புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_c10வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_m10வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_c10 
90 Posts - 78%
heezulia
வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_c10வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_m10வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_c10வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_m10வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_c10வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_m10வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_c10வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_m10வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_c10வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_m10வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_c10வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_m10வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_c10 
255 Posts - 77%
heezulia
வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_c10வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_m10வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_c10வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_m10வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_c10வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_m10வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_c10 
8 Posts - 2%
prajai
வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_c10வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_m10வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_c10வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_m10வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_c10வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_m10வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_c10வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_m10வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_c10வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_m10வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_c10 
2 Posts - 1%
Barushree
வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_c10வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_m10வீரமாகாளி அம்மன் வரலாறு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரமாகாளி அம்மன் வரலாறு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 12:51 am

குயவர் இனத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் ஆறு அண்ணன் தம்பிகள். அந்த ஆறு பேருக்கும் கடைக்குட்டியாக ஒரே ஒரு தங்கை. 'ஆறு அண்ணன்களுக்கு அருக்காணித் தங்கச்சி' யாக அவள் இருந்தாள். தாய் தந்தையரை இழந்த இவர்கள் தங்களின் தங்கையைப் பொத்திப் பொத்திப் பாதுகாத்து வந்தனர்.அவள் பெயர் வீரம்மாள். வீரம்மாளின் ஆறு அண்ணன்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. எல்லோரையும் விட பெரிய அண்ணனும் அவன் மனைவியும்தான் வீரம்மாளுக்குத் தாய் தந்தையாக இருந்து அவளைப் பாதுகாத்து வளர்த்து வந்தனர்.

அவர்களின் ஆறு குடும்பத்திலும் நல்லது கெட்டது எது நடந்தாலும் அது வீரம்மாள்தான் முன்னின்று நடத்த வேன்டும். வீரம்மாளுக்குத் தன் அண்ணன்களைத் தவிர வேறு ஆண்களின் முகம் எதுவும் தெரியாது. அவள் வீட்டைவிட்டு வெளியே வந்ததில்லை. எந்த ஒரு கடினமான வேலையும் அவள் அறியாதது. வீரம்மாளுக்கு இது தேவை என்று நினைக்கும் முன்பாகவே அவளது அண்ணன்கள் வாங்கி வந்து கொடுத்து விடுவார்கள். அவளுக்குத் தேவை என்று எதுவுமே இருந்ததில்லை. அவள் பூப்பெய்தி பெரியவளாகவும் ஆகிப்போனாள். சூரியன் எந்தத் திசையில் கிளம்புகிறது என்று கூட அவள் பார்த்ததில்லை. அந்த அளவிற்கு அவளது அண்ணன்கள் வீரம்மாளைக் கண்ணுக்குள் வைத்து வளர்த்து வந்தனர்.

அவளது குடும்பத்திற்கு உணவளிக்க நிலம் இருந்தது. தினமும் காலையில் அண்ணன்கள் ஆறு பேரும் வயலில் வேலை செய்யக் கிளம்பி விடுவார்கள். அவர்களுக்குக் காலை உணவை அவரவர்களின் மனைவிமார்கள் எடுத்துச் செல்வார்கள். அந்த சிறுபகுதி நேரம் மட்டும் வீரம்மாள் தனிமையில் இருப்பாள். அண்ணன்கள் காலை உணவை முடித்துக் கொண்டதும் தங்கையைப் போய்ப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று தங்கள் மனைவிமார்களை வீட்டுக்கு விரட்டுவார்கள்.

இப்படி நடந்து வந்த வேளையில் ஒருநாள் காலை அண்ணிகள் அனைவரும் தங்கள் தங்கள் கணவன்மார்களுக்குக் காலை உணவு எடுத்துக் கொண்டு கிளம்பும்போது எப்போதும் கேட்காத வீரம்மாள், ''எனக்குத் தனியா இருக்க பயமா இருக்கு நானும் உங்களோடு வர்றேன் அண்ணி'' என்று கெஞ்சினாள். ''அதெல்லாம் வேண்டாம். உன் அண்ணன்கள் எங்களைக் கொன்று போட்டு விடுவார்கள். வேண்டாம்'' என்று சொல்லி அவளை வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு வெளியில் கதவைப் பூட்டிக் கொண்டு சென்றாள் பெரிய அண்ணி.

இந்தச் செய்தியை அவள் கணவனிடம் சொல்ல அவளுக்குத் துணிவு வரவில்லை.இரவு பேசிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள். வேலைகளை முடித்துக் கொண்டு வீரம்மாளின் அண்ணன்கள் வீட்டிற்கு வந்தனர். இரவு தூங்கப் போகும் போது பெரிய அண்ணி அவள் கணவனிடம் வீரம்மாளின் ஆசையைச் சொன்னாள். ''கூட்டிக் கொண்டு வர வேண்டியதுதானே'' என்று அவன் சொன்னாலும் அந்தக் காட்டுவழியில் தன் தங்கை நடந்து வர வேண்டும் என்று நினைத்த போது கூட்டிக் கொண்டு வராததே நல்லது என்று அவனுக்குத் தோன்றியது.



வீரமாகாளி அம்மன் வரலாறு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 12:51 am

அவர்கள் வசிக்கும் ஊரைச் சுற்றிலும் சுமார் ஐந்து மைல் தொலைவுக்குக் காடுதான். குயவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட தனித் தெருவில் இவர்கள் வசிக்கிறார்கள். விடியற்காலை எழுந்து தன் தம்பிகள் ஐந்து பேரையும் அழைத்து வீரம்மாளின் விருப்பத்தைத் தெரிவித்தான் மூத்த அண்ணன். அவர்களுக்கும் ஆச்சரியம்தான். தங்கள் தங்கையின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டாமா... என்றும் நினைத்தனர். ஆறு பேரும் வீரம்மாளிடம் சென்று 'காட்டில் நீ நடந்து வர முடியாதும்மா. நீ வீட்டிலேயே ஏதாவது விளையாடிக் கொண்டிரு' என்று சொன்னார்கள்.

அவள் பிடிவாதமாக, 'அண்ணன்மார்களே... வீட்டில் தனியாக இருக்க எனக்கு பயமாக இருக்கிறது. அண்ணிகளோடு தானே வரப் போகிறேன். எனக்கும் இந்த ஊர் எப்படி இருக்கிறது என்று பார்க்க ஆசையாக இருக்கிறது'' என்று கூறினாள். தங்கள் தங்கையின் ஆசை இதுவாக இருக்கும்போது அவர்களும் ''சரி வா பத்திரமாக வா'' என்று சொல்லி விட்டுத் தங்களின் மனைவிமார்களிடம் ''நீங்கள் ஆறு பேரும் வீரம்மா¨வைச் சுற்றி நடந்து வாருங்கள். அவள் மையத்தில் நடந்து வரட்டும். அவளுக்குக் கால் வலிக்கிறது என்று சொன்னால் ஒருவர் மாற்றி ஒருவர் தூக்கிக் கொண்டு வாருங்கள்'' என்று சொல்லிவிட்டு வேலைக்குச் சென்று விட்டனர்.

வீரம்மாளுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. முதன் முதலாக வெளி உலகத்தைப் பார்க்கப் போகிறோம் என்ற ஆனந்தம் அவளுக்குள். அண்ணிகள் சமையல் செய்து முடித்துவிட்டு வீரம்மாளைப் புத்தாடைகள் அணிந்து கொள்ளச் செய்தார்கள். தங்கள் கணவன்மார்கள் சொல்லிச் சென்றது போலவே, சுற்றிலும் நடந்தனர். வீரம்மாள் மையத்தில் நடந்து சென்றாள். எப்போதும் செல்லும் ஊரின் தெரு வழியாகச் செல்லாமல் ஆள் அரவம் அதிகம் இல்லாத பாதை வழியாகக் கூட்டிச் சென்றனர். வீரம்மாள் குழந்தையின் குதூகலத்தோடு துள்ளித் துள்ளி நடந்து சென்றாள். அவர்களைச் சுற்றியுள்ள மரங்கள், செம்மண் பூமி, பறவைகளின் விதவிதமான ஓசை, தலைக்கு மேல் தெரியும் ஆகாயம் எல்லாமே அவளுக்கு அதிசயமாகப் பட்டன.

அவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தாள். அவளைப் பார்க்கப் பார்க்க அண்ணிகளுக்கும் ஆனந்தம் தாங்கவில்லை. பெரிய அண்ணி சுமந்து சென்ற தண்ணீர்க் குடத்தைத் தான் தூக்கி வருவதாகப் பிடிவாதம் செய்து அதை அவளிடமிருந்து வாங்கிக் கொண்டாள். அண்ணி எவ்வளவு மறுத்தும் வீரம்மாள் கேட்காமல் பிடிவாதமாகக் குடத்தை இடுப்பில் வைத்துக் கொண்டு நடந்தாள்.



வீரமாகாளி அம்மன் வரலாறு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 12:51 am

காட்டில் பாதி தூரம் கடந்துவிட்டார்கள். வீரம்மாளுக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. தன் அண்ணிகளிடம் ''நீங்கள் போய்க் கொண்டிருங்கள்'. நான் வர்றேன்'' என்று சொன்னாள். அவர்கள் ''என்னம்மா....'' என்று கேட்டனர். அவளும் சொன்னாள். ''நாங்கள் இங்கேயே நிற்கிறோம் இங்கேயே நிற்கிறோம் போ'' என்றனர். அவளுக்கு வெட்கப்பட்டுக் கொண்டு சிணுங்கினாள். ''சரி சரி நாங்கள் கொஞ்சம் தள்ளி நிற்கிறோம்'' என்று சொல்லி ஒரு மறைவிற்குச் சென்றனர். வீரம்மாள் தண்ணீர்க் குடத்தை வைத்துவிட்டு ஒரு புதரின் மறைவிற்குச் சென்றாள்.

அந்த வழியாக வந்த நாய் ஒன்று வழியில் குடத்தைப் பார்த்துவிட்டு சுற்றிச் சுற்றி வந்தது. சிறிது நேரத்தில் காலைத் தூக்கித் தண்ணீர்க் குடத்தில் சிறுநீர் கழித்துவிட்டுச் சென்று விட்டது. திரும்பி வந்த வீரம்மாளுக்குத் தாகம் ஏற்பட, குடத்தில் இருந்த தண்ணீரை ஒரு கை அள்ளிக் குடித்தாள். உப்பு கசந்தது போல் தெரிந்தது. 'இந்தத் தண்ணீரை அண்ணன்களுக்குக் கொண்டு போனால் திட்டுவார்கள்' என்று எண்ணிய வீரம்மாள் குடத்தில் இருந்த தண்ணீரைக் கீழே சாய்த்து விட்டுவிட்டாள்.

இவ்வளவு நேரம் ஆகியும் வீரம்மாளைக் காணாத அண்ணிகள் அவளைப் பெயரிட்டு அழைத்தனர். அண்ணிகள் அழைப்பதைக் கேட்ட வீரம்மாள் குடத்தைத் தூக்கிக் கொண்டு ஓடினாள். வெற்றுக் குடமாக இருப்பதைக் கண்டு விஷயத்தைக் கேட்டனர். ''தண்ணீர் குடித்தேன். உப்பு கசந்தது. அதனால் கீழே ஊற்றி விட்டேன்'' என்றாள்.

சுற்று வட்டாரத்தில் எங்கும் குடிதண்ணீர் கிடைக்காது. பெரிய அண்ணி மற்றவர்களை அழைத்து, ''வீரம்மாளைப் பத்திரமாக அழைத்துச் செல்லுங்கள்'' என்று கூறிவிட்டு மீண்டும் வீட்டிற்குத் தண்ணீர் கொண்டு வரக் கிளம்பினாள். மற்ற அண்ணிகள் அவளைப் பத்திரமாக அழைத்துக் கொண்டு சென்றனர். வேலை செய்த களைப்பில் பசியை ஆற்றிக் கொள்ள அண்ணன்கள் வந்தனர். பெரிய அண்ணி எங்கே என்று கேட்க நடந்ததைத் தெரிவித்தனர். தண்ணீர் இல்லததால் அவர்கள் சாப்பிடவில்லை. சற்று நேரத்தில் ஓட்டமும் நடையுமாகப் பெரிய அண்ணி தண்ணீர் தூக்கிக் கொண்டு வந்தாள். தண்ணீர் வந்ததும் சாப்பிட்டு முடித்துவிட்டுத் தங்கள் தங்கையைப் பார்த்து, '' எப்படி இருக்குதம்மா... வெளி உலகம்'' என்று கேட்டனர். வீரம்மாள் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தாள். ''சரி, சீக்கிரமாகத் தங்கையை அழைத்துச் செல்லுங்கள்'' என்று அனுப்பி வைத்தனர்.

மாலை ஆனதும் வேலைகளை முடித்துக் கொண்டு அண்ணன்கள் வீட்டிற்கு வந்தனர். அன்று ஒருநாள் வெளியில் சென்றதோடு சரி. மற்ற நாட்களில் எப்போதும் போலவே வீரம்மாள் வீட்டிலேயே இருந்தாள். சில நாட்கள் கழிந்தன. அவளுக்கு மசக்கை ஏற்பட்டுவிட்டது. வீரம்மாளுக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன என்றும் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அண்ணிகளிடம் ஓடினாள். தன் உடலில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைக் கூறினாள். தொடர்ந்து வாந்தி, மயக்கம் இருப்பதாகவும் புளிப்பு சாப்பிட விருப்பம் ஏற்படுவதாகவும் கூற, அண்ணிகளுக்கு வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்து விட்டது. ''அடிப்பாவி உன்னைப் பொத்திப்பொத்திப் பார்த்து வந்தோமே, இப்படிச் செய்து விட்டாயே'' என்று புலம்பினார்கள். வீரம்மாளின் அண்ணன்களிடம் என்ன பதில் சொல்வது என்று எண்ணும் பொழுதே ஆறு அண்ணிகளுக்கும் மயக்கம் வருவது போலிருந்தது.



வீரமாகாளி அம்மன் வரலாறு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 12:52 am

வேலைகளை முடித்துக் கொண்டு அண்ணன்கள் வீடு திரும்பி விட்டனர். வீட்டில் மயான அமைதி. யாரும் யாருடனும் பேசவில்லை. இயல்புக்கு மாறாகத் தங்களது மனைவிமார்கள் நடந்து கொண்டதை அறிந்த அண்ணன்கள், ''என்ன நடந்தது ?'' என்று கேட்கத் தொடங்கிவிட்டனர். பெரிய அண்ணன் வீட்டில் தான் வீரம்மாள் வளர்ந்ததால் பெரிய அண்ணன் கொஞ்சம் கடுமையாகவே பேசத் தொடங்கி விட்டான். சொன்னாலும் அடி விழும், சொல்லாவிட்டாலும் அடி விழும் என்ற நிலை. எத்தனை நாளைக்குத் தான் இதை மூடி மறைக்க முடியும்.

''உங்கள் தங்கச்சிக்கு உடல் நலம் சரியில்லை'' என்று சொல்லி வாய் மூடுவதற்கு முன் பதறி எழுந்தான் பெரிய அண்ணன். ''என்நாச்சு, என்னாச்சு தங்கச்சிக்கு'' என்று துடித்தான். தன் தங்கையிடம் ஓடினான். ''என்னம்மா ஆச்சி'' என்று கேட்டான். அவளும் விழித்துக் கொண்டு நின்றாள். அண்ணன் மீண்டும் அவன் மனைவியிடம் வந்து விசாரித்தான். அவளுக்குத் தயக்கம் குறைந்தபாடில்லை. ஏதோ முனகி முனகி சொன்னாள். அவனுக்குக் கோபம் வந்தது. ''வாய்க்குள்ளேயே முனகினால் எப்படி எனக்குக் கேட்கும் '' என்று சத்தமிட்டான். பயந்தவள் சத்தமாக உண்மையைக் கொட்டினாள். அவள் கணவன் அப்படியே உறைந்து போனான்.

கண்கள் நிலைகுத்தி நிற்க அப்படியே சரிந்து அமர்ந்தான். அவனால் நம்ப முடியவில்லை. தன் கணவனின் இந்நிலை கண்டு நடுங்கிப் போனாள் மனைவி. ஓடிச் சென்று தன் கொழுந்தன்களை அழைத்துக் கொண்டு ஓடிவந்தாள். அவர்கள் 'என்ன'? என்று விசாரித்தனர். அண்ணன் ஒன்றும் பேசாமல் அப்படியே அமர்ந்திருந்தான். அண்ணி அழுது கொண்டிருப்பதைப் பார்த்த கொழுந்தன்மார்கள் ''என்ன நடந்தது என்று சொல்லுங்கள்-'' என்று கெஞ்சினர். மீண்டும் அதே தகவலைச் சொன்னாள். அண்ணனைப் போலவே தம்பிகளுக்கும் அதிர்ச்சி தாங்கவில்லை. இவர்கள் கேட்ட தகவலை உறுதி செய்வது போல வீரம்மாள் வாந்தி எடுத்தாள்.

வீரம்மாளின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. 'அவள் அழுத கண்ணீர் ஆறாப் பெருகி வந்து ஆனை குளிப்பாட்ட, குளமாப் பெருகி வந்து குதிரை குளிப்பாட்ட' பாய்ந்து கொண்டிருந்தது. அன்றிரவு யாரும் வீரம்மாளுடன் பேசவில்லை. அண்ணன்கள் ஆறு பேரும் ஏதோ கூடிப்பேசிக் கொண்டிருந்தது மட்டும் வீரம்மாளுக்குத் தெரிந்தது.

தனக்கு ஏதோ பெரிய வியாதி வந்துவிட்டது என்று நினைத்துவிட்டாள். எல்லோரும் வருத்தத்தில் இருப்பதால் தனக்கு வந்துள்ள வியாதி என்ன என்று கூட யாரிடமும் கேட்க முடியவில்லை. அண்ணன்கள் விடியும் வரை பேசிக் கொண்டிருந்தனர்.

வீரம்மாள் கர்ப்பமாக இருக்கும் செய்தி எப்படியோ ஊரெல்லாம் பரவிவிட்டது. எல்லோரும் அரசல்புரசலாகப் பேசத் தொடங்கிவிட்டனர். விடிந்ததும் அண்ணன்கள் எப்போதும் போல் வேலைக்குக் கிளம்பினர். செல்லும் வழியில் அவர்கள் காதில் படும்படியாகவே வீரம்மாளைப் பற்றி அந்த ஊர் மக்கள் பேசினர். அண்ணன்களுக்கு அவமானம் தாங்க முடியவில்லை. அன்று சீக்கிரமாகவே வேலைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பினர்.



வீரமாகாளி அம்மன் வரலாறு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 12:52 am

ஆறு பேரும் வீரம்மாளிடம் சென்று, ''அம்மா, கிளம்பு. நம் அம்மா, அப்பா சமாதிக்குச் சென்று வேண்டி வருவோம்'' என்று சொல்லி அழைத்துச் சென்றனர். வீரம்மாளும் அண்ணன்களோடு சென்றாள். பெரிய அண்ணன் அவளை அழைத்துக் கொண்டு முன்னே செல்ல மற்றவர்கள் கையில் அரிவாளோடு பின் சென்றனர். ஊரைத் தாண்டி நடுக்காட்டிற்கு வந்தனர். அங்கே இருந்த சமாதிகளைச் சுற்றி வந்து வீரம்மாளின் கையில் சூடம் ஏற்றினர். மெல்ல மெல்ல இருட்டு சூழ ஆரம்பித்தது. பெரிய அண்ணன் ''என்னம்மா தப்பு செஞ்ச? யாரு அவன்'' என்று கேட்டான். வீரம்மாள் விளங்காமல், ஒரு குழந்தையைப் போலக் கையில் சூடத்தை வைத்துக் கொண்டு, ''நான் ஒரு தப்பும் செய்யலண்ணா...நீங்க என்ன கேட்கிறீங்க?'' என்று கேட்டாள். வீரம்மாள் பொய் சொல்கிறாள் என்று எண்ணி கொஞ்சம் கோபமாகக் கேட்டான். வீரம்மாளும் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னாள். ''நான் ஒரு தப்பும் செய்யவில்லை'' என்பது மட்டுமே அவளிடமிருந்து வந்த பதில். கடைசியில் ''விழுந்து சாமியைக் கும்பிடு'' என்று பெரிய அண்ணன் சொன்னதும் அவ்வாறே செய்தாள்.

கண் இமைக்கும் நேரத்தில் வீரம்மாளின் தலை சிதறி விழுந்தது. சிறிய அண்ணன் மயங்கி கீழே விழுந்து விட்டான். வீரம்மாளின் தலை அவர்களைப் பார்த்து ஏதோ பேசியது. ஆனால், என்ன என்று அவர்களுக்கு விளங்கவில்லை. துக்கம் தாளாமல் அண்ணன்கள் கதறிக் கதறி அழுதனர். யாருமே அற்ற அந்தக் காட்டில் ஓலமாக அழுகைக்குரல் கரைந்தது. அன்போடு வளர்த்த தங்கையை இப்படிச் செய்துவிட்டோமே என்று புலம்பினார்கள். நடந்தது நடந்துவிட்டது என்று தலையையும் உடலையும் தாய் தந்தைக்குப் பக்கத்திலேயே புதைக்க முடிவு செய்தனர். கர்ப்பமாக இருக்கும் பெண்ணை வயிற்றுப் பிள்ளையோடு புதைக்கக்கூடாது என்று அவள் வயிற்றைக் கத்தியால் கீறினர். இருட்டு அதிகரித்து மங்கலான வெளிச்சம் இருந்தது. குழந்தையை எடுத்தான் பெரிய அண்ணன். நான்கு பிண்டங்கள் வெளியில் வந்தன. உற்றுப் பார்த்தால் அவை நாய்க்குட்டிகள் என்பது தெளிவாகத் தெரிந்தன. ''பெரிய தவறு செய்துவிட்டோம். தங்கை ஒரு பாவமும் அறியாதவள்'' என்று மீண்டும் புலம்பினர். புலம்பிப் பயன் என்ன என்று குழி தோண்டிப் புதைத்தனர். இருட்டில் கண்பார்வை சரியாகத் தெரியாததால் வீரம்மாளின் கால்கள் இரண்டும் பூமிக்கு வெளியில் தெரியும்படியாகப் புதைத்துவிட்டு சென்று விட்டனர்.

அன்றிரவு வீரம்மாள் அண்ணன்களின் கனவில் தோன்றி உண்மையை விளக்கிக் கூறினாள். தான் ஒரு பாவமும் அறியாதவள் என்பதை சொன்னாள். மேலும் ''நீங்களும் இந்த ஊரும் எனக்குச் செய்த துரோகத்திற்குப் பரிகாரமாக இந்த ஊரில் பிறக்கும் ஒவ்வொரு 'தலச்சன்' குழந்தையையும் எனக்குப் பலியிட வேண்டும். இல்லையென்றால் இந்த ஊரையே அழித்து விடுவேன்'' என்று சொல்லி மறைந்தாள்.



வீரமாகாளி அம்மன் வரலாறு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 12:52 am

விடிந்ததும் ஊரில் உள்ளவர்களிடம் தாங்கள் கண்ட கனவைப் பற்றிச் சொன்னார்கள். அதனால் பயந்து போன ஊர்க்காரர்கள் ஊரை விட்டே கிளம்பிவிட்டனர். ஊரே காலியாகிவிட்டது. வீரம்மாளின் அண்ணன்கள் மட்டும் அவளைப் புதைத்த இடத்தில் கூரை அமைத்து வீரம்மாளைத் தெய்வமாக வழிபட்டனர். அவர்களுக்கும் உள்ளூர பயம் இருந்து கொண்டே இருந்தது. வீரம்மாளைப் புதைக்கும்போது வெளியில் தெரிந்த கால்களே வழிபாட்டிற்குரியனவாக இன்றும் இருக்கின்றன.

வீரம்மாளின் சாமதியைச் சுற்றிலும் நான்கு மூலையிலும் நான்கு நாய்க்குட்டிகளை வைத்து வழிபட்டனர். நாட்கள் கடந்தன. அண்ணன்களுக்குள் பயம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. பெரிய அண்ணன் திருச்சியில் இருக்கும் ஒரு சாமியாரிடம் சென்று தகவலைத் தெரிவித்தான். வீரம்மாளின் கோபத்தைத் தணிக்க வழி கேட்டான். அவர் ''ஒரு பைரவர் சிலையை வீரம்மாளின் முன் வைத்து வழிபடுங்கள். அதைத் தாண்டி உங்களைத் தண்டிக்க வர மாட்டாள்'' என்று சொல்ல அவ்வாறே ஒரு பைரவர் சிலையை வீரம்மாளின் சமாதிக்கு எதிரில் அமைத்தனர். அதன் பிறகு வீரம்மாளின் பயமுறுத்தல் அடங்கியது. அதைத் தொடர்ந்து ஊரை விட்டுச் சென்றவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் திரும்பி ஊருக்கு வந்து சேர்ந்தனர். வீரம்மாளை வழிபட்டு வருகின்றனர்.

'வீரமாகாளி' என்று அந்த தெய்வத்திற்குப் பெயர் வழங்கிவிட்டது. இந்தக் கோயில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை, செங்கிப்பட்டிக்குத் தெற்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள காட்டில் உள்ளது. செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் இக் கோயிலில் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. மாலை ஆறு மணி வரையில் மட்டுமே இங்கு வழிபாடு, பூஜை எல்லாம். அதன்பிறகு ஒரு காக்கா குருவி கூட இந்தக் கோயிலில் இருப்பதில்லை. மின்விளக்கு வசதி என்பது இல்லை. மின்விளக்கு அமைக்காததற்கு ஒரு காரணத்தைச் சொல்கின்றனர்.

இந்தக் கோயிலுக்கு மின்னிணைப்பு கொடுக்க ஏற்பாடு செய்தார் ஒருவர். எல்லாம் முடிந்தது. இணைப்பு கொடுக்கச் சென்றவர் மின் கம்பத்திலிருந்து விழுந்து இறந்து போனார். அதற்கு ஏற்பாடு செய்தவரும் இறந்து போனார். அதனால் இதுவரை இந்தக் கோயிலுக்கு மின்னிணைப்பு ஏற்படுத்த அஞ்சுகின்றனர்.

வீரமாகாளியம்மன் கோயில் இந்தப் பகுதியில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. திருட்டு போனால், தாம் சந்தேகிக்கும் நபரின் பெயரை ஒரு தாளில் எழுதி கோயிலில் கட்டி வைத்துவிட்டால் அந்த நபருக்குத் தீங்கு விளையும் என்று நம்புகின்றனர். அம்மன் என்பதால் எலும்மிச்சைப் பழ மாலைகள் சார்த்தப்படுகின்றன. குறி சொல்லுவதும் நடத்தப்படுகிறது. செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் குறி சொல்கின்றனர். பல்வேறு தீமைகள் நீங்குவதாக நம்புகின்றனர். பல்வேறு சாதியினரும் வந்து வீரமாகாளியை வழிபடுகின்றனர்.



வீரமாகாளி அம்மன் வரலாறு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக