Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேதாத்திரியின் தத்துவங்கள்
Page 1 of 1
வேதாத்திரியின் தத்துவங்கள்
பூவும் அறிவாளியும்
நறுமணம் வீசும் பூச்செடி சேற்றில் முளைத்தாலும் பாதகமில்லை. ஆனால் அதில் பூத்த மலர் சேற்றிலே விழுந்து விட்டால் அது பயனற்றுப் போகும். அதுபோன்ற அறிவாளிகள் பிறப்பு எக்குலத்திலும் எவ்வளவு இழிவாக இருந்த போதிலும் பாதகமில்லை. அவர் ஒழுக்கத்தில் தவறிவிட்டாலும் ஜாதி, மத, தேச, மொழி வெறியில் சந்தர்ப்பவசமாக சிக்கிக்கொண்டாலும் அவர் பயனற்றவராகி விடுகிறார்.
சேற்றிலோ சாக்கடையிலோ விழுந்த பூ அது வரையில்தான் பயனற்றுப்போகும். ஆனால் அறிவாளி தரம் கெட்டு விடுவாராயின் அதைத் தொடர்ந்து எண்ணிறந்த மக்கள் தரம்கெட்டுப்போக நேரிடும்.
மனித முயற்சி
கிராமங்களில் பஜனைக் கோவில்களில் உறியடி விழா என்று வைப்பார்கள். மரத்தில் ஏறுவான், கீழே இருப்பவர்கள் தண்ணீரைப் பீச்சியடிப்பார்கள். சறுக்கி விழுவான். மறுபடியும் ஏறுவான். மறுபடியும் சறுக்கி விழுவான். அப்படியே இவர்கள் அடிக்க அவர் தன் முயற்சியினால் கடைசியாக மேலே போய் உறியில் வைத்திருப்தை பிடித்துவிடுவான்.
அதுபோலத்தான் நம் வாழ்க்கையிலும் ஆன்மீகப் பயிற்சியில் முன்னேறிப் போகிறான். பழக்கத்தின் காரணமாக பழைய பதிவுகள் காரணமாக ஏதோ ஒரு தவறைச் செய்து விடுகிறான். பிறகு நான் இந்தத் தவறைச் செய்து விட்டேனே என்று குற்ற உணர்விலேயே நிற்கிறான். இந்த குற்ற உணர்வு தேவையே இல்லை.
நாம் போகக்கூடிய இலக்கை எண்ணி, போய்க் கொண்டே இருக்கிறோம், முன்னேறித்தான் செல்கிறோம். அப்போது ஒன்றோ இரண்டோ தவறுகள் குறுக்கிடும். ஏதோ பழக்கத்தால் இது வந்தது என்று எண்ணி, அயரா விழிப்போடு மேலும் முன்னேறிச் செல்லதான் வேண்டும்.
தற்சோதனை (அகத்தாய்வு)
உலகம் எந்தப் பழக்கங்களிலே வாழ்ந்து வருகின்றதோ அந்த வழியே பெற்றோர்களின் பழக்க வழியே நாமும் சென்று அவற்றையே பழக்கப்பதிவுகளாக்கிக் கொண்டு வாழ்ந்து வருகின்றோம். இவற்றிலே உண்மை நிலை அறிவதற்காகவே ஆறாவது அறிவு கொண்ட இந்த மனித உடல் வந்த போதிலும் கூட அந்த இலட்சியத்தை மறந்து சாதாரணமாகப் பொருள் அறிவு மட்டும் கொண்டு புலன்களிலே எல்லைகட்டி உணர்ச்சி வயப்பட்ட அறுகுணங்களாக அடிக்கடி மாறிப் பல செயல்களைச் செய்து வருகின்றோhம். இதுவே பழக்கமாகி அந்த பழக்கத்தின் வழியே பெரும்பாலும் வாழ்ந்து வருகின்றோம். அதனால் பல தொல்லைகளுக்கும் துன்பங்களுக்கும் ஆளாகி குடும்பத்தில் அமைதியிழந்து வாழ்கிறோம்.
தன்னைப் பற்றி தன்தேவையைப் பற்றி தன் செயலின் விளைவைப் பற்றி தன் தகுதியைப் பற்றி, தன் மதிப்பைப் பற்றி ஆராய்வது தற்சோதனை.
இந்த தற்சோதனையில் பெறும் தெளிவைக் கொண்டு எடுக்கும் முடிவையும் தவத்தினால் மனத்திற்குக் கிடைத்திருக்கும் உறுதியைக் கொண்டு வாழ்வில் எதிர்காலச் செம்மைக்குப் பயன்படுத்திக் கொள்ளும்போது கிடைப்பதுதான் குணநலப்பேறு இதன் மூலம் நமது குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் மனநிறைவும் பெறுகிறோம்.
தற்சோதனையை ஐந்து பிரிவுகளாக ஒழுங்குபடுத்தியுள்ளார்கள்.
1.எண்ணம் ஆராய்தல்
2.ஆசை சீரமைத்தல்
3.சினம் தவிர்த்தல்
4.கவலை ஒழித்தல்
5.நான் யார்?
இந்த தற்சோதனைப் பயிற்சியில் போதிக்கப்படும் தத்துவ விளக்கங்கள் தன்னிலை விளக்கம் பெற்று வாழ்வில் சிறந்தோங்கி வாழ்வோமாக.
காயகல்பம்
உடல் மற்றும் மனநலனுக்கு முக்கிய பொருளான விந்து நாதங்களின் பெருமையையும் - கற்பு நெறியின் மேன்மையினையும் மனித குலம் உணர வேண்டும். விந்து நாதத்தை இன்பத்துக்குரியதோர் சாதனமாக மட்டும் இன்றைய மனிதர்கள் கருதுகிறார்கள். நோயற்ற உடலுக்கும் தெளிந்த அறிவு மேன்மைக்கும் விந்து நாதந்தான் ஆதாரம். மேலும் குடும்ப வாழ்வில் ஆண், பெண் உறவில் ஒரு இனிமையையும் ஆழமான நட்பையும் அமைதியையும் மகிழ்வையும் கொடுப்பதுமாகும். எனவே அவற்றைப் புனித பொருட்களாகக் கருதி, அவற்றின் தூய்மையைப் பராமரித்து அவற்றுக்கு மேன்மையளிக்க வேண்டும். அதற்கு உதவுவதுதான் காயகல்பக்கலை. உடல் நலமும் மனவளமும்தான் வாழ்வில் வெற்றியையும் அமைதியையும் நிறைவையும் அளிக்குமென்றால் அதற்கு முக்கியமான ஆதாரம் உயிர் ஆற்றலே அதை நாம் காயகல்பத்தால் பெறலாம்.
மேலும் இளவயதிலேயே ஆண், பெண் இருவரும் காயகல்பப் பயிற்சி எடுத்துக் கொண்டு வந்தால் விந்து நாதத்தில் உள்ள குறைகள் அகன்று விந்து நாதம் சுத்தப்படும். அவர்கள் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை உடல் நலம் மனவளம் மிக்கதாகவும் அறிவுக்கூர்மையுடையதாகவும், ஆன்மீக எண்ணம் கொண்டதாகவும் இருக்கும். இதைத்தான் கருவிலே திருவுடைய குழந்தை ஆதல் என்பார்கள்.
ஆயகலை கள்மொத்தம் கணக்கெ டுத்தோர்
அறுபத்தி நாலு என்றார் அனைத்தும் கற்றும்
காயகற்ப மெனும் கலையைக் கற்கா விட்டால்
கற்றதெல்லாம் மண்புக்கும் உடல் விழுந்தால்
மாயமெனும் காந்தம உயிர் வித்து மூன்றில்
மறைந்துள்ள இரகசியங்கள் விளங்கி வாழ்ந்தால்
தீயவினைகள் கழிய உலகுக்கென்றும்
தெளிவான அருள் ஒளியாய் நிலைக்கும் ஆன்மா.
– வேதாத்திரி மகரிஷி அவர்கள்
நீங்கள் இந்த அற்புதமான கலையை முறையாகப் பயின்றால் வல்லுடலும், நல்லறிவும், பொருள் வளமும், நற்புகழும் ஓங்கிச் சிறப்பாகவும், அமைதியாகவும் வாழ முடியும்.
மனவளமும், தியானமும்
மனம்தான் மனித வாழ்க்கையின் விளைநிலம். மனத்தின் தன்மை எதுவோ அதுதான் மனிதனுடைய தன்மை.
மனதை அடக்க நினைத்தால் அலையும். மனதை அறிய நினைத்தால் அடங்கும்.
இன்பமும் அமைதியும் மனத்திற்குள்ளிருந்துதான் வரவேண்டும் என அறியாமல் எங்கெல்லாம் அவற்றைத் தேடி அலைந்து துன்புறுவார்கள் அதை அறியாதோர்.
தியானம் - மனம் எங்கிருந்து புறப்படுகின்றதோ அது புறப்படுகின்ற இடத்திலேயே மனத்தைக் கொண்டுவந்து நிலைநிறுத்தப் பழகுவது என்பதுதான் தியானம். உயிரினுடைய படர்க்கை நிலை மனம்.
மனம் ஒரு நிரந்தரமான பொருள் இல்லை. தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கக் கூடிய ஒரு இயக்கம்.
மனம் - எண்ணம் இரண்டும் ஒன்றேதான். அகத்தவத்தால் எண்ணத்தை ஆராய்ந்தால் அங்கு உயிராக இருக்கும் அறிவை அறியலாம். அதற்கு தவப்பயிற்சி உதவும்.
இந்தப் பயிற்சியை தொடர்ந்து விடாமுயற்சியுடன் செய்யத் தொடங்கினோமேயானால் மனதை ஒழுங்குபடுத்திக் கொண்டு தன்னைப் பற்றி தெளிவாகத் தெரிந்து கொண்டு பூரண நிலையைப் பெற்று வாழ்வாங்கு வாழ முடியும்.
அகத்தவத்தால் ஐம்புலனை அடக்கி அறிவறிந்திடலாம்
அகத்தவத்தால் அறுகுண ஆளுமைப் பேறடைந்திடலாம்
அகத்தவத்தால் இல்லறத்தை அன்பகமாய் மாற்றிடலாம்
அகத்தவத்தல் அனைத் துயிர்கள் நட்பை பெற்றிடலாம்.
பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கக்கூடிய மனத்தின் பழக்கத்தை முறையாக மாற்றிக் கொள்ள நல் விளக்கத்தை பெற்று அதன் வழியே வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முறையான பயிற்சிதான் மனவளக்கலை. அதில் உள்ள தவத்தால் மனதில் ஓர்மை, கூர்மை, சீர்மை, நேர்மை என கிடைக்கப் பெறுவதால் குடும்பத்தில் அனைவரும் அமைதி காத்து மகிழ்ச்சியாக வாழ முடியும்.
vethathiri.org
Similar topics
» வேதாத்திரியின் தத்துவங்கள் - 2
» வேதாத்திரியின் தத்துவங்கள் - 3
» வேதாத்திரியின் தத்துவங்கள் - 4
» வேதாத்திரியின் தத்துவங்கள் - 5
» வேதாத்திரியின் தத்துவங்கள் - 6 ( lost )
» வேதாத்திரியின் தத்துவங்கள் - 3
» வேதாத்திரியின் தத்துவங்கள் - 4
» வேதாத்திரியின் தத்துவங்கள் - 5
» வேதாத்திரியின் தத்துவங்கள் - 6 ( lost )
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum