ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொபைல் போனிலிருந்து பாதுகாப்பு

+3
அப்புகுட்டி
ரிபாஸ்
சிவா
7 posters

Go down

மொபைல் போனிலிருந்து பாதுகாப்பு Empty மொபைல் போனிலிருந்து பாதுகாப்பு

Post by சிவா Mon Mar 01, 2010 4:27 pm

மொபைல் போன் பயன்படுத்தினால், மூளையில் கேன்சர் வருமா? இந்த கேள்வி இன்னும் விவாதத்திற்கும் ஆராய்ச்சிக்கும் உரிய பொருளாகவே இருந்து வருகிறது. Food and Drug Administration மற்றும் CTIAThe Wireless Association போன்ற அமைப்புகள் புற்று நோய் உருவாக்கும் அளவிற்கு, மொபைல் போனிலிருந்து கதிர்வீச்சு இருப்பதில்லை என்று கூறுகின்றனர். ஆனால் Environmental Working Group (EWG) மற்றும் World Health Organization (WHO) ஆகிய அமைப்புகள் பத்து ஆண்டுகளுக்கு மேல் மொபைல் போன்களைப் பயன்படுத்தினால், மூளை மற்றும் எச்சில் சுரப்பியில் புற்றுநோய்க்கான கட்டிகள் வர வாய்ப்புகள் இருப்பதாக அறிவித்துள்ளன. மேலும் ஒருவரின் அன்றாட நடவடிக்கைகளில் மாற்றங்கள் வரவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளன. குறிப்பாக வளரும் பருவத்தில் உள்ள மூளை உடைய சிறுவர்களிடம் இது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளன. இன்னும் இரண்டு அமைப்புகள் ஒன்றுக்கொன்று மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளன.

எது எப்படி இருந்தாலும், இத்தகைய சூழ்நிலையில் நாம் எப்படி இயங்க வேண்டும். மொபைல் போன்கள் நம் அன்றாட வாழ்க்கையின் ஓர் இன்றியமையாத சாதனமாக மாறிவிட்ட நிலையில், எந்த அளவிற்கு அதன் பாதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று பார்க்கலாமே!

1. குறைவான கதிர்வீச்சு உள்ள போன்: மொபைல் போனில் ஸ்பெசிபிக் அப்சார்ப்ஷன் ரேட் (SARSpecific Absorption Rate) என்று ஒரு அளவைக் கூறுகின்றனர். மொபைல் போன்கள் வாய்ஸ் மற்றும் டெக்ஸ்ட் அனுப்பிப் பெறுவதற்கு ரேடியோ அலைவரிசையை சக்தியைப் பயன்படுத்து கின்றன. இதனை நம் உடல் தசைகள் உறிஞ்சுகின்றன. ஒரு கிலோ தசையில் எந்த அளவு உறிஞ்சப்படும் வகையில் வெளியாகிறதோ அதனை SAR ரேட் என அழைக்கின்றனர். ஒவ்வொரு போனுக்கும் ஒரு SAR ரேட் உண்டு. இந்த SAR ரேட் அதிகமாக இருந்தால், போனின் கதிர்வீச்சும் அதிகமாக இருக்கும்.

உங்கள் போனின் பேட்டரிக்குக் கீழாக, போனுடைய FCC (Federal Communications Commission) எண் தரப்பட்டிருக்கும். FCC யின் இணைய தளம் சென்று, உங்கள் போனின் FCC எண் கொடுத்து அதன் கதிர்வீச்சு மற்றும் அபாய தன்மையினைத் தெரிந்து கொள்ளலாம். EWG.org என்ற தளத்தில், மொபைல் போன்கள் குறித்த தகவல்கள் அடங்கிய டேட்டா பேஸ் உள்ளது. அங்கு சென்று நீங்கள் பயன்படுத்தும் மொபைல் போனின் அபாயத் தன்மையினை அறிந்து கொள்ளலாம். இதன் அடிப்படையில் சாம்சங் நிறுவனத்தின் இம்ப்ரஸன் (Impression) என்னும் போன் தான் மிக மிக குறைவான கதிர்வீச்சு உடையது. மோட்டாரோலாவின் மோட்டோ வியூ 204 மற்றும் டி–மொபைல் மை டச் 3ஜி ஆகியவை அதிக கதிர் வீச்சு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வெளியான மொபைல் போன்களில் மோட்டாரோலா ட்ராய்ட், பிளாக்பெரி போல்ட் 9700, எச்.டி.சி. மேஜிக் மற்றும் எல்.ஜி.சாக்லேட் டச் ஆகியவை அதிகமான கதிர்வீச்சு உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த ஆண்டு போன்களில் மிகவும் குறைவாக கதிர்வீச்சு உள்ளவையாக மோட்டாரோலா ப்ரூட் ஐ680, சாம்சங் மிதிக், பான்டெக்ஸ் இம்பேக்ட் (Motorola Brute i680, Samsung Mythic, and Pantech Impact) அறிவிக்கப்பட்டுள்ளன. (இவற்றில் சில இந்தியாவில் தற்போது விற்பனைக்கு வராமல் இருக்கலாம்) எனவே நீங்கள் வாங்கும் போன் குறைவான கதிர்வீச்சு உள்ளதாக வாங்குவது நலம்.

2. ஹெட்செட் / ஸ்பீக்கர்: போனுடன் ஹெட்செட் அல்லது ஸ்பீக்கரை இணைத்துப் பயன்படுத்துவது பயன் தரும். ஏனென்றால் போனை உடலுடன் ஒட்டி இல்லாமல் வைத்துக் கொள்ளலாம். போனை ஸ்பீக்கர் மோடில் வைத்து இயக்குவதனால், போன் கதிர் வீச்சு தலைக்குச் செல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.

3. அதிகம் கேள், குறைவாகப் பேசு: போனில் நாம் பேசும் போதும், டெக்ஸ்ட் அனுப்பும்போதும் கதிர்வீச்சு அதிகம் இருக்கும். ஆனால் வரும் அழைப்பினைக் கேட்கும் போது இது குறைவாக இருக்கும். எனவே குறைவாகப் பேசுவது நல்லது.

4. பேசும்போது ஏற்படும் கதிர்வீச்சினைக் காட்டிலும், டெக்ஸ்ட் அனுப்புகையில் குறைவான வீச்சே இருக்கும். எனவே அதிகம் டெக்ஸ்ட் பயன்படுத்தவும்.

5. சிக்னல் வீக்? மூடிவிடு: உங்கள் போனுக்கான சிக்னல் குறைவாக இருந்தால், உங்கள் போன் ஒலி அலையைப் பெற முயற்சிக்கையில் கதிர் வீச்சு அதிகமாக இருக்கும். எனவே அப்போது பேச முயற்சிப்பதை நிறுத்தி, பின் சிக்னல் அதிகமாக இருக்கையில் பேசவும்.

6. சிறுவர்களே கவனம்: சிறுவர்களின் உடல் மற்றும் மூளை பெரியவர்களைக் காட்டிலும் அதிகம் மொபைல் கதிர்வீச்சின் பாதிப்புக்குள்ளாகும். எனவே சிறுவர்களை மொபைல் பயன்படுத்து வதிலிருந்து தடுக்கவும்.

7. மூடிகளா? வேண்டாம்: மொபைல் ஆன்டென்னா மூடி, கீ பேட் மூடி போன்றவை போனுக்கு வரும் சிக்னல்களை ஓரளவிற்குத் தடுப்பதால், சிக்னல்களைத் தெளிவாகப் பெற உங்கள் போன் அதிக கதிர்வீச்சினை அனுப்பும். எனவே இந்த வகை மூடிகளைப் பயன்படுத்துவதனைத் தடுக்கவும்.

அறிவியல் சாதனங்கள் நம் வாழ்வில் வளம் சேர்த்தாலும், இது போல ஆபத்துக்களையும் தாங்கியே வருகின்றன. நாம் தான் இத்தகைய இடர்ப்பாடுகளிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

மொபைல் மலர்


மொபைல் போனிலிருந்து பாதுகாப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மொபைல் போனிலிருந்து பாதுகாப்பு Empty Re: மொபைல் போனிலிருந்து பாதுகாப்பு

Post by ரிபாஸ் Mon Mar 01, 2010 4:30 pm

அருமையான தகவல் தல வாழ்த்துக்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மொபைல் போனிலிருந்து பாதுகாப்பு Empty Re: மொபைல் போனிலிருந்து பாதுகாப்பு

Post by அப்புகுட்டி Mon Mar 01, 2010 4:39 pm

மிகவும் பயனுள்ள ஒரு தகவல் அண்ணா மிக்க நன்றி
என் நிலை மிகவும் கவலைக்குரியது
ஒரு நாளைக்கு 10 மணி நேரம் நான் மொபைல் போணில் உரையாடுகிறேன்
இதை எப்படி நிறுத்துவது அழுகை சோகம் பயம்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மொபைல் போனிலிருந்து பாதுகாப்பு Empty Re: மொபைல் போனிலிருந்து பாதுகாப்பு

Post by VIJAY Mon Mar 01, 2010 4:40 pm

சூப்பர் அண்ணா...... மகிழ்ச்சி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

மொபைல் போனிலிருந்து பாதுகாப்பு Empty Re: மொபைல் போனிலிருந்து பாதுகாப்பு

Post by யமுனாஸ் Mon Mar 01, 2010 4:58 pm

மொபைல் போனிலிருந்து பாதுகாப்பு 678642 மொபைல் போனிலிருந்து பாதுகாப்பு 678642 அறிவியல் சாதனங்கள் நம் வாழ்வில் வளம் சேர்த்தாலும், இது போல ஆபத்துக்களையும் தாங்கியே வருகின்றன. நாம் தான் இத்தகைய இடர்ப்பாடுகளிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் மொபைல் போனிலிருந்து பாதுகாப்பு 677196 மொபைல் போனிலிருந்து பாதுகாப்பு 154550


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

மொபைல் போனிலிருந்து பாதுகாப்பு Empty Re: மொபைல் போனிலிருந்து பாதுகாப்பு

Post by ராஜா Mon Mar 01, 2010 5:23 pm

Appukutty wrote:மிகவும் பயனுள்ள ஒரு தகவல் அண்ணா மிக்க நன்றி
என் நிலை மிகவும் கவலைக்குரியது ஒரு நாளைக்கு 10 மணி நேரம் நான் மொபைல் போணில் உரையாடுகிறேன் இதை எப்படி நிறுத்துவது அழுகை சோகம் பயம்

மொதல்ல நிறுத்துற வழியை பாருங்க , இல்லண்ண கொஞ்ச நாள்ல மொபைல் ஃபோன் உங்கள நிறுத்திடும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மொபைல் போனிலிருந்து பாதுகாப்பு Empty Re: மொபைல் போனிலிருந்து பாதுகாப்பு

Post by நிலாசகி Mon Mar 01, 2010 5:37 pm

மிகவும் பயனுள்ள ஒரு தகவல் மொபைல் போனிலிருந்து பாதுகாப்பு 678642


தீதும் நன்றும் பிறர் தர வாரா மொபைல் போனிலிருந்து பாதுகாப்பு 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

மொபைல் போனிலிருந்து பாதுகாப்பு Empty Re: மொபைல் போனிலிருந்து பாதுகாப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum