ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு

+3
சபீர்
Manik
தண்டாயுதபாணி
7 posters

Go down

ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு Empty ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு

Post by தண்டாயுதபாணி Mon Mar 01, 2010 6:42 am

ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு
யோக்யகர்த்தா : இந்தோனேசியத் தீவுகளில் ஒன்றான ஜாவாவில், 1,100 ஆண்டுகள் பழமையான இந்துக் கோவில், அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகில், முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடுகளில் ஒன்றாக தற்போது இந்தோனேசியா இருக்கிறது. ஆனால், அதன் தீவுகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் புத்த மதமும், இந்து மதமும் இருந்தன என்பது வரலாறு.

அதற்குச் சான்றாக இந்தோனேசியாவின் பல இடங்களில் இரு மதங்களின் கோவில்கள் இன்றும் இருக்கின்றன. சில அகழ்வாய்வில் வெளிப்பட்டிருக்கின்றன.

ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரன், மலேசியாவிலுள்ள கடாரத்தை வென்று, "கடாரம் கொண்டான்' என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டான்; மேலும் அவன் முன்னேறி, இந்தோனேசியாவிலுள்ள சில தீவுகளையும் வென்றான் என்பது வரலாறு. புத்த மதம் வந்து 300 ஆண்டுகளுக்குப் பின், கி.பி., 5ம் நூற்றாண்டில் இந்து மதம் இந்தோனேசியாவில் பரவியது. பின், வந்த இந்தோனேசிய மன்னர்கள் இருமதங்களையும் தழுவியவர்களாகவே இருந்திருக்கின்றனர். கடைசியாக கி.பி., 15ம் நூற்றாண்டில் இஸ்லாம் வந்தது. தற்போது இந்தோனேசியாவில் 90 சதவீதம் முஸ்லிம்களும், 10 சதவீதம் பவுத்தர்கள், இந்துக்களும் வாழ்கின்றனர்.

ஜாவாவில், யோக்யகர்த்தா என்ற இடத்தில் "இந்தோனேசிய இஸ்லாமியப் பல்கலைக் கழகம்' இருக்கிறது. இந்த வளாகத்தில் ஒரு பிரம்மாண்டமான மசூதியும் உள்ளது. இதன் அருகில் உள்ள இடத்தில் நூலகம் அமைப்பதற்காக, 2009 டிசம்பர் மாதம் வேலைகள் துவங்கின. அஸ்திவாரத்துக்காக மண் தோண்டும் போது, கல் சுவர் தென்பட்டது. அரசு தொல்பொருள் துறையினர் இதைக் கேள்விப்பட்டு நேரில் வந்து களப்பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 35 நாட்களாக நடந்த அகழ்வாய்வில், 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இரண்டு கோவில்கள் வெளிப் பட்டன. முதல் கோவில் ஆறு மீட்டர் நீள உயரத்துக்கு அமைந்துள்ளது.

இதில் ஒரு விநாயகர் சிலை, ஒரு லிங்கம், ஒரு யோனி பீடம் (இது சக்தி வழிபாட்டைக் குறிப்பது) ஆகியவை இருந்தன. இந்தக் கோவிலின் அருகில் அமைந் துள்ள, ஆறு மீட்டர் நீளமும் நான்கு மீட்டர் உயரமும் கொண்ட மற்றொரு கோவிலில் ஒரு லிங்கமும், யோனி பீடமும், இரண்டு பலி பீடங்களும், இரண்டு நந்திகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் அனைத்தும் தொல் பொருள் அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப் பட்டுள்ளன. கோவிலைச் சுற்றி வேலி போடப்பட்டு, பாதுகாப்பும் பலப்படுத்தப் பட்டுள்ளது. "இக்கோவில் எல்லாரும் பார்க் கும்படியாக கண்காட் சிக்கு அமைக்கப் படும்' என்று பல்கலையின் அதிகாரியான சுவர்சோனோ முகமது தெரிவித்தார்.

இந்தக் கோவிலின் அருகில் ஒரு நதி ஓடுகிறது. கோவிலுக்கு வடக்கில், 12 கி.மீ., தூரத்தில் மெரபி என்ற எரிமலை இருக் கிறது. இந்தக் கோவில் கட்டப்பட்ட 100 ஆண்டுகளுக்குள் இந்த எரிமலையிலிருந்து வெளிப்பட்ட தீக்குழம்பு, அருகிலுள்ள நதியின் வழியாக வந்து இந்தக் கோவிலை மூடியிருக்கலாம்; அதனால் தான் இந்தக்கோவில் பெருமளவில் எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருக்கிறது என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தொல்பொருள் ஆய்வாளரான இன்டுங் பஞ்ச புத்ரா என்பவர், "இந்தக் கோவிலில் கிடைத்துள்ள விவரங்கள் இதுவரை நடந்த அகழாய்வுகளில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது' என்கிறார்.

"கி.பி., 15ம் நூற்றாண்டில் இங்கு அடியெடுத்து வைத்த இஸ்லாம், இங்கு ஏற்கனவே இருந்த புத்த, இந்து மதக் கலாசாரங்களை உள்வாங்கித்தான் வளர்ந்தது' என்று கதீஜா மாதா பல்கலைக் கழகத்தின் தொல்பொருள் துறைப் பேராசிரியரும் தெற்காசியாவில் இந்துமத ஆய்வில் சிறந்த நிபுணருமான திம்புல் ஹர்யோனா தெரிவித்தார். மேலும் அவர், "இந்தோனேசியா மூன்று மதங்களும் கலந்த கலவையாக இன்று வரை இருக் கிறது. அகழாய்வில் வெளிப்பட்ட சிலகோவில்கள், பாதி இந்துக் கோவில் அமைப்பிலும், பாதி புத்தக் கோவில் அமைப் பிலும் இருக் கின்றன.

சில நூற்றாண்டுப் பழமையான மசூதிகளின் கூரைகள், இந்துக் கோவில் களைப் போலவே இருக்கின்றன. அதேபோல் அவை மெக் காவை நோக்கி அமைக் கப்படாமல் இந்துக் கோவில்களைப் போலவே கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அமைக்கப் பட்டுள்ளன. இந்தோனேசியக் கலைகள், முஸ்லிம் களின் வாழ்க்கை முறை, உணவு, உடை, சடங்குகள் ஆகியவை முந்தைய இந்து, புத்தக் கலாசாரத்தின் அடையாளங்களைக் கொண்டிருக்கின்றன. இந்து மதம் 1,000 ஆண்டுகளாக இங்கு இருந்துள்ளது. அதன் தாக்கமும் ஆழமாகத் தான் இருக்கும்' என்கிறார்.


ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு Empty Re: ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு

Post by Manik Mon Mar 01, 2010 9:04 am

மிகவும் அரிய விசயம் ரொம்ப நன்றி தண்டுஸ்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு Empty Re: ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு

Post by சபீர் Mon Mar 01, 2010 10:29 am

வரவேற்க தக்க விடயம் ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு 677196ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு 677196ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு 677196ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு 677196




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு Empty Re: ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு

Post by Aathira Mon Mar 01, 2010 10:44 am

இதுபோன்ற கண்டுபிடிப்புகல் தான் நம் பறந்து விரிந்த பாரம்பரியத்தைக் காட்டுகின்றன, தகவலுக்கு நன்றி தண்டாயுதபாணி ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு Empty Re: ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு

Post by ராஜா Mon Mar 01, 2010 11:31 am

இதுபோன்ற கண்டுபிடிப்புகள் தான் நம் பறந்து விரிந்த பாரம்பரியத்தைக் காட்டுகின்றன, தகவலுக்கு நன்றி தண்டாயுதபாணி

ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு 678642 ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு 678642 ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு 678642 ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு Empty Re: ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு

Post by சிவா Mon Mar 01, 2010 3:50 pm

ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு 677196 ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு 677196 ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு 677196


ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு Empty Re: ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு

Post by தண்டாயுதபாணி Mon Mar 01, 2010 4:00 pm

அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு 678642 ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு 678642 ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு 154550 ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு 154550 ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு 154550


ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு Empty Re: ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு

Post by கோவை ராம் Tue Mar 02, 2010 7:36 pm

வங்காளவிரிகுடா காலம் காலமாய் நமது தமிழ் மக்களை அழித்து வந்து இருக்கிறது.இல்லாவிட்டால் இன்று நாம் உலகம் முழுவதையும் நம் வசமாக்கி இருக்கலாம்.
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு Empty Re: ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது
» 900 ஆண்டுகளுக்கு முந்தைய மருத்துவமனை - காஞ்சீபுரம் அருகே கண்டுபிடிப்பு!
» 5000 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் கண்டுபிடிப்பு
»  2,300 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால தடயங்கள் கண்டெடுப்பு
» சேலம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் கண்டுபிடிப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum