ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்!

2 posters

Go down

அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Empty அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்!

Post by ராஜா Sun May 24, 2009 8:00 pm

அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Evar

ஒருவரின் உடலைக்காட்டி, "பிரபாகரன்
கொல்லப்பட்டு விட்டார்' என்று அறிவித்துள்ள இலங்கை அரசு, இதனை நிரூபிக்க
வேண்டி, "மரபணு சோதனை (டி.என்.ஏ. டெஸ்ட்) மூலம் உறுதி செய்து கொண்டோம்'
என்றும் அழுத்தமாக தெரிவிக்கிறது. மேலும், பிரபாகரன் உடல் கண்டுபிடிக்கப்
பட்டதாக கூறப்பட்ட இரண்டு மணி நேரத்தில் டி.என்.ஏ. சோதனையை நடத்தி
முடித்தோம் என்றும் தெரிவிக்கின்றது இலங்கை ராணுவம்.

இந்நிலையில்,
பிரபாகரன் உடலை அடையாளப் படுத்துவதற்காக டி.என்.ஏ. டெஸ்டினை இலங்கை
ராணுவம் துணைக்கழைத்திருப்பதில்தான் அறிவியல் உலகம் அதிர்ச்சி
அடைந்திருக்கிறது.

தமிழக அரசின் தடய அறிவியல் துறையின் இயக்குநர்
விஜயகுமாரை சந்தித்து இதுபற்றி கேட்டபோது, ""இறந்து போனவர் இவர்தான் என
கண்டறியவும், ஒரு குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும்தான்
மரபணு சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

பொதுவாக, ரத்தம், திசு, விந்து,
உமிழ்நீர், வேருடன் கூடிய முடி ஆகியவற்றில் உள்ள டி.என்.ஏ. மூலக்கூறினை
தனியாகப் பிரித்து அதன்மூலம் கண்டறியப்படும். இதற்கு இரண்டு, மூன்று
நாட்களாகும். அதுவே பல், எலும்பு, மண்டை ஓடு ஆகிய வற்றிலிருந்து டி.என்.ஏ.
எடுக்கப்பட்டு சோதிக்க வேண்டுமானால் குறைந் தது 10 நாட்கள் ஆகும். இதுதான்
அறிவியல்'' என்கிறார்.

தமிழக அரசின் தடய அறிவியல் துறை முன்னாள்
இயக்குநரும், ராஜீவ் படுகொலை விவகாரத்தில் சி.பி.ஐ.க்கு உதவியவரும்,
தற்போதைய பெங்களூர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கௌரவ பேராசிரியரு மான
டாக்டர் ப.சந்திரசேகரனிடம் பேசிய போது, ""விஞ்ஞானத்தை கேவலப்படுத்துகிறது
இலங்கை அரசு. இறந்தவரின் ரத்தத்தையோ, அல்லது திசுக்களையோ எடுத்துக் கொண்டு
முதலில் "லேப்'புக்கு போக வேண்டும். "லேப்' பில்தான் இதிலிருந்து
டி.என்.ஏ. பிரித்தெடுக் கப்படும். பிரபாகரனின் உடல் போர் நடந்துள்ள
பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக சொல்கிறது ராணுவம். அதனால், இந்த பகுதி
யில் "லேப்' இருக்கும் என்பதற்கு சாத்திய மில்லை.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Empty Re: அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்!

Post by ராஜா Sun May 24, 2009 8:02 pm

அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Evar1
லேப்பிற்கு எடுத்துச் செல்லப்படும் ரத்தம்
(அல்லது) திசுக்களை டி.என்.ஏ.அனலைஸர், சீக்குவன்சர் மெஷினில் செலுத்தி
டி.என்.ஏ. புரஃபைல் முதலில் கண்டுபிடிக்க வேண்டும். இதன் ரிசல்ட் என்பது
"பார்கோட்' மாதிரி இருக்கும். பிரபாகரனிடமிருந்து ஏற்கனவே ரத்த மாதிரிகள்
எடுத்து அதிலிருந்து டி.என்.ஏ. மூலக்கூறு ரிசல்ட்டினை எடுத்து வைத்திருந்
தால்... அந்த ரெக்கார்டோடு இப்போது கிடைத்துள்ள ரிசல்ட்டினையும்
ஒப்பிட்டு, "அவர்தானா? இல்லையா?' என்று கண்டறிய வேண்டும். இத்தகைய
சோதனைகளுக்கு குறைந்த பட்சம் 4 நாட்கள் தேவைப்படும்.

இறந்து
போனவரின் டி.என்.ஏ. ஏற் கனவே பாதுகாத்து வைக்கப்பட வில்லை என்றால், இறந்தவ
ரின் பெற்றோர்கள் அல்லது குழந்தைகளின் ரத்த மாதிரிகள் சேகரித்து
அதிலிருந்து டி.என்.ஏ. மூலக்கூறினை பிரித்தெடுத்து பிரபாகரனின் டி.என்.ஏ.
ரிசல்ட்டோடு ஒப்பிட்டு, உண்மைகளை கண்டறியலாம். இந்த செயல்முறைகள்
பிரபாகரன் விஷயத்தில் நடந்ததாக தெரியவில்லை.

மேலும், பிரபாகரன்
மகன் சார்லஸ் கொல்லப்பட்டதாகவும் அவரிடமிருந்து எடுக்கப்பட்ட ரத்த
மாதிரிகளைக் கொண்டு டி.என்.ஏ. ரிசல்ட் பெறப்பட்டு, அதனை பிரபாகரனின்
டி.என்.ஏ. ரிசல்ட்டுடன் ஒப்பிட்டு, பிரபாகரனின் உடல்தான் என உறுதி செய்து
கொண்டோம்' என்கிறார்கள் ராணுவத்தினர். இதுவும் அபத்தமானது. சார்லஸ் உடலை
கண்டுபிடித்ததாக திங்கட்கிழமை சொன்னது ராணுவம். செவ்வாயன்று பிரபாகரனின்
உடலை கண்டுபிடித்ததாக சொன்னது. இந்த ஒருநாளில் இருவரின் டி.என்.ஏ.
ரிசல்ட்டையும் எப்படி கண்டறிந்திருக்க முடியும்? சில உண்மைகளை மறைக்க
இலங்கை ராணுவம் முயற்சிப்பதாகவே சந்தேகம் எழுகிறது'' என்று சுட்டிக்
காட்டினார்.

மேலும் தொடர்ந்து பேசிய சந்திரசேகரன், ""விஞ்ஞான
ரீதியிலான இந்த ரிசல்ட்டைத் தவிர, இறந்தவரின் குடும்பத்தினர், உறவினர்,
நண்பர்களை அழைத்து வந்து உடலை அடையாளம் காட்டச் சொல்லலாம். ஆனால் அப்படிச்
சொல்பவர்கள் உண்மையை சொல்ல வேண்டும். ஆனால், சொல்வார்களா? என்று சந்தேகம்
எழுவதும் இயற்கையானது. பிரபாகரன் விவகாரத்திலும், கருணாவை அழைத்து
அடையாளம் காட்டச் சொல்லியிருக்கிறார்கள். அவரும் ""ஆமாம்... இது பிரபாகரன்
உடல்தான்'' என்றிருக்கிறார். ஆனால் அவர் சொல்வதை 100 சதவீதம் உண்மை என்று
எப்படி எடுத்துக்கொள்ள முடியும்?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Empty Re: அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்!

Post by ராஜா Sun May 24, 2009 8:03 pm

அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Evar2
54 வயதான பிரபாகரனின் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள், ராணுவம் காட்டிய உடலில் இல்லை.
இது மிகப் பெரிய சந்தேகம். மேலும் பிரபாகரன் மரணம் நிகழ்ந்திருந்தால்...
அது 3 விதங்களில் நிகழ்ந்திருக்கலாம். அதாவது, சயனைடு அருந்தி
இறந்திருக்கலாம். அப்படி சயனைடு அருந்தினால் அதன் தாக்கம் நாக்கில்
தொடங்கி, முகத்தில் பரவி, உடலைத் தாக்கும். அப்போது முகம் விகாரமாகும்.
இந்தச் சம்பவம் அங்கு நிகழவில்லை என்று தெரிகிறது. தன்னைத்தானே அவர்
துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருக்கலாம். அப்படி அவர்
சுட்டுக்கொண்டிருந்தால் முகமே சிதறியிருக்கும். ராணுவம் காட்டிய உடலில்
நெற்றியில் சுடப்பட்ட அடையாளம் தெரிகிறது. முகம் பிரகாசமாக இருக்கிறது.
அதனால் அவரே சுட்டுக்கொள்ள வாய்ப்பில்லை. அடுத்து, பிரபாகரன் தப்பிக்க
முயற்சித்தபோது ராணுவம் சுட்டிருந்தால்... நெற்றியில் மட்டும் சுட்டிருக்க
முடியாது. கண்மூடித்தனமாக சுட்டிருப்பார்கள். இதனால் அவரது உடலே
சின்னாபின்னமாகியிருக்கும். இந்த சம்பவமும் நடக்கவில்லை, நடந்த மாதிரி
தெரியவில்லை. அடுத்து பிரபாகரனைப் பிடித்து, நிற்க வைத்து ராணுவம்
சுட்டிருக்கலாம். அப்படி செய்திருந்தாலும் முகம் சிதைந்து போயிருக்கும்.
இதுவும் நடந்த மாதிரி தெரியவில்லை. அதனால், அது பிரபாகரனின் உடலா?
இறந்தவர் பிரபாகரன்தானா? என்பதில் அசைக்க முடியாத சந்தேகம் இருக்கிறது.

பிரபாகரன்
பயங்கரவாதி, தீவிரவாதி என்கிற கேள்விகளையெல்லாம் ஒரு புறம் தள்ளி
வைத்துவிட்டு, உலகத் தமிழர்களே போற்றும் வரலாற்று தலைவனாக இருந்துள்ள
பிரபாகரனை பற்றிய உண்மையை உலகத்திற்கு தெரிவிக்க வேண்டிய ஜனநாயக கடமை
ராஜபக்சேவிற்கு இருக்கிறது. அதேபோல, இரண்டே மணி நேரத்தில் டி.என்.ஏ.
ரிசல்ட்டை தந்து அறிவியலை கேவலப்படுத்தி அனைவரையும் முட்டாளாக்கியுள்ள
சம்பந்தப்பட்ட ராணுவ அதிகாரிகளை ராஜபக்சே தண்டிக்க வேண்டும். இதுதவிர,
பெனாசிர் உடலை அவசரம் அவசரமாக பாகிஸ்தான் அடக்கம் செய்தது போல இல்லாமல்,
தெளிவான உண்மைகள் வெளியாகும் வரை "இவர்தான் பிரபாகரன்' என்று ராணுவம்
காட்டிய உடலை பாதுகாக்க வேண்டிய கடமையும் ராஜபக்சேவிற்கு இருக்கிறது.
ஆனால், பிரபாகரன் பற்றிய உண்மைகளை மறைக்க... ராணுவம் காட்டிய உடலை அடக்கம்
செய்ய இலங்கை அரசு முயற்சிக்கிறதாக தகவல்'' என்று விரிவாக சுட்டிக்
காட்டுகிறார் சந்திரசேகரன்.

மேலும் பிரபாகரனின் உடலை நந்திக்கடல்
நீர் பகுதியில் இருந்து மீட்டதாகவும் கூறுகிற ராணுவம், பிரபாகரனை அடை
யாளம் காட்ட, அந்த உடலின் முகத்தை மிக எளிதாக திருப்பு கின்றனர். இத்தகைய
செயல்கள் மருத்துவ வட்டாரங்களிலும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை
அரசு மருத் துவமனையின் அனாடமி (உடற் கூறுகள்) துறையின் டாக்டர் களிடம்
இதுபற்றி விசாரித்த போது, ""இறந்து போன வரின் உடல் 6 மணி நேரம் தண்ணீரில்
கிடந்தாலே உடலெல் லாம் உப்பிக்கொள்ளும். விகாரத்தோற்றம் வந்து விடும்.
பிரபாகரனின் உடலை 1 நாளுக்குப் பிறகு கண்டுபிடித்த தாகச் சொல்கிறார் கள்.
அப்படியானால், அந்த உடல் மிகவும் மோசமாகியிருக் கும். ஆனால், ராணுவம்
காட்டிய அந்தமுகம் ரொம்ப வும் பிரகாசமாக இருக்கிறது. கைகள் மட்டும்
கொஞ்சம் வீங்கியுள்ளது. அதனால், உடலுக்கும் முகத் திற்கும் சம்பந்தமில்லை
என்கிற சந்தேகம் இருக்கிறது. மேலும் அந்த உடலின் முகத்தை மிக ஈஸியாக
திருப்புகின்றனர் ராணுவத்தினர். ஒருவர் இறந்த உடனேயே அவரது உடல் முழுவதும்
ஸ்ட்ரிப்னஸ் ஆகிவிடும். அதாவது விறைத்துக் கொள்ளும். விரல் களைக் கூட
மடக்க முடியாது. அப்படிப் பட்ட சூழலில், ராணுவத்தினர் அந்தபாடியின்
முகத்தை மிக அனாயசமாக திருப்புகிறார்கள். இது சாத்தியமே இல்லை. கழுத்துப்
பகுதி துண்டிக்கப்பட்டிருந்தால்தான் சாத்தியம். மேலும், ஒருவர் இறந்து
விட்டால், அடுத்த இரண்டுமணி நேரத்தில் அவரது கண்கள் ஒளியை இழந்து விடும்.
ஆனால், பிரபாகரனின் உடல் என காட்டப் பட்டதில் உள்ள முகத்தில் கண்கள் மிக
பிரகாசமாக இருக்கிறது. மருத்துவ விஞ்ஞானத்தை வைத்துப் பார்க்கையில்,
சம்பந்தப்பட்டவரின் உடல்தானா என்பதில் சந்தேகமிருக்கிறது. ஏதோ மேஜிக்
நடந்திருக்கிறது என்றுதான் தோன்றுகிறது'' என்று விவரிக்கின்றனர்.

இப்படிப்பட்ட
சந்தேகங்கள் அறிவியல், மருத்துவ வட்டாரங்களில் எதிரொலிக்கும் நிலையில்,
சினிமாக்களில் வருவது போல பிளாஸ்டிக் சர்ஜரி மாதிரி மாஸ்க்
தயாரிக்கப்பட்டு ஏதோ ஒருவரின் முகத்தில் அது பொருத்தப் பட்டிருக்கலாம்
என்று உலகம் முழுவதும் சந்தேகம் பரவிக்கிடக்கிறது.

"இது
சாத்தியமா?' என்று தமிழ்த் திரையுலகின் பிரபல ஆர்ட் டைரக்டர்களில் ஒருவரான
சிவா யாதவ்விடம் கேட்டபோது, ""யாருடைய முகத்தினையும் "மாஸ்க்' மூலம்
உருவாக்க நினைக்கிறோமோ அவரது புகைப்படம் 3 ஆங்கிள்களில் இருந்தாலே போதும்.
ஃபோட் டோவை வைத்தே மாஸ்க் உருவாக்கிடலாம். ரப்பர், ஃபைபர், ப்ளாஸ்டர் ஆஃப்
ஃபாரிஸ் ஆகிய வகைகளில் "மாஸ்க்' உருவாக்க முடியும். ரப்பரை பயன்படுத்தி
தயாரித்தால் அப்படியே ஒரிஜினல் முகம் கிடைத்துவிடும். ஆனால் இதனை
தயாரிப்பதற்கு குறைந்தது 2 நாள் தேவைப்படும். அதேசமயம், ஏற்கனவே "மாஸ்க்'
உருவாக்கி வைத்திருந்தால் சில மணி நேரங்களில் யாரோ ஒருவரின் முகத்தில்
பொருத்திவிட முடியும். இது சாத்தியம்தான்'' என்கிறார் சிவா யாதவ்.

இலங்கை
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்களில் ஒருவரான சிவாஜிலிங்கத்திடம்
பேசியபோது, ""எங்கட தேசியத் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார். இதில்
சந்தேகம் இல்லை. இலங்கை ராணுவம் காட்டியுள்ள உடல் போர்ஜரி. அது
பிரபாகரனின் உடல் அல்ல. விஞ்ஞான ரீதியாகவே இதனை நிரூபிக்க முடியும்.
விரைவில், வெளியே வரவிருக்கிறார் பிரபாகரன். அப்போது, நிறைய கேள்விகளுக்கு
பதில் தர வேண்டிய நிர்பந்தம் ராஜபக்சேவிற்கு ஏற்படப் போகிறது'' என்கிறார்
சிவாஜிலிங்கம்.

ஆக, அறிவியல் மற்றும் மருத்துவ வட்டாரங்களில்
எப்படி விசாரித்தாலும் இலங்கை ராணுவம் காட்டிய உடல், பிரபாகரன் உடலாக
இருக்க வாய்ப்பே இல்லை என்றே அடித்துச் சொல்கின்றன.

-இளையசெல்வன்

படம் : ஸ்டாலின்

நன்றி : நக்கீரன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Empty Re: அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்!

Post by vaasu_ng Mon May 25, 2009 8:06 pm

கமலஹசன் அடுத்த படத்திற்கு makeup போட இனி America போக வேண்டாம். அது பக்கத்து நாட்டிலேயே கிடைக்கிறது
avatar
vaasu_ng
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 25/05/2009

Back to top Go down

அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்! Empty Re: அவரா இவர்? சிங்களனின் முகத்திரையைக் கிழிக்கும் அறிஞர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum