ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவையான சம்பவங்கள்!!!!!!

5 posters

Go down

சுவையான சம்பவங்கள்!!!!!! Empty சுவையான சம்பவங்கள்!!!!!!

Post by balakarthik Fri Mar 12, 2010 1:13 pm

காமராஜர்

கர்மவீரர் காமராஜர் ஒரு முறை, தஞ்சை மாவட்டத்தில் இருந்த பழைமையான கோயில் ஒன்றைப் பார்வையிடச் சென்றார். சிதிலம் அடைந்திருந்தாலும் புராதனமான அந்தக் கோயிலின் கட்டுமானம் அவரை வியக்க வைத்தது.

ஓர் இடத்தில் நின்றவர், "இந்தக் கோயிலைக் கட்டுனது யாரு?'' எனக் கேட்டார்.
உடன் வந்த அதிகாரிகளுக்கு அதுபற்றி தெரிய வில்லை. பதில் சொல்லத் தெரியாமல் விழித்தனர்.

உடனே, சிரித்துக் கொண்டே மேலே இருந்த டியூப் லைட்டை சுட்டிக்காட்டிய காமராஜர், "இவ்வளவு காலம் நிலைச்சு நிக்கிற இந்தக் கோயிலைக் கட்டியவர் யாருன்னு தெரியலே...ஆனா, ஒரு மாதம்கூட ஒழுங்கா எரியாத இந்த டியூப் லைட்ல உபயதாரர் யாருன்னு எவ்வளவு பெரிசா எழுதி வெச்சிருக்காங்கன்னு பாருங்களேன்'' என்று கூற... உடன் வந்தவர்கள் வாய்விட்டுச் சிரித்தார்களாம்!


விவேகானந்தர்

ராம கிருட்டிண பரமஹம்சர், ஒருமுறை நரேந்திரனை (விவேகானந்தர்) அழைத்து, இதுவரை கடும் தியானங்கள் புரிந்து பெற்ற ஆத்ம சக்தியெல்லாம் உனக்கு தந்துவிடலாம் என நினைக்கிறேன் என்றார்.

நரேந்திரனோ, 'அப்படியா, இந்த சக்தியெல்லாம் பெற்றால், அவை கடவுளை அறிய எனக்கு துணை புரியுமா?' என்று கேட்டார். பரமஹம்சரோ புன்னகைத்து, 'அவற்றைக் கொண்டு கடவுளை அறிய இயலாது. ஆனால் நீ ஒரு ஆசானாக மற்றவர்களுக்கு இருக்க அவை துணை புரியும்' என்றார்.

உடனே நரேன், "ஐயா, அப்படியானால் அவை இப்போது எனக்கு தேவைப்படாது, முதலில் கடவுள் யாரெனக் கண்டறிவதில் கவனம் செலுத்துகிறேன். அவ்வாறு கண்டறிந்தபின், இந்த சக்திகளுக்குத் தேவை இருக்குமா எனத் தெரியும். மேலும், இப்போது இவைகளை பெற்றுக்கொண்டாலோ, என் தேடலை மறந்துபோய், என் சுயநலத்திற்காக பயப்படுத்தி விடுவேனோ என்னவோ." என்று மறுத்து விட்டார்.

ஒருமுறை சுவாமி அகண்டானந்தாவுடன் இமய மலை அடிவாரத்தில் நடந்து கொண்டி ருந்தார் விவேகானந்தர். வெகு தூரம் நடந்த களைப்பு அவரை வாட்டியது. கடும் பசி வேறு! சாலையோரத்தில், இடுகாட்டுக்கு அருகில் விழுந்து விட்டார்!

அந்த இடுகாட்டின் பொறுப்பாளராக இருந்தவர் சுல்பிகர் அலி. இவர், சுவாமிஜி விழுந்ததைக் கண்டு ஓடி வந்தார். தன்னிடம் இருந்த வெள்ளரிப்பழத்தை விவேகானந்த ரிடம் தந்தார்.

''நீங்களே ஊட்டி விடுங் கள்'' என்றார் சுவாமி விவேகானந்தர். சுல்பிகர் அலி முதலில் தயங்கினார். பிறகு சுவாமியின் நிலை கருதி வெள்ளரிப்பழத்தை ஊட்டி விட்டார். ஓரளவு தெம்பு வந்ததும், சுவாமிஜி, ''ஊட்டி விடுங்கள் என்றதும் ஏன் தயங்கினீர்கள்?'' என்று அவரைப் பார்த்துக் கேட்டார்.

''நீங்கள் ஓர் இந்து சந்நியாசி, நானோ...'' என்று இழுத்தார் சுல்பிகர் அலி. உடனே, ''அப்படியெல்லாம் நினைக்காதீர்கள். நாம் அனைவரும் சகோதரர்கள்'' என்ற சுவாமிஜி, நன்றி கூறி விடைபெற்றார்!

சில ஆண்டுகள் கழித்து, அமெரிக்கா சென்று திரும்பிய சுவாமி விவேகானந்தருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. ஊர்வலத்தில் வந்த சுவாமிஜி, கூட்டத்தின் நடுவே நின்றிருந்த சுல்பிகர் அலியை அடையாளம் கண்டு கொண்டார். அவரை அருகில் அழைத்து, ''இவர் என் உயிரைக் காப்பாற்றியவர்'' என்று அருகில் இருந்தவர்களிடம் கூறி, சுல்பிகர் அலியை பெருமைப்படுத்தினார்.


கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன்

கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் இல்லத்துக்கு எதிர்த்தாற் போலிருந்த வீட் டில் வெளிக் கதவு சாத்தியிருந் தது. உள்ளே ஆட்கள் பின்பக்கமாக இருந்திருப்பர் போலும். வெளிக்கதவின் பூட்டு திறந்தபடி தொங்கிக் கொண்டிருந்தது. தெருவில் போன ஒரு பையன் அந்தப் பூட்டை எடுத்து தன் சட்டைப் பையில் போட்டுக் கொண்டு நழுவினான்.

வாசலில் நின்று பார்த்த என். எஸ்.கிருஷ்ணன் வழிமறித்து, "இங்கே வாடா, தம்பீ...' என்று அழைத்ததும், மிகவும் சாதுவாக அவர் முன் வந்து நின்றான் பையன். "தம்பி, பையில் என்ன இருக்கு?' என்று கேட்டார். "ஒண்ணுமில்லையே!' என் றான்.
"காட்டு, பார்க்கலாம்!' என்று அவன் சட்டைப் பையில் கை விட்டார். பூட்டு! கையும், களவுமாக பிடிபட்டவன், அவரிடம் மன்னிப்பு கேட்டான்.

"ஏண்டா, எடுத்தே?' என்றார். "பசி, பழைய சாமான் கடையில் போட்டால் ரெண்டு ரூபாய் கிடைக்கும். சாப்பிடலாம்ன்னு எடுத்தேன்!' என்று உள்ளதைச் சொன்னான்.
அப்போது வெளியே வந்த வீட்டுக்காரர், கதவில் பூட்டு இல்லாததைப் பார்த்து விட்டார். தெருவில் என்.எஸ்.கிருஷ்ணன் பையனுடன் பேசிக் கொண் டிருப்பதைப் பார்த்தார். அவன் தான் எடுத்திருப்பான், என். எஸ்.கே., பிடித்துக் கொண்டார் என்ற எண்ணத்தில் ஆத்திரத் தோடு வந்தார், பூட்டைப் பறி கொடுத்த வீட்டுக்காரர்.

என்.எஸ்.கே.,யை கெஞ்சும் தோரணையில் பார்த்தான் பையன். எதிர் வீட்டுக்காரர் வந்ததும், என்.எஸ்.கே., சிரித்தபடி, "வாங்க... வாங்க... பூட்டைத் தேடறீங் களா? ஒரு பையன் தூக்கிட்டு ஓடினான். தம்பி, அவனை விரட்டிப் பிடித்துப் பூட்டைப் பறிச்சிக்கிட்டு வந்தான். நான் வாங்கி வைச்சிருக்கேன். "இந்தாங்க பூட்டு, பாவம், பையன் கஷ்டப்பட்டான். அதுக் காக ரெண்டு ரூபாய் கொடுத்தனுப்புங்கள்...' என்றவர், பையனிடம், "டேய், தம்பி கொடுப் பாரு; போயி வாங்கிட்டுப் போ!' என்றார்.

பாவம்! அவனுக்கு பசி நீங்க இரண்டு ரூபாய்க்கு வழி பிறந்தது.

சத்தியமூர்த்தி

சுதந்திரப் போராட்ட காலம்! புதுக்கோட்டை சமஸ்தானத்துக்கு வர இருந்தார் ஜவஹர்லால் நேரு. ஆனால், பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஆதரித்த சமஸ்தானம், 'நேருவின் கார், புதுக்கோட்டை எல்லைக்குள் நுழையக் கூடாது!' என்று தடை விதித்தது. குறிப்பிட்ட நாளில் புதுக்கோட்டை எல்லையை நெருங்கினார் நேரு. அவரின் கார் தடுத்து நிறுத்தப்பட்டது.

சமஸ்தான அதிகாரி ஒருவர் காரின் அருகில் வந்து, தடை உத்தரவுக்கான கடிதத்தை நேருவிடம் காட்டினார். அப்போது, நேருவுடன் சத்தியமூர்த்தியும் இருந்தார். அவர் நேருவின் காதில் ஏதோ முணுமுணுத்தார்!

அடுத்த நிமிடம்... இருவரும் காரில் இருந்து இறங்கி, ஊருக்குள் நடக்க ஆரம்பித்தனர். பதறிப்போன அதிகாரி ஓடி வந்து அவர்களை மறித்தார். உடனே சத்தியமூர்த்தி, "நேருவின் கார் சமஸ்தான எல்லைக்குள் வரக் கூடாது என்பதுதானே உங்கள் உத்தரவு? தடை காருக்குத்தானே தவிர, நேருவுக்கு அல்ல!'' என்றார். வேறு வழியின்றி அதிகாரிகள் பின்வாங்கினர்.

சத்தியமூர்த்தியின் சமயோஜிதத்தை பாராட்டிய நேரு, பிறகு புதுக்கோட்டை மக்களை சந்தித்து விட்டுத்தான் டெல்லி திரும்பினார்!

ஆப்ரகாம் லிங்கன்

ஒரு முறை ஆப்ரகாம் லிங்கன் தனது பூட்ஸூக்கு பாலீஷ் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நண்பர் ஒருவர் லிங்கனை மட்டம் தட்டும் விதமாக, ஏளனத்துடன், ‘‘என்னங்க, உங்க பூட்ஸூக்கு நீங்களே பாலீஷ் போடுறீங்க?’’ என்று கேட்டார். உடனே ஆபிரகாம் லிங்கன் அந்த நண்பரிடம், ‘‘நீங்க, இன்னொருவர் பூட்ஸூக்குத்தான் பாலீஷ் போடுவீர்களா?’’ எனத் திருப்பிக் கேட்டார்.

பதில் ஏதும் சொல்ல முடியாத நண்பர் வெட்கித் தலை குனிந்தார்.

கிரேக்கத் தத்துவ ஞானி டயோஜனஸ்

கிரேக்கத் தத்துவ ஞானியான டயோஜனஸ், ஒரு வீதியின் வழியே நடந்து கொண்டி ருந்தார். வழியில், சிறுவன் ஒருவனை பலரும் சேர்ந்து அடித்துக் கொண்டிருப் பதைக் கண்டார். அவர்களை விலக்கி விட்டவர், சிறுவனை அடிப்பதற்கான
காரணத்தைக் கேட்டார்.

அவர்கள், "கேட்கச் சகிக்காத வார்த்தைகளால்... அசிங்கமாக பேசியதால் இவனை அடிக்கிறோம்!'' என்றனர். உடனே, "அதற்காக இந்தச் சிறுவனை அடிக்காதீர்கள். இவனின் தந்தை யார் என்பதை அறிந்து, அவனைப் பிடித்து அடியுங்கள். மகனுக்கு நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுத் தராத தந்தையே தண்டனைக்கு உரியவன்'' என்றார் டயோஜனஸ்!

கவிஞர் கண்ணதாசன்

கண்ணதாசனும் , அறிஞர் அண்ணாதுரையும் 60 களில் , (கண்ணதாசன் தி.மு.க. வில் இருந்த போது) நெருங்கி பழகி வந்தனர் ! அவர்கள் உறவு அண்ணன் - தம்பி உறவு
போல் இருந்தது. அனேக மேடைகளில் ஒன்று சேர காணப்பட்டனர் ! பின்னர் வந்தது பிளவு !

கணணதாசன் தி.மு.க . வை விட்டுப் பிரிந்தாரா அல்லது அந்த கட்சியை விட்டு நீக்கப்பட்டாரா என்பது தெரியவில்லை ! எனினும் கண்ணதாசன் மனதில் அண்னா செய்த செயல்கள் அவரது மனதைப் பாதித்தன ! எப்போது சமயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் ! வேளை வந்தது !

சிவாஜி நடித்த " படித்தால் மட்டும் போதுமா ? " என்ற படத்தில் ஒரு பாடல் :

" என்ன " சிச்சுவேஷன் " ? --- கண்ணதாசன்.

' அண்ணே, அண்ணன் ( கே.பாலாஜி ) , தம்பிக்கு ( சிவாஜி ) ஒரு துரோகம் செய்கிறான். இதை நினைத்து தம்பி மனம் உடைகிறான் ! ஆனால் நடந்த உண்மையை வெளியே சொல்ல முடியாத நிலைமை தம்பிக்கு ! இது தான் " சிச்சுவேஷன் " " ---- எம்.எஸ். விஸ்வநாதன்.

கண்னதாசனுக்கு கேட்கவா வேண்டும் ! மனதில் இருந்த காயததை ஆற்ற இதை விட வேறு சந்தர்ப்பம் ஒரு கவிஞனுக்கு வேண்டுமோ ? எழுதினார் !

"அண்ணன் காட்டிய வழியம்மா - இது

அன்பால் விளைந்த பழி அம்மா !

கண்ணை இமையே பிரித்ததம்மா - என்

கையே என்னை அடித்தம்மா ! "

என்று பேனா வை வைத்து அண்ணாவை அடித்தார் ! அது மட்டுமா,

" அவனை நினைத்தே நான் இருந்தேன் - அவன்

தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தான் - இன்னும்

அவனை மறக்கவில்லை - அவன்

இத்தனை செய்தும் நான் வெறுக்கவில்லை "

என்று தன்னிலை விளக்கமும் கொடுத்தார் !

இந்த பாடல் படத்திற்கும் பொருந்தியது என்று சொல்லவும் வேண்டுமோ !

அறிஞர் அண்ணா

இந்த பாடலைப் பற்றி தி.மு.க வினர் சிலர் அண்ணாவிடம்" போட்டுக் " கொடுத்து இருவர் பகையில் குளிர் காய்க்க கணக்கு போட்டனர் ! அதற்கு அண்ணா சொன்ன பதில் ! :

" போகட்டும் விடுங்கய்யா ! என்னை அவன் நல்ல தமிழில் தானே திட்டுகிறான் , திட்டி விட்டுப் போகிறான் ! விட்டு விடுங்கள் !

அறிஞர் அண்னா ஒரு அமெரிக்கப் பயணத்தின்போது கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் சிலர் கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதிலில் ஒன்று:

கேள்வி: உங்கள் நாட்டிற்கு ஜனநாயகம் புதிதாகையால் எப்படி ஜனநாயகம் நிலைக்கப் போகிறது என்ற பயம் இருக்கிறதா?

பதில்: "ஜனநாயகம் எங்களுக்குப் புதிதல்ல. 2000 ஆண்டுகட்கு முன்பே பனையோலையில் நாங்கள் விரும்புவோரின் பெயரை எழுதி ஒரு மண் பானையில் போட்டு (குடவோலை முறை) ஊர் நாட்டாண்மைக் காரர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆகவே நீங்கள் நினைப்பது போல் எங்களுக்கு ஜனநாயகம் புதிதல்ல"


சங்கீதமேதை மொஸார்ட்

புகழ்பெற்ற சங்கீதமேதை மொஸார்ட்டை சந்தித்த வாலிபன் ஒருவன், ''ஐயா, சிறந்த பாடல்களை இயற்றுவது எப்படி?'' என்று கேட்டான்.

''நீ வயதில் இளையவன். முதலில் எளிய பாடல்களை இயற்றிப் பார்'' என்றார் மொஸார்ட்.

''நீங்கள் மட்டும் 10 வயதிலேயே சிறந்த பாடல்களை இயற்றவில்லையா?'' என்று கேட்டான் வாலிபன்.

அதற்கு மொஸார்ட், ''அது சரி. ஆனால், எப்படி பாடல்களை இயற்றுவது என்று நான் எவரையும் கேட்டுக் கொண்டிருக்கவில்லையே!'' என்று புன்னகையுடன் பதில் தந்தாராம்!

திருமுருக கிருபானந்த வாரியார்

திருமணம் ஒன்றில் தலைமை தாங்க வாரியார் சென்றிருந்தார். அங்கே நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் வந்திருந்தார். இருவரும் சுவாரசியமாக பேசிக்கொண்டிருக்க திருமண பேச்சுக்கு இடையே நடிகவேள் தனது வழக்கமான கிண்டலை அவிழ்த்தார்.

சாமி.. முருகனுக்கு ஆறு தலைன்றானுங்கோ, ராத்திரி தூங்கும் போது எப்படி ஒருபக்கமா படுப்பாரு.?

கூடி இருந்தவர்கள் அனைவரும் சிரிக்க.. வாரியாருடன் வந்தவர்கள் தர்மசங்கடத்துடன் நெளிந்தார்கள். வாரியார் புன்சிரிப்புடன், திருமண ஏற்பாடுகளை பார்த்துக்கொண்டு பிசியாக இருந்த மணமக்களின் தந்தையரை அழைத்து அவர்களிடம் கேட்டார்,

“நேத்து தூங்கினீங்களா?”

அவர்கள் இருவரும் "இன்னைக்கு கல்யாணத்தை வச்சுக்கிட்டு எங்க சாமி தூங்கறது” என்றார்கள்.

நடிகவேள் அவர்களை பார்த்து வரியார் சொன்னார்...

ஒரு குழந்தையின் வாழ்க்கையை நடத்தி வைக்க நினைச்சே இவங்களுக்கு தூக்கம் வரலையே... உலக மக்கள் அனைவரும் எம்பெருமானோட குழந்தைகள். அவருக்கு தூக்கம் எப்படி வ்ரும் ? தூங்கறதுக்கு நேரம் ஏது?


காந்திஜி

சபர்மதி ஆஸ்ரமத்தில், உணவு உண்ணுவதற்கு அழைப்பு விடுக்கும் வகையில் மணி ஒலிப்பது வழக்கம். குறிப்பாக இரண்டு முறை மணி அடிக்கப்படுமாம். அதற்குள், உணவுக் கூடத்துக்கு வந்துவிட வேண்டும். தாமதமாக வருபவர்கள், உணவுக் கூடத்தின் மூடப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் காத்திருக்க வேண்டும்!

ஒரு நாள், இரண்டாவது முறை மணியடித்து சிறிது நேரம் கழித்த பிறகே வந்து சேர்ந்தார் காந்திஜி. எனவே, கதவருகே காத்திருந்தார். இதை கவனித்த சேவகர் ஒருவர் ஓடி வந்து, ''பாபுஜி, தயவுசெய்து உள்ளே வாருங்கள்!'' என்றார்.
ஆனால், இதை ஏற்க மறுத்தார் காந்திஜி.

''ஆஸ்ரமத்தின் விதிமுறைகள் எல்லோருக்கும் பொருந்தும். எல்லோரையும் போல நானும் அவற்றைப் பின்பற்ற வேண்டும். இன்று எனக்காக விதிமுறைகளைத் தளர்த்தினால், நாளை மற்றவர்களுக்காகவும் அப்படியே தளர்த்த வேண்டியிருக்கும்!'' என்றவர், பொறுமையுடன் காத்திருந்தார்.

பெர்னாட்ஷா

ஆங்கிலக் கவிஞர் ஜான்மில்டனின் 'மீண்ட சொர்க்கம்' எனும் கவிதை குறித்து விளக்கி, பாடம் நடத்திக் கொண்டிருந்தார் ஆசிரியர். வகுப்பில் இருந்த மாணவர்களில் பெர்னாட்ஷாவும் ஒருவர்.

திடீரென... ''உங்களில் எத்தனை பேருக்கு சொர்க்கம் செல்ல ஆசை?'' என்று மாணவர்களைப் பார்த்துக் கேட்டார் ஆசிரியர். பெர்னாட்ஷாவை தவிர மற்ற அனைவரும் எழுந்து நின்றனர். ஆசிரியருக்கு ஆச்சரியம்!

பெர்னாட்ஷாவின் அருகே வந்தவர், ''உனக்கு சொர்க்கம் செல்ல ஆசை இல்லையா?'' என்று கேட்டார். இதற்கு பதிலளித்த பெர்னாட்ஷா, ''எனக்கும் சொர்க்கம் செல்ல ஆசைதான். ஆனால் எல்லோரும் சொர்க்கத்துக்குச் சென்றால்... அந்த சொர்க்கம் சொர்க்கமாகவா இருக்கும்?'' என்றார்.

குறும்புத்தனமும் சாதுரியமும் நிறைந்த பெர்னாட்ஷாவின் இந்த பதிலைக் கேட்டு, ஆசிரியர் உட்பட அனைவரும் சிரித்தனராம்.

இது போன்ற இன்னும் பல சரித்திர நாயகர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள் உங்களுக்கு தெரிந்தால் கூறுங்கள்.


ஈகரை தமிழ் களஞ்சியம் சுவையான சம்பவங்கள்!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சுவையான சம்பவங்கள்!!!!!! Empty Re: சுவையான சம்பவங்கள்!!!!!!

Post by balakarthik Fri Mar 12, 2010 1:32 pm

அறிஞர் அண்ணா

அண்ணா சிறுவனாயிருந்தபோது - அப்போது அவருக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கும் - காஞ்சிபுரத்திலிருந்து அண்ணாவின் தாயார் சென்னையில் நடக்கும் பார்க்பேர் கண்காட்சிக்கு அண்ணாவை அழைத்துவந்தார்கள்.
எழும்பூர் ரயிலடியில் இறங்கியதும் அங்குள்ள பொருட்களைப் பார்த்து அண்ணா அது வேண்டும். இது வேண்டும் என்று தனது தாயாரை தொல்லைகொடுத்துக்கொண்டே இருந்தார்.
அப்போது அவருக்கு தங்கக் காப்பும் சங்கிலியும் அணிவித்திருந்தனர். அதை ஒருவன் பாத்துக்கோண்டே இருந்திருக்கிறான். பிறகு அவரது குடும்பத்தாருடன் பேச்சுக்கொடுத்துக்கொண்டே பையன் பலூன் வேண்டும் என்று அப்போதிருந்து அழுகிறானே வாங்கித் தந்தால் என்ன? என்று கேட்டான். அவரது தாயார் தனது பிள்ளையின் மீது வேறு ஒருவர் இரக்கப்படும் அளவுக்கு விட்டுவிட்டோமே என்று வெட்கமடைந்து பலூன் இங்கு விற்கவில்லையே! என்று கூறினார்கள். அதோ! அங்கு விற்கிறான்! நான் வாங்கித்தருகிறேன் என்று விடுவிடென அண்ணாவை அழைத்துக்கொண்டுபோனான். அவன் பழகிய நல்ல முறையை வைத்து அண்ணாவின் வீட்டார் விட்டுவிட்டார்கள்.
அண்ணாவை அழைத்துச் சென்ற அவன் எல்லா பிளாட்பாரங்களையும் கடந்து கடைசி பிளாட்பாரத்துக்கு வந்துவிட்டான். அப்போது அண்ணாவுக்கு விவரம் தெரியாவிட்டாலும் அவன் பலூன் வாங்கித் தருவதாக கூட்டிப்போகவில்லை என்பதை மட்டும் தெரிந்துகொண்டார். ஆகவே சத்தம்போட்டு அழ ஆரம்பித்தார். அவனது நோக்கமெல்லாம் கூட்ஸ் வண்டியில் போட்டுவிட்டால் எங்காவது போய்விடும் என்ற நினைப்புத்தான்! ஆனால் அண்ணா போட்ட கூக்குரலை கேட்ட அந்த வழியில் போகிறவர்கள் அவனை தடுத்து நிறுத்தி யார் நீ! ஏன் பையனை அழைத்து போகிறாய்? என்று கேட்டபோது அவன் சரிவர பதில் சொல்லாததால் சந்தேகப்பட்டு அவனை போலீசில் ஒப்படைத்தார்கள். அண்ணாவை அவருடைய தாயிடம் அழைத்துச் சென்றார்கள். அப்போது அண்ணாவின் தாயார் அண்ணாவைப் பார்த்து, பலூன் எங்கே என்றுதான் கேட்டார்களாம்.


ஈகரை தமிழ் களஞ்சியம் சுவையான சம்பவங்கள்!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சுவையான சம்பவங்கள்!!!!!! Empty Re: சுவையான சம்பவங்கள்!!!!!!

Post by எஸ்.அஸ்லி Fri Mar 12, 2010 1:53 pm

சுவையான சம்பவங்கள்!!!!!! 677196 சுவையான சம்பவங்கள்!!!!!! 677196 சுவையான சம்பவங்கள்!!!!!! 677196 சுவையான சம்பவங்கள்!!!!!! 677196
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

சுவையான சம்பவங்கள்!!!!!! Empty Re: சுவையான சம்பவங்கள்!!!!!!

Post by kalaimoon70 Fri Mar 12, 2010 1:57 pm

சுவையான சம்பவங்கள்!!!!!! 677196 சுவையான சம்பவங்கள்!!!!!! 677196 சுவையான சம்பவங்கள்!!!!!! 677196 சுவையான சம்பவங்கள்!!!!!! 677196 சுவையான சம்பவங்கள்!!!!!! 678642 சுவையான சம்பவங்கள்!!!!!! 678642 சுவையான சம்பவங்கள்!!!!!! 678642 சுவையான சம்பவங்கள்!!!!!! 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

சுவையான சம்பவங்கள்!!!!!! Empty Re: சுவையான சம்பவங்கள்!!!!!!

Post by சம்சுதீன் Fri Mar 12, 2010 1:57 pm

சுவையான சம்பவங்கள்!!!!!! 677196 சுவையான சம்பவங்கள்!!!!!! 677196
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

சுவையான சம்பவங்கள்!!!!!! Empty Re: சுவையான சம்பவங்கள்!!!!!!

Post by அப்புகுட்டி Fri Mar 12, 2010 3:25 pm

நன்றி நன்றி


சுவையான சம்பவங்கள்!!!!!! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சுவையான சம்பவங்கள்!!!!!! Empty Re: சுவையான சம்பவங்கள்!!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum