புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_c10தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_m10தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_c10 
90 Posts - 77%
heezulia
தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_c10தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_m10தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_c10தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_m10தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_c10தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_m10தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_c10தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_m10தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_c10தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_m10தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_c10தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_m10தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_c10 
255 Posts - 77%
heezulia
தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_c10தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_m10தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_c10தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_m10தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_c10தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_m10தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_c10தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_m10தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_c10தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_m10தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_c10தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_m10தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_c10தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_m10தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_c10தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_m10தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_c10தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_m10தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Aug 20, 2012 9:38 pm

முன்னுரை:
தீபாவளி உலகமெல்லாம் கொண்டாடும் நன்னாள் பொன்னாள். இதை யாண்டும் எல்லோரும் குதூகலமாகக் கொண்டாடுகிறார்கள். சிவபெருமானை நினைத்துக் கடைத்தேறும் விரதங்கள் எட்டு. அதில் தீபாவளியும் ஒன்று. இது ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முன்தினம் வரும்.

தீபாவளி = தீபம் – விளக்கு, ஆவளி – வரிசை.

தீபத்தை வரிசையாக வைத்துச் சிவபெருமானை வழிபடுவதற்கு உரியநாள் தீபாவளி என உணர்க. தீபங்களை ஏற்றினால் இருள் தானே விலகிவிடும். இந்தத் தீபாவளித் தத்துவத்தை எழுதும்படி அன்பர்கள் விரும்பிக் கேட்டதால் இந்தக் கட்டுரையை எழுதி உதவினேன்.

தீபாவளி விரதம் முறையாக இருந்து வழிபாடு செய்பவர்கள் முத்தி நலம் அடைவார்கள். இதனைப் படிக்கும் சிவநேயச் செல்வர்கள் தீபாவளி விரதமிருந்து சிவசாயுஜ்தம் அடைவார்களாக.

அன்பன்
கிருபானந்த வாரி
(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Aug 22, 2012 4:48 pm

விரதமிருந்தால் உடலும் உள்ளமும் தூய்மையடையும். விரதங்கள் பல. அவற்றில் சிவபெருமானை வழிபடும் விரதங்கள் எட்டு எனக் கந்தபுராணத்தில் ஏழாவது காண்டமாகிய உபதேச காண்டம் புகல்கிறது.

“தொல்லைவல் வினைகழித்துத் தருஞ்சோம வாரமா திரைநோன் பன்றிப்
புல்லியவு மாமகேச் சுரஞ்சிவராத் திரிமுறையில் பொருந்த நோற்கப்
பல்வினையுந் தொலைந்திடுகே தாரமண விரதமிவை பரம நோன்பு
கொள்ளுறுசூற் படைவிரத மெனுமெட்டுஞ் சிவவிரதங்குணிக்குங் காலே.”

1.) சோமவிரதம்:
2.) திருவாதிரை விரதம்:
3.) உமா மகேசுவர விரதம்:
4.) மகாசிவராத்திரி விரதம்
5.) கேதார விரதம்
6.) கல்யாண சுந்தரர் விரதம்
7.) சூல விரதம் (பாசுபத விரதம்)
மீண்டும் சந்திப்போம் இடப விரதம் (அஷ்டமி விரதம்)


(தொடரும்)


ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Thu Aug 23, 2012 8:46 pm

நல்ல பதிவு !

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Nov 12, 2012 11:54 pm

இனி தீபாவளித் தத்துவத்தைப் பார்ப்போம்.

தீபாவளி என்னும் நன்னாளைப் பொன்னாளாக எங்கும் கொண்டாடுகின்றார்கள். ஆனால், அதன் உண்மையை அறிந்தவர்கள் ஒரு சிலரே. பெரும்பாலானோர் நரகாசுரனைக் கண்ணபிரான் சங்கரித்தார் அந்த அரக்கனையழித்த நாளே தீபாவளி என்று கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.

பிராக்சோதிடபுரியை ஆண்ட நரகாசுரனைச் சங்கரித்த நாள் அதுவாக இருக்கட்டும். ஆனால், கேவலம் அரக்கனை அழித்த நாளுக்கு ஒரு கொண்டாட்டம் நிகழ்வது எங்கும் எக்காலத்தும் இருந்தது இல்லை. அப்படி இருக்குமாயின் இரணியனைக் கொன்ற நாள், இராவணனைக் கொன்ற நாள், கம்சனைக் கொன்ற நாள், இடும்பனை, பகனைக் கொன்ற நாள், துரியோதனனைக் கொன்ற நாள், அவ்வாறே அந்த நாகாசுரன், ஜலந்தராசுரன், இரண்யாட்சன், திருணாவர்த்தன் இப்படி புகழ் பெற்ற அசுரர்களை எல்லாம் கொன்ற நாளைக் கொண்டாடுவதாயின் நம் ஆயுளே அதற்குச் சரியாகிவிடும். ஆகவே, நரகாசுரனைக் கொன்றதற்காக தீபாவளி ஏற்பட்டதன்று.

தீபம் = விளக்கு; ஆவளி = வரிசை.

தீபத்தை வரிசையாக வைத்து பிரம்ம முகூர்த்தத்தில் எண்ணெய் ஸ்நானம் செய்து நீராடி, சிவபெருமானை வழிபடுவதற்கு உரிய நாள் தீபாவளி என உணர்க. தீபாவளியன்று பகல் இரவு முழுவதும் பட்டினி இருந்து இரவில் தீபங்களை வரிசையாக வைத்துச் சிவபூசை செய்து நீராடி, நீறாடி, சிவபூசை செய்து விடியுமுன் புத்தாடை உடுத்தி சுத்த சைவ உணவு உண்டு அனுஷ்டிப்பது தீபாவளி விரதமாகும்.

தீப மங்கள ஜோதியாக விளங்கும் பெருமானை நிரம்பவும் விளக்கேற்றி வணங்கினார்கள் நமது முன்னோர்கள். திருக்கார்த்திகையில் விளக்கேற்றி வணங்குகின்றார்களன்றோ?
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்
என்பது ஞானசம்பந்தர் வாக்கு.

தீபாவளியன்று மது மாமிசங்களையுண்டு களியாட்டம் களிக்கின்ற மாந்தர் பெரும் பாவத்திற்கு ஆளாவர். இனியேனும் இந்தத் தீய நெறியைக் கைவிட்டுத் தூயநெறி நின்று நலம் பெறுவார்களாக.

தீபாவளி விரதம் காலாந்தரத்தில் பல மாறுதல்கள் ஆகிவிட்டது. தீபாவளியன்று பகலும் இரவும் வயிறுபுடைக்க சாப்பிட்டுத் தூங்கி விழித்து அதிகாலை எண்ணெயிட்டு நீராடி புத்தாடை உடுத்தி பலப்பல ஆகாரங்கள் சாப்பிட்டுப் பட்டாசுகள் வெடித்துக் குசாலாக இருந்து கொண்டு நண்பர்களையும் பந்துமித்திரர்களையும் “கங்கா ஸ்நானம் ஆச்சோ” என குசலம் விசாரிப்பது நடைமுறையாகிவிட்டது.

தீபங்களை ஏற்றினால் இருள்தானே விலகிவிடும். அதுபோல, நம் உள்ளக்கோயிலில் ஞானவிளக்கை ஏற்றினால் அறியாமையாகிய இருள்தானே விலகிவிடும். இதை அப்பர் சுவாமிகள்
உடம்பெனு மனைய கத்து வுள்ளமே தகளி யாக
மடம்படு முணர்நெய் யட்டி யுயிரெனுந் திரிம யக்கி
இடம்படு ஞானத் தீயா லெரிகொள விருந்து நோக்கில்
கடம்பமர் காளை தாதை கழலடி காண லாமே.

என்று அற்புதமாக பாடுகின்றார்.

இவ்வாறு ஞானவிளக்கேற்றி அறியாமையை அகற்றுவதே தீபாவளிப் பண்டிகையின் நோக்கம். நம்மிடம் உள்ள காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்ற தீய சக்திகளை இறைவனுடைய திருநாமங்களாகிய பட்டாசுகளினால் சுட்டுத் தள்ளவேண்டும்.
இறைவனுடைய திருநாமங்கள் தீய சக்திகளை அழிக்கும் படைக்கலங்கலாகும்.

படைக்கல மாகவுன் னாமத் தெழுத்தஞ்சென் நாவிற்கொண்டேன்
இடைக்கல மல்லே னெழுபிறப் பும்முனக் காட்செய்கின்றேன்
துடைக்கினும் போகேன் றொழுது வணங்கித் தூநீறணிந்துன்
அடைக்கலங் கண்டா யணிதில்லைச் சிற்றம் பலத்தரனே.


என்று அருளிச்செய்த நாவுக்கரசரது நற்றமிழ்ப்பாடலால் இது விளங்குகின்றது. இதனை அறிந்து நாம் தீபாவளி விரதமிருந்து சிவபெருமானின் திருவருளை அடைய வேண்டும்.


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Oct 27, 2013 10:06 am

உறவுகளுக்கு தீபாவளி வாழ்த்துகள்!

அன்புடன்
சாமி



தீபாவளிப் பண்டிகை - நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல!
பதிவையும் படிக்கவும்
http://www.eegarai.net/t86604-topic#1026102

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sun Oct 27, 2013 12:44 pm

தீபாவளிப் பண்டிகையைப் பற்றி நிறைய சொற்பொழிவுகள் அனைத்தும்
அருமையாக இருக்கும்.
அந்த ஒரு நாள் குழந்தைகளுடன் சந்தோசமாக இருப்போம்,

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 27, 2013 12:59 pm

தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் 103459460 
-
தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் UlaKjcUSqGzsxyJbsoo3+depam

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Oct 15, 2014 10:42 pm

தீபாவளி உலகமெல்லாம் கொண்டாடும் நன்னாள் பொன்னாள். இதை யாண்டும் எல்லோரும் குதூகலமாகக் கொண்டாடுகிறார்கள். சிவபெருமானை நினைத்துக் கடைத்தேறும் விரதங்கள் எட்டு. அதில் தீபாவளியும் ஒன்று. - வாரியார் சுவாமிகள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 16, 2014 5:08 am

நல்ல பதிவு
-
தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் FH65zI6WSAatyD8w5qWP+diwali

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Oct 16, 2014 9:30 am

தீபாவளி (தீபங்களின்வரிசை....) நல்ல உண்மைச்செய்தி தொடரட்டம்.............

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக