புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியச் சிறைகளில் நிரம்பி வழியும் முஸ்லிம்கள்.


   
   

Page 1 of 2 1, 2  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Fri Feb 26, 2010 9:41 pm

முஸ்லிம்களின் மக்கள் தொகைக்குத் தகுந்தாற்போல் கல்வி வேலை வாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு கேட்டு போராடி வரும் முஸ்லிம்களுக்கு, சிறைச்சாலைகளில் மட்டும்தான் தாராளமாக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது என்று அதிர்ச்சியூட்டும் புள்ளி விபரங்கள் வெளியாக்கியுள்ளன.
''இந்தியாவின் அதிகமான மாநிலங்களில் பிற சமூகத்தவரைவிடவும் முஸ்லிம்கள்தான் அதிக எண்ணிக்கையில் சிறைகளில் நிரப்பப்பட்டிருக்கிறார்கள்'' என்று தேசிய அளவில் முஸ்லிம்களது சமூக, அரசியல், பொருளாதார நிலைபற்றி ஆய்வுசெய்து வரும் நீதிபதி ராஜீந்தர் சச்சார் கமிட்டி தனது இடைக்கால அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேற்கு வங்கம் உபி பிஹார் மற்றும் ஆந்திரம் போன்ற மாநிலங்களில் வாழும் முஸ்லிம்களின் நிலவரம் குறித்த அறிக்கை இன்னும் வெளிவராத சூழ்நிலையில் சுமார் 8 மாநிலங்களின் புள்ளி விபரங்களை மட்டும் அக்கமிட்டி வெளியிட்டுள்ளது
அதே நேரம் ஜம்மு காஷ்மீர் போன்ற முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களின் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் மக்கள் தொகை 10.6 சதவீதம் உள்ள மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் பிற மக்களை விட முஸ்லிம்கள் சிறைகளில் கழிக்கும் காலங்கள் மிகவும் அதிகமாகும். மேலும் அம்மாநிலத்திலுள்ள மொத்த சிறைவாசிகளில் 32.4 சாதவீதம் பேர் முஸ்லிம்கள்.
நடப்பு வருடத்தில், மஹாராஷ்டிராவில் சிறையில் அடைக்கப்படவர்களில் முஸ்லிம்கள் தான் மிக அதிக எண்ணிக்கையில் உள்ளார்கள். 40.6 எனவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
குஜராத் மாநிலத்திலுள்ள முஸ்லிம்கள் நிலை குறித்து சொல்லவே வேண்டியதில்லை.
அங்குள்ள முஸ்லிம் மக்கள் தொகை 9.06 சதவீதம். ஆனால், அம்மாநிலத்திலுள்ள வொவ்வொரு சிறையிலும் அடைக்கப்பட்டள்ள கைதிகளில் 4லில் 1 பங்கு முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்வு காஷ்மீரை அடுத்து இந்திய அளவில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாநிலம் அஸ்ஸாம். அங்க முஸ்லிம்களின் எண்ணிக்கை 30.9 சதவீதம். அங்குள்ள மொத்த சிறைவாசிகளில் முஸ்லிம்கள் 28.1 சதவிகிதம் பேர் எனக் குறிப்பிட்டுள்ளது சச்சார் குழு.

பிற மாநிலங்களை காட்டிலும் முஸ்லிம்களுக்கு அதிகமாக வேலை வாய்ப்புகளை வழங்கி வரும் கர்நாடகாவில் முஸ்லிம்கள் 12.23 சதவிகிதம் உள்ளனர். அம்மாநிலத்தின் நிலவரப்படி மொத்த சிறைவாசிகளில் 17.5 சதவிகிதம் பேர் முஸ்லிம்களாவார்.
இதற்குத் தகுந்தார்போல் தேசிய அளவில் 28 சதவிகிதம் உள்ள முஸ்லிம்கள் உள்ளனர். மொத்த இந்தியர்களில் வறுமையில் வாடும் முஸ்லிம்கள மட்டும் 44 சதவிகிதம் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
''முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள். அவர்கள் தான் தீவிரவாதச் செயல்களை உருவாக்குகிறார்கள் என்கிற அழுத்தமான நம்பிக்கை உளவுத்துறை மற்றும் காவல்துறையினரிடம் திணிக்கப்பட்டுவிட்டது. இதனால் முக்கியத்துவம் இல்லாத -சாதாரண விஷயங்களுக்கெல்லாம் முஸ்லிம்கள் இளைஞர்களை அதிக அளவில் கைது செய்கிறார்கள். ஆனால் அது சம்பந்தமான எந்தக் குற்றத்தையும் நிரூபிக்க முடியாமல் திணறுகிறார்கள்". என்று முன்னால் எம்பியும், முஸ்லிம் ஆலோசனக்குழுவின் தலைவருமான ஸையத் ஷஹாபுத்தீன் கூறுகிறார்.
உலகில் மிகப்பெரும் ஜனநாயக நாடுகளின் வரிசையில் முன்னியில் உள்ள நமத இந்திய தேசத்தில் கூட கேட்பாரற்ற சமூகமாகத்தான் முஸ்லிம்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த முப்பது ஆண்டுகளாக தேசிய அளவில் முஸ்லிம்களுக்கென்று சொல்லிக் கொள்ளும் படியான கட்சியோ, தலைமையோ இல்லாதிருப்பதே அவர்களுக்கு ஏற்பட்ட மாபெரும் சோதனைகளில் முக்கியமானதும், முதன்மையானதுமாகும்.
இந்த முதன்மைத் தேவையை நிவர்த்தி செய்ய இயலாமல் விழிப் பிதுங்கி நிற்கும் இரண்டு தலைமுறையினரை ஆருதல் படுத்த முடியாமல் யார் யாரையோ சார்ந்திருக்கும். அவல நிலைக்கு இந்திய முஸ்லிம்கள் தள்ளப்பட்டிருப்பது வேதனையிலும் வேதனை சர்வ தேச அளவில் இஸ்லாமியர்களை தீவிர வாதத் தோடு முடுச்சு போட்டு எழுதி பழகப்படுத்தப்பட்டிருக்கும் சார்பு ஊடகத்துறையின் இந்திய முஸ்லிம்களையும் விட்டு வைக்கவில்லை.

இதைக் காரணமாகக் கொண்டே பல தேச துரோகிகள் வன்முறைகளையும் குண்டு வெடுடிப்புகளையும் நிகழ்த்தி விட்டு முஸ்லிம்கள் மீது பழி சுமத்தித் தப்பி விடுகிறார்கள் என்று சந்தேகம் எழுப்பப்படுகிறது. இதனால் பாவம் ஒரு பக்கம் பழி இன்னொரு பக்கம் என்ற கதையாக அதற்கான தண்டனை அனுபவிக்கும் குற்றப் பரம்பரையாக முஸ்லிம்கள் சித்திரிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதிலும் கொடுமை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் இளைஞர்கள் உடல் மற்றும் மனரீதியாக பல்வேறு விதமான துன்புறுத்தலுக்கும் மன உலைச்சலுக்கும் ஆளாக்கப்பட்டு எதிர்காலமே இருண்ட நிலைக்கு தள்ளப்பட்டு விடுவதுதான்.
பெங்களுர் விஞ்ஞானக் கூடம், தில்லி, வாரணாசி மற்றும் மும்பை குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு காரணமான உண்மைக் குற்றவாளிகள் இதுவரைப் பிடிப்பட்டதாகத் தெரியவில்லை. இது சம்பந்மாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அனைவரும் முஸ்லிம்கள் அதிலும் இளைஞர்கள்.

ஒருபக்கம் செய்யாத தவறுகளுக்காக அநியயாயமாக சிறைச்சாலைகளில் தண்டிக்கப்படுகிறார்கள் என்றால் இனபடுகொலை வன்முறைகள் உயிர்களையும் சொத்து சுகங்களையும் இழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டு அகதிகள் முகாம் என்ற மற்றொரு சிறை போன்ற இடங்களில் வாடிக் கொண்டிருப்பது முஸ்லிம்கள் தான்.

இப்போதெல்லாம் மும்பை சிவப்பு விளக்கு பகுதியில் முஸ்லிம் பெண்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பது இரத்தத்தை உறைய வைக்கும் மற்றொரு செய்தியாகும் காரணம் தங்கள் குடும்பத்தின் பொருளாதார பாலமாக திகழ்ந்த தந்தை மற்றும் சகோதரர்கள் கணவர்கள் யாவரும் சிறைச்சாலைகளில் அடக்கப்பட்டிருப்பதுதான். அவர்களை நம்பி இருந்த இளம் பெண்கள் சிறுவர்கள் வாழ்வாதாரத்திற்கு வேறு வழி இல்லாமல் பலவந்தமாக அப்பகுதியில் திணிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது ஒரு ஆங்கில நாளிதழ்.

மேலும் வறுமையின் உச்சிக்கு சென்று பசியிலும் பட்டினியிலும் கிரங்கிப்போய் உயிர் வாழ பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் "கல்வியாவது மண்ணாங்கட்டியாவது" என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ள முஸ்லிம்கள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அதிக அளவில் உள்ளார்கள். இது இந்திய முஸ்லிம்கள் அனைவரின் எதிர்காலமும் கரு இருளில் தள்ளப்பட்டிருக்கிறது என்பதற்கு சத்தியமான சான்றாகும்.

குறைந்தப்பட்சம் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் விடுவிக்கப்பட்டாலே பல ஆயிரம் முஸ்லிம் குடும்பங்கள் பசியிலிருந்தாவது மீளும் என்பது நிச்சயம்.

இதுபோன்ற சமூக கொடுமைகளை எதிர்கொள்ளவும் முஸ்லிம்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கான திட்டங்கள் எது குறித்தும் தூர நோக்கோடு யோசிக்காமலும் 25 கோடி முஸ்லிம்கள் வெறும் செம்மரி ஆட்டு மந்தைப் போல உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கும் கோழைத்தனத்தை என்னவென்பது?

பரந்து விரிந்த இந்திய நாட்டில் எங்கெல்லாம் அசம்பாவிதங்கள் நடக்கின்றனவோ அங்கெல்லாம் முஸ்லிம் இளைஞர்கள் தான் தவறாமல் கைது செய்யப்படுகிறார்கள். பாதிக்கப்படுவதும் தண்டனை அனுபவிப்பதும் அவர்களே என்கிற போது செத்து மடிவது மேலாகத் தோன்றும்.

இருண்டக் காலத்தின் குருட்டு வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த அகில உலக மக்களுக்கும் வெளிச்சம் காட்டி நேரான வழியில் முன்னின்று அழைத்து சென்றதோடு அவர்களுக்கு மனித நாகரீகத்தையும் பண்பாட்டையும் கற்று கொடுத்த இஸ்லாமியர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இன்றைய நிலையை நினைக்கும் போது பரிதாபப்படாமல் இருக்க முடியவில்லை.

"எந்த சமூகம் தங்களைத் தாங்களே மாற்றி அமைத்துக் கொள்ளவில்லையோ அந்த சமூகத்தை இறைவனும் மாற்ற போவதில்லை" எனும் இறை வசனத்தின் போதனையை மனதில் கொண்டு சமுதாயத்தின் அனைத்து மட்டத்திலும் முன்னேறுவதற்கு தேவையான உருப்படியான ஆரோக்யமான மாற்றம் குறித்த சிந்தனைக்கு முன்வருவார்களா முஸ்லிம்கள்?


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 26, 2010 11:00 pm

சோகம் சோகம்

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Fri Feb 26, 2010 11:07 pm

''முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள். அவர்கள் தான் தீவிரவாதச் செயல்களை உருவாக்குகிறார்கள் என்கிற அழுத்தமான நம்பிக்கை உளவுத்துறை மற்றும் காவல்துறையினரிடம் திணிக்கப்பட்டுவிட்டது. இதனால் முக்கியத்துவம் இல்லாத -சாதாரண விஷயங்களுக்கெல்லாம் முஸ்லிம்கள் இளைஞர்களை அதிக அளவில் கைது செய்கிறார்கள். ஆனால் அது சம்பந்தமான எந்தக் குற்றத்தையும் நிரூபிக்க முடியாமல் திணறுகிறார்கள்".

இதுபோன்ற எண்ணப்போக்கு மாறினால்தான் எல்லாம் சரியாகும் இந்தியச் சிறைகளில் நிரம்பி வழியும் முஸ்லிம்கள். 440806 இந்தியச் சிறைகளில் நிரம்பி வழியும் முஸ்லிம்கள். 440806

avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Fri Feb 26, 2010 11:08 pm

பரந்து விரிந்த இந்திய நாட்டில் எங்கெல்லாம் அசம்பாவிதங்கள் நடக்கின்றனவோ அங்கெல்லாம் முஸ்லிம் இளைஞர்கள் தான் தவறாமல் கைது செய்யப்படுகிறார்கள். பாதிக்கப்படுவதும் தண்டனை அனுபவிப்பதும் அவர்களே என்கிற போது செத்து மடிவது மேலாகத் தோன்றும்

இந்தியச் சிறைகளில் நிரம்பி வழியும் முஸ்லிம்கள். 440806 இந்தியச் சிறைகளில் நிரம்பி வழியும் முஸ்லிம்கள். 67637

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Fri Feb 26, 2010 11:10 pm

"எந்த சமூகம்
தங்களைத் தாங்களே மாற்றி அமைத்துக் கொள்ளவில்லையோ அந்த சமூகத்தை
இறைவனும் மாற்ற போவதில்லை" எனும் இறை வசனத்தின் போதனையை மனதில் கொண்டு
சமுதாயத்தின் அனைத்து மட்டத்திலும் முன்னேறுவதற்கு தேவையான உருப்படியான
ஆரோக்யமான மாற்றம் குறித்த சிந்தனைக்கு முன்வருவார்களா முஸ்லிம்கள்? இந்தியச் சிறைகளில் நிரம்பி வழியும் முஸ்லிம்கள். 139731

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Feb 26, 2010 11:23 pm

snehiti wrote:
''முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள். அவர்கள் தான் தீவிரவாதச் செயல்களை உருவாக்குகிறார்கள் என்கிற அழுத்தமான நம்பிக்கை உளவுத்துறை மற்றும் காவல்துறையினரிடம் திணிக்கப்பட்டுவிட்டது. இதனால் முக்கியத்துவம் இல்லாத -சாதாரண விஷயங்களுக்கெல்லாம் முஸ்லிம்கள் இளைஞர்களை அதிக அளவில் கைது செய்கிறார்கள். ஆனால் அது சம்பந்தமான எந்தக் குற்றத்தையும் நிரூபிக்க முடியாமல் திணறுகிறார்கள்".

இதுபோன்ற எண்ணப்போக்கு மாறினால்தான் எல்லாம் சரியாகும் இந்தியச் சிறைகளில் நிரம்பி வழியும் முஸ்லிம்கள். 440806 இந்தியச் சிறைகளில் நிரம்பி வழியும் முஸ்லிம்கள். 440806

இது தான் உண்மை.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Feb 26, 2010 11:24 pm

jayakumari wrote:பரந்து விரிந்த இந்திய நாட்டில் எங்கெல்லாம் அசம்பாவிதங்கள் நடக்கின்றனவோ அங்கெல்லாம் முஸ்லிம் இளைஞர்கள் தான் தவறாமல் கைது செய்யப்படுகிறார்கள். பாதிக்கப்படுவதும் தண்டனை அனுபவிப்பதும் அவர்களே என்கிற போது செத்து மடிவது மேலாகத் தோன்றும்

இந்தியச் சிறைகளில் நிரம்பி வழியும் முஸ்லிம்கள். 440806 இந்தியச் சிறைகளில் நிரம்பி வழியும் முஸ்லிம்கள். 67637

இது தான் இன்றைய நிலை

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Feb 26, 2010 11:36 pm

வணக்கம்
வருத்தமான செய்தி. தாடி வைத்தவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்று சொல்லும் அரசியல் வாதிகளும் இருக்கிறார்கள். சிலையாய் நிற்கும் திருவள்ளுவர் வந்தால் சிறை தான். அவரும் தாடி வைத்திருக்கிறாரே.
அன்புடன்
நந்திதா

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 26, 2010 11:42 pm

nandhtiha wrote:வணக்கம்
வருத்தமான செய்தி. தாடி வைத்தவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்று சொல்லும் அரசியல் வாதிகளும் இருக்கிறார்கள். சிலையாய் நிற்கும் திருவள்ளுவர் வந்தால் சிறை தான். அவரும் தாடி வைத்திருக்கிறாரே.
அன்புடன்
நந்திதா
ஆமோதித்தல் ஆமோதித்தல்

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Fri Feb 26, 2010 11:49 pm

nandhtiha wrote:வணக்கம்
வருத்தமான செய்தி. தாடி வைத்தவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்று சொல்லும் அரசியல் வாதிகளும் இருக்கிறார்கள். சிலையாய் நிற்கும் திருவள்ளுவர் வந்தால் சிறை தான். அவரும் தாடி வைத்திருக்கிறாரே.
அன்புடன்
நந்திதா

தாங்கள் சொல்வதும் உண்மைதான் அக்கா நான் கண்டு வருதப்பட்ட விடயம் விமான நிலைய பரிசோதனகளின் போது தாடிவைத்துஇருக்கும் இஸ்லாமிய சகோதரர்களை தீவிரவிசாரணைக்கு உட்படுத்தினார்கள் எங்கோ யாரோ செய்யும் தவறுக்கு ஒட்டுமொத்தசமுதாயத்தை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தும் இவர்களின் முகத்திரை என்று கிழியுமோ

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக