புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 14 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 14 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 14 I_vote_rcap 
6 Posts - 75%
Guna.D
மரபுப் பா பயிலரங்கம் - Page 14 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 14 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 14 I_vote_rcap 
1 Post - 13%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 14 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 14 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 14 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 14 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 14 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 14 I_vote_rcap 
171 Posts - 76%
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 14 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 14 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 14 I_vote_rcap 
27 Posts - 12%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 14 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 14 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 14 I_vote_rcap 
10 Posts - 4%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 14 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 14 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 14 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மரபுப் பா பயிலரங்கம் - Page 14 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 14 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 14 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
மரபுப் பா பயிலரங்கம் - Page 14 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 14 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 14 I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மரபுப் பா பயிலரங்கம் - Page 14 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 14 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 14 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
மரபுப் பா பயிலரங்கம் - Page 14 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 14 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 14 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
மரபுப் பா பயிலரங்கம் - Page 14 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 14 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 14 I_vote_rcap 
2 Posts - 1%
sram_1977
மரபுப் பா பயிலரங்கம் - Page 14 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 14 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 14 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்


   
   

Page 14 of 50 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 32 ... 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Mon Jun 14, 2010 9:57 pm

சிவா wrote:வெண்டாழிசை பற்றி நான் படித்த சில பாடல்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்!

மூன்றடி யாயீற் றடிமுச் சீராய்
வருநவு மொருபொருண் மேன்மூன் றடுக்கி
வருநவும் வெள்ளொத் தாழிசை யாகும்.


நண்பி தென்று தீய சொல்லார்
முன்பு நின்று முனிவு செய்யார்
அன்பு வேண்டு பவர்.


அன்னா யறங்கொ னலங்கிளர் சேட்சென்னி
ஒன்னா ருடைபுறம் போல நலங்கவர்ந்து
துன்னான் றுறந்து விடல்.


அன்னா யறங்கொ னலங்கிளர் சேட்சென்னி
ஒன்னா ருடைபுறம் போல நலங்கவர்ந்து
துன்னான் றுறந்து விடல்.

ஏடீ யறங்கொ னலங்கிளர் சேட்சென்னி
கூடா ருடைபுறம் போல நலங்கவர்ந்து
நீடான் றுறந்து விடல்.

சிவா,

இவ்வளவு படித்திருப்பதை அறிந்து பாராட்டுகிறேன்.

ஒரு விளக்கம்:

மூன்றடியாக வந்து ஈற்றடி வெண்பாவைப்போல் முச்சீரடியால் முடிந்தால் அதனை வெண்டாழிசை என்று கூறுவர்.

மூன்று சிந்தியல் வெண்பாக்கள் ஒரு பொருள் மேல் வந்தால் அதனை வெள்ளொத்தாழிசை என்பர்.

மூன்றடி யாயீற் றடிமுச் சீராய்
வருநவு மொருபொருண் மேன்மூன் றடுக்கி
வருநவும் வெள்ளொத் தாழிசை யாகும். -
இது வெள்ளொத்தாழிசை இலக்கணம்.

வெள்ளொத்தாழிசைக்கு எடுத்துக்காட்டாக நீங்கள் தந்துள்ள மூன்று சிந்தியல் வெண்பாக்களும் உள.

இப்போது, நாம் வெண்டாழிசைப் பாடல்களை எழுதப் பயின்று கொண்டிருக்கிறோம்.

வெள்ளொத்தாழிசை பற்றியெல்லாம் படிக்க இருக்கிறோம்... ஈகரை அன்பர்கள் ஆர்வம் காட்டினால்!

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Tue Jun 15, 2010 1:28 am

வணக்கம் ஐய்யா. தங்கள் நலன் அறியத் தருவீர்!

சிலநாட்களாக வேலை அழுத்தச் சூழ்நிலையில் இருந்ததால் கணினியின் பக்கம் கவனம் செலுத்தமுடியாமல் இருந்தது. இன்று வெண்டாழிசை- 2 ல் சிறு முயற்சி செய்துள்ளேன்.என் முயற்சி எப்படி உள்ளதென கூறுங்கள். நன்றி.



என்னில் பண்பு பக்தி உண்டு

என்முன் என்றும் நல்லோர் உண்டு

முன்னோர் சொல்லே நன்று.

***************

அங்கு சென்று வந்தேன் நேற்று


இங்கு வந்து சென்றேன் இன்று

எங்கும் ஒன்றும் இல்லை.

*******

உள்ளம் சொல்லும் உண்மை கண்டு
கள்ளம் வெல்லும் உள்ளம் கொண்டால்
மெள்ள கிட்டும் வெற்றி.


*************

அன்புடன் என்றும்

யாதுமானவள்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Tue Jun 15, 2010 7:08 am

இரண்டாவது கவிதையில் இரண்டாம் அடி இப்படி மாற்றினால் நலமா?

அங்கு சென்று வந்தேன் நேற்று

இங்கும் வந்து பார்த்தேன் இன்று

எங்கும் ஒன்றும் இல்லை.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Fri Jun 18, 2010 10:22 am

Yaadhumanaval wrote:வணக்கம் ஐய்யா. தங்கள் நலன் அறியத் தருவீர்!

சிலநாட்களாக வேலை அழுத்தச் சூழ்நிலையில் இருந்ததால் கணினியின் பக்கம் கவனம் செலுத்தமுடியாமல் இருந்தது. இன்று வெண்டாழிசை- 2 ல் சிறு முயற்சி செய்துள்ளேன்.என் முயற்சி எப்படி உள்ளதென கூறுங்கள். நன்றி.


என்னில் பண்பு பக்தி உண்டு
என்முன் என்றும் நல்லோர் உண்டு
முன்னோர் சொல்லே நன்று

அங்குச் சென்று வந்தேன் நேற்று
இங்கும் வந்து பார்த்தேன் இன்று
எங்கும் காண வில்லை.

உள்ளம் சொல்லும் உண்மை கண்டு
கள்ளம் வெல்லும் உள்ளம் கொண்டால்
மெள்ள கிட்டும் வெற்றி.



அன்புடன் என்றும்
யாதுமானவள்



நன்றி. நான் நலமே.

வெண்தாழிசைப் பாக்கள் மூன்றும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள்!

பாராட்டுகிறேன்.

உங்கள் ஈடுபாட்டுக்கு நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.

இயலுமானால், மற்றவர்களையும் எழுத ஊக்கப்படுத்துங்கள்.

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Jun 18, 2010 4:44 pm

தமிழநம்பி wrote:வழிப்போக்கன் அவர்களுக்கு,

அருமையாக எழுதியிருக்கின்றீர்கள்.

பாராட்டுகிறேன்.

பாடலின் இறுதிச்சீர் போச்சு என்பது கொச்சைச் சொல்லாக அமைந்துவிட்டதால் கீழ்க்காணும் மாற்றம் செய்யலாம்.
நீங்கள் எழுதிய பாடல் இலக்கணப்படி சரியானதே.

வெந்த உள்ளம் நீவும் கைபோல்
தென்றல் போன்ற மென்மைப் பேச்சை
என்றும் உள்ளத் தேந்து.

முதலில் எழுதும் போதே மிகவும் நன்றாக எழுதியதற்கு மறுபடியும் பாராட்டுகிறேன்.
தொடர்ந்து எழுதுக.

மிக்க நன்றி ஐயா!

எங்கும் வாழும் அன்பே மூச்சாய்
துன்பம் தன்னை என்றும் தாங்கும்
நெஞ்சம் ஏற்கும் நட்பு..
!



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மரபுப் பா பயிலரங்கம் - Page 14 Avatar15523pf0
avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Sat Jun 19, 2010 7:17 am

வழிப்போக்கனார்க்கு,

எங்கும் வாழும் அன்பே மூச்சாய்
துன்பம் தன்னை என்றும் தாங்கும்
நெஞ்சம் ஏற்கும் நட்பு..
!

அருமை.

நல்ல கருத்தோடு எழுதிய வெண்டாழிசைப் பா.

பாராட்டுகிறேன்.

தொடர்ந்து எழுதுக.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Tue Jun 22, 2010 12:01 pm

16. வெண்தாழிசை 3

நாம் அடுத்து இன்னொருவகை வெண்தாழிசைப் பாடல் எழுத இருக்கின்றோம்.

இவ்வகையும் மூன்றடிப் பாடலே.

இவ்வகைத் தாழிசையில்...

1. முதல் இரண்டு அடிகள் நான்கு சீர்களாகவும் மூன்றாம் அடி முச்சீராகவும் இருக்கும்.

2. மூன்றாம் அடியின் ஈற்றுச்சீர் (பாடலின் இறுதிச் சீர்) தவிர மற்றவை கருவிள(நிரைநிரை)ச் சீர்கள்.

3. மூன்றடிகளிலும் ஓரெதுகை அமைய வேண்டும்.

4. ஈற்றுச் சீர் ஓரசைச் சீராக நாள் அல்லது காசு என்ற வாய்பாட்டால் முடியவேண்டும்.


எடுத்துக்காட்டு :

இனியநம் தமிழ்மொழி எழில்கெட விடுவதோ
இனிவிழித் திருந்துநாம் இழிவினை அகற்றிட
அணிவகுத் தெழுந்திடு வோம்.

இப்பாடலை எழுதியவர் நெய்வேலி ப.வனிதா.

இன்னொரு எடுத்துக்காட்டு:

தனக்கென வதிந்திடும் தமிழின இரண்டகர்
இனத்தினை அழித்திட எவர்க்குமே துணைசெலல்
சினமுறச் செயுஞ்செய லாம்.

நீங்கள் விரும்பும் கருத்தமைய இவ்வகைத் தாழிசைப் பாடலை
எழுதுக. எளிய முயற்சியுடன் எழுதலாம்; மிகுந்த மகிழ்ச்சி தரும்.


யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Wed Jun 23, 2010 2:22 pm

ஐய்யா தமிழ நம்பி, வணக்கம் தங்கள் நலன் காப்பீர்!

மிகவும் தெளிவாக உள்ளது தாங்கள் பயிற்றுவிக்கும் முறை. இதுகுறித்து யாம் அளவிலா மகிழ்ச்சி அடைகிறோம். எம் நன்றிகளை ஏற்பீர்!

அடுத்த வெண்தாழிசையில் என் முயற்சி.

ஒன்று:


பழுத்தசெந் தமிழ்ப்பாட லெழுதிடும் பாவலரே

எழுத்தெடுத் தெழுதியே இனித்திடும் பாடலுடன்

கழுத்தசைத் துனைவணங் குவேன்.

---------------------

இரண்டு:

பூவும்காயும் குலுங்கிடும் அடர்சோலை மரங்களில்

கூவும்குயி லொடுதோகை மயிலெலாம் காணும்போது

நாவுமித யமுமினித் திடுதே!



அன்பு வணக்கங்களுடன்


யாதுமானவள்

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Jun 23, 2010 5:39 pm

யாதுமானவர்க்கு,

வணக்கம். உங்கள் ஈடுபாட்டிற்கு நன்றி.

இப்பொழுது எழுதும் வெண்தாழிசை -3 வகையில் கடைசிச் சீர்
தவிர மற்ற எல்லாச் சீர்களும் நிரைநிரை-சீர்களாக இருக்க வேண்டும்.

கடைசீச் சீர் (மூன்றாம் அடியின் இறுதிச்சீர்) ஓரசைச் சீர் - நாள் அல்லது காசு என்ற வாய்பாட்டில் வரவேண்டும்.

சில சிறு திருத்தங்கள் செய்ய வேண்டும். நீங்களே செய்துவிடலாம். தயக்கமாயிருப்பின், நான் திருத்துகிறேன்.

-தமிழநம்பி

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Thu Jun 24, 2010 8:19 am

அய்யா காலை வணக்கம்.

அக் கவிதையைத் தாங்கள் திருத்துங்கள். அதுதான் சிறப்பு.

அதே போல் தவ(த்)ற்றிற்குப் பிறகு நான் மாற்றி எழுதியதையும் சரியக உள்ளதா எனக் கூறுங்கள்.

பழுத்தசெந் தமிழ்கவி தைபுணையும் புலவனே
எழுத்தெடுத் தெழுதியே இனித்திடும் கவிதையால்
கழுத்தசைத் துமைவணங் குவம்.

சிறுமல ரொடுகனி குலுங்கிடும் மலையினில்
கருங்குயி லொடுமயி லினங்களும் சுவைத்திட
நறுவிருந் துகளதி லுண்டு.


அன்புடன்
யாதுமானவள்

Sponsored content

PostSponsored content



Page 14 of 50 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 32 ... 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக