புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_c10புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_m10புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_c10புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_m10புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_c10புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_m10புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_c10புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_m10புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_c10புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_m10புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_c10 
4 Posts - 2%
prajai
புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_c10புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_m10புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_c10புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_m10புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_c10புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_m10புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_c10புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_m10புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_c10 
2 Posts - 1%
சிவா
புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_c10புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_m10புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_c10புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_m10புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_c10 
432 Posts - 48%
heezulia
புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_c10புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_m10புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_c10புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_m10புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_c10புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_m10புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_c10புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_m10புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_c10 
29 Posts - 3%
prajai
புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_c10புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_m10புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_c10புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_m10புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_c10புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_m10புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_c10புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_m10புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_c10புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_m10புதிய உதயம் -- அ உ கு மு க  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய உதயம் -- அ உ கு மு க


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Mar 19, 2011 4:37 pm

பீர் குடிப்போர் முன்னேற்ற கழகம் (பீகுமுக) தொடங்கலாம் என்ற அறிவிப்பு வந்தவுடன் இது ஒரு ஒருதலை பட்சமான முடிவு எனவும், ஒரு குறிப்பிட்ட சாராரை மட்டும் திருப்தி படுத்துவதாகவும் உள்ளதால் அதை மாற்றி அனைவரையும் உட்படுத்த வேண்டும் என பிராண்டி, வைன், ரம், விஸ்கி குடிப்போரிடமிருந்து எதிர்ப்புகளும், கோரிக்கைகளும் மிஸ்டு கால்கள், மிஸ்டு எஸ்.ம்.எஸ் வந்ததால், அனைவரின் கருத்தையும் ஏற்று வரும் ஏப்ரல் 1 முதல் அகில உலக குடிமக்கள் முன்னேற்றக் கழகம் (அ உ கு மு க) எனும் புதிய கட்சி உதயமாவதாக அதன் தலைவர் "ஜானி வாக்கர்" சிவா இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் பின்வருமாறு என அக்கட்சியின் செய்தி குறிப்பி‌ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. தலைவர்: "ஜானி வாக்கர்" சிவா
2. பொது செயலளர் : "கிங்பிஷர்" கலை
3. கொ.ப.செ. : "பகார்டி" பாலாஜி

மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள்

1. "ஹெய்வார்ட்ஸ்" பக்கிரி
2. "ராயல் சேலஞ்ச்" பிச்ச
3. "கோல்கொண்டா" அசோகன்
4. "கல்யாணி" மதன் கார்த்திக்

உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறுகிறது



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Mar 19, 2011 4:37 pm

இது குறித்து "ஜானி வாக்கர்" சிவா மாலை மயக்கம் பத்திரிகை நிருபர் பீர்பாலுக்கு அளித்த பேட்டி

கேள்வி: உங்கள் கோரிக்கை தான் என்ன? ஏன் இந்த புது இயக்கம்?

"ஜா.வா." சிவா : கடந்த ஆறு வருடங்களாக ஒரு குவார்ட்டர் வாங்கினால், ஒரு வாட்டர் பாக்கெட் இலவசமாக வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதை இன்றுவரை அரசு நிறைவேற்றவில்லை. நாங்கள் என்ன பீருக்கா தண்ணீர் பாக்கெட் கேட்கிறோம்? இதைக் கூடவா நிறைவேற்றக் கூடாது?

மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட குவார்ட்டர் வாங்கினால் தலா ஒரு மிக்சர் பாக்கெட்டோ, வறுத்த கடலையோ வழங்குவதோடு கண்டிப்பாக ஒரு ஊறுகாய்ப் பாக்கெட்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட நாளாக நிலுவையில் இருக்கிறது. இதை வலியுறுத்தி நாடெங்கும் குடிமக்கள் முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் நாளை காலை எட்டு மணியிலிருந்து இரவு பதினோரு மணி வரை டாஸ்மாக் கடைகளில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவார்கள்.

கேள்வி: இந்த இரண்டு கோரிக்கைகளுக்காகவா கட்சி தொடங்கியிருக்கிறீர்கள்?

"ஜா.வா." சிவா : அது மட்டுமல்ல! அண்மையில் எங்களது சங்கத்தின் முன்னாள் செயலாளர் மெக்டொவல் மேகநாதனை அவரது மனைவி பழஞ்செருப்பால் அடித்தையறிந்து சங்கத்தின் உறுப்பினர்கள் கொந்தளிப்பில் இருக்கின்றனர். தமிழக அரசு உடனடியாக பழஞ்செருப்பு, துடைப்பக்கட்டை, உலக்கை போன்ற ஆயுதங்களை மனிதாபிமானத்தின் அடிப்படையில் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்திருக்கிறோம்.

கேள்வி: இது தவிர கு.மு.க.தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து மனு அளித்திருக்கிறீர்களாமே?

"ஜா.வா." சிவா : ஆம்! எங்கள் கட்சி உறுப்பினர்கள் பல்வேறு சோதனைகளுக்கு மத்தியிலே தினமும் கடமை தவறாமல் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறோம். ஆனால் பல நகரங்களில் தினமும் தெருநாய்கள் துரத்துவதும் கடிப்பதும் வழக்கமாகி விட்டது. சென்ற மாதம் மட்டும் எங்களது உறுப்பினர்களில் 12345 பேரை நாய்கள் கடித்திருப்பதும், கடித்த நாய்களில் பெரும்பாலானவை அடுத்த அரைமணியில் பரிதாபமாக இறந்து போயிருப்பதையும் மக்கள் அறிவார்கள். எனவே, நாய்களிலிருந்து எங்களது கட்சி உறுப்பினர்களைக் காப்பாற்ற தினமும் ஒவ்வொரு டாஸ்மாக் கடை முன்பும் ஒரு நாய்வண்டியை நகராட்சிகள் நிறுத்தி வைக்க வேண்டும். ஒரு வேளை போதுமான அளவு நாய்கள் கிடைக்காவிட்டால் அதே வண்டியில் எங்கள் உறுப்பினர்களைக் கொண்டு போய் அவரவர் வீடுகளில் விட்டு விட வேண்டும்!

கேள்வி: இதற்காக தனிப்படை அமைக்கச் சொல்லியிருக்கிறீர்களே?

"ஜா.வா." சிவா : தனிப்படை கோரிக்கைக்கான காரணமே வேறு! பள்ளி, கோவில் அருகே டாஸ்மாக் கடைகள் வைக்கக் கூடாது என்று சட்டம் வைத்திருக்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு டாஸ்மாக் அருகிலும் பாதாளச் சாக்கடைகளைத் திறந்து வைத்திருக்கிறார்கள். குடிபோதையில் எங்கள் உறுப்பினர்கள் அவசரத்தில் உள்ளே இறங்கிவிடுவதால் பலர் ஆந்திராவுக்கே சென்று விடுகிறார்கள். எனவே கடற்படையின் உதவியுடன் காணாமல் போகும் எங்கள் கட்சித்தொண்டர்களைக் கண்டுபிடிக்க சிறப்புப் பாதாளச் சாக்கடைப் பாதுகாப்புக்காவலர் படையை நிறுவ வேண்டும்.

கேள்வி: குடிப்பழக்கம் அதிகமாகிவிட்டதால் மனைவியை அடித்து உதைக்கிற கணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனரே.

"ஜா.வா." சிவா : இது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு! 2009-10-ல் எங்கள் உறுப்பினர்கள் மனைவிக்குக் கொடுத்த அடிகளின் எண்ணிக்கை 12,34,567. ஆனால் இந்த ஆண்டில் இது கணிசமாகக் குறைந்து 12,34,565 ஆகியுள்ளது.

கேள்வி: இதற்குக் காரணம் என்ன?

"ஜா.வா." சிவா : பலவருட அனுபவம் காரணமாக, எங்கள் உறுப்பினர்கள் வீட்டுக்குப் போய் மனைவியை அடிப்பதைக் காட்டிலும் கடையிலேயே யாரையாவது அடிக்கிற பழக்கத்தைக் கடைபிடிக்கத் தொடங்கி விட்டனர். ஒரு உறுப்பினர் அடித்தால் அடுத்த உறுப்பினர் திருப்பி அடிக்கக் கூடாது என்ற சுயக்கட்டுப்பாடு இருப்பதால் மனைவியை அடிப்பதை விடவும் இது உகந்த பழக்கமாகக் கருதப்படுகிறது.

கேள்வி: இப்போது அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் குறித்து ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

"ஜா.வா." சிவா : இது மிகப்பெரிய மோசடி! 2010-11ம் ஆண்டில் மட்டும் சுமார் 123 கோடி ரூபாய்க்கு வெள்ளரிக்காய், கொய்யாக்காய், மாங்காய் ஆகியவை விற்பனையாகியுள்ளன. எங்கள் கழகத்தொண்டர்களின் பேராதரவு காரணமாகத் தான் வெளிச்சந்தையில் இவற்றின் விலை ஏறியது என்பதை நாட்டுமக்கள் நன்கறிவார்கள். மேலும் சென்ற ஆண்டில் மட்டும் 20,19,187 ஆம்லெட்டுகளும், 7,65,432 ஆப்பாயில்களும் அதிகப்படியாக விற்பனையாகியுள்ளன. இது தவிர நாடெங்கும் எண்ணூறு டன் எலுமிச்சங்காய் ஊறுகாயும், ஐநூற்றி எழுபது டன் மாங்காய் ஊறுகாயும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவை குறித்து அரசின் அறிக்கை குறிப்பிடாதது எங்களது சாதனையை இருட்டடிப்பு செய்வது போலிருக்கிறது.

கேள்வி: அண்மையில் தங்கள் கட்சியின் பொருளாளர் நிதியமைச்சரைச் சென்று சந்தித்ததன் நோக்கம் என்ன?

"ஜா.வா." சிவா : எங்கள் கட்சித் தொண்டர்கள் குடிப்பதற்காக எதையெதையோ விற்றும் அடமானம் வைத்தும் அல்லல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். மேலும் பெரும்பாலானோருக்கு ஒரே மனைவி என்பதால் ஆத்திர அவசரத்துக்கு அடகு வைக்க ஒரு தாலி மட்டுமே கிடைக்கிறது. எனவே, இனி அரசே "வட்டியில்லா புட்டிக்கடன்", வழங்க வேண்டுமென்று கோரிக்கை மனு அளித்திருக்கிறோம்.

கேள்வி: உங்கள் கட்சியை ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று துவக்குவதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா?

"ஜா.வா." சிவா : இருக்கிறது! எங்கள் இயக்கத்தின் தூணாக இருந்த மொடாக்குடியன் மொக்கசாமி அன்றுதான் டாஸ்மாக் கடையிலேயே தனது இறுதி மூச்சை விடுத்தார். இனிவரும் ஆண்டுகளில் அவரது நினைவு நாளன்று எங்கள் தொண்டர்கள் "பீர்ப்பந்தல்" அமைத்து பொதுமக்களின் தாகத்தைத் தணிப்பார்கள். அது மட்டுமல்ல, அன்றைய தினத்தை அரசு விடுமுறையாக அறிவிப்பதோடு அவர் பெயரில் ஒரு தபால்தலையும் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம்.

கேள்வி: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடக்கூடாது என்று கூட கோரிக்கை வைத்திருக்கிறீர்களே?

"ஜா.வா." சிவா : ஆமாம், பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்திருப்பது போலவே காந்தி ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, புத்த பூர்ணிமா போன்ற நாட்களிலும் கடைகளை மூடாமல் திறந்தே வைத்திருக்க வேண்டும். எங்கள் கட்சித்தொண்டர்கள் அந்த மாபெரும் மனிதர்களுக்கு அஞ்சலி செய்ய வேண்டாமா?

கேள்வி: உங்கள் கழகத்துக்கென்று புதிய சமூக பொருளாதாரக்கொள்கை வேறு வைத்திருக்கிறீர்களே? அது பற்றி ஓரிரு வார்த்தைகள் கூற முடியுமா?

"ஜா.வா." சிவா : அவசியம் கூறுகிறேன்! எங்களது இயக்கத்தின் வளர்ச்சி காரணமாக, போக்குவரத்துக் காவலர்களின் வருவாய் இரவு நேரங்களில் அதிகரித்திருப்பதை மக்கள் நன்கு அறிவார்கள். மேலும் தமிழகத்தில் நடைபெறும் விபத்துக்களில் 25 சதவிகித விபத்துக்கள் எங்களது வளர்ச்சியால் நடைபெறுகின்றன என்பதால் ஜனத்தொகையை கட்டுப்பாட்டில் வைப்பதில் நாங்கள் ஆற்றிவரும் பெரும் தொண்டை யாரும் மறுக்க முடியாது. மேலும் எங்களது இயக்கத்தின் இமாலய வளர்ச்சி காரணமாக குடல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள், மனோதத்துவ நிபுணர்கள், ஜோசியர்கள் ஆகியோரின் தொழிலில் வியக்கத்தக்க அபிவிருத்தி ஏற்பட்டிருக்கிறது. எங்கள் கட்சித்தொண்டர்களின் வீட்டுப் பெண்மணிகள் தங்களது பெரும்பாலான நேரத்தைக் கோவில்களிலும் குளங்களிலுமே செலவழிக்கிறார்கள் என்பதால் எங்களால் ஆன்மீகத்துக்கும் பெரும் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் மக்களிடம் துண்டுப்பிரசுரங்கள் மூலமாக விளக்க ஆவன செய்து கொண்டிருக்கிறோம்.

கேள்வி: குடிப்பழக்கம் காரணமாக சேமிப்பு கரைந்து விடுவதாக பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கிறார்களே? அது குறித்து உங்கள் கருத்தென்ன?

"ஜா.வா." சிவா : இது குறித்து எங்கள் தொண்டர்களுக்கு விழிப்புணர்ச்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. குடித்து முடித்ததும் பாட்டில்களைக் கடையிலேயே போட்டு விடாமல் வீட்டுக்குக் கொண்டு வந்து, போதுமான அளவு சேர்ந்ததும் விலைக்கு விற்றால், ஒரு கணிசமான தொகையை சேமிக்க முடியும். மேலும், அலுவலகத்துக்குக் கொண்டு செல்வது போல டாஸ்மாக் கடைகளுக்கும் வீட்டிலிருந்தே தண்ணீரைக் கொண்டு போகத்தொடங்கினால் வாட்டர் பாக்கெட் செலவும் மிச்சமாகும். இது போன்ற ஒரு பத்து அம்சத்திட்டதை நாங்கள் நாடெங்கும் பிரசாரம் செய்ய்த்தொடங்கியிருக்கிறோம்.

கேள்வி: இறுதியாக ஒரு கேள்வி! உங்கள் கட்சி நிர்வாகிகள் தமிழை வளர்ப்பதாக கூறியிருக்கிறீர்களே, இதற்கு என்ன காரணம்?

"ஜா.வா." சிவா : தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக எங்களது கழகம் அயராது பாடுபட்டு வருகிறது. தமிலு, தமிளு என்றல்லாமல் நாங்கள்தான் சரியாக "ழ" உச்சரிக்கறோம்.

டாஸ்மாக் கடைகளில் புதிதாக 0123 புதிய வார்த்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வார்த்தைகளைத் தமிழ் அகராதியில் சேர்ப்பதோடு இது குறித்து ஆராய்வதற்காக தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் ’குடியாலஜி,’ என்று புதிய பாடத்திட்டத்தையும் அறிமுகம் செய்ய வேண்டும் என்பதே எங்களது அவா.

வரும் தேர்தலில் எந்தக் கட்சியோடு கூட்டணி அமைப்பீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்க "ஜானி வாக்கர்" சிவா மறுத்து விட்டார். இருந்தாலும், அ உ கு மு க கட்சிக் கொள்கைகளை ஏற்று, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என்று பெயர் சொல்ல விரும்பாத சில கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பேட்டியின் போது கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் "பகார்டி" பாலாஜியும், பொது செயலாளார் "கிங்பிஷர்" கலையும் உடனிருந்தனர்.




கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Mar 19, 2011 4:37 pm

ந மு க தலைவியின் அறிவிப்பு

ந மு க -- வின் தானை தலைவி நமீதா "ஜானி வாக்கர்" சிவாவின் இந்த அறிவிப்பை கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்ததாக தொலைபேசிமூலம் பேட்டி அளித்தார்.

குடிமக்களின் நலத்தினைக் கருதி 2016-ன் தமிழக முதல்வர் "ஜானி வாக்கர்" சிவா அவர்களுக்கு ’குடிகாத்த கோமகன்’ என்ற விருதை வரும் காந்தி ஜெயந்தி அன்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் மாபெரும் விழாவில் ந மு க சார்பில் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதை அவர் அனைத்து மச்சான்ஸ்க்கும் தெரிவித்துக் கொண்டார். இவ்விழாவில் ரம்பா, அமலா பால், டாப்ஸீ ஆகியோர் பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்தார்





கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Mar 19, 2011 4:38 pm

சென்னை "குயோலோ" கல்லூரி "டாஸ்மாக்" மற்றும் வெளி நாட்டு நிறுவனங்களான "ஸிமிர்னாப்", "கார்லிங்" உடன் இணைந்து நடத்திய கருத்து கணிப்பு

http://www.eegarai.net/t54867-topic



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 4:41 pm

dsudhanandan wrote:பீர் குடிப்போர் முன்னேற்ற கழகம் (பீகுமுக) தொடங்கலாம் என்ற அறிவிப்பு வந்தவுடன் இது ஒரு ஒருதலை பட்சமான முடிவு எனவும், ஒரு குறிப்பிட்ட சாராரை மட்டும் திருப்தி படுத்துவதாகவும் உள்ளதால் அதை மாற்றி அனைவரையும் உட்படுத்த வேண்டும் என பிராண்டி, வைன், ரம், விஸ்கி குடிப்போரிடமிருந்து எதிர்ப்புகளும், கோரிக்கைகளும் மிஸ்டு கால்கள், மிஸ்டு எஸ்.ம்.எஸ் வந்ததால், அனைவரின் கருத்தையும் ஏற்று வரும் ஏப்ரல் 1 முதல் அகில உலக குடிமக்கள் முன்னேற்றக் கழகம் (அ உ கு மு க) எனும் புதிய கட்சி உதயமாவதாக அதன் தலைவர் "ஜானி வாக்கர்" சிவா இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் பின்வருமாறு என அக்கட்சியின் செய்தி குறிப்பி‌ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. தலைவர்: "ஜானி வாக்கர்" சிவா
2. பொது செயலளர் : "கிங்பிஷர்" கலை
3. கொ.ப.செ. : "பகார்டி" பாலாஜி

மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள்

1. "ஹெய்வார்ட்ஸ்" பக்கிரி
2. "ராயல் சேலஞ்ச்" பிச்ச
3. "கோல்கொண்டா" அசோகன்
4. "கல்யாணி" மதன் கார்த்திக்

உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறுகிறது

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

புதிய உதயம் -- அ உ கு மு க  47
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Mar 19, 2011 6:09 pm

நன்றி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Mar 19, 2011 6:22 pm

ஒத்துக்கிறோம் நீங்க ஒரு நல்ல (குடி) மகன். ஜாலி

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Mar 19, 2011 6:49 pm

மேலும் சீட் கிடைக்குமா என்ன?



புதிய உதயம் -- அ உ கு மு க  Pபுதிய உதயம் -- அ உ கு மு க  Oபுதிய உதயம் -- அ உ கு மு க  Sபுதிய உதயம் -- அ உ கு மு க  Iபுதிய உதயம் -- அ உ கு மு க  Tபுதிய உதயம் -- அ உ கு மு க  Iபுதிய உதயம் -- அ உ கு மு க  Vபுதிய உதயம் -- அ உ கு மு க  Eபுதிய உதயம் -- அ உ கு மு க  Emptyபுதிய உதயம் -- அ உ கு மு க  Kபுதிய உதயம் -- அ உ கு மு க  Aபுதிய உதயம் -- அ உ கு மு க  Rபுதிய உதயம் -- அ உ கு மு க  Tபுதிய உதயம் -- அ உ கு மு க  Hபுதிய உதயம் -- அ உ கு மு க  Iபுதிய உதயம் -- அ உ கு மு க  Cபுதிய உதயம் -- அ உ கு மு க  K
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Mar 19, 2011 6:51 pm

positivekarthick wrote:மேலும் சீட் கிடைக்குமா என்ன?

தலைவரையோ, பொது செயலாளரையோ கேட்கவும்.....



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 19, 2011 7:16 pm

ஹாஹாஹா பயங்கர காமெடி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக