புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 40 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 40 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 40 Poll_c10 
284 Posts - 45%
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 40 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 40 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 40 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 40 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 40 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 40 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மரபுப் பா பயிலரங்கம் - Page 40 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 40 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 40 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மரபுப் பா பயிலரங்கம் - Page 40 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 40 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 40 Poll_c10 
19 Posts - 3%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 40 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 40 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 40 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மரபுப் பா பயிலரங்கம் - Page 40 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 40 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 40 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மரபுப் பா பயிலரங்கம் - Page 40 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 40 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 40 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 40 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 40 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 40 Poll_c10 
7 Posts - 1%
mruthun
மரபுப் பா பயிலரங்கம் - Page 40 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 40 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 40 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்


   
   

Page 40 of 50 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 45 ... 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sun Jan 30, 2011 1:45 am

மிக்க நன்றி அய்யா,

தமிழ் மீது பற்றுதல் தினம் தினம் கூடுகிறது.

அறியாத முகங்களுக்கு அருந்தமிழ் வளர்த்திடத் தாங்கள் கொண்டிருக்கும் நல்லெண்ணமும்
தமிழ்மேல் தீராக் காதல் கொண்டு தமிழ் பயில வேண்டுமென்ற எங்கள் முயற்சியும்
திண்ணமாக நிறைவேற இம்மாபெரும் ஊடகம் துணையிருப்பது அதிசயமே. என்னே ஒரு விந்தை. அறிவியலின் வளர்ச்சி பிரமிப்பூட்டுகிறது.

தங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்திய தமிழன்னைக்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

அன்புடன்
யாதுமானவள்

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Tue Feb 01, 2011 12:29 am

28. சிந்தியல் வெண்பா

இவ்வகைப் பாடல்களில், வெண்பாவின் பொது இலக்கணம் பின்பற்றப்படும். இன்னிசை வெண்பாக்கள் இரண்டு வகைப்படும்.
ஒன்று இன்னிசைச் சிந்தியல் வெண்பா இன்னொன்று நேரிசைச் சிந்தியல் வெண்பா.

இன்னிசைச் சிந்தியல் வெண்பா

1. இது மூன்றடிப்பாடல்.

2. முதல் அடியிலும் மூன்றாம் அடியிலும் நான்கு சீர்கள் இருக்கவேண்டும். மூன்றாம் அடியில் மூன்றுசீர் மட்டும் இருக்கவேண்டும்.

3. மூன்றாம் அடியின் இறுதிச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாடுகளுள் ஒன்றால் முடிந்திருக்கவேண்டும்.

4. வெண்டளை பெற்றிருக்கவேண்டும். (நினைவுக்கு: மா முன் நிரை, விளம் முன் நேர், காய் முன் நேர்)

5. முதற் சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை அமைவது சிறப்பு.

6. மூன்றடிகளும் ஓர் எதுகை பெற்று வரலாம்; முதலிரண்டடிகளும் ஓர் எதுகையாகவும் மூன்றாமடி வேறு எதுகையாகவும் வரலாம்; மூன்றடிகளும் வெவ்வேறு எதுகை பெற்றும் வரலாம். (எதுகை: இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது)

இவ்வாறு அமைவதே இன்னிசைச் சிந்தியல் வெண்பா.

எடுத்துக்காட்டு
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்
வங்கண் உலகளித்த லான்.
– சிலப்பதிகாரம்.

மூன்றடிகளிலும் ஒரே எதுகை பெற்று வந்துள்ளது.

இன்னொரு எடுத்துக்காட்டு
உணர்வற்றாய்! பீடழிந்தாய்! ஓஒ தமிழா!
வணர்மரமாய் ஆனாய்! வளர்ந்தென் பயனே!
இழிவேந்தி நிற்கின்றாய் இன்று.
– த.ந.

முதலிரண்டடியிலும் ஓர் எதுகையும் மூன்றாமடியில் வேறு எதுகையும் பெற்று வந்துள்ளது.

பிறிதொரு எடுத்துக்காட்டு
பிச்சை எடுத்தே பிழைப்பாரும் மிச்சமின்றி
உண்ட உணவு செரிக்கமருந் துண்பாரும்
உள்ளதடா இந்த உலகு.
– அரங்க. நடராசனார்


உங்களுக்கு விருப்பமான கருத்தமைந்த இன்னிசைச் சிந்தியல் வெண்பா ஒன்றை ஏதேனும் ஒருவகை எதுகையுடன் எழுதுக.
ஐயமிருப்பின் தயங்காது வினவுக.
எழுதத் தொடங்குக.




யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Tue Feb 01, 2011 11:09 am

வணக்கம் அய்யா,
தங்கள் நலன் காத்திடுவீர்!

சிந்தியல் வெண்பாவில் எனது முயற்சியைக் கொடுத்துள்ளேன். தவறுகள் திருத்துக.

ஒன்று :
கற்றைகற்றை யாயெதிலும் கையூட்டு பெற்றுதினம்
முற்றும் நமைமூடர் ஆக்கியேதான் ஆள்கின்றான்
நல்லதொன்றும் எண்ணா தவன்.


இரண்டு:
உட்புறத்து நோக்கமெல்லாம் ஊசியபாழ் எண்ணமுடன்
கட்டுகிறான் நீட்டுகிறான் காவியுடை தீர்த்தநீர்
வெட்கம் எனஒன்று இல்.



அன்புடன்
யாதுமானவள்

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Tue Feb 01, 2011 10:14 pm

ஒன்று :
கற்றைகற்றை யாயெதிலும் கையூட்டுப் பெற்றுதினம்
முற்றும் நமைமூடர் ஆக்கியே ஆள்கின்றான்
நல்லதொன்றும் எண்ணா தவன்
.


இரண்டு:
உட்புறத்து நோக்கமெல்லாம் ஊசியபாழ் எண்ணமுடன்
கட்டுகிறான் நீட்டுகிறான் காவியுடை தீர்த்தநீர்
வெட்கம் எனஒன்று இல்
.


இரண்டு பாடல்களும் சரி.
எனஒன்று இல் – இதைச் சேர்த்தெழுதினால்
எனவொன் றில் என்றாகும்.
எனவொன் றில் – புளிமா நேர் - மா முன் நேர் ஆக வருகிறது.
வெண்டளை அமைய, மா முன் நிரையாக அமைக்கவேண்டும்.
அதாவது, மலர் அல்லது பிறப்பு என்ற வாய்பாட்டில் ஓரசைச்சீர்
வருமாறு அமையுங்கள்.
நான் கூறுவது புரியவில்லை என்றால் மீண்டும் கேளுங்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்.


avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Feb 01, 2011 10:32 pm

வணக்கம் ஐயா
செந்தா மரைத்திருவே சேர்கைலைப் பெண்மானே
எந்த னினமீழத் திறந்திடுதல் காண்கிலையோ
வந்திங்கு வாய்திறந்தா லென்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Tue Feb 01, 2011 10:42 pm

நந்திதா, வணக்கம். வருக!

செந்தா மரைத்திருவே சேர்கைலைப் பெண்மானே
எந்த னினமீழத் திறந்திடுதல் காண்கிலையோ
வந்திங்கு வாய்திறந்தா லென்


னினமீழத் திறந்திடுதல் – காய் முன் நிரை வருகிறது.
கலித்தளையாகிவிடும்.

காய் முன் நேர் வரும்படி அமைத்து எழுதிக் காட்டுக.


avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Feb 01, 2011 10:49 pm

வணக்கம் ஐயா




செந்தா மரைத்திருவே சேர்கைலைப் பெண்மானே


எந்த னினமீழத் தேங்கிடுதல் காண்கிலையோ


வந்திங்கு வாய்திறந்தா லென்

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Tue Feb 01, 2011 11:15 pm

nandhtiha wrote:வணக்கம் ஐயா




செந்தா மரைத்திருவே சேர்கைலைப் பெண்மானே
எந்த னினமீழத் தேங்கிடுதல் காண்கிலையோ
வந்திங்கு வாய்திறந்தா லென்

அருமை! தொடர்ந்து எழுதுக!

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Feb 01, 2011 11:30 pm

மிக்க
நன்றி ஐயா



குறுமுனியும் காப்பியனும் குன்றெறிந்த செவ்வேள்
முறுவலோ டென்முன்னே நின்றனரோ என்னெபேன்
நறுந்தமிழ நம்பியை நான்


என்றும்
மாறா அன்புடன்



நந்திதா

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Wed Feb 02, 2011 12:04 am

வணக்கம் அய்யா,
தங்கள் நலன் காக்க!

திருத்தமும் அதைத் தொடர்ந்து இன்னொரு முயற்சியும் கொடுத்துள்ளேன்

உட்புறத்து நோக்கமெல்லாம் ஊசியபாழ் எண்ணமுடன்
கட்டுகிறான் நீட்டுகிறான் காவியுடை தீர்த்தநீர்
வெட்கந் தனைக்களைந்தான் பார்.
----------------
பகைவிலக்கி ஓர்குலமாய் பாரிலுள்ளோர் வாழ்ந்திட
வகைசெய்து பாங்குடனே வேண்டும்வளம் பெற்றிட
நகையுடனே நற்காரியம் செய்.


அன்புடன்
யாதுமானவள்

Sponsored content

PostSponsored content



Page 40 of 50 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 45 ... 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக