புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10 
156 Posts - 79%
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10 
1 Post - 1%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10 
1 Post - 1%
Pampu
மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10 
321 Posts - 78%
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10 
8 Posts - 2%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10 
3 Posts - 1%
Barushree
மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 31 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்

Page 31 of 50 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 40 ... 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :

  • எழுத்து

தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.

அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.

உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.

எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.

குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.

புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.

எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.

இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.

அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Nov 03, 2010 8:15 am

kirikasan wrote:ஐயா,
ஒன்றுதான் எழுதினேன்.

சிறுவய தெழில்சேர் சித்திரக் கனவாம் - எண்ணிடவே
உறுசுகம் நினைவெழ உளமதில் மகிழ்வே - எண்ணிடவே
பெறுமுயர் வயதினில் பெருகும் ஏக்கம் - எண்ணிடவே

அன்புடன்
கிரிகாசன்
கிரி, உங்கள் பாடல் சரியாக இருக்கிறது. பாராட்டு. அடுத்து, குறள் வெண்பா எழுத இருக்கின்றோம். அதற்குமுன், பா, பா வகைகள் பற்றிய சுருக்கவிளக்கமான குறிப்புகள். தொடர்ந்து வருக.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Nov 03, 2010 12:03 pm

அன்பின் தமிழநம்பி ஐயா,

கவிபுனை நினைவது கனவது மனதின் - இன்பமதே
புவிசுழ லுறவும் போம்பக லிரவும் =இன்பமதே
தவிமன துடன்தமிழ் தரும்வரை பொறுப்போம் -இன்பமதே

என்றும் மன அமைதியுடன் காத்திருப்போம். கவலை வேண்டாம். அடுத்தவகை கவிதைக்காக மகிழ்வுடன் பார்த்திருக்கிறோம்

அன்புடன் கிரிகாசன்

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Mon Nov 08, 2010 11:53 pm

கவிபுனை நினைவது கனவது மனத்தின் - இன்பமதே
புவிசுழ லுறவும் போம்பக லிரவும் -இன்பமதே
தவிமனத் துடன்தமிழ் தரும்வரை பொறுப்போம் -இன்பமதே அருமை.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Tue Nov 09, 2010 12:03 am

25. வெண்பா

தமிழ் யாப்பில் நான்குவகைப் பாக்கள் உண்டு.
அவை:
1. வெண்பா
2. ஆசிரியப்பா
3. கலிப்பா
4. வஞ்சிப்பா
சீர், தளை, அடி ஆகிய மூன்று உறுப்புகளைக்கொண்டே பா வேறுபாடு அமைகிறது.
ஓசை : பழந்தமிழ்ப் புலவர்கள் ஓசை வேறுபாடு கொண்டே பா வேறுபாடு கண்டனர்.

முதலில் வெண்பா பற்றி அறிவோம். செப்பலோசை என்னும் ஓசையே வெணபாவிற்கு உரியதாகும். இருவர் உரையாடல் போன்ற ஓசையே செப்பலோசையாகும்.
வெண்பாவின் பொது இலக்கணம்:
1. ஈற்றடி (கடைசி அடி) தவிர மற்ற அடிகள் நான்கு சீர்கள் கொண்டிருக்கும்
2. ஈற்றடி மூன்று சீர் கொண்ட அடியாக இருக்கும். ஈற்றடியின் மூன்றாம் (இறுதிச்) சீர், ஓரசைச் சீர் ( நேர், நிரை, நேர்பு, நிரைபு அல்லது நாள், மலர், காசு, பிறப்பு) ஆக அமைந்து வரும்.
3. ஈரசைச்சீர் நான்கும் (தேமா, புளிமா, கருவிளம், கூவிளம்) காய்ச்சீர் (தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய்) மட்டும் வரும்.
4. வெண்பாவில் கனிச்சீர் நான்கும் வரக்கூடாது.
5. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டுமே வரவேண்டும். வேறு தளைகள் வரக்கூடாது.

வெண்பாவின் வகைகள்:
1. குறள் வெண்பா.
2. நேரிசை வெண்பா
3. இன்னிசை வெண்பா
4. நேரிசைச் சிந்தியல் வெண்பா
5. இன்னிசைச் சிந்தியல் வெண்பா
6. பஃறொடை வெண்பா
7. கலி வெண்பா
------------------------------------------------------------
1. முதலில் குறள் வெண்பாவைப் பற்றித் தெரிந்துகொண்டு எழுதப் பயில்வோம்.
குறள் வெண்பா-
1. இரண்டடி கொண்ட பாடல்
2. முதலடி நாற்சீர்
3. ஈற்றடி (இரண்டாம் அடி) முச்சீர். (ஈற்றுச்சீர் ஓரசைச் சீர்.)
4. ஈரச்சைச்சீரும் காய்ச்சீரும் வரவேண்டும்.
5. இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையம் கொண்டிருக்க வேண்டும். ( அதாவது, மாமுன் நிரை, விளம் முன் நேர், காய் முன் நேர் வருமாறு எழுதவேண்டும்) – இவ்வாறாக எழுதின் செப்பலோசை அமையும்.
6. ஈற்றுச்சீர் ஓரசைச் சீராக, நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாடுகளில் ஒன்றால் முடிந்திருக்க வேண்டும்.
7. எதுகை மோனை அமைய எழுதுதல் சிறப்பு

எடுத்துக்காட்டுப் பாடலைப் படித்தால் திகைப்பு நீங்கும்.

அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு.

இக் குறள் வெண்பாவில், இரண்டடிகள் உள்ளன. முதலடி நாற்சீரும் இரண்டாமடி மூன்று சீரும் பெற்றுள்ளன.
வெழுத்தெல்லா எனபது மூன்றசைக் காய்ச்சீர்; மற்ற சீர்கள் ஈரசைச் சீர்கள். ஈற்றுச்சீர்
யுலகு – நிரைபு – ஓரசைச்சீர் – பிறப்பு என்ற வாய்பாட்டில் உள்ளது.
அகர, பகவன் – எதுகை அமைந்துள்ளது.

(அகர முதல – மா முன் நிரை – இயற்சீர் வெண்டளை
முதல வெழுத்தெல்லா – மா முன் நிரை – இயற்சீர் வெண்டளை
வெழுத்தெல்லா மாதி – காய் முன் நேர் – வெண்சீர் வெண்டளை
மாதி பகவன் – மா முன் நிரை – இயற்சீர் வெண்டளை
பகவன் முதற்றே – மா முன் நிரை – இயற்சீர் வெண்டளை
முதற்றே யுலகு – மா முன் நிரைபு – இயற்சீர் வெண்டளை
இவ்வாறு வெண்டளைகள் மட்டுமே அமைந்துள்ளன.)

தயங்காது எழுதுங்கள் இரண்டடி குறள் வெண்பா. தவறு நேர்ந்தால் திருத்திக்கொண்டு மீண்டும் எழுதுவோம் தவறு நேராமல்!

இதோ, இன்னொரு குறள் வெண்பா:

குன்றா நலவளம் கூடிட வாழ்கவே
பொன்றா உலகிற் பொலிந்து.

உங்களால் எளிதில் எழுத முடியும், எழுதுக!
ஐயமிருப்பின், தயங்காது கேளுங்கள்.

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Tue Nov 09, 2010 11:09 pm

வணக்கம் அய்யா,

ஈரடி வெண்பா முயன்றுள்ளேன். சரியாக உள்ளதா என அறியத்தருவீர்.

அய்யனவன் வள்ளுவனின் அற்புத இரண்டடியில்
உய்யும் வழியுண்டு காண்.

செந்தமிழைக் காக்கின்ற நற்சிந்தை தனைவைத்து
முந்திப் பயின்றிடுக யாப்பு.

வேண்டுகின்ற நற்செயலை உற்றளவு செய்திட்டே
தீண்டிடுக மக்கள் மனது.

அன்புடன்
யாதுமானவள்

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Nov 10, 2010 10:49 am

Yaadhumanaval wrote:வணக்கம் அய்யா,

ஈரடி வெண்பா முயன்றுள்ளேன். சரியாக உள்ளதா என அறியத்தருவீர்.

அய்யனவன் வள்ளுவனின் அற்புத இரண்டடியில்
உய்யும் வழியுண்டு காண்.

செந்தமிழைக் காக்கின்ற நற்சிந்தை ஏற்றிங்கே
முந்திப் பயின்றிடுக யாப்பு.

வேண்டுகின்ற நற்செயலை உற்றளவு செய்திட்டே
தீண்டிடுக மக்கள் மனம்.

அன்புடன்
யாதுமானவள்
அருமை. மூன்று குறள்களும் சரியே. (௨,௩ இல் சிறு திருத்தம் காண்க)

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Nov 10, 2010 11:21 am

மகிழ்ச்சி

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Nov 10, 2010 11:58 am

ஐயா , எனது முயற்சி இதோ!

‎கனவும் நினைவதில் கற்பனையும் கொண்டே
தினமும் விடியும் பொழுது

திங்கள் தொடங்கித் தினமோர் பொழுதோடும்
எங்கள் விடிவுநாள் என்று

வான்பொழிய ஆறும் மணல்கொள் அனலன்பு
தான்இழைய ஆறும் சினம்

அன்புடன் கிரிகாசன்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Nov 10, 2010 1:21 pm

அன்புடன் ஐயா
மூன்றாவது குறள் வெண்பாவில் பிழையிருக்குமோ எனவஞ்சி
இதை தருகிறேன். பிழை இருப்பின் களைந்திட உதவுங்கள்.
நன்றி!

வானத்து நீர்வைய வெம்மை களைந்தன்ன
ஊனத் துயராற்று மன்பு.

கிரிகாசன்

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Nov 10, 2010 3:27 pm

kirikasan wrote:ஐயா , எனது முயற்சி இதோ!

‎கனவும் நினைவதில் கற்பனையும் கொண்டே
தினமும் விடியும் பொழுது

திங்கள் தொடங்கித் தினமோர் பொழுதோடும்
எங்கள் விடிவுநாள் என்று

வான்பொழிய ஆறும் மணல்கொள் அனலன்பு
தான்இழைய ஆறும் சினம்

அன்புடன் கிரிகாசன்
அருமை. மூன்றும் சரியாக எழுதியிருக்கின்றீர்கள். மூன்றாம் குறள் சிறப்பு.

Sponsored content

PostSponsored content

Page 31 of 50 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 40 ... 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக