புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Poll_c10புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Poll_m10புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Poll_c10 
41 Posts - 67%
heezulia
புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Poll_c10புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Poll_m10புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Poll_c10 
10 Posts - 16%
Dr.S.Soundarapandian
புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Poll_c10புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Poll_m10புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Poll_c10புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Poll_m10புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Poll_c10புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Poll_m10புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Poll_c10 
206 Posts - 74%
heezulia
புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Poll_c10புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Poll_m10புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Poll_c10புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Poll_m10புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Poll_c10புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Poll_m10புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Poll_c10 
8 Posts - 3%
prajai
புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Poll_c10புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Poll_m10புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Poll_c10புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Poll_m10புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Poll_c10புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Poll_m10புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Poll_c10 
3 Posts - 1%
Barushree
புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Poll_c10புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Poll_m10புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Poll_c10புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Poll_m10புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Poll_c10 
2 Posts - 1%
Shivanya
புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Poll_c10புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Poll_m10புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 23, 2009 8:26 am

நேற்று பதவி ஏற்ற பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு வருமாறு:-

மன்மோகன்சிங்
Manmohan Singh
मनमोहन सिंह
ਮਨਮੋਹਨ ਸਿੰਘ
புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு 200px-Manmohansingh04052007

Prime Minister of India


பொருளாதார மேதையான 76 வயது மன்மோகன்சிங், 2-வது முறையாக நேற்று பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். காங்கிரஸ் வரலாற்றிலேயே முதன் முறையாக பிரதமர் வேட்பாளர் என்று முன்னிலைப்படுத்தப்பட்டு, காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்கு பக்கபலமாக விளங்கிய அவர் நேற்று பிரதமர் பதவியில் 2-வது இன்னிங்சை தொடங்கி இருக்கிறார்.

பஞ்சாப், கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களில் பொருளாதாரம் படித்த மன்மோகன்சிங் பேராசிரியராகவும், ரிசர்வ் வங்கி கவர்னராகவும், திட்ட கமிஷன் துணை தலைவராகவும், நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் நிதி மந்திரியாகவும் சிறப்பாக பணிபுரிந்தவர்.

பொது வாழ்வில் ஊழலற்ற நேர்மையானவர் என்று புகழப்படும் மன்மோகன்சிங், பஞ்சாப் மாநிலத்தில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர். அவருக்கு குருசரண் கவுர் என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 23, 2009 8:40 am




பிரணாப் முகர்ஜி
Pranab Mukherjee
புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு 190px-Pranab_Mukherjee



காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரணாப் முகர்ஜிக்கு 73 வயது ஆகிறது. மேற்கு வங்காள மாநிலத்தில் கினஹர் என்ற குக்கிராமத்தில் பிறந்தார். வரலாறு மற்றும் அரசியலில் பட்டம் பெற்று, சட்டமும் பயின்றார். கல்லூரி பேராசிரியராக பணியாற்றி உள்ளார்.

இந்திராகாந்தியின் குடும்பத்துக்கு விசுவாசியான இவர் 40 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்டவர். 1970-ம் ஆண்டு முதல் பலமுறை மத்திய மந்திரியாக பணியாற்றி உள்ளார். நிதி, வர்த்தகம், இரும்பு, சுரங்கம், வெளியுறவு போன்ற துறைகளை கவனித்து இருக்கிறார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 23, 2009 8:52 am

சரத்பவார்
Sharadchandra Govindrao Pawar
Marathi: शरदचंद्र गोविंदराव पवार
புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Sharad10


மராட்டியத்தில் செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் ஒருவர் சரத்பவார். காங்கிரசில் இருந்து விலகி தேசியவாத காங்கிரசை உருவாக்கினார். பின்னர் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து வெற்றி வாகை சூடினார்.

மத்திய ராணுவ மந்திரியாக இருந்த இவர், 38 வயதிலேயே மராட்டிய மாநில முதல்-மந்திரியாக பதவி வகித்தவர். 1940-ம் ஆண்டு பிறந்த அவருக்கு 69 வயது ஆகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 23, 2009 8:57 am

ஏ.கே.அந்தோணி
Arackaparambil Kurian Antony
Malayalam: അറക്കപ്പറമ്പില്‍ കുര്യന്‍ ആന്‍‌റ്റണി
புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Normal_ak%20antony


கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டம், செர்தாலாவில் 1940-ம் ஆண்டு டிசம்பர் 28-ந் தேதி பிறந்தவர் ஏ.கே.அந்தோணி. வக்கீல் பட்டம் பெற்ற இவர், மாணவர் பருவத்தில் இருந்தே காங்கிரஸ் இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். நரசிம்மராவ் மந்திரிசபையில் மத்திய மந்திரியான அந்தோணி, மன்மோகன்சிங் தலைமையிலான கடந்த மந்திரிசபையில் ராணுவ மந்திரியாக பதவி வகித்தார்.

3 முறை கேரள முதல்-மந்திரியாக பணிபுரிந்த அந்தோணி, `நேர்மையானவர்' (மிஸ்டர் கிளீன்) என்று பெயரெடுத்தவர். கொள்கை பிடிப்புள்ள அவர், கொள்கைக்காக பதவியை துறக்க தயங்காதவர். ஏ.கே.அந்தோணியின் மனைவி பெயர், எலிசபெத். அவர்களுக்கு அனில் குரியன் அந்தோணி, அஜித்பால் அந்தோணி என்ற இரு மகன்கள் உள்ளனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 23, 2009 9:03 am

ப.சிதம்பரம்
Palaniappan Chidambaram
புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு 225px-Pchidambaram


ப.சிதம்பரம் சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தானில் பிறந்தார். 1945-ம் ஆண்டு பிறந்த அவருக்கு வயது 64. பி.எஸ்.சி., பி.எல்., எம்.பி.ஏ. படித்து உள்ளார். 1972-ல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆனார். தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், தமிழ்நாடு பிரதேச காங்கிரஸ் கமிட்டியில் பொது செயலாளராகவும் இருந்தவர்.

6 முறை பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், மத்திய நிதி மந்திரியாகவும், உள்துறை மந்திரியாகவும் செயல்பட்டு வந்தார். தற்போது 7-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 23, 2009 9:04 am

மம்தா பானர்ஜி
Mamata Banerjee
Bengali: মমতা বন্দ্যোপাধ্যায়
புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு 225px-Mamata_banerjee


மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள நடுத்தர குடும்பத்தில், கடந்த 1955-ம் ஆண்டு ஜனவரி 5-ந் தேதி பிறந்தவர், மம்தா பானர்ஜி. நமது பக்கத்து வீட்டு பெண் போல் எளிய தோற்றம் கொண்ட மம்தா, ஆவேச பேச்சு மற்றும் தனக்கே உரிய அதிரடி நடவடிக்கை மூலம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறவர். 1991-ல் நரசிம்மராவ் மந்திரிசபையில் மந்திரியான மம்தா, 1997-ல் காங்கிரசை விட்டு பிரிந்து சென்று திரிணாமுல் காங்கிரசை தொடங்கினார்.

1999-ல் பா.ஜனதா கூட்டணியில் சேர்ந்த அவர், வாஜ்பாய் மந்திரிசபையில் ரெயில்வே மந்திரி ஆனார். 2001-ல் தெகல்கா ஊழல் புகாரை அடுத்து பதவி விலகிய மம்தா, கூட்டணியில் இருந்தும் வெளியேறினார். இந்த தேர்தலில் மேற்கு வங்காள மாநிலத்தில் இடதுசாரி கட்சிகளுக்கு மரண அடி கொடுத்து பெரும்பான்மை தொகுதிகளில், காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி தேடித்தந்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 23, 2009 9:06 am

எஸ்.எம்.கிருஷ்ணா
Somanahalli Mallaiah Krishna
Kannada: ಸೋಮನಹಳ್ಳಿ ಮಲ್ಲಯ್ಯ ಕೃಷ್ಣ
புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு 439px-SM_Krishna


கர்நாடகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு வயது 77. இவர் கடந்த 1932-ம் ஆண்டு மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா சோமனஹள்ளி என்ற இடத்தில் பிறந்தார். மைசூர் மகாராஜா கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்ற இவர், பெங்களூரில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். அதன் பிறகு அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ் வாஷிங்டன் மற்றும் சதர்ன் மெத்தடிஸ்ட் பல்கலைக்கழகங்களில் உயர் படிப்பை முடித்தார். பின்னர் இந்தியா திரும்பி அரசியலில் நுழைந்த அவர் மத்திய மந்திரி, சட்டசபை சபாநாயகர், முதல்-மந்திரி, கவர்னர் ஆகிய பதவிகளை வகித்தார்.

1971-76 மற்றும் 1980-84-ம் ஆண்டுகளில் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ள எஸ்.எம்.கிருஷ்ணா, 1983-84 ம் ஆண்டில் மத்திய தொழில்துறை இணை மந்திரியாகவும், 1984-85 ம் ஆண்டில் நிதி இலாகா இணை மந்திரியாகவும் பொறுப்பு வகித்தார். 1996-ம் ஆண்டு டெல்லி மேல்-சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 23, 2009 9:13 am

குலாம்நபி ஆசாத்
Ghulam Nabi Azad
गुलाम नबी आजाद
புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Kulam%20napi%20aasath%20431



குலாம்நபி ஆசாத் (மார்ச் 7, 1949) மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியுடன் நெருக்கமானவர். மத்திய உள்துறை, விமான போக்குவரத்து, சுற்றுலா, பாராளுமன்ற விவகாரம் போன்ற இலாகாக்களை கவனித்த அனுபவம் கொண்டவர்.

61 வயதான அவர், ஒருமுறை கூட தனது சொந்த மாநிலமான காஷ்மீரில் தேர்தலை சந்திக்கவில்லை. 2002-ம் ஆண்டு காஷ்மீரில் தேர்தலை முன்னின்று நடத்தி காங்கிரசுக்கு வெற்றி தேடித்தந்தவர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 23, 2009 9:17 am

சுஷில் குமார் ஷிண்டே
Sushil kumar Shinde
Marathi: सुशील कुमार शिंदे
புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Sushilkumar_shinde_new


சுஷில் குமார் ஷிண்டே கடந்த மந்திரி சபையில் மின்சாரத்துறை மந்திரியாக பதவி வகித்தவர். சுமார் 2 ஆண்டுகள் மராட்டிய மாநில முதல்-மந்திரியாக பதவி வகித்த இவர் கடந்த 1941-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ந் தேதி பிறந்தார்.

கடந்த 1970-ம் ஆண்டு அரசியலில் நுழைந்த இவர் ஒரு வருடத்துக்குள் மராட்டிய மந்திரி சபையில் இடம் பிடித்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரின் நெருங்கிய நண்பரான இவர் 1978-ம் ஆண்டு சரத்பவார் கட்சியிலிருந்து விலகினார். 1999-ம் ஆண்டு அமேதி தொகுதியில் நடந்த தேர்தலில் சோனியா காந்தியின் மேலாளராக பணியாற்றி உள்ளார். கடந்த 2004-ம் ஆண்டு ஆந்திரா கவர்னராக நியமிக்கப்பட்டு ஒரு ஆண்டு பணியாற்றினார். பின்னர் 2006-ம் ஆண்டு மராட்டிய மாநிலத்தில் இருந்து டெல்லி மேல்-சபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு, மின்துறை மந்தியானார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 23, 2009 9:20 am

வீரப்ப மொய்லி
Veerappa Moily
Tulu, Kannada : ವೀರಪ್ಪ ಮೊಯ್ಲಿ
புதிய மத்திய மந்திரிகள் வாழ்க்கை குறிப்பு Veerappa_moi


மத்திய மந்திரியாக பதவி ஏற்ற வீரப்ப மொய்லிக்கு வயது 69. வழக்கறிஞரான இவர் 1968-ம் ஆண்டு காங்கிரசில் சேர்ந்தார். கர்நாடக காங்கிரசின் மூத்த உறுப்பினரான இவர், கார்கலா தொகுதியில் இருந்து கர்நாடக சட்டசபைக்கு 6 தடவை தேர்ந்து எடுக்கப்பட்டு, பல்வேறு துறைகளின் மந்திரியாக மொய்லி பொறுப்பு வகித்துள்ளார். 1992-ம் ஆண்டு முதல் 1994-ம் ஆண்டு வரை கர்நாடக முதல்-மந்திரியாக பதவி வகித்தார்.

மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்த துறையின் தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் செய்தித்துறை தலைவராகவும் பதவி வகித்து உள்ளார்.

வீரப்ப மொய்லிக்கு மனைவி மற்றும் ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக