ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவரமா(ண)னவர்கள்! (சிறுகதை)

4 posters

Go down

விவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) Empty விவரமா(ண)னவர்கள்! (சிறுகதை)

Post by இளமாறன் Mon Mar 15, 2010 5:22 pm

விவரமா(ண)னவர்கள்! (சிறுகதை)

விவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) Vmalarnews_81597536803

- கே.ஜி.ஜவஹர்
வடபழனி பஸ் நிலையத்திலிருந்து பஸ் கிளம்பிவிட்டது. எனக்கு நல்ல சீட்; வசதியாக இருந்தது. அவ்வளவு நேரம் காலியாக இருந்த மாதிரி இருந்த பஸ்சினுள், கிளம்பும் நேரம், "திபு திபு' என கூட்டம் ஏறியது. அத்தனை பேரும், ஸ்கூல், கல்லூரி மாணவர்கள் தான். எனக்கோ எரிச்சல் மண்டிற்று.
அரைமணி நேரத்திற்கும் மேலாக பஸ் நின்று கொண்டிருந்தது. அப்போது
ஏறித் தொலைக்க வேண்டியது தானே இதுகள்? ஓடற பஸ்சில் ஏறினாத்தான் ஸ்டைலா? அதுவும், பஸ்சின் உள்ளே நிறைய இடம் காலியாக இருந்தது. அப்படியும், புட்போர்ட்ல ஏகப்பட்ட பேர், தொங்கிக் கொண்டு வந்தனர்.
ச்சே... பெற்றோர், கஷ்டப்பட்டு, வயற்றைக் கட்டி வாயைக்
கட்டி பள்ளிக்கோ, கல்லூரிக்கோ அனுப்பி வைக்கின்றனர். இதுகளோ, இப்படி கொட்டம் அடித்து, கூப்பாடு போட்டு...இதை ரசித்த படி, "கெக்கே பிக்கே' என்று சிரித்துக் கொண்டு மாணவியர் வேறு! இதற்காகத் தான் இந்த பசங்களுக்கு மூடு வருகிறதோ!அதுவும், பேச்சும், கூச்சலும் நாகரிகமே இல்லாமல்...

"டேய் மச்சி...'

"நாயே...

செருப்பால அடிப்பேன்...'

"சீ... புறம்போக்கு...' — பல வித வார்த்தைகளில் ஒவ்வொருத்தரும் ச்சே...
அந்தக்காலத்தில், நாங்களும் நெல்லையில், பஸ்ல ஸ்கூல்
போயிருக்கோம். பெருமாள் புரத்திலிருந்து, ஊசி கோபுரம் போற வரை, அந்த ரூட்டில், ஆண்களும், பெண்களும், மனசில் எத்தனையோ, ஆசைகள் அபிலாஷைகள் இருந்தாலும், பொது நலம் கருதி, மரியாதை கருதி, மெதுவாகப் பேசுவோம்.

எங்களைச் சுற்றி ஏகப்பட்ட மாணவியர் பஸ்சில் நின்றிருந்தாலும், வார்த்தைகளில், இந்த மச்சி, குச்சியெல்லாம் வராது. லூஸ் இளகாமல், கன்ட்ரோலாக இருப்போம்.

ம்... இப்போ அப்படியெல் லாம் இல்லை...
கமிங் பேக் டு த பாயின்ட்!

நூறடி சாலையை பஸ் கடந்ததும், கோவில் ஸ்டாப் வந்தது.

புட்போர்ட் ரோமி யோக்கள், "டொம்... டொம்' என்று பஸ்சில் தட்டிக் கொண்டே வந்தனர்.
ஜன்னலோரம் அமர்ந்திருந்த மாணவியரும், சிரித்துக் கொண்டே, சிரிக்காத மாதிரி நடித்துக் கொண்டிருந்தனர்.

பஸ் நின்றது... இந்த பையன்கள் கீழே குதித்து, பஸ்
ஓடத் துவங்கியதும், பஸ் கூடவே ஓடி வந்து ஏறினர். அதில், புதிதாகச் சேர்ந்து கொண்டவர்கள். ஜன்னல் வழியே தங்கள் பைகளை, பெண்களிடம் கொடுத்தனர். இதுகளும், சிரித்துக் கொண்டே வாங்கி மடியில் வைத்துக் கொண்டன; உதவியாம்.
எனக்கு எரிச்சல் மண்டிற்று... இந்த பெண்கள், ஏன் இவர்களின் பையை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த மாதிரி பெண்கள் இருப்பதால் தானே, இந்தப் பயல்கள் இப்படி, உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்கின்றனர்? ஒரு கை ஜன்னல் கம்பியிலும், ஒரு கால் அந்தரத்திலும் தொங்க... பார்க்கவே நடுங்குகிறதே...
இவர்கள் எல்லாம் திருந்தவே மாட்டார்களா?

இதையெல்லாம் யாரும் கவனித்ததாகவே தெரியவில்லை. டிரைவர் வழக்கம்
போல, வேகமாக ஓட்டிக் கொண்டு போனார்; கண்டக்டர், டிக்கெட் கிழித்துக் கொண்டே இருந்தார்.

திடீர் என்று பஸ்சினுள் ஒரு கூச்சல்... ""யோவ்... பார்த்தா டீசன்ட்டா
இருக்க... இடுப்பையா கிள்ற...?''

பளார்!
ஒரு பெண், ருத்ர காளியாய் மாறி, அந்த ஆளுக்கு பாடம் புகட்ட, ""ஏம்மா! அடிக்காதம்மா... யோவ்... இப்பவே பஸ்ச விட்டு
இறங்கிடு... அட போய்யா...'' என்று, புட் போர்ட் மாணவர்கள் பஸ்சினுள் புகுந்து, அந்த ஆசாமியை, கமாண்டோ வீரர்கள் மாதிரி தரதரவென்று இழுத்து பஸ்சின் வெளியே தள்ளினர்.

""வந்துட்டானுக... காலங்கார்த்தால...'' என்று பஸ் பெண்கள் அலுத்துக்
கொள்ள, பஸ் மீண்டும் புறப்பட்டது.

எதுவுமே நடக்காதது போல், மீண்டும் ஆட்டம்,
பாட்டு, டொம், டொம்!

""டேய் மச்சி... பார்ரா... பார்ரா... அந்தப்பய மூணு பேர
வச்சு வண்டியில போறான்...''
""விழுந்தா சாவானுங்க...''
""அத நீ பேசாதடா...
தொங்கிக்கிணு வர்ற குரங்கே...'' என்றான் சக மாணவன்.
""டேய் மச்சி... இது ஒரு ஸ்டைலுடா, ஆனா, டேய்... இத பார்த்து நீ பண்ணேன்னு வைச்சுக்க... மவனே சங்கு தான்
உனக்கு. நிறைய விளம்பரத்துல, "இத மாதிரி செய்து பார்க்காதீர்கள், ஆபத்து'ன்னு அவங்களே டைட்டில் போடுறாங்க... அது மாதிரி நான் உனக்கு டைட்டில் போடறேண்டா... பொத்திகினுபோ!''

எனக்குத் தாளவில்லை...
""டேய் பசங்களா! அடுத்த பஸ்ல வரக்
கூடாதா?''
""எந்த பஸ்ல வந்தாலும் இப்படித்தான் சார் வரு வோம்...''
சிரிப்பு.
""சார்! இப்பவே நேர மாச்சு... நாங்க ரொம்ப லேட்... மத்த கில்லாடிப்
பயலுவ, ராத்திரியே போய் டென்ட் அடிச்சுட்டானுக...''
""எங்கே?''
""விதர்பா ஹாலுக்கு...''

திடுக்கிட்டேன்.
""விதர்பா ஹாலுக்கா?''
""ஆமா சார்... அங்க
பெரிய நிகழ்ச்சி நடக்குது... பரீட்சையில நிறைய மார்க் எப்படி வாங்கணும்ன்னு; போயிட்டு இருக்கோம்...''
சிலிர்த்தது எனக்கு, இத்தனை பசங்களும் போய்க்
கொண்டிருப்பது அந்த ஹாலுக்கா?
எனக்கு சந்தோஷம் பூரித்தது. ஆனாலும், வெளியே காட்டிக் கொள்ளாமல் அவர்களை சீண்டினேன்.
""பசங்களா! உங்களுக்கு நிறைய பாடம்,
சிலபஸ், ஸ்கூல், புத்தகம், வாத்தியார்கள் இருக் காங்க... அதுவே போதும்பா.
இதுக்கெல்லாம் போய் நேரத்த வேஸ்ட் பண்ணாதீங்க...''
இதைச் சொன்னது தான் தாமதம்,
அத்தனை மாணவர் களும், என்னை ஒரு தீவிரவாதி யைப் பார்ப்பது போல் பார்த்தனர்;
முறைத்தனர்; அடித்து கூட விடுவர் போலிருந்தது.
"ஏய் பெருசு... கம்னு கிட!' என்று
ஒருத்தன் மவுனமாய் முறைத்தான்.
அப்போது ஒருவன், ""சார்... நம்ம உணவுல கீரை,
காய்கறி, பழங்கள், அரிசி, கோதுமைன்னு எவ்வளவோ இருக்கு... எல்லாமே நல்லது தான். ஆனா,
எதை எந்த அளவு, எப்படிச் சாப்பிட்டா நல்ல ஆரோக்யமான வாழ்வு வாழலாம்ன்னு டயட்டீஷியன் சொல்றார்ல... அதுமாதிரி தான் சார் இதுவும்...''

இதைக் கேட்டதும், மாணவர்கள்
மத்தியில் சிரிப்பு, மகிழ்ச்சி, கூக்குரல்.
""நெத்தியடிடா...
மச்சி!''
""எங்கோ போய்ட்டடா!''
""டேய்... மனச, "டச்'
பண்ணிட்ட...''
""அடுத்த நிகழ்ச்சிக்கு நீ தான்டா சிறப்பு
விருந்தினர்!''
என்னுள்ளோ மகிழ்ச்சி பிரவாகம்.
சற்றுமுன் வரை, இந்த மாணவர்களைப் பற்றி நான் நினைத்திருந்த அத்தனையும் சரிந்து, கரைந்து, மறைந்து போய்,
ஒரு உயர்வான எண்ணம் தான் மேலோங்கி நின்றது. நம்முடைய எண்ணம், தவறானது என்று புரிந்து போயிற்று.
அந்தக் காலத்தில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று
நினைத்து, போலியான கண்டிப்புக்களை காட்டிக் கொண்டிருந்த மாதிரி பட்டது எனக்கு.
இப்போதோ எல்லாமே திறந்த புத்தகம் தான். நல்லதும், கெட்டதும் இவர்களின் முன்னே கொட்டிக் கிடக்கிறது... கெட்டதைப் பார்க்க இந்த தலைமுறைக்கு வாய்ப்புகள் இருந்தும்
நல்லதையே நாடுகின்றனர். இவர்களின் வெளிநடவடிக்கைகளை வைத்து, மட்டமாக எடை போட்டு விடக்கூடாது என்று புரிந்து போயிற்று.
திடீரென்று பஸ்சினுள் ஒரு பெண் மயக்கமுற்று சாய்ந்தாள். கூட்ட நெரிசலில் மயக்கம் வந்துவிட்டது.
மாணவர்கள் பரபரப்பாகினர். மற்றவர்கள் வேடிக்கை பார்த்தனர்.
""டேய்... பஸ்ச நிறுத்துடா...
இவங்களை ஆஸ்பத்திரி கொண்டு போகலாம்...''
""டேய்... நிகழ்ச்சிக்கு லேட்டா யிரும்டா...''
""டேய்... மேக்ஸிமம் அரை மணி நேரமாகும்... அப்படியே போனாலும்
பரவாயில்லை... நாளைக்கு குரோம் பேட்டையில நடக்குது. அங்க போய்க்கலாம்... இறக்கு அவங்களை... ஆட்டோ...''
என் கண்கள் ஆச்சரியத்தில் விரிய, மனது நெகிழ்ந்து போய்
படபடக்க, அவர்களில் சிலர் அந்தப் பெண்ணை ஒரு ஆட்டோவில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர்.
பஸ் வேகம் எடுத்து விதர்பா ஹால் ஸ்டாப் பில் நின்றது. எல்லாரும்
இறங்கி ஓடினர்.
நான் வேறு வழியாக ஹாலை அடைந்தேன்.
நிகழ்ச்சி ஒருங் கிணைப்பாளர் வேகமாக என்னை வரவேற்று ஒரு பேட்ஜை என் சட்டையில்
குத்தினார்.
""சார்... ஆரம்பிச்சிறலாமா?'' என்றார் ஒருங்கிணைப்பாளர்.
""அரை மணி நேரம் வெயிட் பண்ணுவோம் சார்... சிலர் வரவேண்டியிருக்கு...''
ஆஸ்பத்திரி சென்ற மாணவர்களை நினைத்தபடி சொன்னேன், சிறப்பு பேச் சாளனாகிய நான்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

விவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

விவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) Empty Re: விவரமா(ண)னவர்கள்! (சிறுகதை)

Post by Aathira Mon Mar 15, 2010 5:49 pm

ஒரு ஆசிரியராக இந்த எண்ணம் எனக்கு என்றும் உண்டு. அதிலும் இக்கதையாசிரியர் ஜவஹர் என்னுடைய நண்பர். சிறந்த சிறுகதை எழுத்தாளர் மட்டுமல்ல. சிறந்த பண்பாளர், ஜலதரங்க வித்துவானும். அவர் சிறுகதையைப் படித்துப் பாராட்ட முடியவில்லையே என்று நான் வருந்தியதுண்டு.இன்று பாராட்டிவிடலாம்.அவர் சிறுகதையைப் ப்டிக்கத் தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றி இளமாறன்
விவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) 154550 விவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) 678642 விவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) 154550 .

விவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) Aவிவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) Aவிவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) Tவிவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) Hவிவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) Iவிவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) Rவிவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) Aவிவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

விவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) Empty Re: விவரமா(ண)னவர்கள்! (சிறுகதை)

Post by சரவணன் Mon Mar 15, 2010 5:55 pm

Aathira wrote:ஒரு ஆசிரியராக இந்த எண்ணம் எனக்கு என்றும் உண்டு. அதிலும் இக்கதையாசிரியர் ஜவஹர் என்னுடைய நண்பர். சிறந்த சிறுகதை எழுத்தாளர் மட்டுமல்ல. சிறந்த பண்பாளர், ஜலதரங்க வித்துவானும். அவர் சிறுகதையைப் படித்துப் பாராட்ட முடியவில்லையே என்று நான் வருந்தியதுண்டு.இன்று பாராட்டிவிடலாம்.அவர் சிறுகதையைப் ப்டிக்கத் தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றி இளமாறன்
விவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) 154550 விவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) 678642 விவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) 154550 .

ஆசிரியரா? நானும் ஆசிரியர்.

(மனசாட்சி: ஆஹா இது தெரியாம கொஞ்சம் ஓவாரா போயிட்டோமோ, சரி இனி கொஞ்சம் கவனமா இருப்போம்)

நன்றி இளமாறன் விவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) 678642

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

விவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) Empty Re: விவரமா(ண)னவர்கள்! (சிறுகதை)

Post by Aathira Mon Mar 15, 2010 6:02 pm

சரவணன் wrote:

சரவணன் நீங்கள்??? சொல்லுங்க.

விவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) Aவிவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) Aவிவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) Tவிவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) Hவிவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) Iவிவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) Rவிவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) Aவிவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

விவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) Empty Re: விவரமா(ண)னவர்கள்! (சிறுகதை)

Post by சரவணன் Mon Mar 15, 2010 6:13 pm

Aathira wrote:

நானும் ஆசிரியர் ஆகணும்னு நெனைச்சேன் முடியல, அப்டின்னு சொல்ல வந்தேன்.

ஜவஹர் உங்க நண்பரா? அருமையான கட்டுரை. என் மனமார்ந்த வாழ்த்துக்களை கூறுங்கள்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

விவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) Empty Re: விவரமா(ண)னவர்கள்! (சிறுகதை)

Post by Aathira Mon Mar 15, 2010 6:15 pm

ஏன் இப்படி அழும்பு பன்றீங்க?

விவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) Aவிவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) Aவிவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) Tவிவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) Hவிவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) Iவிவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) Rவிவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) Aவிவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

விவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) Empty Re: விவரமா(ண)னவர்கள்! (சிறுகதை)

Post by சரவணன் Mon Mar 15, 2010 6:20 pm

பொதுவாக தமிழ் வாத்தியாரை ஆணாக இருந்தால் அய்யா என்று நாங்கள் அழைப்போம்.
பெண்ணாக இருந்தால் எப்படி அழைப்பது அம்மா என்றா?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

விவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) Empty Re: விவரமா(ண)னவர்கள்! (சிறுகதை)

Post by Aathira Mon Mar 15, 2010 6:23 pm

சரவணன் wrote:பொதுவாக தமிழ் வாத்தியாரை ஆணாக இருந்தால் அய்யா என்று நாங்கள் அழைப்போம்.
பெண்ணாக இருந்தால் எப்படி அழைப்பது அம்மா என்றா?

இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை. அழைக்கரதுதான் பிரச்சனையா? கேட்ட கேள்விக்கு ஒழுங்கா பதிலைச் சொல்லக் காணோம். எதிர் கேள்வி கேட்டுகிட்டு???

விவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) Aவிவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) Aவிவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) Tவிவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) Hவிவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) Iவிவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) Rவிவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) Aவிவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

விவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) Empty Re: விவரமா(ண)னவர்கள்! (சிறுகதை)

Post by சரவணன் Mon Mar 15, 2010 6:24 pm

Aathira wrote:
சரவணன் wrote:பொதுவாக தமிழ் வாத்தியாரை ஆணாக இருந்தால் அய்யா என்று நாங்கள் அழைப்போம்.
பெண்ணாக இருந்தால் எப்படி அழைப்பது அம்மா என்றா?

இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை. அழைக்கரதுதான் பிரச்சனையா? கேட்ட கேள்விக்கு ஒழுங்கா பதிலைச் சொல்லக் காணோம். எதிர் கேள்வி கேட்டுகிட்டு???

என்ன கேள்வி மேடம்?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

விவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) Empty Re: விவரமா(ண)னவர்கள்! (சிறுகதை)

Post by கலைவேந்தன் Tue Mar 16, 2010 12:17 am

Aathira wrote:ஒரு ஆசிரியராக இந்த எண்ணம் எனக்கு என்றும் உண்டு. அதிலும் இக்கதையாசிரியர் ஜவஹர் என்னுடைய நண்பர். சிறந்த சிறுகதை எழுத்தாளர் மட்டுமல்ல. சிறந்த பண்பாளர், ஜலதரங்க வித்துவானும். அவர் சிறுகதையைப் படித்துப் பாராட்ட முடியவில்லையே என்று நான் வருந்தியதுண்டு.இன்று பாராட்டிவிடலாம்.அவர் சிறுகதையைப் ப்டிக்கத் தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றி இளமாறன்
விவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) 154550 விவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) 678642 விவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) 154550 .

விவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) 677196 விவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) 677196 விவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) 677196

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

விவரமா(ண)னவர்கள்! (சிறுகதை) Empty Re: விவரமா(ண)னவர்கள்! (சிறுகதை)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum