புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 45 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 45 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 45 Poll_c10 
284 Posts - 45%
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 45 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 45 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 45 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 45 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 45 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 45 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மரபுப் பா பயிலரங்கம் - Page 45 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 45 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 45 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மரபுப் பா பயிலரங்கம் - Page 45 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 45 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 45 Poll_c10 
19 Posts - 3%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 45 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 45 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 45 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மரபுப் பா பயிலரங்கம் - Page 45 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 45 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 45 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 45 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 45 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 45 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மரபுப் பா பயிலரங்கம் - Page 45 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 45 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 45 Poll_c10 
7 Posts - 1%
mruthun
மரபுப் பா பயிலரங்கம் - Page 45 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 45 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 45 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்


   
   

Page 45 of 50 Previous  1 ... 24 ... 44, 45, 46 ... 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Sat Feb 12, 2011 6:17 pm

[quote="யாதுமானவள்"]வணக்கம் அய்யா,
தங்கள் நலன் காக்க!

திருத்தங்கள் செய்திருக்கின்றேன். சரியாக உள்ளனவா என அறியத்தருவீர்.

இலக்கணத்தில் இல்லைபிழை என்றெண்ணி யேதான்
சிலகண நேரத்தில் சிந்தைக்கு எட்டியதை
ஏட்டினில் தந்தேன் நான்.

பனையோலை கேட்டுநா னெழுதிய பாவின்
வினைதிருத்திச் சீராக்கி ஓதும்வி தம்கண்டு
வியந்து மகிழ்கின்றேன் நான்.


அய்யா எனக்கு இங்கு ஒரு சந்தேகம். நான் முதலில் எழுதிய பாவில் "ஓதும்வித் தைகண்டு" என்று எழுதியிருந்தேன். இப்போது எனக்கு ஒரு குழப்பம். சீரின் தொடகத்தில் வரும் "ஐ" எழுத்து நெடிலாகக் கொள்ளப்படும் என்று கூறினீர் அல்லவா? தைகண்டு இதில் தை/கண்/டு = நேர்/நேர்/நேர் - தேமாங்கனி என பிரித்தல் தவறா? அன்புகூர்ந்து என் ஐயத்தை நீக்குக.

தமிழநம்பி wrote:[size=18]3. அசை பிரித்தல்

சீர் குறித்துத் தெரிந்து கொள்வதற்கு முன்னர், அசைபிரிப்பது குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

4. சீரின் தொடக்கத்தில் நிற்கும் வரிசை எழுத்துக்கள் நெடிலாகக் கொள்ளப்படும்; இடையிலும் இறுதியிலும் அவை குறிலாகக் கொள்ளப்படும்.

எடுத்துக்காட்டு :

கையில் கை நெடில் > நேரசை.(சீரின் முதலில் வரிசைச் சொல்)

போகையில் கையில் குறில்இணை ஒற்று > நிரையசை (சீரின் இடையில் வரிசைச் சொல்)

புன்னகை னகை குறிலிணை > நிரையசை. ( சீரின் இறுதியில் வரிசைச்சொல்)

மிக்க நன்றி.
அன்புடன் யாதுமானவள்

முதல்பாட்டில் –
நேரத்தில் சிந்தைக்கு – மா முன் நேர் உள்ளது.
தந்தேன் நான் – இங்கும் மா முன் நேர் உள்ளது.
திருத்துக.

இரண்டாம் பாட்டில் –
கேட்டுநா னெழுதிய – விளம் முன் நேர் வந்துள்ளது.
தம்கண்டு வியந்து – காய் முன் நிரை உள்ளது.
திருத்துக.

நீங்களே திருத்த முடியும் என்று எண்ணுகிறேன்.
ஏதும் சிக்கல் இருப்பின், சொல்லுங்கள், த
ிருத்துகிறேன்.


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Sat Feb 12, 2011 6:46 pm

////அய்யா எனக்கு இங்கு ஒரு சந்தேகம். நான் முதலில் எழுதிய பாவில் "ஓதும்வித் தைகண்டு" என்று எழுதியிருந்தேன். இப்போது எனக்கு ஒரு குழப்பம். சீரின் தொடகத்தில் வரும் "ஐ" எழுத்து நெடிலாகக் கொள்ளப்படும் என்று கூறினீர் அல்லவா? தைகண்டு இதில் தை/கண்/டு = நேர்/நேர்/நேர் - தேமாங்கனி என பிரித்தல் தவறா? அன்புகூர்ந்து என் ஐயத்தை நீக்குக.

[quote="தமிழநம்பி"][size=18]3. அசை பிரித்தல்

சீர் குறித்துத் தெரிந்து கொள்வதற்கு முன்னர், அசைபிரிப்பது குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

4. சீரின் தொடக்கத்தில் நிற்கும் ஐ வரிசை எழுத்துக்கள் நெடிலாகக் கொள்ளப்படும்; இடையிலும் இறுதியிலும் அவை குறிலாகக் கொள்ளப்படும்.

எடுத்துக்காட்டு :

கையில் – கை – நெடில் > நேரசை.(சீரின் முதலில் ஐ வரிசைச் சொல்)

போகையில் – கையில் – குறில்இணை ஒற்று > நிரையசை (சீரின் இடையில் ஐ வரிசைச் சொல்)

புன்னகை – னகை – குறிலிணை > நிரையசை. ( சீரின் இறுதியில் ஐ வரிசைச்சொல்)

மிக்க நன்றி. ////
------------------------------------------------------------------------------------------
யாதுமானவர்க்கு,
எழுகின்ற ஐயத்தைக் கேட்டுத் தெளிவாக்கிக் கொண்டால்தான் மேற்கொண்டு பயில்தல் எளிதாக இருக்கும். எனவே, நீங்கள் ஐயத்தைக் கேட்டதற்கு மகிழ்ச்சி.

உங்கள் பாடல்:
பனையோலை கேட்டுநா னெழுதிய பாடலின்
வினைதிருத்திச் சீராக்கி வோதும்வித் தைகண்டு
வியந்து மகிழ்கின்றேன் நான்.

என் குறிப்பு:
மூன்றாம் பாடலில் –
பாடலின் வினைதிருத்தி – விளம் முன் நிரை வந்துள்ளது.
தைகண்டு வியந்து – காய் முன் நிரை வந்துள்ளது.
திருத்துக.


ஒதும்வித் தைகண்டு – என்று எழுதியதில் எந்தப் பிழையுமில்லை
தைகண்டு – தேமாங்காய்
இதற்கு அடுத்த சீராக, மூன்றாம் அடியின் முதற்சீர் ‘வியந்து’ வருகிறது.
எனவே,
தைகண்டு வியந்து – காய் முன் நிரை வருகிறது.
வெண்பாவில் காய் முன் நேர் அல்லவா வரவேண்டும்.
அதைத்தான் குறித்திருந்தேன்.
வெண்பாவில் முன்னால் உள்ள அடியின் கடைசிச் சீருக்கும் அடுத்த அடியின் முதல் சீருக்கும் தளை சரியாக அமைய வேண்டும். இதை நினைவில் கொள்க. புரியவில்லையானால் தயங்காது மீண்டும் கேளுங்கள். நன்றி


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Feb 16, 2011 10:12 pm

29. நேரிசைச் சிந்தியல் வெண்பா

பயிலுநர்க்கோர் சிறப்புச்செய்தி :
தமிழ் யாப்பு வகைகளில் வெண்பா வகைகளை எழுதத் தேர்ந்து விட்டால், பிறகு மற்ற எல்லாப் பா, பாவின வகைகளையும் எழுதுவது எளிதாகும்.
பா வகைகளில், வெண்பா எழுதுவதில் தேர்ச்சி பெறல் மிக முகன்மையானதாகும்.
வெண்பாவில் முன்னுள்ள அடியின் ஈற்றுச்சீருக்கும் அடுத்த அடியின் முதற் சீருக்கும் வெண்டளை அமைந்திருக்க வேண்டும். அதாவது, மா முன் நிரை, விளம் முன் நேர், காய் முன் நேர் வரவேண்டும்.
இனி, அடுத்தவகை வெண்பா எழுதுவோம்.

நேரிசைச் சிந்தியல் வெண்பா
1. இது மூன்றடி கொண்ட பாடல்.
2. ஈற்றடி முச்சீராய் ஏனைய அடிகள் நாற்சீராய் இருக்கவேண்டும்.
3. ஈரசைச்சீரும் காய்ச்சீரும் மட்டுமே வரவேண்டும். (அதாவது, மா முன் நிரை, விளம் முன் நேர், காய் முன் நேர் வரவேண்டும்.)
4. நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாட்டால் முடிய வேண்டும்.
5. மூன்றடிகளும் ஓரெதுகையிலும் வரலாம்; அல்லது முதலிரண்டடிகள் ஓரெதுகையிலும் மூன்றாமடி வேறெதுகையிலும் வரலாம்.
6. முதல் இரண்டடியின் எதுகைக்கேற்ற தனிச்சொல் இரண்டாமடியின் இறுதிச்சீராக அமையவேண்டும்.
7. முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை அமைதல் சிறப்பு.

எடுத்துக்காட்டு :
தலைக்கொழுத்த சாதி தவிடுபொடி யாகும்
கொலையுங் கலவரமுங் குன்றும் – பலரும்
கலப்புமணத் தாலிணையுங் கால். – அ.ந.


இன்னொன்று:
எல்லா அறிவும் இனிதேற்கும் நந்தமிழிற்
கல்லாப் படிப்பால் கடைநின்றோம் – செல்லாதீர்
ஆங்கிலக் கல்விக் கினி. - த.ந.

எழுதத் தொடங்குங்கள்.
ஐயமிருப்பின் தயங்காது கேளுங்கள்.


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Feb 19, 2011 6:57 am

அன்புடன் ஆசிரியர் தமிழநம்பி ஐயா அவர்கட்கு!
எனது பயிற்சிக்கானவை தருகிறேன் இங்கே!

(கடவுளே)
அலைகடலும் மாபுயலும் அள்ளியதாய் தெய்வமே
விலையின்றி உயிர்கொன்ற வேந்தன்-- தலைகொண்ட
வேதனையில் வெந்திடவே செய்

பழிகொண்ட நாடும் பழந்தமிழர் வாழ்வும்
விழிகொண்ட நீரும் விடிந்து -வழிகண்டு
மொழிவளர்ந் துய்திடல் என்று?

கோவிலில் சிலையாய் குறுஞ்சோலை மாதருவாய்
ஒவியமென் றாகியே நின்றாய் - ஆவிபோய்
நாமலறக் கல்லான தேன்


(சிலர்)

இருகண் இழந்துவிழி இல்லாமை போலும்
அருகில் விடிவிருந்தும் அறியாது- -மருண்டு
பகைவர்தம் கால்பணிந் தார்

நாளையொரு வாழ்வுவரும் நன்றே விடியுமென
வேளைதனை வீணாக்கி விட்டாயோ - காளையென
வேகங்கொள் வெல்லவழி காண்

அன்புடன் கிரிகாசன்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Feb 19, 2011 4:25 pm

ஐயா,

மூன்றாவது வெண்பா இரண்டாவது அடியின் மோனைக்காக ஒரு சிறு திருத்தம்

கோவிற் சிலையாய் குறுஞ்சோலை மாதருவாய்
ஒவியமாய் இறையே உறைந்தாய் - ஆவிபோய்
நாமழியக் காவாத தேன்

நாளையொரு வாழ்வுவரும் நன்றே விடியுமென
வேளைதனில் தூங்கி விழிமூடா - காளையென
வேகங்கொள் வெல்லவழி காண்


அன்புடன்
கிரிகாசன்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sat Feb 19, 2011 11:50 pm

வணக்கம் அய்யா. தங்கள் நலன் காக்க!.

என் ஐயம் தீர்த்தமைக்கு நன்றி.

மீண்டும் தவறுகள் திருத்தியுள்ளேன். சரியாக உள்ளனவா என அறியத் தருக!

இலக்கணத்தில் இல்லைபிழை என்றெண்ணி யேதான்
சிலநொடி நேரத்திலென் சிந்தைக்கு எட்டியதை
ஏட்டினில் தந்தேனே யான்.

பனையோலை கேட்டுநான் தீட்டிய பாவின்
வினைதிருத்திச் சீராக்கி ஓதும்வி தம்கண்டு
தீரா வியப்பினிலே நான்

நன்றி. மிக்க அன்புடன்
யாதுமானவள்



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sun Feb 20, 2011 12:12 am

வணக்கம் அய்யா,

இன்னிசை சிந்தியல் வெண்பா வில் எதுகையின் அவசியம் இல்லை.(மூன்று அடிகளும் வேவேறு எதுகை கொள்ளலாம் என குறிப்பிட்டிருந்தீர்கள்) ஆனால் நேரிசை வெண்பாவில் முதல் இரண்டு அடிகளின் எதுகை அவசியம். அப்படித்தானே அய்யா?

மற்றபடி, இரு வெண்பாக்களுக்கும் ஒரே மாதிரியான கட்டளைகள் தான் அல்லவா? (மா முன் நிறை, காய் முன் நேர், விளம் முன் நேர்)

இதோ முயற்சி செய்கிறேன்.



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sun Feb 20, 2011 1:04 am

வணக்கம் அய்யா ,
நேரிசை வெண்பாவில் என் முயற்சிகள் :

பொழுது புலரவில்லை பூக்கள் மலரவில்லை
அழுதகண் காயுமுன் வெடித்தது - ஈழத்தில்
காடையன் எறிந்த குண்டு.


அன்புடன்
யாதுமானவள்



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Sun Feb 20, 2011 6:13 pm

அன்பார்ந்த கிரி,
வணக்கம். உடனே ஐந்து பாடல்கள் எழுதியமைக்குப் பாராட்டு.
வெண்பா எழுதுவதில் தேர்ச்சி பெற்றுவிட்டால், தமிழ் யாப்பில் வேறு எந்தப் பாவையும் பாவினத்தையும் எளிதாக எழுத முடியும்.
கவலற்க.
குறிப்பிட்டுள்ள இப் பிழைகளைத் திருத்தி எழுதினால், மீண்டும் இப்படிப்பட்ட பிழைகளைச் செய்யமாட்டோம்.
எங்கேனும் ஐயமிருப்பின் தயங்காது கேளுங்கள்.
நீங்களே திருத்தி எழுத இயலும் என்று கருதியே, நான் திருத்தி எழுதவில்லை.
எந்த உதவியானாலும் கேளுங்கள்.
வெண்பாவில் தேர்ச்சி பெறுதல் முகன்மையானதென்பதை நினைவில் கொள்க.
திருத்தி எழுதிக் காட்டுக. நன்றி.
- த.ந.
----------------------------------------------------------

அலைகடலும் மாப்புயலும் அள்ளியதாய் தெய்வமே
விலையின்றி உயிர்கொன்ற வேந்தன்-- தலைகொண்ட
வேதனையில் வெந்திடவே செய்.

தெய்வமே விலையின்றி – விளம் முன் நிரை உள்ளது.
விலையின்றி உயிர்கொன்ற – காய் முன் நிரை உள்ளது.
திருத்திடுக.

பழிகொண்ட நாடும் பழந்தமிழர் வாழ்வும்
விழிகொண்ட நீரும் விடிந்து - வழிகண்டு
மொழிவளர்ந் துய்ந்திடல் என்று?

வழிகண்டு மொழிவளர்ந் – காய் முன் நிரை உள்ளது.
திருத்திடுக.


கோவிற் சிலையாய் குறுஞ்சோலை மாமரமாய்
ஓவியமாய் இறையே உறைந்தாய் - ஆவிபோய்
நாமழியக் காவாத தேன்.

ஓவியமாய் இறையே – காய்முன் நிரை உள்ளது.
உறைந்தாய் ஆவிபோய் - மாமுன் நேர் உள்ளது.
திருத்திடுக.


இருகண் இழந்துவிழி இல்லாமை போலும்
அருகில் விடிவிருந்தும் அறியாது- -மருண்டு
பகைவர்தம் கால்பணிந் தார்

விடிவிருந்தும் அறியாது – காய் முன் நிரை உள்ளது.
அறியாது மருண்டு – காய் முன் நிரை வந்துள்ளது.
திருத்திடுக.


நாளையொரு வாழ்வுவரும் நன்றே விடியுமென
வேளைதனில் தூங்கி விழிமூடா - காளையென
வேகங்கொள் வெல்லவழி காண்.

அருமை! சரியாக உள்ளது. கருத்தும் உணர்வும் உடைய பாடல். பாராட்டு.






avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Sun Feb 20, 2011 6:20 pm

யாதுமானவள் wrote:வணக்கம் அய்யா. தங்கள் நலன் காக்க!.

என் ஐயம் தீர்த்தமைக்கு நன்றி.

மீண்டும் தவறுகள் திருத்தியுள்ளேன். சரியாக உள்ளனவா என அறியத் தருக!

இலக்கணத்தில் இல்லைபிழை என்றெண்ணி யேதான்
சிலநொடி நேரத்தில் சிந்தைக்கே எட்டியதை
ஏட்டினில் தந்தேனே யான்.

பனையோலை கேட்டுநான் தீட்டிய பாவின்
வினைதிருத்திச் சீராக்கி ஓதும்வி தம்கண்டுத்
தீரா வியப்பினிலே நான்

நன்றி. மிக்க அன்புடன்
யாதுமானவள்
அருமை. சரியாக உள்ளன.

Sponsored content

PostSponsored content



Page 45 of 50 Previous  1 ... 24 ... 44, 45, 46 ... 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக