ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம்: தேர்தல் விவரம் - முழுமையான முடிவுகள்

Go down

தமிழகம்: தேர்தல் விவரம் - முழுமையான முடிவுகள் Empty தமிழகம்: தேர்தல் விவரம் - முழுமையான முடிவுகள்

Post by சிவா Sun May 17, 2009 11:03 am

1,47,460 வாக்குகள் வித்தியாசத்தில் காடுவெட்டி குரு தோல்வி!

சென்னை: திருவண்ணாமலை: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாமகவின் காடுவெட்டி குரு, திருவண்ணாமலையில் பெரும் தோல்வியைத் தழுவியுள்ளார். திருவண்ணாமலையில் காடுவெட்டி குருவை எதிர்த்து, திமுக சார்பில் வேணுகோபால் நிறுத்தப்பட்டார். திருப்பத்தூர் தொகுதி எம்.பியாக இருந்தவர் வேணுகோபால். காடுவெட்டி குருவின் சவாலைச் சமாளிக்கும் வகையில் அனுபவம் வாய்ந்த வேணுகோபாலை நிறுத்தியதோடு, மாவட்டத்தில் இருந்த ரஜினி ரசிகர் மன்றங்களின் ஆதரவையும் கோரியது திமுக.

காடுவெட்டி குருவை ஓட ஓட விரட்டுவோம் என திருவண்ணாமலை ரஜினி ரசிகர் மன்ற தலைவர் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

ஒரு சுற்று கூட விடாமல் வேணுகோபால் தொடர்ந்து முன்னணி வகித்து வந்தார். இறுதியில், ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 690 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் குரு.

வேணுகோபால் பெற்ற வாக்குகள் - 4,32,302
காடுவெட்டி குரு பெற்ற வாக்குகள் - 2,84,612

2.இழுபறியில் ஜெயித்த பாலு!

பெரும் போராட்டத்திற்குப் பின்னர் முதல் முறையாகப் போட்டியிட்ட ஸ்ரீபெரும்புதூரில் வெற்றி பெற்றுள்ளார் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு. தென் சென்னை தொகுதியிலிருந்து முதல் முறையாக ஸ்ரீபெரும்புதூருக்கு மாறி வந்து போட்டியிட்டார் பாலு. அவரை எதிர்த்து வலுவான வேட்பாளராக பாமக சார்பில் ஏ.கே.மூர்த்தி நிறுத்தப்பட்டார்.

இதனால் போட்டி கடுமையாக இருந்தது. ஆரம்பத்திலிருந்தே மூர்த்தியும், பாலுவும் மாறி மாறி முன்னணியில் இருந்து வந்தனர். ஒரு கட்டத்தில் பாலு தோல்வி அடைந்து விடக் கூடிய அளவுக்கு நிலைமை இருந்தது.

இந்த நிலையில் கடைசிக் கட்ட சுற்றுக்குளில் வேகமாக முன்னேறி விட்டார் பாலு.

இறுதியில், 25 ஆயிரத்து 544 வாக்குகள் வித்தியாசத்தில் டி.ஆர்.பாலு வெற்றி பெற்றார்.

3.காஞ்சியில் காங்கிரஸ் வெற்றி!


காஞ்சிபுரம் தனி தொகுதியில், அத்தொகுதிக்கே சம்பந்தமில்லாத காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதனையும் வெற்றி பெற வைத்துள்ளனர் வாக்காளர்கள்.
இத்தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன், 3,30,237 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் 3,17,134 வாக்குகளைப் பெற்று, 13,103 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

4.மறு எண்ணிக்கையில் வென்ற சிதம்பரம்?

சிவகங்கை தொகுதியில் நடத்தப்பட்ட மறு வாக்கு எண்ணிக்கை முடிவில் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

5.மறு எண்ணிக்கையிலும் தோற்ற வைகோ!

விருது நகர் தொகுதியில் போட்டியிட்ட வைகோ தோல்வியைத் தழுவினார். காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூரை விட அவர் 15 000 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வியைத் தழுவியதை மறு வாக்கு எண்ணிக்கை உறுதிப்படுத்தியது.

6.தர்மபுரியில் தாமரைச் செல்வன்

தர்மபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் தாமரைச்செல்வன் வெற்றி பெற்றுள்ளார். தற்போதைய எம்.பியான டாக்டர் செந்தில் பாமக சார்பிலும், திமுக சார்பில் தாமரைச்செல்வனும் போட்டியிட்டனர்.
இந்தப் போட்டியில் தாமரைச்செல்வன் 1 லட்சத்து 35 ஆயிரத்து 942 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

7.சிதம்பரத்தில் திருமா வெற்றி!

சிதம்பரம் தனி தொகுதியில் பாமகவின் பேராசிரியர் பொன்னுச்சாமியை வீழ்த்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வெற்றி பெற்றார்.
சிதம்பரம் தொகுதியில், திருமாவுக்கும், பொன்னுச்சாமிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் ஆரம்பத்தில் பொன்னுச்சாமி முன்னிலையில் இருந்தார். பின்னர் திருமா முன்னணிக்கு வந்தார்.
கடும் இழுபறியின் இறுதியில் திருமாவளவன், 99 ஆயிரத்து 414 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

8.தங்கபாலு தோல்வி

சேலம் தொகுதியில் போட்டியிட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விட சுமார் 46000 வாக்குகள் குறைவாகப் பெற்று அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

9.தயாநிதி மாறன் வெற்றி

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மத்திய சென்னையில் 33 ஆயிரத்து 454 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அவர் பெற்ற வாக்குகள்: தயாநிதி மாறன்(திமுக)- 2,85,783

10.காங்கிரசுக்கு திண்டுக்கல்

திண்டுக்கல் தொகுதியில் காங்கிரஸ் கட்சியி்ன் வேட்பாளர் என்.எஸ்.வி.சித்தன் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்திலிருந்து திமுக கூட்டணிக்கு கிடைத்துள்ள முதல் வெற்றி செய்தி இது.
தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பாலசுப்ரமணியத்தை விட 54 ஆயிரத்து 192 வாக்குகள் அதிகம் பெற்று சித்தன் வெற்றி பெற்று தொகுதியை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

11.அரக்கோணம்: ஜெகத்ரட்சகன் வெற்றி!

அரக்கோணம் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரக்கோணம் தொகுதியில் முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலுவும், திமுக சார்பில் ஜெகத்ரட்சகனும் போட்டியிட்டனர்.

வாக்குகள் எண்ணி முடித்தபோது, ஜெகத்ரட்சகன் 4,11,453 வாக்குகளையும், வேலு, 3,03,630 வாக்குகளைப் பெற்றிருந்தனர்.

இந்த நிலையில், நேற்று மறு வாக்குப் பதிவு நடந்த மேல் வல்லம் வாக்குச் சாவடிக்குட்பட்ட வாக்குகளை எண்ணுவது தொடர்பாக குழப்பம் ஏற்பட்டதால் தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையை கோரினர். இதையடுத்து அங்கு முடிவை அறிவிப்பது நிறுத்தி வைக்கப்பட்டது.

தேர்தல் ஆணைய ஆலோசனைக்குப் பின்னர் மறு வாக்குப் பதிவு நடந்த வாக்குச் சாவடியில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன.

இதன் இறுதியில், ஜெகத்ரட்சகன் 4,15,041 வாக்குகளும், வேலு, 3,05,245 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதையடுத்து 1 லட்சத்து 9 ஆயிரத்து 796 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெகத்ரட்சகன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மற்ற தொகுதிகளில் வென்றவர் விவரம்:

12.மதுரை - முக அழகிரி (திமுக)
13.நெல்லை - ராமசுப்பு (காங்)
14.தஞ்சாவூர்: எஸ்.எஸ். பழனிமாணிக்கம் (திமுக)
15.நாகப்பட்டினம்(தனி) ஏ.கே.எஸ். விஜயன் (தி.மு.க.)
16. நீலகிரி(தனி): ஆ.ராசா (தி.மு.க.)
17.கள்ளக்குறிச்சி: ஆதி சங்கர் (தி.மு.க)
18.பெரம்பலூர்: நெப்போலியன் (தி.மு.க.)
19. கன்னியாகுமரி: ஹெலன் டேவிட்சன் (தி.மு.க
20.வேலூர்: அப்துல் ரகுமான் (தி.மு.க.)
21.கடலூர்: கே.எஸ். அழகிரி (காங்கிரஸ்)
22.தேனி: ஆருண் ரஷீத் (காங்கிரஸ்)
23.தென்சென்னை: ராஜேந்திரன் (அ.தி.மு.க.)
24.பொள்ளாச்சி: சுகுமார் (அ.தி.மு.க.)
25. கோவை: பி.ஆர். நடராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூ.)
26. மயிலாடுதுறை: ஓ.எஸ். மணியன் (அ. தி.மு.க.)
27.திருப்பூர்: சிவசாமி (அ.தி.மு.க.)
28.தென்காசி: லிங்கம் (இ.கம்யூ.)
29.திருவள்ளூர்: வேணுகோபால் (அ.தி.மு.க.)
30.ராமநாதபுரம்: ஜேகே ரித்தீஷ் (தி.மு.க.)
31.ஆரணியில் காங்., வேட்பாளர் கிருஷ்ணசாமி வெற்றி
32.விழுப்புரம்: ஆனந்தன் (அ.தி.மு.க.)
33.கிருஷ்ணகிரி: ஈ.ஜி. சுகவனம் (தி.மு.க.)
34.கரூர்: தம்பிதுரை (அ.தி.மு.க.)
35.நாமக்கல்: காந்தி செல்வன் (தி.மு.க.)
36.ஈரோடு: கணேச மூர்த்தி (ம.தி.மு.க.)
37. திருச்சி: குமார் (அ.தி.மு.க.)
38. வடசென்னை: டிகேஎஸ் இளங்கோவன் (திமுக)
39. தூத்துக்குடி: எஸ்.ஆர். ஜெயதுரை (தி.மு.க.)
40.மற்றும் புதுச்சேரி: நாராயணசாமி (காங்கிரஸ்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum