஞ்ஞானிகள். பின்னர் ருதர்·போர்டு என்ற விஞ்ஞானி அணுவைப் பிளக்க முடியும் என்று கண்டறிந்தார். அப்படிப் பார்க்கும் போது அளவிறந்த ஆற்றல் வெளிப்படுகிறது என்றம் உலகிற்கு உணர்த்தினார். அதன் விளைவே இன்றைய அணுமின் நிலையங்கள் மற்றும் அணு ஆயுதங்கள்.


அணுவைப் பிளந்தால் என்னென்ன கிடைக்கும்? விஞ்ஞானம் பதில் சொல்கிறது. பதில் சொல்லு முகத்தால் அணுவின் படத்தை வரைந்து காட்டுகிறது. அதனைக் கீழே காண்க:

அணுவின் கருவில் புரோட்டான், பாஸிட்ரான், நியூட்ரான் என்ற துகள்கள் உள்ளன. கருவைச் சுற்றி பல்வேறு வட்டப் பாதைகளில் எலக்ட்ரான் நெகடிவ் சார்ஜ் உடையவை. இவை நியதியாகச் சுற்றுவது கருவைச் சுற்றி உள்ள சக்தி ஈர்ப்பினால் ஆகும். பல்வேறு சக்தி அளவினால் பல்வேறு சுற்றுப்பாதைகள் அமைகின்றன. இவ்வாறு விஞ்ஞானம் கூறுகிறது.

இதனை உள்ளடக்கி மணிவாசகர்,

''கல்லாடத்து கலந்தினிதருளி
நல்லா ஆளோடும் நயப்புற எய்தியும்"


என்று பாடினார். இங்கே கல்லாடம் என்பது கல் போன்ற சிறுதுகள்களான எலக்ட்ரான், புரோட்டான், பாஸிட்ரான், நியூட்ரான் என்பனவற்றை. இவற்றை இழுத்துப் பிடித்து நிற்பது சக்தியாதலால் அவளை நல்லாள் என்று கூறி கல்லாடமும், நல்லாலதுமாக அணுவில் நயப்புற அமைந்த தன்மையைக் கூறினார். இவ்வரிகள் கீர்த்திக் திருஅகவலில் கூறப்பட்டது. இதனை உள்ளடக்கியே இங்கு திருவண்டப்பகுதியில் 'அணுத்தரும் தன்மையில் ஐயோன் காண்க' என்றார். ஐ என்றால் நுண்மை. அணுவல்ல; அணுவைத் தரும் தன்மையில் அணுவை விட நுண்ணியன் இறைவன் என்று கூறிய அழகு போற்றற்குரியது. அணு என்பது முடிந்த முடிவல்ல, அணு என்பது ஒரு கூட்டமைப்பு (Assembly) என்பதை அணுத்தரும் தன்மை என்பதால் குறித்தார். அணுவில் உள்ள துகள்களை முன்னமே கீர்த்தித் திருஅகவலில் கல்லாடம் என்றும் அவை நிற்கும் நிலை சக்தியால் ஆனது என்பதை நல்லாளோடு நயப்புற எய்தல் என்று தாம் கூறியவற்றைத் தழுவிய அணுத் தரும் தன்மை என்று இங்குக் கூறினார்.

திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Thiruv10




திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 16, 2010 8:33 am

இதனை மேலும் உன்றிப் பார்த்து உய்த்துணர்தல் என்ற உத்தியால் அலசினோமானால் மேலும் சில உண்மைகள் வெளியாகும்.


அணுவில் பாஸிட்ரான் என்பது எடை எதுவும் இல்லாது பாஸிடிவ் சார்ஜ் மட்டும் உடையது. இதனைச் சிவதத்துவம் எனலாம். எலக்டரான் என்பது எடை உடைய நெகடிவ் சார்ஜ் மட்டும் உடையது. இதனைக் கருவைச் சுற்றி இழுத்துச் சுழற்றும் சக்தி சக்திதத்துவம். அணுவில் எலக்ட்ரான் எத்தனை உள்ளதோ அத்தனை புரோட்டான் இருக்கும் என்பது விஞ்ஞானம். ஒன்றற்கொன்று ஏறத்தாழ சமமாய் உள்ள இவ்விரண்டையும் இயைத்திட அது சதாசிவ தத்துவம் அல்லது சாதாக்கிய தத்துவம் எனலாம். உள்ளே கருவில் நிலை செய்யும் நியூட்ரான் சுத்த வித்தைத் தத்துவம். வெளியே சுற்றுக்களில் (Orbit) பாதை நழுவிய நிலையில் சுற்றும் எலக்ட்ரான்கள் (Valent Electrons) கிரியை மிகுத்து நிற்கும் ஈசுரதத்துவம் எனலாம். இவற்றிக்கும் நுண்ணியவன் இறைவன்.


இதைத்தான் அணுத் தரும் தன்மையில் ஐயோன் என்று மணிவாசர் மிக அழகுபடக் கூறினார். இங்ஙனம் எத்தனை எத்தனையோ விஞ்ஞான உண்மைகளை உள்ளடக்கியது திருவண்டப்பகுதி என்னும் திருஅகவலாகும். மணிவாசகர் திருவாய் மலர்ந்தருளிய இத்திருஅகவலின் இன்னும் தோண்டத் தோண்டப் பலப்பல விஞ்ஞான உண்மைகள் பளிச்சிடும். பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற நியாயத்தின் வழி ஒரு சில விஞ்ஞான உண்மைகளை மட்டும் அடியேனது அற்ப அறிவிற்கு எட்டிய வண்ணம் காட்டியுள்ளேன். இன்னும் பலவுள; அவற்றை அறிஞர்கள் ஆனமட்டும் முயன்று உணர்வார்களாக!


அருளாளர்களின் கவிகள் மாதுளங்கனி போன்றவை; பிரித்தெடுக்க, பிரித்தெடுக்க பலமணிகள் கிடைப்பது போல தோண்டத் தோண்ட கருத்து மணிகள் உதிரும்.

தொகுப்பு:திருவுடையான்.




திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Mar 16, 2010 8:36 am

அருமை அருமை. திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் 677196 திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் 677196 திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் 677196 திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும் 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக