ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

11 மாத குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்

+2
Tamilzhan
செரின்
6 posters

Go down

11 மாத குழந்தைக்கு என்ன  உணவு கொடுக்கலாம் Empty 11 மாத குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்

Post by செரின் Tue May 26, 2009 12:30 pm

அண்ணா எனது மகளுக்கு இப்போது 11 மாதம்இ அவருக்கு பாசிப்பயறு அவித்து மசித்து கொடுக்கலாமா?
வேறு என்ன வகையான உணவுகள் கொடுக்கலாம்?
பழங்கள் கொடுத்தால் சளிப்பிடிக்குமா?
அவ்வாறு சளிப்பிடிக்காமல் கொடுக்க குடிய பழங்கள் என்ன?
அவளுக்கு அடிக்கடி சளிப்பிடிக்கிறது அவ்வாறு சளிப்பிடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்

அண்ணா தயவு செய்து உடன் பதில் தாருங்கள்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

11 மாத குழந்தைக்கு என்ன  உணவு கொடுக்கலாம் Empty Re: 11 மாத குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்

Post by Tamilzhan Tue May 26, 2009 4:27 pm

தாய்ப்பாலோ அல்லது புட்டிப்பாலோ குழந்தையின் முதல் ஆண்டில் அவனுடைய சத்துணவின் பெரும் பகுதியாக அமையும். பிறகு இதோடுகூட திட உணவை கூட்டி நிறைவு செய்யவேண்டும். இதனால் குழந்தை ருசி மற்றும் மணம் அறிய ஒரு புதிய வழி பிறக்கிறது. முதலில் காரம் இல்லாத உணவு வகைகளைக் கொடுத்து, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக காரம் மற்றும் மசாலா சேர்ந்த் பொருட்களை அறிமுகப்படுத்தலாம்.
தனிப்பட்டவர்களின் முன்னரிமைக்கு ஏற்ப பலவிதமான திட உணவுகளின் ஆரம்பிக்கும் வரிசை மாறுபடும். பொதுவாக, ஒரே தான்ய உணவு பெரும்பாலும் அரிசிசோறு ஆரம்பிக்கலாம். மற்ற தானியங்களை பிறகு அறிமுகம் செய்யலாம். அல்லது இன்று கடைகளில் அறிமுகப்படுத்தி விற்பனையாகும் முன்னால் பக்குவப்படுத்தப்பட்ட தானியங்களில் ஒன்றை நீங்கள் பயன்படுத்தலாம். பக்குவப்படுத்தப்பட்ட காய்கறிகளும், பழங்களும்கூட கொடுக்கலாம்.
[size=16]குழந்தைகளால் சீக்கிரம் ஜீரணிக்கக்கூடியவைகளும், அவர்களால் விரும்பப்படுவதுமான பிசைந்த வாழைப்பழங்களும், கடைந்த ஆப்பிள்களும் குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் கொடுக்கும் உணவு வகைகளில் எல்லோராலும் விரும்பப்படும் பொருள்களில் முதன்மை பெறும். உங்களிடம் மிக்சி இருந்தால் பெரும்பான்மையான எல்லா பழங்களையும், காய்கறிகளையும் அரைத்து குழந்தைகளுக்குக் கூழ் பதத்தில் கொடுக்கலாம். பருப்பு வகைகளையும் இதே முறையில் கொடுக்கலாம்.
உணவில் மிக அதிகமான சர்க்கரையையும், உப்பையும் சேர்க்காதீர்கள், அதிகப்படியான உப்பு உடம்பில் நீர் இல்லாமல் செய்துவிடும், அதிகப்படியான சர்க்கரை சொத்தைப் பல்லை உண்டாக்கும், பிற்காலத்தில் இதனால் பலவிதமான பிரச்சனைகள் உருவாகும்.
குழந்தையின் சுவை உறுப்பு, உங்கள் உறுப்பை விட நன்றாக வேலை செய்யக்கூடியது. ஆகவே, அதற்கு அதிகப்படியான உப்பும், சர்க்கரையும் தேவையில்லை. சில சமயங்களில் குழந்தை எல்லா வித உணவுகளையும் புறக்கணிக்கக்கூடும். இது அநேகமாக வழக்கத்தில் இருந்து மாறுபடுவதால் ஏற்படுவது. குழந்தை திட உணவை புறக்கணித்தால் அதனை சாப்பிடச் சொல்லிக் கட்டாயப்படுத்தாதீர்கள். திட உணவின் அமைப்பும், ருசியும் பாலினின்றும் வெகுவாக வேறுபடுவதாலும், விழுங்கும் முறை வழக்கமான உறிஞ்சிக் குடிக்கும் முறையிலிருந்து வேறுபடுவதாலும் குழந்தை புறக்கணிக்ககூடும்.
குழந்தை உணவு உட்கொள்வதில் ஆவலாக இல்லாவிடினும் கவலைப்படாதீர்கள். அதனைக் கட்டாயப்படுத்தாதீர்கள். மாறாக வேறு ஏதாவது ஒன்றை முயற்சி செய்யுங்கள் வேறுபட்ட தானியம் அல்லது வேறு வகையான பழக்குழம்பு போன்றவை. அப்பொழுதும் குழந்தை அவைகளை புறக்கணித்தால் சில நாட்கள் சென்ற பிறகு மறுபடியும் முயற்சி செய்யுங்கள்.
ஒவ்வொரு புதிய உணவு வகைகளையும் குழந்தை ருசி பார்க்கட்டும். அதன் ருசியையும் அதன் கெட்டித்ததன்மை¨யும் பழக்கப்படுத்திக் கொள்ளட்டும். அவன் சிறிது அதிகமாக சாப்பிட்டால் அதை அவனுக்குக் கொடுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அளவை அதிகப்படுத்தி அவன் பசிக்கு ஏற்ப கொடுங்கள்.
குழந்தையைப் பெருக்ககு வைக்கும் எந்தவிதமான உணவையும் கொடுக்காதீர்கள் உதாரணமாக, அதிகப்படியான வெண்ணெய் அல்லது நெய், கிரீம் அல்லது தித்திப்பான முட்டையும், பாலும் சேர்ந்த தின்பண்ட வகை இவைகள் குழந்தையைப் பெருக்க வைக்கும், எவ்வளவு எலும்பும் தோலுமாக இருந்தாலும் அநேகமாக முடிவில் தடித்த குழந்தையாக ஆகி, பிற்காலத்தில் கொழுத்த மனிதனாவான். சிறுகச் சிறுக புதிய உணவு வகைகளில் குழந்தையின் அனுபவத்தை வளர்க்க வேண்டும். குழந்தை ஆறு மாதக் குழந்தையாகும்போது உணவில் சிறு பகுதி மாமிசம், மீன், கோழிக் குஞ்சின் இறைச்சி இவைகளைச் சேர்க்கலாம். ஆனால் இவை நன்றாகப் பக்ககுவப் படுத்தப்பட்டதாகவும், மிருதுவாக உள்ளதாயும் இருத்தல் அவசியம். குழந்தைக்கு நல்லது செய்யும் தயிரையும் தரலாம். கிச்சடி, உப்புமா, இட்லி, பருப்பு போன்ற பலவிதமான வீட்டு உணவு வகைகளையும் கொடுக்கலாம். பலவிதமான உணவு வகைகளையும், பலவிதமான காய்கறிகள், பலவிதமான பழங்கள் முதலியவற்றையும் சேர்த்து குழந்தைக்குப் பிடித்தமான உணவைத் தயா¡¢க்கலாம்.
சற்றேறக்குறைய இந்த வயதிலேயே குழந்தை தன்னுடைய வாயில் எல்லாப் பொருட்களையும் போட்டக் கொள்வதைக் காணலாம். இப்பொழுது அதன் கையினால் எடுத்த சப்பி சாப்பிடத்தக்க உணவு வகைகளை அறிமுகம் செய்விக்கலாம். தானே சாப்பிடும் குழந்தைக்கு எல்லாம் ருசியாக இருக்கும். இது குழந்தையை திறமையுள்ளவனாகவும் மாற்றும். எல்லாக் குழந்தைகளும் வீட்டில் பரம்பரையாகச் செய்யும் அப்பத்துண்டகளைச் சாப்பிடும். கையில் பிடிக்கும் வகையிலான பெரிய தண்டு ரொட்டி அல்லது ஆப்பிள், வாழைப்பழம், காரெட்டு போன்றவை கொடுக்கலாம். அதிகமான கடின உணவைக் கடித்துத் தின்பது குழந்தையின் ஈறுகளும், பற்களும் ஆரோக்கியமாக வளர உதவிபுரிகின்றது. குழந்தைக்கு குறிப்பாக பல் முளைக்கும் சமயம் இது செளகரியமாக அமையும். விரல் போன்ற உருவில் இருக்கும் உணவுகள் இதே காலகட்டத்தில் குழந்தையின் உணவில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், தானே உணவு உட்கொள்ளும்போது குழந்தையைக் கவனமாக கவனிக்க வேண்டும். அவன் ஒரு துண்டைக் கடித்து மென்று பின் அதை விழுங்குவதில் கஷ்டப்படலாம் எனவே, அவனுக்கு கொட்டைகள், முலாம்பழம், தானியங்கள், உருளைக்கிழங்கு வறுவல், சாக்கலேட்டகள் முதலியவைகளை ஒருபோதும் கொடுக்காதீர்கள்.
குழந்தைக்கு திட உணவு வகைகளை கொடுக்கும் போது அவன் 6 அடி உயரம் உள்ள ஹிமான் போன்ற பலமிக்க பெரிய ஆளாக வளரப் போவதை மனதில் வைத்துக்கொண்டு அதிக உணவு படைக்காதீர்கள். சத்துணவு பற்றிய அறிவு உங்களை உணவுகளை நிறுத்தும், அளந்தும் கொடுக்கச் செய்யும். இது உங்களையும், உங்கள் குழந்தையையும் கிறுக்காக்கும். குழந்தையும் தன்னுடைய தட்டில் மிக அதிகமான உணவைக் கண்டு சாப்பிடுவதைத் தவிர்க்கும். குழந்தைக்கு முதலில் கொஞ்சம் கொடுங்கள், அதைச் சாப்பிட்டு முடித்த பிறகு இன்னும் கொஞ்சம் கொடுங்கள். குழந்தை எல்லா உணவுகளையும் ஒரு குறிப்பிட்ட உணவை சீக்கிரமாக சாப்பிட கற்றுக் கொள்ளும். சில குழந்தைகள் தாமதாமாக உண்ணும். எவ்விதமாயினும் உங்கள் குழந்தைக்கு சில பொதுவான வழக்கங்களை கற்றுக்கொடுக்க இது சிறந்த காலமாகும்.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

11 மாத குழந்தைக்கு என்ன  உணவு கொடுக்கலாம் Empty Re: 11 மாத குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்

Post by தாமு Wed Dec 09, 2009 7:05 am

தமிழன் அண்ணா சூப்பர்... 11 மாத குழந்தைக்கு என்ன  உணவு கொடுக்கலாம் 677196 11 மாத குழந்தைக்கு என்ன  உணவு கொடுக்கலாம் 677196 11 மாத குழந்தைக்கு என்ன  உணவு கொடுக்கலாம் 677196
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

11 மாத குழந்தைக்கு என்ன  உணவு கொடுக்கலாம் Empty baby

Post by vedhavarshini Mon Dec 21, 2009 2:59 pm

breakfast 1year baby kodakalam


Last edited by vedhavarshini on Mon Dec 21, 2009 3:01 pm; edited 1 time in total (Reason for editing : no answer)
avatar
vedhavarshini
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 20/12/2009

Back to top Go down

11 மாத குழந்தைக்கு என்ன  உணவு கொடுக்கலாம் Empty Re: 11 மாத குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்

Post by வித்யாசாகர் Mon Dec 21, 2009 3:37 pm

ஷெரின்.. முகிலுக்கும் பதினொரு மாதம் தான்.. நாங்க பயறு வகை சாதம் தோசை என தர ஓரிரு மாதம் முன்பே ஆரம்பித்து விட்டோம். தாய் பால் இயன்றளவு கொடுக்கலாம். சில குழந்தைகள் கடிப்பதால் பால் தர தாய்மார்கள் வருத்தம் கொள்கிறார்கள். இந்த AVALON களிம்பை பயன்படுத்தலாம். தவிர ஆப்பிள் ஆரஞ் திராட்சை போன்ற பழங்கள் மருத்துவரை அணுகி மட்டும் கொடுப்பது நல்லது. சோக்லேட் ஐஸ்க்ரீம் பழச்சாறு போன்றவை அம்மா குடித்தாலும் குழந்தைக்கு சளி பிடிக்கும். குளித்து வந்த உடனேயோ உணவு உண்ட உடனேயோ தண்ணீர் அருந்திய உடனேயோ தாய்பால் தருவதாலும் சளி கொள்ளுமாம். அதிக சளி இருப்பின் அவ்வப்பொழுது உறங்கும் நேரம் லேசாக கற்பூரத்தை காய்ந்த தேங்காய் எண்ணையில் போட்டு உருகிய பின் தேய்த்து வரலாம். தினம் நல்ல நீரில், குறிப்பாக வளைகுடாவில் இருந்தால் சுத்தம் செய்யப் பட்ட நீரில் மட்டுமே குளிப்பாட்ட வேண்டும். குளிர்ந்த தரையில் நிற்பதை விளையாடுவதையும் கூடிய அளவில் தவிர்க்கலாம்.. அடைந்த அறையாக இருப்பின் ஊதுவத்தி வாசனை திரவியங்களால் கூட கேடு விளையும்.

அதி முக்கியமாக.. ஒரு வயது வரை மாதம் ஒரு முறையேனும் நல்ல குழந்தை நல மருத்துவரை சந்தித்து வருவது கூடுதல் நலம். நல்ல, ஒரே மருத்துவரிடம் மட்டுமே காட்டவேண்டும். மருந்துகள் அதிகம் தருவதோ அடிக்கடி மருத்துவரை மாற்றுவதையோ தவிர்க்கலாம். ஒரு வயதிற்கு மேல் குறிப்பான உணவுகள் ஏதும் இல்லை. நாம் உண்பதை கொடுக்கலாம். நம் உணவு முறைக்கு குழந்தையை மாற்றும் உணவு முறையே பதினொன்று பன்னிரெண்டாம் மாத உணவு முறைகள். அதிக காரம் உப்பு இனிப்பு தவிர்ப்பது மிக நல்லது.

மேலுள்ளவைகள் தம்பிக்காக நாங்கள் கடை பிடிப்பதை மட்டுமே சொன்னேன்; முகில் நலமாக வலமாக வளரும் நம்பிக்கையில்!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

11 மாத குழந்தைக்கு என்ன  உணவு கொடுக்கலாம் Empty Re: 11 மாத குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்

Post by உமா Thu Jul 28, 2011 1:52 pm

நன்றி தமிழன்.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

11 மாத குழந்தைக்கு என்ன  உணவு கொடுக்கலாம் Empty Re: 11 மாத குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum