புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்னியனாக வாழ்வோம் அர்த்தம் புரியும் Poll_c10அன்னியனாக வாழ்வோம் அர்த்தம் புரியும் Poll_m10அன்னியனாக வாழ்வோம் அர்த்தம் புரியும் Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
அன்னியனாக வாழ்வோம் அர்த்தம் புரியும் Poll_c10அன்னியனாக வாழ்வோம் அர்த்தம் புரியும் Poll_m10அன்னியனாக வாழ்வோம் அர்த்தம் புரியும் Poll_c10 
16 Posts - 38%
mohamed nizamudeen
அன்னியனாக வாழ்வோம் அர்த்தம் புரியும் Poll_c10அன்னியனாக வாழ்வோம் அர்த்தம் புரியும் Poll_m10அன்னியனாக வாழ்வோம் அர்த்தம் புரியும் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
அன்னியனாக வாழ்வோம் அர்த்தம் புரியும் Poll_c10அன்னியனாக வாழ்வோம் அர்த்தம் புரியும் Poll_m10அன்னியனாக வாழ்வோம் அர்த்தம் புரியும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்னியனாக வாழ்வோம் அர்த்தம் புரியும் Poll_c10அன்னியனாக வாழ்வோம் அர்த்தம் புரியும் Poll_m10அன்னியனாக வாழ்வோம் அர்த்தம் புரியும் Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
அன்னியனாக வாழ்வோம் அர்த்தம் புரியும் Poll_c10அன்னியனாக வாழ்வோம் அர்த்தம் புரியும் Poll_m10அன்னியனாக வாழ்வோம் அர்த்தம் புரியும் Poll_c10 
16 Posts - 38%
mohamed nizamudeen
அன்னியனாக வாழ்வோம் அர்த்தம் புரியும் Poll_c10அன்னியனாக வாழ்வோம் அர்த்தம் புரியும் Poll_m10அன்னியனாக வாழ்வோம் அர்த்தம் புரியும் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
அன்னியனாக வாழ்வோம் அர்த்தம் புரியும் Poll_c10அன்னியனாக வாழ்வோம் அர்த்தம் புரியும் Poll_m10அன்னியனாக வாழ்வோம் அர்த்தம் புரியும் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னியனாக வாழ்வோம் அர்த்தம் புரியும்


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Feb 27, 2010 5:29 pm

ஒருவர் வெளியூருக்கோ அல்லது வெளி நாட்டிற்கோ செல்கிறார் என்றால் அங்கு அவரது வாழ்க்கை சூழலும் எப்படி அமையும்!
1. இது ஒரு தற்காலிக தங்குமிடம். இங்கு சில வேலைகளுக்காக நாம் வந்துள்ளோம். சொந்த ஊருக்கு திரும்பும் நாள் சீக்கிரம் வர வேண்டும் என்ற எண்ணம் தான் அவரிடம் மிகைத்து நிற்கும்.
2, சிந்தனையும் நினைவுகளும் சொந்தங்களையும், சொந்த ஊரையும் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருக்கும்.
3) தாம் தங்கியுள்ள இடத்தில் கிடைக்கும் பொருட்கள் மீது அவ்வளவாக ஈடுபாடு இருக்காது.
4) அங்கு கிடைக்கும் நட்புக்கள், தோழமைகள், உறவுகள் எவற்றோடும் பிண்ணி பிணைந்துக் கொள்ள மனம் வராது. ஏனெனில் இவை தற்காலிகமானவை என்ற எண்ணம் குறுக்கிட்டு தடுக்கும்.
5) சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல முடியாத எந்தப் பொருளின் மீதும் அவர் கவனம் செலுத்த மாட்டார். அது அவரை எவ்வளவு கவர்ந்திருந்தாலும் சரியே!
6) எடுத்துச் செல்ல முடியும் என்றுள்ள நல்ல பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைத்துக் கொள்வார்.
7) அந்த இடத்தில் என்னதான் இதமான சூழ்நிலை இருந்தாலும் மனம் தேடுவதோ வேறாக இருக்கும். இதை ஒரு கவிதை இப்படிச் சொல்கிறது.
அகன்ற மாடி
ஆளுயறக் கட்டில்
குளிரூட்டப்பட்ட அறை
மென்மையான ராகம்
ஊர் சுற்ற வாகனம்
விடுமுறையில் விருந்தோம்பல்
எல்லாம் இருந்தும்
மனமே 'ரிலாக்ஸ்" என்று
மன்றாடினாலும்
ஆத்மாவின் தேடல்களில்
நீ.
இங்கு நீ என்பது தாயாகவோ, தந்தையாகவே, மனைவியாகவோ, குழந்தையாகவோ, அல்லது வேறு யாராகவோ கூட இருக்கலாம்.
7) தங்கியுள்ள இடத்தில் சில இழப்புகள் ஏற்பட்டாலும் இதற்கு பிரதிபலன் தான் ஊருக்கு திரும்பிய பின் தன் சொந்த ஊரில் கிடைக்கும் என்றால் அந்த இழப்புக்களை ஏற்றுக் கொள்வார்.
8) எந்த நோக்கத்திற்காக இந்த பயணத்தை மேற்கொண்டாரோ அந்த காரியத்தை முடிப்பதில் மிக கவனமாக இருப்பார்.
9) நீண்ட ஓய்வுகள், காலத்தை வீணடிக்கும் போக்கு, ஊதாரித்தனமான செலவுகள் எதுவும் அவரிடம் இருக்காது.
10) அன்னிய பூமியில் நாம் இருக்கிறோம் என்ற எண்ணமுள்ள காலமெல்லாம் மிக எச்சரிக்கை உணர்வோடு செயல் படுவார்
சொந்த ஊரை பிரிந்து பிரயாணத்தில், வெளியூரில், வெளிநாட்டில் வாழும் (வாடும்) எவரும் நம் கருத்துக்களை மறுக்க மாட்டார்.
இப்போது இந்த நபிமொழியை படியுங்கள்.
நபி(ஸல்) என் தோள்மீது கையை வைத்து 'அப்தல்லாவே! இந்த உலகில் நீ ஒரு பிரயாணியைப் போல் அல்லது ஒரு அன்னியனைப் போல் வாழு" என்றார்கள். (புகாரி)
உலகில் ஏற்படக் கூடிய எல்லா சிக்கல்களுக்கும் காரணம் மனிதன் இவ்வுலகை அளவு கடந்து நேசிப்பதேயாகும். ஆறடி உடம்பைக் கொண்ட மனிதனின் ஆசைகளை மட்டும் அடிகளாலோ முழங்களாலோ அளவிட்டு விட முடியாது.
ஒன்றுமே இல்லாமலிருக்கும் போது சில நூறுகளுக்கு ஆசைப்படுவதும், நூறுகளை கண்டவுடன் சில ஆயிரங்கள் இருந்தால் நல்லது என்பதும், அது கிடைத்தவுடன் 'இதை வைத்து என்ன செய்வது.. எப்படியாவது லட்சத்தை புரட்ட வேண்டும்" என்பதும், அது கை கூடினால் கோடியை நோக்கி கணக்குப் போடுவதுமாக மனித ஆசை பிரபஞ்சம் போல் விரிவடைந்துக் கொண்டே செல்கிறது.
ஆசைகளை அறுத்து விட்டு பிணம் போன்று வாழ வேண்டும் என்ற வாழ்க்கையையோ ஆசைகளிலேயே மூழ்கி திளைக்கும் குறிக்கோளற்ற வாழ்க்கையையோ இஸ்லாம் மனிதர்களுக்கு போதிக்கவில்லை. இவை இரண்டுமே வாழ்விற்கு பெரும் கேடு விளைவித்து விடக் கூடியதாகும்.
'ஆசை அறுமின், ஆசை அறுமின் ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்" என்ற சித்தாந்தம் நடைமுறை சாத்தியத்திற்கு உகந்ததல்ல. பசி, தாகம், ரசிப்பு, உணர்வு ஆகிய தேட்டங்களைப் போன்றே ஆசை என்பதும் ஒரு இயற்கையான தேட்டமாகும். பசியையும், தாகத்தையும் உணர்வையும் எப்படி புறக்கணித்து விட்டு வாழ முடியாதோ அதை போன்றதுதான் ஆசையும். அதை புறக்கணித்து விட்டு வாழ முடியாது. மனித குல வரலாற்றிலிருந்து முற்றாக ஆசையை புறக்கணித்து வாழ்ந்த எந்த ஒரு மனிதனையும் காட்டவே முடியாது.
ஆசையை புறக்கணிக்க முடியாது என்பதால் அதிலேயே மூழ்கி கிடந்து விடலாமா.. என்றால் எல்லா கேடுகளுக்கும் இந்த ஆசையே ஆணிவேராக திகழ்கிறது. ஆசையின் மூலக்கூறுகளையே மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இந்த மூன்று ஆசைகள் அல்லது இதில் ஒன்றோ, இரண்டோ மனிதனை தாக்கும் போது அவன் எந்த குற்றத்தையும் செய்வதற்கு துணிந்து விடுகிறான். அவன் செய்யும் குற்றத்தின் விளைவுகளை நாம் உலகம் முழுதும் கண்டு வருகிறோம்.
இந்த இரண்டுமே கேடு விளைவிப்பதால் தான் இஸ்லாம் மனிதனுக்கு உபதேசிக்கிறது 'மனிதா நீ ஒரு அன்னியனைப் போல் இந்த உலகில் வாழ்" என்று.
எவரது பரிச்சயமுமில்லாத, எவரது அறிமுகமுமில்லாத ஒரு பூமிக்கு ஒருவன் சென்றால் எப்படி எந்த தவறும் செய்ய அஞ்சுவானோ, எப்படி அவனால் பிறருக்கு எந்த கெடுதியும் ஏற்படாதோ அதே போன்ற ஒரு வாழ்க்கையை மனிதன் இங்கு வாழ துவங்கினால் அந்த வாழ்க்கையில் அர்த்தத்தில் பிறருக்கு வழி காட்டல் உண்டு.
முஸ்லிமை பொருத்தவரை அவன் இந்த உலகிற்கு அன்னியனாக வந்தவன் என்பதை ஆழமாக மனதில் நிருத்த வேண்டும். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த பிரயாணம் முடிவுக்கு வரக் கூடியது. போய் சேர வேண்டிய இடமும் வாழ வேண்டிய வாழ்க்கையும் எதிரே காத்து நிற்கிறது.
சொந்த பூமிக்கு போய் சேருமுன் இந்த பிரயாண பூமியில் நாம் தயார் படுத்திக் கொள்ள வேண்டியது என்ன?
நம் வாழ்வும் மரணமும் இறைவனுக்குறியதாக அமைய வேண்டும் என்ற சிந்தனை முதலாவதாக மனதில் வேர் பிடிக்க வேண்டும்.
தான் பிறந்த நோக்கத்தையும், தனக்கு வழி காட்டியாக அனுப்பப்பட்ட இறைத் தூதர்களின் நோக்கத்தையும், அவர்கள் கொண்டு வந்த இறை வேதங்களின் நோக்கத்தையும் கற்றுணர வேண்டும்.
காலத்தின் அருமை உணர்ந்து மணித்துளிகளை பாழ்படுத்தி விடாமல் செயலாற்றும் பயிற்சியையும் பக்குவத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இறைவனுக்குறிய செயல்களையும், சமூகத்திற்குறிய செயல்களையும் 'பிறகு செய்துக் கொள்ளலாம்" என்று ஒத்திப்போடும் மனநிலை கட்டாயமாக ஒழிக்கப்பட வேண்டும்.
மரணத்திற்கு பின் ஆத்மா அழைத்து செல்லும் காரியங்கள் குறித்து கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.
எவற்றை கொண்டு செல்ல முடியாதோ அல்லது எவற்றை கொண்டு செல்வதால் அங்கு சுமைக் கூடுமோ அவற்றிலிருந்து தவிர்ந்து நிற்கும் அவசியத்தை கடை பிடிக்க வேண்டும்.
இங்கு விதைப்பதை தான் அங்கு அறுவடை செய்வோம் என்பது அசைக்க முடியாத உண்மை என்பதால் எதை விதைக்கிறோம் என்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
உணர்வதால் உலக வாழ்க்கையில் அன்னியனாவோம், அன்னியனாவதன் மூலம் வாழ்வின் அர்த்தம் புரியும்.
'இந்த உலகில் ஒரு அன்னியனைப் போல் வாழ்" இஸ்லாமிய உபதேசங்களில் ஒரு முத்தான உபதேசமாகும





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக