ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

Top posting users this week
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 29 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 29 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 29 Poll_c10 
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 29 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 29 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 29 Poll_c10 
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 29 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 29 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 29 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்

+33
படுகை
ராஜா
Thanjaavooraan
V.Annasamy
கலைவேந்தன்
பிளேடு பக்கிரி
தமிழ்
ரிபாஸ்
kirikasan
குணமதி
balakarthik
யாதுமானவள்
முத்தியாலு மாதேஷ்
மனோஜ்
ஹாசிம்
கா.ந.கல்யாணசுந்தரம்
puthuvaipraba
நிஷா
mohan-தாஸ்
பாலாஜி
Raja2009
prabumurugan
தண்டாயுதபாணி
srinihasan
வழிப்போக்கன்
நிலாசகி
nandhtiha
சிவா
அப்புகுட்டி
சரவணன்
Aathira
kalaimoon70
தமிழநம்பி
37 posters

Page 29 of 50 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 39 ... 50  Next

Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 29 Empty மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


Last edited by தமிழநம்பி on Wed Mar 03, 2010 11:27 pm; edited 1 time in total
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down


மரபுப் பா பயிலரங்கம் - Page 29 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Mon Oct 11, 2010 9:29 am

யாதுமானவர்க்கு,

தம்மொழித மிழ்மீது மோகமிக கொண்டவன் - எம்மரசன்
தம்குலமக் கள்தனைஇரு கண்ணெனவே காத்தவன்தான் - எம்மரசன்
எம்குலத்து வேந்தர்களில் ஈடில்லா ஓர்தோன்றல்-எம்மரசன்
எம்குலமே கேளீரது யாருமல்ல இராவணன்தான் – எம்மரசன்

உங்கள் பாடல் பெரும்பான்மையும் சரியாகவே உள்ளது.
கள்தனைஇரு – கூவிளங்கனி ஆகும். கனிச்சீர் வந்தால் வெண்டளை அமையாதன்றோ?
இயன்றவரை சொற்களைப் பிரிக்காமல் (வகையுளி தவிர்த்து) எழுதுதல் சிறப்பு.

உங்கள் பாடலைக் கீழே பாருங்கள்.
நீங்கள் விரும்பும் வகையில் வேறு சொற்களிலும் திருத்தலாம்.

தம்மொழி யாம்தமிழ்த் தாய்ப்பற்று மிக்கவன் - எம்மரசன்
தம்குல மக்கள் தமைஇரு கண்ணெனக் காத்தவன் - எம்மரசன்
எம்குல வேந்தரில் ஈடில்லா ஓர்தோன்றல்-எம்மரசன்
எம்குலக் கேளிர் இராவணன் ஆவான் – எம்மரசன்

தொடர்ந்து எழுதுக.


Last edited by தமிழநம்பி on Mon Oct 11, 2010 11:01 am; edited 2 times in total
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 29 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Mon Oct 11, 2010 9:38 am

அன்பார்ந்த கிரி மற்றும் அனைவர்க்கும், நாம் எழுதும் இவ்வகைப் பாடலில், நான்காம் சீருக்கும் தனிச்சொல்லுக்கும் இடையிலும்கூட வெண்டளை வருமாறு அமைக்க வேண்டும். தனிச்சொல்லுக்கும் அடுத்த வரியின் முதல் சீருக்கும் இடையே வெண்டளை அமைய வேண்டிய கட்டாய மில்லை. இவற்றைக் கவனத்தில் கொள்க. இனி, அடுத்தவகைப் பாடல் எழுதப் பயில்வோம்.
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 29 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Mon Oct 11, 2010 10:39 am

.

24. வெளிமண்டிலம் – 3

அடுத்தவகைப் பாடல்:

1. மூன்றடி கொண்ட வெளிமண்டிலப் பாடல்.
2. மூன்றடிகளிலும் நான்கு சீர்கள் – இறுதியில் மூன்றடிகளிலும் ஒரே தனிச்சொல்.
3. பாடல் முழுமையும் (மா முன் நேர், விளம் முன் நிரை) ஆசிரியத் தளைகள்.
4. மூன்றடிகளிலும் ஓரெதுகை.
5. இயன்றவரை முதற் சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை.

இவ்வாறமைந்த பாடலை ஆசிரியத்தளையால் வந்த மூன்றடி வெளிமண்டிலம் என்பர்.

எடுத்துக்காட்டு:

நன்றே செய்யின் நல்லதே விளையும் – என்றறிக
நன்றல் லாதவை நலிக்கும் நம்மை – என்றறிக
வென்றே நிற்போம் வீறுயர் செயலால் - என்றறிக.


- புதுவை அரங்க.நடராசன் ஐயா.

இப்பாடலில் தனிச்சொல் தவிர்த்த எல்லாச் சீரும் ஈரசைச் சீர்கள் என்பதை அறிக. தனிச்சொல், ஈரசைச் சீராகவோ மூவசைச் சீராகவோ இருக்கலாம்.

இன்னொரு எடுத்துக்காட்டு :

தன்னலம் முதன்மையாய்த் தகவறத் தெரிந்திவன் – இனங்கொன்றான்
தன்னினம் அழிக்கத் தான்துணை இருந்திவன் – இனங்கொன்றான்
என்னினும் இனமெழும்! இழிபழி இவனுறும்! – இனங்கொன்றான்!


இவ்வாறான பாடல் ஒன்றை விரும்பிய பொருளில் எழுதுக. தருக.


avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 29 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by kirikasan Mon Oct 11, 2010 1:34 pm

தமிழநம்பி ஐயா அவர்களுக்கு,
என்னுடைய பயிற்சியை தருகிறேன்.


நீருண் மேகமும் நிறைந்திடப் பொழியும் - மீளவரும்
ஊரும் வான்நிலா ஒளியெடுத் தொளிர்ந்திடும் - மீளவரும்
வேருண் தெங்கதும் விளைத்திடும் இளநீர் - மீளவரும்

ஊரதும் எரிந்திட உயிர்களைக் கொடுத்தோம் - ஏதுபயன்
போரில் செம்புனல் புழுதியில் இறைத்தோம் - ஏதுபயன்
தீரமும் தியாகமும் தருமமும் இழைத்தோம் - ஏதுபயன்

அன்புடன்
கிரிகாசன்

பிற்சேர்க்கை:
(இங்கே மீளவரும் என்பதை எடுத்ததை மீண்டும்தரும் என்றபொருள்பட எழுதினேன்.சரியான சொல்லென எண்ணுகிறேன்)


Last edited by kirikasan on Mon Oct 11, 2010 1:42 pm; edited 2 times in total (Reason for editing : பிற்சேர்க்கை)
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 29 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Mon Oct 11, 2010 1:58 pm

அருமை, கிரி!
உடனே புரிந்துகொண்டு எழுதியுள்ள இரண்டு மண்டிலங்களும் சரியே.
தொளிர்ந்திடும் – மீளவரும் என்பதில் விளம் முன் நேர் வந்துள்ளதைக் கவனிக்க!
நீங்களே தகுந்தவாறு இதைத் திருத்தலாம்.
பாராட்டுகிறேன்.
கருத்தாழமும் உவமை போலும் அணி நலன்களும் அமைத்து எழுதப் பயிலுங்கள்.
இயன்றவரை அயற்சொற்களைத் தவிர்த்து எழுதினால் பாட்டின் மதிப்புக் கூடும்.
தொடர்ந்து எழுதுக.
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 29 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by kirikasan Mon Oct 11, 2010 3:20 pm

நன்றி ஐயா,

சரியாக தர முடிந்ததில் மகிழ்ச்சி கொண்டேன்.

திருத்தமாக

நீருண் மேகமும் நிறைந்திடப் பொழியும் - மீளவரும்
ஊரும் வான்நிலா ஒளியெடுத் தொளிரும் - மீளவரும்
வேருண் தெங்கதும் விளைத்திடும் இளநீர் - மீளவரும்

இப்படி மாற்றிக் கொள்கிறேன். இன்னமும் பயிற்சி செய்யலாமென எண்ணியுள்ளேன்.

அன்புடன்
கிரிகாசன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 29 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by வழிப்போக்கன் Mon Oct 11, 2010 8:37 pm

கற்றுத்தருவதற்கு மிக்க நன்றி ஐயா!
இது எனது முயற்சி

கண்பாவை காத்திடும் இமைகளும் துடித்திடும் - கணப்போதும்
என்பாவை காணாது தூங்காது கண்களும் -கணப்போதும்
உன்பார்வை இல்லாது கொள்ளாது நிம்மதி -கணப்போதும்
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 29 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Tue Oct 12, 2010 4:45 pm

வழிப்போக்கன் wrote:கற்றுத்தருவதற்கு மிக்க நன்றி ஐயா!
இது எனது முயற்சி

கண்பாவை காத்திடும் இமைகளும் துடித்திடும் - கணப்போதும்
என்பாவை காணாது தூங்காது கண்களும் -கணப்போதும்
உன்பார்வை இல்லாது கொள்ளாது நிம்மதி -கணப்போதும்

வழிப்போக்கனார்க்கு,
உடனே புரிந்துகொண்டு எழுதியதற்குப் பாராட்டு.
நாம் இப்போது எழுதும் இவ்வகைப் பாடலில், மா முன் நேர், விளம் முன் நிரை வருதல் வேண்டும்.
மூன்று அடிகளிலும் முதல் இரண்டு சீர்கள் காய் முன் நேர் –ஆக அமைந்துள்ளதைக் காண்க.
வேறு இடங்களிலும் காய்ச்சீர்கள் உள.
நீங்களே திருத்தி எழுதிக் காட்டுங்கள்.
உங்களால் முடியும். உதவி தேவையென்றால் தயங்காது கேட்க.
தொடர்ந்து எழுதுக.


avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 29 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by வழிப்போக்கன் Tue Oct 12, 2010 10:29 pm

தமிழநம்பி wrote:
வழிப்போக்கன் wrote:கற்றுத்தருவதற்கு மிக்க நன்றி ஐயா!
இது எனது முயற்சி

கண்பாவை காத்திடும் இமைகளும் துடித்திடும் - கணப்போதும்
என்பாவை காணாது தூங்காது கண்களும் -கணப்போதும்
உன்பார்வை இல்லாது கொள்ளாது நிம்மதி -கணப்போதும்

வழிப்போக்கனார்க்கு,
உடனே புரிந்துகொண்டு எழுதியதற்குப் பாராட்டு.
நாம் இப்போது எழுதும் இவ்வகைப் பாடலில், மா முன் நேர், விளம் முன் நிரை வருதல் வேண்டும்.
மூன்று அடிகளிலும் முதல் இரண்டு சீர்கள் காய் முன் நேர் –ஆக அமைந்துள்ளதைக் காண்க.
வேறு இடங்களிலும் காய்ச்சீர்கள் உள.
நீங்களே திருத்தி எழுதிக் காட்டுங்கள்.
உங்களால் முடியும். உதவி தேவையென்றால் தயங்காது கேட்க.
தொடர்ந்து எழுதுக.

நன்றி ஐயா! ஆசிரியத் தளைகள் என்பதனை கவனத்தில் கொள்கின்றேன்,

இப்போது சரியாக முயற்சித்துள்ளேன் என நினைக்கின்றேன், தவறாயின் சுட்டிட மகிழ்வேன்.

போர்வை போர்த்திடும் முகிலுடன் மயங்கும் - வெண்ணிலாவே!
ஊர்போய்ச் சேர்ந்திட வழித்துணை வருமென் - வெண்ணிலாவே!
பால்போல் வெண்மையாய் படைத்தவன் உனையார்- வெண்ணிலாவே!
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 29 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி Wed Oct 13, 2010 9:04 am

போர்வை போர்த்திடும் முகிலுடன் மயங்கும் - வெண்ணிலாவே!
ஊர்போய்ச் சேர்ந்திட வழித்துணை வருமென் - வெண்ணிலாவே!
பால்போல் வெண்மையாய்ப் படைத்தவன் உனையார் – வெண்ணிலாவே!


சரியாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டு.
தொடர்ந்து எழுதுக.
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 29 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 29 of 50 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 39 ... 50  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum